04 September 2011

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்!!

இந்த கோடைகால விடுமுறையை கணனியிலும் பல உறவுகளுடன் உள்நாட்டிலும் சுற்றுலாவுக்கு  வெளிநாட்டுப் பயணங்களும் போய் வந்து தம் இனிமையான விடுமுறை அனுபவங்களை தம் நண்பர்கள் நண்பிகளுக்கு விபரிக்கும்இனிய தொடக்க நாள் நாளை!

புதிய வகுப்பில் ,புதிய முகம்கள் ,சில வந்து சேருவோரும்,  ஏற்கனவே படிப்பைத் தொடர்ந்து விட்டு சிலகாலம் நிறுத்தி தொழில் புரிந்த உயர்கல்வி மாணவர்கள் மாணவிகள் மீண்டும் படிப்பில் உள்நுழைவதும் இக்காலத்தில்தான் .

பிரென்ஸ் கல்வியில் பல நல்ல நடை முறைகள் உண்டு.

பிரான்சில் கல்வியானது ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி  என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கல்வி நான்கு ஆண்டுகள் பாலர் கல்வியை உள்ளடக்கியதுடன் மேலும் cp- CE-1. ,CE2 CM1 ,CM2 என ஐந்து வருடங்களையும் கொண்டிருக்கின்றது .

பாலர் கல்வி கட்டாயப்படுத்தப்பட்டதல்ல .

CP தொடக்கம் CM 2 வரையிலான 5 வருடங்கள் ஆரம்பக்கல்வியில் கட்டாயப்படுத்தப்பட்ட படிநிலைகள் ஆகும்.

இதன் பின்னர் இடைநிலைக்கல்வி கல்லூரியில்((college) 6e, 5e, 4e, 3e வரை நான்கு வருடங்கள் .தொடரப்படவேண்டும்  .

இங்கு 6e  என்பது தாயகத்தின் 6 வகுப்பை ஒத்ததாகும்.

 பிரான்சிலும் தாயகத்திலும்(இலங்கை) வித்தியாலயம் அல்லது கல்லூரியில்  ஆரம்பிக்கின்ற முதலாவது ஆண்டாகும்.

இலங்கையில் 12 ம் ஆண்டின் பின் கா. பொ. த.(உயர்தரம் ) எடுப்பது போல் பிரான்ஸ்சிலும்  பாலர் வகுப்பு தவிர்த்த 12 ஆண்டின் பின்னர் பல்கலைக்கழகங்கள்  உட்பட்ட உயர்நிலைக்கல்விக்குச்  செல்கின்ற முறை இலங்கையை ஒத்ததாக இருப்பதை அவதானிக்க முடியும்!

ஆனால் பெயர் மாறுபடுவதை கானமுடியும்   கல்லூரியில் 6ம் வகுப்பில் ஆரம்பகால 4 வருடங்கள் படித்த பின்னர் BREVET என்ற பரீட்சை (இலங்கையில் 9 வகுப்பை ஒத்தது) கல்வித்திணைக்களங்களில் பிரென்ஸ் மொழி,கணிதம்,சரித்திரம், புவியியல், என நான்கு பாடங்கள் பொதுப்பரீட்சை மூலம் நடத்தப்படுகின்றது.

இப்பரீட்சைக்கு தோற்றுவதற்கு B2I (informatique) பாடம் தற்போது அவசியமாக்கப்பட்டுள்ளது.  6e.5e 4e 3e ஆண்டுகள் முடித்த பின்னர்  மாணவர்கள் இரண்டு பெரும் பிரிவுக்கு பிரிந்து செல்கின்றனர்.

 ஒரு பகுதியினர் தொழில்கல்விக்கும் மற்றையவர்கள் உயர்நிலைக்கல்விக்கும் தயார் நிலைப்படுத்து.(College)  Lycee இல் 3 வருடங்களுமாக Ecole maternell இல் 4 வருடங்கள் நீங்களாக 12 ஆண்டுகள் கல்வியைப் பெறுகின்றனர்.

 12 ஆண்டு இறுதியில் Baccalaureat  பரீட்சையில் சித்தியடைபவர்கள் .

பல்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டு  பட்டதாரிகளாக பொறியியலாளர்களாக, வைத்தியக்கலாநிதிகளாக, கணக்காய்வாளர்களாக,  நிர்வாகிகளாக தம் மேற்படிப்பை  தொடர்கின்றனர்.

பெரும்பகுதி மட்டுப்படுத்தப்படாமல் பிரான்ஸில் உயர்கல்வியை தொடர்வதற்கு பல்வேறுபட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன்.

பல்கலைக் கழகத்துடன் Grandes Ecoles  என்ற உயர் பள்ளிகளும் இரண்டு ஆண்டுகளில் போட்டிப் பரீட்சைக்கு உள்ளாகின்ற Classe Preparatoires  போன்ற வழிகளும் உள்ளன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ENA-(Ecole National Administratin) Polytechnique  போன்ற உயர் பெறுபேறுகளுடன் செல்கின்ற கல்வி நிறுவனங்களும் பிரான்ஸ்சில் சர்வதேச புகழ்வாய்ந்த கல்வி நிறுவனம்.

 இங்கு மட்டும்தான் ஆடை அணிதல் கட்டுப்பாடும் உள்ளது .பல்வேறு நாட்டவர்கள் கல்வி கற்கின்றனர் . அரசியல் தலையீடு இங்கு இல்லை(.பிரென்ஸ் தேசத்தில் பாடசாலைக்கு ஆடை அணிவதில் கட்டுப்பாடு இல்லை சுதந்திரமாக  விரும்பிய ஆடை அணியமுடியும்).


பிரென்சு மொழியில் வரும் குறியீடுகளை இணைக்க முடியவில்லை பதிவுலக ஆசான்களே மன்னியுங்கள் !

இந்த பதிவு எழுதுவதற்கு தூண்டிவிட்டவர் சகபதிவாளர் காட்டான்  அவருக்கு நன்றி!



 கீழ்வரும் பாடலில் ஒரு வரி வரும் நீ படித்த பள்ளி ..

இந்தப் பாடசாலை வாழ்க்கை பற்றி தனிப்பதிவு போடாலாம் ! நீ படித்து பள்ளிக்கூடத்திற்கு என்ன செய்யப் போகின்றாய் என்று நண்பர் ஒருவர் கேட்டார் ? 13 பாடசாலையில்  படித்த ஒரு பழைய மாணவன் எந்தப் பாடசாலையில் பழைய மாணவன் என்று சொல்ல முடியும் பதில் தாருங்கள்!

 உறவுகளே இந்தப்பதிவு பிடித்திருந்தால் பலருக்கு கல்வி பற்றிய தேடலுக்கு  வழிகாட்டனும் என்ற என் ஆவலுக்கு நீங்கள் ஓட்டுப் போட்டும் உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரைத்தும் ஆதரவு தாருங்கள்!

தனிமரத்தின் தாழ்மையான வேண்டுகோள்!!

35 comments:

  1. //இந்த பதிவு எழுதுவதற்கு தூண்டிவிட்டவர் சகபதிவாளர் காட்டான் அவருக்கு நன்றி!//

    ஓஹோ..அவர் பண்ண வேலை தானா?

    ReplyDelete
  2. உண்மையில் உபயோகமான பதிவு..நன்றி.

    ReplyDelete
  3. பிரான்ஸ் கல்வி முறை பற்றி சொல்லியுள்ளீர்கள். தெரிந்து கொண்டோம் நன்றி பாஸ்

    ReplyDelete
  4. அழகா விளங்க கூடிய மாதிரி ஒப்பிட்டிருக்கிங்க

    உந்த காட்டான் பள்ளிக்கு போகாட்டிலும்
    படிப்பில அக்கறை மனுஷனுக்கு

    ReplyDelete
  5. விளக்கத்திற்கு நன்றி.....நான் உதை பற்றி முன்பு கொஞ்சம் அறிந்து இருந்தேன் விரிவான விளக்கத்திற்கு நன்றி.....

    நான் படிக்கும் பாடசாலையிலும் ஆடை கட்டுபாடு கிடையாது.....

    ReplyDelete
  6. காட்டான் உருப்படியான வேலைதான் பண்ணி இருக்கார்..

    ReplyDelete
  7. பிரான்ஸ் நாட்டின் கல்வி முறை பற்றி அழகாக சொல்லியிருக்கிறீங்க..


    மீண்டும் பள்ளிக்குப் போகலாம் பாடலோடு ஐக்கியமாகி விட்டேன்.

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு பாஸ், பிரான்ஸ் நாட்டு கல்வி முறையை தெரியாதவங்க தெரிந்து கொன்று இருப்பார்கள்.... அசத்தல் பாஸ்

    ReplyDelete
  9. அப்புறம்... இப்படி ஒரு நல்ல பதிவு எழுத தூண்டிய காட்டான் மாமாவுக்கும் என் நன்றிகள் .

    ReplyDelete
  10. பாஸ் தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேன், மற்ற ரெண்டுலயும் எவ்வளோ ட்ரை பண்ணியும் ஓட்டு போடா முடியவில்லை பாஸ், அவ்வ்

    ReplyDelete
  11. நல்ல தகவல் நண்பரே .

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. படிப்பிற்கு உதவும் பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  13. சும்மா இரந்த தனிமரத்தை வம்பிலுத்து குழ போட்டது காட்டான் தானே செங்கோவி ஐயா!

    ReplyDelete
  14.  செங்கோவி ஐயா! 
    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  15. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்! நன்றி கந்தசாமி !

    ReplyDelete
  16.  நன்றி கவியழகன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,

    ReplyDelete
  17.  நன்றி ஆகுலன்  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,

    ReplyDelete
  18.  நன்றி சி.பி   உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,

    ReplyDelete
  19.  நன்றி நிரூபன்  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,பாடல் சேர்த்தால் கொஞ்சம் பழைய ஞாபகம் வரும்தானே!

    ReplyDelete
  20.  நன்றி துஷ்யந்தன்  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்,ஒட்டுப்பட்டையில் ஏதோ குழறுபடியாக்கும் என்னாலும் பலருக்கு சரியாக ஓட்டுப்ப்போட முடியவில்லை!

    ReplyDelete
  21. காட்டானைக் கானவில்லை துஷ்யந்தன் தனிமரத்தின் சில பதிவுகளுக்கு ஓடிவிட்டார் வராமல்!

    ReplyDelete
  22. நன்றி m.r உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  23. நன்றி சாகாம்பரி  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  24. ஏழாவது ஒட்டு எனது!!உங்க முதல் பதிவு தமிழ்மண முகப்பில் வர போகுதுதேன்று நினைக்கிறேன் பாஸ்?

    ReplyDelete
  25. வருகைக்கும் கருத்துக்துரைக்கும் தகவலுக்கும் நன்றி மைந்தன் சிவா!

    ReplyDelete
  26. ஆகா பிரான்ஸ் நாட்டின் கல்வி முறை பற்றி அருமையான விளக்கம் சகோதரா

    ReplyDelete
  27. உண்மையில் இந்த பதிவு பாராட்டுகளுக்கு உரியது காரணம் பிரான்சின் கல்விமுறைபற்றி விரிவான செய்திகள் தெரிந்து கொள்ளமுடிந்ததது

    ReplyDelete
  28. புதிய விஷயங்கள்.பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  29. நன்றி மாப்பிள...

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  30. பிரான்ஸ் கல்வி முறை பற்றி அழகாக சொல்லியிருக்கிறீங்க...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  31. நன்றி கே.எஸ்.எஸ் ராச் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  32. நன்றி மாலதி அக்கா  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  33. நன்றி காட்டான்  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  34. நன்றி சன்முகவேல் ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  35. நன்றி ரெவெரி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete