01 March 2018

காற்றில் வந்த கவிதைகள்-32

 http://www.thanimaram.com/2017/11/31.html

 -----------------------------------------------------------------------------------
ஆயுள் உள்ளவரை!
————-
அன்பே அழகிய 
இயற்க்கையின் அற்புதத்தீவே!
ஆணவத்தில் இனவாதம் 
அழித்திட்ட வளங்கள் பல
அகதிகள் போல,
ஆன்மா என்றும்
அலைந்து அகன்று போனாலும்
ஆயுள் உள்ளவரை
அடிநெஞ்சில் என்றும்
அழிந்து போகாது

ஈழம் என்ற நேசம்!///


——
சம்மதிக்கின்றேன்..!

தேர்தல் வருவதும்
 தேவையின் போது
தீர்வுகள் சொல்வதும்,
 தேசியம் என்ற கவசத்தை
தேக்குமரம் போல
தோல்களில் போர்த்திய உணர்வுடன்
தேடி வருகின்றனர் !
தேரவாத பெளத்தத்தின்
பொய்முகங்கள் தீர்வுக்கு 
சம்மதிக்கின்றேன் என்ற 
ஓரங்க நாடகத்தில்!

(யாவும் கற்பனை)

——
வசதிகளும், வரங்களும்
வாழ்வில் வந்து போகும்
வசந்தகாலம் போல அல்ல  அன்பே!
வாடைக்காற்று என்றும்
வற்றிப்போகாத 
வரண்டபூமி போல அல்ல
வரும் வழிகளில் உனக்காக
வரவேற்க காத்து இருக்கும் 
என்  வாழ்க்கைத்துணை நீயே
என எண்ணும்  என் வாசம்!

 -----------------------------------

6 comments:

  1. ஆஆஆஆஆஆ எங்கே நேசனைக் காணல்லியே எனத் தேடினேன்.. எங்கே இடையில் காணாமல் போயிட்டீங்க...

    //ஆயுள் உள்ளவரை
    அடிநெஞ்சில் என்றும்
    அழிந்து போகாது

    ஈழம் என்ற நேசம்!//////
    அதெப்படி நெஞ்சை விட்டு அழியும்...

    ReplyDelete
  2. ///வரும் வழிகளில் உனக்காக
    வரவேற்க காத்து இருக்கும்
    என் வாழ்க்கைத்துணை நீயே
    என எண்ணும் என் வாசம்!///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இன்னும் ஸ்னேகாவை மறக்க முடியவில்லைப்போல:)

    ReplyDelete
  3. கவிதை வரிகள் எல்லாம் சூப்பர் :)
    அது யாரு நியூ பொண்ணு :) இது ஸ்நேகாக்கு தெரியுமா :)

    ReplyDelete
  4. வரும் வழிகளில் உனக்காக
    வரவேற்க காத்து இருக்கும்
    என் வாழ்க்கைத்துணை நீயே

    அருமை
    அருமை

    ReplyDelete
  5. புத்துணர்வுடன் வந்திருக்கீங்க போல நேசன்!!!! சூப்பரா இருக்கு வரிகள்!! அது வரிகளில் தெரிகிறதே!!!!!!

    அன்பினூடே உங்கள் ஊரின் நிலைமையும் கலந்து வழக்கம் போல வெளிப்பாடு!! பின்னே நம் சொந்த தாய்மண்ணை மறக்க இயலுமா எங்கிருந்தாலும் அது அடி மனதில் நாதமாய் ஒலித்துக் கொண்டுதானிருக்கும்....அருமை நேசன்...இன்னும் இன்னும் புத்துணர்வு பெற்று எழுதுங்கள்!!!

    கீதா

    ReplyDelete