05 November 2015

கவிதையும் காற்றும்.

கவிதை போல கதை  எழுத ஆசை!
காணாமல் போன கண்ணீர் காதல்
கடல்கடந்த துயரம் எல்லாம்
காற்றில்! காதல் கீதம் போல
கரைந்து எழுத இது என்ன
காவேரி கடலா ?,



காதல் என்ன  அருவியா ??இல்லை
காளை மனதில்
கருணை விடுதலை
காத்திருப்போர்  பட்டியலா??
கடவுளே நான் என்ன
கல்லாத மரமா ?,காதலில்
கருனையுடன்  காதல்;!
கடிதம் எழுத நேரம் இல்லை.!
கருணை மனுக்கொடுக்கும்
காவலன் காதலன்!
கடல்கடந்தவன் கற்றவனா?,
காதலியுடன் காணம் பாடும்
கல்லாதவன் காசு இல்லாத
கயவன் போலவா ??
காத்து இருக்கும் கிளியே
கவிதை பாடு காற்றில்!



கதை முடியும் நேரம்!

காலையில் வேளை
காணம் வரும் காற்றில்!





4 comments:

  1. அருமை சகோ! காவேரியுடன் நல்ல உவமை! தொடர்ந்து கவிதையும் தாங்க! ஓரே எழுத்தில் எழுத நானும் கத்துக்கனும்!

    ReplyDelete
  2. நல்லாருக்கே தனிமரம் நேசன்....இன்னும் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள்..பொங்கட்டும் ப்ரவாகமாய் உங்கள் கவிதை..

    ReplyDelete
  3. வணக்கம்
    அண்ணா

    நன்றாக உள்ளது இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. கவிதை அருமை தனிமரம்.

    வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete