08 March 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -7

பல தேசங்களில் இருந்து பல்வேறு வேண்டுதல்களுடன் பந்தளராஜன் பாதம் பணிய வரும் பக்தர்களின் ஆன்மீகப் பயணம் அதிக கதைகள் சொல்லும் ஆறுதலாக ஆழ்ந்து கேட்டால் பிரெஞ்சுப்புரட்சி போல !


அதனை எல்லாம் குருவின் உபதேசமாக உள்வாங்காமல் உண்மையுடன் அறியவேண்டும் அதிசயங்களுக்கும், அவநம்பிக்கைகளும் ,அதிக இடைவெளி இல்லை .

அவர்வர் தனிப்பாதையில் போக முடியாத பாத யாத்திரை இந்து மத ஐய்யப்பன்  நெறியில் மட்டுமே !


குருவுக்கும் குருவாக மலைப்பயணம் குருகூட  பாதை தவறவிடுவது தன் அனுபவத்தில் உணர்ந்து பார்த்து ,பயந்து ,வருவதும் பெரு வழிப்பாதை வழிகளில் தனிக்கட்சி தொடங்கி தன்கட்சியையும் தன் சுயத்தையும்  இழந்தவர்கள் போல தனிக்கதை இங்கும் உண்டு!


சில வருடங்கள்  அவர்  வழியில் சீடனாக குருவின் வழியில் வேகமாக நடப்பவர்களுடன் முன்னே சொல்ல பின்னால் இயல்தவர்களுடன் இதிகாசக்கதைகள் பேசி!இடைக்கிடை சில இடங்களில் மலையின் ஏற்றத்தில் தொடர் ஹிட்சு படக் ஹீரோவின் தோல்விப்படம் போல  இருந்து  நிதானித்து உடலை அசுவாசப்படுத்தி உறுதியோடு பயணிப்பதுக்கு குருவின் வழிகாட்டல் ஒரு குன்றின் மீது ஒளிபோல.!


 இந்த முறை எங்கள் எல்லோரையும் பாரிசில் இருந்து  இந்தியா அழைத்து வர குருவும் அதிகம் அவஸ்த்தைப்பட்டார் !

ஈழத்தவர்கள் அகதியாக ஐரோப்பாவில் இருப்பவர்கள்  இந்தியா போவதற்கு உள்நுழைவு அனுமதி கேட்டால் ஏதோ அமெரிக்கா தேசத்தில் அவமதிக்கப்பட்ட முன்னால் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம்  போல அவமதிப்புக்கள் ஒரு புறம் காத்து இருங்கள் எத்தனை உயிர்? உடமை? இனம் எல்லாம் பெறுமதி இழந்து முகம் தொலைந்து, நாதியற்று .நட்டாற்றில் .ஏதிலியாக பிச்சை  ஏந்தினாலும் !




ஈழம் கிடைக்கும் என்ற அரசியல் வாதிகள் போல ஆட்சி இழந்து போகும் சிலர் போல !

 காலதாமமாக்கல் என இந்தியா தூதரகம் செய்யும் இம்சைகளை சகிக்க முடியாமல் யாத்திரையும் வேண்டாம் !

ஐய்யனை இங்கிருந்தே வழிபட்டுவிடுவோம் மனக்கண்களின் ஊடே தில்லைக்காட்சியை கண்ட சமய குரவர் போல என்று எங்களுடன் விசாவுக்கு விண்ணப்பித்து இன்னும் விசா முடிவு சொல்லாமல் மூக்கறுபட்ட சகுனி போல ஆன ஐய்யப்ப பக்தர்களின் மனநிலையை எப்படி எழுதில் வடிப்பது?


மதத்துக்கும்,மதவழிபாட்டுக்கு உரிய காலத்தில் விரைவாக அனுமதி கொடுக்காத நாடு வல்லரசு கனவுகான்பது !,யானையைத் தடவிப்பார்த்த குருடன்  போல. !


மற்றவர்கள் ஹச் யாத்திரைக்கு எப்படி எல்லாம் குரல் கொடுக்கின்றார்கள் .அமைச்சர்கள் .

இது பற்றி பேச வேண்டியவர்கள் இந்து அறநிலைத்துறை .இந்து மாமன்றங்கள் .எல்லாம் இன்னும் மண்டியிட்டுக்கிடக்கின்று .

இந்தியா தொப்புள்கொடி தேசம் .தென்மையான மதத்துக்கு வழிவிட்ட பூமி தொழுது பாடக்கூட இன்று .

இறுக்கம் காட்டும் இறையான்மை பற்றி எதிர்க்கேள்வி கேட்க எவரும் இல்லாத மதமாகிப்போச்சு நம்மதம் ? எனக்கு என்ன ? எனக்கு என்ன ??,

என்று விலகிப்போவதால் வேற்று மதத்தவர்கள் ஆளுமைமிக்கவர்கள் ஆகிவிட்டார்கள் .


ஐய்யனோ இந்த வருடம் நல்ல வழிகாட்டு நான் ஏதும் வேண்டுதல் கேட்டது இல்லை உன்னிடம். இந்த பயணம் முடிய இலங்கை போறன் எனக்கு வழித்துணை வர வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொண்டான் பரதன்!
இன்னும் தவிக்கிறேன்..................................

13 comments:

  1. ஆதங்கம் புரிகிறது

    ReplyDelete
  2. ஆதங்கம் எனக்கும் புரிகிறது நண்பரே

    ReplyDelete
  3. ஐயனை நம்பியோரும் கைவிடப் படார்...!

    ReplyDelete
  4. நன்று!இந்தியா...........விசா.........ஹூம்!////ஆன்மீக யாத்திரை என்று,'இருக்கும்' ஒரே வாரிசு 'ராகுல்' காந்தியையும் நீங்கள் போய்,போட்டுத் தள்ளி விட்டால் இந்தியாவின் "எதிர்காலம்" என்னாவது என்று தான்..............!

    ReplyDelete
  5. annaa engap poringa

    ReplyDelete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

    வலைச்சர தள இணைப்பு : இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி!!!

    ReplyDelete
  7. ஆதங்கம் புரிகிறது//வாங்க டாக்டர் ஐயா முதல் வருகைக்கும். ப்ணிகளுக்கிடையில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  8. ஆதங்கம் எனக்கும் புரிகிறது நண்பரே//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  9. ஐயனை நம்பியோரும் கைவிடப் படார்...!//நம்புவோம் நல்லதே நடக்க! நன்றி தனபாலன் சார் வருகைக்கும்,கருத்துரைக்கும்.

    ReplyDelete
  10. நன்று!இந்தியா...........விசா.........ஹூம்!////ஆன்மீக யாத்திரை என்று,'இருக்கும்' ஒரே வாரிசு 'ராகுல்' காந்தியையும் நீங்கள் போய்,போட்டுத் தள்ளி விட்டால் இந்தியாவின் "எதிர்காலம்" என்னாவது என்று தான்..............!

    9 March 2014 04:55 Delete//ஹீ அரைவேர்க்காடு அவரைப்போட்டு நானும் ரவுடி என்று யார்தான் அனுதாபம் தேடுவார்கள் யோகா ஐயா!வெளியுறவுக்கொள்கை வாதிகள் செயல் மாற வேண்டும். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  11. annaa engap poringa// வாங்க வ்லைச்சர வாத்து பரதன் நாட்டுக்கு போறானாம்!ஹீ நான் போகமாட்டேன்!நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

    வலைச்சர தள இணைப்பு : இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி!!!//நன்றி தனபாலன் சார் தகவலுக்கு.

    ReplyDelete