02 September 2011

ஆசைப்பட்டதும்! அவதிப்பட்டதும்!!

வெயில்கால வரவில் பல பழங்கள் இயற்கையாகக் கிடைக்கும் கிராமத்து வாழ்வில் !

நம் பள்ளிக்கூட பருவத்தில் ஒவ்வொரு பழம் பருவகாலமாக இருக்கும். அப்படியான ஒன்றுதான் நாவற்பழம் .இது முருகன் ஒவ்வையாருக்கு கொடுத்த தாக கூறப்படுகின்றது.

பள்ளிக்கூடம் போகும் போது நம் காற்சட்டைப் பையில் மதிய இடைவேளையில் எங்களின் வயிற்றுப்பசியைத் தீர்ப்பதில் நாவல் பழம் தனித்துவமானது.

 நாவுக்கு இனிப்புச் சுவையைத் தருவதுடன் போட்டிருக்கும் வெள்ளை உடையை நாவற்கலர் வண்ணம் பூசி வீட்டில் நல்ல தும்புத்தடி அபிசேகம் வாங்குவதற்கும் காரணியாக அமைந்துவிடும்.

என்றாலும் ஆசை விக்கிராமத்தியன் கதை போல !தினமும் பாடசாலை முடிந்து மரத்தில் ஏறிப்பழம் புடுங்குவதில் பாதிப் பொழுது போய்விடும்.


 அப்படியும் ஆங்காங்கே மரம் கீறிய தழும்புகளில் இரத்தம் ஒடிக்கொண்டிருந்தாலும் நாக்கில் நாவல்பழம் சுவை கொடுத்துக்கொண்டிருக்கும்!

  வகுப்புத் தோழிகள் யாராவது வம்பு இழுத்தால் அவர்களின் வெள்ளைச் சட்டையில் வீரச்செயலில் ஒரு உடை  வெள்ளாவி வைத்தாலும் வீட்டு அலுமாரியில் அடைகாக்கும்.  .

அது ஒரு காலம் என்ன செய்வது ஈழத்தவன் வாழ்வில் இழந்தது உரிமை மட்டுமா?
 உணர்வுகள் ,ஆசைகள் ,கனவுகள் ,அடுக்கலாம் பல !புரியுமா!!
 எங்கள் கனவில் கொள்ளிவைத்தவர்களுக்கு!

 ம்  அவையாவும் கனவுகளாக இருந்தாலும்  எனக்கு பலகாலம் நாவல்பழம் சாப்பிடனும் என்று ஆசை .

என்ன செய்வது இம்முறை சென்னையில் நாவல்பழம் கிடைத்தது.


 ரங்கநாதன் தெருவிற்குப் போனபோது  அங்கே பாதை ஓரம் ஒரு பாட்டி விற்பனை செய்து கொண்டிருந்தார் .


நானும் ஏதோ முன்நாள் காதலியை கண்ட சந்தோஸம் போல் அளவில்லாமல் அதிகமான பழம் வாங்கி ரோட்டோரத்திலயே சாப்பிட வெளிக்கிட்டேன்.


 என்னவள் அப்பவே சொன்னால் .
மற்றவர்கள் கானாததைக் கண்டமாதிரி சாப்பிடுகிறார் என்று பறயப் போகினம் .இப்படி சாப்பிடனுமோ அதுவும் அந்த அம்மாவின் சிரிப்பு என்னை சங்கடப்படவைக்குது .உங்களுக்கு கொஞ்சம் கூட மரியாதை தெரியல வெளிநாட்டில் இருந்து வந்ததும் இப்படியா !ஆசையில் ஒரு பை நிறைய நாவல்பழம் வாங்கனும் .அதுவும் இந்த பாதை ஓரத்தில் கடவுளே எப்பதான் திருந்தப் போறியலோ ?

இப்ப என்ன பிரச்சனை உனக்கு !சாப்பிடுகிறது நான் .உனக்கு விருப்பம் இல்லை என்றாள் நான் சாப்பிடக்கூடாதோ? இதைச் சாப்பிட்டு 10  வருசம் ஓடிப்போய்விட்டது.

மனுசன் இப்பதான் வந்திருக்கின்றன் .அதுக்குள் நொய் நொய் என்று கூறுகெட்டவளே!

 ஏன் சொல்ல மாட்டியல் முந்தி எல்லாம் மச்சாள் மச்சாள் என்று பாசம் பொழிஞ்சிட்டு இப்ப கூறுகெட்டவளோ!

இருங்க ஊரிள் போய் அம்மாட்ட சொல்லுரன்.

 மாப்பிள்ளையின் அர்ச்சனையை அப்பவே பாட்டி சொன்னா. இவன் திருந்த மாட்டான் கட்டிமாராடிக்காத  இன்ஜினியர் மாப்பிள்ளை இருக்கிறான் என்று!
 நான் தான் மச்சான் என்று இறங்கி வந்தன். மொட்டையருக்கு வாய் கூடிப் போச்சு.

 இப்ப என்னாச்சு செல்லம் ஏன் கோபிக்கின்றாய் நாவல்பழம் இப்ப சீசன் இந்த முறை கிடைச்சிருக்கு  அது சாப்பிடுகிறது பிடிக்களையா?

உன்னுடைய பாட்டியை ஞாபகப்படுத்தினால் எனக்கு கெட்ட கோபம் வரும் அந்தக்கிழவியால தான் இவ்வளவு காலம் காத்திருந்து கலியாணம் செய்தது. இல்லை என்றாள் நானும் தனுஸ் மாதிரி சின்ன வயசிலயே ஒரு பிரென்ஸ்சுக் காரியை கட்டியிருப்பன் தெரியுமோ?

 உதுக்குத்தான் தனியா விடாத மாப்பிள்ளையை என்று அப்பவும் பாட்டி சொன்னா!

ஏன் தாத்தா ஓடிப்போன மாதிரி நானும் ஓடுவிடுவன் என்றோ!

 என்னுடைய  மச்சாளை விட்டுட்டு நான் பிரென்சுக்காரியுடன் டிஸ்கொத்தேக் போவேனா!
  அப்படிப்போனாலும் வைன் குடிப்பேனா !

 ஓ இது வேற நடக்குதோ! ஊரில் களவா கள்ளுக்குடிச்சனிங்க.
 இப்ப சுதந்திரமா வைன் குடிக்கிறீயலோ?
சும்மா விளையாட்டு என் செல்லம் .

ஆட்டுக்கார அலமேலு படத்தில் ஒரு பாட்டு வரும் .

பருத்தி எடுக்கையிலே என்னை பலநாளும் பார்த்த மச்சான்... அப்படிதான் நானும் ஓடித்தான் வந்திருப்பன் நான் உனக்கு மட்டும் சொந்தம் என்று!

 ஐயோ வேண்டாம் சாமி இந்தப் பாட்டை எத்தனை தடவை கேட்பது.

உந்தப்பழத்தையே சாப்பிடுங்கோ!


ஏங்க நாவல்பழம் புடுங்கப்போய்  கோமதி வீட்டு ஓட்டை உடைத்து அடிவேண்டியது ஞாபகம் இருக்கா?

  இன்னும் அதை நீ மறக்கலயா? எப்படி மறப்பது கொஞ்சநாளா அவள் மயக்கத்தில்  நீங்கள் நாவல்பழம் புடுங்கும் சாட்டில்  அவங்க வீட்டில் ஜொல்லு விட்டதை பாட்டிதானே  மோப்பம் பிடித்து மாமாட்டை போட்டுக்குடுத்தது!

அந்த கருக்குமட்டை அடிவேண்டி மாமி மஞ்சல் பூசி பத்துக்கட்டினதையும் மறக்க முடியுமா?

இப்ப எப்படி இருப்பாள் கோமதி!  எத்தனை வருசம் பார்த்து இப்ப ஊர்க்கு வந்து  குடியேறிட்டாள் பிள்ளையள் பெரியவர்கள்!
 மனுசன் இன்னும் முகாமில்.
  வரும் போது உங்களை விசாரித்ததாக சொல்லச் சொன்னவள்.

 இந்தக் கதையுடன் நானும் நாவல்பழத்தை அதிகமாக சாப்பிட்டன்

. அன்று இரவு படுத்தால் வயிற்றில் ஏதோ உள்நாட்டு யுத்தம் போல் இருந்திச்சு.
 இது என்னடா இப்படி இருக்கே எங்க என்னாச்சு அப்பவே சொன்னன் சுத்தம் இல்லாததை சாப்பிடாதீங்கோ? என்று இப்ப அவஸ்தை படுகிறீங்க கொஞ்சம் கோப்பி ஊத்தவோ!

 வேனாம் என்று மனைவியை நித்திரை கொள்ளச் சொன்னேன். நள்ளிரவில் வயிறு ஒரு மாதிரி இருக்கு என்று கழிப்பறையில் போய் இருந்தால்
கனகாம்பிகை குளத்தை திறந்து விட்டது போல் வயிற்றுப் போக்கு!

இரண்டுநாள் எங்கும் போகவில்லை வீட்டிலேயா ஓய்வாகப் போனது.
 என் விடுமுறை நாட்கள். மனைவி சொல்லியும் கேளாமல் ஆசையில் நாவல்பழம் சாப்பிட்டு அவஸ்தைப்பட்டது தான் மிச்சம்!


இப்பதிவின் நோக்கம்  சுயமாக வியாபாரம் செய்பவர்களை சீண்டுவது இல்லை. பல்லாயிரம் பேர் உண்ணும் பழங்களை கொஞ்சம் பாதையோரங்களில் விற்பனை செய்பவர்கள் சுகாதாரமான முறையில் பொதி செய்து விற்பனை செய்யலாமே என்ற ஆதங்கமே!

32 comments:

  1. //நாவுக்கு இனிப்புச் சுவையைத் தருவதுடன் போட்டிருக்கும் வெள்ளை உடையை நாவற்கலர் வண்ணம் பூசி வீட்டில் நல்ல தும்புத்தடி அபிசேகம் வாங்குவதற்கும் காரணியாக அமைந்துவிடும்./
    ஹிஹிஹி செம காமெடி!!

    ReplyDelete
  2. //நாவுக்கு இனிப்புச் சுவையைத் தருவதுடன் போட்டிருக்கும் வெள்ளை உடையை நாவற்கலர் வண்ணம் பூசி வீட்டில் நல்ல தும்புத்தடி அபிசேகம் வாங்குவதற்கும் காரணியாக அமைந்துவிடும்./
    ஹிஹிஹி செம காமெடி!!

    ReplyDelete
  3. //வகுப்புத் தோழிகள் யாராவது வம்பு இழுத்தால் அவர்களின் வெள்ளைச் சட்டையில் வீரச்செயலில் ஒரு உடை வெள்ளாவி வைத்தாலும் வீட்டு அலுமாரியில் அடைகாக்கும்.//
    இப்பிடி தமிழை உங்களிடம் வைத்துக்கொண்டா முன்னர் பிழை விட்டீர்கள்???உங்களை......

    ReplyDelete
  4. ஆமா நீங்க இன்னைக்கும் இட்லி இணைக்கலையா?

    ReplyDelete
  5. தமிழ்மணம், கூகிள் ப்ளஸ் ஓட்டுப் போட்டிருக்கேன்...

    ReplyDelete
  6. நாவல் பழதோடு, நாவின் சுவை கூட்டி நாட்கள் நகர்த்திய நினைவுகளையும், மீண்டும் சென்னையில் நாவல் பழத்தினை உண்டு நினைவுகளை மீட்டிய உங்களின் அனுபவப் பகிர்வினையும் அழகாகப் பகிர்ந்திருக்கிறீங்க.

    ReplyDelete
  7. அது என்ன...கனகாம்பிகை குளத்தை திறந்து விட்டது...?

    ரொம்ப பின் விளைவுகள் சந்திச்சீங்க போல...:)

    ReplyDelete
  8. வாங்க மைந்தன் சின்னவயதில் அடிவாங்குவது கமடியா!

    ReplyDelete
  9. உங்களைப் போன்றோரின் உதவிதான் பிழையிலாமல் தொடரமுடியுது சிவா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

    ReplyDelete
  10. இப்போது தான் இண்ட்லியில் இணைத்துள்ளேன் நிரூ நண்பர் ஒருவரின் பதிவை இணைத்த தால் என்பதிவை இணைக்க கத்திருக்கும் அளவுக்கு நித்திரை என்னை விடவில்லை! நித்தா வந்திடுச்சு!

    ReplyDelete
  11. நன்றி நிரூபன்!

    ReplyDelete
  12. நன்றி நிரூபன்! ஒட்டளித்து முன்னேற்றி விடுவதற்கு!

    ReplyDelete
  13. கனகாம்பிகைக் குளத்தில் குளிக்கும் போது எதிர் பாராமல் வான்கதவு திறந்து விட்டதால் வாய்க்காலில் குளித்துக் கொடிண்டிருந்த போது உடுப்புக்கள் எல்லாம் அடுடித்துக் கொண்டு போய்விட்டது பின் அதை பிடிப்பதற்கு ஓடியதைப்போல் கழிவறைக்கு ஓடியதைச் சொன்னேன் ரெவெரி . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  14. நாங்களும் தான் பாஸ் அங்க வாங்கிச் சாப்பிட்டிருக்கோம்..ஆனா எங்களுக்கெல்லாம் எந்தக் குளமும் திறக்கலியே!

    ReplyDelete
  15. பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  16. ஆகா ஊரில் நாவல் பழம் புடிங்கித்திண்ண என் நினைவுகளையும் உங்கள் பதிவின் ஊடே மீட்டிப்பார்த்து விட்டேன் நன்றி நண்பரே..

    ReplyDelete
  17. ஆஹா... நாவற்பலமா ?????? உங்க மேலே பொறாமையா இருக்கு பாஸ்.நானும் நாவற்பழம் வேணும் என்று ஆசைப்பட்டு, இங்கே லாச்சப்பலில் வேண்டி சாப்புட்டேன் அத்தோடு நாவற்பழ ஆசையே போய்விட்டது.

    ReplyDelete
  18. பழத்தில் ஆரம்பித்து... மெது மெதுவாக போய்
    உங்கள் இலக்கிய சண்டையில் போய்
    கடைசியில் அட்வைசில் முடித்தீர்கள் பாருங்கள் கலக்குறீங்க பாஸ்

    ReplyDelete
  19. என்னையும் பழைய நினைவுகளை அசை போட வைத்துவிட்டது உங்க பதிவு.

    ReplyDelete
  20. சில பழங்கள் காலமாற்றத்தில் சிலருக்கு ஒத்து வாராது என்று சென்னையில் வைத்தியர் எனக்குச் சொன்னார் செங்கோவி ஐயா! நீங்கள்ன் பழகிவிட்டீர்கள் அதுதான் குளம் திறக்க வில்லை ஹீ  ஹீ!

    ReplyDelete
  21. நன்றி கருன் வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  22. நன்றி ராஜ்  வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  23. எனக்கும் சென்னையுடன் இந்த ஆசை போய்விட்டது துஸி!

    ReplyDelete
  24. அறிவுரை என்று சொல்ல முடியாது ஓரு ஆலோசனை அல்லது வேண்டு கோள் எனலாம் துசி!

    ReplyDelete
  25. நன்றி துசி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நாம் தொலைத்த ஞாபகங்கள் மீட்டிப்பார்ப்பது ஒரு சுகம்!

    ReplyDelete
  26. ருசி தரும் நாவல் பழம் ஹி ஹி....

    ReplyDelete
  27. தமிழ்மணம் ஏழாவது ஓட்டு நாந்தேன்....

    ReplyDelete
  28. நன்றி மனோ அண்ணாச்சி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  29. பாஸ் உந்த கதையை சொல்லி வாயை ஊற வைத்துவிடீர்கள்....எனக்கு நாவல் பழம் கயு பழம் எல்லாம் சாப்பிட ஆசை...

    ReplyDelete
  30. நன்றி ஆகுலன் வருகைக்கும் கருத்துக்கும் வேனும் என்றாள் நாவல்பழம் பார்சலில் அனுப்பலாம்! ஹீ ஹீ!

    ReplyDelete
  31. ருசிக்குது பதிவு

    ReplyDelete
  32. நன்றி கவி அழகன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete