17 June 2013

காதல் கடிதம் -பரிசுப்போட்டி திடம்கொண்டு போராடு!


வணக்கம் உறவுகளே திடம்கொண்டு போராடு சீனு காதல்கடிதம் எழுது என்று ஒரு போட்டி வைத்து இருக்கின்றார் .இவனோ படிக்காத தனிமரம் என்றாலும் ஆசையில் ஒரு கற்பனைக்கடிதம் இது அதில் வரும் கருத்துக்கள் யாவும் தனிமரத்தின் கற்பனையே  !

  கல்லாதவன் கட்டையில் போகும் வரை கரைசேராது கனவுகள் ,கவிதைகள் ,காணங்கள் ,கடுப்பாகும் கல்விமான்கள் கலந்துகொள்ளாது காத்து இருங்கள் கல்வியில் இவன் கட்டாயம் தோற்றவன்!

   அன்புடன் அதிகம் புலம்பும் அகதி இவன் ஏதிலி எனக்கு இல்லை முகவரி எல்லாம் இல்லாத தனிமரம் என் பெயர்!
                                                      என்றும் இவன் வழிப்போக்கன் ஜீவன் எனக்கு   நண்பன்!எப்போதும் பிரியாத நட்பிள்§ இப்படிக்கு
                                                                                 நேசன்!!!!
///////////////////////////////////////////////////////////////////////

நேசத்துக்குரியவளே !ஜீவனுக்கும் ஜீவநாடியாக ஜனனித்தவள் நீ என! என் ஜீவன் துடிப்பது உன்னை நேற்று நீண்டகாலத்தின் பின் நேரில் பார்த்த போதே பாழானது என் பார்வை !



நீண்ட காலம் எந்தன் தேசத்தில் எத்தனையோ இடங்களில் எத்தனையோ பெண்களுடன் பேசும் தொழில் முன்னம் எனக்கு !அப்போது எல்லாம்   என்னுள் வராத மாற்றம் நேற்றில் இருந்து நெஞ்சமெல்லாம் நீ வந்து நினைவுகளை சுருதிமீட்டுக்கின்றாய் !
ஜீவனுக்கு என்னாச்சு நேற்று எல்லாம் தூக்கம் இல்லை எங்கட தூக்கமும் போச்சு என்று நெருங்கிய நண்பர்கள் பலரும்  புலம்புகின்றார்கள் நானோ உன்னிடம்!ஆறுபெருகும் போது அதில் மூழ்கும் இளைஜன் போலவே உன்னை முதலில்பார்த்த கனங்களில் நானும் மூழ்கிப்போனேன் !

அகதியாக அடைக்கல விசாவுக்கு மனுக்கொடுத்துவிட்டு அரச விசாரணைக்கு காத்திருக்கும் அகதி போல என் யாசிப்பும் உன்னிடம் காதல் மனுக்கொடுத்துவிட்டு காத்து இருக்கின்றது என் நேசம்!

பிரியமானவளே உன் விழியில் இருந்தும் ,செவ்விதழில் இருந்தும் "உன் நேசம் என்னை வென்றதைய்யா!
 நீயும் நானும் சுதந்திரதேசமான பிரெஞ்சுதேசத்தில் !
கைகள் பிசைந்து
இந்த தேசம் எங்கும் வீதியுலா வருவோம்!
 இன்னும் பலதேசம் பறந்து பல நடைகள்  பயில் வோம் என்பாயா??!

என்னவனே நீ என்று என்னோடு யாழ்மீட்ட 
என்னிதயம் நீ என்று எப்போதும் சுருதியும் லயமும் போல நாம் சேர்ந்தே இருப்போமா??
எங்கள் இருவருக்கும் இந்த ஈர்ப்பு இடையில் வந்தது இல்லை !
எங்க பாட்டிக்கும் உன்னைப்பிடிக்கும் இந்த பேரனும்
இன்னும் உன்னை நினைவில் வைத்து இருக்கின்றான் !
மூன்று தலைமுறை பார்த்த நம் பங்கஜம் பாட்டியின் கதை எல்லாம் நினைவு இருக்கா??


நீண்ட தொடர் போல!


  இந்த இளைஜன் மீது இனி எல்லாம் சுகமே என்று சுந்தரத்தமிழில் சுருதி மீட்டுவாயா?, தங்கத்தில் ஒரு குறையிறிருந்தாலும் உன் சரீர அழகில்   ஒரு குறையும் இல்லாத நம் வீட்டு அத்தை பெற்ற அருமைப் பதுமை பண்பில் பிரெஞ்சுமொழிகூவும் குயிலே !
என்காதல் கீதம் இசைக்கும்  சுகியே!!

காதலியே யாசிப்பில்  பிதற்றும் இவன் மனம் புரியுமா உனக்கு ?
காதல் என்றாள் என்ன ??இரு வழியில் போகும் இனம் தெரியாத இரு இதயங்களின் தேடலின் இதய சங்கமா ??இந்தத் காதல் இன்பத்தேர் இதை இழுத்துச்செல்லும் இனிய தடம் எது இரவை விரட்டும் பகலைப்போல காதல்ப்பாதையில் போகும் விழிகளின் கோபுர தருசனம் என்றால்  !

நீ தேர் போலஉலாவும் வீதியில் நிற்கின்றேன் நேசத்தில் விரும்பிய படி நம் இந்தக்காதல் தேரை இழுக்கத் காத்திருக்கின்றேன் .இருகரங்கள் நீட்டி உன்னிடம் !


"சில்சில் சில்லெல்லா சொல்ல சொல் நீ மின்னலா "என்று டூயட் பாடுவோமா ?
என்று செல்லமாக கேட்கும் என் காதல் ஒரு தோடி ராகம்  பாடுமா ?

என் சுவாசமான சுகியே?
அகதியாக வந்தவனையும் அன்போடு பார்க்க உன் விழிகளில் என் ஜீவன் விரதம் கொள்ள விற்பனைப்பிரதிநிதி  இருட்டறையில் இருந்து இரவோடு இரவாக இந்த தேசம் வந்த அந்த வசந்த காலத்தின் பகல் பொழுதில் நீயும் மாமியோடு சேர்ந்து  அடி எடுத்து வைத்தாய் என் நண்பன் அறைக்கு !

அந்த நேரத்தில் என் நண்பன் சொல்லிய ஊர்கதைகள் கேட்டு உண்மையாகவா என்று ஒரு உள்ளக்களிப்பூ !
  உன் இதழ்களில் உதிர்த்தாய் அப்போது இரு கன்னங்களிலும் விழுந்தது
 இரு குழிகள் !

அந்தக்குழியில் தடுக்கி விழுந்த யானைபோல ஆனதடி என் நிலமை அன்று இரவு நான் எழுதிய பல கவிதைகள் சொல்லும் என் யாசகத்தை ; உண்மையில் அதில் சிலது விரசம், சிலது சிலிர்ப்பு ,என்று தனிமையில் சந்தித்தாள் சொல்லிச் சாய்வாய் என் தோலில் !

 சந்தோஸம் என்றாலே என் ஜீவன் எப்போதும் சொல்லும்   எங்கள் நட்பு வட்டத்தில் ஹாவதாவக் அமத்தக்க வெண்ட எப்பா அப்பே ரஸ்சாவக்  என்று அன்புத்தோழி  ஐராங்கனி அன்று ஒரு நாள் கேட்டாள் உள்ளன்பில் உருகி சந்தோஸமாக உடரட்டையில் !உம்ம மகே பெம்பர்த்தயோ உம்பட்ட கமத்தித  கைபிடிப்போமா??ஒரு குடையின் கீழ் பேரதெனிய பார்க்கில் ;பண்பாடுவோமா என்ற போதும் பல்லு இளிக்காமல் பண்பாக பற்று இல்லாமல்  பணி இன்னும் முடியவில்லை  பின் பார்க்கலாம் என்று நழுவி வந்த பாமரன் என்னையும் !


உன்னுள் உருகிப் போகும் வண்ணம் உதிர்த்தவளே உண்மையில் அந்த ஐராங்கனி உனக்கு உடன் பிறவாத மூத்த சகோதரி  !

ஜென்மம் பூராகவும் இது எல்லாம் நம் வீட்டுக்கதைகள் நாடு இப்படி ஆனதில் யாருக்கும் யாரைப்பற்றி ஒழுங்காக தெரியாத நிலை !யுத்தம் என்ற நிலையில் இடப்பெயர்வுகள் ,மகாவம்சத்திலும் பிழைகள் பல என்று சொல்லும் பாட்டியும் விட்டாள் ஒரு பிழை

அரவணைத்துப் போகத்தெரியாத பிடிவாதம் !!அதனால் வந்த குடும்பப்பிரிவு அடுத்த சந்ததி நீ பிரெஞ்சுதேசத்தில் பிழையாக நினைக்கின்றாய் பாட்டியின் பாசத்தை !


அந்த தாய்க்கும் ஆசையுண்டு பேர்த்திமேல் என்பதைக்கூட அறிய மறந்தவள்  நீ !
என்னையும் உருக வைக்கின்றாய் !
குருவிதலையில் பனங்காய் போல உன் மீது உன்குடும்பம் ஏற்றியது பல பாரம்
உனக்கும் என்ஜினியர் கனவு என்ற ஆசைக்கனவு !!
அதுவும் நான் அறிவேன்
அந்தப்படிப்பும் அழகாய்ப்படி என்னையும் சேர்த்து
அந்தப்படிப்பு முடிக்கும் முன்னே !!
ஆண்டவன் கருணையில்
அகதி விசா அதுவும் கிடைக்கும் !
அதன் பின்னே ஒரு வீடு
அத்தோடு உனக்கு என ஒரு தாலிக்கொடி
அத்தனையும் ஆயத்தம் செய்வேன்
அதுவும் பெட்டிக்கடை பேரம்பலத்தார் வம்சத்தின் வழிவந்தவன் நான்
அகதி!



உனக்கு சட்டதின் பிரகாரம் ஒரு சாட்சி நீ  கேட்டாள் போய் கேளு என் நண்பனிடம் பதுளையில் என் சொந்தப் பெயர் சொல்லி !
இன்னும் அந்த ஊர் கண்ணுக்குள் நிலவு போல !
அதுக்கு முதல் ஒரு வார்த்தை சொல்லிவிடு !

அன்பே நீதானடா என் உலகம் நம் குடும்பத்து
ஆலமரம் உன் வழியில் உனக்காக காத்து இருப்பேன் உயிர் உருகி அதுவரையில் ஆருக்கும் தெரியாமல் அலைபேசி அழைப்பு ,குறுஞ்செய்தி என்று கும்மியடிப்போம் தமிழ்ப்படம் போல !
கூட்டத்தில் இருந்து இமையும், இசையும் கலந்து இனியமையான பாடல் கேட்டு லங்காசிரியுடன் இரவில் இணைந்து இருப்போம்!

இந்தக்கடிதம் படித்தபின்  இன்னும் பேசலாம் பல கதை இவனுக்கும் இருக்கு இலக்கிய ஆசை ,இலங்கை ஜனாதியுடனும் இவன் போட்டோ வந்தது இலங்கை நாளிதழ் எல்லா மொழியிலும் இன்ன திகதி என்று என்னைத்தவிர இங்கு இன்னும் பலருக்கு இன்னும்  தெரியாது !


இவன் ஒரு வழிப்போக்கன் இதயத்தில் ஒரு இடம் கேட்கும்
 உதவாக்கரை உன்னை நினைத்து
உயிர்கொண்டு உண்மையில் எழுதுவேன் !
உனக்கு பல கவிதைகள் ,கதைகள் ,
உன்னால் புரிந்து கொள்ள முடியுமா ???
உண்மையில் தமிழில் பல பொருள் அதில்
உண்மையில்  எழுதினால் பிழைகள் பல என
உன்முன் எனக்கும் வரும் உள்குத்து !என்ன குத்தும்  எந்தக்குத்தும்
உயிர் பறிக்கும் ,இனவாத ஆமிக்குத்துக்கு அருகில் வராது !
அந்தக்குத்தும்  அடிவயிற்றில் அதன் !
உயிர் முதுகெலும்பில் அழுதபடி வாங்கியவன்
உவன்  ஒரு அகதி ஆனாலும் ஆழுது புலம்பமாட்டேன்
உன்னாள் நானடி! உண்மையில் யாசிப்பதாள் !

உன் யாசிப்போடு அடுத்த சனி
உந்த ஊரில் இருக்கும் அந்தக்கோயில் விளக்கு ஏற்ற
உன்னை நினைத்து  என்னை நோக்கிவிடியலோடு வந்துவிடு !
உன் வருகைக்கு  உன் பாதையில் விழியில் வழிவைத்து
உந்தன்  பிரெஞ்சு தேசத்தில்விசா இல்லாதவன் வீற்றிருப்பேன்
உன் முன்னே வீதியில் ஒரு மரத்தில்!
  உன்னைநினைத்து பல கவிதை இன்னும்,உருகும் இவன் 
உண்மையுள்ள ஜீவன்!

    உனக்கு என் உருகும் காதலன் !
ஒரு ஊர் இல்லாத உதவாக்கரை!
                                                                   உண்மையுள்ள ஒரு வழிப்போக்கன்!
                                                                    இவன் ஜீவன்!!!

/////////////////////
!!!
ஹாவதாவக் அமத்தக்க வெண்ட எப்பா அப்பே ரஸ்சாவக்  என்று அன்புத்தோழி  ஐராங்கனி அன்று ஒரு நாள் //  எப்போதும் மறக்க வேண்டாம் எங்கள் தொழில் ! என்று சிங்கள் மொழியில் சொல்லும் பேச்சு வழக்கு!ஐராங்கனி ஒரு சிங்கள் மொழி பேசும் இலங்கை நங்கை!

//உம்ம மகே பெம்பர்த்தயோ உம்பட்ட கமத்தித  //நீ என் காதலன் உனக்கு விருப் மா ??என்பது உரடடை என்பது இலங்கையில் ஜாதியம் பேசுவோரின் பிறப்பிடம் இன்றைய இலங்கைப்பிரதமர் கூட அந்த வம்சம்!இது இலங்கை அரசியல்!ம்ம்ம் !!!
//////////////////போட்டிக்கு ஒரு கடிதம் பொறுத்தருள்க! இவன் கற்பனையை

34 comments:

  1. அகதியாக அடைக்கல விசாவுக்கு மனுக்கொடுத்துவிட்டு அரச விசாரணைக்கு காத்திருக்கும் அகதி போல//

    நெஞ்சை ரணமாக்கும் வரிகள்...

    ReplyDelete
  2. நீண்ட கடிதமாக இருந்தாலும் காதலும் சோகமும் கலந்து இனிமை சேர்த்துள்ளது.
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சோகத்தோடு இனிமையை தெரிவிக்க வைக்கிறது கடிதம்... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நலமா நேசரே...

    சோகம் தோய்த்து காதல் வரிகள்...

    உண்மை என்பதால் வலி தான் மிஞ்சியது...

    ReplyDelete
  5. அகதியாக அடைக்கல விசாவுக்கு மனுக்கொடுத்துவிட்டு அரச விசாரணைக்கு காத்திருக்கும் அகதி போல//

    நெஞ்சை ரணமாக்கும் வரிகள்...

    அழகு... பரிசு பெற வாழ்த்துகள்...

    ReplyDelete
  6. அடடா,.. என்னா பெரிய ஒரு மடல்.. நேசன் பரிசு உங்களுக்கே... கவிதையோடு காதல் கடிதம் எழுதிக் கலக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இக்கடிதம் ஸ்நேகாவுக்காக இல்லையே?:)).. ஐராங்கனியையும் மறந்தபாடில்லைப்போல:)).. ஹா..ஹா..ஹா... எழுதவராது கடிதம் எனச் சொல்லிச் சொல்லியே நீண்ட கடிதம் எழுதிக் கலக்கிட்டீங்க.

    ReplyDelete
  8. அம்மாடி!எவ்வளவு நீஈஈஈஈஈ....ளம்!!!நல்லாயிருக்கு.

    ReplyDelete
  9. அகதியாக அடைக்கல விசாவுக்கு மனுக்கொடுத்துவிட்டு அரச விசாரணைக்கு காத்திருக்கும் அகதி போல//

    நெஞ்சை ரணமாக்கும் வரிகள்..//வாங்க மனோ அண்ணாச்சி, நலமா !!முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி, வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  10. நீண்ட கடிதமாக இருந்தாலும் காதலும் சோகமும் கலந்து இனிமை சேர்த்துள்ளது.
    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    17 June 2013 17:56 //நன்றி முரளீதரன் சார் வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  11. சோகத்தோடு இனிமையை தெரிவிக்க வைக்கிறது கடிதம்... வெற்றி பெற வாழ்த்துக்கள்//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  12. நலமா நேசரே...//ம்ம் நலம் ரெவெரி!

    சோகம் தோய்த்து காதல் வரிகள்...

    உண்மை என்பதால் வலி தான் மிஞ்சியது...//ஹீ அப்படி எல்லாம் தப்பாக எண்ண வேண்டாம்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.ரெவெரி!!!!

    18 June 2013 05:23

    ReplyDelete
  13. அகதியாக அடைக்கல விசாவுக்கு மனுக்கொடுத்துவிட்டு அரச விசாரணைக்கு காத்திருக்கும் அகதி போல//

    நெஞ்சை ரணமாக்கும் வரிகள்...

    அழகு... பரிசு பெற வாழ்த்துகள்...

    18 June 2013 06:57 //நன்றி வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் இரவின் புன்னகை ஐயா!ம்

    ReplyDelete
  14. அடடா,.. என்னா பெரிய ஒரு மடல்.. நேசன் பரிசு உங்களுக்கே... கவிதையோடு காதல் கடிதம் எழுதிக் கலக்கிட்டீங்க.. வாழ்த்துக்கள். //நன்றி அதிரா வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்!ம்ம்ம்ம்

    ReplyDelete
  15. இக்கடிதம் ஸ்நேகாவுக்காக இல்லையே?:))../ஹீ இது பாரிஸ் சினேஹாவுக்கு என்று சொல்ல் ஆசைதான்!ஹீஈஈஈஈஈஈஈஈ!


    ஐராங்கனியையும் மறந்தபாடில்லைப்போல:)).. // எப்படி முடியும் அவளும் ஒரு ஆசை மச்சாள்§ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ§ எனக்கு இல்லை!ம்ம்ம்

    ஹா..ஹா..ஹா... எழுதவராது கடிதம் எனச் சொல்லிச் சொல்லியே நீண்ட கடிதம் எழுதிக் கலக்கிட்டீங்க.//நன்றி அதிரா வருகைக்கும் அன்பான பின்னூட்டத்துக்கும்.

    ReplyDelete
  16. அம்மாடி!எவ்வளவு நீஈஈஈஈஈ....ளம்!!!நல்லாயிருக்கு.

    18 June 2013 10:52 //ஹீ என்ன யோகா ஐயா இப்படி ஓட்டம்!ம்ம் ஹீ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  17. பாஸ்.... என்ன ஒரு உருக்கமான கடிதம்! அதான் முதலேயே சொன்னேனே... காதல் படைப்புக்கள் என்றால் உங்களுக்கு அல்வா சப்பிடுவது போல என்று!

    வெற்றி பெற வாழ்த்துக்கள் பாஸ்!

    ReplyDelete
  18. பிரமாதம் பிரதர் ...!

    ReplyDelete
  19. காதலும் சோகமும் கலந்து இனிமை சேர்த்துள்ளது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. நெகிழ்ச்சியைப் பிணைத்திருக்கும் விதம் சற்றும் எதிர்பாராதது.

    உண்மைக் கடிதமாக இருப்பின் காதல் உங்களை உடனடியாகத் தேடி வரட்டும்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. பாஸ்.... என்ன ஒரு உருக்கமான கடிதம்! அதான் முதலேயே சொன்னேனே... காதல் படைப்புக்கள் என்றால் உங்களுக்கு அல்வா சப்பிடுவது போல என்று!/ஹீ ஏன் மனீசார்!ஹீஈஈஈஈஈஈஈ!

    வெற்றி பெற வாழ்த்துக்கள் பாஸ்!நன்றி மனீ வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  22. பிரமாதம் பிரதர் ...!

    21 June 2013 06:20 //நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும் .ஜீவன் சுப்பு!

    ReplyDelete
  23. காதலும் சோகமும் கலந்து இனிமை சேர்த்துள்ளது. வாழ்த்துக்கள்

    21 June 2013 07:07 //நன்றி பிரெம். எஸ். வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  24. நெகிழ்ச்சியைப் பிணைத்திருக்கும் விதம் சற்றும் எதிர்பாராதது.

    உண்மைக் கடிதமாக இருப்பின் காதல் உங்களை உடனடியாகத் தேடி வரட்டும்.

    வாழ்த்துக்கள்.// நன்றி அப்பாத்துரை ஐயா முதல் என் தளம் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும்.இது ஒரு கற்பனையே!ம்ம்

    ReplyDelete
  25. "ஆறுபெருகும் போது அதில் மூழ்கும் இளைஜன் போலவே உன்னை முதலில்பார்த்த கனங்களில் நானும் மூழ்கிப்போனேன் !"

    அழகான வருணனை. வெற்றி பெற வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  26. சோகம் கொஞ்சம் சுகம் கொஞ்ச கலந்த கடிதம் மிகவும் அருமை நண்பரே பெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. வணக்கம்...

    காதலியே யாசிப்பில் பிதற்றும் இவன் மனம் புரியுமா உனக்கு ?

    சீக்கிரம் புரிஞ்சிகிவாங்க!!! கவலை விடுங்க!!! வாழ்த்துகள்...

    ReplyDelete
  29. சோகத்தை தவிர்த்திருந்தால் கடிதம் சுவையாக இருந்திருக்கும் என்பது என் கருத்தே...
    அருமைங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. காதல் சுவையோடு சோகத்தையும் கலந்துவிட்டீர்கள் - கொஞ்சம் அதிகமாகவே! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    'யாரும் எங்களை 'மனிதன்' என்று சொல்லவில்லை என்ற போஸ்டர் வாக்கியம் மனதை வருத்தியது.

    நிறைய எழுத்துப்பிழைகள். நல்ல சாப்பாட்டில் கல் போல. கொஞ்சம் எல்லாவற்றையும் திருத்தி விடுங்களேன், ப்ளீஸ்!

    ReplyDelete
  31. காதல் என்றாலே அது சோகம்தான் என்பதை மிகவும் அருமையாக எடுத்துரைத்துள்ளீர்!
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. காதல் கடிதத்துல இத்துனை ரணகளமா
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  33. what is thiss annaa

    ReplyDelete
  34. imbuttu periya oathivaa irungo naa rea kudicitu vanthu padikiranan

    ReplyDelete