18 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்...- பின்னே சில முகங்கள்.


வணக்கம் உறவுகளே நீண்ண்......ட ஒரு தொடரை எழுதி உங்களை கொஞ்சம் அதிகம் இம்சையாக்கிவிட்டேன் சில வாரமாக. 




மலையகத்தில் முகம் தொலைந்தவன் ராகுல் பாத்திரம் ஊடாக மலையக வீதியை வலையுலகில் உலாவ விடணும் என்ற நீண்ட நாள் ஆசைக்கு அச்சாரம் போட்டது என் நண்பன் டனில் .



 இந்த தொடரின் மையக்கருத்து ஒரு மதச்சண்டையில் ஏற்பட்ட மனஉளைச்சளை கொஞ்சம் கற்பனை கலந்து சிறுகுறுந்தொடராக எழுதி ஒரு வாரசஞ்சிகைக்கு கொடுத்து அது வெளியாகும் தருணத்தில் . அந்தக்குழுவில் இருந்த ஒருவரோடு முரண்பட்டதால் வெளிவரவில்லை .






அந்த நேரத்தில் இனி இலக்கியம் ஆசையே வேண்டாம் என்று மூட்டைக்கட்டிவிட்டு வியாபாரத்தை கவனிக்க மன்னார் போனபோது .அயிசாவைச் சந்திச்சேன் !



 அப்போது எல்லாம் தனிமரம் ஜொல்லுப்பாட்டி பதிவுலகில் சொல்லுவது போல டென்சன் பார்ட்டி இல்லை:))) 


இப்படி ஒரு ஊரில் இப்படி ஒரு கதை இருந்திச்சு மாத்தயா 




அவனைக்கண்டால் மன்னிக்கச் சொல்லுங்கோ. அவன் வாழ்க்கையை தெளிவாக சொன்னதால் தான் நான் இப்போது சந்தோஸமாக ஒரு இல்லத்தரசியாக இருக்கின்றேன். என்று சொல்லி வீட்டில் எனக்குப் பிடித்த சாப்பாடுகள் செய்து விருந்து கொடுத்தாள் 



. அவர்கள் குடும்பம் எனக்கும் அதிகம் நெருங்கிய உறவாகிப்போனார்கள். அதன் பின் தான் நண்பரின் கதையை ஆராய்ந்தேன். ராகுல் எல்லாம் உத்தமன் கிடையாது ஆனால் குடும்பம் முக்கியம் என்று நினைப்பவன் .அவனிடம் கொழும்பில் வந்து சொன்னேன். 


" நீ புரிந்துகொண்டாய் அயிசா நல்லவள் என்று அது சரிதான் என்றான் ராகுல். அதன் பின் நட்பு தொடரவில்லை மாற்றல் என்று நானும்!கம்பளைக்குப் போய்விட்டேன். மாதமுடிவில் வரும் ஒன்றுகூடலுக்கு பல்தேசியக்கம்பனியின் காரியா லயத்தில் கொழும்பு வரும் போது கலாய்த்துவிட்டு ஓடுவேன் ராகுலை.




 டனில்லோடு சினிமா இசை இலக்கியம் ஹோல்பேஸ் பீச் என்று இருவருக்கும் பல ஒற்றுமை சிந்தனையில் நான் சபரிமலைப்பயணம் போகும் விடயம் முதலில் அவனோடுதான் பகிர்வேன். அப்போது தான் இந்த வருடம் யாத்திரையில் ராகுலை நானும் மீண்டும் சந்திச்சேன் . உடனே வந்து சிந்தித்தேன் வலைப்பதிவில் இருக்கும் நான் ஏன் இந்த மலையகப்பக்கம் உலா போக்கூடாது ? இயற்கை எழில் ரசிக்கும் பலருக்கு ஒரு ஊரைச்சுற்றிக்காட்ட வேண்டும். யுத்தம் என்ற வட்டத்தைத்தாண்டி இலங்கையில் பலவிடயம் இருக்கு பார்க்க ,படிக்க வெளியுலக மக்களுக்கு . நாமும் ஏதாவது வளர்த்த சமுகத்துக்கு பிரதி உபகாரம் செய்ய வேண்டும் என்ற போது டனில் சொன்னான் ." நீ பழைய கதையை தொடங்கு காட்சிப்படம் நான் அனுப்புகின்றேன் மச்சான் என்று 


மலைமுகட்டில் தனிமரம் வலையேற்றிய படங்களும் இந்தத்தொடரில் பதுளை பற்றிய படங்கள் எல்லாம் அவனின் கைவண்ணம். அதிகம். அதனை பிடித்தது அவனின் தந்தை. டனில் தந்தையும் ஒரு புகைப்படக்கலைஞர் பதுளையில். இவன் இப்படி எனக்கு!யாதுமாகிய கண்ணன் அதிகம் பாடல் தேடமுடியாத போது இவனிடம் சொல்லிவிட்டால் அடுத்த வினாடி முகநூலில் பதிந்து விடுவான் . எங்க நட்பு பலருக்கு விசித்திரம் நான் ஒரு ஊர் அவன் ஒரு ஊர் ஆனால் நட்பில் ஒரே ஊர் .



அவனோடு சுத்தாத இடம் இல்லை கொழும்பு மற்றும் பதுளையில் நான் அந்தளவு நெருக்கம் அவன் வீட்டில் .எனக்கும். என் வீட்டில் அவனுக்கும் இருக்கும் மரியாதையை தொடர் ஆக்கினால் இன்னும் ஒரு தொடர் போடலாம். யுத்தம் பலரை பலருக்கு உறவாக்கிவிட்டது அதில் பதுளையும் எனக்கு ஒரு உறவுதான் என் நட்பு வட்டம் எப்போதும் அதிகம் தான் . 


இந்தத்தொடரில் அவனின் ஊக்கிவிப்புக்கு இந்த தனிமரம் நேசனின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல என்றும் நாம் குடும்பவிடயத்தை முன்னிலைப்படுத்துவோம் அவன் இப்போது அரபுலகத்தில் இருக்கின்றான் மீண்டும் ஒரு நாள் சந்திப்போம் நட்பாக நம்! 




இவனின் ஊக்கிவிப்பு ஒரு புறம் என்றால் காற்றில் என் கீதம் தோழியின் பங்கு இன்னொரு தூண்டல்.!



 பதுளை பற்றிய தொடரில் நிச்சயம் பல விடயங்கள் வரணும் என்ற போது அவங்களுக்கு தெரியாது நான் எதனை மையமாக வைத்து தொடரை தொடங்கினேன் என்று.



 ஆனால் இந்த பகிஸ்கரிப்பில் படிப்பில் சீரழிந்த பலரினை முகம் போட்டுக்காட்டணும் ஏன் இப்படி அங்கே அடிக்கடி நிர்வாகம் பாதிப்புக்குள்ளாகின்றது? பதவி ஆசையில், மதவெறியில், மாணவ சமுகம் பிழையாக நடத்தப்படும் ஆதங்கம் எல்லாம் பொதுவெளியில் பேச வேண்டும். பல்கலைக்கழகம் போக ஒரு ஆண்டில் படித்த பலருக்கு பொருளாதாரச்சிக்கல் இருந்தது. அதைத்தாண்டி பள்ளியில் படித்து பல்கலைக்கழகம் போவோம் என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள் கனவை மத்தீ சீழித்த கதையை யாரும் சொல்லமாட்டார்கள் . அடுத்த தொகுதியினருக்கு ஆனால் அவங்கள் எல்லாம் ஆடினாங்கள், கும்மாளம் போட்டாங்க, பிள்ளைகளை சைட் அடித்தாங்க என்று மட்டும் 

விமர்ச்சிக்கும் போது அதில் ஏது நிஜம் என்று தெரியாமல் சிலர் பரிகாசம் செய்யும் நிலையை ராகுல் வெறுப்பதை என்னிடம் முன்னிலைப்படுத்தச் சொன்னதை உள்வாங்கித் தான் இந்த தொடரை தூசி தட்டி பதிவுலக நிழல்கால அரசியலையும் கலந்து எனக்குப் பிடித்த பாடல்களை இணைத்து தொடர் ஆக்க வலையேற்ற காற்றில் என் கீதம் கொடுத்த ஆலோசனைகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.


 முகநூலில் கிறுக்கியவனை வலைப்பக்கம் பயணிக்க முதல் குரு தோழிதான் எனக்கு அவங்ககூட ஒரு மூத்த பதிவாளினி-http://sutharsshini.blogspot.fr/


. சங்கீத டீச்சரிடம் நாம் ஒன்றாக படித்தோம் என்பதும் வெளியில் சொல்லாத சேதி . கதையோட்டத்தில் திருப்பம் வரணும் என்ற போது ராகுல் சொல்லிய இருவரையும் இவர்களுக்குத் தெரியாமல் கதையில் இணைத்தேன்!.இங்கே தான் தனிமரம் நேசன் கற்பனையை இவர்கள் முகநூலில் சூடாக விவாதம் பண்ணுவது யார் அந்த கல்பனா ???இது எல்லாம் ராகுல் சொன்னது என்றேன் இப்ப கேள்வி எல்லாம் தொலைந்தவன் பதுளை வருவானா என்பதே அதுதான்  முகம்  தொலைஞ்சிட்டான் இல்ல !!! 

இப்படி எல்லாம் எழுத வேண்டும்  மலையக உறவுகள்  முகம் என்று என்னை ஊக்கிவித்த என் ஆசிரியை மகன் பிஞ்சு முகம் மனோஜ்  காலக்கூற்றுவன் கொண்டு போனாலும் என் நினைவோடு அவன் பயணிப்பான்! இந்தத்தொடரில் அவன் இழப்துப்பு என்னை மீண்டும்   பதுளை பற்றி அதிகம் எழுதத்தூண்டிய ஒரு விடயம்..

 முகம் தொலைந்தவனுக்கு கை கொடுத்த வலை உறவுகள்  முகத்தோடு நாளை சந்திக்கின்றேன்!

37 comments:

  1. நலமா நேசரே?

    ReplyDelete
  2. வாங்க ரெவெரி இரவு வணக்கம் நான் நலம் நீங்கள் எப்படி சாரி முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  3. நான் நலம்...பால்க்கோப்பிக்கு நன்றி...

    ReplyDelete
  4. மன்னிக்கவும் வெளி வேலை போய்விட்டேன் வார இறுதியில்!ம்ம்

    ReplyDelete
  5. தொடர் முடிந்த திருப்தியா?

    ReplyDelete
  6. பரவாயில்லை...மறுபடி முயற்சிப்போம்...

    ReplyDelete
  7. வாத்து வந்த் போது கொஞ்சம் வேலை அதுதான் ஓடிவிட்டா!ம்ம் யோகா ஐயா வரமாட்டார் இந்த வாரம்!

    ReplyDelete
  8. கருவாச்சி திரும்பியாச்சா?

    ReplyDelete
  9. தொடர் முடிந்த திருப்தியா?//ம்ம் ஒரு விதத்தில் சொல்ல வந்த விடயத்தைச் சொல்லிவிட்டேன் பதிவுலகில் !ம்ம்

    ReplyDelete
  10. பரவாயில்லை...மறுபடி முயற்சிப்போம்.//ம்ம் நிச்சயம் ரெவெரி அண்ணா!

    ReplyDelete
  11. தொடர் முடிந்த திருப்தியா?//ம்ம் ஒரு விதத்தில் சொல்ல வந்த விடயத்தைச் சொல்லிவிட்டேன் பதிவுலகில் !ம்ம்//

    மிகவும் பிடித்தது...

    ReplyDelete
  12. கருவாச்சி திரும்பியாச்சா?

    18 June 2012 12:25 // இல்லை இன்னும் சென்னைதான் போலும்!

    ReplyDelete
  13. மிகவும் பிடித்தது...

    18 June 2012 12:26 // நன்றி என் இரண்டு தொடருக்கும் நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  14. கரும்பு தின்ன கூலியா?

    ReplyDelete
  15. கரும்பு தின்ன கூலியா?//ம்ம் அவசர உலகில் கொஞ்சம் கடினம்தான் கூலி கொடுக்கணுமே!ஹீ

    ReplyDelete
  16. வாசிப்பு எளிதல்லவா...என்ன சில நேரங்களில் மனம் கனக்கும்..அவ்வளவே...

    ReplyDelete
  17. வாசிப்பு எளிதல்லவா...என்ன சில நேரங்களில் மனம் கனக்கும்..அவ்வளவே..//ம்ம் உண்மைதான் ஈழத்தவனாக பிறந்தால் இது எல்லாம் அனுபவிக்க வேண்டுமே விதி!ம்ம்.

    ReplyDelete
  18. வார இறுதியில் விரிவாக பேசலாம் நேசரே...ஒய்வு எடுங்கள்...

    ReplyDelete
  19. வார இறுதியில் விரிவாக பேசலாம் நேசரே...ஒய்வு எடுங்கள்...

    18 June 2012 12:33 // நன்றி ரெவெரி நிச்சயமாக காத்திருக்கின்றேன்! இனிய இரவு வணக்கம்.

    ReplyDelete
  20. நீங்கள் தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா?

    ReplyDelete
  21. இனிய இரவு வணக்கங்கள் நேசரே...

    ReplyDelete
  22. நீங்கள் தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா?//ம்ம் தமிழ்மணம் இன்று ஏனோ தொழில்நுட்பக்கோளாறு செய்கின்றது!ம்ம்

    ReplyDelete
  23. இந்த தொடரை முழுமையாக வாசிக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு நான் வாசித்த மட்டில் உங்கள் பழய தொடர்களை விட சிறப்பானது என்று சொல்வேன்

    ReplyDelete
  24. வணக்கம் நேசன்,
    தொலைந்தவன் எனச் சொல்லி
    தொலைந்துபோன பல நினைவுகளை
    மீட்டெடுத்து விட்டீர்கள்..
    தொலைந்தவர்கள் ஆனாலும்
    நம் நெஞ்சில் பலவற்றை
    பதியம் போட்டு சென்றவர்கள் அல்லவா...

    இப்போது முகநூல் பார்த்துவிட்டு தான் இங்கே
    வருகிறேன்..

    இன்று இந்தியப் பயணம்.. இன்னும் இரண்டு நாட்கள்
    கழித்து வருகிறேன்..
    நன்றி வணக்கம்..

    ReplyDelete
  25. kaalai vanakkam,nesan!!!nalamaa?///revari,raaj,maendranukkum kaalai vanakkam!kompiyooddar innum thurunthavillai,mannikkavum!!!!!!!!!

    ReplyDelete
  26. kaalai vanakkam,nesan!!!nalamaa?///revari,raaj,maendranukkum kaalai vanakkam!kompiyooddar innum thurunthavillai,mannikkavum!!!!!!!!!

    ReplyDelete
  27. சில பதிவுகளைத் தவறவிட்டாலும் பின் சேர்த்துப் படித்தேன். இயன்றவரை விடாமல் முயன்று நான் படித்த தொடர் இது. முகங்களுடன் நாளை வரும் நேசனுக்காய் என் காத்திருப்பும்.

    ReplyDelete
  28. வணக்கம் நேசன் அண்ணா, யோகா ஐயா, மற்றும் அனைவருக்கும்....
    உங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் எனது கருத்துக்களை தெரிவிக்க

    ReplyDelete
  29. ஒரு வரலாறு போன்ற தொடர், உங்கள் முகத்தை அழகாக வெளிக்காட்டியது, வேதனைகளையும், சந்தோசங்களையும், பிரிவுகளையும்........ ம்ம்ம்ம் நல்லதே நடக்கட்டும்.

    ReplyDelete
  30. என்ன மாத்தையா தொடர் முடித்த கழைப்பில் உள்ளீர்களோ?....

    சீக்கிரம் அடுத்த தொடரை தொடங்குங்கள்... அண்ணா...

    ReplyDelete
  31. இந்த தொடரை முழுமையாக வாசிக்க முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு நான் வாசித்த மட்டில் உங்கள் பழய தொடர்களை விட சிறப்பானது என்று சொல்வேன்

    18 June 2012 17:59// நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  32. வணக்கம் நேசன்,
    தொலைந்தவன் எனச் சொல்லி
    தொலைந்துபோன பல நினைவுகளை
    மீட்டெடுத்து விட்டீர்கள்..
    தொலைந்தவர்கள் ஆனாலும்
    நம் நெஞ்சில் பலவற்றை
    பதியம் போட்டு சென்றவர்கள் அல்லவா...

    இப்போது முகநூல் பார்த்துவிட்டு தான் இங்கே
    வருகிறேன்..

    இன்று இந்தியப் பயணம்.. இன்னும் இரண்டு நாட்கள்
    கழித்து வருகிறேன்..
    நன்றி வணக்கம்../// நன்றி மகேந்திரன் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  33. kaalai vanakkam,nesan!!!nalamaa?///revari,raaj,maendranukkum kaalai vanakkam!kompiyooddar innum thurunthavillai,mannikkavum!!!!!!!!!

    18 June 2012 22:12 //மாலை வணக்கம் யோகா ஐயா!

    ReplyDelete
  34. சில பதிவுகளைத் தவறவிட்டாலும் பின் சேர்த்துப் படித்தேன். இயன்றவரை விடாமல் முயன்று நான் படித்த தொடர் இது. முகங்களுடன் நாளை வரும் நேசனுக்காய் என் காத்திருப்பும்.

    18 June 2012 23:06// நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும்! நிச்சயம் சந்திப்போம் விரைவில்.

    ReplyDelete
  35. வணக்கம் நேசன் அண்ணா, யோகா ஐயா, மற்றும் அனைவருக்கும்....
    உங்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் எனது கருத்துக்களை தெரிவிக்க

    18 June 2012 23:43// ம்ம் நன்றி கலைவிழி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  36. ஒரு வரலாறு போன்ற தொடர், உங்கள் முகத்தை அழகாக வெளிக்காட்டியது, வேதனைகளையும், சந்தோசங்களையும், பிரிவுகளையும்........ ம்ம்ம்ம் நல்லதே நடக்கட்டும்.

    19 June 2012 01:00 // நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  37. என்ன மாத்தையா தொடர் முடித்த கழைப்பில் உள்ளீர்களோ?....

    சீக்கிரம் அடுத்த தொடரை தொடங்குங்கள்... அண்ணா...

    19 June 2012 05:37 //ம்ம் கொஞ்சம் இடைவெளியில் வருவேன் தொடரோடு எஸ்தர்-சபி. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete