29 July 2012

பஹ்ரைன் நினைவுகள்!!!!.


வணக்கம் உறவுகளே! 

 பஹ்ரைன் வழியில் பார்த்த சில ஞாபகங்களை தொடர்வதில் கூட ஒரு சுகம் இருக்கு அனுபவம் போல ஆசான் ஏது உலகில்.



 சென்னைக்கும் போகும் ஆவலில் தரித்து நின்றாலும் ஒரு பயணம் வெளிக்கிட்டு இடையில் நேரம் போக்கும்  எரிச்சல் எனக்கு என்மீதே ஏற்பட்டது ஒரு நாள் பொறுத்து இருந்தால் நிம்மதியாக துபாய் வழியாக போய்ச் சேர்ந்து இருக்கலாம் என் நினைக்க வைக்க காரணம் மறு ஏற்றம் விமானம் தாமதம் 

   ஆகியதால் பஹ்ரைன் தரிப்பிடத்தில்  நேரம்   போக்க இருந்த  வசதிதான் முகநூல் பார்க்கும்  வசதி !




ஊரில் இருந்த நண்பர்களை எல்லாம் காலையில் இருந்து பின்னிரவு வரை பிடிக்கும் நவீனவழி முகநூல் தானே !  

அதிமான நட்புக்கள் அரபுலகில் இருப்பதால் என்   வசதியைப்போல  அவர்களுக்கும் கிடைக்கும் நேரத்தில் அடுப்படி வரை அடுத்த நாள் திட்டம் வரை அளந்து கொண்டே போகலாம் .



 சென்னைப்பயணம் பழகிய ஒன்று என்றாலும் வெளிநாட்டு வாசிகளில் ஈழத்து உறவு என்றால் குடிவரவு/குடியகழ்வு  அதிகாரிகள் அமெரிக்கா பின்லாடனைக்கூட இப்படி நோண்டாது .


தீவிரவாதி எல்லாம் இப்போது பிளைட்டில் வார்து விட கப்பல் மூலம் இலகுவில் வந்துவிடுவார்கள் அதுகூட அறியாமல் எங்க போறாய் ?அங்கே என்ன செய்யிறாய்?

 என பல இம்சைகள் விசா எடுக்கும் போது எல்லாம் எழுதிக்கொடுத்துவிட்டு கூடவே ஈழத்து மக்கள்  தனியாக அகதியாக அலைந்தாலும் அந்த நாட்டில் இருக்கோ என்று தெரியாத வீட்டுமுகவரி முதல் கடைசியாக பார்த்த உறவுமுறை வரை விபரம் கொடுத்து தானே உள்நுழைகின்றோம்!ம்ம்!(மேலதிக தஸ்தாவேஸ்சாக!ம்ம்ம் அதில் எல்லா நிஜமும் இருக்கே !ம்ம்)


 ஐரோப்பிய தேசம் சுற்றுலாவாசி என்றால் இன்முகத்தோடு வரவேற்கும் நிலையில் இன்னும் சிலஆசியநாடுகள் கூவி அழைக்கும் போது அதனைத்தவிர்த்து சென்னை போவது அதிக குடும்ப பாசத்தில் தானே .


அது எல்லாம் புரியாத அதிகாரிகளுடன்  தர்க்கம் வரும் போது எல்லாம் நினைப்பது ஏண்டா இந்த நாட்டுக்கு மீண்டும் மீண்டும் வரும் வண்ணம் ஆன்மீகம் ,உறவுகள் என்று படைத்தாய்.


 வெளிநாட்டில் இருந்துவிடலாமே ஜாலியாக என்று ! ஆனாலும் குழந்தைகள் ஏக்கம் மாமா என்ன வாங்கியாராய் என்று கேட்கும் பரவசத்துக்கு எல்லா வலியும் போய் விடும் .இதோ என் மருமகளுக்கு என்று ஆசையாக பல பொம்மைகள் ..பொம்மைக்குட்டி அம்மாவுக்கு ஆரோரோ பாட உறவுகள் எல்லாம் பலதேசத்தில்!இன்று! 


பாருங்கள் இதில் கூட புலி இல்லை!ஹீ எல்லாம் என்னைப்போல் பூனைகள் தான் கண்ணை மூடிவிட்டால் ஊர் நினைப்பு எல்லாம் பால்மாட்டுகள்  வெடிச்சத்ததில்  ஓடியதைப்போல


 !ம்ம்  பாடல் கேட்டாலும் நினைவுகள் வேகத்தைவிட கைபேசியின் பற்றிக்காலம் ஆயுல் குறைவு நவீன தலைமுறை போல ஹாட் அட்டக்கில் விபத்தில் தானே அதிகஉயிர்கள்  போவது போல்.

  அதனால் அப்ப பற்றி தீர்ந்து போனால் அதுக்கும் வசதி இருக்கு இங்கே பாருங்க்ள் ஹீ கைபேசி ஓய்வு நாட நமக்கு இருக்கு  இன்னொரு வசதி அருகில்



`மச்சான்  நான் எல்லாம் வீட்டுக்காரிக்கு நகை வாங்க  மாட்டன் இப்ப  அதுவே கொலைசெய்ய காரணமாவதால்  எனக்கு உயிர் முக்கியம்!ஹி


!( அடக்கஞ்சப்பையல் என்று திட்டுவது புரியுது. .ஹீ   நகைவாங்கி  பாதுகாக்க் முடியாமல் அதை வங்கியில் வைக்க  பாதுகாப்பு பெட்டிக்கு காசு கட்டுவதை விட சுற்றுலா மேல்!)




 இப்போது எல்லாம் சின்னவர்கள் விரும்பி கேட்பது பல கணனி விளையாட்டு தூப்பாக்கியில் சுடும் வெற்றியை. அதுதான் இங்கே சீடியாக!













 அதுகடந்து ஒரு விமானம் வந்து இறங்கும் காட்சியைக்கண்டு  கொஞ்சம் ஓய்வு நாடிய போது .


மனசு வீட்டுக்காரி விரும்பித்தரும் பால்க்கோப்பி ஞாபகம் வர அந்த நேரத்தில் சுட்டது இது!
 அப்போது நண்பன் சொன்னான்.
" மச்சான் சென்னையில் ஆட்டோ வேண்டாம் . எல்லாரும் அப்படி இல்லை ஆனால் ஒரு சில ஆட்டோ ஓட்டுணர்! வெளிநாட்டுவாசி என்றால் சென்னை எதுவும் தெரியாது என்ற நினைப்பு "
 நீ ஒரு கால்டக்சி எடு அது  இப்ப பாதுகாப்பு மீனாம்பாக்கம்  இறக்கத்திலையே பதிவு செய்ய முடியும் .
தேவையான இடம் போகலாம் துரித சேவை .அன்பான கவனிப்பு ,மனதை மயக்கும் இனிய பாடல்கள் .முக்கியம் திருட்டுப்பயம் இல்லை .
நல்ல உள்ளங்கள் விரும்பிய இடத்தில் 24 மணித்தியால சேவை .அவன் சொன்ன கார்  இப்படித்தாங்க!ஹீ
  பதிவு ஒரு சுற்றுலாவைத் தூண்டும் நோக்கம் அன்றி  வேற நோக்கம்` அல்ல!
தொடரும் பஹ்ரைன் நினைவு!.........

27 comments:

  1. இன்னல்களுடன் பயணிக்கும் பயணங்கள் தான் மனதில் ஆழமாக பதிந்திருக்கும்.
    அருமையான் அனுபவம் சகோ ...தொடருங்கள்

    ReplyDelete
  2. இன்னல்களுடன் பயணிக்கும் பயணங்கள் தான் மனதில் ஆழமாக பதிந்திருக்கும்.
    அருமையான் அனுபவம் சகோ ...தொடருங்கள்// வாங்க சிட்டுக்குருவி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  3. இன்னல்களுடன் பயணிக்கும் பயணங்கள் தான் மனதில் ஆழமாக பதிந்திருக்கும்.
    அருமையான் அனுபவம் சகோ ...தொடருங்கள்// ம்ம் உண்மைதான். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  4. ஹேய் இன்னுமா பஹ்ரைன விட்டு போகல....?

    ReplyDelete
  5. நாஞ்சில்மனோ சஞ்சரிக்கும் நாட்டுக்கு வந்துட்டாலே.....பயண பதிவும் கூடவே வருது இல்லையா ஹே ஹே ஹே ஹே சூப்பருய்யா...!!!

    ReplyDelete
  6. ஹேய் இன்னுமா பஹ்ரைன விட்டு போகல....?

    29 July 2012 10:58 // ஹீ இன்னும் 3 மணித்தியாலம் வெயிட்டிங் சென்னை பேக எல்லாம் சேட்டு செய்த மக்கர்! அண்ணாச்சி! ஹீ

    ReplyDelete
  7. நாஞ்சில்மனோ சஞ்சரிக்கும் நாட்டுக்கு வந்துட்டாலே.....பயண பதிவும் கூடவே வருது இல்லையா ஹே ஹே ஹே ஹே சூப்பருய்யா...!!!

    29 July 2012 10:59// நன்றி அண்ணாச்சி அந்த நாடும் சூப்பர் தான் உங்களைப்போல ஜாலி! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  8. பதிவு ஒரு சுற்றுலாவைத் தூண்டும் நோக்கம் அன்றி வேற நோக்கம்` அல்ல!நானும் அப்படித்தான் நினச்சேன். ஒரு காதல் என்பது - அருமையான பாடல்.

    ReplyDelete
  9. பயண அனுபவம் தனி சுகம்...

    ReplyDelete
  10. இனிய பயண அனுபவம்-படத்துடன்... அருமை.
    முடிவில் நல்ல பாடல்...
    நன்றி ....
    (த.ம. 3)

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  11. பயண அனுபவத்தை நல்லாவே எழுதியிருக்கீங்க... அளவுக்கதிகமான கேள்விகள் கேட்டுக் குடைகின்ற அதிகாரிகளை என்ன செய்துவிட முடியும்? எப்பவுமே தீவிரவாதிகளை விட்டுட்டு சாதாரணர்களை தீவிரவாதிகள் போல குடையறதுதானே அதிகார வர்க்கத்தின் வழக்கம். பதிவின் கடைசியில் தந்திருக்கற பாடல் மனதை வருடும் மெலோடி. சூப்பர் தம்பி.

    ReplyDelete
  12. பாட்டைத்தான் முதல் ரசிச்சன் நேசன்.மென்மையான காதல் பாட்டு.இப்படியான மெலோடிகள் காதலை இன்னும் இன்னும்வாழவைக்கிறது !

    அடுத்து ரசிச்சது...

    ***மச்சான் நான் எல்லாம் வீட்டுக்காரிக்கு நகை வாங்க மாட்டன் இப்ப அதுவே கொலைசெய்ய காரணமாவதால் எனக்கு உயிர் முக்கியம்!ஹிஹி...***

    என்ன ஒரு கஞ்சத்தனம்.வாங்கிக் குடுங்களேன்...பிடிச்சதை வாங்கிக் குடுத்தா என்ன குறைஞ்சு போவீங்க !

    ReplyDelete
  13. பொம்மைகள் ..கேம் சிடி க்களும் சேர்ந்து பயணக்கட்டுரை அருமை நேசன்.அடுத்த முறை நான் மாறி ஏறுவது பஹ்ரைன்தான் !

    ReplyDelete
  14. எங்கள் நாடுகளில் சட்டதிட்டம் என்பதைவிட ஏதோ பெரிய அதிகாரத் தோரணையில்தான் விமான நிலைய விசாரணைகள் இருக்கும் நேசன்.எரிச்சலாயிருக்கும்.தஞ்சம் புகுந்த தேசத்தில்கூட அவர்களது விசாரணையும்,அரவணைப்பும் சுட்டுப் போட்டாலும் நம்மவர்களுக்கு வராது !

    ReplyDelete
  15. பதிவு ஒரு சுற்றுலாவைத் தூண்டும் நோக்கம் அன்றி வேற நோக்கம்` அல்ல!நானும் அப்படித்தான் நினச்சேன். ஒரு காதல் என்பது - அருமையான பாடல்.

    29 July 2012 18:45 / நன்றி விச்சு அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  16. பயண அனுபவம் தனி சுகம்...// நன்றி சங்கவி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  17. இனிய பயண அனுபவம்-படத்துடன்... அருமை.
    முடிவில் நல்ல பாடல்...
    நன்றி ....
    (த.ம. 3)// நன்றி தனபாலன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  18. பயண அனுபவத்தை நல்லாவே எழுதியிருக்கீங்க... அளவுக்கதிகமான கேள்விகள் கேட்டுக் குடைகின்ற அதிகாரிகளை என்ன செய்துவிட முடியும்? எப்பவுமே தீவிரவாதிகளை விட்டுட்டு சாதாரணர்களை தீவிரவாதிகள் போல குடையறதுதானே அதிகார வர்க்கத்தின் வழக்கம். பதிவின் கடைசியில் தந்திருக்கற பாடல் மனதை வருடும் மெலோடி. சூப்பர் தம்பி.

    30 July 2012 02:59 // நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  19. பாட்டைத்தான் முதல் ரசிச்சன் நேசன்.மென்மையான காதல் பாட்டு.இப்படியான மெலோடிகள் காதலை இன்னும் இன்னும்வாழவைக்கிறது !

    அடுத்து ரசிச்சது...

    ***மச்சான் நான் எல்லாம் வீட்டுக்காரிக்கு நகை வாங்க மாட்டன் இப்ப அதுவே கொலைசெய்ய காரணமாவதால் எனக்கு உயிர் முக்கியம்!ஹிஹி...***

    என்ன ஒரு கஞ்சத்தனம்.வாங்கிக் குடுங்களேன்...பிடிச்சதை வாங்கிக் குடுத்தா என்ன குறைஞ்சு போவீங்க !// வாங்க ஹேமா நலமா! கலாய்ப்புக்கு எழுதின உரை அது!ம்ம்

    ReplyDelete
  20. பொம்மைகள் ..கேம் சிடி க்களும் சேர்ந்து பயணக்கட்டுரை அருமை நேசன்.அடுத்த முறை நான் மாறி ஏறுவது பஹ்ரைன்தான் !

    30 July 2012 07:11 // ஆஹா நான் பெற்ற இன்பம் பெறுக!ஹீ

    ReplyDelete
  21. எங்கள் நாடுகளில் சட்டதிட்டம் என்பதைவிட ஏதோ பெரிய அதிகாரத் தோரணையில்தான் விமான நிலைய விசாரணைகள் இருக்கும் நேசன்.எரிச்சலாயிருக்கும்.தஞ்சம் புகுந்த தேசத்தில்கூட அவர்களது விசாரணையும்,அரவணைப்பும் சுட்டுப் போட்டாலும் நம்மவர்களுக்கு வராது !

    30 July 2012 07:16 // ம்ம் உண்மைதான் ஹேமா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  22. நினைவுகள் தொடரட்டும்

    ReplyDelete
  23. அழகான மெலடி....அதுபோலவே அழகான நினைவில் நிற்கும் பயணமும்.வாழ்த்துக்கள் சொந்தமே!!!!!

    மயங்காதிரு என் மனமே..!!!!

    ReplyDelete
  24. !( அடக்கஞ்சப்பையல் என்று திட்டுவது புரியுது. .ஹீ நகைவாங்கி பாதுகாக்க் முடியாமல் அதை வங்கியில் வைக்க பாதுகாப்பு பெட்டிக்கு காசு கட்டுவதை விட சுற்றுலா மேல்!)
    ஆஹா நல்ல யோசனை வாழ்த்துக்கள் பகிர்வு பார்த்து ரசித்தோம் .பாடலும் அருமையான தேவு .அடுத்த பயண
    அனுபவம் தொடரட்டும் சகோ .

    ReplyDelete
  25. அழகான மெலடி....அதுபோலவே அழகான நினைவில் நிற்கும் பயணமும்.வாழ்த்துக்கள் சொந்தமே!!!!// நன்றி அதிசயா வருகைகும் கருத்துரைக்கும்.!

    ReplyDelete
  26. அடக்கஞ்சப்பையல் என்று திட்டுவது புரியுது. .ஹீ நகைவாங்கி பாதுகாக்க் முடியாமல் அதை வங்கியில் வைக்க பாதுகாப்பு பெட்டிக்கு காசு கட்டுவதை விட சுற்றுலா மேல்!)
    ஆஹா நல்ல யோசனை வாழ்த்துக்கள் பகிர்வு பார்த்து ரசித்தோம் .பாடலும் அருமையான தேவு .அடுத்த பயண
    அனுபவம் தொடரட்டும் சகோ .// நன்றி அம்பாள்ளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete
  27. நினைவுகள் தொடரட்டும்

    31 July 2012 01:09 // நன்றி செய்தாலி வருகைக்கும் கருத்துரைக்கும்

    ReplyDelete