16 September 2014

தேடலும் நினைவுகளும்--2

வணக்கம் உறவுகளே எல்லோரும் நலம்தானே??

 மீண்டும் தேடலும் நினைவுகளுடனும் சந்திக்கின்றேன்.

 இன்று யாரைத்தேடலாம் இவர் பெயர் ஆதித்யன்.

 இசையமைப்பாளர். 90 இன் பிற்பகுதியில் இளையராஜாவின் இலையுதிர்காலத்தில் நானும் சூப்பர்ஸ்டார் என்ற கோதாவில் அமரன் திரைப்படத்தின் ஊடாக தமிழுக்கு வந்தவர்! 

முதல்படத்தில் நடிகர்  கார்த்திக்கை பின்னனி  பாடவும் வைத்தவர் அஸ்லாலைக்கு மெட்டுத்தானுங்கோ! இலங்கை பைலா பாடல் சாயல் இது என்றாலும்  அமரன் பாட்டிலதான் கொட்டிக்காரன் என்றாலும்  குத்தில் பின்னிய பாடல் இலங்கை வானொலியில் நேயர் விருப்பத்தில் விரும்பி காற்றில் ஒலிக்கவிடமுடியாத சூழ்நிலையை அறிவிப்பாளர்களுக்கும், அறிவிப்பாளினிக்களுக்கும் ,கட்டுப்பாட்டாளர் பதவி கட்டுப்பாடு விதித்த நிலையை இலங்கை  வானொலி நேயர்கள் அறிவார்கள்.


 பாடல் வன்முறையைத் தூண்டுவதாக இருப்பதாக இலங்கை இனவாத  அரசின் கட்டுப்பாட்டுக்கு கட்டிப்படவேண்டிய கடப்பாடு கட்டுப்பாட்டாளருக்கு!

அவரும் சூழ்நிலைக்கைதி என்றாலும் அவரும்/அவவும் அறிவிப்பாளர்களாக அறிமுகமுகமாகி பதவி உயர்வு பெற்றவர்கள்

! அவர்களுக்கு பணி முக்கியம் எனக்கு நல்ல பாடல் தேர்வுகள் முக்கியம் (உள்குத்து இல்லை மாகஜனங்களே::::::::)

ஆதித்யன் நல்ல மெட்டுக்கள் போட்டாலும் ஏனோ அதிஸ்ரம் அவருக்கு  கைகொடுக்கவில்லை தமிழ்த்திரையில் .

வந்தவேகத்தில் சிலபடம் சேர்ந்தாலும் சிவலப்பேரி பாண்டி, என்று இசை பின்னிய காலம் வசந்தகாலம்.


 பின் இவர் சின்னத்திரையில் இசைநிகழ்ச்சி செய்து பார்த்து  ஞாபகம்  இருக்கு!

 தலையை பின் வந்த பாடகர்  ஹரிகரன் போல சிலிர்ப்பி முடியை  பின்னிவளர்த்து இருப்பார்!

 இசையமைப்பாளர் என்றால் நெற்றியில் திருநீறு. சந்தனம் .குங்குமப்பொட்டு. வேட்டி என்ற என் கற்பனைக்கோட்டையை சிதறரடித்த முதல் இசையமைப்பாளர் இவர் என்ற என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டியது வரலாற்றுப்பதிவு.  ஆதித்யன் கோட்டு சூட்டில் கொண்டையில் தனித்துவம்:)))!


 இன்னொருவர் இசையில் மற்றவர் பாடும் இசையமைப்பாளர்  வரிசையில்  இவர் S.A .ராஜ்குமார் இசையில் அவருடன்   சேர்ந்து  பூவே உனக்காக படத்தில் பாடிய இந்தப்பாடல் அதிகம் எனக்கும் பிடிக்கும் பேர்த்தி சினேஹா போல் இருந்தாள் ரசிக்கலாம்  ஹீஈஈஈஈஈஈ

!
இவர் புதிய இசை கேட்டால் சொல்லுங்கோ!

 தொடரும்..........................


---------------------------

கனவும் கற்பனையும் காதலி நீ
கடல் கடந்தாலும் வருவேன்
காத்து இரு கதையுடன் 
கன கதை இதுவும்!!
 காலம் கூடினால் விரைவில்!!!!!


5 comments:

  1. வணக்கம்
    அண்ணா.

    தேடுங்கள் தேடிக் கொண்டு இருங்கள் விடியல் பிறக்கும்...த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
    நலமா?
    நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இணையம் பக்கம் வருகை...
    ===
    தேடலின் நிமித்தம் மிகவும் அருமையான இசையமைப்பாளர்
    அறிமுகம்.
    சீவலப்பேரி பாண்டியில் வரும் ஒயிலா பாடும் பாட்டுல
    என்ற பாடல் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது...

    ReplyDelete
  3. அமரன் பாடல் சூப்பர் ஹிட் அடித்தது! சீவலப்பேரி பாண்டியில் ஒயிலா பாடும் பாட்டுல பாட்டை மறக்க முடியாது! மிக அருமையான இசையை கொடுத்த ஆதித்யன் என்ன ஆனார்? தங்களுடன் நானும் தேடுகிறேன்! நன்றி!

    ReplyDelete
  4. தேடல் அருமை. அழகிய தொகுப்பு..

    கார்த்திக் என் ஃபேவரிட் ஆக்டர் ஆச்சே...

    ReplyDelete
  5. அருமை
    இனிமை
    நன்றி நண்பரே

    ReplyDelete