31 August 2011

உன்னை நினைந்து நினைந்து!

ஒவ்வொரு முறை சென்னை போகும் போதும் எப்படியாவது திருப்பதியானை தரிசிக்கனும் பெருமாளே பிறவிப்பயனில் உன்னைப் பார்த்தே என் கண்கள் பரவசப் பேருணர்வைப் பெறனும் என்று நீண்டநாள் கனவு .

ஏதாவது தடங்கள் வந்து பயணம் பாதியில் திரும்ப வேண்டிய நிலையில் முடியாமல் போன காரியம்.

 இந்தத் தடவை என் ஆசைக்கு பெருமாள் பக்தனின் குரலுக்கு கடைக்கண் பார்வை பார்த்து அருள் கொடுத்தார் .

திருவேங்கடாவா மாமலை வாழ்  திருப்பதியானை நானும் என் மனைவியுடன் சென்னையில் இருந்து தமிழ்
நாடு சுற்றுலா மையத்தின் பதிவு செய்யப்பட்ட பேரூந்தில் அதிகாலையில் பலருடன் சென்றோம்.

நண்பர் முன்பதிவை செய்துவிட்டு பற்றிச்சீட்டை கொடுக்கும் போது அதிகாலை 5.30 வாகனம்  நிறுத்தும் திருவல்லிக்கேணி  சாலையில்  காத்திருக்கவும் என்றுவிட்டுச் சென்றார்.

நாங்களும் புலம்பெயர விமான நிலையத்தில் நின்றதுபோல் அதிகாலை 5.15 போய்விட்டோம் பெருமாளை சேவிக்கனும் என்ற ஆவலில்.!

 கீழைத்தேசத்தில் நேரக்கடைப்பிடிப்பது என்பது அரசதலைவர் முதல் ஆடுத்த வீட்டு அன்னலட்சுமி வரை ஓட்டு வாக்கின மந்திரிபோல் நினைத்த நேரம் வருவார்கள்.

ஒரு ஊழியர் அதிகாலை 6மணிக்கு காரியாலயக்கதவு திறந்தார். நானும் போகும் பயணத்தை கூறியதும் இருங்கள்
வாகனம் வரும் உங்கள் முன்பதிவு சீட்டைக் காட்டுங்கள் என்றதும் நானும் கொடுத்தேன்.

 அவர் வாங்கி அதற்கு சுற்றுலாமையத்தின் சின்னம் பொறித்த பற்றிச்சீட்டையும் என் தகவல்களையும் பதிவு செய்துவிட்டு இன்னும் சில நிமிடங்களில் வாகனம் வரும் நீங்கள் காத்திருங்கள் என்றார்

.நானும் எத்தனை காத்திருப்பைப் பார்த்தவன் .என் மனைவி பாவம் இரவும் பயணப்பைகளை  சிரமங்களுடன் முன் ஆயத்தம் செய்தால் துணைவியார் கஸ்தூரிபாய் போல் பின் தூங்கி முன் எழும்புபவள் .

நான் இன்னும் அதிகம் நேரத்திற்கு எழுப்பிவிட்டேன்.நீங்கள் ஒரு அவசரக்குடுகை இன்னும் கொஞ்சம் நித்திரைகொண்டு இருக்கலாம் என்று  காதோரம்  கடிந்துகொண்டால் .

பெருமாளே இது என்ன திருப்பதியான் மயக்கம் இப்படி யா?

 கொஞ்சம் பொறு பெருமாள் பெருமாட்டி உன்னுடன் தரிசனம் பெறனும் என்றுதான் சித்தம் அதனால்தான் இப்படி நடக்குது செல்லம் என்று சென்னை வெயிலுக்கு குற்றால அருவியை உச்சந்தலையில் ஊற்ற எங்களுக்கான வாகனம் தயாராகியது.


எங்களுடன் சிலர் ஏறிக்கொள்ள எங்கள் வாகனம் மிகவும்  உடரட்டமெனிக்கேயைவிட மெதுவாக சென்னையில் இருந்து திருப்பதியை நோக்கிய பயணம் 5 மணித்தியாலம் பிடித்தது .

வழமையாக 3 .30  மணித்தியாலம் போகும் பயணம்.எங்களின் வாகன சாரதியின் அக்கறையான வாகனம் செலுத்தல் !

 திருப்பதி
மலையடிவாரத்தில் நாங்கள் சென்ற வாகனம் நிறத்தப்பட்டது .

மலையடிவாரத்தில் இருந்து ஆந்திராப் பிரதேசத்தின் போக்குவரத்து கழகத்தின் பஸ் பக்தர்களை மேலே கொண்டு செல்கின்றது. அவர்களின் பஸ் மட்டுமே சேவைபுரிய முடியுமாம் !

தனியார் யாரவது போவது என்றாள் கார் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது.பார ஊர்திகள் அனுமதியில்லை.

மலையடிவாரத்தில் இதனை ஆயிரம் பக்தர்கள் வருகின்றார்கள் இவ்வளவு கோடியில் பணம் புரலும் இடத்தில் போதியளவு சுகாதார வசதியில்லை கழிப்பிடவசதி செய்ய ஏனோ யாருக்கும் மனசு இல்லை!

 துர்நாற்றம் கூவத்தை விட குமட்டுகின்றது.

 மேலே போய் மீண்டும் கீழே வரக்கட்டணம் 34 இந்தியன் ரூபாய்.
மலையடிவாரத்திற்கும் கோயிலுக்கும் இடையில் வாகனம் ஓட்டுவதற்கு உண்மையில் தனித்துவம் தேவை .

ஒவ்வொரு வளைவிலும் அடுத்தவர் மீது செல்லமான சாய்வுடன் கூடிய இடி கொடுக்க வேண்டும். இது எனக்கு முன்ன மலைநாட்டுப் பயணத்தினை ஞாபகம்  ஓடியதும் மீண்டும் தாயகத்தின் சோதனைச்சாவடியை ஞாபகப்படுத்தும் திருப்பதி காவல்துறையினர் சகல உடமையையும் கதிர் இயக்கச் சேதனைக்கு உட்படுத்தியும் ஆண்கள் ஒரு புறம் பெண்கள் ஒரு புறம் உடல் சோதனைக்கு உட்படுத்திய பின் மீண்டும் வாகனம் சுமந்து செல்கின்றது.


 இயற்கை எழில் மனதில் பெருமாளை நினைத்து ஆண்டாள் பாடியபாசுரங்களையும் பெரியாழ்வார் முதல் குலசேகர ஆழ்வார்கள் பாடல்கள் பக்தியின் பெருமையை மீட்ட விரைவான ஒரு மணித்தியாலத்தில் திருப்பதியானை தர்சிக்கும் நுழைவாயிலுக்கு எங்களை அழைத்துச் சென்றார் எங்கள் வழிகாட்டி.

 இவர் உண்மையில் பழகுவதற்கு இனிமையானவர் நாமாக்கல் மாவட்டம் இவர் பூர்வீகம் தொடர்ந்து பக்தர்களை அழைத்துவருவதால் பலரை தெரிந்து வைத்திருக்கின்றார் .

மனைவி தடுத்தும் நாந்தான் வீம்புக்கு புகைப்படக்கருவியையும் எனது கைபேசியையும் கொண்டு வந்திருந்தேன் காட்சியை பதிவு செய்யலாம் என்று சில இடங்களில் புனிதம் பேணப்படுவதை நானும் வழிமொழிகின்றேன் .

போய்ப்பார்ப்பதற்கும் நாம் புகைப்படங்களாக  பிரதி செய்து மற்றவர்களுக்கு காட்டுவதற்கும் இடையில் எப்போதும் உணர்வுகள் வேறுபடுவதைக் காணமுடியும்.

முதலில் எங்களை அழைத்துவந்தவர் நமக்கு ஒதுக்கப்பட்ட தமிழ்நாடு சுற்றுலாமையத்தின் மடத்திற்கு அழைத்துச் சென்று உடைமாற்றவும் காலைக்கடனை முடிக்கவும் சில நிமிடங்கள் கொடுத்தார் பின் எல்லாரிடமும் கடவுச்சீட்டு , புகைப்படக்கருவி,  எல்லாவற்றையும் தரும்படி  கூறினார்
.  கோயிலுக்குள் புகைப்படக்கருவி,  தொலைபேசி,பாடல்கேட்கும் கருவிகள் அனுமதியில்லை .

எங்கள் பொருட்களை இவர் பாதுகாத்தார்.

முடிகாணிக்கை செய்வதற்கு சங்கக்கடையில் சவற்காரம் வாங்க நின்றதைவிட அதிகமான கும்பல் .

அதுவும் வெளிநாட்டவர் என்றாள் கட்டணம் இவர்கள் சொல்வதை வைக்க வேண்டும்.

 தெரிந்தவர்கள் எனில் முன்னூரிமை தலையில் தண்ணீர் தெளித்த பின் ஒரே இழுவை திருப்பதியானுக்கு கோவிந்தா !

அருகில் குளியல் அறை உண்டு விரைவாக நீராடிய பின் தருசனம் காண பலர் முண்டியடிக்கின்றனர் .

கட்டணம் இல்லாத நுழைவாயில் 50 ரூபா கட்டணம் சிறப்புத் தருசனம்,300ருபாய் கட்டணம்   சிறப்புத்தருசனம் என மூன்று நுழைவாயில் பெருமாளை சேவிக்க எங்களுக்கு விரைவான தருசனம் காணபதற்கு 300 ரூபாய் கட்டணத்தில் உள்நுழைந்தால் பக்தர்கள் கூட்டம் பொங்குதமிழுக்கு யாழ்லில் கூடியதைவிட அதிகம் .

இத்தனை கோடி பக்தர்கள் படை எடுப்பதன் மகிமை  இன்னும் ஆன்மீகம் தழைத்தோங்கு து .என்பதா எள்ளுப் போட்டால் எண்ணையாகும் வண்ணம் ஊர்கின்ற பக்தர்கள்.

 5 மணித்தியாலம் காத்திருந்தோம் !

நமோ வெங்கடேசா நமோ சினிவாசா !உன்னை நினைந்து நினைந்து மனம். உருகி உருகி தினம்  நெய்யாய் உருகுதய்யா !
உன் அருகில் வரத்துடித்து கண்கள் கண்ணீர் சிந்துதய்யா !
பட்டுப் பீதாம்பரம்!
  பெருமாளின் தங்க கலசம் கண்டு! கோவிந்தன் தருசனம் கண்டோம்!

வாழ்வில் இப்பேறு மீண்டும் வரனும் என்ற ஆசையுடன் திருப்பதியானின் துளசித் தீர்த்தம் வேண்டிக் குடித்தோம் பெருமாள் பிரசாதம் கற்கண்டும் லட்டும் வாங்கிக் கொண்டு வெளியில் வந்தால்.

 புகைப்படப்பிடிப்பாளர்கள் ஆலயத் தோற்றத்தின் முகப்பு  அழகு தெரியும் வண்ணம் விரும்பிய படி புகைப்படம் எடுத்து சில நிமிடங்களில் பிரதியை கையில் தருகின்றார்கள்.

 ஆலயத்தின் சுற்றுவட்டாரத்தில் கடலைக்கடை முதல் ஆடை அலங்காரப் பொருட்கள் விற்பனைக்கு இருக்கின்றது.

 ஞாபகப் பொருட்கள் ஏதாவது   விரும்பி வேண்டலாம்.

 மீண்டும் ஆந்திரா போக்குவரத்து வாகனத்தில் மறு பாதையால் கீழே வந்தோம் அங்கிருந்து வெளியில் வந்தால் எமக்கான சிற்றுண்டி தயாராக இருந்தது.

 அதை முடித்துக் கொண்டு வரும் வழியில் தாயார் அலமேலு (பத்மவாதி)அம்மன் ஆலயத்தையும் தருசித்துவிட்டு அங்கு குங்குமம் மற்றும் லட்டும் வாங்கிய பின் நமது பயணம் இனிதே சென்னையை நோக்கி திரும்பியது. 



27 comments:

  1. நல்ல பயணப்பதிவு..

    ReplyDelete
  2. நான் சென்றபொழுது, பஸ் சரியான நேரத்திற்கு எடுத்தார்களே..தி.நகர் பெருமாள் கோயிலில் தானே திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஃபீஸ் உள்ளது. நீங்கள் அதன்மூலம் செல்லவில்லையா?

    ReplyDelete
  3. பயணம் தொடரட்டும் நேசன்...

    ReplyDelete
  4. நன்றி செங்கோவி ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்! நாங்கள் சென்றது தமிழ்நாடு சுற்றுலாமையத்தின் பயணத்தின் மூலம் அவர்கள் பல இடங்களுக்கு இப்போது மிகக் குறைந்த கட்டண  வசதியில் அழைத்துச் செல்கின்றார்கள் N.S.k சாலை திருவல்லிக்கேணியில் தலமையகம் இயங்குகின்றது.

    ReplyDelete
  5. நன்றி ரெவெரி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  6. எனக்கும் ஆசைதானுங்க இந்தியாவில் உள்ள பல கோவில்களுக்கு போய் வரவேணும் என்று, முக்கியமாய் திருப்பதிக்கு ,,,,இப்ப உங்க பதிவு மூலம் ஒருக்கா போய் வந்திருக்கன்

    ReplyDelete
  7. நல்ல சுற்றுலா பதிவு,
    உங்கள் பயணத்துடன் நானும் வந்த உணர்வு உங்கள் பதிவை படிக்கும் போது

    ReplyDelete
  8. திருப்பதி சென்று வந்தோரைப் பார்த்தாலே
    புண்ணியம் என்பார்கள்
    நிச்சயம் சென்று வந்தவர்களின் பதிவைப்
    படித்தாலும் நிச்சயம் இருக்கும்தானே
    மிக அழகாக பயணம் குறித்து
    விளக்கிப் போகிறீர்கள்
    பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  9. நல்ல பயணக்கட்டுரை சுவாரஸ்யமாக இருக்கு நண்பா.

    ReplyDelete
  10. திரிப்பதியானின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

    ReplyDelete
  11. நன்றி துஷ்யந்தன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்!

    ReplyDelete
  12. நன்றி ரமனி ஐயா உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்!புண்ணியம் எல்லாதுக்கும் கிடைக்கனும் திருப்பதியானை தருசிப்பதற்கும் பாக்கியம் என்பதே என் ஆவல்!

    ReplyDelete
  13. நன்றி k.s.s ராஜ் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்!

    ReplyDelete
  14. நன்றி கவி அழகன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்!

    ReplyDelete
  15. அது என்ன சிறப்பு தரிசனம்.......சாமிய கூட நேரம் பார்க்கலாமா....

    நல்லா இருக்குது பாஸ்....

    ReplyDelete
  16. அனுபவப் பதிவினூடே, உங்கள் ஞாபகச் சிதறலை அருமையாகத் தொகுத்திருக்கிறீங்க.

    ReplyDelete
  17. தமிழ் மணம் ஓட்டு போட்டிருக்கேன்.

    ReplyDelete
  18. @ஆகுலன் கடவுளை தர்சனம் செய்வதற்கு தமிழ்நாட்டுக் கோயில் களில் சிலதில்  பக்தர்கள் அதிகம் என்பதால் அவர்களின் ஆவலையும் நேரத்தையும் மிகுதிப்படுத்த இப்படியான சிறப்புத்தரிசனம் வழிமுறை நடைமுறையில் இருக்கின்றது இதன் மூலம் நிதியுல் திரட்டப்படுகின்றது.  உண்மையில் கடவுளிடம் எல்லோரும் சரிசமனே ஆனால் எல்லோராலும் 15,12, மணித்தியாலங்கள் வரிசையில் நின்று போவதற்கு இக்காலம் என்ன சங்ககாலமா? மக்கள்  மனநிலை காசைக் கொடுத்தாவது ஒரு முறை கர்பக்கிரகத்தில் இருக்கும் தெய்வத்தை தரிசிக்கனும் என்ற ஆவல் இதை குறைசொல்ல முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து. அதற்காக எல்லாக் கோயில்களும் எல்லா நேரத்திலும் திறந்து இருக்க முடியாதே கடவுளுக்கும் ஓய்வு தேவைதானே! நன்றி உங்கள் வருகைக்கு!

    ReplyDelete
  19. நன்றி நிரூபன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  20. வனக்கம் நண்பரே!சுற்றுலாப்பதிவு அருமை.

    ReplyDelete
  21. நன்றி சிறிதர் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  22. அருமையான பயணப் பதிவு.

    ReplyDelete
  23. பல சிரமங்களுடன் தாங்கள் கடவுளை தரிசித்ததை அழகாக சொல்லி இருக்கீங்க மாப்ள நன்றி!

    ReplyDelete
  24. நன்றி ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  25. நன்றி விக்கியண்ணா  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  26. நீங்க திருபதி போய் மொட்ட போட்டிருக்கிறீங்க. ஆனால் காட்டான் தன்னைத் தனியே விட்டு விட்டுத் தனிமரம் சென்று விட்டதே என்று ரொம்ப பீல் பண்றார் பாஸ்.

    ReplyDelete
  27. நண்பா நிரூ காட்டானையும் திருப்பதிக்கு கூட்டுக்கொண்டு போறது என்றாள் நான் ராஜபக்ஸவிடம் போய்தான் சுனாமி நிவாரனப் பணத்தில் எனக்கும் கொஞ்சம் கடன் தாருங்கள் என்று கேட்கனும்! டிக்கட் வாங்குவதற்கு தனிமரமே உலக வங்கியின் தயவில் போனது சகோ! ஹீ ஹீ! அவருக்கு ஒரு சோமபாணம் வாங்கிக் கொடுத்தால் கவலை தீரூம் அதற்கு திக்கம் போக இருக்கின்றேன் ஹீ ஹீ!

    ReplyDelete