14 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்...-77

சுதந்திரம் என்பது எல்லாவற்றுக்கும் அனுமதிக்க முடியாது. கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் தான் சில நேரங்களில் நன்மை பயக்கும் . 


அதே போல 18 வயதில் வரும் ஹார்மோன்களின் தூண்டல் என்பது காதல் என்ற போர்வையில் காமத்தின் வழிக்கு வடிகால இருக்கும் வாய்க்கால் ஆகும் 


. குளத்து நீரை திறந்து விட்டால் வாய்க்கால் வழி ஓடி நெல்லுக்கு போகணும் நீர். அது புல்லுக்குப் போனால் போதிய வளர்ச்சி நெல்லுக்கு இல்லை புல்லுக்குத்தான். அப்படித்தான் பிரகாசும்!


 வடக்கில் இருந்து போருக்கு அஞ்சி பிணை வைத்துவிட்டு வன்னியில் இருந்து ஓடிவந்து படிக்க கலைத்தாயின் கல்லூரிக்கு. உயர்தரத்திற்கு ஊருவிட்டு வந்தவன் வந்த இடத்தில் ஸ்டெல்லாவை வாலிப லீலையில் காதல் வலையில் விழுந்தான்.




 அதை தனிப்பட்ட முறையில் எதிர்த்த போது விளையாட்டாக இருந்தான். சுற்றுலா வந்த போது அதிகமாக குடித்த செயல் எல்லாம் அவன் தாய்க்கு மனஉளைச்சல் தந்த விடயம் ஆகிப்போன நிலையில் பிரகாசின் அம்மா ...அஞ்சுகம் நண்பர்களின் வீட்டில் போய் குற்றப்பத்திக்கை வாசித்தா . 


பள்ளியில் வந்து சொன்னதும் இல்லாமல் நண்பர்கள் தயாளன் வீடு,சுகுமார் வீடு செல்லன் மாமாகடையில் என பல இடத்திலும் இலங்காபுரியை அனுமன் வைத்த தீ போல மூட்டிவிட்டா .இன்னாரு இன்னாருகூட காதலாம் என் பிள்ளையின் சீரழிவுக்கும் இவங்கள் தான் காரணம். அவங்கள் தான் பதுளை என்றால் உங்க மருமகன் யாழ்ப்பாணம் .சொல்லி இருக்கணும் இல்லையா ?என் மகனுக்கு என்று செல்லன் மாமாவுக்கு கடையில் ஒப்பாரி வைக்க.!




 இரவு வீட்டில் செல்லன் மாமா முகாரி வாசிக்க!


. விடியல் காலை எழும்பி நள்ளிரவு வரை வியாபாரப்போட்டிகள் ,ஊழியர்கள் நிர்வாகம், பணப்பட்டுவாடாக்கள் எனபல வேலைப்பளுவில் இருக்கும் செல்லன் மாமா. ஒரு நாளும் ராகுலிடம் பள்ளிக்கூடப் பிரச்சனைகளை கேட்பதில்லை. பாடசாலை ஆசிரியர்கள் பலர் கடையில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள். அவர்கள் ராகுல் ஏதாவது தவறு செய்தால் வந்து தேவைப்படின் சொல்லுவார்கள். 




.அது எல்லாம் கேட்டு வைத்துவிட்டு தேர்ச்சி அறிக்கையில் கை ஒப்பம் போடும் போது எல்லா பிழைகளையும் பட்டியல் இட்டு குற்றப்பத்திரிக்கை வாசித்துவிட்டு இறுதியாக சொல்லுவார் 




. "படிக்கின்ற வயசில் படிக்காட்டி நாளை சோத்துக்கு பிச்சை எடுக்கும் போது தெரியும் படிப்பின் அருமை. "என்று .


 ஆனால் அதிகம் கோபம் கொள்ளமாட்டார் ஆனால் வழமையை விட உள்குத்தில் நிதாதனம் இழக்கும் பதிவாளர் போல வீட்டுக்கு வேலைக்களைப்பால் வந்தவர். வரும் போது ராகுல் தன் ஒலிப்பேழையை 








உடைத்துவிட்டால் சுகி !








என்பதால் கண்ணத்தில் கைகள் வரைந்த கோடு தழும்பாக இருந்ததை சரோஜா மாமியும் சொல்லி விட.! 




வீடு ரணகளம் ஆனது. " படிக்க விட்டால் படி இல்லை உதவாக்கரையாக ஊர் சுத்தப்போறீயா? 


யார் யாரோ காதலுக்கு எல்லாம் நீ சென்றி பார்க்கின்றீயோ ? 


உன்னால் அந்த அஞ்சுகம் கடையில் வந்து வியாபரம் செய்யும் இடத்தில் என் நேரத்தையும் மினக்கெடுத்தி உனக்கு கொழுப்பு கூடிப்போச்சு. பொடியங்களோட எனக்குத் தெரியாம எல்லா வீடுகளுக்கும் போறியா ?


சுற்றுலா வேற போனீயாமே.?


" இல்ல மாமா நான் போகவில்லை கேளுங்கோ வசந்தா டீச்சரை. போனதுக்கு ஏதாவது புகைப்படக்காட்சி சாட்சி இருக்கோ ?


இல்லையே ??


 ம்ம் இது எல்லாம் கேட்கும் அளவுக்கு வளர்ந்திட்டாய். அப்ப உன்ற நண்பர்கள் பிரச்சனை ஏன் ?என் கடைக்கு வந்திச்சு நீயே ஒரு தண்டச்சோறு. " அதிலயும் தயாளன் தாய்,தகப்பன் கேட்கவில்லை சுகுமார் வீட்டில் யாரும் வரவில்லை. நேற்று பதுளைக்கு வந்த பிரகாஸ் அம்மா எப்படியடா என் கடைக்கு வரலாம்? பேரம்பலத்தார் வீட்டுக் கதை எல்லாம் வியாபார இடத்தில் பேசுவது இல்லை. அது எல்லாம் மறந்து போச்சோ உனக்கு? ஏன் நீயும் யாரையும் ஊரைவிட்டு இழுத்துக்கொண்டு ஓடும் நினைப்பில் இருக்கின்றீயோ?? 




அப்படி நினைப்பு இருந்தால் இன்றோடு தொலைச்சு விடு .பேரம்பலத்தார் இரண்டு பேரரை இறுதிவரை சேர்க்கவில்லை. ஒருத்தர் இப்ப தன்ற மகளுக்கு எங்க மாப்பிள்ளை பார்க்கின்றது என்று குழப்பத்தில். தமிழனா ?சிங்களமா ?என்று நாட்டுப்பிரச்சனை போல வீட்டில் பிரச்சனை. 


மற்றவர் தன் பெட்டைகளுக்கும் தன் வடக்கு வழியா தாய் மலையக வழியா என்று முகம் தொலைந்து அழும் கஸ்ரம் எல்லாம் இந்த வயதில் புரியாது. உனக்கு 




. ."இப்ப வாழ்க்கை வாழை மரம் போல இருக்கும். ஒரு குழை போட்ட பின் வாழை செத்துப் போய்விடும். சாப்பிட வாழைப்பழம் கிடைக்கும் .ஆனால் மரம் இருக்காது. ஆலமரம் போல குடும்பம் முக்கியம் நிழல் கொடுக்க. இப்ப வாழைப்பழம் போல இருக்கும் காதல் .ஆனால் மரம் போல குடும்பம் செய்த்திடும்.


 நீ நண்பர்களுக்கு நல்லது சொல்லியிருக்கணும். அதைவிட்டு இப்படி தாய் வந்து கடையில் ஒப்பாரி வைக்கும் அளவுக்கு நீயும் உன் நண்பர்களும் . நானும் இந்த ஊரில் 40 வருசமாக இருக்கின்றன். 


யாரும் நட்பு என்றும் தன்ற பிள்ளைகள் மலையக உறவோடு சேர்ந்து கெடுக்கின்றான் என்றும் வந்து சொல்ல வில்லை .கெளரவமானது நட்பு அதில் பிரிச்சுப் பேசும் இவனை எல்லாம் ஊரைவிட்டு வந்தும் இங்க பிரிச்சுப் பேசும் வீட்டை நீயும் போகக்கூடாது.! 


என்ற மோளுக்கு ஏன் அடிச்சாய் ?அவள் என்ன உன் பொண்டாட்டியோ ? "நானே மகளை அடித்ததில்லை. உனக்கு எப்படியடா இத்தனை கோபம் ?அதுவும் என் காசில் வாங்கின ஒலிநாடாவுக்கு கை நீளும் அளவுக்கு வந்தபின் . இந்த வீட்டில் உனக்கு இடம் இல்லை எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு இப்பவே கடைக்குப் போ !நான் கோல் பண்ணிச் சொல்லிவிடுகின்றேன் பின் கதவு திறக்கச் சொல்லி வெளிக்கிடு.


 இனி வீட்டுவாசல் மிதிக்கக் கூடாது .உன்ற கொப்பி புத்தகங்கள் எல்லாம் தூக்கு கெதியா . பின்னிரவில் யுத்தம் வந்து ஊர் பாலம் கடக்கும் போது வலிக்காத மனது வலித்தது நாட்குறிப்போடும் கொப்பி புத்தகங்களோடும் வீட்டில் கட்டியிருந்த சாரத்தோடும் படலைக்கு வெளியில் போ என்று செல்லன் மாமா காதைப்பிடித்து இழுத்து திட்டியபோது. !


பள்ளி உடுப்பை தூக்கி எறிந்து செல்லன் மாமா திட்டிய வார்த்தைகள் என்ன !நாலாலியூர் தங்கத்தாத்தா எழுதிய இலங்கைவளம் கேளாத செவி என்ன இரும்பால் ஆன செவியோ ?என் செவி என ராகுல் நினைத்தழுத நிலை அப்போது அசிங்கம் தான் ஆம்பிள்ளை. ஆனால் அழுவது பக்தியில் பேராணந்தம், பரவசம் ! 


நள்ளிரவில் தனியாக கீழ் வீதியில் இருந்து முக்கிய வீதியில் இருக்கும் கடைக்குப் போக அழுத போது. மனம் சொல்லியது ஆலமரமா ?வாழைமரமா ?இந்த ஊரில் ஒரு முகவரி இல்ல எனக்கு. 




இந்த நேரத்தில் தோள் கொடுக்க யாரும் இல்லையே? எனக்கே ஒரு முகவரி இல்லாத போது ஒரு ராஜகுமாரி போல தனிப்பிள்ளையான கல்பனாவை எப்படி காலம் எல்லாம் காப்பாத்த முடியும்?. திருவிழாவில் தெருப்பாடகன் நான் கோயில் சிலையை வீதியில் கொண்டு வந்து வைப்பதா ?வேண்டாம் வாய் திறந்து சொன்னால் தானே அவளுக்குப் புரியும் ராகுல் விரும்புவது. வேண்டாம் என்ற முடிவை எடுத்தான் ராகுல் 


. பேரம்பலத்தார் பேரன் என்ன அனாதையா ? நிச்சயம் நண்பர்கள் வாழ்வில் நான் வித்தியாசமானவனாக இருக்கணும். நாளைக்கு பள்ளியில் பேசலாம் என்ற நினைப்ப்பில் கடைக்குப் போய் படுத்தான் அன்று 3 மணித்தியாலம் படுத்த போது இருந்த !விழிச்சுமையை விட மனச்சுமை அதிகம்.




 இது எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்க எப்படி சுகியால் முடிந்தது? அவளுக்கு கை நீட்டும் உரிமை இருவழியில் இருக்கின்றது இந்த வீட்டில் .ராகுல் தானே முதலில் வந்தவன் அண்ணாக என்றாலும் சரி இல்லை மாமியின் மகன் என்ற மச்சான் உறவு. இதில் இரண்டும் அவனோடு ஒரே தோளில் இருந்தவளுக்கு தெரியுமே ?


 கல்பனா பள்ளியில் கேட்டது ராகுலுக்கு என்ன பிடிக்கும் ,அவரு உங்களுக்கு என்ன முறை ?என்று எல்லாம் வந்து தனிமையில் சொல்லத்தெரிந்தவளுக்கு .வீட்டை விட்டு போக வேண்டாம் அப்பா பேசினார் என்பதற்காக என்று ஒரு வார்த்தை பேசவில்லையே .? வேண்டாத உறவா ராகுல் இனி அவளோடு பேசுவது இல்லை என்று ராகுல் நினைத்தான் அதன் பின் ! 

தொடரும்....

93 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!நலமா?கோப்பி யாருக்கு???

    ReplyDelete
  2. எனக்குத்தான்,நோ டவுட்!!ரெண்டு சகோதரிகளையும் காணயில்லை ,வந்தாக் குடுப்பம்!

    ReplyDelete
  3. வாங்க யோகா ஐயா இரவு வணக்கம் நலம் தானே!ம்ம் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதலில்!

    ReplyDelete
  4. சுதந்திரம் என்பது எல்லாவற்றுக்கும் அனுமதிக்க முடியாது. கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் தான் சில நேரங்களில் நன்மை பயக்கும் .////முதல் வசனமே அமர்க்களமா இருக்கு!

    ReplyDelete
  5. எனக்குத்தான்,நோ டவுட்!!ரெண்டு சகோதரிகளையும் காணயில்லை ,வந்தாக் குடுப்பம்!// ஹீ கலை வரமாட்டா கவிதாயினி வேலை அதிகம் போல!ஹீ

    ReplyDelete
  6. நான் நலம்,நேசன்!ஆத்தா ஊருலாப் போயிட்டா.

    ReplyDelete
  7. தனிமரம் said...

    எனக்குத்தான்,நோ டவுட்!!ரெண்டு சகோதரிகளையும் காணயில்லை ,வந்தாக் குடுப்பம்!// ஹீ கலை வரமாட்டா கவிதாயினி வேலை அதிகம் போல!ஹீ!/////இருக்கும்,இருக்கும்!

    ReplyDelete
  8. முதல் வசனமே அமர்க்களமா இருக்கு!//ம்ம் சிலர் முகத்தில் அடிக்கும் போது வேற என்ன சொல்ல!ம்ம்

    ReplyDelete
  9. நாங்களும் அடிப்பம்!!!!ஹ!ஹ!ஹா!!!!!

    ReplyDelete
  10. ஆத்தா ஊருலாப் போயிட்டா.//ம்ம் ஹீ பொழுதும் போகணும் தானே!

    ReplyDelete
  11. நாங்களும் அடிப்பம்!!!!ஹ!ஹ!ஹா!!!!!// ஓம் பால்க்கோப்பி ஹீ

    ReplyDelete
  12. தனிமரம் said...

    ஆத்தா ஊருலாப் போயிட்டா.//ம்ம் ஹீ பொழுதும் போகணும் தானே!/////அதுவும் சரி தான்!

    ReplyDelete
  13. காதல் என்றால் எத்தனை வியாக்கியானங்கள்???

    ReplyDelete
  14. பாடல் அருமை.சித்திராவின் குரல் இன்று வரை பிசிறாமல்,ஆச்சரியம்!

    ReplyDelete
  15. காதல் என்றால் எத்தனை வியாக்கியானங்கள்???//ம்ம் காலம் பலருக்கு பல அனுபவம் கொடுக்கும் போது அர்த்தம் வேறுபடும்தானே!

    ReplyDelete
  16. பாடல் அருமை.சித்திராவின் குரல் இன்று வரை பிசிறாமல்,ஆச்சரியம்!

    14 June 2012 11:32 //ம்ம் உண்மைதான் ராஜாவின் கைவண்ணம் அறிமுகமே அவர்தானே சின்னக்குயிலுக்கு.

    ReplyDelete
  17. ஆலமரம்/வாழை மரம்!!!!சரியான் உவமானம்!

    ReplyDelete
  18. தனிமரம் said...
    ம்ம் உண்மைதான் ராஜாவின் கைவண்ணம் அறிமுகமே அவர்தானே சின்னக்குயிலுக்கு.////தமிழில்!

    ReplyDelete
  19. சரியான் உவமானம்!// நீங்க சொன்னால் சரி ஏதோ கொஞ்சம் படித்திருக்கின்றேன்!ஹீ தமிழ்!ம்ம்

    ReplyDelete
  20. தனிமரம் said...
    ம்ம் உண்மைதான் ராஜாவின் கைவண்ணம் அறிமுகமே அவர்தானே சின்னக்குயிலுக்கு.////தமிழில்!

    // ஓம் யோகா ஐயா பலே கில்லாடி ஞாபகத்தில்!ஹீ

    ReplyDelete
  21. வந்தேன்.....நேசன்....அப்பா சுகம்தானே.....கோப்பி கிடைக்குமோ !

    கலைக்குட்டி....ஊர் சுத்தப் போய்ட்டாபோல.வரட்டும் வரட்டும்.நேற்றும் வரேலாமப் போச்சு நேசன் !

    ReplyDelete
  22. //குளத்து நீரை திறந்து விட்டால் வாய்க்கால் வழி ஓடி நெல்லுக்கு போகணும் நீர். அது புல்லுக்குப் போனால் போதிய வளர்ச்சி நெல்லுக்கு இல்லை புல்லுக்குத்தான்

    நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்குப் போனால் புண்ணியம்தானே நேசன்.ராகுலுக்குச் சொல்லுங்கோ !

    ReplyDelete
  23. கலைக்குட்டி....ஊர் சுத்தப் போய்ட்டாபோல.வரட்டும் வரட்டும்.நேற்றும் வரேலாமப் போச்சு நேசன் !

    14 June 2012 11:39 //மாலை வணக்கம் ஹேமா வாங்க நலம் தானே!

    ReplyDelete
  24. //கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரம் தான் சில நேரங்களில் நன்மை பயக்கும்.//

    உண்மைதான்....சுதந்திரம் ஒரு கட்டுக்குள்ள இருக்கிற வரைக்கும்தான் சந்தோஷம் எங்கட கைக்குள்ள !

    ReplyDelete
  25. நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்குப் போனால் புண்ணியம்தானே நேசன்.ராகுலுக்குச் சொல்லுங்கோ !

    14 June 2012 11:41 //ம்ம் அதுவும் சரிதான் .

    ReplyDelete
  26. உண்மைதான்....சுதந்திரம் ஒரு கட்டுக்குள்ள இருக்கிற வரைக்கும்தான் சந்தோஷம் எங்கட கைக்குள்ள !// எங்கட கையும் சில நேரம் எல்லை தாண்டக்கூடாது ஆதித சுதந்திரத்தில்.

    ReplyDelete
  27. இரவு வணக்கம்,ஹேமா!!!நலம் தானே?கொஞ்சம் பிராக்குப் பாத்துக் கொண்டு இருந்திட்டன்,ஹி!ஹி!ஹி!!!!இந்தாங்கோ கோப்பி,கொஞ்சம் ஆறிப் போச்சு,தங்கச்சியின்ர பங்கும் உங்களுக்கு!

    ReplyDelete
  28. //"படிக்கின்ற வயசில் படிக்காட்டி நாளை சோத்துக்கு பிச்சை எடுக்கும் போது தெரியும் படிப்பின் அருமை. "என்று .//

    வீட்டு சின்னவயசு ஞாபகம் வருது.எத்தினை தரம்தான் இப்பிடிப் பேச்சு வாங்கியிருப்பம்...மாடு மேய்க்கிறதையும் சேர்த்துச் சொல்லியிருகலாம் நேசன் !

    ReplyDelete
  29. //இந்தாங்கோ கோப்பி,கொஞ்சம் ஆறிப் போச்சு,தங்கச்சியின்ர பங்கும் உங்களுக்கு!//

    அப்பா.....கருவாச்சி இருந்தால் வாயாலயாச்சும் சூடாக்கித் தருவாள்..நீங்கள் இருந்து எதுக்கு... !

    ReplyDelete
  30. வீட்டு சின்னவயசு ஞாபகம் வருது.எத்தினை தரம்தான் இப்பிடிப் பேச்சு வாங்கியிருப்பம்...மாடு மேய்க்கிறதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம் நேசன் !////மேய்ச்சிருக்கிறா போல???????????

    ReplyDelete
  31. வீட்டு சின்னவயசு ஞாபகம் வருது.எத்தினை தரம்தான் இப்பிடிப் பேச்சு வாங்கியிருப்பம்...மாடு மேய்க்கிறதையும் சேர்த்துச் சொல்லியிருகலாம் நேசன் !

    14 June 2012 11:46 //ம்ம் அதில் சேர்க்க பல வரும் ஆனால் பதிவு நீள்ள்ளம் அதிகம் என்ன செய்வது!ம்ம் வாங்கும் பேச்சுக்கள் அளவேது!ஹீ

    ReplyDelete
  32. அழகான் காதல் பாட்டு நேசன்....சில பாடல்களுக்கு இளையராஜா அவர்களின் குரல் மிகப் பொருத்தம்.அந்த வரிசையில் இந்தப் பாடலும்.மிக மிக அழகான பாடல்.நன்றி நேசன் !

    ReplyDelete
  33. அப்பா.....கருவாச்சி இருந்தால் வாயாலயாச்சும் சூடாக்கித் தருவாள்..நீங்கள் இருந்து எதுக்கு... !//ம்ம் அதுக்காக திருப்பியும் சமையல் கட்டுக்கு அனுப்பாதீங்க ஹேமா!ஹீ

    ReplyDelete
  34. ஹேமா said...

    அப்பா.....கருவாச்சி இருந்தால் வாயாலயாச்சும் சூடாக்கித் தருவாள்..நீங்கள் இருந்து எதுக்கு... !////அப்பிடியெண்டா அவவின்ரை வாய் ஹொட் பிளேட் எண்டு சொல்லுறியள்?அந்தப் பிள்ளை அக்கா,அக்கா எண்டு உருகுது!

    ReplyDelete
  35. மாடு....ஆர்தான் மேய்கேல்ல.நாங்களே மாடாகி மேய்க்கப்பட்டிருக்கிறோமே.....கலை இல்லாத குறையை அப்பா நிவர்த்தி செய்றார்போல !

    ReplyDelete
  36. லீவு முடிஞ்சு வரட்டும்,இருக்கு அம்முவுக்கு!

    ReplyDelete
  37. மேய்ச்சிருக்கிறா போல???????????/ ஹீ வீட்டில் இருக்கும் போது ஊரில் எல்லாரும் செய்த சின்னச் சின்ன வேலைகள் தானே ஐயா நான் ஆடு ,கோழி எல்லாம் நல்லா மேய்ப்பன்!ஹீ

    ReplyDelete
  38. ஹேமா said...

    மாடு....ஆர்தான் மேய்கேல்ல.நாங்களே மாடாகி மேய்க்கப்பட்டிருக்கிறோமே.....கலை இல்லாத குறையை அப்பா நிவர்த்தி செய்றார்போல !/////அவ மேய்க்கிறது வேற என்னவோ எல்லோ?அப்பிடித்தான நேசன்?

    ReplyDelete
  39. அழகான் காதல் பாட்டு நேசன்....சில பாடல்களுக்கு இளையராஜா அவர்களின் குரல் மிகப் பொருத்தம்.அந்த வரிசையில் இந்தப் பாடலும்.மிக மிக அழகான பாடல்.நன்றி நேசன் !

    14 June 2012 11:51//ம்ம் நீங்க நன்றி சொல்லுகிறீங்க அவன் இந்த ரொட்டி வாங்கி பட்ட பாட்டைச் சொல்லியதே தனிக்கதை நான் சுருக்கி விட்டேன்! என்றாலும் ராஜாவின் குரல் எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
  40. /அப்பிடியெண்டா அவவின்ரை வாய் ஹொட் பிளேட் எண்டு சொல்லுறியள்?அந்தப் பிள்ளை அக்கா,அக்கா எண்டு உருகுது!

    14 June 2012 11:52 // ஹீஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  41. //ஆலமரமா ?வாழைமரமா ?இந்த ஊரில் ஒரு முகவரி இல்ல எனக்கு.//

    ஏன் நேசன் இப்பிடி ஒரு அலுப்பு.எந்த மரமோ...மண்ணில வேர் ஊண்டேக்கையே ஒரு முகவரி இருந்துதானே ஆகவேணும்.வாழைமரமா இருந்தால் கூட குட்டிகளோடு முகவரி தொடரும் !

    ReplyDelete
  42. மாடு....ஆர்தான் மேய்கேல்ல.நாங்களே மாடாகி மேய்க்கப்பட்டிருக்கிறோமே.....கலை இல்லாத குறையை அப்பா நிவர்த்தி செய்றார்போல // ம்ம் உண்மைதான் ஹேமா மேய்க்கவும் திறமை வேணுமே!`

    ReplyDelete
  43. லீவு முடிஞ்சு வரட்டும்,இருக்கு அம்முவுக்கு!// வரட்டும் ஊர் பார்த்துவிட்டு மெதுவாக.

    ReplyDelete
  44. அவ மேய்க்கிறது வேற என்னவோ எல்லோ?அப்பிடித்தான நேசன்?//ம்ம் வாத்து ஹீ

    ReplyDelete
  45. //அந்தப் பிள்ளை அக்கா,அக்கா எண்டு உருகுது!//

    அண்ணா அண்ணா எண்டு,மாமா மாமா எண்டெல்லோ உருகிறா காக்கா...அவளின்ர பாசமே ஒரு தனி.இவ்வளவு தூரத்தில இருந்துகொண்டு அன்பைக் காட்ட எப்பிடித்தான் முடியுதோ.என்னால் என்ர அன்பை வெளிப்படுத்த தெரியிறதில்லை.ஏனோ தெரியேல்ல !

    ReplyDelete
  46. மகள் சொல்லிறதிலையும் நியாயம் இருக்கு!

    ReplyDelete
  47. //ம்ம் உண்மைதான் ஹேமா மேய்க்கவும் திறமை வேணுமே!`//

    அதானே அப்பிடிச் சொல்லுங்கோ நேசன்.வாத்து மேய்க்க,ஆடு மேய்க்க எல்லாம் கருவாச்சிட்ட பாடம் எடுக்கவேணும் !

    ReplyDelete
  48. ஹேமா said...

    //அந்தப் பிள்ளை அக்கா,அக்கா எண்டு உருகுது!//

    அண்ணா அண்ணா எண்டு,மாமா மாமா எண்டெல்லோ உருகிறா காக்கா...அவளின்ர பாசமே ஒரு தனி.இவ்வளவு தூரத்தில இருந்துகொண்டு அன்பைக் காட்ட எப்பிடித்தான் முடியுதோ.என்னால் என்ர அன்பை வெளிப்படுத்த தெரியிறதில்லை.ஏனோ தெரியேல்ல !////எனக்கும் தெரியேல்ல!

    ReplyDelete
  49. வாழைமரமா இருந்தால் கூட குட்டிகளோடு முகவரி தொடரும் !//ம்ம் அது தாய் தந்தையோடு இருப்போருக்கு ராகுல் இருந்தது தாய் மாமாவோடு அதனால் தான் அப்படி போடு என்றான்.

    ReplyDelete
  50. ஹேமா said...

    அதானே அப்பிடிச் சொல்லுங்கோ நேசன்.வாத்து மேய்க்க,ஆடு மேய்க்க எல்லாம் கருவாச்சிட்ட பாடம் எடுக்கவேணும் !////அப்பிடியெண்டா செலவு இருக்கெண்டு சொல்லுறியள்???

    ReplyDelete
  51. அண்ணா அண்ணா எண்டு,மாமா மாமா எண்டெல்லோ உருகிறா காக்கா...அவளின்ர பாசமே ஒரு தனி.இவ்வளவு தூரத்தில இருந்துகொண்டு அன்பைக் காட்ட எப்பிடித்தான் முடியுதோ.என்னால் என்ர அன்பை வெளிப்படுத்த தெரியிறதில்லை.ஏனோ தெரியேல்ல !

    14 June 2012 12:00 //ம்ம் கலையால் முடிவது யோகா ஐயா செய்யும் அன்பு போல என்னாலும் முடியுது இல்லை ஹேமா!ம்ம்ம்

    ReplyDelete
  52. அப்பிடியெண்டா செலவு இருக்கெண்டு சொல்லுறியள்???// ஹீ பக்க் விளைவு இருக்கும் தானே!

    ReplyDelete
  53. //கலையால் முடிவது யோகா ஐயா செய்யும் அன்பு போல என்னாலும் முடியுது இல்லை ஹேமா!ம்ம்ம்//

    உண்மைதான் நேசன்.அன்பு இருக்கு என்று எமக்கு நாமே நினைக்கிறோமே தவிர,சிலசமயங்களில் அதை வெளிப்படுத்தத் தவறுகிறோம்.அதனால இழப்புக்கள்கூட அதிகம் !

    ReplyDelete
  54. தனிமரம் said...

    அப்பிடியெண்டா செலவு இருக்கெண்டு சொல்லுறியள்???// ஹீ பக்க விளைவு இருக்கும் தானே!///"கருக்கு மட்டை"ய சொல்லுறியளோ?கலாவும் மெல்ல மெல்ல இயல்பா வாறா!ஹி!ஹி!ஹி!!!!!

    ReplyDelete
  55. தவறுகிறோம்.அதனால இழப்புக்கள்கூட அதிகம் !//இனி இழக்க ஏதும் இல்லை ஏதிலியிடம். ஹீ

    ReplyDelete
  56. சரி...போன் வருது நான் கிளம்புறன்.போய்ட்டு வாறன் நேசன்....அப்பா....இரவின் அன்பு வணக்கம்.அழகான விடியல் தேடி வரும்.சந்திப்போம் !

    ReplyDelete
  57. கருக்கு மட்டை"ய சொல்லுறியளோ?கலாவும் மெல்ல மெல்ல இயல்பா வாறா!ஹி!ஹி!ஹி!!!!!//ம்ம் நாத்தனார் வந்து போடுவா அடி கலைக்கு!ஹீ

    ReplyDelete
  58. சரி...போன் வருது நான் கிளம்புறன்.போய்ட்டு வாறன் நேசன்....அப்பா....இரவின் அன்பு வணக்கம்.அழகான விடியல் தேடி வரும்.சந்திப்போம் !

    14 June 2012 12:10 // நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும். இனிய இரவு வணக்கம் இரவு தாலாட்ட இதமான உறக்கம் விழிகளுக்கு!

    ReplyDelete
  59. ஹேமா said...
    உண்மைதான் நேசன்.அன்பு இருக்கு என்று எமக்கு நாமே நினைக்கிறோமே தவிர,சிலசமயங்களில் அதை வெளிப்படுத்தத் தவறுகிறோம்.அதனால இழப்புக்கள்கூட அதிகம் !////அப்படி இல்லை!புரிதல் இருந்தால் போதும்.அப்பம் புட்டுக் காட்டப்பட வேண்டியதில்லை என்று தான் நான் நினைக்கிறேன்.எல்லா சந்தர்ப்பங்களிலும்,எல்லா நேரங்களிலும் படம் போட்டுக் காட்ட வேண்டிய பொருள் அல்ல "அன்பு!"

    ReplyDelete
  60. இது வரை பேசியது சந்தோசம்,கவிதாயினி!நல்லிரவு மகளே!!!!

    ReplyDelete
  61. பொருள் அல்ல "அன்பு!"// உண்மைதான் யோகா ஐயா.

    ReplyDelete
  62. நேசன் அமைதி ஆகிட்டீங்கள்.சாப்பிடுங்க,பிறகு...............சந்திப்பம்!

    ReplyDelete
  63. இது வரை பேசியது சந்தோசம்,கவிதாயினி!நல்லிரவு மகளே!!!!// நன்றி யோகா ஐயா நானும் விடைபெறுகின்றேன் நாளை இரவு தாமதமாக வருவேன்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!குட் நைட்.

    ReplyDelete
  64. குட் நைட்,நேசன்!!!

    ReplyDelete
  65. இரவு வணக்கம்...ஒடி விட்டாச்சு எல்லாரும்...மறுபடி வருகிறேன் நேசரே...

    ReplyDelete
  66. தனிமரம் நேசன் அவர்களே நலமோ?... நீண்ட நாட்கள் வரவில்லை அதிரா எனக் கோபம் இருக்கலாம், மன்னிச்சுக் கொள்ளுங்கோ... கோடை காலம் தொடங்கினாலே ஊர்ப் பிரச்சனைகளும் ஒட்டிக்கொள்ளுதே.... வீட்டில் நிற்கும் நேரம் குறைந்திடுது...

    ஆனா உங்களுக்குக் கோபம் வராதாம் என பிபிசில சொன்னதை நம்பிட்டேன்ன்ன்.. அதனால்தான் தைரியமா வந்திருக்கிறேன்ன்ன்ன்:)))

    ReplyDelete
  67. குளத்து நீரை திறந்து விட்டால் வாய்க்கால் வழி ஓடி நெல்லுக்கு போகணும் நீர். அது புல்லுக்குப் போனால் போதிய வளர்ச்சி நெல்லுக்கு இல்லை புல்லுக்குத்தான். அப்படித்தான் பிரகாசும்!///

    அழகான உவமை... எனக்கு எப்பவுமே இந்த வாக்கியம் ரொம்பப் பிடிக்கும்.

    ReplyDelete
  68. எஞ்சினியர் ஆகுங்க எனச் சொன்னவுடனேயே அழகான பாட்டு வந்திட்டுதே:)) அப்போ எஞ்சினியர் ஆனதும் என்ன பாட்டுப் பாடியிருப்பாங்களோ?:)) இல்ல ஒரு டவுட்டு:)).

    ReplyDelete
  69. //ஆனால் வழமையை விட உள்குத்தில் நிதாதனம் இழக்கும் பதிவாளர் போல ///

    ஹா..ஹா..ஹா.. நல்ல உவமை சிரிச்சிட்டேன்ன்ன்:)))))

    ReplyDelete
  70. //என்பதால் கண்ணத்தில் கைகள் வரைந்த//

    இதைக் கொஞ்சம் திருத்தி விடுங்க... கன்னம்..

    ReplyDelete
  71. இந்த வீடு நமக்குச் சொந்தமில்லே... சூப்பர் பாட்டூஊஊஊஊஊஊ.. எங்கட இளையராஜா எல்லோ பாடுறார்ர்.... அவரின் குரலெனில் எனக்கு சொர்க்கம் தெரியுமே...

    ReplyDelete
  72. //பேரம்பலத்தார் பேரன் என்ன அனாதையா ? நிச்சயம் நண்பர்கள் வாழ்வில் நான் வித்தியாசமானவனாக இருக்கணும்.//

    எங்கட... டார்லிங் செல்லம்மா ஆன்ரியின் அம்பலத்தாரைச் சொல்லவில்லைத்தானே?:))))

    ReplyDelete
  73. உஸ்ஸ்ஸ் அப்பாடா ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன், அரசியல் கலப்பில்லாத பகுதியாக இருந்தமையால் எனக்கு படிக்க ஆசையாக இருந்துது.. இல்லையெனில் போரடித்துவிடும்...

    அழகான தொடர்.. எப்போ புத்தகமாக்கி வெளியிடப்போறீங்க நேசன்? உண்மையாகத்தான் கேட்கிறேன்ன்ன்ன்...

    சரி யோகா அண்ணனுக்கும் ஹெமாவுக்கும் பால் கோப்பியைக் கொடுங்கோ.. மங்கோ யூஸையும் மட்டின் பிர்ர்ராஆஆஆணியையும் எனக்குத் தாங்கோ:)))..

    மீண்டும் சந்திக்கிறேன் நல்லிரவு..

    ReplyDelete
  74. தொடருகிறேன்...நெளிவு சுளிவுகளை தாண்டி போகும் பாதையில்!

    ReplyDelete
  75. செல்லன் மாமா !
    வாழை ;ஆலமரம் விளக்கம்
    சொன்னது வலித்தது.....

    தொடருங்கள் !

    ReplyDelete
  76. காலை வணக்கம் ,நேசன்!

    ReplyDelete
  77. காலை வணக்கம்,அதிரா மேம்!நலமா????//////athira said...
    சரி யோகா அண்ணனுக்கும் ஹெமாவுக்கும் பால் கோப்பியைக் கொடுங்கோ.. மங்கோ யூஸையும் மட்டின் பிர்ர்ராஆஆஆணியையும் எனக்குத் தாங்கோ:)))..////ரீச்சர் ஓடி வாங்கோ,ஸ்பெல்லிங் மிஸ்ரேக்!பேர் (ஹெமா)வச்ச ஆக்கள் படிச்சா அவ்வளவு தான்!!!!காலங்காத்தால,வெள்ளிக்கிழமையும் அதுவுமா,மட்டின் பிர்ர்ராஆஆஆணி கேக்குது,பூசாருக்கு,ஹ!ஹ!ஹா!!!!

    ReplyDelete
  78. படிக்கின்ற வயசில் படிக்காட்டி நாளை சோத்துக்கு பிச்சை எடுக்கும் போது தெரியும் படிப்பின் அருமை

    அவர் சொன்னாலும் சொல்லாட்டாலும் இது உண்மைதானே அண்ணா...

    ReplyDelete
  79. இரவு வணக்கம்...ஒடி விட்டாச்சு எல்லாரும்...மறுபடி வருகிறேன் நேசரே.../இரவு வணக்கம் ரெவெரி மீண்டும் வாங்க சந்திக்கலாம்.

    ReplyDelete
  80. தனிமரம் நேசன் அவர்களே நலமோ?... நீண்ட நாட்கள் வரவில்லை அதிரா எனக் கோபம் இருக்கலாம், மன்னிச்சுக் கொள்ளுங்கோ... கோடை காலம் தொடங்கினாலே ஊர்ப் பிரச்சனைகளும் ஒட்டிக்கொள்ளுதே.... வீட்டில் நிற்கும் நேரம் குறைந்திடுது...

    ஆனா உங்களுக்குக் கோபம் வராதாம் என பிபிசில சொன்னதை நம்பிட்டேன்ன்ன்.. அதனால்தான் தைரியமா வந்திருக்கிறேன்ன்ன்ன்:)))

    14 June 2012 13:38 // வாங்க அதிரா அது என்ன புதுசாக அவர்களே நான் எப்போதும் சாமானிய தனிமரம் தான் ஓடி விழ தேம்ஸ் வர முடியாது!ஹீ

    ReplyDelete
  81. ஆனா உங்களுக்குக் கோபம் வராதாம் என பிபிசில சொன்னதை நம்பிட்டேன்ன்ன்.. அதனால்தான் தைரியமா வந்திருக்கிறேன்ன்ன்ன்:)))

    14 June 2012 13:38 // ஹீ நான் நலம் பிபிசி வரை வந்திட்டேனா!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  82. அழகான உவமை... எனக்கு எப்பவுமே இந்த வாக்கியம் ரொம்பப் பிடிக்கும்.

    14 June 2012 13:38 //பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  83. எஞ்சினியர் ஆகுங்க எனச் சொன்னவுடனேயே அழகான பாட்டு வந்திட்டுதே:)) அப்போ எஞ்சினியர் ஆனதும் என்ன பாட்டுப் பாடியிருப்பாங்களோ?:)) இல்ல ஒரு டவுட்டு:)).

    14 June 2012 13:41 // அதுக்கு இன்றைய பதிவுப்பாடல் பதிலாக இருக்கும்!ஹீ

    ReplyDelete
  84. ஹா..ஹா..ஹா.. நல்ல உவமை சிரிச்சிட்டேன்ன்ன்:)))))//ம்ம் கமடி இல்லைத்தானே!லொல்லு.

    ReplyDelete
  85. இதைக் கொஞ்சம் திருத்தி விடுங்க... கன்னம்..

    14 June 2012 13:42 //ம்ம் கருக்குமட்டை அடி!ஹீ

    ReplyDelete
  86. இந்த வீடு நமக்குச் சொந்தமில்லே... சூப்பர் பாட்டூஊஊஊஊஊஊ.. எங்கட இளையராஜா எல்லோ பாடுறார்ர்.... அவரின் குரலெனில் எனக்கு சொர்க்கம் தெரியுமே...

    14 June 2012 13:44 //ம்ம் உண்மைதான் அதிரா.

    ReplyDelete
  87. பேரம்பலத்தார் பேரன் என்ன அனாதையா ? நிச்சயம் நண்பர்கள் வாழ்வில் நான் வித்தியாசமானவனாக இருக்கணும்.//

    எங்கட... டார்லிங் செல்லம்மா ஆன்ரியின் அம்பலத்தாரைச் சொல்லவில்லைத்தானே?:))))

    14 June 2012 13:45 // அம்பலத்தார் பதிவுலகில் வித்தியாசமான ஒரு ஆசான்!

    ReplyDelete
  88. உஸ்ஸ்ஸ் அப்பாடா ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன், அரசியல் கலப்பில்லாத பகுதியாக இருந்தமையால் எனக்கு படிக்க ஆசையாக இருந்துது.. இல்லையெனில் போரடித்துவிடும்...

    அழகான தொடர்.. எப்போ புத்தகமாக்கி வெளியிடப்போறீங்க நேசன்? உண்மையாகத்தான் கேட்கிறேன்ன்ன்ன்...

    சரி யோகா அண்ணனுக்கும் ஹெமாவுக்கும் பால் கோப்பியைக் கொடுங்கோ.. மங்கோ யூஸையும் மட்டின் பிர்ர்ராஆஆஆணியையும் எனக்குத் தாங்கோ:)))..

    மீண்டும் சந்திக்கிறேன் நல்லிரவு..

    14 June 2012 13:48 //ம்ம் புத்தகம் போடவா கொஞ்சம் ஜோசிக்கோணும் அதிரா!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் மீண்டும் சந்திப்போம்!

    ReplyDelete
  89. தொடருகிறேன்...நெளிவு சுளிவுகளை தாண்டி போகும் பாதையில்!

    14 June 2012 19:31 // நன்றி விக்கியண்ணா வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  90. செல்லன் மாமா !
    வாழை ;ஆலமரம் விளக்கம்
    சொன்னது வலித்தது.....

    தொடருங்கள் !

    14 June 2012 19:33 // நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  91. காலை வணக்கம் ,நேசன்!// இரவு வணக்கம் யோகா ஐயா.

    ReplyDelete
  92. காலை வணக்கம்,அதிரா மேம்!நலமா????//////athira said...
    சரி யோகா அண்ணனுக்கும் ஹெமாவுக்கும் பால் கோப்பியைக் கொடுங்கோ.. மங்கோ யூஸையும் மட்டின் பிர்ர்ராஆஆஆணியையும் எனக்குத் தாங்கோ:)))..////ரீச்சர் ஓடி வாங்கோ,ஸ்பெல்லிங் மிஸ்ரேக்!பேர் (ஹெமா)வச்ச ஆக்கள் படிச்சா அவ்வளவு தான்!!!!காலங்காத்தால,வெள்ளிக்கிழமையும் அதுவுமா,மட்டின் பிர்ர்ராஆஆஆணி கேக்குது,பூசாருக்கு,ஹ!ஹ!ஹா!!!!

    14 June 2012 22:16 // ஹீஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  93. படிக்கின்ற வயசில் படிக்காட்டி நாளை சோத்துக்கு பிச்சை எடுக்கும் போது தெரியும் படிப்பின் அருமை

    அவர் சொன்னாலும் சொல்லாட்டாலும் இது உண்மைதானே அண்ணா...

    15 June 2012 06:5// உண்மைதான் சகோதரி.. நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete