தமிழில் உறவுச் சொற்கள் உயர்ந்தவை அழகுள்ளவை. அர்த்தம் செறிந்தவை பாட்டியும் பொதுச்சொல் என்றார் வைரமுத்து. நினைத்தால் சரிதான் போலும்!
கல்பனா வீட்டை வரச்சொல்லும் போது ஒரு மனம் சொன்னது .காதலிவீட்டில் ஒரு காப்பி குடிப்பது எவ்வளவு சுகம். போவன் அவள் வீட்டுக்கு என்று. இன்னொரு மனம் சொன்னது பாட்டி சொல்லியது மறந்து போச்சா ?யார் வீட்டிலும் உறவு நிலை தெரியாமல் ஒரு வயசுப்பிள்ளை வீட்டில் போய் கோப்பி குடித்தால் ஆவள் வீட்டுக்கு வரும் மருமகள் போல .சம்மந்தம் பேசவந்த சங்கதி எல்லாம் தெரியாத பேரனா பேரம்பலத்தார் பேரன் . இப்படியே திரும்பிப்போய்விடு இல்லை உனக்கும் உன் மாமாக்கள் கதிதான் வரும். நல்லா ஜோசிடா பேரா !கொள்ளிவைக்கக்கூட என்னிடம் வரப்பிடாது. தூக்கி வளர்த்த எனக்குத் தெரியாதா ?நீ யார் வீட்டுக்கு மருமகனாக போகணும் என்று . முடிவு பாட்டியிடம் விட்டான் .மென்று முழிங்கிய பின்
. கல்பனாவுக்குச் சொன்னான் இன்னொருநாள் குடிக்கவாரன் என் பாட்டியோடு .கல்பனா சிரித்தது நெஞ்சிக்குள் சிலிர்த்தது சிந்தாமல் சிதறாமல்
.சில நாட்கள் மாலையில் அவளோடு நடக்கும் போது அவள் எதிர்கால லட்சியம் சொன்னால் இந்த வருடம் பரீட்சையின் பின் நல்ல ஒரு நிர்வாக தலைவியாக முன்னேற்றம் காண வேண்டும் .இரண்டு தம்பிகளையும் நல்லா வழிநடத்ததும் என்ற போதே அவள் நிலவு போல மேலே உயர்ந்து நின்றாள் .
அவள் தம்பியின் காதல் விவகாரத்தில் ராகுல் வாழ்க்கைச்சுமையை சொல்லித் திருத்திவிட்டதால் அவனும் திருந்தி இருந்தது எல்லாம் கல்பனாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது .
நடக்கும் போதே சொன்னால் உங்களை நல்ல நண்பனாக நான் எப்போதும் நினைப்பேன் எங்கோ இருந்து வந்து இங்கு வசந்தா டீச்சர் இடம் இந்தளவு மதிப்பும் ;மரியாதையும் ;பணிவையும் பார்க்கும் போது வித்தியாசமானவர்தான்!
எல்லாப்பொடியங்களும் காதல் என்று நிக்கும் போது நீங்க கடமை என்ற பாதையில் போவது சந்தோஸம் நீங்க இப்படியே போகவேண்டும் என்ற போதே மனதில் அவள் மீது இருந்த ஈர்ப்பு வெளியேறிவிட்டது நல்ல தோழியாக இருப்பதே போதும் காதல் என்று சொல்லி அவள் நட்பை கேவலப்படுத்துவதைவிட சொல்லாமல் போவதே மனதுக்குள் சந்தோஸம் !
பரீட்சையில் சிறப்பாக செயல்பட வாழ்த்துச் சொன்னால் மறக்காமல் ஆட்டோக்கிராப் போட்டாள் .கல்லூரி வாழ்வில் இதுவரை எந்த அறிவுச்சோலைப்பூக்களுக்கும் ஆட்டோக்கிராப் போடாத ராகுல் இருபூக்களுக்குத் தான் வண்ணங்கள் வசந்தம் சேர்த்த வார்த்தைகள் கல்பனாவும் அவள் தோழிக்கும் தான் கைஜொப்பம் இட்டது .
இது எல்லாம் ராகுலின் நண்பர்கள் சுகுமார்,சங்கர்,தயாளன்,தினேஸ் என எவரும் அறியாத இருண்ட பக்கம். அவனின் ஆட்டோக்கிராப்பில் கூட அவள் போட்ட குறிப்பு நண்பர்கள் அறியாத பரம் ரகசியம்!
.பரீட்சை நேரத்தில் வீட்டில் போய் படி என்றார் செல்லன் மாமா.தன் கடையில் ஒரு ஊழியர் பொருட்களை களவாடுவதைக்கண்டுபிடிக்கத்தான் அவர் ராகுலை வீட்டைவிட்டு கடைக்கு அனுப்பியதன் பின்னனி .
எப்படி இவனை கடைக்கு போகவைப்பது என்ற போது அஞ்சகம் அம்மாவின் தீயில் அவர் அப்படி நடந்தது. .
சுகி பலதடைவை வந்து மன்னிச்சிடுடா குண்டா நான் விளையாட்டுக்குச் செய்தேன்!நீ வீம்பாக எடுத்துக்கிட்டாய் வாடா வீட்டை வீட்டில் போரா இருக்கு நீ இல்லாமல் நான் இனி உன்ற பாட்டுக்கள் எதுவும் எடுக்க மாட்டன் ..
போடி ஓட்டவாய் .
அன்று பேசாமல் விட்டுட்டு இன்று வாரியோ நான் வரமாட்டன் உன்னோட .எனக்கு ரோஸம் இருக்கு .உன் வழியில் நீ போ இப்ப வளர்ந்திட்டாய் இனி இந்தக்குண்டன் தேவையில்லைத்தானே !
. நீ வரமாட்டாய் உன் ரோஸம் எனக்கும் தெரியும்டா,,,,, ஆனால் என்னை மறந்து உன்னால் இருக்க முடியாது .உன் நாட்குறிப்பில் என் பெயரில் நீ எழதும் கவிதை எல்லாம் எனக்குத் தெரியும் .
உன்னை அழவைப்பன் எங்கிருந்தாலும் போட குண்டா
.அவள் போய்விட்டாள்.அன்று தெரியாது ராகுலுக்கு அவள் தீயில் பின் நாட்களில் வாழ்வை முடித்துவிட்டு ஆயுள் பூராகவும் அழவிட்டுப் போய்விட்டாள் அவள் குழந்தையையும் என்று..
இன்றும் ராகுல் அழுவது அவள் புரிந்து கொள்ளாத மச்சானின் பாசத்தை..
உயர்தரப் பரீட்சைமுடிந்த செப்டம்பர் முதல் வாரத்தில் ராகுல் ஊர் போக வெளிக்கிட்ட போது செல்லன்மாமா தடைபோட்டார் .
இங்க இருந்து கடையைச் செய்ய வேண்டியது தானே எனக்கு உதவியாக .ஏன் துரைக்கு வளர்ந்திட்டன் என்ற துணிவோ என் நிழலில் இந்தக்கடையை நீ தொடர்வாய் என்று தானே உன்னை வளர்த்தன்.இது எல்லாம் வேண்டாம் என்று போரியா. இன்றோட தொலைஞ்சு போ.
இனி உறவு என்று என்கடைக்கு வரக்கூடாது .எனக்கும் பேரம்பலத்தாரின் ரோஸம் lஇருக்கு. என் பெயர், முகவரி ,எதுவும் நீ பாவிக்காமல் தனியாக முன்னேற முடியுமா,. உன்னால் நிச்சயம் முடியாது .
முடிந்தால் நாளு ஊர் சுத்திவிட்டு வந்து பாரு செல்லன் மாமா சொல்லுவதன் அர்த்தம் புரியும் .உன்னால் தனித்துவமாக வாழமுடியாது. முடிந்தால் வாழ்ந்து காட்டு .அவரின் அர்ச்சனை மாலைகள் எல்லாம் வேள்வித்தீயில் வார்த்த ஆகுதிப்பொருட்கள் போல §
அன்று இரவு தான் நண்பர்களுடன் மீண்டும் அதிகமாக சோமபானம் அருந்தியிருந்தான் ராகுல். மனதில் கல்பனா தோழியாக!எப்போதும் இருப்பாள் .நண்பர்கள் அவளைப்பார்க்கும் போது இந்தப்பிள்ளையை ராகுல் சைட் அடிக்கின்றான் என்று கேளி பண்ணூவார்கள் என்பதால் தான் அவன் அவளுக்கு எந்த மன உளைச்சலும் வரக்கூடாது என்பதில் அக்கறை உள்ளவனாக அன்று அவர்களுக்கு ஒன்றும் இல்லை என்று கிளம்பியது .
என்றாவது நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் குடும்பம் முக்கியம் என்பதை .
இந்த ஊரில் எனக்கு எல்லாம் கிடைத்தது ஆனால் எல்லாம் கட்டுப்பாட்டோடு .சினிமா இலக்கியம் மீது என் ஆர்வம் சுருட்டுக்கடையை தாண்டிச் செல்லத்தூண்டிய காரணியை என்றாவது ஒருநாள் செல்லன் மாமா புரிந்துகொள்வார்.. ராகுலின் தனித்துவம் ..
பாட்டியைத்தாண்டி பேரம்பலத்தார் பேரன் வெளி வரமாட்டான். இயல்புகள் இழக்கப்பட்டால் சிதைக்கப்படுவது குடும்பம் என்ற ஆலமரம்.
அன்று இரவு ராகுல் என்னோடு(தனிமரம் நேசனோடு ) சகபயணியாக பயணித்தான் தலைநகரத்தின் அவசர உலகில் அவன் அவசரத்தில் நாட்குறிப்பை தொலைத்துவிட்டான். .
என்னிடம் கிடைத்தது அதில் படித்த சில சுவார்சியத்தை வலையில் ஏற்றிவிட்டேன் தொலைந்தவன் முகம் தொலைந்தான்.
ராகுல் எங்காவது அமைதியாக அவனாக இருக்கட்டும் நானும் அதைத்தான் விரும்புகின்றேன் .அவன் நாட்குறிப்பு மூடிவிட்டேன் . "எங்கேயும் எப்போதும் யாரோ யாருக்காக காத்திருப்பார்கள் வலிகளும். வேதனைகளையும் கடந்து சிரித்துக்கொண்டு .தில் தோபாஹல் ஹை!"
முற்றும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
முற்றும்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என்ன நேசன் இப்பிடி பொசுக்குன்னு முற்றும் போட்டிட்டீங்க!!!!!!!!!!
ReplyDeleteஎன்ன நேசன் இப்பிடி பொசுக்குன்னு முற்றும் போட்டிட்டீங்க!!!!// ம்ம்ம் வாங்க கீதம் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ !ம்ம் தொடர் ஒரு கட்டத்தோடு நிறுத்தச் சொல்லிவிட்டான் ராகுல்!ம்ம் நான் என்ன செய்வேன்! அவனுக்கு எழுத்தாணி அல்லவா!
ReplyDeleteஇந்த ராகுலை தான் இன்னும் தேடுகின்றேன் என் என்ன அடுக்குகளில்... இன்னும் பிடிபடவில்லை....
ReplyDeleteமன்னிக்கவும் "
ReplyDeleteஎண்ண அடுக்குகளில்"
இந்த ராகுலை தான் இன்னும் தேடுகின்றேன் என் என்ன அடுக்குகளில்... இன்னும் பிடிபடவில்லை....
ReplyDelete17 June 2012 12:18 /8//ம்ம் எனக்கும் அவன் ஏதும் சொல்லவில்லைத்தோழி!ம்ம்
மன்னிக்கவும் "
ReplyDeleteஎண்ண அடுக்குகளில்"
17 June 2012 12//ம்ம் எண்ணங்கள் எல்லாம் குடும்பம் என்ற ஆலமரத்தில் வைரவர் போல சிலர் இருப்பார்கள் இல்லையா அப்படித்தான் போலும் அவன்!ம்ம்
நேசன்...கோப்பி கிடைக்குமோ...3 நாளா இந்தப் பக்கம் வரேல்ல.கொஞ்சம் வேலை பிந்தின நேரத்தில்தான் வீடு வந்தேன்.ஓய்வும் கொஞ்சம் தேவைப்பட்டது....அதுதான் !
ReplyDeleteஅப்பா....காணேல்ல.கணணி கிடைக்கேல்லப்போல்.குட்டீஸ் அட்டகாசம் !
ரெவரி....கால்பந்தோ...!
கலையம்மா.....ஊர் சுத்துறா ...!
//யாரும் இல்லாத தீவு ஒன்று வேண்டும் என்று பாடிய கவிஞன் யுத்தம் என்ற ஒன்று யாரும் இல்லை துணையாக அகதிகளுக்கு என்று எழுதாமல் போனான்!//
ReplyDeleteமனதை என்னவோ செய்தது இந்த வரிகள் நேசன்.எத்தனை உண்மை.அனுபவித்த வலிகளை அடிக்கடி யாரிடமும் புலம்பக்கூட முடிவதில்லை இப்பல்லாம்.கேட்பவர்களுக்கு அலுத்துவிடுகிறதே !
நேசன்...கோப்பி கிடைக்குமோ...3 நாளா இந்தப் பக்கம் வரேல்ல.கொஞ்சம் வேலை பிந்தின நேரத்தில்தான் வீடு வந்தேன்.ஓய்வும் கொஞ்சம் தேவைப்பட்டது....அதுதான் !
ReplyDeleteஅப்பா....காணேல்ல.கணணி கிடைக்கேல்லப்போல்.குட்டீஸ் அட்டகாசம் !
ரெவரி....கால்பந்தோ...!
கலையம்மா.....ஊர் சுத்துறா ...!
17 June 2012 12:45 //ம்ம் எல்லாரும் ஓய்வு ஹேமா!
/யாரும் இல்லாத தீவு ஒன்று வேண்டும் என்று பாடிய கவிஞன் யுத்தம் என்ற ஒன்று யாரும் இல்லை துணையாக அகதிகளுக்கு என்று எழுதாமல் போனான்!//
ReplyDeleteமனதை என்னவோ செய்தது இந்த வரிகள் நேசன்.எத்தனை உண்மை.அனுபவித்த வலிகளை அடிக்கடி யாரிடமும் புலம்பக்கூட முடிவதில்லை இப்பல்லாம்.கேட்பவர்களுக்கு அலுத்துவிடுகிறதே !
17 June 2012 12:48
தனிமரம் said...//ம்`ம் உண்மைதான் ஹேமா அலுக்கிறது!ம்ம்
நேசன்....மெல்ல மெல்ல 3 பதிவுகளையும் வாசித்தேன்...என்னமோ ஒரு கலக்கம்.எத்தனை உறவுகளை,பாசத்தை ஒரு கூட்டுக்குள் அடைத்துப் பின் திறந்து....சேர்வதும் பிரிவதுமான உணர்வுகளை....ராகுலுக்காக மட்டுமல்ல.வாசிக்கும் எங்களுக்கும் அதை உணர்த்திய நேசன்.....சொல்ல வார்த்தைகள் இல்லை.தனிமரம் என்று சொல்லிச் சொல்லியே தன்னைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம் சேர்த்த ஒரு பெருமரம் அவர்....!
ReplyDeleteராகுல் தொலைத்த நாட்குறிப்பில் சிலவற்றை மட்டுமே வலைப்பூவில் ஏற்றி 81 பாகங்கள் நிறைவான வாழ்வியல்,பாசம் சொன்ன உங்களுக்குத்தான் ராகுல் நன்றி சொல்லவேணும் நேசன்.ராகுலிடம் இன்னும் இன்னும் சுவாரஸ்யமான வாழ்வியல் பகுதிகள் இன்னும் நிறைஞ்சிருக்குமோ என்று ஒரு சந்தேகமும் இருக்கு.ராகுலோடு இன்னும் இன்னும் கதை பேசலாம் போல இருக்கு !
ReplyDeleteநேசன்....மெல்ல மெல்ல 3 பதிவுகளையும் வாசித்தேன்...என்னமோ ஒரு கலக்கம்.எத்தனை உறவுகளை,பாசத்தை ஒரு கூட்டுக்குள் அடைத்துப் பின் திறந்து....சேர்வதும் பிரிவதுமான உணர்வுகளை....ராகுலுக்காக மட்டுமல்ல.வாசிக்கும் எங்களுக்கும் அதை உணர்த்திய நேசன்.....சொல்ல வார்த்தைகள் இல்லை.தனிமரம் என்று சொல்லிச் சொல்லியே தன்னைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம் சேர்த்த ஒரு பெருமரம் அவர்....!
ReplyDelete17 June 2012 12:54 //ம்ம் அப்படியா ஹேமா அவன் எங்காவது வழட்டும் அவன் தொலைந்தவன் ஆக இருக்கட்டும் நண்பன் வாழ்வு தானே எனக்கு முக்கியம் நான் தனிமரம் நேசன்! அவன் நண்பன்!ம்ம்
ராகுல் தொலைத்த நாட்குறிப்பில் சிலவற்றை மட்டுமே வலைப்பூவில் ஏற்றி 81 பாகங்கள் நிறைவான வாழ்வியல்,பாசம் சொன்ன உங்களுக்குத்தான் ராகுல் நன்றி சொல்லவேணும் நேசன்.ராகுலிடம் இன்னும் இன்னும் சுவாரஸ்யமான வாழ்வியல் பகுதிகள் இன்னும் நிறைஞ்சிருக்குமோ என்று ஒரு சந்தேகமும் இருக்கு.ராகுலோடு இன்னும் இன்னும் கதை பேசலாம் போல இருக்கு !//ம்ம் எனக்கும் ஆசைதான் ஹேமா ஆனால் அவன் எழுதியது அவளவும் தான் நான் படித்தேன்!
ReplyDelete//தமிழில் உறவுச் சொற்கள் உயர்ந்தவை அழகுள்ளவை. அர்த்தம் செறிந்தவை பாட்டியும் பொதுச்சொல் என்றார் வைரமுத்து. நினைத்தால் சரிதான் போலும்! //
ReplyDeleteஉறவுகளை அழகாக உறவு சொல்லி அழைப்பதே ஒரு பாசம்தான்.சித்தி ,மாமா என்று அழைக்கும்போதே அந்தப் பாசத்தின் பிணைப்பு தாய்வழிச் சொந்தம் தந்தைவழிச் சொந்தமென உணர்வோடு ஒண்றிக்கொள்ளும்.அவர்களின் அதட்டலும் அன்பும் பெற்றவர்களோடு சேர்ந்து வழிநடத்தும் எம்மை.தெருவில் வழிதவறிக் கண்டால் பெற்றவர்களைவிட கண்காணிப்பவர்கள் அவர்கள்தானே.எல்லாம் தவறிக்கிடக்கிறது இப்போ.....வெறும் தனிமை மிஞ்ச !
ராகுல் தொலைத்த நாட்குறிப்பில் சிலவற்றை மட்டுமே வலைப்பூவில் ஏற்றி 81 பாகங்கள் நிறைவான வாழ்வியல்,பாசம் சொன்ன உங்களுக்குத்தான் ராகுல் நன்றி சொல்லவேணும் நேசன்.ராகுலிடம் இன்னும் இன்னும் சுவாரஸ்யமான வாழ்வியல் பகுதிகள் இன்னும் நிறைஞ்சிருக்குமோ என்று ஒரு சந்தேகமும் இருக்கு.ராகுலோடு இன்னும் இன்னும் கதை பேசலாம் போல இருக்கு !//ம்ம் 82 பாகம் ஹேமா வலையுலகில்!ஹீ
ReplyDeleteஉறவுகளை அழகாக உறவு சொல்லி அழைப்பதே ஒரு பாசம்தான்.சித்தி ,மாமா என்று அழைக்கும்போதே அந்தப் பாசத்தின் பிணைப்பு தாய்வழிச் சொந்தம் தந்தைவழிச் சொந்தமென உணர்வோடு ஒண்றிக்கொள்ளும்.அவர்களின் அதட்டலும் அன்பும் பெற்றவர்களோடு சேர்ந்து வழிநடத்தும் எம்மை.தெருவில் வழிதவறிக் கண்டால் பெற்றவர்களைவிட கண்காணிப்பவர்கள் அவர்கள்தானே.எல்லாம் தவறிக்கிடக்கிறது இப்போ.....வெறும் தனிமை மிஞ்ச !
ReplyDelete17 June 2012 13:03 //ம்ம் 100 விகிதம் உண்மை ஹேமா! என்ன செய்வது விதி அகதி! யுத்தம்!ம்ம்
நேசன்....உங்கள் கதையை ஊடுருவவதை விட அதில சொல்லப்படும் வாழ்வியலையும் உறவுகளின் பாசத்தையுமே எப்போதும் ரசிப்பேன்.உணர்ந்தும் இருக்கிறேன்.கதை முடிவுற்றது...ஒரு குடும்பப்பிணைப்பிலிருந்து கடத்தப்படுவதாக உணர்கிறேன்.மனம் கலங்குகிறது.
ReplyDeleteஉங்கள் பாடல் ரசனையைச் சொல்லாமல் இங்கு முடியாது.வந்ததும் முதலில் பார்ப்பது நேசன்...என்ன பாட்டுப் போட்டிருப்பாரென்று.பாட்டைப் போட்டுவிட்டே பதிவைப் படிக்கத்தொடங்குவன்....எல்லாம் இல்லை...முற்றுமாகிப்போவது கஸ்டமாகவே இருக்கு நேசன் !
எண்ண அடுக்குகளில்....ராகுலை நேசனையும் சேர்த்து அடுக்கிக்கொள்கிறேன்.தொடர்ந்த காவடித்தூக்கலும் கடமைகளும் தொடரட்டும்.நிச்சயம் சந்தித்துக்கொண்டேயிருப்பம் நேசன்.வாழ்வும் கடமைகளும் காத்திருப்புக்களும்....வாழ்வு இதுதானென்று உணர்த்தி எம்மைச் செம்மைப்படுத்திக்கொண்டேயிருக்கும்.அன்போடு வாழ்த்துச் சொல்லிக்கொண்டேயிருப்பேன்.சந்திப்போம் நேசன்.இனி நீங்கள் தனிமரமில்லை.அதுமட்டும் நிச்சயம் !
ReplyDeleteஉங்கள் பாடல் ரசனையைச் சொல்லாமல் இங்கு முடியாது.வந்ததும் முதலில் பார்ப்பது நேசன்...என்ன பாட்டுப் போட்டிருப்பாரென்று.பாட்டைப் போட்டுவிட்டே பதிவைப் படிக்கத்தொடங்குவன்....எல்லாம் இல்லை...முற்றுமாகிப்போவது கஸ்டமாகவே இருக்கு நேசன் !
ReplyDelete17 June 2012 13:08::ம்ம் பாடல் சொல்லும் எங்கேயும் ஒருத்தன் சிரித்துக்கொண்டு வாழ்வான் என்று அதுதான் ராகுல்!ம்ம்
எண்ண அடுக்குகளில்....ராகுலை நேசனையும் சேர்த்து அடுக்கிக்கொள்கிறேன்.தொடர்ந்த காவடித்தூக்கலும் கடமைகளும் தொடரட்டும்.நிச்சயம் சந்தித்துக்கொண்டேயிருப்பம் நேசன்.வாழ்வும் கடமைகளும் காத்திருப்புக்களும்....வாழ்வு இதுதானென்று உணர்த்தி எம்மைச் செம்மைப்படுத்திக்கொண்டேயிருக்கும்.அன்போடு வாழ்த்துச் சொல்லிக்கொண்டேயிருப்பேன்.சந்திப்போம் நேசன்.இனி நீங்கள் தனிமரமில்லை.அதுமட்டும் நிச்சயம் !//ம்ம் ஐயோ ஹேமா அவா என் கல்லூரித்தோழி சும்மா கலாய்த்தா நான் எப்போதும் தனிமரம் நேசன் தான் என் நண்பன் ராகுல் ஒரு வழிப்போக்கன்!ம்ம்ம்
ReplyDeleteஇயல்புகள் இழக்கப்பட்டால் சிதைக்கப்படுவது குடும்பம் என்ற ஆலமரம். //
ReplyDeleteஎன்ன செய்ய சிலநேரங்களில் எல்லாருமே சூழ்நிலை இக்கு ஏற்றார்போல
தங்களை மாற்றிக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் .
,இத்தொடரின் பாதியில் தான் இணைந்தேன் .ஆனாலும் விடாமல் படித்து முடித்தேன் .இப்ப ராகுல்நலமா இருக்காரா
ஹேமா /நேசன் மற்றும் யோகா அண்ணா /.KALA ,REVARIE கலை அனைவரும் நலமா
ReplyDeleteபாடல்கள் எப்பவும் உங்க பதிவில் இனிமையா மனதை வருடும் விதத்தில் இருக்கும் நேசன்
ReplyDeleteஇயல்புகள் இழக்கப்பட்டால் சிதைக்கப்படுவது குடும்பம் என்ற ஆலமரம். //
ReplyDeleteஎன்ன செய்ய சிலநேரங்களில் எல்லாருமே சூழ்நிலை இக்கு ஏற்றார்போல
தங்களை மாற்றிக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் .
,இத்தொடரின் பாதியில் தான் இணைந்தேன் .ஆனாலும் விடாமல் படித்து முடித்தேன் .இப்ப ராகுல்நலமா இருக்காரா//ம்ம் வாங்க அஞ்சலின் அவன் குடும்ப தலைவனாக இருக்கின்றான் எங்கோ ,ஒரு நாட்டில்!ம்ம்
17 June 2012 13:24
நேசனுக்கு ஹிந்தி பாடல்கள் விருப்பமோ ??:)))
ReplyDeleteமுன்பு சூப்பர் ஹிட் முக்காப்லா /பாடல்கள் கேட்கவே டிவி முன் அமருவோம் .தொன்னூறுகளில் வந்த பாடல்கள் மிக இனிமை
ஹேமா /நேசன் மற்றும் யோகா அண்ணா /.KALA ,REVARIE கலை அனைவரும் நலமா
ReplyDelete//ம்ம் எல்லாரும் நலம் அஞ்சலின்
17 June 2012 13:26
பாடல்கள் எப்பவும் உங்க பதிவில் இனிமையா மனதை வருடும் விதத்தில் இருக்கும் நேசன்//ம்ம் நன்றி அஞ்சலின் அது எல்லாம் என் ஆசைப்பாடல்கள்§
ReplyDeleteநலமாக இருக்கட்டும் .இறைவனை வேண்டுவோம் அனைவரின் சந்தோஷ வாழ்வுக்கும்
ReplyDeleteநேசனுக்கு ஹிந்தி பாடல்கள் விருப்பமோ ??:)))
ReplyDeleteமுன்பு சூப்பர் ஹிட் முக்காப்லா /பாடல்கள் கேட்கவே டிவி முன் அமருவோம் .தொன்னூறுகளில் வந்த பாடல்கள் மிக இனிமை
17 June 2012 13:29 // ம்ம் எனக்கு ஹிந்தி அதிகம் பிடிக்கும் ஆனால் அவை எல்லாம் சிங்களத்தில் மொழி பெயர்த்து வரும் போது கருத்து விளங்கும்!ம்ம்
நலமாக இருக்கட்டும் .இறைவனை வேண்டுவோம் அனைவரின் சந்தோஷ வாழ்வுக்கும்//ம்ம் நானும் அதுதான் வேண்டுகின்றேன் அவனுக்கு!
ReplyDeleteஆமாம் நானும் கேள்விபட்டேன் சிங்கள மக்கள் அதிகம் ஹிந்தி படங்க;ஐ பார்ப்பார்களாம் .
ReplyDeleteஇங்கே முன்பு ஒரு சானல் வரும் அதில் எல்லா புதிய ஹிந்தி படங்களையும் போடுவாங்க .இப்ப வேற சாடிலைட்
ஆமாம் நானும் கேள்விபட்டேன் சிங்கள மக்கள் அதிகம் ஹிந்தி படங்க;ஐ பார்ப்பார்களாம் .
ReplyDeleteஇங்கே முன்பு ஒரு சானல் வரும் அதில் எல்லா புதிய ஹிந்தி படங்களையும் போடுவாங்க .இப்ப வேற சாடிலைட்
17 June 2012 1//ம்ம் அவர்கள் ஹிந்திப்படம் என்றால் பாய் கொண்டு, வருவார்கள் படம் பார்க்க!ம்ம்
தமிழில் உறவுச் சொற்கள் உயர்ந்தவை அழகுள்ளவை. அர்த்தம் செறிந்தவை //
ReplyDeleteசரியாக சொன்னீங்க . ஒவ்வொரு உறவு முறையும் சொல்லி அழைப்பதில் என்னே ஆனந்தம் .
வெளிநாட்டு வாழ்க்கையில் இவையும் தொலைந்து போனவை (
தமிழில் உறவுச் சொற்கள் உயர்ந்தவை அழகுள்ளவை. அர்த்தம் செறிந்தவை //
ReplyDeleteசரியாக சொன்னீங்க . ஒவ்வொரு உறவு முறையும் சொல்லி அழைப்பதில் என்னே ஆனந்தம் .
வெளிநாட்டு வாழ்க்கையில் இவையும் தொலைந்து போனவை (
17 June 2012 13:41 //ம்ம் உண்மைதான் அஞ்சலின்!
சாப்பிட்டீங்கள நேசன் ??? இல்லையெனில் போய் சாப்பிடுங்க
ReplyDeleteOTHERWISE YOGA ANNA WILL COME WITH KARUKKU MATTAI :)))
இங்கே நாளை பள்ளி விடுமுறை எனவே நாங்க கொஞ்சம் ரிலாக்ஸ்டா உறங்க செல்வோம்
ReplyDeleteசாப்பிட்டீங்கள நேசன் ??? இல்லையெனில் போய் சாப்பிடுங்க
ReplyDeleteOTHERWISE YOGA ANNA WILL COME WITH KARUKKU MATTAI :)))
17 June 2012 13:44 //ம்ம் இனித்தான்சாப்பாடு நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துக்கும்! குட் நைட்!
இங்கே நாளை பள்ளி விடுமுறை எனவே நாங்க கொஞ்சம் ரிலாக்ஸ்டா உறங்க செல்வோம்
ReplyDelete17 June 2012 13:45 //ம் குட் நைட் அஞ்சலின்!ம்ம்ம்
GOOD NIGHT FRIENDS .
ReplyDeleteஎன்னைப்பொறுத்தவரை திருப்தியான நிறைவான பதிவு.ஒரு புத்தகமாக்கக்கூடிய அளவு வாழ்வியல்,உறவின் அன்பும்,நட்பின் நெருக்கமும் நிறைந்த தொடர் நேசன்.அமைதியான இரவு வணக்கம் !
ReplyDeleteரசித்துப் படித்தேன் !
ReplyDeleteநண்பர் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !
வணக்கம் நேசன்
ReplyDeleteவாசித்து முடிந்ததும்
மனக்கனம் இன்னும் இருந்துகொண்டே
இருக்கிறது...
என் மனதிலும் அதே எண்ணம்..
ராகுல் எங்கிருந்தாலும்
நல்ல நிலையில் இருக்க வேண்டுமென..
மலையகத்தில் ஓர் அருமையான காவியம்
படித்துவிட்டீர்கள்..
ஜயோ நேசன் அண்ணா தொடர் முடிவுற்றதா?? அடுத்த தொடரை எதிர்பார்க்கிறேன். மிக அருமையாக மலையக பெருமைகளை எமக்கு அள்ளி வீசனீகள். சூப்பர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteஅடுத்த தொடரை எதிர் பார்க்கிறேன்...
அருமையாக எழுதியுள்ளீர் நல்வாழ்த்து.
ReplyDeletegood morning nesan//lvery sorry////our compeuter is not working in the mouvemet.may be today we will try to repaire.see you,later///this cimment coming from:.:free box:::
ReplyDeletegood morning,hema/angelin,thanapalan,mahendran,and other two commentaires//have a nice day all of you!!!!!!!!!!!!
ReplyDeleterendaavathu paddu vilangayilla,ha! ha! haa!!!!!!!!!
ReplyDeletethodar mudinchutho,nesan?????
ReplyDeletefree box il thodar vaasika mudiyaathu.padam parkkakaam,paaddu kekkalaam.comment podalam.thamiz elutha vaasikka mudiyaathu.pirakukompiyooddaril vaasippen!!!!!
ReplyDeleteஎண்ண அடுக்குகளில்....ராகுலை நேசனையும் சேர்த்து அடுக்கிக்கொள்கிறேன்\\\\\
ReplyDeleteஅவர் இவரேதான்!
இவர் அவரேதான்!! ஹாஹா..ஹா..க்கக்கக....
உங்கள கடுமையான உழைப்புக்கு நன்றி
அனைவருக்கும் வணக்கம்
இத்தனை பாகங்களையும் சிறப்பாக புத்தகமாக வெளியிட்டால் அருமையாக இருக்குமே...!
ReplyDeleteஇறுதிப் பகுதி மனதில் ஏதோ இனம் புரியாத சோகத்தை உண்டு பண்ணுகின்றது ஆனால் உண்மைக் கதைகளின் கிளைமாக்ஸை எழுதுவது கடவுள்தானே...ராகுல் எங்கு இருந்தாலும் சந்தோசமாக வாழவேண்டும்
ReplyDeleteநேற்று யோகாஅப்பா,கலை இல்லாமல் போனது ஒரு மாதிரி இருந்தது.கலைதான் ஊருக்குப் போயாச்சு.அப்பா பிந்தியாச்சும் வருவாரெண்டு பாத்தென்.இண்டைக்குத்தான் வந்திருக்கிறார்.என்றாலும் இத்தனை பதிவுகளுக்குள்ளும் நேசனோடு கை கோர்த்து வந்தவர் நிறைவுப் பகுதியில் நிறைவாயில்லை மாதிரி இருக்கு.கணணி சரிவந்தபிறகு நிறைவான வாழ்த்துக் கண்டிப்பாய் வேணும் !
ReplyDeleteஅதுபோல ரெவரியும்....வாங்கோ காணேல்ல.அதிராவைக் காணேல்ல !
ஏன் இப்படி திடீரென முடித்துவிட்டீங்க நேசன்? நான் வேறு 69ம் பாகத்திற்கு பின் சரியாக வாசிக்கவில்லை.
ReplyDeleteதயவு செய்து ஒரு மின்னூலாக (pdf) போல வெளியிட்டால் மிகவும் நன்றாகவும் வாசிக்க இலகுவாகவும் இருக்கும்.
நிறைவான முடிவு அண்ணா, ராகுல் வாசக மனங்களில் நிறைந்து விட்டான், குடும்ப பொறுப்புள்ள ஒரு நல்லொழுக்கம் மிக்கவின் முடிவு இனிதே அமைந்தது.
ReplyDeleteஎங்கோ ஒரு மூலையில் தனித்துவத்துடன் ராகுல் வாழ்வான் என எதிர்பார்க்கிறேன்.
கடைசி குறுகிய காலத்தில் ராகுலுடன் பயணித்தாலும் இனிய பயணம்.
அன்பு நேசரே...நலமா?
ReplyDeleteதொடர் நிறைவு பெறப்போகின்றது என்று முன்னமே எச்சரித்தாலும் அது உங்களை நான் வலைவீசி தொலைபேசியில் தேடிக்கொண்டிருந்த போது அறியாமலே நடந்திருப்பது இரட்டை வருத்தம்...
மனதில் உள்ள அனைத்தும் முழுதாய் தரவிறக்கம் செய்யாமல் பாதியிலே விட்டது போன்ற பிரம்மை...
உங்களுக்கு உள்ள நேர நெருக்கடி புரிகிறது...
ஆனாலும் இந்த பயணம் உணர்வு தாங்கி உறவுகளோடு பயணித்ததில் கூடுதல் மகிழ்ச்சி...
இது மாலை நேர வாசிப்பு தொடர் மட்டுமல்ல ஒரு நேசிப்பு தொடராயும் மாறிப்போனதில் இரட்டை மகிழ்ச்சி...
விரைவில் விரிவாக பேசலாம்...இது மனம் கொத்திப்போன அனுபவம்...நினைவில் இருக்கும் நெடுங்காலம்...
வாழ்த்துக்கள் நேசரே...
கவிதாயினி...யோகா அய்யா..கருவாச்சி..ஏஞ்சலின்...நலமா?
ReplyDeleteவெள்ளி-திங்கள் கடமைகள் அதிகம்....விரைவில் சந்திப்போம்...
ஆஆ.. தொடர் முடிவுக்கு வந்திட்டுதோ நேசன்ன்ன்ன்.. முடிவு வலியைத்தருதே... இடையிடையே சந்தோசமாகவே வந்த தொடர் முடிவில் வேதனையாக இருக்கு.
ReplyDeleteஒவ்வொரு நாளும் நாங்களும் ராகுல் உடன் பயணித்தோம் இந்த தொடர் ஊடாக .எங்களை அழைத்து சென்ற நேசனுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றியும்
ReplyDelete@ ரெவரி
நாங்க அனைவரும் நலம் ரெவரி .நீங்க அலுவல்கள் முடிந்தபின் வாங்க
சந்திப்போம்
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
ReplyDeleteமாமா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
ReplyDeleteஹேமா அக்கா ஆஆஆஆஆஆஆஆஅ
அதிர அக்கா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
அஞ்சு அக்கா ஆஆஆஆஆஆஆஆஆஆ
ரே ரீ அண்ணா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ரீ ரீ அண்ணா ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
எல்லாருக்கும் வணக்கம் ...
நான் நல்லா இருக்கேனே ...
நீங்கலாம் நலமா
அண்ணா தொடர் முடிஞ்சதா ...
ReplyDeleteராகுல் அண்ணன் ஏப்பவுமே கூட் அண்ணா ...
raagul அண்ணன் வந்தாங்களா ...
ஹேமா அக்காஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ReplyDeleteவரமாடீங்கலா
அன்ணா ஆஆஆஆஆஆஆ அடுத்த தொடர் எப்பம்
ReplyDeleteஎன்னைப்பொறுத்தவரை திருப்தியான நிறைவான பதிவு.ஒரு புத்தகமாக்கக்கூடிய அளவு வாழ்வியல்,உறவின் அன்பும்,நட்பின் நெருக்கமும் நிறைந்த தொடர் நேசன்.அமைதியான இரவு வணக்கம்//ம்ம் நன்றி ஹேமா வாழ்த்துக்கு
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteரசித்துப் படித்தேன் !
நண்பர் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !
17 June 2012 18:22 // நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
mail Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் பதிவு சென்றடையும் !
ReplyDelete17 June 2012 18:22 // நன்றி தனபாலன் சார் ஆலோசனைக்கு!
வணக்கம் நேசன்
ReplyDeleteவாசித்து முடிந்ததும்
மனக்கனம் இன்னும் இருந்துகொண்டே
இருக்கிறது...
என் மனதிலும் அதே எண்ணம்..
ராகுல் எங்கிருந்தாலும்
நல்ல நிலையில் இருக்க வேண்டுமென..
மலையகத்தில் ஓர் அருமையான காவியம்
படித்துவிட்டீர்கள்..
17 June 2012 19:24 // வணக்கம் மகேந்திரன் அண்ணா! தங்களின் வாழ்த்துக்கும் அவனின் வாழ்விற்கு பிரார்த்திற்கும் நல்ல எண்ணத்திற்கு என் நன்றிகள் ராகுல் நல்லாக வாழவே என் பிரார்த்தனையும்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
ஜயோ நேசன் அண்ணா தொடர் முடிவுற்றதா?? அடுத்த தொடரை எதிர்பார்க்கிறேன். மிக அருமையாக மலையக பெருமைகளை எமக்கு அள்ளி வீசனீகள். சூப்பர்ர்ர்ர்ர்ர்
ReplyDeleteஅடுத்த தொடரை எதிர் பார்க்கிறேன்...
17 June 2012 20:52 // நன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.
அருமையாக எழுதியுள்ளீர் நல்வாழ்த்து.// நன்றி கவி அழகன் வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துரைக்கும்!
ReplyDeletegood morning nesan//lvery sorry////our compeuter is not working in the mouvemet.may be today we will try to repaire.see you,later///this cimment coming from:.:free box:::
ReplyDelete17 June 2012 22:17 // இரவு வணக்கம் யோகா ஐயா!ம்ம் கணனி சரியாகிய பின் சந்திப்போம்!
rendaavathu paddu vilangayilla,ha! ha! haa!!!!!!!!!
ReplyDelete17 June 2012 22:39 //ஹீ டொல்னா பிரெஞ்சில் அனுப்பி வைக்கின்றேன்!லொல்லூ!
thodar mudinchutho,nesan?????//ம்ம் முடித்துவிட்டேன் யோகா ஐயா!
ReplyDeleteகலா said...
ReplyDeleteஎண்ண அடுக்குகளில்....ராகுலை நேசனையும் சேர்த்து அடுக்கிக்கொள்கிறேன்\\\\\
அவர் இவரேதான்!
இவர் அவரேதான்!! ஹாஹா..ஹா..க்கக்கக....
உங்கள கடுமையான உழைப்புக்கு நன்றி
அனைவருக்கும் வணக்கம்
18 June 2012 00:40// ஹீ ஏன் ஏன் கலாப்பாட்டி இந்தக்கொலவெறி ஹீ அவன் நான் இல்லை ! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!
இத்தனை பாகங்களையும் சிறப்பாக புத்தகமாக வெளியிட்டால் அருமையாக இருக்குமே...!
ReplyDelete18 June 2012 01:27 //ம்ம் யோசிப்போம் மனோ அண்ணா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
இறுதிப் பகுதி மனதில் ஏதோ இனம் புரியாத சோகத்தை உண்டு பண்ணுகின்றது ஆனால் உண்மைக் கதைகளின் கிளைமாக்ஸை எழுதுவது கடவுள்தானே...ராகுல் எங்கு இருந்தாலும் சந்தோசமாக வாழவேண்டும்
ReplyDelete18 June 2012 05:03// நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.
நேற்று யோகாஅப்பா,கலை இல்லாமல் போனது ஒரு மாதிரி இருந்தது.கலைதான் ஊருக்குப் போயாச்சு.அப்பா பிந்தியாச்சும் வருவாரெண்டு பாத்தென்.இண்டைக்குத்தான் வந்திருக்கிறார்.என்றாலும் இத்தனை பதிவுகளுக்குள்ளும் நேசனோடு கை கோர்த்து வந்தவர் நிறைவுப் பகுதியில் நிறைவாயில்லை மாதிரி இருக்கு.கணணி சரிவந்தபிறகு நிறைவான வாழ்த்துக் கண்டிப்பாய் வேணும் !
ReplyDeleteஅதுபோல ரெவரியும்....வாங்கோ காணேல்ல.அதிராவைக் காணேல்ல !
18 June 2012 06:14//ம்ம் நேரம் இருக்கும் போது எல்லோரும் ப்யணிப்பார்கள் ஹேமா!
ஏன் இப்படி திடீரென முடித்துவிட்டீங்க நேசன்? நான் வேறு 69ம் பாகத்திற்கு பின் சரியாக வாசிக்கவில்லை.
ReplyDeleteதயவு செய்து ஒரு மின்னூலாக (pdf) போல வெளியிட்டால் மிகவும் நன்றாகவும் வாசிக்க இலகுவாகவும் இருக்கும்.
18 June 2012 //ம்ம் யோசிக்கின்றேன் ஹாலிவூட் ரசிகன்! வாசித்த பின் கருத்துக்களை பதிவு செய்யுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
நிறைவான முடிவு அண்ணா, ராகுல் வாசக மனங்களில் நிறைந்து விட்டான், குடும்ப பொறுப்புள்ள ஒரு நல்லொழுக்கம் மிக்கவின் முடிவு இனிதே அமைந்தது.
ReplyDeleteஎங்கோ ஒரு மூலையில் தனித்துவத்துடன் ராகுல் வாழ்வான் என எதிர்பார்க்கிறேன்.
கடைசி குறுகிய காலத்தில் ராகுலுடன் பயணித்தாலும் இனிய பயணம்.
18 June 2012 08:40 // நன்றி கலைவிழி வருகைக்கும் நிறைவான கருத்துரைக்கும்.
அன்பு நேசரே...நலமா?
ReplyDeleteதொடர் நிறைவு பெறப்போகின்றது என்று முன்னமே எச்சரித்தாலும் அது உங்களை நான் வலைவீசி தொலைபேசியில் தேடிக்கொண்டிருந்த போது அறியாமலே நடந்திருப்பது இரட்டை வருத்தம்...
மனதில் உள்ள அனைத்தும் முழுதாய் தரவிறக்கம் செய்யாமல் பாதியிலே விட்டது போன்ற பிரம்மை...
உங்களுக்கு உள்ள நேர நெருக்கடி புரிகிறது...
ஆனாலும் இந்த பயணம் உணர்வு தாங்கி உறவுகளோடு பயணித்ததில் கூடுதல் மகிழ்ச்சி...
இது மாலை நேர வாசிப்பு தொடர் மட்டுமல்ல ஒரு நேசிப்பு தொடராயும் மாறிப்போனதில் இரட்டை மகிழ்ச்சி...
விரைவில் விரிவாக பேசலாம்...இது மனம் கொத்திப்போன அனுபவம்...நினைவில் இருக்கும் நெடுங்காலம்...
வாழ்த்துக்கள் நேச// அன்பு வணக்கம் ரெவெரி அண்ணா! வெளி அலுவல்காரனாமாக நான் போய்விட்டேன் அதுதான் அலைப்பில் வரமுடிவில்லை ஆனால் பேசுவோம்!! நிச்சயமாக.ம்ம் நேரம் என்ன செய்வது!புரிந்துணர்வுக்கு நன்றி. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ரெவெரி அண்ணா!
ஆஆ.. தொடர் முடிவுக்கு வந்திட்டுதோ நேசன்ன்ன்ன்.. முடிவு வலியைத்தருதே... இடையிடையே சந்தோசமாகவே வந்த தொடர் முடிவில் வேதனையாக இருக்கு.
ReplyDelete18 June 2012 09:37 //ம்ம் வாழ்க்கை அப்படித்தானே அதிரா! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
ஒவ்வொரு நாளும் நாங்களும் ராகுல் உடன் பயணித்தோம் இந்த தொடர் ஊடாக .எங்களை அழைத்து சென்ற நேசனுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றியும்
ReplyDelete@ ரெவரி
நாங்க அனைவரும் நலம் ரெவரி .நீங்க அலுவல்கள் முடிந்தபின் வாங்க
சந்திப்போம்
18 June 2012 10:10 // நன்றி அஞ்சலின் ஒரு பயணத்தில் இனைந்தோம் இப்போது கொஞ்சம் தேவை ஓய்வுகள்§ நன்றி நானும் சொல்லிகின்றேன்!
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa// வாங்க கலை!
ReplyDeleteஅண்ணா தொடர் முடிஞ்சதா ...
ReplyDeleteராகுல் அண்ணன் ஏப்பவுமே கூட் அண்ணா ...
raagul அண்ணன் வந்தாங்களா ...
18 June 2012 1//ம்ம் அவன் வரமாட்டான் கலை சொல்லி விடுகின்றேன் கலை நல்லபையன் என்று சொல்லியதை!
அன்ணா ஆஆஆஆஆஆஆ அடுத்த தொடர் எப்பம்
ReplyDelete18 June 2012 11:09 //ம்ம் விரைவில் வருவேன் கலை நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!