30 August 2015

நினைவாகத் தொடரும் நினைவுகள்.

சில பாடல்கள் என்னை இன்னும் சித்திரம் போல மனதை அசை போட வைக்கின்றது .அப்படியான பாடல் கேட்கும் போது அதை பல நட்புக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆசையிருக்கு !அதனால் முகநூல்/வலை என்று பட்ட அவமானம் இன்னும் நிழல் போல முகநூலில் இன்றும் கோபம் ஊட்டினாலும்!

 பொதுவெளியில் எழுத நினைக்கும் பாடல் பட்டியல் என்னிடம் ஆயிரம் தாண்டிய  பாடல்கள் பட்டியல் இருக்கு! மும்மொழியும் எனக்கு பிடிக்கும்! தமிழ், சிங்களம், ஆங்கிலம், என்று !  இலங்கையில்[[[


இப்போது பிரெஞ்சுப் பாடல்களும் பிடிக்கின்றது ! ஆனாலும் பிரெஞ்சை பலர் நேசிக்க மறப்பது தனிக்கதை.

 அதுக்கு ஆங்கிலம் தடையாக இருப்பதும் ஒரு காரணம் எனலாம்! விளங்கவில்லை/புரியவில்லை என்றால் முதலில் கேட்பது நீ ஆங்கிலம் கதைப்பாயா /பேசுவாயா என்றால் அவன் பதில் இல்லை என்றே வரும் .

இது அவன் மொழிப்பற்று அது பற்றி இன்னொரு பதிவில் பேசலாம்!


 ஆனால் கனவுகள் என்னை தாலாட்டுது. அது ஏன். ?,எதனால் ?,என்று அறியும் ஆவலில் இருக்கின்றேன் !சிலதை மறை முகமாகத்தான் காட்சிப்படுத்த முடியும் ஊடகத்தில்!

 அதுவும் கனவாக போனவை பல


மறைவேதம் சொல்லும் சேதி பல  விளங்கவில்லை உன் பகிர்வு புரியவில்லை என்றால் முதலில்  இருந்து என் பதிவுகளை படியுங்க!

 இல்லை என்னை பிளாக் பண்ணி விட்டு ஓடினால் நானும் இன்னும் முகநூலில்/ வலையில் கும்மி அடிக்காமல் பலரின் காத்திரமான பதிவுகளை  வாசிக்கலாம்!

பாடல் என் நாதம் யாரிடமும் எனக்கு கோபம் இல்லைஇந்த நிமிடம் வரை  சகோ!

இந்தப்படல் பற்றி நீங்கள் மூத்தவர் வழிகாட்டி  பகிரவில்லையே வலையில் என்ற ஆதங்கம் அன்றி வேறில்லை!

 தனிமரம் இன்று வலையில் வந்தவன் தான்! ஆனாலும் தோப்பு இப்பவும் எப்போதும் !தனிமரம் பாடல் பற்றி முடியும் போதெல்லாம் பகிர்வேன்  வெட்டியாக இருந்து!பம்ம மாட்டேன் சார்! நன்றி சகோ ஒரு பதிவை தேற்ற உதவியதுக்கு!


பாடலை ரசியுங்கோ வலை உறவுகளே இன்னும் பேசலாம் இந்த வலையில்!




எனக்கு வருவதைதான் என் பார்வையில் என் மொழியில் எழுதுகின்றேன் !  இதில் நொண்டிச்சாட்டு எதற்கு,,?, இல்லை சிங்களமொழியில் எழுதினால் புரியுமா சகோ ?,!அதுக்கும் தனிமரம் இன்றுமுதல் தயார்!  வலை அமைப்பை நீங்கள் உருவாக்கி தரமுடியும்?, என்றால் ! எனக்கு தொழில்நுட்ப அறிவு இல்லை என்பதை பலதடவை என் வலையில் சொல்லியது விளங்கவில்லை/புரியவில்லை என்றால் என்னால் மீண்டும் பள்ளிக்கூடம் போக முடியாது!

சிங்களத்தில் வலையை ஆரம்பித்து தரமுடியும் என்றால் விரைவில் அங்கேயும் வர தனிமரம்  ரெடி !ஆனால்  தொழில்நுட்ப , எழுத்துப்பிழை என்றால் எந்த மொழியும் அறியாதவன் என்னை வலையில்  எங்கே அழைதாலும் ஏதிலி ஐயா சாமி
!



12 comments:

  1. பதிவில் நீங்கள் சொல்ல வரும் விஷயம் எனக்கு புரியவில்லை. அதற்கு காரணம் உங்கள் தளத்திற்கு நான் புதியவன் என்பதால்.....ஆனால் நீங்கள் இணைத்து இருந்த பாடல் மிகவும் அருமையாக இருந்தது 2 முறை கேட்டேன்

    ReplyDelete
  2. பாடல் அருமை நண்பரே
    தம +1

    ReplyDelete
  3. பாடலின் இசையும் வரிகளும் கவர்கின்றன . காட்சிப்படுத்திய விதமும் அருமை

    ReplyDelete
  4. வணக்கம் சகோ!! நீங்கள் எழுதி செல்லும் நடை அழகு அருமை!! விடயங்களும் அருமை!! பாடல்களும் நன்று!! தாங்கள் என் தளம் வந்து குறிய அன்பு அறிவுறைகளை கண்டிப்பாக பின்பற்றுகறேன்!!! மீண்டும் நன்றி நன்றி சகோ!!

    அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!!!

    ReplyDelete

  5. நீங்கள் நினைப்பவை அப்ஸ்ட்ராக்ட் ஆக இருப்பதால் தொடர கஷ்டமாய் இருக்கிறது. கனவுகளே பாடல் கேட்டேன் நன்று வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தங்கள் நடை தனி, அருமையாக இருக்கு, நன்றி.

    ReplyDelete
  7. கதம்பப் பகிர்வு. மனம் நிறைந்த பதிவு. நன்றி.

    ReplyDelete
  8. பாடல் ந‌ன்றாக உள்ளது...ஊர் ஞாபகம் வந்து போகின்றது

    ReplyDelete

  9. பாடலை மிகவும் ரசித்தேன் நண்பரே
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  10. அருமையான பாடல். மனம் கனக்க வைக்கிறது காட்சி அமைப்பு. கந்தப்பு ஜெயந்தன் அவர்களின் வேறும் பாடல்கள் கேட்டிருக்கிறேன் மிகவும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி!

    ReplyDelete
  11. அருமையான பாடல். மிகவும் ரசித்தேன். எனது வலைப்பூவுக்கும் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

    ReplyDelete