03 July 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்-8

முன்னர் இங்கே-http://www.thanimaram.com/2017/06/7.html 
---------------------------------





நினைவுகள்  எப்போதும் சந்தோஷம். தருபவற்றை மீட்டிப்பார்க்கையில் காலம் கடந்தாலும் மனதில் ஒரு குற்றால அருவி போல சிலிர்ப்பாக இருக்கும் .

அதுவே சங்கடமான நினைவுகள் எனில் திரும்பிப்பார்க்க கூட மனது விரும்பாது  இனவாத நாட்டில் சிறைக்கைதிகள் நிலை போல !

இருந்தாலும் மனம் என்ற குரங்கு கொப்புவிட்டு கொப்புத்தாவும்  வெற்றிகிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் .

அப்படித்தான் இலங்கை என்ற தேசத்தில்  சில்லறைக்கடை என்ற. வியாபாரம் உலகு புதிய கதைகள் பல பேசும்  அறியாதவர்களுக்கு

வியாபாரம் என்ற குறுக்கொழுத்துப்போட்டி எல்லோருக்கும் விடைதெரியாத  ஒரு கட்டங்கள் போல துணிந்து முயற்ச்சித்தால் நிச்சயம் வெற்றியாளர் என்ற விடை அழகு படுத்தும் .

இப்படி  அழகு என்ற இயற்க்கை கம்பளம் போர்த்த இயற்கை பூமி இலங்கையின் தேசப்படத்தில்   தேடினால் அது மலையக வாசம் வீசும் மல்லிகைப்பூ போல குறுக்கு நெடுக்கு நீரோட்ட அருவி பாயும் சொர்க்கபுரி. இதுக்கு ஏதும் இல்லை வரிவிதிப்பு சட்டங்கள் .

தேயிலைத்தாய் படங்கு விரிக்க, லுனா மரங்களும், முள்ளுமுருக்கையும் துணையிருக்க , உதிரிப்பூக்கள் பாடல் போல அழகிய கண்ணே என்பதா
புத்தம்புதுப்பயணம் படப்பாடல் பாடுங்களே பறவைகளே என்பது போலவா ?செந்தூரபூவே படப்பாடல் வாராங்கோ வாராங்கோ என்பது போலவா ?முத்தழகுவின் குரலில் வரும் எண்ணாங்களாலே இறைவன் தானே என்பது போலவா ?

எப்படி அழைப்பது இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தந்த மக்கள்  இடப்பெயர்வு  என்ற சொல்லாடல் பிரபல்யம் ஆக முன்னரே இலங்கையில் வியாபார உலகம் இந்த இடப்பெயர்வை விரும்பி ஏற்ற பரதேசிகள் படம் போலவா?

என் கால்கள் இந்த வீதியை எத்தனை தடவை நடையாளே அளந்தது  என்று  தெரியுமா பேராண்டி ! அப்போது  ஆட்டோ, மோட்டார் சைக்கிள் வர முன்னமே  என் கால்கள் சலங்கை கட்டி ஓடியது  என்று பெருமையுடன் பேசும் தாத்தாக்களின் வாழ்க்கைப்பாடங்கள் எல்லாம் இலக்கியம் பதிவு செய்ய மறந்து இருக்கலாம்!






 இணையம் தணிக்கை செய்து இருக்கலாம் .

என்றாலும் சொல்லப்படதா கதைகள் பலதை சொல்லித்தந்த நகரங்களில் இதுவும் ஒன்று .








மலையகத்துக்கு வாசல் திறக்கும் பலாங்கொட கடந்து வரும் ஹல்தமுல்லையின் தொடக்க  வாசல் ஒரு புறம் என்றால் ,

மேற்கே இன்றைய அமர் ஓயா  திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கூடும் நகரம் பண்டாரவளைக்கும் இடையில்.

 சிறிய நகராக விளங்குவது அப்புத்தளை என்ற ஊர்


இலங்கையின் நுவரேலியவுக்கு அடுத்த படியான குளிர்மைமிக்க தேசம் .சுற்றுலாப்பயணிகள் அதிகம் கவரும் பூமி .

  தொழில் என்றாலே கொழுந்து எடுக்கும் தோட்டத்தொழில் முதன்மையானது .தோட்டவேலைகளுக்கு இடையிலும் சிறு வருமானம் தருவது மரக்கறிகள் பயிர்கள் இடுதல்.!






அரச ஊழியம்இவற்றை விடுத்து வருமானம் தருவது என்றால் !கொழும்புக்கும் அதன் மறுபகுதிகளுக்கும் வீட்டுப்பணிப்பெண்கள் வேலைக்கும், கொழும்புக் கடைகளில் உடல் உழைப்புக்கும் படை எடுத்தால் தான் வாழ்க்கைப்படகை ஓட்டமுடியும்னென்று சிந்திக்கும் மக்கள் வாழும் நகரம்.


 மும்மொழிகள் பேசுவோர் ,மும்மதங்கள் கொண்டாடும் கோட்டை. இந்த அப்புத்தளைக்கு என்று பாராளமன்றத்தில் இருக்கும் ஆசனமோ  மிஞ்சினால் 3 உறுப்பினர்கள் தான் என்று வரையறுக்கப்பட்ட சிறு நகரம்.

 இன்று அங்காடிகள் வந்தாலும் இதன் ஆரம்பகாலத்தில் விரல்விட்டு என்னக்கூடிய வியாபார நிலையங்கள் தான் கோலோட்சியது    இந்த அப்புத்தளையில் !

டொனமூர் , சோல்பரி யாப்புக்கள் வந்து போன தென்றாலும் இன்றைய சனநாயக குடியரச யாப்பு என்றாலும் சட்டத்தின் அதிகாரம் போல    குவிந்த ஆட்சி நிலை போல வடக்கில் இருந்து வந்த தீவார்களின் கைகளில் வியாபார ஆட்சி !

ஹப்புகாமிகளும் ,பந்துலகுணவர்த்தனவுக்களும் சிறிபாலாக்களும் அன்போடு முதலாளி மஹாத்தயா என்று கைகட்டி நிற்க சில்லறை வியாபாரநிலையங்களா   ஆட்சி செய்தவர்களின்  வம்சத்தவர்களில்  ஒருவர்தான் கமலேசின் அப்பாவும்!






தொடரும்..


.


படங்கு- சாக்குக் விரிப்பு 
மஹாத்தயா- சகோதரமொழி சிங்களம் அதிகாரி போல தமிழில்

7 comments:

  1. தொடருங்கள் நண்பரே
    தொடர்கிறேன்

    ReplyDelete
  2. மிகவும் நன்கு

    ReplyDelete
  3. படத்தில் உள்ள இடங்கள் அழகாகத்தான் இருக்கிறது...ஆனால்...அதில் ஆபத்துகள் இருப்பது..????

    ReplyDelete
  4. அப்புத்தளைக்குப் போக ஆசையாத்தான் இருக்கு..! ரோட்டுகளின் வளைவைப் பார்க்க எல்லோ பயமா கிடக்கு

    ReplyDelete
  5. அருமை நண்பரே

    ReplyDelete