26 January 2016

முடிக்காத கவிதை.

கனவு என்னும் காதல் தந்தாய்
காத்திருத்திருப்பு என்ற நிஜம் சொன்னாய்
கல்வி என்ற தகுதி கேட்டு
கடவுள் என்னும் பாதை போட்டாய்
காட்சிப்பிழையாய்
கார்கால மழையாய்
கன்னேதிரே இன்றும்
கர்க்கிப் பழம் போல


கார்கால விடுமுறையில்
கார்டிநோட் தரிப்பிடத்தில்
காட்சி தந்து போகும் முன்னாள்
காதலியே !



கருணையுடன் உனக்கும்
கடும்வனம்  தொடர்ந்தும்,
கடந்தும் பிரார்த்திக்கின்றேன் இன்றும்
கடந்த காதலானாய் .


கஜபாகு போலலொருவன்
கற்றவன் கைத்தளம்  நீ பற்ற.
காதலும் ,ஆன்மீகம் போலத்தான்
கடந்து ,உணர்ந்து ,உருகி ,
 கலந்து,தேடல் கொண்டால்
காலில் விழுவதும் ஆசிவேண்டி
காதலில் விழுவதும் யாசிப்பு வேண்டி.
கற்சிலேம் பதியே !

---------------
கார்டிநோர்ட்-பாரிசின் ஒரு ரயில் தரிப்பிடம்

9 comments:

  1. அருமை
    நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களை வலையில் சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பரே

    ReplyDelete
  2. கார்டிநோட்// இது முன்னாள் காதலி பெயர்தானே ? ஹி ஹி...

    ReplyDelete
  3. கவிதை நல்ல ரசனை நண்பரே தொடருங்கள்
    தமிழ் மணம் 5

    ReplyDelete
  4. ககார காதல் கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வணக்கம்

    காதல் இரசனை மிக்க வரிகள் வாழ்த்துக்கள் த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு.


    மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும்
    http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html

    ReplyDelete