03 June 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-64

சிலரின் கேள்விகள் மனதில் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்து போய் விடும் .

காலம் சென்றாலும் மறக்காது என்பதுபோலவே கல்பனாவின் கேள்வி மனதைக்குடைந்து கொண்டிருந்தது.

 யார் கல்பனா ?என்மீது ஏன் இப்படி எழுதணும் .என் கோபம் அவளுக்குப் புரியுமா?

 நேரில் ஊரில் பல விடயத்தை பார்த்து விட்டுத் தானே  வந்தேன். இந்திய நடுவன் அரசிற்கு  சார்பா எழதும் சுதந்திரம் இருக்கலாம்.

 ஆனால் நம்மீது காழ்ப்புணர்வு வரக்கூடாது அல்லவே .

எங்கள் இழப்பு இவர்கள் மூடிமறைக்க என்ன காஸ்மீர் போலவா ?சொந்த மக்களை எப்படி எல்லாம் என்று வேட்டையாடுறாங்க என்று வாய்திறக்கமாட்டாங்க.

 ஆனால் எங்கோ ஒரு மூலையில் எல்லாம் இழந்து கொண்டு
 இருக்க்கும் நம் செயலை வீவேகம் இல்லை .ஒரு அரசியல்
தலைவர் முக்கியம் என்று சொல்லும் எல்லாரும் அவரின் தவற்றையும் கண்டிக்க வேண்டும் .

கை முக்கியம் அவர்களுக்கு
ஆனால் கையால் இழந்த நம் குல மானம் மரியாதை ,உயிரின் பெறுமதி ,உடமையின் பெறுமதி ,எல்லாம் புரியாமல் மரியாதை மிக்க ஜெயக்காந்தன் ஒரு சொல் கேளீர் கட்டுரைத் தொகுப்பில் இப்படி எழுதியது ராகுலைப்  பாதித்தது .

அதன் பின் அவர் நூல் படிப்பதையே விட்டு  விட்டான் ராகுல் .

ஆனால் கல்பனா போன்றோருக்கு எப்போதும் இலங்கையில் இருந்தாலும் இந்தியா  மீது ஒருஈர்ப்பு இருக்கும் .

கிரீக்கட் நடந்தாலும், எல்லாரும் ஊக்கிவிப்பது அந்த நாட்டை.

 ஆனால் இலங்கையில் வடக்கில் நடந்த எந்த விடயமும் இவர்களுக்குத் தெரியாது என்பது போல கடந்து சொல்வார்கள்.

 இவர்கள் ஏன் இப்படி?

 ஆளும் வர்க்கம் எப்போதும் இந்த மக்கள் முன்னேற்றம் காணக்கூடாது என்றே எஜாமான் விசுவாசம் போல ஆட்சித்தலைவர்களின் பின் தோட்டத்தலைவர்களை தங்களுக்கு விசுவாசம் இருக்கும் அரசியல் தலைவர்களை உருவாக்கி வெற்றி பெற்றுவருகின்றது.

 இவர்களுக்கு விளிப்புணர்வு கொடுக்க முயலும் ,சாமானிய கட்சித் தலைவர்கள் மீது ஏதாவது அவதூறு வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிடும் .

வெளியில் வர மீண்டும் இந்திய ஆளும் வர்க்கம் உதவி செய்து அவர்களையும் தம் அடிமை ஆக்கிவிடும்.

 இது எல்லாம் தெரிந்து தான் ராகுல் மக்கள் விடுதலை முண்ணனியின்  மேடைப் பேச்சாளர்கள் கூட  நேரம் கிடைக்கும் போது சாதாரனமாக பேசுவான்.

 அவர்கள் மூலம் தான் அவனும் இந்த உணர்வை புரிந்து கொண்டான்.

இப்படி இருக்கும் போது ஆட்சியாளர்களின் வடக்கு மீதான வெற்றியில் .

பலர் மீண்டும் பதுளை வந்தார்கள் .
அதில் தந்தை வழி சிறிய தந்தையும் செல்லன் மாமாவுக்கு உதவிக்கு வர ராகுலுக்கு விடிவு .

கல்லாப்பெட்டியில் இருந்து கொஞ்சம் வெளியில் வர வசதி கிடைத்த போது ரிசஸ்சும் வர .உயர்தரம் என்ற உலகத்திற்கு நுழைய வழிகிடைத்தது.

  இவன் சுருட்டுக்கடையில் புகையிலைக்கு பாணி அடிக்கவும் ,சாரத்தோடு நாங்க சொல்லும் சாமான்கள்  வீட்டுக்கு வாங்கி வருவான் .

என்று எண்ணிய  பெரிய மச்சாள் முகத்தில் கரிபூசியாச்சு.

எல்லாப்பாடமும் சிறப்பாக செய்து வெற்றிவாகை சூடியதை நம்ப முடியவில்லை அவனின் பெறுபேறுச் சீட்டு வீட்டுக்கு வரும் வரை .பெரிய மச்சாளுக்கு .!

சுகி சொன்னால் வீட்டில் புலி ஒன்று எலியாப் போச்சுடா குண்டா .

இனி பேசமாட்டாங்க நீ என்ன எனக்கு வாங்கித்தருவாய் ?

நான் சொன்னேன் குண்டன் பாஸ் ஆகிடுவான் என்று.

 நீ அடிவேண்டுவாய் இப்படி மற்றவர்களுக்கு முன் என் பெயரைச் சொல்லாமல்  பட்டப் பெயர் சொன்னால் .

நீ மட்டும் என் பெயர் சுகியை எப்படி மாற்றிச் சொல்ல முடியும்?

சங்கீதச் டீச்சருக்கு கொண்டாட்டம் தன் பெயரை அந்தக் கலைத்தாயின் பள்ளியில் முதலில் படித்த சங்கீத மாணவர்கள் எல்லாம் வெற்றி பெற்றதில் .

கடையில் வந்தா அன்று.

 நான் கூட நினைக்கவில்லை நீயும் பாடி சங்கீதம் இப்படி உனக்கு கைகொடுக்கும் என்று.

 நான் நினைக்கின்றேன் நீ எழுத்தில் இருக்கும் திறமையை வைத்து அதிகம் தப்பிவிட்டாய் போல !எது எப்படியோ இனி என்ன  செய்ய உத்தேசம்?

 தொடரும்......
///////
இன்று பிறந்தநாளும், இனிய திருமணநாளையும் சிறப்பாகக் கொண்டாடும் பதிவாளர் செங்கோவி ஐயாவுக்கு  என் இதயம் கனிந்த நல்  வாழ்த்துக்கள்!

54 comments:

  1. மாமா அண்ணா பதிவு ....


    பதவி படிச்சிட்டு வாறன் அண்ணா

    ReplyDelete
  2. மதிய வணக்கம் கலை நலம் தானே மாமா பிஸியா இருப்பார் நீங்க மெதுவா படியுங்கோஓஓஓஓஒ! ஒரு பால்க்கோப்பி குடியுங்கோஓஓஓஓஒ

    ReplyDelete
  3. மதிய மாலை வணக்கம் அண்ணா ...நான் சுகமே ....


    படித்து போட்டிணன் அண்ணா ...எனக்கும் அரசியல் க்கும் தூரம் ...


    பாட்டு நல்லா இருக்கு அண்ணா ....


    ஹேமா அக்காள் வருவாங்க எண்டு நினைக்கேன் காப்பி குடிக்க ,,,,,

    மாமா பிஸி தான் போல ...

    ReplyDelete
  4. அண்ணா நீங்கள் சுகமா ...சாப்டீங்களா

    ReplyDelete
  5. படித்து போட்டிணன் அண்ணா ...எனக்கும் அரசியல் க்கும் தூரம் .//ஹீஆனால் ஓட்டுப்போடுவீங்களோ!..

    ReplyDelete
  6. பாட்டு நல்லா இருக்கு அண்ணா ....
    // ராஜா கைவண்ணம் அந்த இயக்குணர் இப்போது மீண்டும் வருகின்றாராம்!

    ReplyDelete
  7. சாப்டீங்களா// இனித்தான் கலை நீங்கள் சாப்பிட்டாச்சோ என்ன கறி!

    ReplyDelete
  8. /ஹீஆனால் ஓட்டுப்போடுவீங்களோ!..///
    \

    ஒரு தரம் மட்டும் தான் போட்டு இருக்கேன் அண்ணா ...சுயட்சையா நினன்வங்களுக்கு ...

    ReplyDelete
  9. இண்டைக்கு பழைய சோறு , பச்ச மிளகாய் ,வெங்காயம் ,அப்புறம் முட்டை பொடிமாஸ் சாபிட்டினான் அண்ணா ...

    ReplyDelete
  10. ஒரு தரம் மட்டும் தான் போட்டு இருக்கேன் அண்ணா ...சுயட்சையா நினன்வங்களுக்கு // நல்ல விசயம் மாற்றுக்கருத்து முக்கியம் தானே!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... நான் நாட்டில் இரண்டுமுறை போட்டேன் இப்போது இல்லை வாக்குரிமை இங்கு!ம்ம்ம்

    ReplyDelete
  11. நான் நாட்டில் இரண்டுமுறை போட்டேன் இப்போது இல்லை வாக்குரிமை இங்கு!ம்ம்ம்///

    அண்ணா வரி கொடுகீன்கள் ,,ஆனால் வாக்குரிமை இல்லையா

    ReplyDelete
  12. இண்டைக்கு பழைய சோறு , பச்ச மிளகாய் ,வெங்காயம் ,அப்புறம் முட்டை பொடிமாஸ் சாபிட்டினான் அண்ணா // ஆஹா வெயிலுக்கு நல்லம் ஆனால் இது எல்லாம் விட்டு விட்டு இப்ப சண்டே என்றால் மக்டொனால்ஸ்! அடையார் நளபாகம் போகும் காலம் கலை!ம்ம்ம்

    ReplyDelete
  13. அண்ணா வரி கொடுகீன்கள் ,,ஆனால் வாக்குரிமை இல்லையா

    3 June 2012 04:12 // வாக்குரிமை கேடக முதலில் குடியுரிமை கேட்கணும் கலை இங்கு நான் இன்னும் ஜோசிக்கவில்லை என்றாவது ஒருநாள் விடியும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ! அதில் !!!

    ReplyDelete
  14. அண்ணா நான் இரவு வாறன் ..கொஞ்சம் படிக்கணும் ....மாமா வும் லேட் தான் போலும் ...



    மாமா ஆ உங்களை ரொம்ப மிஸ் பன்னுரம் .....


    டாட்டா அண்ணா

    அண்ணா டாட்டா

    அக்கா டாட்டா

    ReplyDelete
  15. அண்ணா வரி கொடுகீன்கள் // வரி எல்லாருக்கும் பொது அது எந்த வதிவிட அனுமதி இருப்போருக்கும் ஆனால் வாக்குரிமை சுதேசிகளுக்குத்தான்!

    ReplyDelete
  16. அண்ணா டாட்டா
    // நன்றி கலை அக்காவும் கவிதை போட்டு இருக்கின்றா! இரவு சந்திப்போம்!

    ReplyDelete
  17. நானும் வந்திட்டேன் கருவாச்சி.அண்ணா எப்ப பதிவு போடுவார்ன்னு தெரியாமலே இருக்கு.உங்கண்ணா எப்பிடின்னே ஒரு கனக்கு வைக்க முடில....அதுவேற அடிக்க வரப்போறா....காக்கா !

    காக்கா சுகமா.நேசன் இண்டைக்கு கோப்பி இல்லாட்டி ஸ்பெஷல் ஏதாச்சுமோ !

    எங்க அப்பாவைக் காணேல்ல.எங்காச்சும் ‘மொய்’ எழுதப் போய்ட்டாரோ !

    ரெவரி....சுகமா !

    ReplyDelete
  18. வாங்கோ ஹேமா நலம் தானே .ம்ம் நல்ல கோழிக்கறி புழுங்கல் சோறு இருக்கு சாப்பிட விரும்பினால் சுறா வறுவல் .ஹீ

    ReplyDelete
  19. அண்ணா எப்ப பதிவு போடுவார்ன்னு தெரியாமலே இருக்கு.உங்கண்ணா எப்பிடின்னே ஒரு கனக்கு வைக்க முடில....//ஹீ நானே எனக்கு என்ன கணக்கு என்று இதுவரை தெரியாமத்தானே மாடு மேய்க்கின்றேன் !ஹீஈ

    ReplyDelete
  20. ’சிலரின் கேள்விகள் மனதில் விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்து போய் விடும்.’

    ம்ம்.....ஆனால் சரியான பதில் கிடைக்கிறவரைக்கும் இருக்கிற வலி அந்த இதயத்துக்கு மட்டும்தான் தெரியும்.இல்லையோ நேசன் !

    ReplyDelete
  21. அண்ணா எப்ப பதிவு போடுவார்ன்னு தெரியாமலே இருக்கு.//நேற்றே சொன்னேன் ஹேமா இன்று இரண்டு பால்க்கோப்பி வரும் என்று !ஹீ யோகா ஐயாவுக்கும் சோலி இருக்குமே ! மொய்க்கு இன்னொரு பேர் சொல்லுவாங்களாமே அற்றம் வைக்கின்றது என்று நான் கேள்விப்பட்டேன் நேற்றுத்தான்!ம்ம்ம்

    ReplyDelete
  22. ’நான் சொன்னேன் குண்டன் பாஸ் ஆகிடுவான் என்று.’

    ராகுல் குண்டரோ.ஹிஹிஹி !

    கார்ட்டூன் சூப்பரோ சூப்பர் !

    ReplyDelete
  23. ம்ம்.....ஆனால் சரியான பதில் கிடைக்கிறவரைக்கும் இருக்கிற வலி அந்த இதயத்துக்கு மட்டும்தான் தெரியும்.இல்லையோ நேசன் ! // நிச்சயமாக ஹேமா எனக்கும் இதில் இருக்கு ஒருசில  வலி !!ம்ம்ம் காலம் பதில் சொல்லும் தானே!

    ReplyDelete
  24. பாட்டு.....அவரது குரலும் அந்தப் பாட்டின் சோகமும் சேர்ந்து குழைஞ்சு சோகப்பாட்டைக்கூட கேக்கல்லன் என்கிற ஆசையை வைக்கும்.நல்ல தெரிவுப் பாட்டு நேசன் !

    ReplyDelete
  25. ’மொய்க்கு இன்னொரு பேர் சொல்லுவாங்களாமே அற்றம் வைக்கின்றது என்று...’

    ஓ எனக்கும் புதுசா இருக்கே,ஒருவேளை இடத்திற்கு இடம்கூட வேற வேற சொற்களைப் பாவிப்பார்கள்.அப்பிடியாய்கூட இருக்கலாம் நேசன் !

    ReplyDelete
  26. ராகுல் குண்டரோ.ஹிஹிஹி !/அன்பில் சிலர் வார்த்தையால் பப்பாளியில் ஏத்துவது இயல்பு ஒன்றே அதுவும் மச்சாள் சொல்லுவது நிஜம்தானே! ஆனாலும் ராகுல் நான் பார்த்த்போது குண்டுதான்!ம்ம்ம்

    ReplyDelete
  27. கார்ட்டூன் சூப்பரோ சூப்பர் !// நன்றி ஹேமா!

    ReplyDelete
  28. கோழிக்கறி புழுங்கல் சோறு இருக்கு சாப்பிட விரும்பினால் சுறா வறுவல்....வாசம் குடிக்கிறன் நேசன் ஹஹஹாஹாஹா...ம் நானும் நல்ல சுகம் நேசன் !

    ReplyDelete
  29. பாட்டு.....அவரது குரலும் அந்தப் பாட்டின் சோகமும் சேர்ந்து குழைஞ்சு சோகப்பாட்டைக்கூட கேக்கல்லன் என்கிற ஆசையை வைக்கும்.நல்ல தெரிவுப் பாட்டு நேசன் !// ராஜாவின் கவிவரிகள் ஓரு வாத்தை வரும் ஓரு நூலு அவிழ்ந்தாலும் உருண்டோடும் !!ம்ம்ம்

    ReplyDelete
  30. ஓ எனக்கும் புதுசா இருக்கே,ஒருவேளை இடத்திற்கு இடம்கூட வேற வேற சொற்களைப் பாவிப்பார்கள்.அப்பிடியாய்கூட இருக்கலாம் நேசன் !

    3 June 2012 04:46 /// ம்ம்ம் இருக்கலாம் ஹேமா! ஆனால் யாழிலில் இருக்காம்! இன்றும்

    ReplyDelete
  31. செங்கோவி ஐயாவுக்கு என் இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  32. கோழிக்கறி புழுங்கல் சோறு இருக்கு சாப்பிட விரும்பினால் சுறா வறுவல்....வாசம் குடிக்கிறன் நேசன் ஹஹஹாஹாஹா...ம் நானும் நல்ல சுகம் நேசன் !

    3 June 2012 04:50 //ம்ம் அது எப்ப்டி மூக்கில் விசயம் முதுகு எல்லாம் ஐரோப்பாவின் உள்ளீடுகள் கவிதையில் சொல்லமுடியுது உங்களாள் மட்டும் ஹேமா !!ம்ம்ம்

    ReplyDelete
  33. அப்பாவையும் காணேல்ல இண்டைக்கு.கலையும் போய்ட்டா.சரி நேசன் நீங்களும் சாப்பிடுங்கோ.பிறகா வருவன்....!

    ReplyDelete
  34. செங்கோவி ஐயாவுக்கு என் இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்களும்!

    3 June 2012 04:53 // நன்றி ஹேமா அவர் இதைப்பார்ப்பார் நேரம் கிடைக்கும் போது!

    ReplyDelete
  35. அப்பாவையும் காணேல்ல இண்டைக்கு.கலையும் போய்ட்டா.சரி நேசன் நீங்களும் சாப்பிடுங்கோ.பிறகா வருவன்....!

    3 June 2012 04:56 // நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் சந்திப்போம் இரவு!

    ReplyDelete
  36. கவிதையில என்ன விளங்கிச்சு சொல்லுங்கோ பாப்பம்.உங்களுக்கு அந்தக் கவிதை என்ன சொல்லிச்சு ?

    ReplyDelete
  37. கவிதையில் குறீயீடு அதிகம் ஹேமா என்னைப்பொறுத்தவரையில் அதுவும் வேம்புக்குயில் மூக்குலுக்குள் சாரம் அனுப்ப சுவைத்தவன் நாக்கில் கசப்பு அந்த இறுதிநாட்களில் அங்கே நடந்த விடயத்தை சொல்லிச்செல்வது போல இருக்கு ஹேமா!

    ReplyDelete
  38. வன்புணர்வின் வலிகள் ஓரு புறம் அதன் தாக்கம் பின் அழிப்புக்கு வழிகள் என நான் ஜோசிக்கின்றேன் ஹேமா நொதித்து நிறம்மாற என்பது எனக்கு அந்த வாந்திபோல இருக்கும் என ஜோசிக்கின்றேன் பொழிப்பு எழுத்தலாம் பல வாறு ஆனால் வாசிப்போர் ஒவ்வொரு பொருள்கொள்வது தானே கவிதை ஹேமா!

    ReplyDelete
  39. ம்ம் கவிதையை...சரியாக உள்வாங்கியிருக்கிறீங்கள் நேசன்.உள்ளீடு விபச்சாரம் !

    ReplyDelete
  40. பிற்பகல் வணக்கம்,எல்லோருக்கும்!ஒரே மூச்சில் படித்தேன்,முடித்தேன்."கை"முக்கியம்,ஹ!ஹ!ஹா!!!!!இன்று வரைக்கும் அப்படித்தானே,நேசன்?

    ReplyDelete
  41. மருமகளே சாப்பிட்டாச்சா?நைட்டு பாக்கலாம்.

    ReplyDelete
  42. ஒரு ஆள் வந்து போயிருக்கிறா!தேடியிருக்கிறா!வாங்கோ கவிதாயினி,அம்முக்குட்டி!சுகமா இருக்கிறியளா?சாப்பிட்டீங்களா?கவிதை பார்த்தேன்,எனக்கு விளங்கினதை சொல்லியிருக்கிறேன்.

    ReplyDelete
  43. "கை" யால் இழந்த நம் குல மானம் மரியாதை ,உயிரின் பெறுமதி ,உடமையின் பெறுமதி ,எல்லாம் புரியாமல்..................////அது புரியாது,புரியவும் மாட்டாது,இனி வரும் காலங்களிலும் கூட! சீட்(கதிரை)ஒன்றே குறி!(பணமும்!)

    ReplyDelete
  44. "மொய்" வைப்பது என்று சொல்வது,தமிழ் நாட்டு வழக்கு!ஈழத்தில்,பணச்சடங்கு/அற்ஹோம் என்று சொல்வார்கள்.

    ReplyDelete
  45. பிற்பகல் வணக்கம்,எல்லோருக்கும்!ஒரே மூச்சில் படித்தேன்,முடித்தேன்."கை"முக்கியம்,ஹ!ஹ!ஹா!!!!!இன்று வரைக்கும் அப்படித்தானே,நேசன்?

    3 June 2012 06:00// வணக்கம் யோகா ஐயா!ம்ம்ம் மூச்சுவாங்குது பந்தி அதிகம் என்பதால்!ம்ம்ம் கை முக்கியம் நம்பிக்கை ஹீஈஈ! ம்ற்றக்கை வெறும் அல்லக்கை!ஹீ

    ReplyDelete
  46. ஒரு ஆள் வந்து போயிருக்கிறா!தேடியிருக்கிறா!வாங்கோ கவிதாயினி,அம்முக்குட்டி!சுகமா இருக்கிறியளா?சாப்பிட்டீங்களா?கவிதை பார்த்தேன்,எனக்கு விளங்கினதை சொல்லியிருக்கிறேன்.

    3 June 2012 06:03 // வந்தா மாமா நலமா என்றுகொண்டு!

    ReplyDelete
  47. கை" யால் இழந்த நம் குல மானம் மரியாதை ,உயிரின் பெறுமதி ,உடமையின் பெறுமதி ,எல்லாம் புரியாமல்..................////அது புரியாது,புரியவும் மாட்டாது,இனி வரும் காலங்களிலும் கூட! சீட்(கதிரை)ஒன்றே குறி!(பணமும்!)

    3 June 2012 06:12 //ம்ம்ம் அதுவும் வியாபாரம் ஆச்சே!ம்ம்

    ReplyDelete
  48. மொய்" வைப்பது என்று சொல்வது,தமிழ் நாட்டு வழக்கு!ஈழத்தில்,பணச்சடங்கு/அற்ஹோம் என்று சொல்வார்கள்.// நான் ஊரில் இருக்கும் போது பொருளாக கொடுப்பதால் இதைப்பற்றி ஆய்வது இல்லை ஆனால் இங்கு நேற்று ஓரு இடத்தில் இப்படி அற்றம் கேள்விப்பட்டேன்!

    ReplyDelete
  49. மாமா எங்க ஊரில் கொஞ்சம் இடி மின்னல் ...நைட் யும் கிளமட் மோசம் இருந்தால் வரமுடியாது ....


    இரவு வணக்கம் மாமா அண்ட் அக்கா அண்ணா

    ReplyDelete
  50. "அற்ஹோம்" தான் மருவி "அற்றம்" என்று ஆகி விட்டது."அற்ஹோம்"(At- HOME) என்பது ஆங்கிலச் சொல்.வீட்டில் விசேஷம் என்று கொள்ளலாம்."அற்றோம்" என்று சொல்லக் கூடக் கேட்டிருக்கிறேன்,ஹி!ஹி!ஹி!!!!

    ReplyDelete
  51. கலை said...

    மாமா எங்க ஊரில் கொஞ்சம் இடி மின்னல் ...நைட் யும் கிளமட் மோசம் இருந்தால் வரமுடியாது ....


    இரவு வணக்கம் மாமா அண்ட் அக்கா,அண்ணா.////இரவு வணக்கம்,கலை!பரவாயில்லை,முடிந்தால் வாருங்கள்,மாமா காத்திருப்பேன்!

    ReplyDelete
  52. மாமா எங்க ஊரில் கொஞ்சம் இடி மின்னல் ...நைட் யும் கிளமட் மோசம் இருந்தால் வரமுடியாது ....


    இரவு வணக்கம் மாமா அண்ட் அக்கா அண்ணா

    3 June 2012 09:10 /// இரவு வணக்கம் கலை முடிந்தால் வாருங்கோ இல்லை நாளை இரவு சந்திப்போம்!

    ReplyDelete
  53. அற்ஹோம்" தான் மருவி "அற்றம்" என்று ஆகி விட்டது."அற்ஹோம்"(At- HOME) என்பது ஆங்கிலச் சொல்.வீட்டில் விசேஷம் என்று கொள்ளலாம்."அற்றோம்" என்று சொல்லக் கூடக் கேட்டிருக்கிறேன்,ஹி!ஹி!ஹி!!!!
    // நன்றி தகவலுக்கு யோகா ஐயா! அற்றம் சொன்னவர் என் ந்ண்ப்ர் வேலைத்தளத்தில் எத்தூர் போனாலும்.....!ஹீஈஈஈஈ
    3 June 2012 09:28

    ReplyDelete
  54. மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    அண்ணா ஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete