03 April 2018

காற்றில் வந்த கவிதைகள்-35

http://www.thanimaram.com/2018/03/34.html


--------------


வசதிகள் வரும் என்று
வந்து போகும் நம்பிக்கை 
வாக்குகெடுப்பு போலத்தான்,
வாழ்க்கையிலும் வசதியை நாடியே
வந்துபோகின்ற 
வடக்கு கட்சிகள் போலவே 
வாடிக்கை உறவுகளிடம்
வாடிப்போன சருகு போல
வாசனையில் அன்புகொண்டு 
வாழ்துகொண்டு இருக்கும்
வாழை மரநார்  போல
வசியம் தெரியாத 
வாடிப்போன மரம் நான்!


(யாவும் கற்பனை//
-------------------------------------




கைபிடிக்க ஆசைகொண்டேன்
கைவிடாத கடவுளின் கிருபைபோல
கைவிட்டாள் !
கைவினைப்பொருள் போல,
கைகேயின்  ஆணை போல
கைநீட்டி கத்தரிவெயிலில்
கையிருப்பு என்னவென்று?
கையில் இருந்தது பையில்
கைகொடுக்கும் கை படப்பாடல்
கைத்தளம் பற்ற
கைதிக்கும் கசக்குமோ?
கைதொழுதேன் கருணைக்கடல்
கைபிடித்து வழிநடத்துகின்றான்
கையில் இரு மலர்களுக்கும்
கைகாட்டும் குரு போல
கையைத்தட்டியவளோ கண்ணீருடன்
கைத்தறி ஆடையில்
கைதி போல 
கைக்கூப்பிய அரசியல் எல்லாம்
கைநாட்டு வைத்தாலும்
கைவிட்டுப்போகுமோ?


(யாவும் கற்பனை)///

—------------------------------

எப்படி என்னுள் வந்தாய்?
——
இலக்கியம் என்னும் 
இதயங்களை இசை போல
இனிதாக்கும் ஆசைக்காதலியே!
இலக்கியம் நயமுடன் பயிலாத
இடையன் இவனும்,
இனிய கவிதைகள் புனையவும்,
இக்கரைசேர்ந்த தொடர்கதைகள் என
இயல்புடன் இணையத்தில்
இவ்வுலகம் எங்கும் !
இருட்டில் ஒளிந்த கதைகள் என
இன்னும் படைக்கும் ஆவல் தந்தவளே!
இவனுக்குள்ளும் இறந்தகால கனவு போல 



இதயவாசல் தேடி எப்படி  என்னுள் வந்தாய் ?
இப்போதும் சிந்திக்கின்றேன்!
இன்னும் தேடும் இரவுப்பாடகன் போல
இலங்கை மண்ணில்
இடிந்த வீட்டை!

(யாவும் கற்பனை)





6 comments:

  1. ஸூப்பர் நண்பா இரசித்தேன்.

    ReplyDelete
  2. கற்பனை அனைத்தும் அருமை...

    ReplyDelete
  3. ஸூப்பர் நண்பா இரசித்தேன்/நன்றி ஜீ வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  4. கற்பனை அனைத்தும் அருமை/நன்றி டிடி வருகைக்கும், கருத்துரைக்கும்

    ReplyDelete
  5. நன்றாக இருக்கிறது நேசம் அதுவும் இறுதி வரிகள்...."இதயவாசல் தேடி எப்படி என்னுள் வந்தாய் ? இப்போதும் சிந்திக்கின்றேன்!
    இன்னும் தேடும் இரவுப்பாடகன் போல இலங்கை மண்ணில் இடிந்த வீட்டை!"

    யாவும் கற்பனை நன்றாக இருக்கிறது ... அதிலும் மெல்லிய சோகம்!

    எங்கள் இருவரின் கருத்தும்...

    ReplyDelete
  6. அருமை
    ரசித்தேன் நண்பரே

    ReplyDelete