11 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன் --74


சுற்றுலா என்பது மனதுக்கு இதமும் உள்ளத்துக்கு உவகையும் தரும் ஒரு விடயம். ஆனால் எல்லாரும் போவது இல்லை சுற்றுலா 

.இலங்கையில் சுற்றுலா போக அதிகம் இடம் இருக்கு 
.ஆனால் எல்லாம் யுத்தம் என்ற அரக்கணும் சந்தேகம் என்ற பாதுகாப்பு பேய்யும் ஒருத்தரையும் அசுவாசித்துப் பார்க்க விடுவதில்லை .

 இப்படித்தான் இலங்கையில் இருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு சுற்றுலா மையம் உலகமுடிவு 


.இது இலங்கையில் நுவரேலியாவிற்கு அண்மையில் இருக்கும் இடம். இதற்கு பதுளையில் இருந்து வெலிமடை ஊடாக கொஸ்லாந்த வழியாகவும் போகமுடியும். பலாங்கொட வழியாகவும் போகமுடியும். உண்மையில் இது பலாங்கொடையின் இன்னொரு புறம் எனலாம் .


 இந்த உலகமுடிவு பார்க்க பல திக்கில் இருந்து வெளிநாட்டவர் பலர் வருவார்கள். நீண்ட புள்வெளி அதில் சில நீர் தாவளம் தாண்டி உலக முடிவு பார்த்தால்! மனதில் இருக்கும் சுறாவளியை எல்லாம் தூக்கியடிக்கும் நீர் வீழ்ச்சி ! மிகவும் ரம்மியம் மிக்க பகுதி அதுக்கு இந்தப்பாடசாலையில் இருந்து ஒரு சுற்றுலா போனோம் .மாணவர்கள் எல்லாம்!காதலர்களின் அன்புச் சரணலயம் இது .சில காதல் ஜோடிகளின் இறுதிப்பயணம் இந்த உலக முடிவில் தான் நடக்கும் .

 பொலிஸ் தேடுவது மூன்று நாட்களின் பின் பலாங்கொட ஆற்றின் கரைகளில் சிதைந்த உடல்களை .இப்படியான உலக முடிவு பார்க்க கலைத்தாயின் மாணவர்கள் எல்லாருமாக 16 பேர் போன பயணம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. 

அங்கு போய் இயற்கையை ரசித்துவிட்டு


 "மலைமகள் முகடுதனில் மலைமகள் மார்பில் 
நிலமகள் நீந்திவந்து நீர்மகள் 
நிறைமாத கர்ப்பினிவயிற்றில் இருந்து 
முதல் உதையோடு வெளிவரும் மழலை போல
நீந்திவரும் நீர்வீழ்ச்சி ! 

குளிர் மேகங்கள் கூட்டம் போல 
நீர்ச்சாரல் ஒடிவிழும் .கன்னத்தில் மஞ்சள் பூசும் 

வளைக்காப்பு செய்யும் சீர்மந்தம் போல !
 சிரூங்கார வளையல்கள் கோடிதரவா 
மாமன் சீதனம் என வளையல்கள் போல 
நீர்வளையம் ஓடும் அருவிதனைக் காண .

 ஆயிரம் கவிதை வரும் உலக முடிவின் பசும்தரையில் இருந்தால். 

பாசமாக! மச்சாள் தரும் முத்தம் போல நீர்வீழ்ச்சி 
முத்தமிட்டுச் செல்லும். அதில் ஒரு மரம் இருக்கும் காட்சி.
 காண ஓடி வாருங்கள் . 

அந்த மரம் சொல்லும் எனக்குப் பிடித்தவள் பெயர் .
 செதுக்கி விட்டேன் மரத்தில் செல்லமாக
 சேர்ப்பாயா !என் அன்பை மலைமகளிடம்!!! 



ரசித்துவிட்டு வரும் வழியில் எல்லாரும் கம்பன் சொன்ன இலங்காபுரி வானரக்கூட்டம் களிப்பில் கிடந்த நேரத்தில் அனுமன் புகுந்ததுபோல சோமபானம் குடித்துவிட்டு சந்தோஸமாக வந்தோம். 


வரும் வழியில் சங்கரும் ராகுலும் எவ்வளவோ பிரகாஸ்க்கு ..சொன்னோம் . "மச்சான் உனக்கு இது பழக்கம் இல்லை ஓவராக அடிக்காத. அப்புறம் வாந்தி வரும்டா "" சொல்லியும் கேட்காமல் பிரகாஸ் ..அதிகமாக அருந்திவிட்டான் 

. பதுளை மீண்ட போது சங்கரும் மற்ற நண்பர்களும் இவனை வீட்டில் விட்டுவிட்டு வந்தபோது 

ராகுல் பிரகாஸ் வீட்டை போகவில்லை. வசந்தா டீச்சருக்கு தெரியும் இன்று ராகுலும் ,சுகுமாரும் சுற்றுலா போய்விட்டனம் .

என்று செல்லன் மாமாவுக்கு தெரியாது. ராகுலும் போறான் என்று. சுற்றுலாப் பயணம் எல்லாம் உன்காசில் உழைத்துப் போ என்பதே அவர் வாக்கு.

 ராகுல் தன் டியூசன் கொப்பியை கல்பனாவிடம் கொடுத்து இருந்தான் நோட்ஸ் எழுதிவையுங்கோ வகுப்பு முடிய நூலகத்தில் தயவு செய்து காத்திருந்தால் நான் சுற்றுலா முடித்து வரும் போது வாங்குகின்றேன் .

 மாமா கேட்டால் வகுப்புக்கு போன ஆதாரம் இருக்கு. டீச்சரிடம் வந்து கேட்கமாட்டார் என்ற தைரியம் இருந்திச்சு ராகுலுக்கு.

 "அப்போது கல்பனா பார்வையில் கொன்றால் அடச்சீ உன்னையும் நல்லவன் என நம்பினேன் .நீ எல்லாருடன் சேர்ந்து குடித்துவிட்டு வாராய் இனி முகம் பார்க்காத போய்விட்டாள் கொப்பியை தந்துவிட்டு.!

 வீட்டில் வந்த பிரகாஸ்!.. சோமபானம் குடித்தது வெளியில் வாந்தி வடிவில் வீட்டை நாறடித்தது.ஏற்கனவே பிரகாஸ் ஸ்டெல்லா பின்னால் காதலில் அழையும் விடயம் அவன் தாய்க்கு சித்தம் கலங்கியிருந்தது. 

வடக்கில் இருந்து வந்தவன் பதுளையில் ஒரு கிறிஸ்தவ மகளை கைபிடிப்பதோ? படிக்க விட்டால் இப்படி ஜோடியாக அவன் பூங்காக்களில் குடையின் நிழலில் ஒதுங்கும் விடயம் எல்லாம் ராகுலுக்குத் தெரியும்.

 ஆனால் பிரகாஸ் குமரன் சேரிடம் படிக்கும் வகுப்பில் தான் இந்த ஸ்டெல்லாவை சந்திச்சதும். பின் காதலில் கரைந்து போனதும். தெரியும் . அது நிறைவேறாது என்று சங்கரும் ,ராகுலும் சொன்னபோது சண்டையாகிப்போனதன் பின் இந்த சுற்றுலாவில் தான் நட்பாக வந்து வார்த்தை பேசினான் ராகுலுடன் . 

ஒரு சோமபானம் வீட்டில் சங்காரம் !தேன் கூட்டில் கல்லெறிந்தது போல ஆகிவிட்டது. பிரகாஸ் ..அம்மா பாடசாலையில் வந்து ஆமினா டீச்சரிடம் புகார் மனுக்கொடுக்க .குற்றப்பத்திரம் வாசிக்கும் படலம் தொடங்கியாச்சு.

 " என்ன ராகுல் நீங்களும் போனீங்களா என்ன உயர்தரம் வந்தாப்பிறகு உங்களுக்கு கொஞ்சம் தலைக்கனம் வந்திட்டுதல்லா. சாதாரணதரத்தில் இருந்த ராகுல் இப்போது மோசம் இல்லையா? என்ன நடந்தது யசோ டீச்சர் கூட சண்டை. இப்ப நீங்க எல்லாம் சுற்றுலா போய் இப்படி அவனை சீரலிய காரணம் என்று சொல்லிவிட்டுப் போறா .என்னல்லா இந்த பள்ளிக்கூடத்தில் நீங்க ஒரு பழைய மாணவன் .


பிரகாஸ் இப்ப வந்தவன் .இதுவரை உங்க மீது வராத குற்றச்சாட்டு எல்லாம் இப்ப வருகின்றது ஏன் ?? என்ன படிக்காமல் சுருட்டுக்கடையில் சுருட்டு விற்க நினைப்போ ?உங்க முதலாளியை கூப்பிடவா பள்ளிக்கூடம் 

!" ஐயோ டீச்சர் வேண்டாம் .இன்னும் கொஞ்சக்காலம் தான். சுற்றுலா போனது அவருக்குத் தெரியாது டீச்சர்.

யசோ டீச்சர் தான் பிழையாக நினைக்கின்றா . "டீச்சருக்குத் தெரியும் தானே. உங்க வீட்டில் ஆங்கிலம் படிக்க நான் எப்ப வந்தாலும் டீச்சரிடம் எல்லாம் சொல்லுவன் தானே " ராகுல் முதலில் யசோ டீச்சரிடம் மன்னிப்பு கேள் .

தப்பு அந்த டீச்சரிடம் இருந்தாலும் நீ மாணவன் !

எப்போதும் பணிவு வேண்டும். இன்று வெளிநடப்பு பின் பாராளமன்றத்தில் செருப்பு வீசுவது, சட்டமூலத்தை நெருப்பு வைப்பது ,செங்கோலைத் தூக்கிக்கொண்டு ஓடுவது எல்லாம் இங்க இருந்து தான் தொடங்கும். ஆகவே முதலில் பட்டப்படிப்பு படிக்காட்டியும் பணிவு வேண்டும். என்னல்லா நான் சொல்லுறது தப்பு இல்லையே.!

 " அப்புறம் என்ன வகுப்பில் நடக்குது? ஆளாளக்கு ஒருத்தியோட கைபிடிச்சு படிக்கின்ற நேரத்தில் இப்படி? ஏன் அவசரம் நல்ல ஒரு வேலையில் சேர்ந்து செட்டில் ஆனபின் செய்யிற வேலையை இப்போது." ராகுல் முதலில் போய் யசோ டீச்சரிடம் மன்னிப்புக்கேட்டு விட்டு திரும்பி வா கொஞ்சம் கதைக்கணும் . வெளியில் வந்த போது சங்கர் இருந்தான். என்னாச்சு மச்சான் ? பிரகாஸ் சாட்டர் பண்ணீட்டான்இரு வாரன்!யசோ டீச்சரிடம் போட்டு!



///தொடரும்..

சாட்டர்- சொதப்பல்- சகோதரமொழிச்சொல்!.

80 comments:

  1. aaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
  2. மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ


    அண்ணா படிசிட்டு வாறன்

    ReplyDelete
  3. வாங்க கலை இரவு வணக்கம் நலம் தானே ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ அப்பா உடல் நிலை எப்படி!

    ReplyDelete
  4. இரவு வணக்கம் அண்ணா ...அப்பா நல்லா சுகம் அண்ணா ...


    இண்டு தி, நகர் போனேனே அண்ணா ...

    மாமா என்ன இன்னும் வரல ...

    மாமா என்னாச்சி ..நல்லா இருக்கீங்களா ...

    ReplyDelete
  5. ராகுல் அண்ணா குடிப்பன்களா ....

    ராகுல் அண்ணன் ரொம்ப நல்லவர் நினைச்சேனே

    ReplyDelete
  6. ANNAA தமிழ் மனம் காணல

    ReplyDelete
  7. ஆஹா அப்ப புடவைக்கடை காலி!ஹீஇ

    ReplyDelete
  8. மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  9. ராகுல் அண்ணன் ரொம்ப நல்லவர் நினைச்சேனே/ ஹீ அதுதான் கல்பனாவே சொல்லிவிட்டாளே!ம்ம் அந்த நேரம் அப்படி ஒரு ஜாலி தொடர்கின்ரேன் அவனின் அடுத்த கட்டத்தை நாளை!ஹீஈஈஈஈஈஇ

    ReplyDelete
  10. புடவை சுடி எல்லாம் எடுக்கல அண்ணா ,,,,

    அப்பாவிடம் கொவசிக்கிட்டு தி.நகர் போனிணன் ...போய் ஒரு புதுசா டிஜிட்டல் கமெரா அப்புறம் கொலுசு அப்புறம் செருப்பு மட்டும் வாங்கிட்டு முனு ஐஸ் கிரீம் சைட்டு வந்துட்டேன் அண்ணா ...


    மாமா என்ன அண்ணா இன்னும் வரல ...மாமா மேல சாயங்காலம் நிரிய பாரத்தை இறக்கி வைச்சேன் ...

    ReplyDelete
  11. ANNAA தமிழ் மனம் காணல//ம்ம் தொழில்நுட்ப திருத்தம் போல அது திரட்டியின் சீர் அமைப்புக்கு தேவைதான் நாளை இணைக்கலாம்!

    ReplyDelete
  12. அண்ணா இன்னைக்கு ராகுல் அண்ணன் வருவாங்க தானே ...

    ReplyDelete
  13. அப்பாவிடம் கொவசிக்கிட்டு தி.நகர் போனிணன் ...போய் ஒரு புதுசா டிஜிட்டல் கமெரா அப்புறம் கொலுசு அப்புறம் செருப்பு மட்டும் வாங்கிட்டு முனு ஐஸ் கிரீம் சைட்டு வந்துட்டேன் அண்ணா ...
    // ஹீ கொலுசு ஜீடிஆரில் எடுத்தாப்போல!

    ReplyDelete
  14. அண்ணா இன்னைக்கு ராகுல் அண்ணன் வருவாங்க தானே .// ஹீ அவன் நண்பன் வர இருந்தான் தொழில் நுட்பம் சொதப்பல்!.

    ReplyDelete
  15. அண்ணா மாமா இன்னும் வரல ....


    என்னாச்சி மாமா க்கு ...


    மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
    மாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ


    ஹேமா அக்கா உங்க அப்பாவை கூட்திட்டு வாங்கோ அக்கா

    ReplyDelete
  16. ஹீ அவன் நண்பன் வர இருந்தான் தொழில் நுட்பம் சொதப்பல்!.//


    பிராகஸ் ,சுகுமார் அண்ணா க்களா

    ReplyDelete
  17. சிறிய நேரத்தில் வாரன் கலை அவசர வேலை வெளியில் போறன்! சாரி! அஞ்சலின் பதிவை பாருங்கோ வாரன்! விரைவில்

    ReplyDelete
  18. வந்துட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏன் .................இரவு வணக்கம் எல்லோருக்கும்!!!

    ReplyDelete
  19. ஹும்ம் ...போய் வாங்கோ அண்ணா ...


    மாமா இன்னும் வரல ...மாமா ட்ட பேசிட்டு தன் போவேன் ...


    அஞ்சு அக்காள் வீட்டுக்கு போயிடு வாறன்

    ReplyDelete
  20. பதிவு படிக்கவே இல்லை.கத்தின சத்தத்தில காத்து டமாரமாயிடுச்சு!!!

    ReplyDelete
  21. வாங்கோ மாமா ...இரவு வணக்கம் ...என்ன இவ்வளவு லேட் ஆ ...


    சாப்டீங்களா மாமா

    ReplyDelete
  22. நாயக் கண்டா கல்லக் காணோம்,கல்லக் கண்டா நாயக் காணோம் நெலம ஆயிடுச்சு எனக்கு,ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  23. என்னசிங்க மாமா ...என்ன சொளுரிங்க ....மீ தான் அப்போதிலிருந்தே வெயிட் பண்ணுறேன்

    ReplyDelete
  24. இரவு வணக்கம் மருமகளே!கம்பியூட்டர் கொஞ்சம் ப்ராப்ளம்.அதோட பையன் ப்ராப்ளம்,ஹி!ஹி!ஹி!!!இன்னும் சாப்புடல,உங்களைத் தூங்க வச்சிட்டு அப்புறமா,மாமா சாப்புடுவேன்!இன்னிக்கு ஸ்பெஷல் புட்டு,கோழிக்கறி.நீங்க என்ன சாப்புட்டீங்க?

    ReplyDelete
  25. மாமா நேற்று சிவா அங்கிள் க்கு பிறந்த நாள் ...அஞ்சு அக்கா பதிவு போட்டு இருக்காங்க

    ReplyDelete
  26. கலை said...

    என்னசிங்க மாமா ...என்ன சொளுரிங்க ....மீ தான் அப்போதிலிருந்தே வெயிட் பண்ணுறேன்.///இல்ல நீங்க அஞ்சு அக்கா வூட்டுக்குப் போறதா சொல்லிட்டிருந்தீங்களா?அண்ணா வேற வெளிய போயிட்டாரா?அதான் சொன்னேன்!

    ReplyDelete
  27. மாமா குட்டிஸ் தான் ஏதேனும் கொம்புட்டர் நூண்டுவாங்கனு நினைத்தேன்...தம்பிய திட்டத்தின்க மாமா ...சின்னவர் தானே .....

    மீ கோழிக்குழம்பு சாப்பிட்டேன் மாமா ...அம்மா செய்தாங்க சூப்பர் ஆ இருஞ்சி ...

    ReplyDelete
  28. கலை said...

    மாமா நேற்று சிவா அங்கிள் க்கு பிறந்த நாள் ...அஞ்சு அக்கா பதிவு போட்டு இருக்காங்க////அப்புடியா?நான் ரொம்ப நேரமா கம்பியூட்டர் கூட மல்லுக் கட்டிக்கிடிருக்கேன்,எங்கயும் போவல!

    ReplyDelete
  29. கலை said...

    மாமா குட்டிஸ் தான் ஏதேனும் கொம்புட்டர் நூண்டுவாங்கனு நினைத்தேன்...தம்பிய திட்டத்தின்க மாமா ...சின்னவர் தானே .....?////ஆமாமா,சின்னவர் தான்.செய்யுறதெல்லாம் ............................திட்டக் கூடாதாக்கும்?

    ReplyDelete
  30. அஞ்சு அக்கா வீட்டில கால வைசிகஈடே இஞ்ச இருக்கேன் மாமா

    ReplyDelete
  31. கோழிக் குழம்பா?ஏன்னா ஒரு ஒற்றுமை?ஹி!ஹி!ஹி!!!

    ReplyDelete
  32. கலை said...

    அஞ்சு அக்கா வீட்டில கால வைசிகஈடே இஞ்ச இருக்கேன் மாமா.///அப்புடீல்லாம் ரெண்டு தொணியில கால் வைக்கப்புடாது.போயி என்ன சேதின்னு கேட்டுப்புட்டு வாங்க,மாமா வெயிட் பண்ணுறேன்.இல்ல, இல்ல நானும் வரேன்!

    ReplyDelete
  33. ஆமாமா,சின்னவர் தான்.செய்யுறதெல்லாம் ............................திட்டக் கூடாதாக்கும்?///


    வளர்ந்தால் சரி ஆகிடுவாங்க மாமா ...இப்பம் கொஞ்சம் அப்புடித்தன் ...நீங்கள் அன்பா சொல்லுங்க மாமா

    ReplyDelete
  34. கோழிக் குழம்பா?ஏன்னா ஒரு ஒற்றுமை?ஹி!ஹி!ஹி!!!///


    மாமா ஆஅ மீ இன்னைக்கு கொலுசு வாங்கினேனே...இப்போ காலில போட்டுக் கிட்டேன்

    ReplyDelete
  35. மாமா ஆஆஆஆஆஆஅ அஞ்சு அக்கா வீயிளிருது வந்துட்டேன் மீ

    ReplyDelete
  36. நானும் போயிட்டு வந்துட்டேன்,நானும் பாட்ட மாத்தச் சொல்லிட்டேன்.கொலுசு வாங்கினீங்களா?அப்போ நாளைக்கி அண்ணா "வெள்ளிக் கொலுசுமணி" பாட்டு அண்ணா போடுவாரு!!!!

    ReplyDelete
  37. இரவு வணக்கம் யோகா ஐயா நலம் தானே அவசரம் வெளியில் போனேன்!ம்ம்

    ReplyDelete
  38. பதிவு படிக்கவே இல்லை.கத்தின சத்தத்தில காத்து டமாரமாயிடுச்சு!!!//ஹீஈ

    ReplyDelete
  39. ஹ ஹ ஹா ...ஏன் மாமா இப்படி ...மாமா எங்க உங்கட செல்ல மகள் அருமை மகள்

    ReplyDelete
  40. கலை said...

    ஆமாமா,சின்னவர் தான்.செய்யுறதெல்லாம் ............................திட்டக் கூடாதாக்கும்?///


    வளர்ந்தால் சரி ஆகிடுவாங்க மாமா ...இப்பம் கொஞ்சம் அப்புடித்தன் ...நீங்கள் அன்பா சொல்லுங்க மாமா.///ரொம்ப திட்டுறதில்ல.அன்பா தான் சொல்லுறது,அப்புறம் ஏழு மணிக்கு மேல உக்காரக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்.இப்போ எக்ஸாம் முடிஞ்சிச்சு.பொழுது போக்கு இல்லியாம்!!!!

    ReplyDelete
  41. யக் கண்டா கல்லக் காணோம்,கல்லக் கண்டா நாயக் காணோம் நெலம ஆயிடுச்சு எனக்கு,ஹ!ஹ!ஹா!!!!!!

    11 June 2012 11:29 //ம்ம் எனக்கும் அதே நிலை இருப்பம் என்று வந்தால் சில உறவுகள் அழைப்பில்!ம்ம்ம்

    ReplyDelete
  42. இரவு வணக்காம் நேசன்!நலமா?கூட்டமே இல்ல.

    ReplyDelete
  43. கலை said...

    ஹ ஹ ஹா ...ஏன் மாமா இப்படி ...மாமா எங்க உங்கட செல்ல மகள் அருமை மகள்?///வேலையோ,என்னமோ?வருவா!

    ReplyDelete
  44. பிராகஸ் ,சுகுமார் அண்ணா க்களா

    11 June 2012 11:24// இல்லை சங்கர் வருவான்! பிரகாஸ்,சுகுமார் எல்லாம் இப்போது ராகுடன் தொடர்பில் இல்லை!ம்ம் அதனால் நீஈஈஈஈஈஈஈஈண்ட பிரிவு!ம்ம்

    ReplyDelete
  45. அப்புறம் ஏழு மணிக்கு மேல உக்காரக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்.இப்போ எக்ஸாம் முடிஞ்சிச்சு.பொழுது போக்கு இல்லியாம்!!!!///

    என்னாது இரவு கொம்புட்டர் வேணுமா ...பிச்சி பிச்சி சின்னவரே ,,,,கம்பூட்டர் லாம் இரவு கொடுக்க முடியாது ஸ்ட்ரீட் ஆ சொல்லிடுங்கோ மாமா ..ஹ ஹ ....

    ReplyDelete
  46. இன்னிக்கு ஸ்பெஷல் புட்டு,கோழிக்கறி.நீங்க என்ன சாப்புட்டீங்க?

    11 June 2012 11:31 // ஆஹா புட்டும் கோழிக்கறி நல்ல பொருத்தம்!

    ReplyDelete
  47. மாமா நேற்று சிவா அங்கிள் க்கு பிறந்த நாள் ...அஞ்சு அக்கா பதிவு போட்டு இருக்காங்க//ம்ம் நான் வாழ்த்துச் சொல்லிவிட்டேன் கலை!

    ReplyDelete
  48. அதெல்லாம் ஸ்ரிக்டா சொல்லி,பொம்பளப் புள்ளங்க உக்கார மாட்டாங்க,இவரு தான் பெரிய இவராட்டம்!!!!!!!!!

    ReplyDelete
  49. அம்மா செய்தாங்க சூப்பர் ஆ இருஞ்சி ...

    11 June 2012 11:36 // அம்மா கையால் எது செய்தாலும் சூப்பர் தான் கலை!ம்ம்

    ReplyDelete
  50. நான் வாழ்த்துச் சொல்லிவிட்டேன் கலை!.///


    உங்களுக்கு எப்போதுமே பொறுப்பு ஜாஸ்தி அண்ணா

    ReplyDelete
  51. கூட்டமே இல்ல.// இல்லை ஒரு சிலர் கொஞ்சம் முக்கியவிடயங்கள் அதுதான் வெளியில் போய் விட்டு வந்தேன் அவர்கள் சகிதம்!ம்ம்

    ReplyDelete
  52. அதெல்லாம் ஸ்ரிக்டா சொல்லி,பொம்பளப் புள்ளங்க உக்கார மாட்டாங்க,இவரு தான் பெரிய இவராட்டம்!!!!!!!!!//

    ஹ ஹ ஹா ...திட்டதிங்கோ மாமா ...மனசுக்குள்ள சின்னவர் திட்டுவாங்க போங்க ...அப்பா மட்டும் கணினி முன்னாடியே உட்காந்து தனியா சிரித்து பெசுறவர் நம்மள மட்டும் திட்டி போடுறவர் எண்டு ....

    ReplyDelete
  53. இப்போ காலில போட்டுக் கிட்டேன்

    11 June 2012 11:43// ஆஹா நானும் என் மச்சாளுக்கு ஆசைப்பட்டு வாங்கிக் கொடுத்தன் சென்னையில் அண்ணி ஊருக்கு போகும் போது என்னிடமே தந்து விட்டாள் நாத்தனாரே!! அண்ணா பத்திரமாக வைத்திருக்கின்றேன் பெட்டியில்!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  54. உங்களுக்கு எப்போதுமே பொறுப்பு ஜாஸ்தி அண்ணா

    11 June 2012 12:01 // சீச்சீ உறவுகள் சிறப்புநாள் முக்கியம் தானே!ம்ம்

    ReplyDelete
  55. உண்மை தான்,மருமகளே!புள்ளைங்க எல்லாரும் பாத்துக்கிட்டிருப்பாங்க,அத்தை கூட!ஏன் சிரிக்கிறாருன்னு தெரியாமலே!சொல்லியிருக்கேன்,இந்தியாவுலேருந்து,சுவிசிலேருந்தேல்லாம் ஆளுங்க வராங்கன்னு!

    ReplyDelete
  56. பார்த்தீங்களா மாமா ..அண்ணன் அண்ணி நியாபஹகமா கொலுசு பத்திரமா வைத்து இருக்காங்க ...

    எப்போதும் அண்ணியும் நீங்களும் இதேப போல சந்தோசமா இருக்கணும் அண்ணா ...

    ReplyDelete
  57. கணினி முன்னாடியே உட்காந்து தனியா சிரித்து பெசுறவர் நம்மள மட்டும் திட்டி போடுறவர் எண்டு ....

    11 June 2012 12:03 // உண்மைதான் கலை!ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  58. சொல்லியிருக்கேன்,இந்தியாவுலேருந்து,சுவிசிலேருந்தேல்லாம் ஆளுங்க வராங்கன்னு!

    11 June 2012 12:06 // ஹீ பாரிசில் இருந்தும் தான் !

    ReplyDelete
  59. உண்மை தான்,மருமகளே!புள்ளைங்க எல்லாரும் பாத்துக்கிட்டிருப்பாங்க,அத்தை கூட!ஏன் சிரிக்கிறாருன்னு தெரியாமலே!சொல்லியிருக்கேன்,இந்தியாவுலேருந்து,சுவிசிலேருந்தேல்லாம் ஆளுங்க வராங்கன்னு!
    //



    ஹ ஹ ஹா மாமா பிரான்சை விட்டுடீங்களே மாமா ...அண்ணா ....ஹ ஹ ஹா

    ReplyDelete
  60. எப்போதும் அண்ணியும் நீங்களும் இதேப போல சந்தோசமா இருக்கணும் அண்ணா ...

    11 June 2012 12:06 //ம்ம் அப்படி எல்லாம் மச்சாளை தவிக்க விடமாட்டன் கலை பாவம் கொஞ்சம் காத்திருப்பு ம்ம் விரைவில் வந்திடுவா!

    ReplyDelete
  61. தனிமரம் said...

    சொல்லியிருக்கேன்,இந்தியாவுலேருந்து,சுவிசிலேருந்தேல்லாம் ஆளுங்க வராங்கன்னு!

    // ஹீ பாரிசில் இருந்தும் தான் !////அது வேற தனியாச் சொல்லோணுமோ எண்டு தான்.................

    ReplyDelete
  62. ரே ரீ அண்ணா கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சி ...அண்ணன் இன்னைக்கு வரணுமே ..ஏன் வரல ..


    நாளை வரட்டும் ...


    ஹேமா அக்காளும் இன்னும் வரல ...இரவுப் பனி போல

    ReplyDelete
  63. அது வேற தனியாச் சொல்லோணுமோ எண்டு தான்.................

    11 June 2012 12:10 // அதுவும் சரிதான்

    ReplyDelete
  64. கலை said...

    பார்த்தீங்களா மாமா ..அண்ணன் அண்ணி நியாபஹகமா கொலுசு பத்திரமா வைத்து இருக்காங்க ...////அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்!!!!

    ReplyDelete
  65. ம்ம் அப்படி எல்லாம் மச்சாளை தவிக்க விடமாட்டன் கலை பாவம் கொஞ்சம் காத்திருப்பு ம்ம் விரைவில் வந்திடுவா/////


    பிரெஞ்சு கார அன்னிக்குத்தான் கொடுத்து வைக்கலா இப்புடி ஒரு பாசமான மச்சான் ...

    ReplyDelete
  66. பார்த்தீங்களா மாமா ..அண்ணன் அண்ணி நியாபஹகமா கொலுசு பத்திரமா வைத்து இருக்காங்க ...////அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்!!!!///


    அயி மாமா விண்ணைத் தாண்டி வருவாயா பட பாட்டு லாம் அண்ணனுக்காக பாடுரான்களே ...

    ReplyDelete
  67. ரே ரீ அண்ணா கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சி ...அண்ணன் இன்னைக்கு வரணுமே ..ஏன் வரல ..


    நாளை வரட்டும் ...


    ஹேமா அக்காளும் இன்னும் வரல ...இரவுப் பனி போல
    // நாளை வரலாம் சில நேரம் கவிதாயினி வேலை போல நன்றி கலை ஓய்வு எடுங்கோ நாளை சந்திப்போம்! வீட்டில் எல்லாரையும் கேட்டதாக சொல்லுங்கோ!
    11 June 2012 12:10

    ReplyDelete
  68. பிரெஞ்சு கார அன்னிக்குத்தான் கொடுத்து வைக்கலா இப்புடி ஒரு பாசமான மச்சான் ...

    11 June 2012 12:11 // ஆஹா கலை தொடங்கிவிட்டால் கலாய்க்க அப்படி ஒன்றும் இல்லை!ஹீஈஈஈஈஇ

    ReplyDelete
  69. ஹும்ம் சரி அண்ணா ...


    மாமா கொஞ்சம் தூக்கமும் வருது ..


    நீங்க சாப்ட்டுட்டு தூங்குங்க மாமா ...சின்னவரையும் தூங்க சொல்லுங்க ....


    காலை சந்திப்பம் மாமா ...


    டாட்டா மாமா


    அண்ணா டாட்டா

    ஹேமா அக்கா,ரே ரீ அண்ணா வணக்கம் அண்ட் டாட்டா

    ReplyDelete
  70. அயி மாமா விண்ணைத் தாண்டி வருவாயா பட பாட்டு லாம் அண்ணனுக்காக பாடுரான்களே ...

    11 June 2012 12:13 //ஹீ அதுக்கு முன்னே இந்த முதுமொழி வந்துவிட்டது கலை வி!தா இடைச்செருகல் கவிதாயினி தாமரை செய்தது!ம்ம்

    ReplyDelete
  71. mamaa நான் தூங்கிட்டேன் ....

    நீங்களும் சாப்ட்டுட்டு தூங்குங்கோ ...சரியா ....

    அண்ணா நீங்களும் ரெஸ்ட் எடுங்க


    கவிதாயினி காக்கா ஆக்கா மட்டும் தனியா வந்து ஆரின பால்க் காப்பி குடிக்கட்டும்

    ReplyDelete
  72. போயிட்டு வாங்கோ,மருமகளே!!நாளை சந்திப்பம்.பேசியது சந்தோஷம்,நல்லிரவு!!!குட் நைட்!!!!

    ReplyDelete
  73. பார்த்தீங்களா மாமா ..அண்ணன் அண்ணி நியாபஹகமா கொலுசு பத்திரமா வைத்து இருக்காங்க ...////அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்!!!!

    11 June 2012 12:11//ம்ம் நன்றி யோகா ஐயா நான் விடைபெறுகின்றேன் நாளை சந்திப்போம் இனிய உறக்கம் விழிமூடி ஹேமா வந்தால் சொல்லுங்கோ இரவு வணக்கம்!

    ReplyDelete
  74. அப்படியே ஆகட்டும்,நேசன்!!!!ம்ம்மம்மம்ம்ம்ம் பார்க்கிறேன்!நல்லிரவு உங்களுக்கும்!

    ReplyDelete
  75. ம்ம்ம் வழமை போல் சுவாரஸ்யம்தான் அண்ணா..

    இடையில் லாகர்ர்ர்ர் படம் எதற்கு அண்ணா???

    ReplyDelete
  76. காலை வணக்கம்,நேசன்!

    ReplyDelete
  77. வணக்கம் சகோதரர் நேசன்,
    நலமா?

    "மலைமகள் முகடுதனில் மலைமகள் மார்பில்
    நிலமகள் நீந்திவந்து நீர்மகள்
    நிறைமாத கர்ப்பினிவயிற்றில் இருந்து
    முதல் உதையோடு வெளிவரும் மழலை போல
    நீந்திவரும் நீர்வீழ்ச்சி !

    என்ன ஒரு அற்புதமான சிந்தனை..
    வியந்துபோனேன் தங்களின் கற்பனா சக்தியை எண்ணி..

    நீர்வீழ்ச்சியை காண்கையில் மனம் துள்ளாட்டம் போடும்..
    அதன் அழகினில் மனம் லயித்து ஆயிரம் ஆயிரம்
    கவிகள் பாடும்...

    ReplyDelete
  78. ம்ம்ம் வழமை போல் சுவாரஸ்யம்தான் அண்ணா..

    இடையில் லாகர்ர்ர்ர் படம் எதற்கு அண்ணா???

    11 June 2012 19:55 // நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துக்கும் படம் சில அயல்நாட்டு நண்பர்களுக்குக்காக!

    ReplyDelete
  79. காலை வணக்கம்,நேசன்!// மாலை வணக்கம் யோகா ஐயா!

    ReplyDelete
  80. வணக்கம் சகோதரர் நேசன்,
    நலமா?

    "மலைமகள் முகடுதனில் மலைமகள் மார்பில்
    நிலமகள் நீந்திவந்து நீர்மகள்
    நிறைமாத கர்ப்பினிவயிற்றில் இருந்து
    முதல் உதையோடு வெளிவரும் மழலை போல
    நீந்திவரும் நீர்வீழ்ச்சி !

    என்ன ஒரு அற்புதமான சிந்தனை..
    வியந்துபோனேன் தங்களின் கற்பனா சக்தியை எண்ணி..

    நீர்வீழ்ச்சியை காண்கையில் மனம் துள்ளாட்டம் போடும்..
    அதன் அழகினில் மனம் லயித்து ஆயிரம் ஆயிரம்
    கவிகள் பாடும்...// வணக்கம் மகி அண்ணா! நான் நலம் நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete