07 June 2020

வர்ணஜாலம்!

வருடிக்கொடுத்து  வார்த்தைகளில்
வர்ணஜாலம்  காட்டி,
வாரியணைத்து
வாழ்த்தியனுப்பி,
வருவோரின்  தேவையில்தானே
வாங்குபோல!


வளவளப்பில்
வருங்கால  தேர்தல்வேட்பாளர்போல,
வலவல  என்றகோஷங்கள்  எல்லாம்
வாந்தி எடுத்த  குடிகாரர்  போல,
வாசனைதெளித்த
வடிவமைப்பாளர்   கரம்தொட்ட
வளரும்  நடிகையின்  தயக்கம்  போல,
வாருங்கள்   கொர்னாவுடன்
வாழ்ந்து  பழகலாம்  என்ற
வரவேற்பு   கோஷம்  போல,
வடக்கின்  உதயம்   என்ற
வங்குரோத்து  கூத்தணியின்
வாயசைப்புபோராட்டம்  எள்ளல்  போல
வாடிவாசல்   போல
வாக்காளர்  நிலை   என்ன?
வழமைபோல !
வரப்போகும்  பதவிக்கும்,
வாங்கிய  பெட்டிக்கும்
வாயடைத்து  குத்துவார்களாக?


வாக்கினை  வீட்டிச்சின்னத்தில்!
வரலாற்றில்   எதிர்கட்சிப்பதவியைக்கூட
வாரிக்கொடுத்த  வக்கற்ற
வயசாலிக்கு
வர்ணக்கூட்டணிக்காக 
வழக்காட   உச்சநீதிமன்றம்  போவார்
வதைக்கும்  இனவாதம்சோடித்த
வாடிப்போகும்  சிறைக்கைதிகள்
வழக்கெல்லாம்  வருவாய்இல்லாத
வாய்ச்சாடல்  என்று
வானொலிகளில்  சீண்டும்
வல்லைத்தொகுதி  வெள்ளவேட்டிக்கு,
வாரீர்கள்ஒரு 
வசியம்வைத்து 
வழியனுபுவோம்!




வங்குரோத்து  ஊதாரிகளுக்கு
வரப்போகும்   தேர்தலில்,
வடகிழக்கில்இப்போதும் 
வாக்குகேட்கும்!
வக்கணை  யற்றவர்களை!எல்லோருக்கும்
வரிப்புலிகளே  வழிகாட்டிகள்,
வந்துபோன  வட்டமேசைக்கதைகள்  எல்லாம்
வருங்காலத்திலும்  பேசனும்!
வாடிப்போன  பூப்போலஅல்ல
வரலாற்று  இருப்பு!


(யாவும்கற்பனை)

7 comments:

  1. வா'ழ்த்துகள்...!/நன்றிகள் டிடி முதல்வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி![[

    ReplyDelete
  2. ஆஹா கவிதை வழமைபோல அரசியலில் பூந்து விளையாடுது...

    வீடியோ வேர்க் பண்ணவில்லை எனக்கு நேசன், எனக்கு மட்டும்தானோ?..

    ReplyDelete
  3. வ, வாவில் வழக்கம் போல அழகான அரசியல் நுழைத்த கவிதை!!!

    வாழ்த்துகள்!

    துளசிதர்ன்

    கீதா

    ReplyDelete
  4. வீடியோ இயங்கவில்லை நேசன்

    கீதா

    ReplyDelete
  5. ஆஹா கவிதை வழமைபோல அரசியலில் பூந்து விளையாடுது...

    வீடியோ வேர்க் பண்ணவில்லை எனக்கு நேசன், எனக்கு மட்டும்தானோ?/நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும். வீடியோவில் தொழில்நுட்பக்கோளாறு இருக்கின்றது! நீக்கிவிடுகின்றேன் பாடலை!

    ReplyDelete
  6. வ, வாவில் வழக்கம் போல அழகான அரசியல் நுழைத்த கவிதை!!!

    வாழ்த்துகள்!

    துளசிதர்ன்

    கீதா
    /நன்றி கீதா அக்கா வருகைக்கும், கருத்துரைக்கும்! வீடியோவில் தொழில்நுட்பக்கோளாறு!

    ReplyDelete