10 May 2013

இப்படி ஒரு கடிதம்!ம்ம்ம்ம்


வசந்தகாலத்தில் உன் இதய
 வாசல் வந்தேனா!
வடிவானவள் ! !!

வருவாளா?
வழிப்பயணமாக வாழ்க்கையில்
விருப்புடன் என்றேனா!

விழியில் வந்தேனா?
வலியைத் தந்தேனா?
வடிவாக கேளுங்கள் 
வாழ்கையில் ஒன்று சேர்வோம் என்று வழிகேட்டேனா ?
வளர்த்தவர்களிடம்!


வாய்ப்பு இல்லை என்று வாய்மொழி விட்டாயோ 
வடிவானவளே??
வசந்தகாலத்தில் தொலைந்தேனா?
வாடித்திரிவேன் வாழத்தெரியாதவன்!
வீழ்ந்து போவேன் என்று வீற்றிருந்தாயா??

விண்ணைத்தாண்டாதவன் விடுதலை வேண்டிய நாட்டில் இருந்து
விட்டில் பூச்சியாக 
வீதியில் நிற்பான் என்று நினைத்தாயோ??
வீறுகொண்டு கடல் தாண்டி வெண்பனித் தேசம் கண்டு கால்வரும் போதெல்லாம் என் !
வாசலில் வந்துவிடாதே ?
விழியில் வலி என்று
வடிவைவிட இதய வடிவில் என் அருமை தோழி ஏற்றிவிட்டாள் இதய தீபம்
இப்போது இனிய இல்லறம்
தூற்றிவிடாதே !


வாழ்வோம் இனி வடிவாக 
வந்து வாழ்த்து முடிந்தாள் முகம் பார்த்து
வரும் போது உருகாதே!
வலி(வழி) கடந்தவன்!
வாழ்கின்றேன் எங்கோ!ம்ம்ம்


//
முஸ்கி-----இது மாத்தியோசி என்று சொன்ன ஒரு நட்புக்கு பதில்!ஹீ நான் தனிமரம் வெட்டிப்பயல் விற்பனைப்பிரதிநிதி அப்போது! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இப்போது ஒரு குடும்பஸ்த்தன்!

22 comments:

  1. ;)))) கடிதமா!! ம்ம்ம்ம். வடிவா இருக்கு.
    கதை தெரிஞ்ச ஆட்களுக்கு இன்னும் வடிவா விளங்கும் போல.

    வடிவான ஆட்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஹை!!! இமாதான் முதலாவதா? ;))

    ReplyDelete
  3. வடிவுகள் வடிவாக வாழ்ந்து நிம்மதி பெற வாழ்த்துக்கள் வடிவாக....!

    ReplyDelete
  4. வணக்கம் நேசன்!நலமா???////நல்ல கடி..டி..டி..டி...தம்!!!

    ReplyDelete
  5. கடிதக் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. தனிமரம் தவிலானதும்
    இனிதாக கவி சொல்கிறது

    அருமையான பதிவு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. )))) கடிதமா!! ம்ம்ம்ம். வடிவா இருக்கு.
    கதை தெரிஞ்ச ஆட்களுக்கு இன்னும் வடிவா விளங்கும் போல.

    வடிவான ஆட்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    10 May 2013 14:12 //வாங்க இமா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!வாழ்த்துக்கு நன்றிகள் கூடவே வருகைக்கும் கருத்துரைக்கும் !

    ReplyDelete
  8. ஹை!!! இமாதான் முதலாவதா? ;))

    10 May 2013 14:13 //ம்ம் இன்று நீங்கள்தான்.

    ReplyDelete
  9. ahaa... PURIYUTHU...//ஹீஈஈஈ! நன்றி ஜனா அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  10. வளமுடன் வாழ்க...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  11. வடிவுகள் வடிவாக வாழ்ந்து நிம்மதி பெற வாழ்த்துக்கள் வடிவாக....!//நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  12. வணக்கம் நேசன்!நலமா???////நல்ல கடி..டி..டி..டி...தம்!!!

    11 May 2013 03:42 //நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  13. கடிதக் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    11 May 2013 08:00 //நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  14. தனிமரம் தவிலானதும்
    இனிதாக கவி சொல்கிறது

    அருமையான பதிவு

    வாழ்த்துக்கள்//நன்றி சீராளன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  15. என்ன நேசன் முதலாவதா வருவோருக்கு பால் கோப்பி கடேசியா வரும் எனக்கு ஒரு நெஸ்ட்டமோல்ட் ஊத்துங்கோ.. அல்லது ஃபிரெஞ் சிக்கின் சூப்:)..

    கவிதையில மாத்தியோசிச்சு கலக்குறீங்கள்.

    ReplyDelete
  16. இப்போது ஒரு குடும்பஸ்த்தன்!

    இனிய வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  17. என்ன நேசன் முதலாவதா வருவோருக்கு பால் கோப்பி கடேசியா வரும் எனக்கு ஒரு நெஸ்ட்டமோல்ட் ஊத்துங்கோ.. அல்லது ஃபிரெஞ் சிக்கின் சூப்:)..

    கவிதையில மாத்தியோசிச்சு கலக்குறீங்கள்.

    11 May 2013 13:45//ஹீஹீஈஈ! நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  18. இப்போது ஒரு குடும்பஸ்த்தன்!

    இனிய வாழ்த்துக்கள்..!

    11 May 2013 19:58 //நன்றி இராஜாராஜேஸ்வரி வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  19. ரசிக்க வைத்தது...

    ReplyDelete
  20. ரசிக்க வைத்தது.//நன்றி மாற்றுப்பார்வை ஐயா.வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete