15 March 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -8

நீண்டகால வனவாசம் கடந்து அயோத்தியை வனவாசம் கடந்து மீண்ட இராமன் மனது போலத்தான் தாய் நாட்டைவிட்டுப்பிரிந்து மீண்டும் இலங்கை வந்த பரதனின் மனநிலையும்..

எட்டு எட்டாக வகுத்துக்கொள்ளச்சொல்லிய வைரமுத்துவின் பாடல் போலத்தான் எட்டு ஆண்டுகள் பாரிஸ் வாழ்க்கையின் தஞ்ச நிலைக்கு முதல்க்காரணியே முதலில் தோன்றிய இந்தக்காதல் தான்.

 நட்புக்கள்கூட முகம் மறந்துவிட்டார்கள் இன்று முன்னம் அறிந்தவர்கள் முகம் தொலைந்து முகவரியும் இழந்து முகநூலிலும் முகம் காட்டாதவர்கள் பலர் இவன் போல!


என்றாலும் ஏதோ ஒரு நம்பிக்கையுடன் நானும் மீண்டும் இலங்கை வந்து இருக்கின்றேன் உயிரோடு  மீண்டும் வந்து இருக்கின்றேன் ஐயன் அருளில் !


இந்த நிமிடம் வரை இங்கு வந்தது ஈசன் அறிந்து இருக்கமாட்டான் என்ற நம்பிக்கையில் கட்டுநாயக்கா விமானநிலையத்தின் உள்வருகைப் பக்கத்தின்னூடாக தாய் பூமியில்  நடந்து கொண்டிருந்தான் பரதன் .

கடந்த காலத்தில் இனவாத ஆட்சியில் பதவி இருந்துவிட்டு பாரம்பரியம் இழந்து போன முன்னால் ஜனாதிபதிபோல !


இலங்கை நாடுவிட்டுப்போன நாட்கள் அவன் நினைவில் நிறம்மாறாத பூக்கள் படத்தில் விஜயன் நினைவுகள் போல காலம் தான் எத்தனை பாடல் இசைக்கின்றது !இன்று இணையத்தில் வரும் வானொலிகள் போல !!



 வாழ்க்கைப்பாதையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு கதை எழுதும் என் கதையும் எழுதும் நிலை வருமோ? என் நாட்குறிப்புகூட இப்போது என்னிடம் இல்லை !என் நட்பிடம் கொடுத்துவிட்டுத்தான் வருகின்றேன் நம்பிக்கையில் என் சொத்தைப்போல!

அதையும் பலரும் படிப்பார்களோ??நடிகையின் அந்தரங்கம் என எழுதும் பத்திரிகைபோல!

இன்னும் தவிர்க்கின்றேன் --...........

15 comments:

  1. அந்த உணர்வு எழுத்தில் வடிக்க முடியாத ஒன்று..

    ReplyDelete
  2. எத்தனை படங்களின் ஞாபகம் தான் உங்களுக்கு வருகிறது...!!!

    ReplyDelete
  3. ம்...........பிறந்த தேசத்தை அடைந்து விட்டார்.இனி......................?பார்ப்போம்.

    ReplyDelete
  4. aaaaaaaaaa annaa

    ReplyDelete
  5. ஊருக்கு போறாரோ ...பரதன் தான் ஹீரோ வா ...சரி பார்ப்போம் இனிமேல் தான் கதை இண்டரஸ்டிங் இருக்கும் ...

    ReplyDelete
  6. தொடரனும்னு முயற்சி செய்யனும் கண்டிப்பா ...பார்ப்போம் எப்படின்னு ...

    ReplyDelete
  7. அந்த உணர்வு எழுத்தில் வடிக்க முடியாத ஒன்று..//வாங்க கோவை ஆவி நீண்ட காலத்தின் பின் முதல்வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! உணர்வு உரைக்க வார்த்தை ஏது!ம்ம் நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  8. எத்தனை படங்களின் ஞாபகம் தான் உங்களுக்கு வருகிறது...!//விசில் அடித்தே வீனாபோன ஒருவன் தனிமரம்!ஹீ நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  9. உணர முடிகிறது நண்பரே/நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் வாக்கு இட்டமைக்கும்.

    ReplyDelete
  10. ம்...........பிறந்த தேசத்தை அடைந்து விட்டார்.இனி......................?பார்ப்போம்.//ம்ம் பார்க்கலாம்!ஹீ நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  11. aaaaaaaaaa annaa//ரவுடி வாத்துஊஊஊஊஊஊஊஊஊஊஉ

    ReplyDelete
  12. ஊருக்கு போறாரோ ...பரதன் தான் ஹீரோ வா ...சரி பார்ப்போம் இனிமேல் தான் கதை இண்டரஸ்டிங் இருக்கும் ...//பரதன் பாத்திரம் தான் ஹீரோ நேரம் இருக்கும் போது படியுங்கோ ரவுடி தாயி!ஹீ

    ReplyDelete
  13. தொடரனும்னு முயற்சி செய்யனும் கண்டிப்பா ...பார்ப்போம் எப்படின்னு ...//நேர்ம் கிடைக்கும் போது படியுங்கோ வாத்து.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete