09 March 2015

கிறுக்கலும் கீதமும்.

எழுதுவதும் ஒரு  பிரவசம் போல
எழுதும் கவிதையும் இன்னொரு பிறப்பு !
என்று எழுதும் எழுத்தாளர்கள்/ளிகள்  இன்று
ஏந்தும் தமிழ்  போல
ஏனோ வீதியில் என்று
எடுத்துச் சொன்னால்
எல்லாம் ஒரு பிழைப்பும் தமிழ் போல
எழுதி எவந்தான் தமிழில்
என்றும் வெல்லலாம்  சில கோடி
என யாரும் மேடை நாடகத்தில்  என ஏனோ
ஏதிலிகள் யாரும் கற்கவில்லை!


/////////////////////



 உதவும் ஆசை எனக்குண்டு
உண்மையில் நீ முகம் அறிந்து
ஊர்மாறி முகம் கொண்ட
உற்ற நண்பன்! என்றாலும்
உன்னைப்போல ஒருவன்
உண்மையில் இன்றும் இல்லை!!
உனக்குப்  புரியாது ஏதிலி தேசத்தில்
உழைப்பு இல்லாத
உற்ற நண்பன்  ஒரு நாள்
உண்மை   நிலை
உன்னிடம் சொல்ல
உதைக்கின்றது  எனக்கும்
உருவான ஒரு
உற்ற வாரிசு! உன்மையில்
உலக வாழ்க்கை ஒரு சுமைதான்!

9 comments:


  1. கிறுக்கலும் கீதமும்
    கவிதையின் தலைப்பாய்
    தவித்தாலும்,
    படித்தபோது நெஞ்சில்
    கிறுக்கல் இல்லாத கீதமாய் நின்றது
    எழுதுவதும் ஒரு பிரவசம் போல
    எழுதும் கவிதையும் இன்னொரு பிறப்பு !
    உன்மையில்
    உலக வாழ்க்கை ஒரு சுமைதான்!
    பிரசவத்திற்கு பிறகும் தொடர்கிறதே! தோழரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  2. அருமை தோழர்...

    ReplyDelete
  3. வணக்கம்

    சொல்லிய கவி வரிகள் நன்று....பகிர்வுக்கு நன்றி எல்லாம் இப்படித்தான் த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. நன்று...........யதார்த்த வரிகள்!

    ReplyDelete
  5. சரியாகச் சொன்னீர்கள் நண்பரே!

    ReplyDelete
  6. அர்த்தமுள்ள வரிகள் நேசன் வாழ்த்துக்கள்
    தம 6

    ReplyDelete