23 June 2013

அந்த நாள் ஞாபகம்-14


 வணக்கம் உறவுகளே நலமா?? அந்த நாள் ஞாபகம் ஊடாக திரையரங்குகளில் சிந்திய மணித்துளிகளையும் ,மணிகளையும் எண்ணிப்பார்க்கும் எழுத்தில் பதியும் இந்தத் தொடர்க்குறிப்பில் இன்று எந்த திரையங்கினை அறிமுகம் செய்வது ?இது கொழும்பின் புறநகரான பாமன்கடையில் இருக்கும் ஈரோஸ் திரையரங்கு .

இதில் 2000 ஆண்டு பிற்பகுதியின் ஒரு  இரவு 9.30 காட்சிக்கு ஞாயிற்றுப்பொழுதின் முடிவுக்கு நண்பர்களுடன் முண்டியடித்த நாட்கள் இனியும் வருமா ?என்ற ஆதங்கம் இப்போதும் இருக்கின்றது ?இக்கரையில் இருக்கும் எனக்கு!:)))) !

இப்போது எல்லாம் புதுப்படம் பார்த்து சுடச்சுட பதிவு எழுதி மின்னல் வரிகள் கணேஸ் ,திடங்கொண்டாடு சீனு என முதல் பதிவு போட்டு எப்படி பிரபல்யம் ஆகலாம் என்று எல்லாம் நல்ல நிலையை சொல்லித்தரும் வித்தை போல :)))
நாங்களும் நட்புக்குள் அடித்துக்கொண்ட அந்த அழகிய அன்பு நாட்கள் இப்போது அரபுலகம் பக்கமும் ,புலம்பெயர்வுப் பக்கமும்  என ஆகிநின்றாளும் அதுகடந்து நமது நட்புக்குள் இன்னும் தொடர்புகள் ,முகநூல் ,அலைபேசி என அங்கங்கே மின்னல் களைகட்டுகின்றது தொடர்ந்து!

இந்தப்படம் இலங்கையில் வெளிவந்து இரண்டாவது வாரம் தான் களைகட்டியது அதுக்கு இதன் இசையும் ஒரு காரணம் இதன் பல பாடல்களை தனியார் /அரச பண்பலைகள் இடைவிடாது ஒலிக்க விட்டது அதில் ஹாரிஸ் ஜெயராச் !


இதற்கு முன் மஜ்னுபடத்தில் முதல் இசை அமைத்தாலும் இந்தப்படம் முதலில் வந்ததாள் இதுதான் ஹாரிஸ் ஜெயராஜ்சின் முதல்ப்படம் என்று முதலில் அறிவுப்பு செய்து மூக்குடைபட்ட சில அறிவிப்பாளர்கள் நம்மவர் நிலையை நினைக்கும் போது சிரிப்பு வரும்!

 பின்கதவாள் அறிவிப்பாளராக முன்வரும் வித்தை தெரியாத என் நட்புக்களின் அன்றைய நிலையை என்ன சொல்லவது !அவை எல்லாம் கனவுகள் என்றாலும், அந்த நேரத்தில் கைகோர்த்த நட்புகளின் ஞாபகங்கள் இன்னும் மின்னல் அடிக்கின்றது.

அதையும் என் வலையில் தொடராக ஏற்றி வருகின்றேன்  .இந்தப்படம் பார்த்த எங்கள் நட்பு ஜோடிகளுக்காக ஆயிரம் பொய்  சொன்னாலும் அடிவாங்க ஒரு நண்பன் தேவையடா மச்சான் என்றவர்கள் நிலை என்ன??

அந்த நட்புக்குள் சகோதரமொழி நங்கைகளும் இருந்தார்கள் என்பதுக்கு நானே வாழும் சாட்சி :))) பொறுத்து இருங்கள் இந்தத்தொடரில்:)))

இந்தப்படத்தில் இந்தப்பாடல் அதிகம் எனக்குப்பிடித்தது அப்போது இல்லை !

அந்த நண்பன் அறையில் கொழும்பில் இருந்த போது இல்லை பாரிஸ்  வரும் வரை ஏனோ பின் இந்தப்பாடல் என் கைபேசி ரிங்டோனாக இருந்தது பின் வந்தகாலத்தில் !ம்ம் ஓ நானும் காதலில் விழுந்து விட்டேனோ நான் அறியேன்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

தொடரும் அந்த திரையரங்குகள் முகவரிகள்§ஈஈஈஈஈஈஈ
§ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

8 comments:

  1. எல்லா பாடல்களும் இனிமையான மின்னலே தான்...

    சுவாரஸ்யமான தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி...

    ReplyDelete
  2. வணக்கம்,நேசன்!நலமா?///காதலில் விழாதோர் உண்டோ?எழுந்து விட வேண்டும். அது,முக்கியம்!ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  3. காதல்

    தொடருங்கள்

    ReplyDelete
  4. எல்லா பாடல்களும் இனிமையான மின்னலே தான்...

    சுவாரஸ்யமான தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி...

    23 June 2013 18:47 //வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  5. வணக்கம்,நேசன்!நலமா?///காதலில் விழாதோர் உண்டோ?எழுந்து விட வேண்டும். அது,முக்கியம்!ஹ!ஹ!!ஹா!!!// ஆஹா அப்படியா நான் அறியேன்!ஹீ! நன்றி யோகா ஐயா வருகைக்கும், கருத்துரைக்கும்.

    ReplyDelete
  6. காதல்

    தொடருங்கள்

    24 June 2013 09//நன்றி முத்தரசு வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  7. கொழும்பு நகரம்.. பார்க்க பழைய ஞாபகம் எல்லாம் வந்துபோகிறது... தொடருங்கோ நேசன்.

    ReplyDelete
  8. கொழும்பு நகரம்.. பார்க்க பழைய ஞாபகம் எல்லாம் வந்துபோகிறது... தொடருங்கோ நேசன்.

    27 June 2013 00:54 //நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete