13 May 2012

வேலியால எட்டிப்பார்த்தேன்!

இசை என்பது எனக்கு ரசிக்கமட்டும் கற்றுத்தரவில்லை .அமைதியாக பலவிடயங்களை அசைபோடும், உணர்வையும் .புத்துணர்ச்சியையும் ,தருவதோடு பல விடயங்களை ஞாபகம் ஊட்டும் செயலாகத்தான் நான் இசையை நேசிக்கின்றேன்.

எனக்கு பல பாடல்கள் திரும்பத்திரும்ப கேட்கும் ஆவல் உண்டு. அப்படி கேட்டு வரும் போது ஒலிநாடா அறுந்து போகும் வண்ணம் கேட்டு இருக்கின்றேன்.

 அவை மனதில் சலனம் இல்லாத காலங்கள்.

எத்தனை துயரத்திலும் என்னோடு இசை பயணிக்கின்றது

.மெல்லிசை என் விருப்பம் .அதிகம் ராஜா என்னை  வளர்த்து இருக்கின்றார் .

அவரின் இசை என் வீட்டிலும், அயலிலும் என எப்போதும் என் அருகாமையில் இருந்து வந்து கொண்டிருக்கின்றது

.யுத்த நிலையிலும் பற்றி தட்டுப்பாட்டுக் காலத்தில் சைக்கிள் டைனமோ சுற்றிப் பாடல் கேட்டவன்

.அதன் பின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த போது தாய் வானொலியில் விரும்பிய பாடக் கேட்கும் வன்னி சேவை வந்தது .

அதில் உமாச்சந்திரா சிவலோகநாதன் நல்ல பல பாடல்களை இசைக்கவிடுவார்.

இப்படி இசையானி பாடல்கள் அவரின் அறிவிப்பில் வரும் நேரங்கள் மந்த மாருதம்  வீசும் மனதிற்கு

 .இசையானியின் குரல் தனித்துவமானது.

 அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் கடந்து அவர் இசையை கேள்வி கேட்கமுடியாது .

அத்தனை தூரம் பல ஆயிரம் இசைக்கோர்வைகள் செய்த ராஜாவின் ராஜாங்கம்.

 கடந்து போன காலம் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு.

 இப்போதும் அவர் இசையைப் பல்வேறு பரிமாணங்களில் கொடுத்து வருகின்றார்

.அந்த வகையில் இந்தாண்டு வர இருக்கும்.

 மயிலு படத்தில் அவர் இசைத் தாலாட்டே  போட்டு இருக்கின்றார்.

 எல்லாப் பாடலும் எனக்குப் பிடித்து இருக்கு.

  அதிலும் இந்தப்பாடல்  ஜீவன் கவிதை யாத்தது !என் பின்னிரவைத் தாலாட்டும் நாதம் ஆகிவிட்டது தற்போது.

 பவதாரினியின் அந்த குழைந்து பாடும் அழகு மனதிற்கு மயக்கம் தருகின்றது..பவதாரினியின் குரலில் ,இருக்கும்  அந்த ஒரு கிராமிய உணர்வு வித்தியாசமான ஒன்று இவரின் அர்விந்தன்  முதல் படப்பாடலில் இருந்து வேலை அதன் பின்  தொடர்ந்து.

 அவரின் பல பாடலில் ஆரம்பத்தில்  இருந்து .இன்றுவரை அவரின் பல பாடல்கள் தனித்தும் இணைந்தும் பாடும்  தனித்துவமான குரல் எனக்கு பிடித்திருக்கு!

சமுக வலைத்தளங்களின்  வரவு நேரடியாக பார்க்க முடிகின்றது பாடல் பதிவுகளை!

அவரோடு பின் தொட்ரும் சிரிராம் பார்த்த்சார்தியின் குரலில் இருக்கும் கிறக்கம் !

ம்ம்ம் உணர்வோடு கேட்டாள் புரியும் கிராமிய்க்காதல்!




  என் பயம் எல்லாம் எப்படி இந்தப்படத்தில் இக்காட்சியை சொதப்பு வாரகள்  என்பதே! இப்போதே படத்தைக்கான ஆவலோடு இருக்கின்றேன் நீண்ட நாட்களின் பின் !

144 comments:

  1. மாலை வணக்கம்,நேசன்!ஏன் வேலியால எட்டிப் பாக்கிறியள்?இப்ப எனக்கு கோப்பி வேணாம்!இண்டைக்கு ஞாயிற்றுக் கிழமை,ஹ!ஹ!ஹா!!!!!!!

    ReplyDelete
  2. பாடலை சொதப்புவார்களோ,இல்லையோ பாட்டுக் கேட்க விடாமல் நெட் சொதப்புது,தம்பி!!!!!!

    ReplyDelete
  3. மாலை வணக்கம் யோகா ஐயா நலமா ஏன் பால்க்கோப்பிக்குப் பதிலா இன்று வெள்ளைப்பாணி வேண்டுமோ வெய்யிலுக்கு .ஹீஈ

    ReplyDelete
  4. பாடலை சொதப்புவார்களோ,இல்லையோ பாட்டுக் கேட்க விடாமல் நெட் சொதப்புது,தம்பி!!!!!!//ம்ம்ம் இங்கு மட்டும்மல்ல அரபுலகத்திலும் இதே பிரச்சனையாம் யோகா ஐயா நண்பன் விட்டு விட்டு வாரன் இணைப்பில்!ம்ம்ம்ம்

    ReplyDelete
  5. பாடல் அருமையாக இருக்கிறது!எண்பதுகளை நினைவில் கொண்டு வருகிறது.ஜானகியின் குரல் இனிமையைக் கொண்டு வர பவதாரிணி முயற்சிக்கிறா.நெருங்குவதாகவே தோன்றுகிறது!

    ReplyDelete
  6. தனிமரம் said...

    மாலை வணக்கம் யோகா ஐயா நலமா ஏன் பால்க்கோப்பிக்குப் பதிலா இன்று வெள்ளைப்பாணி வேண்டுமோ வெய்யிலுக்கு .ஹீ!!!////யோவ்,மகள் மாறி மருமகள் மாறி வார சந்தர்ப்பத்தை நீங்களே கொடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே?ஹி!ஹி!ஹி!!!!லெமன் ஜூஸ் தானய்யா கேட்டேன்,வெயில் எறிக்கிறது!!!

    ReplyDelete
  7. பாடல் அருமையாக இருக்கிறது!எண்பதுகளை நினைவில் கொண்டு வருகிறது.ஜானகியின் குரல் இனிமையைக் கொண்டு வர பவதாரிணி முயற்சிக்கிறா.நெருங்குவதாகவே தோன்றுகிறது!

    13 May 2012 10:40 //அது சாத்தியம் இல்லை ஜானகி அம்மாவின் சாதனைக் காலம் இப்போதய பாடகிக்ளுக்கு சாத்தியம் இல்லை. ஆனால் 80 காலத்திற்கு இழுத்துச் செல்லும் கவிதைச் சாயல் மீண்டும் வயல் பக்கம் போக ஆசையில் ஓஓஓ

    ReplyDelete
  8. யோவ்,மகள் மாறி மருமகள் மாறி வார சந்தர்ப்பத்தை நீங்களே கொடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே?ஹி!ஹி!ஹி!!!!லெமன் ஜூஸ் தானய்யா கேட்டேன்,வெயில் எறிக்கிறது!!!//நானும் இந்த சர்பத்தைச் சென்னேன் ஹீ

    ReplyDelete
  9. இப்படித்தான் பல காலம் ஒன்றாயிருந் மூவர் அணி பிரிந்து,பின்னர் ஒன்று கூடி அந்த ராசா எடுத்த படத்துக்கு,இந்த ராசா பாட்டுப் போட்டுக் கொடுத்தார்!பாடல்கள் எல்லாமே நன்றாகவே கிராமிய மணம் கமழ்ந்தன!அந்த ராசா படப்பிடிப்பில் சொதப்பி,வீட்டோடு உட்கார்ந்தார்!

    ReplyDelete
  10. தனிமரம் said...

    யோவ்,மகள் மாறி மருமகள் மாறி வார சந்தர்ப்பத்தை நீங்களே கொடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே?ஹி!ஹி!ஹி!!!!லெமன் ஜூஸ் தானய்யா கேட்டேன்,வெயில் எறிக்கிறது!!!//நானும் இந்த சர்பத்தைச் சென்னேன் ஹீ!!///இது செல்லாது,செல்லாது என்று இருவரும் ரிஜெக்ட் பண்ணி விடுவார்கள்!(வெற்றிலை வைத்து வேறு அழைத்திருக்கிறேன்,)ஹி!ஹி!ஹி!!!

    ReplyDelete
  11. இப்படித்தான் பல காலம் ஒன்றாயிருந் மூவர் அணி பிரிந்து,பின்னர் ஒன்று கூடி அந்த ராசா எடுத்த படத்துக்கு,இந்த ராசா பாட்டுப் போட்டுக் கொடுத்தார்!பாடல்கள் எல்லாமே நன்றாகவே கிராமிய மணம் கமழ்ந்தன!அந்த ராசா படப்பிடிப்பில் சொதப்பி,வீட்டோடு உட்கார்ந்தார்!

    13 May 2012 10:49 //ம்ம்ம் அவர்கள் காலம் கிராமிய மணம் இப்போது மாறிவிட்டது என்றாலும் அவர்களின் சாதனைதான். அப்போது. எப்போதும் கேடக முடியும் அந்தப்பாடல்களை இப்போது தேடிப்பொறுக்க வேண்டிக்கிடக்கு!ம்ம்ம்

    ReplyDelete
  12. இரவு வணக்கம் மாமா ,ரீ ரீ அண்ணா ,அக்கா ,ரே ரீ அண்ணா ,அம்பலத்தார் அங்கிள் ...


    மிஸ் ஆனவங்க வாரங்களா எண்டு பார்ப்பம்

    ReplyDelete
  13. இது செல்லாது,செல்லாது என்று இருவரும் ரிஜெக்ட் பண்ணி விடுவார்கள்!(வெற்றிலை வைத்து வேறு அழைத்திருக்கிறேன்,)ஹி!ஹி!ஹி!!!

    13 May 2012 10:52 //ஆஹா அப்ப கருக்கு மட்டை அடியிருக்கு நான் சிலோன் மனோகரைக்கூட்டியாரேன் அந்தப்பக்கம் போகாதீங்கோ என்று.ஏன்னா இங்கே வெள்ளைப்பாணிக்கு புகழ் இருக்கு பாரிசில்!ஹீஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  14. வாங்க கலை நலமா இரவு வணக்கம் .

    ReplyDelete
  15. அண்ணா மயிலுப் படம் புதுசா ...எந்நாளும் பாட்டுக் கேக்க முடியாது ...காலையில் தான் கேட்பிணன் ...நெட் இப்போ மக்கர் பண்ணுது ..


    மாமாஆஆஆஆஆஆஆஆஆ ஏன்னா பால்க் காப்பி வானம் ஜூசுஊஊஊஊஊஊஊஉ வனும் எண்டு ஸ்பெஷல் அதுவும் எங்களை மறைச்சி....சரி இல்லையேஏஏஏஏஏஏஎ இது

    ReplyDelete
  16. ஓமாம் அண்ணா சரியாச் சொன்னிங்கள் ..இண்டைக்கு கருக்கு மட்டை அடி நிச்சயம் ...


    மகளுக்கு மட்டும் தான் எண்டு நினைத்தேன் இப்போ அவங்க அப்பாக்கும் கருக்கு மட்டை அடி இருக்கு ....

    ReplyDelete
  17. கலை said...

    இரவு வணக்கம் மாமா ,ரீ ரீ அண்ணா ,அக்கா ,ரே ரீ அண்ணா ,அம்பலத்தார் அங்கிள் ...////இரவு வணக்கம்,மருமகளே!!!


    மிஸ் ஆனவங்க வராங்களா எண்டு பார்ப்பம்!///நீங்கள் இரண்டு பேர் தானே,இங்கே "மிஸ்"????ஒன்று நீங்கள்,அடுத்தது அம்முக்குட்டி!

    ReplyDelete
  18. அண்ணா மயிலுப் படம் புதுசா ...எந்நாளும் பாட்டுக் கேக்க முடியாது ...காலையில் தான் கேட்பிணன் ...நெட் இப்போ மக்கர் பண்ணுது ..//mmmஎல்லா இடத்திலையும் இன்று மக்கர்தான் கலை.

    ReplyDelete
  19. நான் நல்ல சுகம் அண்ணா ...நீங்கள் சுகமா ...மாமா நல்ல சுகமா ...

    ReplyDelete
  20. மகளுக்கு மட்டும் தான் எண்டு நினைத்தேன் இப்போ அவங்க அப்பாக்கும் கருக்கு மட்டை அடி இருக்கு ..// ஹா ஹா அடிக்கும் போது நான் வேலியால் ஓடிவிடுவேன் கலா பாட்டியம்மா வீட்டை!ஹீ..

    ReplyDelete
  21. கலை said...

    ஓமாம் அண்ணா சரியாச் சொன்னிங்கள் ..இண்டைக்கு கருக்கு மட்டை அடி நிச்சயம் ...
    மகளுக்கு மட்டும் தான் எண்டு நினைத்தேன் இப்போ அவங்க அப்பாக்கும் கருக்கு மட்டை அடி இருக்கு!////ஓஹோ!அப்போ எனக்குமா?காலையில் சொன்னது?????,ஹி!ஹி!ஹி!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  22. நீங்கள் இரண்டு பேர் தானே,இங்கே "மிஸ்"????ஒன்று நீங்கள்,அடுத்தது அம்முக்குட்டி!///

    ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மாமா மாமா மமாஆஆஆஆஆஆஅ ...


    ஹையோஒ நான் சொன்னது அம்பலத்தார் அங்கிள் யும் ,ரே ரீ அண்ணாவையும்

    ReplyDelete
  23. நான் நல்ல சுகம் அண்ணா ...நீங்கள் சுகமா ...மாமா நல்ல சுகமா ...// நல்ல சுகம் கலை மாலையில் இன்று ஓய்வு கிடைத்து இருக்கு நீண்ட நாளுக்குப் பின்! .

    ReplyDelete
  24. கலை said...

    நான் நல்ல சுகம் அண்ணா ...நீங்கள் சுகமா ...மாமா நல்ல சுகமா ?///நான் நல்ல சுகம்,மருமகளே!காலை,மதியம்,மாலை எல்லாம் சொன்னேனே?இங்கே இன்று வெயில் பரவாயில்லை,அது தான் லெமன் ஜூஸ்!!!!!!உங்களுக்குக் கோப்பி வேண்டுமென்றால் அண்ணா தருவார்!

    ReplyDelete
  25. ஹையோஒ நான் சொன்னது அம்பலத்தார் அங்கிள் யும் ,ரே ரீ அண்ணாவையும்// ரெவெரி வருவார் இன்னும் சில நாட்களில் அம்பலத்தார் கொஞ்சம் பிசி வேலையால் வருவார் மீண்டும்.

    ReplyDelete
  26. கலை said...

    நீங்கள் இரண்டு பேர் தானே,இங்கே "மிஸ்"????ஒன்று நீங்கள்,அடுத்தது அம்முக்குட்டி!///

    ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மாமா மாமா மமாஆஆஆஆஆஆஅ ...


    ஹையோஒ நான் சொன்னது அம்பலத்தார் அங்கிள் யும் ,ரே ரீ அண்ணாவையும்!///ஓஹோ!"ஒ" வேறு போடச் சொல்கிறீர்களோ????

    ReplyDelete
  27. நான் நல்ல சுகம் அண்ணா ...நீங்கள் சுகமா ...மாமா நல்ல சுகமா ?///நான் நல்ல சுகம்,மருமகளே!காலை,மதியம்,மாலை எல்லாம் சொன்னேனே?இங்கே இன்று வெயில் பரவாயில்லை,அது தான் லெமன் ஜூஸ்!!!!!!உங்களுக்குக் கோப்பி வேண்டுமென்றால் அண்ணா தருவார்!

    13 May 2012 11:06//பால்க்கோப்பி யோகா ஐயாவுக்குத்தான் அவர்தானே முதலில் வந்தார் கலை!

    ReplyDelete
  28. ஹா ஹா அடிக்கும் போது நான் வேலியால் ஓடிவிடுவேன் கலா பாட்டியம்மா வீட்டை!ஹீ..////


    அண்ணா உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா ..கலா அண்ணி சந்தியில நிக்குரவரை கல்யாணம் பண்ணிக்கணும் நு ஆசையா இருக்குன்னு என்கிட்டே சொன்னாங்களா ...எனக்குப் புரியலை யா ...அப்போ நினைத்தேன் அவங்க .....மா வை தான் கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்க வரச் சொன்னாங்க எண்டு தப்பா புரிஞ்சிட்டேன் ....அவ்வ்வ்வ் ...

    மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ .....ஆனால் என்ர அண்ணனாம் ....எந்த அண்ணனை பற்றி சொல்லுறாங்க எண்டு தான் தெரியல ....

    ReplyDelete
  29. மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ .....ஆனால் என்ர அண்ணனாம் ....எந்த அண்ணனை பற்றி சொல்லுறாங்க எண்டு தான் தெரியல ....

    13 May 2012 11:10 //ஐயோ நான் வரல இந்த விளையாட்டுக்கு அந்தப்பாட்டி கறுப்புப் பட்டி வாங்கின வீராங்கணை!

    ReplyDelete
  30. பால்க்கோப்பி யோகா ஐயாவுக்குத்தான் அவர்தானே முதலில் வந்தார் கலை!///


    பால்க் காப்பி கொடுங்கோ அண்ணா ..ஆனால் மாமா வேறு ஏதோ ஜூஸ் என்டுலாம் கேட்டுக் கொண்டு இருக்காங்களே என்ன விடயம் ....ஏதும் ப்லான்னிங் பன்னுரின்களோ

    ReplyDelete
  31. அவவுக்கு(கலா)வேற வேலை இல்லைப் போல?பாட்டிம்மா(கலா)முதியோர் கல்வி நிலையம் நடத்தப் போறாவாம்!நான் சொன்னேன் கலையை அதிரா சிஷ்யையா வச்சிருக்கிற மாதிரி என்னைப் பேய்க்காட்டேலாது என்று,ஹ!ஹ!ஹா!!!!!!!!!!

    ReplyDelete
  32. ஐயோ நான் வரல இந்த விளையாட்டுக்கு அந்தப்பாட்டி கறுப்புப் பட்டி வாங்கின வீராங்கணை!//////


    ஹ ஹ ஹாஆஆஆஅ ...ஆசை தான் ஆஆஆஆஆஅ அண்ணனுக்கு ...

    ReplyDelete
  33. தனிமரம் said...
    ஐயோ நான் வரல இந்த விளையாட்டுக்கு அந்தப்பாட்டி கறுப்புப் பட்டி வாங்கின வீராங்கணை!///என்ன கறுப்புப் பட்டி,வெள்ளைப் பட்டி ?நானும் தான்,பிறவுண் கலர் பட்டி,கறுப்புக் கலர்ப் பட்டி எல்லாம் வச்சிருக்கிறன்!(கட்டுறனான்,ஹி!ஹி!ஹி!)

    ReplyDelete
  34. பால்க் காப்பி கொடுங்கோ அண்ணா ..ஆனால் மாமா வேறு ஏதோ ஜூஸ் என்டுலாம் கேட்டுக் கொண்டு இருக்காங்களே என்ன விடயம் ....ஏதும் ப்லான்னிங் பன்னுரின்களோ

    13 May 2012 11:13 //சீச்சீ நீண்ட்நாளின் பின் இன்று நல்ல வெயில் அதுதான் கொஞ்சம் பகிடி இங்கே வெய்யில் வந்தால் வீதிக்கு இறங்கி விடுவார்கள் ஏதாவது குடிவகையோடு அது அவர் அவர் விருப்பம் பல தண்ணீர் வகை இங்கு இருககு கலை!

    ReplyDelete
  35. கலை said...

    ஐயோ நான் வரல இந்த விளையாட்டுக்கு அந்தப்பாட்டி கறுப்புப் பட்டி வாங்கின வீராங்கணை!//////


    ஹ ஹ ஹாஆஆஆஅ ...ஆசை தான் ஆஆஆஆஆஅ அண்ணனுக்கு ...///உஷ்!!!!தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க!

    ReplyDelete
  36. நானும் தான்,பிறவுண் கலர் பட்டி,கறுப்புக் கலர்ப் பட்டி எல்லாம் வச்சிருக்கிறன்!(கட்டுறனான்,ஹி!ஹி!ஹி!)

    13 May 2012 11:18 //ஆஹா ஆனாலும் தவில் வித்துவாங்கள் கட்டும் இடுப்புப்பட்டிதான் எனக்கு பிடிக்கும் ஆனால் என் சைசுக்கு அது சரிவராது! ஹீ

    ReplyDelete
  37. அவவுக்கு(கலா)வேற வேலை இல்லைப் போல?பாட்டிம்மா(கலா)முதியோர் கல்வி நிலையம் நடத்தப் போறாவாம்!நான் சொன்னேன் கலையை அதிரா சிஷ்யையா வச்சிருக்கிற மாதிரி என்னைப் பேய்க்காட்டேலாது ///


    இது என்ன சந்தடி சாக்குல என் குருவை பற்றி அப்புடி சொல்லுரிங்கள் ...

    என்ட குருவின் திறமை என்ன ...வடிவு என்ன ...குருவிடம் சிஷ்யை ஆகா கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லோ மாமா ...

    கலா அண்ணி வந்து இதைப் படிச்சாங்க எல்லாருக்கும் கருக்கு மட்டை அடி நிச்சயம்

    ReplyDelete
  38. வந்திட்டேன்...எனக்கும் லெமன் ஜூஸ்தான் வேணும்.தாங்கோ நேசன்.

    அப்பா.கருவாச்சி இருக்கிறீங்களோ !

    பவதாரினியின் குரலில் பாட்டுக்கேட்டுக்கொண்டே எழுதுறன் நேசன்.அற்புதமா இருக்கு பாடல் !

    ReplyDelete
  39. சீச்சீ நீண்ட்நாளின் பின் இன்று நல்ல வெயில் அதுதான் கொஞ்சம் பகிடி இங்கே வெய்யில் வந்தால் வீதிக்கு இறங்கி விடுவார்கள் ஏதாவது குடிவகையோடு அது அவர் அவர் விருப்பம் பல தண்ணீர் வகை இங்கு இருககு கலை!///

    இஞ்ச எல்லாம் மழை வந்தால் தான் ஜாலி அண்ணா ...செம வெயில் அடிக்குது டைலியும்..அதுவும் எங்க கலிங்க நாட்டில் ஓவர் வெயில் ....வெயில் ....இரவு கூட வேர்க்குது ...தாங்க முடியல ...

    ReplyDelete
  40. கலா அண்ணி வந்து இதைப் படிச்சாங்க எல்லாருக்கும் கருக்கு மட்டை அடி நிச்சயம்

    13 May 2012 11:21 //ம்ம்ம் எனக்கு நிச்சயம் விழும் கலை ஆனாலும் சிங்கை போகும் போது லிட்டில் இந்தியாவில் போய் ஏதாவது வாங்கிக்கொடுத்து காலில் விழுந்து விட்டாள் குரு ஏற்றுக்கொள்வா !ஹீஈஈ

    ReplyDelete
  41. ஹேமா அக்கா உங்களுக்கு நூறு வயது ...உங்களை தான் கேட்க வந்திணன் மாமா கிட்ட ...நீங்களே வந்துடீங்க ...நல்ல சுகமா அக்கா

    ReplyDelete
  42. கலை said...

    இது என்ன சந்தடி சாக்குல என் குருவை பற்றி அப்புடி சொல்லுரிங்கள் ...

    என்ட குருவின் திறமை என்ன ...வடிவு என்ன ...குருவிடம் சிஷ்யை ஆகா கொடுத்து வைத்திருக்க வேண்டுமல்லோ மாமா .///திறமை:ஒத்துக்கிறேன்!வடிவு;அது அவங்க வூட்டுக்காரருக்கு வேணுமின்னா கா.................தன் குஞ்சு பொன் குஞ்சா இருக்கலாம்!ஆனா,கொலைகாரி(இன்னிக்கு நாட்டுக் கோழி அடிச்சு கொழம்பு வச்சாவாம்)ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  43. வந்திட்டேன்...எனக்கும் லெமன் ஜூஸ்தான் வேணும்.தாங்கோ நேசன்.//வாங்க் ஹேமா வெய்யிலுக்கு மோந்த இலையூஸ் அதுதாங்க புதினா யூஸ!இருக்கு .

    ReplyDelete
  44. ஹும்ம் கலா அன்னிக்கு பரிசு கொடுக்கப் போரின்களோ ..கொடுங்கள் ..கொடுங்கள்

    ReplyDelete
  45. மயிலு...அதுவும் பிரகாஷ்ராஜ் படமா.நல்லாயிருக்கும்.அவரது மொழி,டோனி படங்கள் நல்லாவே வந்த்திருக்கு...அதனால எதிர்பார்ப்பு அதிகம்தான் !

    ReplyDelete
  46. வாங்க மகளே,இரவு வணக்கம்!நாம் சுகம்,நீங்கள் சுகமா???? ///கலை said...

    ஹேமா அக்கா உங்களுக்கு நூறு வயது ...உங்களை தான் கேட்க வந்திணன் மாமா கிட்ட ...நீங்களே வந்துடீங்க ...நல்ல சுகமா அக்கா!///சமாளிபிகேஷனப் பாருங்க!!!!

    ReplyDelete
  47. நேசன்.அற்புதமா இருக்கு பாடல் !//மிகவும் ரசிக்கும் பாடல் கவிதை வரி மீண்டும் வேலியில் போய் மச்சாளை வம்பு இழுக்கத்தோன்றுது!ஹீ இன்னும் கொஞ்ச நாள்தான் வருவா கருக்கு மட்டை அடிபோட ஹீஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  48. ஹும்ம் கலா அன்னிக்கு பரிசு கொடுக்கப் போரின்களோ ..கொடுங்கள் ..கொடுங்கள்//ஆபத்துக்கு சமைச்சுப் போடுவா தானே அண்ணி கலை.

    ReplyDelete
  49. இஞ்ச எல்லாம் மழை வந்தால் தான் ஜாலி அண்ணா ...செம வெயில் அடிக்குது டைலியும்..அதுவும் எங்க கலிங்க நாட்டில் ஓவர் வெயில் ....வெயில் ....இரவு கூட வேர்க்குது ...தாங்க முடியல .///ஒங்களுக்குத்தான் கரண்ட் கட் இல்லியே?ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  50. ஆனா,கொலைகாரி(இன்னிக்கு நாட்டுக் கோழி அடிச்சு கொழம்பு வச்சாவாம்)ஹ!ஹ!ஹா!!!!//


    ஐயோ மாமா குருவை பார்த்து அப்புடிலாம் சொல்லப் பிடாது ,,,கன்னத்துல போட்டுக் கோங்கோ... மாமா குரு கோழிக்கு மோட்ச வழி காண்பித்து முக்தி அளித்து இருக்கங்கள் மாமா

    ReplyDelete
  51. டோனி / பார்க்க்வில்லை மயிலு என் மயிலு கூட பார்க்க ஆசையில் இருக்கின்றேன் இங்கே. ஒவ்வொரு முறையும் சென்னையில் பார்க்கும் நிலை மாறிவிட்டது ஹேமா!

    ReplyDelete
  52. ஹேமா said...

    மயிலு...அதுவும் பிரகாஷ்ராஜ் படமா.நல்லாயிருக்கும்.அவரது மொழி,டோனி படங்கள் நல்லாவே வந்த்திருக்கு...அதனால எதிர்பார்ப்பு அதிகம்தான் !///இத்தப் பார்றா!அம்முக்குட்டிக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கு?

    ReplyDelete
  53. ஹாய்....குட்டீஸ் எல்லாரும் சுகம்தானே.என்னை விட்டிட்டு கும்மியோ.அதுவும் அரைக்க இண்டைக்குக் கலா கிடைச்சிருக்கிறா.இருங்கோ இருங்கோ கலாவுக்கு ஒரு மெயில் போட்டுவிட்டிட்டு வாறன்.இனிக் கருக்குமட்டை சிங்கப்பூரில இருந்துதான் இறக்குமதியாகும்.....நான் இல்லை சொல்லிப்போட்டன் !

    ReplyDelete
  54. ஐயோ மாமா குருவை பார்த்து அப்புடிலாம் சொல்லப் பிடாது ,,,கன்னத்துல போட்டுக் கோங்கோ... மாமா குரு கோழிக்கு மோட்ச வழி காண்பித்து முக்தி அளித்து இருக்கங்கள் மாமா

    13 May 2012 11:34 //ம்ம்ம் ஹேமா நேற்று மீனுக்கு கொடுத்தது இன்று ஹீ

    ReplyDelete
  55. மயிலு...அதுவும் பிரகாஷ்ராஜ் படமா.நல்லாயிருக்கும்.அவரது மொழி,டோனி படங்கள் நல்லாவே வந்த்திருக்கு...அதனால எதிர்பார்ப்பு அதிகம்தான் !///இத்தப் பார்றா!அம்முக்குட்டிக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கு?//ம்ம்ம் கவிதாயினி சும்மாவா சந்தியில் எத்தனை தகவல் கிடைக்கும் ஹீஈ

    ReplyDelete
  56. கலை said...

    ஆனா,கொலைகாரி(இன்னிக்கு நாட்டுக் கோழி அடிச்சு கொழம்பு வச்சாவாம்)ஹ!ஹ!ஹா!!!!//


    ஐயோ மாமா குருவை பார்த்து அப்புடிலாம் சொல்லப் பிடாது ,,,கன்னத்துல போட்டுக் கோங்கோ... மாமா குரு கோழிக்கு மோட்ச வழி காண்பித்து முக்தி அளித்து இருக்கங்கள் மாமா.///கோழி கேட்டுச்சா?இல்ல கேட்டுச்சாங்கிறேன்?முக்தி அளிக்கிறாவாமில்ல,முக்தி???????

    ReplyDelete
  57. எனக்கு நூறு வயசோ....தயவு செது கொஞ்சம் குறைச்சுவிடுங்கோ.இப்பவே போதும்போல இருக்கு.

    அப்பா....விமர்சனங்கள் பார்த்து படங்களையும் ரசிப்பேன்.அதுவும் பிறமொழிப்படங்கள் தேடித் தேடிப் பார்க்கிறன்னான்.நேரம்தான் சிக்கல்.படம் பாட்டுக்கள் ரசனையுள்ளவள் உங்கள் மூத்தவள்.பின்ன உங்கட மருமகள் எண்டே என்னை நினைச்சீங்கள் !

    ReplyDelete
  58. ஹாய்....குட்டீஸ் எல்லாரும் சுகம்தானே.என்னை விட்டிட்டு கும்மியோ.அதுவும் அரைக்க இண்டைக்குக் கலா கிடைச்சிருக்கிறா.இருங்கோ இருங்கோ கலாவுக்கு ஒரு மெயில் போட்டுவிட்டிட்டு வாறன்.இனிக் கருக்குமட்டை சிங்கப்பூரில இருந்துதான் இறக்குமதியாகும்.....நான் இல்லை சொல்லிப்போட்டன் !

    13 May 2012 11:36 // ஆரம்பத்தில் பாட்டியை தெரியாமல் போய் விட்டது இல்லை செந்தோஸவில் பாட்டியுடன் நல்ல சாப்பாடு. சாப்பிட்டு இருக்கலாம் அதனால் என்ன என் மச்சான்கள் அங்கதான் இருக்கிறாங்க போகும் போது பார்ப்போம் நேரில்!

    ReplyDelete
  59. தனிமரம் said...

    ஐயோ மாமா குருவை பார்த்து அப்புடிலாம் சொல்லப் பிடாது ,,,கன்னத்துல போட்டுக் கோங்கோ... மாமா குரு கோழிக்கு மோட்ச வழி காண்பித்து முக்தி அளித்து இருக்கங்கள் மாமா

    //ம்ம்ம் ஹேமா நேற்று மீனுக்கு கொடுத்தது இன்று ஹீ!///சார் அப்புடி சொல்லாதீங்க சார்!மீன் ஏலவே செத்துப் போனது!இது கொல,சார் கொல!!!!

    ReplyDelete
  60. மாமா குரு கோழிக்கு மோட்ச வழி காண்பித்து முக்தி அளித்து இருக்கங்கள் மாமா.///கோழி கேட்டுச்சா?இல்ல கேட்டுச்சாங்கிறேன்?முக்தி அளிக்கிறாவாமில்ல,முக்தி???????

    13 May 2012 11:38 //ஆஹா கோழி கேட்காவிட்டாலும் வாய்க்கு ருசியா நானும் கேட்டேன் .

    ReplyDelete
  61. அப்பா....விமர்சனங்கள் பார்த்து படங்களையும் ரசிப்பேன்.அதுவும் பிறமொழிப்படங்கள் தேடித் தேடிப் பார்க்கிறன்னான்.நேரம்தான் சிக்கல்.படம் பாட்டுக்கள் ரசனையுள்ளவள் உங்கள் மூத்தவள்.பின்ன உங்கட மருமகள் எண்டே என்னை நினைச்சீங்கள் !///


    ஹேமா அக்கா செல்லமே மொழி பாட்டு கலைஞர் டிவியில் போட்டுக் கோடி இருக்கங்கள் ..பாருங்கோ சுப்பேரா இருக்கு

    ReplyDelete
  62. ஹேமா said...

    ஹாய்....குட்டீஸ் எல்லாரும் சுகம்தானே.என்னை விட்டிட்டு கும்மியோ.அதுவும் அரைக்க இண்டைக்குக் கலா கிடைச்சிருக்கிறா.இருங்கோ இருங்கோ கலாவுக்கு ஒரு மெயில் போட்டுவிட்டிட்டு வாறன்.இனிக் கருக்குமட்டை சிங்கப்பூரில இருந்துதான் இறக்குமதியாகும்.....நான் இல்லை சொல்லிப்போட்டன் !///யோவ்!யாரய்யா அது கலாவையே "கலா"ய்ச்சது?அவங்க(பாட்டிம்மா)பிளாக் பெல்ட்டாக்கும்,சொல்லிட்டேன்!(எஸ்கேப்!)

    ReplyDelete
  63. மீனுக்கு முக்தியோ....அது செத்து எத்தினை மாதமோ....என்ர ஃப்ரிஜ்குள்ள 1 மாசம் கிடந்துது.அப்ப இதுக்கு என்ன பெயரோ !

    ReplyDelete
  64. அப்பா....விமர்சனங்கள் பார்த்து படங்களையும் ரசிப்பேன்.அதுவும் பிறமொழிப்படங்கள் தேடித் தேடிப் பார்க்கிறன்னான்.நேரம்தான் சிக்கல்.படம் பாட்டுக்கள் ரசனையுள்ளவள் உங்கள் மூத்தவள்.பின்ன உங்கட மருமகள் எண்டே என்னை நினைச்சீங்கள் !

    13 May 2012 11:40 //ம்ம் கலையின் ரசனை வேறு ஹேமா நாங்கள் கொஞ்சம் மூப்பு அதுதான் அவள் செல்ல இளவரசி பிறகு தேடித்தேடிப்படிப்பா! பாரூங்கோ!

    ReplyDelete
  65. //ஹேமா அக்கா செல்லமே மொழி பாட்டு கலைஞர் டிவியில் போட்டுக் கோடி இருக்கங்கள் ..பாருங்கோ சுப்பேரா இருக்கு//

    அப்பா....எனக்கு வேற ஒண்டும் வேண்டாம்.இந்தத் தத்தைத் தமிழை ஒருக்கா மொழி பெயர்த்துச் சொல்லுங்கோ !

    ReplyDelete
  66. ம்ம்ம் ஹேமா நேற்று மீனுக்கு கொடுத்தது இன்று ஹீ!///சார் அப்புடி சொல்லாதீங்க சார்!மீன் ஏலவே செத்துப் போனது!இது கொல,சார் கொல!!!!//

    மாமா இன்னைக்கு நல்ல சிரிப்புதான் உங்களோடு ...
    மாமா இண்டைக்கு நான் மீனுக்கு கொடுத்து இருக்கின்...ஜுப்பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீனு செம டேஸ்த்தூஊஊஊஊஊஊஊஊஊ ...இப்போக் கூட நடுவில் எஸ்கேப் ஆகி ரெண்டு மீனு சாப்பிட்டு வந்தேன் ...

    ReplyDelete
  67. ஹேமா said...

    எனக்கு நூறு வயசோ....தயவு செது கொஞ்சம் குறைச்சுவிடுங்கோ.இப்பவே போதும்போல இருக்கு.

    அப்பா....விமர்சனங்கள் பார்த்து படங்களையும் ரசிப்பேன்.அதுவும் பிறமொழிப்படங்கள் தேடித் தேடிப் பார்க்கிறன்னான்.நேரம்தான் சிக்கல்.படம் பாட்டுக்கள் ரசனையுள்ளவள் உங்கள் மூத்தவள்.பின்ன உங்கட மருமகள் எண்டே என்னை நினைச்சீங்கள்?////அதானே?மகள் மகள் தான்,மருமகள் மருமகள் தான்!(உனக்கு வேணும்,ஹி!ஹி!ஹி!!!)

    ReplyDelete
  68. //விழுங்கிய மீன்
    தொண்டையில் குத்துகையில்
    சத்தியம் செய்துகொள்கிறேன்
    கொலைகளை
    இனி மன்னிப்பதில்லையென்று !//

    இது விச்சுவின் பக்கத்தில மாத்தி எழுதின கவிதை.பால்கோவா பரிசாகக் கிடைச்சது !

    ReplyDelete
  69. நான் இல்லை சொல்லிப்போட்டன் !///யோவ்!யாரய்யா அது கலாவையே "கலா"ய்ச்சது?அவங்க(பாட்டிம்மா)பிளாக் பெல்ட்டாக்கும்,சொல்லிட்டேன்!(எஸ்கேப்!)///

    நானும் சொல்லுறேன் ...
    ஆரு என்ர அண்ணியை கலாயிக்கிறது ...பிச்சிபுடுவேன் பிச்சி ...

    ReplyDelete
  70. ஹேமா said...

    //ஹேமா அக்கா செல்லமே மொழி பாட்டு கலைஞர் டிவியில் போட்டுக் கோடி இருக்கங்கள் ..பாருங்கோ சுப்பேரா இருக்கு/////அதாவது வந்து,"மொழி" படப் பாடல் கலைஞர் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிறதாம்!உங்களைப் பார்க்கச் சொல்கிறா!!!!!அம்புட்டுத்தேன்!!!!!!

    ReplyDelete
  71. ம்ம் கலையின் ரசனை வேறு ஹேமா நாங்கள் கொஞ்சம் மூப்பு அதுதான் அவள் செல்ல இளவரசி பிறகு தேடித்தேடிப்படிப்பா! பாரூங்கோ!///


    அயயூ அண்ணா எனக்கும் ராஜா சார் பாட்டு ரொம்ப பிடிக்கும் ...அப்புறம் அந்த வாத்துப் பாட்டு அதும் ரொம்ப பிடிச்சிப் போச்சி ....டௌன்லோட பண்ணி வைத்து இருக்கேன் ...

    ReplyDelete
  72. ம்ம்ம் ஹேமா நேற்று மீனுக்கு கொடுத்தது இன்று ஹீ!///சார் அப்புடி சொல்லாதீங்க சார்!மீன் ஏலவே செத்துப் போனது!இது கொல,சார் கொல!!!!

    13 May 2012 11:41//ஐயோ யோகா ஐயா இங்கும் சிங்கப்பூரிலும் அதிகம் வாரது கொலைசெய்யப்பட்ட இறைச்சியும் மீனும் தானே! அது என்ன யோகா ஐயா புதுசாக சார் நான் எப்போதும் மகன் தான் இந்த சார் எப்போதும் தூரத்தில்தான் நண்பர்கள் .இல்லை மச்சான் என்பேன் பெரியவர்கள் ஐயா தான் அது வியாபார மரியாதை! கொடுப்பது ஒரு புறம் என்றாலும் என் ஐயா பழக்கிய பழக்கம் மரியாதை அன்பு .நான் அதிகம் சகோதர இனத்தவர்கூட பழகினாலும் இந்த சார் வட்டத்துக்குள் சிக்கியது இல்லை! நீங்க எப்போதும் யோகா ஐயா எனக்கு!

    ReplyDelete
  73. கலை said...

    ம்ம்ம் ஹேமா நேற்று மீனுக்கு கொடுத்தது இன்று ஹீ!///சார் அப்புடி சொல்லாதீங்க சார்!மீன் ஏலவே செத்துப் போனது!இது கொல,சார் கொல!!!!//

    மாமா இன்னைக்கு நல்ல சிரிப்புதான் உங்களோடு ...
    மாமா இண்டைக்கு நான் மீனுக்கு கொடுத்து இருக்கின்...ஜுப்பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீனு செம டேஸ்த்தூஊஊஊஊஊஊஊஊஊ ...இப்போக் கூட நடுவில் எஸ்கேப் ஆகி ரெண்டு மீனு சாப்பிட்டு வந்தேன் ..///ஒங்க வீட்டிலையும் மீனா?(அந்த மீனா இல்ல,நேசன்!)

    ReplyDelete
  74. அதாவது வந்து,"மொழி" படப் பாடல் கலைஞர் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகிறதாம்!உங்களைப் பார்க்கச் சொல்கிறா!!!!!அம்புட்டுத்தேன்!!!!///



    அதே அதே அதே தான் மாமா ...கரீகட்டா சொல்லிப் போட்டீன்கள் ..கைக் கொடுங்கள் மாமா ...ஹேமா அக்காக்கு இன்னும் கொஞ்சம் ரைனிங் தேவைப் படுது ...

    ReplyDelete
  75. இது விச்சுவின் பக்கத்தில மாத்தி எழுதின கவிதை.பால்கோவா பரிசாகக் கிடைச்சது !// ஆஹா நல்லாத்தான் இருக்கு கவிதை பால்க்கோவா கூட வாங்கனும் சிதமபரத்தில் சூப்பர் சுவை. ஹேமா!

    ReplyDelete
  76. அப்பா....இந்தக் காக்கன்ர அட்டகாசம் இப்ப எல்லா இடங்களிலயும் பரவிப்போகுது.

    விச்சு பழைய கலைகள்,பாரம்பரியம் தொலையுது எண்டு சொல்லியிருக்க இவ என்ன கேட்டிருக்கிறா
    பாருங்கோ !


    //அவ்வவ் ...என்ன சொல்லுரிங்க உங்க கிராமத்தில் காணாம போயிடுச்சா ....இவ்வளவு பொறுப்பிலாமல் இருந்த உங்க கிராம மக்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் ...//

    ReplyDelete
  77. கலை said...

    அயயூ அண்ணா எனக்கும் ராஜா சார் பாட்டு ரொம்ப பிடிக்கும் ...அப்புறம் அந்த வாத்துப் பாட்டு அதும் ரொம்ப பிடிச்சிப் போச்சி ....டௌன்லோட பண்ணி வைத்து இருக்கேன்///அதுல என்ன சந்தேகம்?(வாத்துப் பாட்டு புடிக்குறதுல?)இல்ல சின்ன்ன்னன்ன்ன வயசுல மேச்சீங்க இல்ல,அதான்,ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  78. ஐயோ யோகா ஐயா என் ஐயா பழக்கிய பழக்கம் மரியாதை அன்பு .நான் அதிகம் சகோதர இனத்தவர்கூட பழகினாலும் இந்த சார் வட்டத்துக்குள் சிக்கியது இல்லை! நீங்க எப்போதும் யோகா ஐயா எனக்கு!///


    ஹ ஹ ஹா மாமா ஏனுங்க மாமா ஏன் ஏன் அப்புடி அன்னவை சொல்லுரிங்கள் ...அண்ணா அழுராங்கள் பாருங்க மாமா

    அண்ணா அழதிங்கோ மாமா இப்போலாம் குருவைக் கூட மேடம் என்று தான் சில நேரம் சொல்லுறாங்கள் .....

    ReplyDelete
  79. அயயூ அண்ணா எனக்கும் ராஜா சார் பாட்டு ரொம்ப பிடிக்கும் ...அப்புறம் அந்த வாத்துப் பாட்டு அதும் ரொம்ப பிடிச்சிப் போச்சி ....டௌன்லோட பண்ணி வைத்து இருக்கேன் ...//ஆஹா நீங்க நான் போடும் பாட்டை டவுன்லோட் பண்ணுகின்றீங்க கலை ஆனால் பாட்டுப் போட்டு உயிரைவாங்குறான் என்று ஒருவர் முகநூலில் மூக்கில் குத்திவிட்டு ஓடிவிட்டார்!ஹீ

    ReplyDelete
  80. அவ்வவ் ...என்ன சொல்லுரிங்க உங்க கிராமத்தில் காணாம போயிடுச்சா ....இவ்வளவு பொறுப்பிலாமல் இருந்த உங்க கிராம மக்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் ...//சரிதானே மக்கள் தானே விழிப்பாக இருக்கனும் எல்லாம் மந்தைகளாக இருந்தால் அப்படித்தான். கலை சொல்லுவது சரி ஹேமா

    ReplyDelete
  81. நேசன்,நீங்கள் என்மேல்,பொதுவாகவே வயதில் மூத்தவர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதை எனக்குத் தெரியாததல்ல!சும்மாங்கலகலப்பாக உரையாடல் போகட்டுமேஎன்று அப்பப்போ பிட்டு போடுவது தான்!எங்கள் ஊரின் ஸ்பெஷலே நகைச்சுவைதான்!நான் கூட சில நகைச்சுவை நாடகங்களில் தோன்றியிருக்கிறேன்!மறு நாள் தெருவில் நடமாடவே முடியாது.

    ReplyDelete
  82. அப்பா....இந்தக் காக்கன்ர அட்டகாசம் இப்ப எல்லா இடங்களிலயும் பரவிப்போகுது.

    விச்சு பழைய கலைகள்,பாரம்பரியம் தொலையுது எண்டு சொல்லியிருக்க இவ என்ன கேட்டிருக்கிறா
    பாருங்கோ !
    ///


    அக்கா விச்சு அண்ணா ஆறேன்னேத் தெரியாது என் ப்லோக்கில் கமென்ட் போடுவாங்கள் ...இன்றைக்கு தான் போனிணன் அங்க ...பார்த்த காணமா போயிடுச்சி அப்புடின்னு ஒருப் பதிவு ...எனக்கு என்ன சொல்லுரதுன்னேத் தெரியல ...போலீஸ் ஸ்டேஷன் ல லாம் கம்ப்ளைன்ட் கொடுத்தசொல்லோ அப்புடின்னு கேக்க நினைத்தேன் ...ஆனால் புதியவங்க பக்கம் லாம் அமைதியா இருக்கணும் நு நினைச்சி ஒன்டுமே கேக்காமல் அமைதியா திரும்பி வந்துட்டேன் ...

    ReplyDelete
  83. வாத்துப் பாட்டு புடிக்குறதுல?)இல்ல சின்ன்ன்னன்ன்ன வயசுல மேச்சீங்க இல்ல,அதான்,ஹ!ஹ!ஹா!!!!

    13 May 2012 11:58 // நான் வாத்தும் ஆடும் மேய்த்த காலத்தையும் சொல்லுறன், பாருங்கோ விரைவில் யோகா ஐயா!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  84. ஹேமா said...

    அப்பா....இந்தக் காக்கன்ர அட்டகாசம் இப்ப எல்லா இடங்களிலயும் பரவிப்போகுது.

    விச்சு பழைய கலைகள்,பாரம்பரியம் தொலையுது எண்டு சொல்லியிருக்க இவ என்ன கேட்டிருக்கிறா
    பாருங்கோ !
    //அவ்வவ் ...என்ன சொல்லுரிங்க உங்க கிராமத்தில் காணாம போயிடுச்சா ....இவ்வளவு பொறுப்பிலாமல் இருந்த உங்க கிராம மக்களை வன்மையாகக் கண்டிக்கிறேன் ...//////மருமக கொஞ்சம் விளையாட்டுப் புத்தி.நான் முன்பே சொல்லியிருக்கிறேனே,வெள்ளாந்தி என்று?எதையும் சீரியசாக எடுக்கும் பக்குவம் வரவில்லை!

    ReplyDelete
  85. ஆஹா நீங்க நான் போடும் பாட்டை டவுன்லோட் பண்ணுகின்றீங்க கலை ஆனால் பாட்டுப் போட்டு உயிரைவாங்குறான் என்று ஒருவர் முகநூலில் மூக்கில் குத்திவிட்டு ஓடிவிட்டார்!ஹீ.////


    ரசிக்கத் தெரியல அந்த ஆளுக்கு ,...பதிலுக்கு நீங்களும் சொல்லி இருக்கணும் அண்ணா ...என் கிட்ட மட்டும் அந்த ஆளு மாட்டினார் பதிலுக்கு நானும் மூக்கில் குத்து போட்டு இருப்பேன் .........

    ReplyDelete
  86. அக்கா விச்சு அண்ணா ஆறேன்னேத் தெரியாது என் ப்லோக்கில் கமென்ட் போடுவாங்கள் ...இன்றைக்கு தான் போனிணன் அங்க ...பார்த்த காணமா போயிடுச்சி அப்புடின்னு ஒருப் பதிவு ...எனக்கு என்ன சொல்லுரதுன்னேத் தெரியல ...போலீஸ் ஸ்டேஷன் ல லாம் கம்ப்ளைன்ட் கொடுத்தசொல்லோ அப்புடின்னு கேக்க நினைத்தேன் ...ஆனால் புதியவங்க பக்கம் லாம் அமைதியா இருக்கணும் நு நினைச்சி ஒன்டுமே கேக்காமல் அமைதியா திரும்பி வந்துட்டேன் ...
    //காக்கா போல எனக்கு எல்லா இடமும் போக நேரம் போதாது தாயி.
    13 May 2012 12:04

    ReplyDelete
  87. ரசிக்கத் தெரியல அந்த ஆளுக்கு ,...பதிலுக்கு நீங்களும் சொல்லி இருக்கணும் அண்ணா ...என் கிட்ட மட்டும் அந்த ஆளு மாட்டினார் பதிலுக்கு நானும் மூக்கில் குத்து போட்டு இருப்பேன் .........

    13 May 2012 12:07 // போனால் போகட்டும் கலை வருவதும் போவதும் தானே உறவு நிலை.

    ReplyDelete
  88. அப்பா...கருவாச்சின்ர பின்னூட்டங்களை நானும் ரசிக்கிறன்.அது பிழையில்லை.ஆனாலும் எப்பிடி ரசனையோட இடக்குமுடக்கா பதில் சொல்ல வருது இவவுக்கு !

    ReplyDelete
  89. நான் வாத்தும் ஆடும் மேய்த்த காலத்தையும் சொல்லுறன், பாருங்கோ விரைவில் யோகா ஐயா!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ///


    அண்ணா கொஞ்சம் யோசித்து விட்டுச் சொல்லுங்கோ அண்ணா ......ஏதோ அண்ணா யுனிவர்சிட்டி ல வாத்து மேய்க்க டிகிரி வாங்கின மாறி காலயிக்கிறாங்க ..............

    ReplyDelete
  90. மீனுக்கு முக்தியோ....அது செத்து எத்தினை மாதமோ....என்ர ஃப்ரிஜ்குள்ள 1 மாசம் கிடந்துது.அப்ப இதுக்கு என்ன பெயரோ !//மோட்சத்துக்குப் போவதுக்கும் காத்து இருக்கனும் இடையில் காவல் திறப்புப்படலம் கல்வாரிக்காட்சி படிக்கவில்லையா ஹேமா!

    ReplyDelete
  91. அப்பா...கருவாச்சின்ர பின்னூட்டங்களை நானும் ரசிக்கிறன்.அது பிழையில்லை.ஆனாலும் எப்பிடி ரசனையோட இடக்குமுடக்கா பதில் சொல்ல வருது இவவுக்கு !///


    இனிமேல் அப்புடிலாம் அறிவாளியா யோசிக்க கூடாது எண்டு இருக்கேன் அக்கா ...


    அடிமை அரசன் ப்லோக்கில் அவரின் கவிதையை கொஞ்சம் கலாயிப்பேன் ...அவரின் கவிதையா படிக்கிரான்களோ இல்லையோ என்னோட பின்னூட்டத்தை படிக்க எண்டு சிலர் ..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ...எதுக்கு வம்பு ....கொஞ்ச நாள் அடிமை ப்லோக்கு க்கு லீவ் கொடுத்து விட்ட்டிணன் ...அடிமை அரசன் நிம்மதியா கவிதை எழுதுவார் ....

    ReplyDelete
  92. கலை said...
    அக்கா விச்சு அண்ணா யாரென்றே தெரியாது என் ப்லோக்கில் கமென்ட் போடுவார் ...இன்றைக்கு தான் போனேன் அங்க பார்த்த காணாம போயிடுச்சி அப்புடின்னு ஒரு பதிவு ...எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல ..."போலீஸ் ஸ்டேஷன்"லாம் கம்ப்ளைன்ட் கொடுத்தாச்செல்லோ அப்புடின்னு கேக்க நினைத்தேன் ...ஆனால் புதியவங்க பக்கம் லாம் அமைதியா இருக்கணும்னு நினைச்சி ஒன்டுமே கேக்காமல் அமைதியா திரும்பி வந்துட்டேன்.////அப்போ பதிவைப் படிக்கவே இல்லையா?அவர்(விச்சு)உங்களைப் புகழ்ந்து தள்ளுவாரே????

    ReplyDelete
  93. மீனுக்கு முக்தியோ....அது செத்து எத்தினை மாதமோ....என்ர ஃப்ரிஜ்குள்ள 1 மாசம் கிடந்துது.அப்ப இதுக்கு என்ன பெயரோ !///


    அக்கா ஒரு மாஸமாஆஆஆஆஆஆஆஆ அது வரை மீன் நல்ளா இருக்குமா ..........

    ReplyDelete
  94. ஓஓஓஓ......அப்ப எவ்வளவு காலம் கிடந்தாலும் சாப்பிட்டாத்தான் மோட்சமோ...சரிதான் !

    ReplyDelete
  95. முந்தி பள்ளிக்கூடத்தில படிக்கைக்க,றிப்போட்டில சில பாடங்களுக்கு"திருந்த இடமுண்டு" எண்டு எழுதுவினம்!அது போல தான்,சின்னப் புள்ளதான????

    ReplyDelete
  96. அப்பா...கருவாச்சின்ர பின்னூட்டங்களை நானும் ரசிக்கிறன்.அது பிழையில்லை.ஆனாலும் எப்பிடி ரசனையோட இடக்குமுடக்கா பதில் சொல்ல வருது இவவுக்கு !

    13 May 2012 12:11 //ஹேமா பதிவுலகில் பலதரப்படட் ரசனையில் இருப்பார்கள் அதைப்புரிந்து கொள்ளவேண்டும் சகபதிவாளர்கள் ஆனால் அவர்கள் தங்களைப்போல் மற்றவர்கள் இருக்கோனும் பின்னூட்ட்ம் போடனும் என்று எப்படி நினைக்க முடியும்!
    . கட்டுப்பாடு போட்டால் காட்டாறு நிற்காது நின்றால் குட்டையாகும் அது நாற்றம் பிடிக்கும் நான் நாறுவேன் என்றாள் நல்லாக வாழ்பிடிக்கமாட்டேன் வெளியேறுவேன்! அதற்குப்பரிசு உள்குத்து என்றாள் ஊதிவிட்டுப்போவேன் நெருப்பும் அப்படித்தான் எங்கோ படித்த வரிகள்.

    ReplyDelete
  97. அப்போ பதிவைப் படிக்கவே இல்லையா?அவர்(விச்சு)உங்களைப் புகழ்ந்து தள்ளுவாரே????//


    படிச்சேன் மாமா ...ஆனால் என்னோட கிட்னி ல இறுதி சில அறிவுப் பூர்வமான கேள்விகள் எல்லாம் எழும்பியது ...ஆனால் வாணாம் என் அறிவான கேள்விகள் ஏதேனும் குயப்படி உண்டாக்கும் எண்டு ஒரே ஒருக கேள்வி தான் கேட்டிணன் மாமா ...

    அவ்வ்வ்வ் ஒண்ணுமே கேக்கல அதுக்கே அந்த அண்ணா புகழ்ந்தாரா ..அப்போ ஒரு மாசம் அந்த பக்கம் போக மாட்டேன்...

    ReplyDelete
  98. அக்கா ஒரு மாஸமாஆஆஆஆஆஆஆஆ அது வரை மீன் நல்ளா இருக்குமா ....//நல்லா இருக்கும் கருவாடு!ஹீஈஈஈஈஈஈஈஈ.

    ReplyDelete
  99. //அக்கா ஒரு மாஸமாஆஆஆஆஆஆஆஆ அது வரை மீன் நல்ளா இருக்குமா ........//

    பின்ன....நான் வெட்டிச் சமைக்கேக்க துள்ளி ஓடிச்சு தெரியுமோ காக்கா !

    ReplyDelete
  100. கலை said...
    அக்கா ஒரு மாசமாஆஆஆஆஆஆஆஆ அது வரை மீன் நல்லா இருக்குமா?//// மீன் செத்தாப் பிறகு எப்புடி நல்லா இருக்கிறது?செத்த மீன் நல்லா இருந்து தான் என்ன புண்ணியம்?மீனுக்கு தான் நல்லா இருக்கிறது தெரியாதே?நாங்களே,இங்க வெளிநாட்டில சுமாராத் தான் இருக்கிறம்!

    ReplyDelete
  101. அண்ணா கொஞ்சம் யோசித்து விட்டுச் சொல்லுங்கோ அண்ணா ......ஏதோ அண்ணா யுனிவர்சிட்டி ல வாத்து மேய்க்க டிகிரி வாங்கின மாறி காலயிக்கிறாங்க .....// ஹீ அப்படித்தான் சிலர் வெளியில் பேசுறாங்க நான் சாதாரனமானவன் மரம் படிக்குமா கலை.கடைசி வாங்கு! தேவாங்கு கருத்தை குருவிடம் கேளுங்கோ!

    ReplyDelete
  102. Yoga.S. said...
    நேசன்,நீங்கள் என்மேல்,பொதுவாகவே வயதில் மூத்தவர்கள் மேல் வைத்திருக்கும் மரியாதை எனக்குத் தெரியாததல்ல!சும்மாங்கலகலப்பாக உரையாடல் போகட்டுமேஎன்று அப்பப்போ பிட்டு போடுவது தான்!எங்கள் ஊரின் ஸ்பெஷலே நகைச்சுவைதான்!நான் கூட சில நகைச்சுவை நாடகங்களில் தோன்றியிருக்கிறேன்!மறு நாள் தெருவில் நடமாடவே முடியாது///



    ஏன் மாமா ஏன் ... மறுநாள் தெருவில எல்லாரும் கொய வெறியோட உங்களை தேடிட்டு இருப்ப்ங்களா மாமா ...


    நானும் உங்க கமெண்ட் ரசித்து படிப்பேன் மாமா ...சார் ன்னு அண்ணாவை காலை வாருங்கள் மாமா அதுவும் நல்லத் தான் இருக்கு ...

    ReplyDelete
  103. பின்ன....நான் வெட்டிச் சமைக்கேக்க துள்ளி ஓடிச்சு தெரியுமோ காக்கா !

    13 May 2012 12:23 /ஹீஈ அது ஐஸ் மீன் இல்லையா வழுக்கி ஓடத்தான் செய்யும்!

    ReplyDelete
  104. முந்தி பள்ளிக்கூடத்தில படிக்கைக்க,றிப்போட்டில சில பாடங்களுக்கு"திருந்த இடமுண்டு" எண்டு எழுதுவினம்!அது போல தான்,சின்னப் புள்ளதான????

    13 May 2012 12:20 //அப்படியும் திருந்தாதவன் இப்ப கெட்டிக்காரன் என்றால் என்ன சொல்வது யோகா ஐயா.

    ReplyDelete
  105. பின்ன....நான் வெட்டிச் சமைக்கேக்க துள்ளி ஓடிச்சு தெரியுமோ காக்கா !///


    அக்காஆஆஆஆ உண்மையா வா சொல்லுரிங்கள் ....உசுரோடவா இருஞ்சி ...அப்போ வாங்கும் போது யுயிர் மீன் வாங்கியாந்து இருப்பீங்களா அக்கா

    ReplyDelete
  106. ஹேமா said...

    //அக்கா ஒரு மாஸமாஆஆஆஆஆஆஆஆ அது வரை மீன் நல்லா இருக்குமா ........//

    பின்ன....நான் வெட்டிச் சமைக்கேக்க துள்ளி ஓடிச்சு தெரியுமோ காக்கா?////சட்டிக்குள்ளையோ?????

    ReplyDelete
  107. ஹீ அப்படித்தான் சிலர் வெளியில் பேசுறாங்க நான் சாதாரனமானவன் மரம் படிக்குமா கலை.கடைசி வாங்கு! தேவாங்கு கருத்தை குருவிடம் கேளுங்கோ!//

    போங்கள் அண்ணா நீங்க நல்லத் திறமை ஆனவங்க தான் ....நீங்களே உங்களை அப்புடி சொள்ளதிங்கோ அண்ணா ...பதிமூன்று வயதிலே கவிதை வானொலியில் அப்போமே அவ்வளவு திறமை ....சூப்பர் அண்ணா நீங்கள்

    ReplyDelete
  108. எங்கள் ஊரின் ஸ்பெஷலே நகைச்சுவைதான்!நான் கூட சில நகைச்சுவை நாடகங்களில் தோன்றியிருக்கிறேன்!மறு நாள் தெருவில் நடமாடவே முடியாது///



    ஏன் மாமா ஏன் ... மறுநாள் தெருவில எல்லாரும் கொய வெறியோட உங்களை தேடிட்டு இருப்ப்ங்களா மாமா ...


    நானும் உங்க கமெண்ட் ரசித்து படிப்பேன் மாமா ...சார் ன்னு அண்ணாவை காலை வாருங்கள் மாமா அதுவும் நல்லத் தான் இருக்கு ...

    13 May 2012 12:26 //அவர் பின்னூட்டம் ரசிக்கும் படி இருக்கும் கலை ஆனால் சிலர் எனக்கு யோகா ஐயா ஏன் இப்படிச் சொல்லுகின்ரார் என்று வேற இடங்களில் பேசுவார்கள் புரிதல் இல்லாமல் கலை.

    ReplyDelete
  109. முந்தி பள்ளிக்கூடத்தில படிக்கைக்க,றிப்போட்டில சில பாடங்களுக்கு"திருந்த இடமுண்டு" எண்டு எழுதுவினம்!அது போல தான்,சின்னப் புள்ளதான????

    13 May 2012 12:20 //அப்படியும் திருந்தாதவன் இப்ப கெட்டிக்காரன் என்றால் என்ன சொல்வது யோகா ஐயா.///


    அவ்வவ் மாமாஆஆஅ ஆரை சொல்லுரிங்கள் மாமா

    ReplyDelete
  110. கலை said...
    அக்காஆஆஆஆ உண்மையா வா சொல்லுரிங்கள் ....உசுரோடவா இருந்திச்சு ...அப்போ வாங்கும் போது உயிர் மீன் வாங்கியாந்து இருப்பீங்களா அக்கா???///உயிரோட வாங்கிக் கொண்டு வந்து,களைப்புக்கு லெமன் ஜூஸ்,பிறகு சாப்பிட சோறும் குடித்து படுக்க வச்சுட்டு,பிறகு டி பிறிசரில போட்டு வைக்கிறது!

    ReplyDelete
  111. போங்கள் அண்ணா நீங்க நல்லத் திறமை ஆனவங்க தான் ....நீங்களே உங்களை அப்புடி சொள்ளதிங்கோ அண்ணா ...பதிமூன்று வயதிலே கவிதை வானொலியில் அப்போமே அவ்வளவு திறமை ....சூப்பர் அண்ணா நீங்கள்

    13 May 2012 12:32 //ஊஸ் காக்கா விரைவில் உள்குத்து போடுவார்கள் கொஞ்சம் மனதில் இருக்கும் ஆசைகள் /கனவுகள் /விருப்பங்களை .கிறுக்குவம் இங்கே இப்படியே இருந்து.

    ReplyDelete
  112. மாமா உங்கட்ட நேற்றே கேக்கணும் நினைச்சேன் மாமா ...உங்க பெயரை மாற்றி போட்டு இருக்கேங்கள் போல ...YOGA.S.FR எண்டு தானே முதலில் வைத்து இருந்தீன்கள் சரியா மாமா ...

    ReplyDelete
  113. பிறகு சாப்பிட சோறும் குடித்து படுக்க வச்சுட்டு,பிறகு டி பிறிசரில போட்டு வைக்கிறது!// சூப்பர் கடி யோகா ஐயா ஹேமா போய் விட்டா!

    ReplyDelete
  114. கலை said...

    முந்தி பள்ளிக்கூடத்தில படிக்கைக்க,றிப்போட்டில சில பாடங்களுக்கு"திருந்த இடமுண்டு" எண்டு எழுதுவினம்!அது போல தான்,சின்னப் புள்ளதான????/////
    அவ்வவ் மாமாஆஆஅ ஆரை சொல்லுரிங்கள் மாமா?///இங்கே சின்னப் புள்ள யார்????

    ReplyDelete
  115. உயிரோட வாங்கிக் கொண்டு வந்து,களைப்புக்கு லெமன் ஜூஸ்,பிறகு சாப்பிட சோறும் குடித்து படுக்க வச்சுட்டு,பிறகு டி பிறிசரில போட்டு வைக்கிறது!////


    ஹ ஹ ஹாஆஆஆ போங்க மாமா ....நீங்க காமெடி பன்னுரிங்க ....

    என்னங்க மாமா வெறும் சோறு தான் கொடுத்தீகளா ....
    நானா இருந்தா வாங்கியாந்தவுடனே சோறு கூட நாட்டுக் கோழி குழம்பு வைத்து கொடுத்து இருப்பேன் மாமா ...

    ReplyDelete
  116. மாமா உங்கட்ட நேற்றே கேக்கணும் நினைச்சேன் மாமா ...உங்க பெயரை மாற்றி போட்டு இருக்கேங்கள் போல ...YOGA.S.FR எண்டு தானே முதலில் வைத்து இருந்தீன்கள் சரியா மாமா?///உண்மைதான் கலை!அது சில காரணங்களுக்காக,தூக்கி விட்டேன்!

    ReplyDelete
  117. அவ்வவ் மாமாஆஆஅ ஆரை சொல்லுரிங்கள் மாமா?///இங்கே சின்னப் புள்ள யார்????///


    இஞ்ச சின்னப் புள்ளை ஆருங்க... அப்புடி ஆறாவது இருக்கீகளா ....ஆறாவது இருந்தா கை தூக்குங்கள் ...மாமா கேக்குராங்கள்ள ....

    ReplyDelete
  118. மாமா உங்கட்ட நேற்றே கேக்கணும் நினைச்சேன் மாமா ...உங்க பெயரை மாற்றி போட்டு இருக்கேங்கள் போல ...YOGA.S.FR எண்டு தானே முதலில் வைத்து இருந்தீன்கள் சரியா மாமா ...

    13 May 2012 12:38 //கலை பொதுவில் எல்லாவற்றையும் விசாரிக்கக்கூடாது! நான் கவிதை எழுத வெளிக்கிட்டது 15 வயதில் ஆனால் பதிவு உலகம் வந்தது 29 வயதில் இடையில் வனவாசம் இப்படித்தான் பலரும்.

    ReplyDelete
  119. கலை said...
    நானா இருந்தா வாங்கியாந்தவுடனே சோறு கூட நாட்டுக் கோழி குழம்பு வைத்து கொடுத்து இருப்பேன் மாமா ...///சாடிக்கேற்ற மூடி,குருவுக்கு ஏற்ற சிஷ்யை,ஹ!ஹ!ஹா!!!!!!!!

    ReplyDelete
  120. இஞ்ச சின்னப் புள்ளை ஆருங்க... அப்புடி ஆறாவது இருக்கீகளா ....ஆறாவது இருந்தா கை தூக்குங்கள் ...மாமா கேக்குராங்கள்ள ....

    13 May 2012 12:44// நான் சின்ன்ப்பிள்ளை ஆத்தி பாதாகத்தி!

    ReplyDelete
  121. உண்மைதான் கலை!அது சில காரணங்களுக்காக,தூக்கி விட்டேன்!//அப்போது இருந்தே தொடர்கின்ரேன் யோகா ஐயா!

    ReplyDelete
  122. உண்மைதான் கலை!அது சில காரணங்களுக்காக,தூக்கி விட்டேன்!//

    நீங்க செய்தா சரியத் தான் இருக்கும் மாமா ...

    இன்னைக்கு நிறைய கொமேடி மாமா பண்ணினாங்க ...

    மாமா நான் கிளம்புறேன் ...
    இஞ்ச ஒரு மணிக்கு மேல ஆச்சி டைம் போனதே தெரியல மாமா ...

    அக்கா வந்து ட்டு அப்புடியே எஸ்கேப் ஆகிட்டாங்க போல ...


    ரொம்ப சந்தோசம் ஆ இருக்கு இன்னைக்கு எல்லாரும் ஒண்ணாப் பேசியது ...


    மாமா டாட்டா

    அக்கா டாட்டா

    அண்ணா டாட்டா

    நாளை சந்திப்பம் ...

    ReplyDelete
  123. கலையம்மா போய் நல்லா நித்திரை கொள்ளுங்கோ நாளைக்கு வேலையிருக்கும் நாளை இரவு சந்திப்போம் !நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  124. மகள் களைப்போடு வந்திருப்பா.கொஞ்ச நேரம் பேசி விட்டுச் செல்வோமே என்று நினைத்து வந்தா போலும்.இனி எவ்வளவு வேலை இருக்கிறது?குளித்து,கும்பிட்டு,சமைத்து................................ஹும்!நல்லிரவு மகளே!!!!!

    ReplyDelete
  125. நல்லிரவு மருமகளே!மூளைக்கு ஒய்வு கொடுத்து நிம்மதியாக உறங்குங்கள்,நாளை பார்க்கலாம்!குட் நைட்!!!!

    ReplyDelete
  126. அவ்வ்வ்வ்வ்வ்வ் ...மறந்துப் போயிட்டேன் ...அதான் திரும்படி வந்திணன் ...

    ஓகே எல்லாருக்கும் இனிய இரவாய் அமையட்டும் ...

    மீண்டும் எல்லாருக்கும் டாட்டா

    ReplyDelete
  127. நன்றி யோகா ஐயா நானும் விடைபெறுகின்ரேன் நாளை இரவு சந்திப்போம் இனிய ஓய்வு கொடுங்கள் மனதுக்கும் விழிக்கும்!

    ReplyDelete
  128. மகள் களைப்போடு வந்திருப்பா.கொஞ்ச நேரம் பேசி விட்டுச் செல்வோமே என்று நினைத்து வந்தா போலும்.இனி எவ்வளவு வேலை இருக்கிறது?குளித்து,கும்பிட்டு,சமைத்து................................ஹும்!நல்லிரவு மகளே!!!!!// நானும் நன்றி சொல்லி விடுகின்ரேன் அம்முக்குட்டிக்கு வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  129. நல்லிரவு நேசன்!உங்களுக்கும் அதிகாலையில் வேலை.இது வரை பேசியது சந்தோஷம்!நானும் கொஞ்சம் ஓய்ந்து விட்டு........................குட் நைட்!!!

    ReplyDelete
  130. //உயிரோட வாங்கிக் கொண்டு வந்து,களைப்புக்கு லெமன் ஜூஸ்,பிறகு சாப்பிட சோறும் குடித்து படுக்க வச்சுட்டு,பிறகு டி பிறிசரில போட்டு வைக்கிறது!//

    வாவ்....கருவாச்சி வந்து இப்பிடி வெளிநாடுகளில் இருந்தா தெரியும்.நாங்க வாங்குற மீன் எத்தினை நாளைக்கு உயிரோட இருக்குமெண்டு.ஹாஹாஹ்ஹா !

    கனடா போன் வந்து மினக்கட்டுப்போனன் அப்பா.இனித்தான் சாப்பாடு பாக்கவேணும் !

    ReplyDelete
  131. அப்பா..கருவாச்சி சின்னப்பிள்ளையோ....தாங்கமுடியேல்ல சாமி கொசு கடிக்குது.

    அரசன் தப்பிட்டார்....
    நான் தான் பாவம் !


    சரி....நானும் இரவின் வணக்கத்தைச் சொல்லிக்கொள்றன்.நாளைக்குப் பார்க்கலாம்.அப்பா,நேசன்,அம்முக்குட்டி.....சந்தோஷமா இருங்கோ !

    ReplyDelete
  132. பாட்டைக் கேட்டேன் அண்ணா... சூப்ப்ப்ப்ப்பரு! பவதாரிணியோட குரல் ரொம்பவே நல்லா இருக்கில்ல...! மயிலு படத்தேடா ஃபோட்டோஸ்கூட நீங்க வெச்சிருக்கறது சுண்டி இழுக்குது. நானும் உங்களைப் போல ஆவலோட இருக்க ஆரம்பிச்சிட்டன்!

    ReplyDelete
  133. கலோ..கலோ..கலோ
    என்ன இங்கு என்னை வைத்து ரொம்பதான் கும்மி அடிக்கிறாப்போல...
    அத்தனைபேருக்கும் நான் இல்லையென்ற தையிரியமா?
    இரவு சரியாகத் தூக்கம் வரவில்லை
    இப்பதான் காரணம் புரிகிறது
    என்ன! நாத்தனாரே! கொஞ்சமும்
    பயமில்லாமல்..எனக்கொரு மரியாதை
    கொடுக்காமல்..பேச்சு ரொம்பத்தான்.................

    ReplyDelete
  134. கண்ணுங்களா! நான் கறுப்புப்பட்டி கட்டி யுத்தம் செய்வதெல்லாம் வேறவர்கள. உங்களைப்போல்...
    ஆள இல்லாத இடத்தில் வாய்நீளபவரிடங்களிலும்..,
    பலமிழந்தவர்களிடத்திலும்,தையிரியம்
    இல்லாதவர்களிடத்திலும்,நேருக்குநேர்
    வராதவர்களிடத்திலும் அதை நான்
    பயன்படுத்துவதில்லைஉங்களுக்கெல்லாம்...என் ஐந்துவிரல்களே அதிகம்.
    சேச்சே...கறுப்புப்பட்டி,கருகுமட்டையெல்லாம்..பலசாலிகளுக்கு கண்ணுங்களா!

    ReplyDelete
  135. பாருங்க..பாருங்க..எப்படியாவது
    என்னைப் பாத்துவிடவேண்டுமென்று
    ஒருஆள தனிமரமாக நின்று தவியாய்த்
    தவிக்கிறார்.பாக்கலாம்...............
    சிங்கை வந்தாபோல...நல்ல காலம்
    நான் தப்பிச்சன்!

    ஹேமா என் காலில் விழுவதற்குக்
    கூடத் தயாராக இருக்கிறார் என்றால்!
    எந்தளவுக்குஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉஉ....??
    சேச்சே... அப்படியெல்லாம் ஆண்மகன் காலில் விழும் அளவுக்கு
    நான் நாகரிகம் அற்றவளல்ல என்று
    காதில..போட்டு வை ஹேமா!

    ReplyDelete
  136. இசை நன்று! கேட்டேன்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  137. ராஜா ஜயாவின் பாடல்கள் எல்லாம் இரசனைக்குரியவை.
    இன்னும் விடயம் நேசா அண்ணா அவர் மகள் பவதாரினியின் குரல் இன்னும் குழந்தையின் இனிமைக்குரலாகவே ஒலிக்கிறது.
    அருமையான பதிவு அண்ணா.....

    ReplyDelete
  138. காலை வணக்கம்,நேசன்!ஹேமா&கலை&கலா&அதிரா&எஸ்தர் சகோதரிக்கும் காலை வணக்கம்.இந்த வாரம் எல்லோருக்கும் நன்றே அமைய வேண்டுகிறேன்,வல்லானை!!!

    ReplyDelete
  139. வணக்கம் பாட்டிம்மா(கலா)!உங்களை யார் "கலா"ய்த்தது ?ச்சீ.......இங்கே யார் என்ன சொன்னார்கள்?நீங்கள் சிங்கையில் இருக்கும் "சிங்கம்" என்று அறிந்தவுடன்,நானே எஸ்கேப் ஆகி விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்?ஒண்ணும் மனசுல வச்சுக்காதீங்க,பாட்டிம்மா!நாங்கெல்லாம்,சும்மா பிசுக்கோத்து சமாச்சாரம்!(எப்புடி அடிச்சாலும் தாங்குவோம்)

    ReplyDelete
  140. காட்சியில் சொதப்பினாலும் இசை அதையெல்லாம் மறைத்து விடும். அதுதான் இவரது மாயம்.

    ReplyDelete
  141. என்னோட..உளவுத்துறையில் இருந்து தகவல் கிடைத்தபடியால்..இங்கு வந்து பார்த்தேன் தகவல் உறுதியானது.
    இத் தருணத்தில் உளவுத்துறைக்கு மிகவும் கடமைப்பட்டுளளேன் நன்றியும்.
    மூவருக்கு சமன் அனுப்பியுளளேன்
    நாம் அந்த நீதிமன்றத்தில் சந்திப்போம்.......

    ReplyDelete
  142. யுத்த நிலையிலும் பற்றி தட்டுப்பாட்டுக் காலத்தில் சைக்கிள் டைனமோ சுற்றிப் பாடல் கேட்டவன்//////////////

    இந்த வரியை 2-3 தடவை வாசித்த பின்புதான் புரிந்து கொண்டேண்ன்...//

    பற்றி = பட்டரி..? ஓ கே..யா

    ReplyDelete
  143. கலா said...

    என்னோட..உளவுத்துறையில் இருந்து தகவல் கிடைத்தபடியால்..இங்கு வந்து பார்த்தேன் தகவல் உறுதியானது.
    இத் தருணத்தில் உளவுத்துறைக்கு மிகவும் கடமைப்பட்டுளளேன் நன்றியும்.
    மூவருக்கு சமன் அனுப்பியுளளேன்
    நாம் அந்த நீதிமன்றத்தில் சந்திப்போம்......///ஐய்யய்யோ!மூன்று பேர்???????அப்படிஎன்றால்,......................?மகள்(ஹேமா)சேர்ப்பில்லை!அப்பாடி மகள் தப்பித்தா,ஹ!ஹ!ஹா!!!!!!!!!

    ReplyDelete
  144. எங்க ஒருத்தரையும் காணேல்ல.அதிரான்ர பக்கத்தில இருப்பீங்களெண்டு போன்னல்.வந்திட்டுப் போயிருக்கிறீங்கள் அப்பாவும் நேசனும்.கருவாச்சியைக் காணேல்ல.எங்க எங்காச்சும் காக்கான்ர சத்தம் கேக்குதோ.

    அப்பாவுக்கு என்ர வாசம் வந்ததாக்கும்.இதுதான் பாசம்.நேற்றும் இண்டைக்கும் லீவு அப்பா எனக்கு.நாளைக்குத் தொடங்கினால் இனி 5 நாளைக்கு ஓட்டம்தான் !

    ReplyDelete