05 April 2012

உத்தரத்தில் உதிர்த்தவனே! சரணம் ஐய்யப்பா!!!!

எனக்கு எப்போதும் நண்பர்கள் அதிகம்.  அதிலும் கொழும்பில் தொழில் நிமித்தம் இருந்த காலப்பகுதியில் அதிகமான நண்பர்களுடன் தங்க வேண்டிய வாடகை அறை வாழ்க்கை தனிமனித வாழ்வில் பல சுகங்களையும் சோகங்களையும் தந்து என்னை ஒரு முழுமனிதன் ஆக்க பெரும் பங்கு வகித்தது.

இந்த தலைநகர(கொலை) வாழ்க்கை ஒரு திருப்பு முனை கார்த்திக் படம் போல் நாட்டின் பல பலபகுதி நண்பர்கள் பாண்டிருப்பு முதல் மலையகம் ,வடக்கு என பலர் ஒன்றாக ஜாலியாக இருக்க வழிவகுத்தது.  தனிப்பதிவாளர்களை எல்லாம் இணைக்கும் திரட்டியான தமிழ்மணம் போல் எம்மையெல்லாம் அவ்வப்போது இணைந்தது ஐந்துலாம்புச் சந்தியில் இருந்து தொடங்கும் நகைக்கடை வீதியான செட்டியார் தெரு வரை..!

எப்போதும் வேலைகளுக்கிடையிலும் சின்னச் சின்ன சண்டைகள் குறுஞ்செய்திகள் என கலாய்த்தாலும், இரவு வேளையில் சாப்பாட்டுக்கு ஆட்டுப்பட்டித் தெருவிலும் ஜிந்துப்பிட்டி தியேட்டரிலும் ஒன்றுகூடி விடுவோம். சில நண்பர்களுடன் ஜிந்திப்பிட்டியில் இருக்கும் பிரபல மதுபானசாலையில் மல்லுக்கட்டி மைடியர் மார்த்தாண்டன் பட்டணம் போனார் என்பது போல் சட்டையை கிழிந்துக் கொண்டு இருக்கும் நண்பர்களை அடக்கிக் கொண்டு வந்து அறையில் தனிமைப்படுத்த வேண்டிய சுவாரசியங்களுக்கும் பஞ்சம் இருக்காது.

பண்டிகை நாட்களுக்கு அவர்களில் சிலர் அதிகமாக இரவு கண் விழித்து தங்க ஆபரண நகைகள் நெய்வார்கள். அப்போதெல்லாம் பேச்சுத்துணைக்கு அருகில் இருந்தும் கழிந்த நாட்கள் மீண்டும் வராத பொழுதுகள்..! பின்னிரவில் வானொலிகளுக்கு தொலைபேசியூடாக பாடல் கேட்டும், சுவையான ஊர் விடயங்களையும் நாட்டு அரசியல் சூழலை நையாண்டி செய்தும் வேலைப்பளுவை குறைக்கும் வழிவகையில் அவர்களுக்கு உதவியாக என் வேலை முடிந்த பின் நானும் சேர்ந்து இருந்தேன்.

இவர்களின் இப்படியான ஜாலியான ஆட்டம் எல்லாம் ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து ஐப்பசி மாதம் மட்டும்தான். கார்த்திகை முதல் தேதி முதல் இவர்கள் ஆன்மீகப் பக்கம் திரும்பி விடுவார்கள். முற்றிலும் புதிய மாற்றங்கள் அதுவரை..
ஸ்டார் ஹோட்டலிலும் ஆட்டுப்பட்டித் தெருக் கடைகளிலும் அசைவச் சாப்பாட்டை நிரந்தரம் என்று புதிய பதிவாளர்களின் பதிவுகளைப்படிக்காத மூத்த பதிவாளர்கள் போல் இருப்பவர்கள், திடீர் என்று ஞானோதயம் வந்து குழுவாக இருக்கும் புதியவர்களை தேடிச் செல்பவர்கள் போல அன்னபூரணாவின் வாடிக்கையாளராகிவிடுவார்கள். வானொலிகளில் பல்சுவைக்கதம்பத்தை கேட்பவர்கள் பக்திக் கமலப்பாடல்களை நாடிச் செல்வார்கள். பத்திரிக்கை தலைப்பு மறந்து போகும் அவர்களிடம் இருந்து..

கற்ற இந்த நட்புப்படலம் நானும் ஆன்மீகப்பக்கம் சென்று, ஐயப்பன் பக்தன் ஆனேன். ஆண்டுதோறும் நம் நண்பர்கள் சூழ சபரிமலையானைச் தரிசிக்கின்றோம்.

இன்று பங்குனி உத்தரம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாம் ஐய்யப்பன் அவதரித்த நாள். ஐயப்பன் கோவில்களில் சாஸ்தாவுக்கு 18 வகை பலகாரங்கள் வைத்து படையல் நடக்கும் பகவானின் பாடல் ஒன்றை இன்று கேட்போம்-பஜனையில் இந்த சின்னவன் விரும்பிப் பாடு பாடல் இது

103 comments:

  1. பகல் வணக்கம் நேசன்!பகலிலும் கோப்பியா????

    ReplyDelete
  2. பாடல் கேட்டுக் கொண்டே கருத்திடுகிறேன்,ஐயப்பர் கோபித்துக் கொள்ள மாட்டார் என்ற தைரியத்தில்!!!!!

    ReplyDelete
  3. இந்த தலை(கொலை)நகர வாழ்க்கை ஒரு திருப்பு முனை கார்த்திக் படம் போல்!?////கார்த்திக் படத்தில எங்கேங்க இருக்கு திருப்பு முனை?

    ReplyDelete
  4. வணக்கம் யோகா ஐயா இன்று வடை, பாயாசம்., முறுக்கு, பொங்கள், ஊன்னி அப்பம் ,அவள், எல்லாம் கிடைக்கும்

    ReplyDelete
  5. ஸ்டார் ஹோட்டலிலும் ஆட்டுப்பட்டித் தெருக் கடைகளிலும் அசைவச் சாப்பாட்டை நிரந்தரம் என்று,புதிய பதிவாளர்களின் பதிவுகளைப் படிக்காத மூத்த பதிவாளர்கள் போல்!/////இதத்தான் தமிழ் நாட்டுல கேப்பில கடா(கிடா?)வெட்டுறதுன்னு சொல்லுவாங்க,ஹி!ஹி!ஹி!!!!!

    ReplyDelete
  6. அவர் கோபிக்கமாட்டார் கேளுங்கோ பாடலை .தத்துவம் மிக்கது..

    ReplyDelete
  7. இந்த தலை(கொலை)நகர வாழ்க்கை ஒரு திருப்பு முனை கார்த்திக் படம் போல்!?////கார்த்திக் படத்தில எங்கேங்க இருக்கு திருப்பு முனை?// உண்மையான ஹீரோ யார் என்று குழப்பி இருக்கும் படம் அது.ராஜாவின் பாடல் மறக்கமுடியாது.

    ReplyDelete
  8. ஸ்டார் ஹோட்டலிலும் ஆட்டுப்பட்டித் தெருக் கடைகளிலும் அசைவச் சாப்பாட்டை நிரந்தரம் என்று,புதிய பதிவாளர்களின் பதிவுகளைப் படிக்காத மூத்த பதிவாளர்கள் போல்!/////இதத்தான் தமிழ் நாட்டுல கேப்பில கடா(கிடா?)வெட்டுறதுன்னு சொல்லுவாங்க,ஹி!ஹி!ஹி!!!!!

    5 April 2012 03:40 // ஹீ ஹீ கிடா வெட்ட முடியாது இன்று சைவம்!

    ReplyDelete
  9. தனிமரம் said...

    வணக்கம் யோகா ஐயா இன்று வடை, பாயாசம்., முறுக்கு, பொங்கள், ஊன்னி அப்பம் ,அவள், எல்லாம் கிடைக்கும்!////அச்சச்சோ!அப்பிடியெண்டா,முதல்ல கண்ணூறு கழிக்கிறதுக்கு தேசிக்காய்,மிளகாய்,உப்பு எல்லாம் எடுத்து வைக்கோணும்!உங்கட சகோதரியள் வந்து...................................!

    ReplyDelete
  10. நலம்தானே யோகா ஐயா!

    ReplyDelete
  11. வணக்கம் யோகா ஐயா இன்று வடை, பாயாசம்., முறுக்கு, பொங்கள், ஊன்னி அப்பம் ,அவள், எல்லாம் கிடைக்கும்!////அச்சச்சோ!அப்பிடியெண்டா,முதல்ல கண்ணூறு கழிக்கிறதுக்கு தேசிக்காய்,மிளகாய்,உப்பு எல்லாம் எடுத்து வைக்கோணும்!உங்கட சகோதரியள் வந்து...// அவையல் வரும் போது மடப்பள்ளிக்கு உள்ளே போய் விடுவேன் இன்று அங்கதான் இரவுத்தொண்டு!

    ReplyDelete
  12. தனிமரம் said...

    நலம்தானே யோகா ஐயா?////இப்போது கொஞ்சம் பரவாயில்லை!நலம் குறைந்திருந்தாலும்"சும்மா"வீட்டில் இருக்க முடியுமா,என்ன?காலையிலும் மெல்லிய குளிரில் பொருட் கொள்வனவுக்காக வெளியே சென்று வந்தேன்!அடைந்து கிடப்பதும் நல்லதில்லையே?நன்றி!!!!!

    ReplyDelete
  13. அடைந்து கிடக்க விருப்பம் எனக்கு ஆனால் வேலைவிடாது. ஓடி ஓடி கட்டணும் காசு !ஹீ

    ReplyDelete
  14. தனிமரம் said...

    வணக்கம் யோகா ஐயா இன்று வடை, பாயாசம்., முறுக்கு, பொங்கள், ஊன்னி அப்பம் ,அவள், எல்லாம் கிடைக்கும்!////அச்சச்சோ!அப்பிடியெண்டா,முதல்ல கண்ணூறு கழிக்கிறதுக்கு தேசிக்காய்,மிளகாய்,உப்பு எல்லாம் எடுத்து வைக்கோணும்!உங்கட சகோதரியள் வந்து...// அவையள் வரும் போது மடப்பள்ளிக்கு உள்ளே போய் விடுவேன் இன்று அங்கதான் இரவுத்தொண்டு!////என்ன செய்ய?வந்து விட்டோம்!(வீட்டில்)அடுப்பும் புகைய வேண்டும்!மாத முடிவில் பிரித்துக் கட்டிவிட எல்லாம் ...............................!

    ReplyDelete
  15. அடைந்து கிடக்க விருப்பம் எனக்கு ஆனால் வேலைவிடாது. ஓடி ஓடி கட்டணும் காசு !ஹீ!!!///ஆம்,நீங்கள் பதிந்த நேரத்தில் நானும் அதனையே!!!!(என்ன ஆச்சரியம்!)

    ReplyDelete
  16. அடுப்பும் புகைய வேண்டும்!மாத முடிவில் பிரித்துக் கட்டிவிட எல்லாம் ...............................!

    5 April 2012 03:51 //ம்ம்ம்ம்!

    ReplyDelete
  17. தனிமரம் said...

    ஸ்டார் ஹோட்டலிலும் ஆட்டுப்பட்டித் தெருக் கடைகளிலும் அசைவச் சாப்பாட்டை நிரந்தரம் என்று,புதிய பதிவாளர்களின் பதிவுகளைப் படிக்காத மூத்த பதிவாளர்கள் போல்!/////இதத்தான் தமிழ் நாட்டுல கேப்பில கடா(கிடா?)வெட்டுறதுன்னு சொல்லுவாங்க,ஹி!ஹி!ஹி!!!!!

    // ஹீ ஹீ கிடா வெட்ட முடியாது இன்று சைவம்!///நான் சொன்னது,மூத்த பதிவாளர்களை வாரியதை!

    ReplyDelete
  18. அடைந்து கிடக்க விருப்பம் எனக்கு ஆனால் வேலைவிடாது. ஓடி ஓடி கட்டணும் காசு !ஹீ!!!///ஆம்,நீங்கள் பதிந்த நேரத்தில் நானும் அதனையே!!!!(என்ன ஆச்சரியம்!)//இதுதானே நம் இயல்பு!

    ReplyDelete
  19. /நான் சொன்னது,மூத்த பதிவாளர்களை வாரியதை!

    5 April 2012 03:55 //யோகா ஐயா இப்படி வம்பில் மாட்டி விடலாமோ!

    ReplyDelete
  20. மருந்து சாப்பிட்டேன்.மதிய உணவு சாப்பிட வேண்டும்!கொஞ்ச நேரம் கழித்து!நீங்களும் மரக்கறி சாப்பிடுங்கள்,Bon Appettit!

    ReplyDelete
  21. தனிமரம் said...

    /நான் சொன்னது,மூத்த பதிவாளர்களை வாரியதை!

    /////யோகா ஐயா இப்படி வம்பில் மாட்டி விடலாமோ?////இதிலே என்ன இருக்கிறது?அவர்கள் புரிந்து கொள்வார்கள்!

    ReplyDelete
  22. நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும். இனித்தான் விரதம் முடிக்கப் போறன் பின் பணிக்குப் போய்விடுவன் நாளை இரவு முடிந்தால்!!!!!!

    ReplyDelete
  23. யோகா ஐயா இப்படி வம்பில் மாட்டி விடலாமோ?////இதிலே என்ன இருக்கிறது?அவர்கள் புரிந்து கொள்வார்கள்!// புரிந்து கொண்டால் படலை திறந்துதான் இருக்கு!

    ReplyDelete
  24. தனிமரம் said...

    யோகா ஐயா இப்படி வம்பில் மாட்டி விடலாமோ?////இதிலே என்ன இருக்கிறது?அவர்கள் புரிந்து கொள்வார்கள்!// புரிந்து கொண்டால் படலை திறந்துதான் இருக்கு!////சொல்லிட்டீங்க இல்ல?வந்து பாருங்க,ஒருவழி பண்ணி விடுவார்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!!!

    ReplyDelete
  25. என்ன பகல் காட்சி...அதுவும் சாமிப்படம்...நடத்துங்க...

    ReplyDelete
  26. ரெவெரி said...

    என்ன பகல் காட்சி...அதுவும் சாமிப்படம்...நடத்துங்க...////உங்க ஊர்ல எல்லாம் மேட்னி ஷோ போடமாட்டாங்களா,ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  27. நன்றி கவிக்கிழவன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  28. தனிமரம் said...

    யோகா ஐயா இப்படி வம்பில் மாட்டி விடலாமோ?////இதிலே என்ன இருக்கிறது?அவர்கள் புரிந்து கொள்வார்கள்!// புரிந்து கொண்டால் படலை திறந்துதான் இருக்கு!////சொல்லிட்டீங்க இல்ல?வந்து பாருங்க,ஒருவழி பண்ணி விடுவார்கள்,ஹ!ஹ!ஹா!!!!!!!!

    5 April 2012 04:55 
    //ஆஹா ஹா ஹா!

    ReplyDelete
  29. என்ன பகல் காட்சி...அதுவும் சாமிப்படம்...நடத்துங்க... 
    //வாங்க ரெவெரி அண்ணா .இரவுக்காட்சிக்கு கோயில் போகனும் அதனால் தான் இன்று வாழ்வில் சிறப்பான நாள் பல கோயில் தேர்த்திருவிழா கானும் நாள் இப்படி ஒரு நல்ல நாளில் தான் என் வீட்டுக்காரியிடம் முதல் முதலில். அன்பைச் சொன்னதும்.

    ..., !நன்றி ரெவெரி அண்ணா! வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  30. ரெவெரி said...

    என்ன பகல் காட்சி...அதுவும் சாமிப்படம்...நடத்துங்க...////உங்க ஊர்ல எல்லாம் மேட்னி ஷோ போடமாட்டாங்களா,ஹி!ஹி!ஹி!!!!

    5 April 2012 07:35 
    //நல்லாவே இருக்கு சென்னையில் யோகா ஐயா எத்தனை ....,,ம் படம் 

    ReplyDelete
  31. aa aaa vanthuttan ennaa அண்ணா seekkiramaai pathivu pottu vittinam

    ReplyDelete
  32. ஓம் அண்ணா இண்டு பங்குனி உத்திரம் ...எனக்கும் iyappan ரொம்ப pidikkum விநாயகர் ரொம்ப ரொம்ப பிடிக்குமே ...

    அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் இண்டைக்கு நான் சிக்கென் சாப்பிட்டுப் போட்டேன் .பங்குனி உத்திரம் எண்டுத theriyaamal ..சாமி kovaichikkapothu ...அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

    ReplyDelete
  33. இண்டைக்கு பாலக் காப்பி மாமாக்கு ஜாலி ...

    ஹேமா அக்கா வரும் முன் வடை ,பாயசம் ,அப்பளம் எல்லாம் சாப்பிடுருங்கோ மாமா ..அக்க vanthaal உங்களுக்கு ஒரு வாய் குட கிடைக்காது மாமா ...

    ReplyDelete
  34. யோகா மாமா நலம் தானே .உடம்பை பார்த்துக் கொள்ளுங்கோ ..suvar irunthaal thaan siththiram varaiya mudiyum ...

    ReplyDelete
  35. நான் சொன்னது,மூத்த பதிவாளர்களை வாரியதை!///////////




    மூத்த பதிவாளர் எண்டு neengal kurippiduvathu namathu appaththaa தானே ree ree அண்ணா

    appaththaavai இந்தும் kaanavillai நான் kilamburen ....
    டாடா டாடா ஹேமா akkka ,ree ree அண்ணா ,மாமா ,uncle

    ReplyDelete
  36. வணக்கம் நேசன்
    நலமா?
    என் மனதுக்கு பிடித்த கடவுள் ஐயப்பன்..

    ஐயப்பனின் அமர்வு ஆசன முறையினால்
    இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்ற
    ஒரு கருத்துக்கோர்வை இன்னும் நிலவிக் கொண்டிருக்கிறது..
    ஆயினும் மும்மலம் அகற்றச் சொல்லி மூவாசை வெறுக்கச் சொல்லும்
    பிரும்மச்சர்யா விரதன் ஐயப்பனை பற்றிய பதிவு
    நெஞ்சை நிறைத்தது...

    ReplyDelete
  37. அடக்கடவுளே....இண்டைக்கு அப்பாவே முன்னுக்கு வந்திட்டார்.எங்க எனக்கு வடை,மோதகம் எல்லாம்.அப்பா காக்காவும் வந்திட்டுப் போய்ட்டா.நான் தான் கடைசிப்பந்தியோ.கிடைக்குமோ வடை வாழப்பழம்.நேசன்....வாழையிலை போட்டு சக்கரைப்பொங்கள்
    வையுங்கோ !

    ReplyDelete
  38. வணக்கம் கலை!இப்புடித்தான் இருக்கணும்,வந்தமா ஹாய் சொன்னமா,சொகம் விசாரிச்சமா,ரெண்டு பேர வாரினமான்னு இருக்கணும்!ஒடம்பு பரவால்ல,கலை!அப்புறம் நெறையப் படிங்க.எக்ஸாம் நல்லா எழுதுங்க!கரிசனைப்படுறவங்க மனசை சந்தோஷப்படுத்துங்க!அது போதும்,லீவு கெடைக்கிறப்ப வந்து உண்டு,இல்லைன்னு பண்ணிடுங்க,ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  39. இரவு வணக்கம் ஹேமா!ஐயாம் சொறி!இண்டைக்கு சும்மா(வேலை,வெட்டி இருந்தாலேல்லோ?) மேஞ்சு கொண்டிருந்தன்.வடை பாயாசத்தோட விருந்தே கிடைச்சிச்சு!

    ReplyDelete
  40. யோகா அப்பா என்ன சின்னப்பெடியன் நீங்கள்.எப்பவும் வருத்தம் சொல்லிக்கொண்டு.உஷாரா இருங்கோ.மனசையும் சந்தோஷமா வச்சிருங்கோ.நேசன் தாற பொங்கலையும்,பாயாசத்தையும்,மோதகத்தையும் கனக்கச் சாப்பிடாதேங்கோ.ஆசைக்குக் கொஞ்சம் !

    பாருங்கோ யோகா அப்பா கருவாச்சி என்னை அப்பத்தாவாம்ம்ம்ம்ம்ம் !

    ReplyDelete
  41. ஹேமா said...

    அடக்கடவுளே....இண்டைக்கு அப்பாவே முன்னுக்கு வந்திட்டார்.எங்க எனக்கு வடை,மோதகம் எல்லாம்.அப்பா காக்காவும் வந்திட்டுப் போய்ட்டா.நான் தான் கடைசிப்பந்தியோ.கிடைக்குமோ வடை வாழப்பழம்.நேசன்....வாழையிலை போட்டு சக்கரைப்பொங்கல்
    வையுங்கோ !////கடைசிப் பந்தியில என்ன கிடைக்கும் எண்டு முந்தி அனுபவப்பட்டிருப்பியள்.வாற திங்கள் கடைசி பங்குனித் திங்கள்!வந்தால் நல்ல கருப்பணிக் கஞ்சி தருவம்,ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  42. ஹேமா said...
    பாருங்கோ யோகா அப்பா கருவாச்சி என்னை அப்பத்தாவாம்ம்ம்ம்ம்ம் !////அதுக்கும் நல்ல போஸ்ட்(post) தானே,இல்லையா????

    ReplyDelete
  43. இண்டைக்கு என்னவாச்சும் விஷேச தினமோ யோகா அப்பா?அதுக்கோ விரதம்,மரக்கறி,வடை,பாயாசம் எண்டு ....பதிவிலயும் ஐயப்பன் தேவாரம் இருக்கு !

    ReplyDelete
  44. தனிமரம் said...
    இப்படி ஒரு நல்ல நாளில் தான் என் வீட்டுக்காரியிடம் முதல் முதலில். அன்பைச் சொன்னதும்.////அப்புடிப் போடு அருவாள!!!!ஹ!ஹ!ஹா!!ஹி!ஹி!ஹி!!!

    ReplyDelete
  45. ஹேமா said...

    இண்டைக்கு என்னவாச்சும் விஷேச தினமோ யோகா அப்பா?அதுக்கோ விரதம்,மரக்கறி,வடை,பாயாசம் எண்டு ....பதிவிலயும் ஐயப்பன் தேவாரம் இருக்கு !///ஐயகோ,ஐயப்பா!!!இந்தக் கொடுமையை நான் எங்கே போய்ச் சொல்ல?இது வழமையானதே.வெளிநாட்டில் வெள்ளிக்கிழமை தவிர்ந்த வெறும் விஷேட நாட்கள் பலருக்குத் தெரிவதில்லை!எனக்கும் தெரிந்திருக்கவில்லை,இன்று பங்குனி உத்தரம்.விசேடமான தினம்!தை பிறந்தாலே ஆடி மாதம் தவிர்த்து(அதிலும் ஆடிக்கூழ் வரும்)விசேடம் தானே?சித்திரை வருடம் வெள்ளி 13-இல் பிறக்கிறது!

    ReplyDelete
  46. பங்குனி உத்தரம் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன்.ஆனால் நாள்,கிழமை சொல்றீங்கள் தெரியாது.உண்மையில் எனக்கு எல்லா நாளும் நல்ல நாள்மாதிரி.வெள்ளி செவ்வாய் எல்லாம் ஒன்றுதான்.திட்டாதேங்கோ.ஆனால் என் உடம்புத் தேவைக்காக நிறையவே மரக்கறிகள் சாப்பிட்டுக்கொள்ளுவன் !

    ReplyDelete
  47. ஹேமா said...

    பங்குனி உத்தரம் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன்.ஆனால் நாள்,கிழமை சொல்றீங்கள் தெரியாது.உண்மையில் எனக்கு எல்லா நாளும் நல்ல நாள்மாதிரி.வெள்ளி செவ்வாய் எல்லாம் ஒன்றுதான்.திட்டாதேங்கோ.ஆனால் என் உடம்புத் தேவைக்காக நிறையவே மரக்கறிகள் சாப்பிட்டுக்கொள்ளுவன் !
    ///அப்படியல்ல மகளே!நான் பழகிவிட்டால் உரிமை எடுத்து கண்டிப்பதுபோல் நடந்து விடுவேன்.நாங்கள் வெள்ளி,சனி மரக்கறி.மற்றும் கோவில் திருவிழாக்கள் வந்து விட்டால்,ஆவணி மாத சதுர்த்தி போன்ற விசேட நாட்களில் மரக்கறி தான்!

    ReplyDelete
  48. மருந்து சாப்பிட்டு இரவுச் சாப்பாடு சாப்பிடப் போகிறேன்.பார்க்கலாம்!நேசன் இரவு வேலை!

    ReplyDelete
  49. ஊரில் இருக்கும்வரை அம்மா விரதம்,சாமி எல்லாம் பழக்கித்தான்விட்டவ.இங்கு தனிய. கடவுள் நம்பிக்ககை இப்போ வெறுப்பா மாறியிருக்கு யோகா அப்பா !

    ReplyDelete
  50. சாமி சரணம் ஐயப்பா சரணம்
    சாமியே ஐயப்பா
    சபரிமலைக்கு இருமுடிக்கட்டு

    ReplyDelete
  51. புதிய பதிவாளர்களின் பதிவுகளைப்படிக்காத மூத்த பதிவாளர்கள் போல் இருப்பவர்கள், திடீர் என்று ஞானோதயம் வந்து குழுவாக இருக்கும் புதியவர்களை தேடிச் செல்பவர்கள் போல //
    அதுசரி நேசன் நீங்க மூத்தபதிவரா புதியவரா?

    ReplyDelete
  52. ஹேமா said...

    ஊரில் இருக்கும்வரை அம்மா விரதம்,சாமி எல்லாம் பழக்கித்தான்விட்டவ.இங்கு தனிய. கடவுள் நம்பிக்ககை இப்போ வெறுப்பா மாறியிருக்கு யோகா அப்பா !
    ///அதே நிலை தான் எனக்கும்!அப்பப்போ கூட்டமில்லா நேரத்தில் கோவில் செல்வதுதான்!அலைபாய்ந்து கொண்டே மனம் இருக்கையில் ஒன்றுவது சிரமம் தான்!முள்ளிவாய்க்காலின் பின்.............ஹும்................!

    ReplyDelete
  53. இரவு வணக்கம் அம்பலத்தார்!(இப்படி ஒருமையில் அழைக்கலாமோ,என்னவோ?)///அம்பலத்தார் said...

    hema fifty ////நேசன் சொல்லியிருக்கிறார்,கலைக்கு!பெண்கள் வயசு கேட்கவோ,சொல்லவோ கூடாதாம்,ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  54. அப்புறம் ஹேமா இன்னுமொரு விடயம் சொல்லவேண்டும்!:அம்மா கற்றுக் கொடுத்தது என்று சொன்னீர்கள்.தாயிடமிருந்தே பழக்க,வழக்கங்களை ஆரம்பத்தில் கற்று,பின்னர் தகப்பனார் ஆசான் என்று பட்டியல் நீளும்!உங்களுக்குத் தெரிந்திருக்கும்,இங்கே வெளி நாட்டில் இப்போது நம்மவர்கள் மதம் மாறி மற்றவர்களையும் மாற்ற முயற்சிப்பது.ஒரு தடவை என்வீட்டுக்கு வந்த இரண்டு நமது பெண்கள் இது சம்பந்தமாகப் பேச ஆரம்பித்ததும் நான் சொன்னது;எனக்கு ஒரு அம்மா இருந்தார்.அவ என்ன செய்ய வேண்டும்,என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று கற்றுக் கொடுத்திருக்கிறார் தகப்பன் யாரென்றே அம்மா தான் சொல்லிக் கொடுத்தார் என்றேன்!உடனே அவர்கள்,எங்களுக்கெல்லாம் அம்மா இல்லையா? என்று கேட்டார்கள்!நான் சொன்னேன்,நான் அப்படிச் சொல்லவில்லை என்று!என்னைப் பொறுத்த வரை மதத்தை மறப்பவர்கள்,தாயை மறந்தவர்கள்!!!!

    ReplyDelete
  55. ஹேமா said...

    ஊரில் இருக்கும்வரை அம்மா விரதம்,சாமி எல்லாம் பழக்கித்தான்விட்டவ.இங்கு தனிய.........///அப்பு நாங்களெல்லாம் யார்?சும்மா இணையத்தில் கும்மாளம் அடிப்போரா?உங்கள் நலனில்,சுக துக்கங்களில் அக்கறை கொண்டுதான் நாமிருக்கிறோம்!அதுவும் கூப்பிடு தூரத்தில்!கருவாச்சி(கலை)யையே நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்று தெரிந்து கொண்டே????

    ReplyDelete
  56. வாங்க கலை நலம் தானே இன்று இரவு ஐயப்பனிடம் போய் இருந்தேன் அதுதான் பதிவை மதியம் போட்டுவிட்டேன்.

    ReplyDelete
  57. ஓம் அண்ணா இண்டு பங்குனி உத்திரம் ...எனக்கும் iyappan ரொம்ப pidikkum விநாயகர் ரொம்ப ரொம்ப பிடிக்குமே ...

    அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் இண்டைக்கு நான் சிக்கென் சாப்பிட்டுப் போட்டேன் .பங்குனி உத்திரம் எண்டுத theriyaamal ..சாமி kovaichikkapothu ...அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

    5 April 2012 09:58 
    //சின்னப்பிள்ளைகள் தவறு செய்தால் கடவுள் பொறுத்துக்கொள்வார்.

    ReplyDelete
  58. இண்டைக்கு பாலக் காப்பி மாமாக்கு ஜாலி ...

    ஹேமா அக்கா வரும் முன் வடை ,பாயசம் ,அப்பளம் எல்லாம் சாப்பிடுருங்கோ மாமா ..அக்க vanthaal உங்களுக்கு ஒரு வாய் குட கிடைக்காது மாமா ...

    5 April 2012 10:00 
    //இப்படி எல்லாம் ஹேமாவை அதிகம் கலாய்க்கக்கூடாது கலை.

    ReplyDelete
  59. யோகா மாமா நலம் தானே .உடம்பை பார்த்துக் கொள்ளுங்கோ ..suvar irunthaal thaan siththiram varaiya mudiyum ...

    5 April 2012 10:04 
    //உண்மைதான் கலை.

    ReplyDelete
  60. நான் சொன்னது,மூத்த பதிவாளர்களை வாரியதை!///////////




    மூத்த பதிவாளர் எண்டு neengal kurippiduvathu namathu appaththaa தானே ree ree அண்ணா 

    appaththaavai இந்தும் kaanavillai நான் kilamburen ....
    டாடா டாடா ஹேமா akkka ,ree ree அண்ணா ,மாமா ,uncle
    //ஹேமா எல்லாரையும் அரவனைத்துப்போகும் பதிவாளினி அவரைச் சொல்வேனா??கலை .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  61. வணக்கம் மகேந்திரன் அண்ணா.
    நலம் நீங்களும் அவ்வண்ணம் இருப்பீர்கள் என்று எண்ணுகின்றேன்.
    சமண மதம் என்று சிலர் திட்டமிட்டு மறைக்கும் செயல்கள் என்றாலும் சாஸ்தாவின் புகழ் மறையாது என்பது என் நம்பிக்கை வருடா வருடம் சாஸ்தாவை நடி வரும் பக்ககோடிகளின் பயணம் அதைச் சொல்லி நிற்குது.
    நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  62. அடக்கடவுளே....இண்டைக்கு அப்பாவே முன்னுக்கு வந்திட்டார்.எங்க எனக்கு வடை,மோதகம் எல்லாம்.அப்பா காக்காவும் வந்திட்டுப் போய்ட்டா.நான் தான் கடைசிப்பந்தியோ.கிடைக்குமோ வடை வாழப்பழம்.நேசன்....வாழையிலை போட்டு சக்கரைப்பொங்கள் 
    வையுங்கோ !

    5 April 2012 10:48 
    //வாங்க ஹேமா எல்லாம் தரலாம் பாயாசம் அதிகமாக இருக்கு.

    ReplyDelete
  63. வணக்கம் கலை!இப்புடித்தான் இருக்கணும்,வந்தமா ஹாய் சொன்னமா,சொகம் விசாரிச்சமா,ரெண்டு பேர வாரினமான்னு இருக்கணும்!ஒடம்பு பரவால்ல,கலை!அப்புறம் நெறையப் படிங்க.எக்ஸாம் நல்லா எழுதுங்க!கரிசனைப்படுறவங்க மனசை சந்தோஷப்படுத்துங்க!அது போதும்,லீவு கெடைக்கிறப்ப வந்து உண்டு,இல்லைன்னு பண்ணிடுங்க,ஹ!ஹ!ஹா!!!!!!

    5 April 2012 10:50 
    /.இல்லை என்று பண்ணாதீங்க கலை பாவம் ஐயா.

    ReplyDelete
  64. இரவு வணக்கம் ஹேமா!ஐயாம் சொறி!இண்டைக்கு சும்மா(வேலை,வெட்டி இருந்தாலேல்லோ?) மேஞ்சு கொண்டிருந்தன்.வடை பாயாசத்தோட விருந்தே கிடைச்சிச்சு!

    5 April 2012 10:53 
    /:உத்தரம் நல்லது செய்திருக்கு யோகா ஐயா.

    ReplyDelete
  65. யோகா அப்பா என்ன சின்னப்பெடியன் நீங்கள்.எப்பவும் வருத்தம் சொல்லிக்கொண்டு.உஷாரா இருங்கோ.மனசையும் சந்தோஷமா வச்சிருங்கோ.நேசன் தாற பொங்கலையும்,பாயாசத்தையும்,மோதகத்தையும் கனக்கச் சாப்பிடாதேங்கோ.ஆசைக்குக் கொஞ்சம் !

    பாருங்கோ யோகா அப்பா கருவாச்சி என்னை அப்பத்தாவாம்ம்ம்ம்ம்ம் !

    5 April 2012 10:54 
    //பாசத்தில் கலை சொல்லுது அப்பத்தா என்றாள் எனக்கு எங்க பாட்டி ஞாபகம் வரும்.

    ReplyDelete
  66. ஹேமா said...

    அடக்கடவுளே....இண்டைக்கு அப்பாவே முன்னுக்கு வந்திட்டார்.எங்க எனக்கு வடை,மோதகம் எல்லாம்.அப்பா காக்காவும் வந்திட்டுப் போய்ட்டா.நான் தான் கடைசிப்பந்தியோ.கிடைக்குமோ வடை வாழப்பழம்.நேசன்....வாழையிலை போட்டு சக்கரைப்பொங்கல்
    வையுங்கோ !////கடைசிப் பந்தியில என்ன கிடைக்கும் எண்டு முந்தி அனுபவப்பட்டிருப்பியள்.வாற திங்கள் கடைசி பங்குனித் திங்கள்!வந்தால் நல்ல கருப்பணிக் கஞ்சி தருவம்,ஹ!ஹ!ஹா!!!!!!
    //நானும் வாரன் கஞ்சி குடிக்க.ஹீ

    ReplyDelete
  67. ஹேமா said...
    பாருங்கோ யோகா அப்பா கருவாச்சி என்னை அப்பத்தாவாம்ம்ம்ம்ம்ம் !////அதுக்கும் நல்ல போஸ்ட்(post) தானே,இல்லையா????

    5 April 2012 11:01 
    //உண்மைதான் யோகா ஐயா.சுதந்திரம் மிக்கது.

    ReplyDelete
  68. இண்டைக்கு என்னவாச்சும் விஷேச தினமோ யோகா அப்பா?அதுக்கோ விரதம்,மரக்கறி,வடை,பாயாசம் எண்டு ....பதிவிலயும் ஐயப்பன் தேவாரம் இருக்கு !

    5 April 2012 11:03 
    //ஐயப்பன் சரணம் கூடவே பாடலும் ஐய்யப்பனுக்கு பிடிச்சது பஜனை. ஹேமா.

    ReplyDelete
  69. தனிமரம் said...
    இப்படி ஒரு நல்ல நாளில் தான் என் வீட்டுக்காரியிடம் முதல் முதலில். அன்பைச் சொன்னதும்.////அப்புடிப் போடு அருவாள!!!!ஹ!ஹ!ஹா!!ஹி!ஹி!ஹி!!!

    5 April 2012 11:04 
    /:சிலவிடயங்களில் நானும் பழையபஞ்சாங்கம் தான் யோகா ஐயா. சிலரின் பார்வையில்.

    ReplyDelete
  70. இண்டைக்கு என்னவாச்சும் விஷேச தினமோ யோகா அப்பா?அதுக்கோ விரதம்,மரக்கறி,வடை,பாயாசம் எண்டு ....பதிவிலயும் ஐயப்பன் தேவாரம் இருக்கு !///ஐயகோ,ஐயப்பா!!!இந்தக் கொடுமையை நான் எங்கே போய்ச் சொல்ல?இது வழமையானதே.வெளிநாட்டில் வெள்ளிக்கிழமை தவிர்ந்த வெறும் விஷேட நாட்கள் பலருக்குத் தெரிவதில்லை!எனக்கும் தெரிந்திருக்கவில்லை,இன்று பங்குனி உத்தரம்.விசேடமான தினம்!தை பிறந்தாலே ஆடி மாதம் தவிர்த்து(அதிலும் ஆடிக்கூழ் வரும்)விசேடம் தானே?சித்திரை வருடம் வெள்ளி 13-இல் பிறக்கிறது!/.உண்மைதான் .பலருக்கு மறந்துபோகின்றது.

    ReplyDelete
  71. பங்குனி உத்தரம் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன்.ஆனால் நாள்,கிழமை சொல்றீங்கள் தெரியாது.உண்மையில் எனக்கு எல்லா நாளும் நல்ல நாள்மாதிரி.வெள்ளி செவ்வாய் எல்லாம் ஒன்றுதான்.திட்டாதேங்கோ.ஆனால் என் உடம்புத் தேவைக்காக நிறையவே மரக்கறிகள் சாப்பிட்டுக்கொள்ளுவன் !

    5 April 2012 11:17 
    /.நான் சனியும் மற்றும் சில முக்கியமான நாட்கள் கார்த்திகை முதல் தைக் கடைசிவரை மரக்கறிதான் ஹேமா.

    ReplyDelete
  72. மருந்து சாப்பிட்டு இரவுச் சாப்பாடு சாப்பிடப் போகிறேன்.பார்க்கலாம்!நேசன் இரவு வேலை!

    5 April 2012 11:28 
    //இனிய உறக்கம் கண்களுக்கு மீண்டும் சந்திப்போம் யோகா ஐயா .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  73. ஊரில் இருக்கும்வரை அம்மா விரதம்,சாமி எல்லாம் பழக்கித்தான்விட்டவ.இங்கு தனிய. கடவுள் நம்பிக்ககை இப்போ வெறுப்பா மாறியிருக்கு யோகா அப்பா !

    5 April 2012 11:31 
    //எங்களுக்கும் ஊரில் இருந்து தான் நம்பிக்கை இன்னும் ஆதீத பற்று  வந்திருக்கு.

    ReplyDelete
  74. வாங்க அம்பலத்தார் நீங்களும் ஹேமாவை பாட்டியாக்கிவிட்டீங்க போல !ஹீ

    ReplyDelete
  75. சாமி சரணம் ஐயப்பா சரணம் 
    சாமியே ஐயப்பா
    சபரிமலைக்கு இருமுடிக்கட்டு

    5 April 2012 11:58 
    //தை முதல் தேதியில் தான் இருமுடியோடு போவது அவரிடம் அம்பலத்தார்.

    ReplyDelete
  76. நான் புதிய பதிவாளர் என நினைக்கின்றேன் அம்பலத்தார் ஐயா!

    ReplyDelete
  77. ஹேமா said...

    ஊரில் இருக்கும்வரை அம்மா விரதம்,சாமி எல்லாம் பழக்கித்தான்விட்டவ.இங்கு தனிய. கடவுள் நம்பிக்ககை இப்போ வெறுப்பா மாறியிருக்கு யோகா அப்பா !
    ///அதே நிலை தான் எனக்கும்!அப்பப்போ கூட்டமில்லா நேரத்தில் கோவில் செல்வதுதான்!அலைபாய்ந்து கொண்டே மனம் இருக்கையில் ஒன்றுவது சிரமம் தான்!முள்ளிவாய்க்காலின் பின்.............ஹும்................!

    5 April 2012 12:50 
    //அலைபாயும் மனதை அடக்குவது ஆன்மீகத்தின் சிறப்பு ஆனாலும் நல்ல குரு கிடைத்தால் மட்டுமே சாத்தியம்! யோகா ஐயா!

    ReplyDelete
  78. நன்றி அம்பலத்தார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  79. அப்புறம் ஹேமா இன்னுமொரு விடயம் சொல்லவேண்டும்!:அம்மா கற்றுக் கொடுத்தது என்று சொன்னீர்கள்.தாயிடமிருந்தே பழக்க,வழக்கங்களை ஆரம்பத்தில் கற்று,பின்னர் தகப்பனார் ஆசான் என்று பட்டியல் நீளும்!உங்களுக்குத் தெரிந்திருக்கும்,இங்கே வெளி நாட்டில் இப்போது நம்மவர்கள் மதம் மாறி மற்றவர்களையும் மாற்ற முயற்சிப்பது.ஒரு தடவை என்வீட்டுக்கு வந்த இரண்டு நமது பெண்கள் இது சம்பந்தமாகப் பேச ஆரம்பித்ததும் நான் சொன்னது;எனக்கு ஒரு அம்மா இருந்தார்.அவ என்ன செய்ய வேண்டும்,என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று கற்றுக் கொடுத்திருக்கிறார் தகப்பன் யாரென்றே அம்மா தான் சொல்லிக் கொடுத்தார் என்றேன்!உடனே அவர்கள்,எங்களுக்கெல்லாம் அம்மா இல்லையா? என்று கேட்டார்கள்!நான் சொன்னேன்,நான் அப்படிச் சொல்லவில்லை என்று!என்னைப் பொறுத்த வரை மதத்தை மறப்பவர்கள்,தாயை மறந்தவர்கள்!!!!//சரியாச் சொன்னீர்கள் யோகா ஐயா!

    ReplyDelete
  80. யோகா அப்பா உங்களுக்கு உரிமை இருக்கு என்னைக் கண்டிக்க.நான் மதம் மாறினதாலயோ இப்பிடிக் கதைக்கிறன்.இல்ல.எனக்கு சாமியில
    நம்பிக்கையில்லையே தவிர வீபூதி பூசி அம்மா சொல்லித்தந்தபடி அப்பனே முருகா சொல்லுவன்.ஆனால் கோயிலுக்குப் போரேல்ல.விரதமு இருக்கிறேல்ல.இதுகளீல நம்பிக்கையில்லை !

    ReplyDelete
  81. ஹேமா said...

    யோகா அப்பா உங்களுக்கு உரிமை இருக்கு என்னைக் கண்டிக்க.நான் மதம் மாறினதாலயோ இப்பிடிக் கதைக்கிறன்.இல்ல.எனக்கு சாமியில
    நம்பிக்கையில்லையே தவிர வீபூதி பூசி அம்மா சொல்லித்தந்தபடி அப்பனே முருகா சொல்லுவன்.ஆனால் கோயிலுக்குப் போரேல்ல.விரதமு இருக்கிறேல்ல.இதுகளீல நம்பிக்கையில்லை !
    ////காலை வணக்கம் ஹேமா!நம்பிக்கைதானே வாழ்க்கை?எதுவோ ஒன்றை நம்பித்தானே தெருவிலேயே இறங்க முடிகிறது?அந்த நம்பிக்கையின் பெயர் எதுவாகவோ இருக்கட்டும்!நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களை மதம் மாறியவர் என்று குறிப்பிடவே இல்லையே?இவ்வாறும் இருக்கிறார்கள் என்றே பொதுவாகக் கூறினேன்!அப்படி நீங்கள் மதம் மாறி இருந்தால் கூட அதனைத் தட்டிக் கேட்கும் உரிமை எனக்குக் கிடையாது.காரணம், அது அவரவர் சுதந்திரத்தில் தலையிடுவதாகும்!அந்த சுதந்திரம்,அதாவது ஒவ்வொருவருக்கும் தனி மனித சுதந்திரம் என்று ஒன்று இருக்கிறது என்று நம்புபவன் நான்!அது மறுக்கப்படும்போது தேடல் ஆரம்பித்து விடுகிறது!இறைவனை வீட்டிலும் வணங்க முடியும்.கோவில் என்ற ஒன்றை நம் முன்னோர்கள் உருவாக்கியதன் காரணம்,பலர் ஒன்று சேர்ந்து வித்தியாசம் பாராது மனதை ஒருங்கிணைத்து ஒன்றுவதற்காயே.கோவில்களில் விளக்குகள்,ஏற்றப்படுதலும்,அலங்காரங்களும்,படையல்களும் வேடிக்கையல்ல!ஒவ்வோர் நிகழ்வுக்கும் காரணங்கள் உண்டு!உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதன்படி நீங்கள் நடந்து கொள்ளலாம்.குழந்தைகளுக்கு கல்வியையோ,கொள்கைகளையோ,திணிப்பதில் பிரயோசனம் இருப்பதாக நம்புபவன் நான் அல்ல!என்னில் நானே அனுபவப்பட்டதால் தெளிவாகவே இருக்கிறேன்.என் பிள்ளைகளுக்கு அதுபடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை கொடுப்பதுடன் சரி.பிள்ளைகள் தாங்கள் விரும்பிய துறைகளை தேர்ந்து விட்டார்கள்.பக்கபலமாக இருப்பது மட்டுமே என் கடன்!திணிப்பதில் என்ன சுகம்?????

    ReplyDelete
  82. எல்லோருக்கும் காலை வணக்கம்!

    ReplyDelete
  83. மகுடம் ஏறிய நீவிர் வாழ்க. திக்குகள் எட்டும் பரவட்டும் தமிழர் புகழ். போதிக்க வருவான் போதிவர்மா

    ReplyDelete
  84. வணக்கம் நேசன் இன்றைக்கு நான் நேரத்துடன் வந்தால் புது பதிவு எதையும் காணோம். என்னாச்சு

    ReplyDelete
  85. ஹேமா said...
    நான் மதம் மாறினதாலயோ இப்பிடிக் கதைக்கிறன்.இல்ல.எனக்கு சாமியில
    நம்பிக்கையில்லையே தவிர வீபூதி பூசி அம்மா சொல்லித்தந்தபடி அப்பனே முருகா சொல்லுவன்.ஆனால் கோயிலுக்குப் போரேல்ல.விரதமு இருக்கிறேல்ல.இதுகளீல நம்பிக்கையில்லை !//
    ஆகா அதுதானே பார்த்தன் ஹேமாவா கொக்கா

    ReplyDelete
  86. Yoga.S.FR said...

    என்று!என்னைப் பொறுத்த வரை மதத்தை மறப்பவர்கள்,தாயை மறந்தவர்கள்!!!!//
    வணக்கம் யோகா, அதுமட்டுமன்றி அவர்கள் தங்களது மதத்தைப்பற்றி போதிய விளக்கமும் இல்லாதவர்கள்

    ReplyDelete
  87. போதிவர்மா said...
    மகுடம் ஏறிய நீவிர் வாழ்க. திக்குகள் எட்டும் பரவட்டும் தமிழர் புகழ். போதிக்க வருவான் போதிவர்மா//
    வணக்கம் போதி இன்றைக்குத்தான் உங்களை முதல் முதலாக காணுறன். அதுபோக எனக்கு ஒரு டவுட்டு போதிக்க வருவான் போதிவர்மா என்று எழுதியிருக்கிறியள். உங்கட போதனை என்னவென்று தெரிந்துகொள்ளலாமோ.

    ReplyDelete
  88. வணக்கம் அம்பலத்தார்!அது அவர் இப்போது தான் வலைப்பூ ஒன்று அந்தப் பெயரில் ஆரம்பித்திருக்கிறார்!பார்ப்போம் என்ன போதிக்கிறார் என்று!

    ReplyDelete
  89. Yoga.S.FR said...
    அது அவர் இப்போது தான் வலைப்பூ ஒன்று அந்தப் பெயரில் ஆரம்பித்திருக்கிறார்!பார்ப்போம் என்ன போதிக்கிறார் என்று!//
    அது அவர் உங்களுக்கு தெரிந்தவரோ யோகா அவரது வலைப்பூவின் link என்ன

    ReplyDelete
  90. ஒன்றும் பெரிய விடயம் இல்லை அம்பலத்தார்!அவர் எனக்குத் தெரிந்தவரல்ல!அவர் கொடுத்திருக்கும் கருத்துரைக்கு மேலிருக்கும் 'போதிவர்மன்'பெயரை மவுசால் கிளிக்குங்கள்,பிரச்சினை முடிந்தது!

    ReplyDelete
  91. யோகா அப்பா உங்களுக்கு உரிமை இருக்கு என்னைக் கண்டிக்க.நான் மதம் மாறினதாலயோ இப்பிடிக் கதைக்கிறன்.இல்ல.எனக்கு சாமியில 
    நம்பிக்கையில்லையே தவிர வீபூதி பூசி அம்மா சொல்லித்தந்தபடி அப்பனே முருகா சொல்லுவன்.ஆனால் கோயிலுக்குப் போரேல்ல.விரதமு இருக்கிறேல்ல.இதுகளீல நம்பிக்கையில்லை !

    5 April 2012 15:44 
    //ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு மாதிரி உணர்வு ஹேமா.

    ReplyDelete
  92. ஹேமா said...

    யோகா அப்பா உங்களுக்கு உரிமை இருக்கு என்னைக் கண்டிக்க.நான் மதம் மாறினதாலயோ இப்பிடிக் கதைக்கிறன்.இல்ல.எனக்கு சாமியில
    நம்பிக்கையில்லையே தவிர வீபூதி பூசி அம்மா சொல்லித்தந்தபடி அப்பனே முருகா சொல்லுவன்.ஆனால் கோயிலுக்குப் போரேல்ல.விரதமு இருக்கிறேல்ல.இதுகளீல நம்பிக்கையில்லை !
    ////காலை வணக்கம் ஹேமா!நம்பிக்கைதானே வாழ்க்கை?எதுவோ ஒன்றை நம்பித்தானே தெருவிலேயே இறங்க முடிகிறது?அந்த நம்பிக்கையின் பெயர் எதுவாகவோ இருக்கட்டும்!நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களை மதம் மாறியவர் என்று குறிப்பிடவே இல்லையே?இவ்வாறும் இருக்கிறார்கள் என்றே பொதுவாகக் கூறினேன்!அப்படி நீங்கள் மதம் மாறி இருந்தால் கூட அதனைத் தட்டிக் கேட்கும் உரிமை எனக்குக் கிடையாது.காரணம், அது அவரவர் சுதந்திரத்தில் தலையிடுவதாகும்!அந்த சுதந்திரம்,அதாவது ஒவ்வொருவருக்கும் தனி மனித சுதந்திரம் என்று ஒன்று இருக்கிறது என்று நம்புபவன் நான்!அது மறுக்கப்படும்போது தேடல் ஆரம்பித்து விடுகிறது!இறைவனை வீட்டிலும் வணங்க முடியும்.கோவில் என்ற ஒன்றை நம் முன்னோர்கள் உருவாக்கியதன் காரணம்,பலர் ஒன்று சேர்ந்து வித்தியாசம் பாராது மனதை ஒருங்கிணைத்து ஒன்றுவதற்காயே.கோவில்களில் விளக்குகள்,ஏற்றப்படுதலும்,அலங்காரங்களும்,படையல்களும் வேடிக்கையல்ல!ஒவ்வோர் நிகழ்வுக்கும் காரணங்கள் உண்டு!உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதன்படி நீங்கள் நடந்து கொள்ளலாம்.குழந்தைகளுக்கு கல்வியையோ,கொள்கைகளையோ,திணிப்பதில் பிரயோசனம் இருப்பதாக நம்புபவன் நான் அல்ல!என்னில் நானே அனுபவப்பட்டதால் தெளிவாகவே இருக்கிறேன்.என் பிள்ளைகளுக்கு அதுபடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை கொடுப்பதுடன் சரி.பிள்ளைகள் தாங்கள் விரும்பிய துறைகளை தேர்ந்து விட்டார்கள்.பக்கபலமாக இருப்பது மட்டுமே என் கடன்!திணிப்பதில் என்ன சுகம்?????
    //தினிக்கக் கூடாது என்றாலும் சில விடயங்களை ஊட்டுவது மிகமுக்கியம். யோகா ஐயா

    ReplyDelete
  93. எல்லோருக்கும் காலை வணக்கம்! 
    //மாலை வணக்கம் யோகா ஐயா!

    ReplyDelete
  94. மகுடம் ஏறிய நீவிர் வாழ்க. திக்குகள் எட்டும் பரவட்டும் தமிழர் புகழ். போதிக்க வருவான் போதிவர்மா //
    நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும். நல்லதைப் போதியுங்கோ இனவாதம்,மொழிவாதம்,மதவாதம் கடந்து மனித நேயத்தை போதியுங்கோ.

    ReplyDelete
  95. வணக்கம் நேசன் இன்றைக்கு நான் நேரத்துடன் வந்தால் புது பதிவு எதையும் காணோம். என்னாச்சு //வணக்கம் அம்பலத்தார் நீங்கள் வேலை நேரத்தில் வந்தால் நான் என்ன செய்வேன் என் முதலாளி வீட்டைதான் அனுப்பிவிடுவார் அடுப்படியில் கொஞ்சம்...மினக்கேடு.

    ReplyDelete
  96. கதைக்கிறன்.இல்ல.எனக்கு சாமியில
    நம்பிக்கையில்லையே தவிர வீபூதி பூசி அம்மா சொல்லித்தந்தபடி அப்பனே முருகா சொல்லுவன்.ஆனால் கோயிலுக்குப் போரேல்ல.விரதமு இருக்கிறேல்ல.இதுகளீல நம்பிக்கையில்லை !//
    ஆகா அதுதானே பார்த்தன் ஹேமாவா கொக்கா //மதம் மாறுவதும் தனிப்பட்ட சுதந்திரம் தான் 

    ReplyDelete
  97. மறப்பவர்கள்,தாயை மறந்தவர்கள்!!!!//
    வணக்கம் யோகா, அதுமட்டுமன்றி அவர்கள் தங்களது மதத்தைப்பற்றி போதிய விளக்கமும் இல்லாதவர்கள் //சரியாச் சொன்னீர்கள் அம்பலத்தார் போதிய விளக்கம் இருந்தால் மாறமாட்டினம்.

    ReplyDelete
  98. வணக்கம் போதி இன்றைக்குத்தான் உங்களை முதல் முதலாக காணுறன். அதுபோக எனக்கு ஒரு டவுட்டு போதிக்க வருவான் போதிவர்மா என்று எழுதியிருக்கிறியள். உங்கட போதனை என்னவென்று தெரிந்துகொள்ளலாமோ. //நானும் இன்றுதான் பார்க்கின்றேன் யோகா ஐயா!

    ReplyDelete
  99. தான் வலைப்பூ ஒன்று அந்தப் பெயரில் ஆரம்பித்திருக்கிறார்!பார்ப்போம் என்ன போதிக்கிறார் என்று! //அதுவும் சரிதான் யோகா ஐயா!

    ReplyDelete
  100. அது அவர் இப்போது தான் வலைப்பூ ஒன்று அந்தப் பெயரில் ஆரம்பித்திருக்கிறார்!பார்ப்போம் என்ன போதிக்கிறார் என்று!//
    அது அவர் உங்களுக்கு தெரிந்தவரோ யோகா அவரது வலைப்பூவின் link என்ன 
    //இதுவேறயா அம்பலத்தார்!!!!ஹீ யோகா ஐயா என்ன நடமாடும் கலைக்கூடமோ???

    ReplyDelete
  101. தனிமரம் said...//திணிக்கக் கூடாது என்றாலும் சில விடயங்களை ஊட்டுவது மிகமுக்கியம்.யோகா ஐயா.////கண்டிப்பாக,அதனையும் செய்தே வருகிறேன் முடிந்த வரை!

    ReplyDelete