30 January 2013

விழியில் வலி தந்தவனே.---2



"பண்பென்ற பாசக்கூட்டிலே  சேர்ந்து பண்பாடும் வாணம் பாடி நாமே என்ற "பரதன் பாடல் போல ரகுவின் தந்தை கதிரவனும் ஒரு பாடல் பிரியன் அமைதியானவர்


.அமைதியில் அப்பனுக்குப்  தப்பாமல் பிறந்து பிள்ளையாக இருக்கின்றான்  என்று அயலவர்கள் போற்றும் வண்ணம் ரகு.பொதுவாகவே  அமைதியான சுபாவம் கொண்டவன். யாருடனும் இலகுவில் பழகிவிடமாட்டான்,அதுவும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம் ஆஞ்சநேய பக்தன் போல அவர்களாக வந்து பேசினாலும் விலகி போகும் ஒரு கேரக்டர்,


உயர்தர வகுப்பில் மாணவிகள் மாணவர்களுடன் சகஜமாக வந்து பேசுவது ரகுவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

"பால் வாசம் கடந்து பூவாசம் கண்டான் பல்கலைக்கழகம் புகும் முதல் நிலைப்பள்ளியில் என்ற "கண்ணதாசன் கவிதைபோல அதுவரை 11ம் வகுப்புக்களில் மாணவர்கள் மாணவிகளுடன் பேசுவது இல்லை.!


ரகுவின் அமைதியான சுபாவம் பல மாணவிகளுக்கு அவனை எப்படியும் பேசவைக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தார்கள்.

கல்லைக்கூட ஆலையில் போட்டு மாவைப்போல அரைப்பதில் தந்திரம் வைக்கும் கன்னியர் அவன் போகும் இடம் எல்லாம் வலியவந்து பேசுவார்கள் ரகு எதுவும் பேசாமல் போய்விடுவான்,துறவி விஸ்வாமித்திரர் போல பூஜிக்கும் பூக்கள் அல்ல பெண்கள் இந்தக்கல்லூரிக் காலத்தில் தவசியைப்போல தாண்டிப்போகவேண்டும்!

 இனவாத நாட்டில் வெட்டுப்புள்ளியில் தட்டிவிடுவார்கள் வன்னித் தமிழன்  பல்கலைக்கழகம் போனால் அடுத்த சிங்களவனை  எப்படி  உள்வாங்குவது? என்ற மேல்மட்ட அரசியல் புரியாதவன் இல்லை ரகு.


ஆனால் பசங்களுடன் நன்றாக பம்பல் அடித்து கதைப்பான் இதனால் பல மாணவிகளுக்கு அவன் மேல்அக்கினிச் சுவாலைதான். வெற்றி நிச்சயம் வடக்கை கைப்பற்றும் என்ற கனவில் இருந்த இனவாத ஆட்சி போலத்தான் செம கடுப்பு.

ரகுவுடன் தோள் கொடுப்பான் தோழன் என்பது போல நட்பு என்ற குழாமில் இருந்தான்  அர்ஜுன்.

 இவர்கள் இருவரும் தான் வகுப்பில் நெருகிய நண்பர்கள் இவர்களுடன் சுயன்,குமரேசன் இவர்களும் அடக்கம் வகுப்பில் மொத்தம் 12 ஆண்கள் 13 பெண்கள்.அர்ஜுன்,சுயன்,குமரேசன்,ரகு நால்வரை தவிர ஏனைய 8 மாணவர்கள் மாணவிகளுடன் சகஜமாக பேசி பம்மல் அடித்து கும்மாளம் போடுவார்கள்.


 சர்வவல்லமை பொருந்திய  ஜனாதிபதி போல மாணவர்களிடையே ரகுவின் ஆலோசனை கேட்கப்படும் பின் தான் மாணவர்கள் அதை செயல் படுத்துவார்கள்

.உயர்தரத்தில் மாணவர்கள் மாணவிகளின் கல்வி நடவடிக்கையில் ஏதாவது மாற்றம் என்றாலும் கீழ் நிலை வகுப்புக்களில் வரும் மாற்றம் என்றாலும் அதனைப் பற்றி  மாணவர் தலைவர்களின் தலைமகனாக ஆலோசனைக்கு பள்ளி அதிபர் அழைப்பது ரகுவைத்தான். கட்சியின் பொதுச்செயலாளர் போல!


 மாணவர்    தலைவர்களை விளையாட்டு ,இலக்கியம் ,என முன்னனியில் இருக்கக்கூடியவர்கள் யார்  ,,?   என்பது வரை அபிப்பிராயம் கூறக்கூடிய அளவிற்கு  பின்னனியில்  இயக்கும் இயக்குனர் என்பதாலும் பதவியில் இருந்தாலும் பணிவானவன் என்பதால்  பள்ளியில் ஒரு சிறந்த மாணவன் என்ற அபிப்பிராயம் பல ஆசிரியர்களிடமும் இருந்தது.


பள்ளியின் மாணவர் பத்திரிகை ஆசிரியராக ரகு இருந்ததும் ஒரு காரணம். இன்னொன்று பொதுச்சேவையான ஊடக ஆர்வம் பள்ளியில் தொடங்கும் வாய்ப்பு எல்லாருக்கும் வாய்ப்பது இல்லை அது ரகுவிற்கு கிடைத்ததுக்கு பள்ளியில் அவன் மாணவர்களின் மதியுரையனாக இருந்ததும் ஒரு காரணம்!

ரகுவின் பாடசாலையில் அப்போது பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தவள் சுகி !


  .சமுதாயத்தில் பெரும் செல்வாக்கு மிக்க ஒருவரின் மகள் அதிகாரம் அப்போது அவர்கள் கையில் இருந்தது வன்னியில். இயக்க பொறுப்பாளர் ஒருவருடைய
மகள்.








.
சுகியின் சுந்தர புருசன் நீயடா!
சூடிக்கொள்வானா என்னை
சுவாசத்தில் இவள் 
சுந்தர காண்டம் நாயகி
சிந்துஜா போல சுகியை .....
(சுகியின் நாட்குறிப்பில் இருந்து 2005 )

///தொடரும் வலி தந்தவனே.......................
//////////////////////////

22 comments:

  1. வணக்கம் நேசன் .நலமா
    விழியில் வலி தந்தவனே // தலைப்பே எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக இருக்கு .முதல் அத்தியாயம் வாசித்து விட்டு வந்தேன் ....
    சிந்துஜா நினைவிருக்கு ..அவரும் இலங்கையை சேர்ந்தவர்தானே ..
    தொடருங்கள் நேசன் ..நானும் தொடர்கிறேன் சுகி மற்றும் ரகுவை :))

    ReplyDelete
  2. பாடல் கேட்க்க முடியல் எதோ எரர் என்று சொல்கிறது

    ReplyDelete
  3. ரகுவின் கேரக்டர் போலத்தான் படிக்கிற வயதில் நானும் இருந்தேன் நேசன். இந்தக் கதையோடயும், கதாபாத்திரங்கேளாடயும் ஒன்றிட வைக்குது உங்க எழுத்து. சுகியின் அறிமுகத்தின் பின் நடந்ததை அறிய ஆவலுடன் காத்திருப்பு.

    ReplyDelete
  4. சுகி வந்தாச்சி... இனி வலி ஆரம்பம்...?

    ReplyDelete
  5. தொடருங்கள் தொடர்கின்றோம்

    ReplyDelete
  6. வணக்கம்,நேசன்!நலமா?///கொஞ்சம்,கொஞ்சமாக வலி...............!

    ReplyDelete
  7. நல்ல தொடக்கம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வணக்கம் நேசன் .நலமா
    விழியில் வலி தந்தவனே // தலைப்பே எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக இருக்கு .முதல் அத்தியாயம் வாசித்து விட்டு வந்தேன் ....
    சிந்துஜா நினைவிருக்கு ..அவரும் இலங்கையை சேர்ந்தவர்தானே ..
    தொடருங்கள் நேசன் ..நானும் தொடர்கிறேன் சுகி மற்றும் ரகுவை :))

    30 January 2013 12:13 // வாங்க அஞ்சலின் அக்காள் § சிந்துஜா நம் தேசத்து நாயகியாக நடித்திருப்பார் ஆனால் நம் தேசம் அல்ல!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  9. பாடல் கேட்க்க முடியல் எதோ எரர் என்று சொல்கிறது

    30 January 2013 12:14 //லிங்கில் ஏதாவது தவறு போல அஞ்சலின் அக்காள்§

    ReplyDelete
  10. mmm....

    thodarungal..//நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  11. ரகுவின் கேரக்டர் போலத்தான் படிக்கிற வயதில் நானும் இருந்தேன் நேசன். இந்தக் கதையோடயும், கதாபாத்திரங்கேளாடயும் ஒன்றிட வைக்குது உங்க எழுத்து. சுகியின் அறிமுகத்தின் பின் நடந்ததை அறிய ஆவலுடன் காத்திருப்பு.

    30 January 2013 16:53 //நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் கணேஸ் அண்ணா!

    ReplyDelete
  12. சுகி வந்தாச்சி... இனி வலி ஆரம்பம்...?// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  13. தொடருங்கள் தொடர்கின்றோம்//நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  14. வணக்கம்,நேசன்!நலமா?///கொஞ்சம்,கொஞ்சமாக வலி.....// வணக்கம் யோகா ஐயா நான் நலம்!ம்ம்ம் வலி தொடரும் ஹீஹீ

    ReplyDelete
  15. நல்ல தொடக்கம் வாழ்த்துக்கள்//நன்றி கவியாழி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  16. //கல்லைக்கூட ஆலையில் போட்டு மாவைப்போல அரைப்பதில் தந்திரம் வைக்கும் கன்னியர் //

    நல்ல உவமை..தொடர் அருமையாக நகர்கிறது.

    ReplyDelete
  17. பதிவில் உள்ள புகைப்படத்தில் இருக்கும் பெண்(கள்) யார்? தொடரில் வரும் மக்களின் படமா? அல்லது நடிப்பு/மாடலிங் துறையில் உள்ளவரின் படமா? ஆம் எனில், ஓகே.

    இல்லையெனில், அவர்கள் யாரோ பொதுஜனம் எனில், இத்தகைய படங்களைத் தவிர்க்கவும். கதாநாயகியை அறிமுகப்படுத்தும் இடத்தில் வருவாதேலே சொல்கிறேன்.

    ReplyDelete
  18. கல்லைக்கூட ஆலையில் போட்டு மாவைப்போல அரைப்பதில் தந்திரம் வைக்கும் கன்னியர் //

    நல்ல உவமை..தொடர் அருமையாக நகர்கிறது.

    4 February 2013 20:55 //நன்றி செங்கோவி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  19. பதிவில் உள்ள புகைப்படத்தில் இருக்கும் பெண்(கள்) யார்? தொடரில் வரும் மக்களின் படமா? அல்லது நடிப்பு/மாடலிங் துறையில் உள்ளவரின் படமா? ஆம் எனில், ஓகே.//இது எல்லாம் மொடல் செங்கோவி ஐயா!

    இல்லையெனில், அவர்கள் யாரோ பொதுஜனம் எனில், இத்தகைய படங்களைத் தவிர்க்கவும். கதாநாயகியை அறிமுகப்படுத்தும் இடத்தில் வருவாதேலே சொல்கிறேன்.

    4 February 2013 20:57

    ReplyDelete
  20. வழக்கம் போல இந்தப் பகுதியிலும் உவமைகளை ரசித்தேன்! ஆங்காங்கே அரசியல் விதைகள் தூவப்பட்டிருப்பது, ரகுவுக்கு பிற்காலத்தில் என்னாகுமோ எனும் எண்ணத்தை உண்டு பண்ணுகிறது!

    சுகியும் வந்துவிட்டாள்! சரி இனி என்ன?

    தொடருங்கள் அண்ணா!!!

    ReplyDelete
  21. வழக்கம் போல இந்தப் பகுதியிலும் உவமைகளை ரசித்தேன்! ஆங்காங்கே அரசியல் விதைகள் தூவப்பட்டிருப்பது, ரகுவுக்கு பிற்காலத்தில் என்னாகுமோ எனும் எண்ணத்தை உண்டு பண்ணுகிறது!

    சுகியும் வந்துவிட்டாள்! சரி இனி என்ன?

    தொடருங்கள் அண்ணா!!!

    24 February 2013 07:53 //ம்ம் நன்றி மணிசார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete