15 July 2013

அலிஷாவின் நினைவில்!!!

தமிழ்ச்சினிமா ,ஹிந்திசினிமா என்று சினிமாப் பாடல்களைத்தாண்டி பல தரமான இசைத்தொகுப்புக்கள் இன்று இணையம் வழியில் ஏராளம் வந்து கொண்டு இருக்கும் இந்தநாட்கள் போல அல்ல அந்தநாட்களில் !

 இந்த அந்தநாட்கள் என்று நான் குறிப்பது வானொலியை மட்டும் நம்பிக்கொண்டிருந்த பால்யகாலம் .



எந்தப்பாடலை ஒலிநாடாவில் சேமிக்க வேண்டும் என்பதுக்கு முதலில் என் செவிகளுக்கு அறிமுகம் செய்யும் வானொலி என்றாள் அது இலங்கை வானொலியின் பண்பலைதான் .அதுவும் வர்த்தகசேவையின் பொங்கும்பூம்புனல் புதிய பாடல்களின் பிறப்பிடம் ஒரு காலத்தில் . 





இன்று போட்டிபோட்டு ,பலநேரங்களிலும் பல தனியார் அரச பண்பலைகள் ,ஒருபுறம் இணைய வானொலிகள் ஒரு புறம் ,என எதைக்கேட்பது ?என்ற நேரச்சிக்கலில் அவசரயுகம் இன்று என்றாலும் இன்று ஏனோ இவர் நினைவு வந்துபோகின்றது ! .




அலிஷா !!!! ஒரு காலத்தில் 1996 இல் இலங்கையின் மும்மொழியிலும் பல பாடல்ப்பிரியர்களின் முதல்த்தேர்வாக இவரின் ஒலிப்பேழை இருக்கும் . 



1996 இல் அந்த நேரத்தில் நீண்டத்தூரப் பேரூந்துகளிலும் சரி ,இசைக்கச்சேரிகளில் துள்ளிசைப்பாடல் என்றாலும் என்ன ,வார இறுதி ஞாயிற்றுப்பொழுதின் பின் இரவை வரவேற்கும் சிங்களமொழி வானொலியான சிரசவின் TOP-20 பாடல்த்தேர்வு என்றாலும் ,இந்த AliSha chinoi அல்பம் முண்டியக்கும் நேயர்களின் வாக்குத் தேர்வில் !



 அப்பொழுது நம் நட்பில் நாம் கொஞ்சம் ஜாலிஜாக மனம்விட்டு பேசுவதாக இருந்தால் நாம் கலாய்க்கும் பாடல் இதுவாகத்தான் இருக்கும் ! இப்போது இதுவும் என் சேமிப்பில் கைவசம் இல்லை இருந்த நட்புகளும் தொடர்பில் இல்லை ! 

என்றாலும் இன்னும் நினைவுகள் மட்டும் நெஞ்சில் வந்து போகின்றது!

 வாருங்கள் பாடல் கேட்போம்! 
அதுக்கு முன் அரசியல்!ஹீ!




அதுக்குமுன் என்னதான் இந்தியாவின் அரசியல் பெரியண்ணன் தோரணையை விரும்பாவிட்டாலும் .ஹிந்திப்பாடல்களையும் இந்தமாதிரியான இசைப்பேழைகளையும் இன்னும் தமிழர் .சிங்களவர் .விரும்புவதன் மூலம் தேசியம், ஐக்கியம்,நாம் ஒரு தேசம், அன்னியம் என்ற அரசியல் மட்டும் புரியவில்லலை இன்று வரைக்கும் யாராவது பொது பல சேனாவுக்கு முதலில் சொல்லுங்க ஹிந்திப்படத்துக்கும் ஹிந்திப்பாடலுக்கும் முதலில் கொடி பிடியுங்க என்று முடியுமா ??முடியுமா?????!



இல்லை நாம்   தமிழர் கூட்டணி  மட்டுமே இல்லை இந்திய வால் பிடிகளுக்கு  அல்ல கூட்டணி என்றால் போங்கடா  நீங்களும் உங்கள் அரசியல் கூழ் முட்டைகளும்,கொழும்பில் போடுங்க புள்ளடி மாகாணசபைத்தேர்தலில் தோல்வி என்று!அதுவரை இலங்கைத் தமிழ்த்திரைப்படத்துறையும் ,தமிழ் இசையும் பற்றியும் இனியும் வலையில் ,முகநூலில் டிவிட்டரில் எழுதி உங்கள் பொன்னான நேரத்தையும் சும்மா எழுதி கிழிக்காதீங்க ஊடகத்தில் நீங்கள் மூத்ததவர்கள் என்று! நானும் படிக்காதவன் தான் ஊடகம் ஒரு ஜால்ரா என்று!



19 comments:

  1. அலீஷா....அட கலக்கோ கலக்குன்னு கலக்கிய ஆளாச்சே, மறந்தே போச்சு போங்க....!

    ReplyDelete
  2. alishaa...

    puthiya thakaval..

    ReplyDelete
  3. மறந்து போன ஒன்று... நன்றி...

    ReplyDelete
  4. கடந்த கால நினைவுகளை மறுபடியும் நினைக்க வைத்த சிறப்பான
    பகிர்வு .வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  5. அலீஷா எனக்கு புது தகவல், அப்புறம் வெள்ளிக்கு வாழ்த்திக்குறேனுங்க

    ReplyDelete
  6. அலீசா தமிழில் பாடியுள்ளாரா? கேள்க ஆவலாய் உள்ளேன். இசைக்கும், கலைக்கும் மொழி, நிறம் பேதங்கள் உண்டா என்ன? சிங்கள் தமிழ் இன வெறியர்களை ஒதுக்கி விட்டு மக்களாகிய நாம் சமாதானத்தோடு முன்னொட்டுச் செல்ல வேண்டும் என்பதே என் பேரவா.

    ReplyDelete
  7. அலீஷா.... பாடல்கள் ஒலு காலத்தில் சக்கை போடு போட்டது...

    ReplyDelete
  8. அறிந்ததில்லை,நேசன்!(ஒரு வேளை அன்றைய,த.வி.கூ வால் பிடி ஆனதால் இருக்குமோ?)அறிமுகத்துக்கு நன்றி!

    ReplyDelete
  9. அலிஷா !!! என்னை இங்கே அழைச்சு வந்தார் :))

    ஆமாம் நேசன் ..மிக அருமையா இருக்கும் கேட்க்க உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்ளும் ...மேட் இன் இண்டியா பாடல் நிறைய தரம் கேட்ருக்கேன்

    Angelin.

    ReplyDelete
  10. அலீஷா....அட கலக்கோ கலக்குன்னு கலக்கிய ஆளாச்சே, மறந்தே போச்சு போங்க....!//வாங்க மனோ அண்ணாச்சி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ம்ம் நிஜம் தான் என்ன இப்ப ஞாபகம் குறைந்துவிட்டது.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  11. alishaa...

    puthiya thakava//நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  12. புதிய தகவல் நன்றி//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  13. கடந்த கால நினைவுகளை மறுபடியும் நினைக்க வைத்த சிறப்பான
    பகிர்வு .வாழ்த்துக்கள் சகோ .//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  14. அலீஷா எனக்கு புது தகவல், அப்புறம் வெள்ளிக்கு வாழ்த்திக்குறேனுங்க

    15 July 2013 18:31 Delete//நன்றி ராஜி அக்காள் வருகைக்கும் கருத்துக்கும் அம்பாளடியாளுக்கு நாமும் வாழ்த்துகின்றோம்.

    ReplyDelete
  15. அலீசா தமிழில் பாடியுள்ளாரா? //இல்லை அவர் பாடலை இலங்கையில் மும்மொழி பேசுவோரும் பேவரிட் சாங் கேட்டார்கள் என்று சொல்ல வந்தேன்!

    கேள்க ஆவலாய் உள்ளேன். இசைக்கும், கலைக்கும் மொழி, நிறம் பேதங்கள் உண்டா என்ன? சிங்கள் தமிழ் இன வெறியர்களை ஒதுக்கி விட்டு மக்களாகிய நாம் சமாதானத்தோடு முன்னொட்டுச் செல்ல வேண்டும் என்பதே என் பேரவா.//நிஜம் தான் நன்றி நிரஞ்சன் தம்பி வருகைக்கும் கருத்துரைக்கும்

    15 July 2013 19:01 Delete

    ReplyDelete
  16. அலீஷா.... பாடல்கள் ஒலு காலத்தில் சக்கை போடு போட்டது...//ம்ம் நன்றி சங்கவி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  17. அறிந்ததில்லை,நேசன்!(ஒரு வேளை அன்றைய,த.வி.கூ வால் பிடி ஆனதால் இருக்குமோ?)//அன்றைய் நிலை வேறு இன்றைய் நிலை வேறு யோகா ஐயா!

    அறிமுகத்துக்கு நன்றி!
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்
    16 July 2013 01:09 Delete

    ReplyDelete
  18. அலிஷா !!! என்னை இங்கே அழைச்சு வந்தார் :))

    ஆமாம் நேசன் ..மிக அருமையா இருக்கும் கேட்க்க உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்ளும் ...மேட் இன் இண்டியா பாடல் நிறைய தரம் கேட்ருக்கேன்

    Angelin.//நன்றி அஞ்சலின் வருகைக்கும் உங்கள் நலம் அறிந்ததும் சந்தோஸமே

    ReplyDelete