02 June 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்--62

தேடல் மிக்க உலகில் தேடு உன் பார்வையில் எதிர்காலம் என்ன என்ன செய்யப்போகின்றாய் ?

சாதாரண பரீட்ச்சை முடித்தபின் என்ற கேள்வி எல்லாருக்கும் வரும் ஒன்று .

ராகுலுக்கும் வந்திச்சு சாதாரண தரம் பரீட்சை எழுதியாச்சு .

இனி சுருட்டுக்கடையில் எல்லா ஆசைகளையும் ஆற்றில் ஓடும் மரத்துண்டு போல விட்டுவிட்டு ஒரு குட்டையைப்போல கல்லாப்பெட்டியில் இருப்பதா ?

இல்லை தென்னக்கோன் தாத்தா பெரஹராவில் வைத்துச் சொன்னது போல "
நீ  நல்ல அலுவலக வேலைக்குப் போறது என்றால் .என் நண்பர் கொழும்பில் இருக்கின்றார் .அவரிடம் சேர்த்துவிடுவேன் . படிப்பை வைத்து அவர் எதையும் தீர்மானிக்க மாட்டார் .ஆர்வம் இருந்தால் அவரே குருவாக இருந்து ஒவ்வொன்றையும் படிப்பிப்பார் .சரியா ராகுல் மருமகனே ""

 அவரின் அந்தப் பாசமான வார்த்தை மீண்டும் மீண்டும் கேட்க நினைத்தது ஒரு காலத்தில் மனது.

யுத்தம் அரக்கனாக இருந்து யாழ்ப்பாணம்  வெற்றிகொள்ளப்படுகின்றது .என்று இனவாத ஊடகம் ஊர் எல்லாம் செய்தியாக ஒலி/ஒளியாக காற்றில் ,நாழிதளில் இனவாதம் நச்சுக்காற்றாக வீசும் இடத்தில் இருந்து .!

மூத்தவர், மத நம்பிக்கையில் வாழும் சகோதரமொழி குடியானவர் .ஒருவர் இனவாதம் இல்லாமல்  மருமகன் என்று சொல்வதில் அவருக்கு பேர்த்திமீதான எதிர்கால எண்ணத்தில் இருக்கலாம் .


பேர்த்தியை தோனியே என்று பாசம் பொழிந்தாலும்.

 பேரன் ராகுலை அவர் மருமகனே என்று தான் தூக்கி வளர்த்தவர் தென்னக்கோன் தாத்தா .

பெரியவர்களின்  குடும்ப அரசியலில் அவர் வெளிநடப்பு செய்த பதிவாளர் போல தான் .நல்ல விசயம் என்றால் ரோட்டில் நின்று பேசுவார் .மனதுக்கு பிடித்த விசயம் என்றால் பதிவாளராக சண்டை போட்டாலும் நல்ல விடயம் என்றால் தட்டிக்கொடுக்க வேண்டுமே என்பதைப்போலத்தான்.

 எங்க உறவுகளான வீட்டுக்காரர்களுடன் மனஸ்தாபம் வந்திருக்கும் .தன் மகளை இவர்கள் சேர்க்கவில்லை, உறவுகளை ஏற்கவில்லை. அவர்களும் இப்போது எங்கோ ஒரு தேசத்துக்கு ஒட்டுமொத்தமாக பிரிந்து போய்விட்டார்களே. யாழ்ப்பாணம் அடிக்கும் போது வன்னி வந்தவர்கள் போலத்தான்!


அதை எல்லாம் விடுத்து அவர் ராகுலுடன் அடுத்த தலைமுறை வாரிசு என்று அவர் குழந்தை மனதில் இனவாத நஞ்சை விதைக்கவில்லை. சிங்களவன் எல்லாம் இனவாதி என்றும் மாற்றுப்பார்வை இருப்பவன் எல்லாம் துரோகி என்று சொல்லும் சில அறிவுலக மேதைகள் போல அல்ல தென்னக்கோன் தாத்தா .

நிறைவான புத்தனின் போதனை கேட்டு வளர்ந்தவர் ,தர்மஊபதேசம் ராகுல் விகாரையில் முன்னர் படிக்க அவர்தானே காரணம் .

எத்தனை தரம் குழந்தையாக இருக்கும் போது ஆற்றில் குளிக்க வைத்திருப்பார் அவர்

.இப்போது வயதாகிவிட்டதாலும் ராகுல் வளர்ந்து பெரியவன் ஆகிவிட்டதாலும் இவரும் சிங்களவன் என்று உதறிவிட்டுப்போக இது என்ன திரட்டிச்சண்டையா ?

உறவு வேண்டாம் என்று விட்டு ஓட  இன்று சண்டை என்றாலும் நாளையும் சேரும் மாமா மச்சான் இந்த பாசம்  .எல்லாம் புரிந்து கொண்ட நண்பர்கள் போல தென்னக்கோன் தாத்தா.

போகும் போது சொன்னார் "ஒரு நாளும் மறவாத என்னை .எப்போதும் ஞாபகம் வைத்திரு என்றார் "

அவரின் பார்வையில் நான் இன்னும் அனோமாவை எண்ணிக்கொண்டு இருக்கும் உறவுப்பாலம் போல நினைத்திருப்பார். !

ஆனால் சாதரன தரப்பரீட்சை முடிவில் அவளின் அடுத்த வாழ்கைக்  கட்டம்  ராகுல் தெரிந்து கொண்டதை அவருக்கு தெரியாமல் இருக்கலாம்!

தொடர்புகள் எல்லாம் தணிக்கை ஆனபின் உண்மை எப்போதும் வெளியில் வரும் தானே. பட்டலந்த முகாம் விசாரனைபோல !

பரீட்டை முடிந்தது ராகுல் கொழும்பு போகும் என்னத்தில் இருந்தான் .

ஆனால் சங்கீதப் பரீட்சைக்கு இருவழியில் சேர்த்த புள்ளிதான் மொத்தமாக கணிக்கப்படும். முதலில் எழுத்துப்பரீட்டை அடுத்தது குரல்(அதாவது பாட்டு)!

 இது வடஇலங்கை சங்கீத சபை நடத்தும் அவர்கள் பின் கல்வித்திணைக்களத்துக்கு பெறுபேறை அனுப்பி விடுவார்கள் .அதன் பின் தேர்வு முடிவு வெளியாகும்..

அதுவரை காத்திருக்கும் நிலையை விட்டு வேலை தேடும் படத்தில் இறங்கும் போது .

செல்லன் மாமாவிற்க்கு என்ன சொல்வது அவரோ அடுத்த கடை தொடங்கிவிட்டார் வியாபாரத்தைப் பெருக்க பரீட்ச்சை முடிந்துவிட்டது .இனி ராகுலை வைத்து நடத்தலாம் என முடிவுக்கு வந்துவிட்டதை சாப்பாட்டு மேசையில் சொல்லிவிட்டார்.

" என்ன துரை இனிபடிப்பு முடிந்துவிட்டது எல்லா ஊர் சுத்தல் புத்தகம் எல்லாம் கட்டிவைத்துவிட்டு மற்றக்கடைக்கு பொறுப்பா இரு சரியா "

என்ன நான் கதைக்கிறது விளங்குதா ?

"பரம்பரக்கடை வியாபாரம் பழகிய இடம் இதைவிட்டுட்டு இன்னொருத்தனுக்கு கீழை வேலை செய்யிற எண்ணம் இருக்கக்கூடாது சரியா!"

சுகி எல்லாத்தையும் மறைத்து வைக்கத்தெரியாதவள் .ஓட்டவாய் என்பதை தென்னக்கோன் தாத்தா சொன்னதையும் செல்லன் மாமாவிடம் சொல்லிவிட்டாள்! என்பது புரிந்தது .

என்ன துரை பேசமாட்டீங்களோ?

" இல்ல அது வந்து நான் கணனி படிக்க கொழும்பு போகலாம் என்று இருக்கின்றேன் "

 அதுக்குத் தான் இப்ப வேலை அதிகம் வருகின்றது சுருட்டுக்கடைக்கு இல்லை "

ஏன் ?நாங்க மூன்றுதலைமுறை அதில் தானே  இருக்கின்றோம் .என்ஜினியர் போல அரசாங்க காசில் படிச்சிட்டு நாட்டைவிட்டு ஓடியா போட்டம்.?

நீ கணனி படிக்க கொழும்புக்கு ஏன் ?

அதுதான் இங்கே (பதுளை)டெக் சிரிலங்கா,லண்டன் டெக் மயோன்,ABSஎன இருக்கே .பவரில் கூட படிப்பிக்கின்றாங்க அவர் நம்ம கூட்டாளி தானே  நான் கதைக்கவா .

இல்ல மாமா இங்க எல்லாம்! தமிழில் இல்லை .

யார் சொன்னது உனக்கு லங்காபுவத்தைப்போல?

பத்தாங்கட்டை கங்காணி மகன் தமிழில் படிக்கிறானாமே .நேற்று கடையில் சாமான் வாங்கும் போது சொன்னான் .

இப்ப பொய் வேற சொல்லப்பழகிவிட்டாய் போல .

பேசாமல்  சாப்பிடு நாளைக்கு கடைக்குப் போகலாம்.

 கடையில் இந்த  பதுனொண்டு   ஒன்றும் வேட்டாம் .சாரம் கட்டு சரியா ?

என்ன நான் பேசுறது ஏதுக்கும் பதில் இல்லை .
"அவர் துரைக்கு பேரம்பலத்தாரின் பிடிவாதம் என்றா எரியும் நெரிப்பில் எண்ணைவார்க்கும் சரோஜா மாமி."

இவன் பேரம்பலத்தாரைப்பார்க்க  முன் நான் எங்க ஐயாவைப் பார்த்தவன். அவரின் பிடிவாதம் இவன் கர்வம் எல்லாம் என்னத்தை ?

முதலில் உழைக்கும் வழியைப்பாரு.

" என்ன துரை கடைக்கு போறது என்றால் இங்க இருக்கலாம் இல்ல ஊரில் இருப்பவன்கள் கதை கேட்டு புத்தகப்படிப்பு போல வாழ்க்கையை நினைச்சா தாராளமாக வாசல் தாண்டிப்போகலாம் .

நாளைக்கு.

 காணமல் போனவர் பட்டியல் நாட்டில் அதிகம் .நீயும் அதில இருபது உன் விருப்பம் .இனியும் பெலிட்டால் அடித்து திருத்தும் வயசு இல்லை .உனக்கு அடிச்சா சுகிதான் மூக்கால் அழுகின்றாள் எண்ணைத்தை பாசமலர்களோ!"

தாண்டிப்போகும் போது உன்ற நண்பர்கள் எல்லாருக்கும் சொல்லிப் போடு யாரும் கடைப்பக்கம் ராகுல் எங்க என்று வந்தால் அப்படி ஒருத்தன் இல்லை என்று தான் பதில் வரும் என்று .

ஜோசித்து செய் நாளைக்காலையில் சாரத்தோடு கடையில் நிற்பதா  ?இல்லை உதவாக்கரையா வீதியில் நிற்கின்றதா ?

உன் முடிவு துரை .

. . செல்லன் மாமா சாப்பாட்டை முடித்துவிட்டார் சாப்பிடும் ஆசையில்லை ராகுலுக்கு!
தொடரும்!
///

தோனிய்- மகள்  சகோதரமொழி உடரட்டை தந்தைதை சொல்லும் வார்த்தை
பதுளை)டெக் சிரிலங்கா,லண்டன் டெக் மயோன்,ABS- கணனிமையங்கள்
.பவர்- அரசசார்பு சுயக்குழுவின் பெயர்
லங்காபுவத்- அரச செய்தி ஊடகம்!
ப்துனொண்டு- டவுசர் யாழ்  வட்டார மொழி

36 comments:

  1. பால் கோப்பி எனக்குத்தானே?

    ReplyDelete
  2. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! எனக்கே தான்! வணக்கம் நேசன் அண்ணா! என்ன இன்று சனிக்கிழமை, விடுமுறையா? நீங்கள்,நலமா?

    ReplyDelete
  3. நான் வேலை செய்துகொண்டே பின்னூட்டம் போடுகிறேன்! ஹா ஹா ஹா என்னோட பொஸ் வாழ்க :-)))

    ReplyDelete
  4. வாங்க மணிசார் பால்க்கோப்பி உங்களுக்குத்தான்!

    ReplyDelete
  5. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! எனக்கே தான்! வணக்கம் நேசன் அண்ணா! என்ன இன்று சனிக்கிழமை, விடுமுறையா? நீங்கள்,நலமா?// வணக்கம் மணிசார் நான் நலம் தாங்களும் அவ்வண்ணமே என நினைக்கின்றேன். ஓம் இன்று எதிர்பாராத லீவு!ம்ம்ம்

    ReplyDelete
  6. நான் வேலை செய்துகொண்டே பின்னூட்டம் போடுகிறேன்! ஹா ஹா ஹா என்னோட பொஸ் வாழ்க :-)))// ஆஹா நல்ல முதலாளி அவர் வாழ்க!ஹீ

    ReplyDelete
  7. அண்ணர் தொடர்ச்சியா ஆக்கள் வந்துகொண்டு இருக்கினம்! ஸோ, நான் பிறகு வாறன் :-))

    ReplyDelete
  8. அண்ணர் தொடர்ச்சியா ஆக்கள் வந்துகொண்டு இருக்கினம்! ஸோ, நான் பிறகு வாறன் :-))//முதலில் வேலை மணிசார் பிறகு சந்திப்போம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  9. அண்ணா நானும் வந்திட்டனான் ...

    மீ யும் ஆபீசில் இறுக்கினான் ....



    மாமா இண்டும் வரலையா ......

    மாமா ஆஆஆஆஆஆஆஆஅ எண்ணப் பண்ணிட்டு இருகீன்கள்

    ReplyDelete
  10. அண்ணா நானும் வந்திட்டனான் ...

    மீ யும் ஆபீசில் இறுக்கினான் ....



    மாமா இண்டும் வரலையா ......

    மாமா ஆஆஆஆஆஆஆஆஅ எண்ணப் பண்ணிட்டு இருகீன்கள்
    // வாங்க் கலை ஆப்பீஸ் முடிச்சு இரவு வாங்கோ பேசுவோம்! கலை அடுத்த பால்க்கோப்பியோடு!
    2 June 2012 04:02

    ReplyDelete
  11. ராகுல் அண்ணனை படிக்க சொல்லாமல் வேலைக்கு வர சொல்லுறது லாம் கஷ்டம தான் ...

    ReplyDelete
  12. ராகுல் அண்ணனை படிக்க சொல்லாமல் வேலைக்கு வர சொல்லுறது லாம் கஷ்டம தான் // ராகுலை விட வேலை முக்கியம் கலை அவனை நம்பினால் கோவிந்தா நானே அவன் அழைப்புக்கு காத்து இருக்கின்றேன்!ஹி

    ReplyDelete
  13. பகல் வணக்கம்,நேசன்!(பிற்)பகல் வணக்கம் கலை!இருவரும் நலமா?கொஞ்சம் பிந்தி விட்டது.படித்தேன்.கவர்மென்ட் வேலையை நம்புவதை விட,பழகிய தொழிலை தொடர்வதும் நல்லது தான்!என்ன ஆச்சோ?????

    ReplyDelete
  14. ////மனதுக்கு பிடித்த விசயம் என்றால் பதிவாளராக சண்டை போட்டாலும் நல்ல விடயம் என்றால் தட்டிக்கொடுக்க வேண்டுமே என்பதைப்போலத்தான்.////ஆயிரத்தில்,ஏன் கோடியில் ஒரு வார்த்தை என்று கூடச் சொல்லலாம்!

    ReplyDelete
  15. தொடர்வதும் நல்லது தான்!என்ன ஆச்சோ?????//வாங்கோ யோகா ஐயா நலமா பகல் வணக்கம் ஆனால் விதி!!!

    ReplyDelete
  16. ஆயிரத்தில்,ஏன் கோடியில் ஒரு வார்த்தை என்று கூடச் சொல்லலாம்!

    2 June 2012 04:53// ஹ்ஹி அது ராகுல் கதை தனிமரம் இல்லை!ம்ம்ம்

    ReplyDelete
  17. இண்டைக்கெண்டாலும் பகல் சாப்பாடு கிடைக்குமோ நேசன்.நான் இன்னும் சமைக்கேல்ல.கோப்பி வேண்டாம்....நேற்று எல்லாரையும் மிஸ் பண்ணிட்டேன்.பெரிய அட்டகாசம்தான் நடந்திருக்கு.

    டேய்....காக்கா....என்ன நடக்குது.கால் நடக்குது சொல்லுவினம் பாருங்கோ அப்பா.

    அப்பா சாப்பிட்டாச்சோ.இல்லாட்டி பகல் நித்திரையோ !

    ரெவரி இரவுக்குத்தான் வருவார்.சுகமா இருக்கிறாரோ !

    ReplyDelete
  18. ’’தேடல் மிக்க உலகில் தேடு உன் பார்வையில் எதிர்காலம் என்ன?’’

    தத்துவம் தத்துவம்....தேடினாத்தான் எதிர்காலமே கையில கிடைக்கும்.சும்மா இருந்தா.....அவ்வளவும்தான்.வாழ்க்கை நித்திரையாகிடும் !

    ReplyDelete
  19. நேசன்...உப்புமடச் சந்தி ஆக்கள் 3 பேர் இங்க குந்திக்கொண்டிருக்கினம்.ஏனாம்.கோப்பி குடுத்தனீங்களே.இருக்கட்டும் எனக்குக் காவலுக்கு.ஆரும் கொத்த வந்தா நல்லா பிராண்டிவிடட்டும் கொர்ர்ர்ர்ர்ர்ர் !

    காகாகாகாகா......எங்க காணேல்ல ஆளை.கலாவோட சண்டைக்கு போய்ட்டுது வில்லிக்(வில்லன்) காக்கா !

    ReplyDelete
  20. இண்டைக்கெண்டாலும் பகல் சாப்பாடு கிடைக்குமோ நேசன்.நான் இன்னும் சமைக்கேல்ல.கோப்பி வேண்டாம்....நேற்று எல்லாரையும் மிஸ் பண்ணிட்டேன்.பெரிய அட்டகாசம்தான் நடந்திருக்கு.

    டேய்....காக்கா....என்ன நடக்குது.கால் நடக்குது சொல்லுவினம் பாருங்கோ அப்பா.

    அப்பா சாப்பிட்டாச்சோ.இல்லாட்டி பகல் நித்திரையோ !

    ரெவரி இரவுக்குத்தான் வருவார்.சுகமா இருக்கிறாரோ !

    2 June 2012 05:27
    ஹேமா said...// வாங்கோ ஹேமா சாப்பாடு தயார் இனித்தான் புழுங்கல் சோறு சாப்பாடு!

    ReplyDelete
  21. தத்துவம் தத்துவம்....தேடினாத்தான் எதிர்காலமே கையில கிடைக்கும்.சும்மா இருந்தா.....அவ்வளவும்தான்.வாழ்க்கை நித்திரையாகிடும் !

    2 June 2012 05:30 // ஹீ அது அவன் சொன்னான் தனிமரம் நித்திரைதான் அதிகம் கலாப்பாட்டி சொன்ன் ஆரேஞ்சுக்கல்ர் பூவோ ராகுல் அவன் சிக்க மாட்டான்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஇ

    ReplyDelete
  22. பாட்டு எப்பவும்போல.காட்சிதான் சூப்பர்.ரசனைக்குப் பஞ்சமேயில்லை நேசனுக்கு !

    அழகான ஒரு ஆளின்ர படம் போட்டிருக்கீங்க நேசன்...ஹிஹி !

    ReplyDelete
  23. ’’கலாப்பாட்டி சொன்ன் ஆரேஞ்சுக்கல்ர்’’

    பாவம் கலா....நல்லா மாட்டிக்கொண்டா உங்கள் எல்லாரிட்டயும்.ஆரோ ஊரில இருந்து வந்திருக்கினம் போல அவவிட்ட.இல்லாட்டித் துலைஞ்சீங்கள்.இருங்கோ இருங்கோ வரும் ஆள் ஆறுதலா.அதோட நேரச்சிக்கல் சிங்கப்பூருக்கும் பிரான்சுக்கும் !

    ReplyDelete
  24. நேசன்...உப்புமடச் சந்தி ஆக்கள் 3 பேர் இங்க குந்திக்கொண்டிருக்கினம்.ஏனாம்.கோப்பி குடுத்தனீங்களே.இருக்கட்டும் எனக்குக் காவலுக்கு.ஆரும் கொத்த வந்தா நல்லா பிராண்டிவிடட்டும் கொர்ர்ர்ர்ர்ர்ர் !

    காகாகாகாகா......எங்க காணேல்ல ஆளை.கலாவோட சண்டைக்கு போய்ட்டுது வில்லிக்(வில்லன்) காக்கா !// ஹீ அப்படி இல்லை நாத்தனாரைவிட்டுட்டு நான் வனவாசம் போக போறன் அவா எல்லாரையும் சமாளிப்பா. நாத்தனார் பதவி என்ன குழுத்தலைவர் பதவியா உள்குதுப்போட ஹீஈஈஈஈ ஹேமா!ஹீஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  25. பாட்டு எப்பவும்போல.காட்சிதான் சூப்பர்.ரசனைக்குப் பஞ்சமேயில்லை நேசனுக்கு !

    அழகான ஒரு ஆளின்ர படம் போட்டிருக்கீங்க நேசன்...ஹிஹி !

    2 June 2012 05:39 //ம்ம்ம் அழகு தான் தேவதை ஆனால் ம்ம்ம்ம் வலி! இனவாதம் /மொழிவாதம் அப்புறம் நம்ம கிராமியச்சண்டை உங்க கதை கொஞ்சம் மறந்து போச்சு அகிலன் ம்ம்ம்ம்

    ReplyDelete
  26. பாவம் கலா....நல்லா மாட்டிக்கொண்டா உங்கள் எல்லாரிட்டயும்.ஆரோ ஊரில இருந்து வந்திருக்கினம் போல அவவிட்ட.இல்லாட்டித் துலைஞ்சீங்கள்.இருங்கோ இருங்கோ வரும் ஆள் ஆறுதலா.அதோட நேரச்சிக்கல் சிங்கப்பூருக்கும் பிரான்சுக்கும் !
    /// நிச்சயம் பாவம் கலா பாட்டி பார்க்கலாம் நேரில் ஹேமா விரைவில் போவேன் என் உறவு மச்சான்கள் அங்கே பார்க்கலாம் லிட்டில் இந்தியாவில் ஏதாவது கோயிலில் இல்லை காந்திவிலாசில்!ஹீஈஈஈஈஈஈ ,பால்க்கோப்பி குடிப்பது அங்கு தானே நான்!
    2 June 2012 05:41

    ReplyDelete
  27. என்ன அண்ணா இன்னைக்கு ஆக்கள் குறைஞ்சு போச்சு.

    மலையக வாழ்வு அருமையானதுதான் நேசா அண்ணா...

    ReplyDelete
  28. என்ன அண்ணா இன்னைக்கு ஆக்கள் குறைஞ்சு போச்சு.

    மலையக வாழ்வு அருமையானதுதான் நேசா அண்ணா...

    2 June 2012 05:57/// நன்றி எஸ்தர்-சபி ஒவ்வொருத்தருக்கும் நேரம் இருக்கவேணும் தானே !

    ReplyDelete
  29. தென்னக்கோன் தாத்தா வித்தியாசமான கதாபாத்திரம்தான். பாவம் ராகுல்! சாரத்தைக் கட்டிக் கொண்டு கணினிப் படிப்பை விட்டுவிட்டு சுருட்டுக் கடையில் நிற்க வேண்டியதுதானா? அடுத்த பகுதிக்கு ஆவலுடன் வருகிறேன் நேசன்.

    ReplyDelete
  30. தென்னக்கோன் தாத்தா வித்தியாசமான கதாபாத்திரம்தான். பாவம் ராகுல்! சாரத்தைக் கட்டிக் கொண்டு கணினிப் படிப்பை விட்டுவிட்டு சுருட்டுக் கடையில் நிற்க வேண்டியதுதானா? அடுத்த பகுதிக்கு ஆவலுடன் வருகிறேன் நேசன்.

    2 June 2012 06:17 //வாங்கோ கணேஸ் அண்ணாஸ் நலமா இன்று இரவு வருவான் மிச்சக் காட்சியுடன் / நன்றி வருகைக்கும் கருதுக்கும்!

    ReplyDelete
  31. தமிழீழ கால்பந்து அணி விவா உலக கோப்பையில் பங்கு பெறுகிறது.பார்க்க ...http://tamilmottu.blogspot.in/2012/06/blog-post_02.html

    ReplyDelete
  32. பிச்சி பிச்சி மாமா ...கருக்கு மட்டைக்கு வேலை
    வரும் போல இருக்கே ....கலா அண்ணி
    எனக்கு நாத்தனார் அப்புடி எண்டால்
    உங்களுக்கு என்ன வருமோ அதான் முறை ...\\\\\\\\\\



    ஐத்தான் கியித்தன் ஏதாவது சத்தம்
    கேட்ட்ச்சி பிசிடுவேன் பிச்சி....\\\\\\\\\

    அத்தான்,அத்தான் என் யோகத்தான்
    நலமாத்தான்?சாப்பிட்டிகளாத்தான்?
    தூங்கினீகளாத்தான்?எத்தன அத்தான்
    சொல்லிவிட்டேன்
    பாக்கிறன்... என்ன நடக்கிதன்று?

    யோகாத்தான் மகனை நம்பி,மாமாமுறையெல்லாம்
    சொல்லாமல் ..முறையை மாத்துங்கோகலைராணி
    நான் மகனைக் கொடுக்க {இந்தவாயாடிக்கு}
    விடமாட்டேனே....

    ஹேமா மாதிரி மரிவாதையா அப்பா சொல்லணும்
    என்ன!புரிந்ததா?
    அதென்ன பிச்சி,பிச்சி ?
    நாத்தனாரே எனக்குப் பிச்சிப்பூ பிடிக்காது
    மல்லிகை மட்டும்தான் பிடிக்கும் அதனால...
    என்அப்பா ஊரு..அல்வாவும் {திருநெல்வேலி}
    என் அவக..ஊரு மல்லிகையும்...
    கொடுத்துஉங்க அண்ணாவிடம் அனுபடி என்
    மிகப் பிரியமான நாத்தனாரே!

    ReplyDelete
  33. அனைவரும் நலமா?....
    நான் இல்லாமல் வாய் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்டு
    விட்டது அதனால் தான் இரவு 12.25 வந்து களைப்பென்றும் பாராமல்
    சூடாக...நாத்தனாருக்கு வேப்பங்காய்
    போட்டுக் காப்பி கலந்து வைத்துவிட்டுப் போகிறேன்
    நேசன் மறக்காமல் குடிக்கச் சொல்லுங்கள.

    ReplyDelete
  34. ஹாய் டார்லிங்!ஹௌ ஆர் யூ?????ஆக்கள் இல்லாத நேரத்தில வந்து ஆருக்குக் கோப்பி ஊத்திப் போட்டுப் போறீங்கள்?ஹ!ஹ!ஹா!!!!!!!!!

    ReplyDelete
  35. கலா said...
    அனைவரும் நலமா?....
    நான் இல்லாமல் வாய் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈண்டு
    விட்டது அதனால் தான் இரவு 12.25 வந்து களைப்பென்றும் பாராமல்
    சூடாக...நாத்தனாருக்கு வேப்பங்காய்
    போட்டுக் காப்பி கலந்து வைத்துவிட்டுப் போகிறேன்
    நேசன் மறக்காமல் குடிக்கச் சொல்லுங்கள.
    // வாங்கோ கலா நன்றி வருகைக்கும் கருதுக்கும் முதலில் ஓய்வு எடுங்கோ பிறகு பேசலாம்!
    2 June 2012 09:26

    ReplyDelete
  36. ஹாய் டார்லிங்!ஹௌ ஆர் யூ?????ஆக்கள் இல்லாத நேரத்தில வந்து ஆருக்குக் கோப்பி ஊத்திப் போட்டுப் போறீங்கள்?ஹ!ஹ!ஹா!!!!!!!!!

    2 June 2012 09:39 // ஹீ பாட்டி பாவம் ஐயா!

    ReplyDelete