31 July 2012

அறிமுகம் உருகும் பிரெஞ்சுக்காதலி....


வணக்கம் வலை உறவுகளே நலமா!

மீண்டும் தனிமரம் உங்களோடு  என் வலையில் நீண்ண்ண்ண்ட மாதங்களாக  காக்க வைத்திருந்த உருகும்  பிரென்சுக் காதலியோடு உங்களிடம் வருகின்றேன்.



காதல் ஒரு புலம்பலா ,இல்லை ஒரு அனுபவமா ,இல்லை உயிரைவாங்கும் நினைவா, ,அதன் உணர்வு என்ன? என்று நான் அறியேன்  ! 





எனக்கு பல நண்பர்கள், நண்பிகள்   கிடைத்தது என் பாக்கியம் அவர்கள் தான் என் எழுத்துக்கு தூண்டுகோலாக இருக்கும் நிலையில் என் அரபுலக நண்பர் பலரில் ஒரு நண்பனுக்குத்தான் அதிகம் தெரியும் நானும் வலைப்பதிவு எழுதும் ரகசியம்!ஹீ (அவங்க  /கதை எல்லாம் பொதுவில் பேசுவதால் இப்ப கொலவெறி ஹீ) 



அந்த நண்பன் போல இன்னொரு  என் பாரிஸ் நண்பன் தான் ஜீவன்(பெயர்மாற்றம்) அவனுக்கும் எனக்கும் நீண்டகால நட்பு  .

அவன் வாழ்வில் நடந்த ஒரு விடயத்தை  உள்வாங்கி கற்பனையும் ,கவிதையும்  சேர்த்து எனக்குப் பிடித்த பல்வேறு மொழிப் பாடல்களுடன்  தொடராக தனிமரம் வலையில் அடுத்த பதிவாக உலாவிடுகின்றேன் . உருகும் பிரெஞ்சுக்காதலியை  .




 இதில் வரும் பாத்திரங்கள் எல்லாம் நிஜம் பாதி  ,ஆனால் அவர்களின் ஆதங்கத்துக்கு நான் எழுத்தாணி  மட்டுமே  .ஒரு வழிப்போக்கனாக இருந்து புலம்பெயர் வாழ்வைச் சொல்லும் ஒரு பதிவாளன் மட்டுமே           .

                               .

 இதில் யாரையும் மனம்நோகடிப்பதுவோ ,அல்லது சினம் கொள்ள வைப்பதோ,  காழ்ப்புணர்ச்சியோ தனிமரத்திற்கு இல்லை   .


 ஆனால் வரலாறு முக்கியம் நல்ல விடயங்களை தேடும் ஒரு வாசகன்  என்பது என் கருத்து .  சில பார்வையில் சமூக விடயத்தைச் சொல்வது தேவையான ஒரு விடயம் என்பதால் பேசாப்பொருளைப் பேசத்துணிந்தேன்!    



அதற்கு ஒரு பிரெஞ்சுவாசியாக எனக்கு எல்லா சுதந்திரமும் இந்த தேசம் தந்து இருப்பதால்        . இந்த பிரெஞ்சுக்காதலியும் சுதந்திரமானவள்                   .அந்த சுதந்திரம் ஏன் உருக வைக்கின்றது   ?

 விடையாக தொடர்   பயணிக்கும் ;


 முதலில் அறிமுகத்திற்காக இரண்டு அங்கம் அதிகம் தனிமரத்தில்  வரும் ; அதன் பின் என் ஐயன் செயல் போல அதையும் அவரையே பணிந்து தொழுகின்றேன் இந்த காதலிக்கும்  கருணைகாட்டு பலரிடம் போக  ;


வெளிநாட்டு அவசர உலகில் தனிமரமும் அதிகம் பொருளாதார தேடலுக்கு ஓடவேண்டி இருப்பதால் கணனியில் இருக்கும் ஒரு சிலநிமிடத்தில் சில நண்பர்களிடம் மட்டுமே பேச முடிகின்றது ஆனாலும் எல்லாரும்  வலை உறவுகள் தான் ;


மன்னிப்புக்கோருகின்றேன் 

-கதையில் அடிப்படையில் வரும் பிரெஞ்சுமொழியைக்கூட கதையின் உண்மைத்தன்மை வாசகர்களுக்கு மொழி அன்னியம் ஆகிவிடுமோ   ?என்ற பயத்தில் தான் அந்த வார்த்தைகள் எல்லாம் தமிழில் மட்டும் மாந்தர்கள் பேசுவதாக அமைக்கின்றேன் ; தெரிந்தே விடும் இந்தப் பிழைக்கு பெரியோர்கள் மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு!
( துசியின் தொடருக்கு நான் சுட்டிக்காட்டிய விடயமே இதுதான் அவனின் நிலையை புரிந்தபின் தான் நானும் பார்வையை மாற்றினேன் வாசகர்கள்  கஸ்ரம் அடையக்கூடாது என்ற காரணம்)



இந்தக்கதை  ஜீவனின் பாரிஸ் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட சில ஆண்டை பின்னனியாக கொண்டு நகரும் கதை   முத்தமழையில் தெவிட்டாத காதல் போல,பிரெஞ்சுக்காதல் கடந்து , பிரெஞ்சு வைனும் ,இனிய உணவுகளும் பிரபல்யமான  அன்புதேசம் பாரிஸ் என்பது  உலகம் அறிந்த ஒன்று  .


ஜீவன் இப்போது  வேற ஒரு ஐரோப்பா நாட்டில் வாழ்கின்றான் ;


   கடந்த கால அனுபவம் போல ஏது பூமணி படத்தில் இளையராஜா   எழுதியதுபோல"  உன்னைப்பழுது பார்க்கணும் என்னை அழுது தீர்க்கணும் என்பது போலவும் கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வைச்சுக்கணும் ஒரு நூலு பிரிந்தாலும் அறுந்தோடுமே என்பது போல தான் உருகும் காதலியா ?


 இதுவரை நான் முகநூலில் ,என் பதிவுலக தொடர் பதிவுகள் பகிர்வதில்லை ஆனால் அந்தக் கட்டுப்பாட்டையும் தாண்ட வைத்த இந்தக் காதலியின் கதைக்கு  முகப்புப்படம் 






தந்தவர் சகபதிவாளர் நிகழ்வுகள் கந்தசாமி அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்    .




  இணையத்தில்  நொந்து போகும் ஒர் இதயம் ,


                                                           இரண்டுக்கும் நீங்கள்  தந்த ஆதரவு  இந்தத் தொடருக்கும் கிடைக்கும் என்ற  நம்பிக்கையில்!!!    
                                                                               
                                                                               நட்போடு தனிமரம்- நேசன். 


 
  
பிரெஞ்சுக்  காதலியை  இந்தப்பாடலுடன்  ஆரம்பிக்கிக்றேன்.

 வழமைபோல தான் இந்தக்கதைக்கும் தனிமரம் நேசனுக்கும் தொடர்பு  இல்லை! இல்லை.இல்லை;(நான் ரொம்பச் சின்னப்பையன்! ஒரு குடும்பஸ்த்தன்!ஹீ  )  

27 comments:

  1. ஆரம்பியுங்கள். சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    நன்றி...
    (த.ம. 1)

    ReplyDelete
  2. வாங்க தனபாலம் ஒரு பால்க்கோப்பி குடியுங்க.நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  3. அக உணர்வுகளை
    நகக்கீறல் போன்ற உணர்ச்சிகளால்
    நெஞ்சில் தைத்துப்போகும்
    அழகிய உணர்வாம்
    காதலை இங்கே பிரெஞ்சுக் காதலி மூலம்
    எமக்குச் சொல்ல வந்த சகோதரர் நேசன்..
    அக்காதலியை வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  4. நன்றி மகேந்திரன் அண்ணா வருகைக்கும் வாழ்த்துப் பாவுக்கும்.

    ReplyDelete
  5. அறிமுகத் தொடர் ஆழமாக செல்ல வாழ்த்துகிறேன்.........
    தொடர்ந்தும் பிரஞ்சுக் காதலியை எதிர்பார்த்துக் கொண்டவனாக

    மீண்டும் வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  6. அறிமுகத் தொடர் ஆழமாக செல்ல வாழ்த்துகிறேன்.........
    தொடர்ந்தும் பிரஞ்சுக் காதலியை எதிர்பார்த்துக் கொண்டவனாக

    மீண்டும் வாழ்த்துக்கள் சகோ// நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் சிட்டுக்குருவி!

    ReplyDelete
  7. ஆரம்பிங்க மக்கா....கமான் ஸ்டார்ட் மியூசிக்.....!

    ReplyDelete
  8. வாழ்த்துகள் நேசன்.களை கட்டப்போகுது தனிமரத்தடி.நேரம் பிந்தினாலும் பெரெஞ்சுக் காதலியைக் காண நானும் வந்துவிடுவேன் !

    ReplyDelete
  9. ஆரம்ப அறிமுகமே ஒரு ஆவலைத் தருது.வரட்டும் அவள்....கண்டுகொள்வோம் !

    ReplyDelete
  10. அறிமுகவுரையே அருமை .முந்தைய தொடர்களைப்போலவே அசத்துங்கள் .
    ஆவலுடன் தொடர்கிறேன்

    ReplyDelete
  11. bienvenue!

    பிரஞ்சுக் காதலியை சொன்னேன் :))

    ReplyDelete
  12. இப்போதே தூக்கிபோடுது காதல் உணர்வுகள்
    இது உருக வைக்காது அதுக்கும் மேலேயே எதோ செய்யபோகிறது போலிருக்கு
    ஆவலுடம் விழி திறந்திருக்கிறேன்.

    ReplyDelete
  13. thodangungayyaa!

    thodangunga...

    ReplyDelete
  14. பெயரே நல்லாயிருக்கு. ஆரம்பியுங்கள்.

    ReplyDelete
  15. நீங்கள் சொல்லியிருக்கும விஷயங்கள் ஆவலைத் தூண்டுகிறது. வரட்டும் பிரெஞ்சுக் காதலி. தொடர்ந்து நானும் உடன் வருகிறேன்.

    ReplyDelete
  16. ஆரம்பிங்க மக்கா....கமான் ஸ்டார்ட் மியூசிக்.....!// நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  17. வாழ்த்துகள் நேசன்.களை கட்டப்போகுது தனிமரத்தடி.நேரம் பிந்தினாலும் பெரெஞ்சுக் காதலியைக் காண நானும் வந்துவிடுவேன் !// நன்றி ஹேமா உட்சாகமான வாழ்த்துக்கும் வருகைக்கும்!

    ReplyDelete
  18. ஆரம்ப அறிமுகமே ஒரு ஆவலைத் தருது.வரட்டும் அவள்....கண்டுகொள்வோம் !

    31 July 2012 13:54 // விருப்பி வாசிக்க என்னால் முடிந்தளவு அழைத்து வாரன்.ஹேமா

    ReplyDelete
  19. அறிமுகவுரையே அருமை .முந்தைய தொடர்களைப்போலவே அசத்துங்கள் .
    ஆவலுடன் தொடர்கிறேன்// நன்றி அஞ்சலின் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  20. bienvenue!

    பிரஞ்சுக் காதலியை சொன்னேன் :))

    31 July 2012 14:15 // நன்றி அன்பான பிரெஞ்சுக்காதலியை வரவேற்பதுக்கு!ஹீ

    ReplyDelete
  21. இப்போதே தூக்கிபோடுது காதல் உணர்வுகள்
    இது உருக வைக்காது அதுக்கும் மேலேயே எதோ செய்யபோகிறது போலிருக்கு
    ஆவலுடம் விழி திறந்திருக்கிறேன்.// நன்றி நெற்கொழுவான் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  22. thodangungayyaa!

    thodangunga...// நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  23. பெயரே நல்லாயிருக்கு. ஆரம்பியுங்கள்.// நன்றி விச்சு அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  24. நீங்கள் சொல்லியிருக்கும விஷயங்கள் ஆவலைத் தூண்டுகிறது. வரட்டும் பிரெஞ்சுக் காதலி. தொடர்ந்து நானும் உடன் வருகிறேன்.

    1 August 2012 01:45 // நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  25. Valthukkal anne valaikku neram pochu piraku vanthu vaasikkiran

    ReplyDelete
  26. காலை வணக்கம்,நேசன்!ஆரம்பியுங்கள்,தொடர்வோம்!

    ReplyDelete
  27. அன்புடையீர்! வணக்கம்!
    இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (13/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    வலைச்சர இணைப்பு:
    http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete