05 February 2016

ஆண்டவா காப்பாத்து!

அடிக்கடி அறிக்கைவிடும்
அரசியல்வாதியின்
அடுத்த கட்ட நகர்வு போல

அகதியும் ஆசையில்
அடர்ந்த வனம்
ஆமி இனம் என்று
அல்லல்லுற்று  ,அவதியுற்று
அரச  ஆணைக்குழுக்கள் என்று
அழுது புலம்பும் அகதியின்
ஆத்ம காதல்
அபயம் தேடி!
அனுதினமும்
அதிரவைக்கும்
அடர்ந்த மிரட்ச்சியும்!!




அந்தவெள்ளைக்கொடி நிஜங்களும்
அந்தவிகாரைகளும் அதில் பறக்கும்
அரசபீட போலி மிருகங்களும்!


அறியாது நீ என்னை
அதிக யாசிப்பினால்
அழைத்து  ஆமியிடம் கையளித்து
அழிந்த  நம் காதல்!
அகதியின் யாசிப்பு
அவனியில் யாருக்கும்  வேண்டாம்!
அழிந்த  ஈழக் கனவு  போல
அப்பாவி நானும்
அழகிய தீவாய் உன்னுடன்
அடுத்த தேடலில்!


அதே காதலுடன்
அகதி நான்
அனைத்தும் கற்பனையே!!
ஆன்றோர் சபையில்
அம்மாவின் ஆணைக்கிங்க!
அடியாட, கொல்லுடா.
அவன் ஈழப்பொறுக்கி!
அதோ  நாளைய இதழில்
அரபுல இந்தியன் பதிப்பிலும்
அடுத்த செய்தியாக எதுவும் வரலாம்.


அதையும் கும்மியடிக்க
ஆண்டவா நம்மை காப்பாத்து!
ஆனாலும் தாய் மண்ணில்
அடக்கம் காணும் ஆசையில்!!

.யாவும் கற்பனையே!!!!!!

4 comments:

  1. நம்புவோம் நல்லதே நடக்கும் என்று நண்பரே
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. நல்லதே நடக்கும்
    நீண்ட நாட்களுக்குப் பிறகு
    தங்களின் பதிவு கண்டு மகிழ்ந்தேன் நண்பரே

    ReplyDelete
  3. எதிர்காலம் நல்லதாகட்டும்!

    ReplyDelete
  4. நல்லது நடக்கும் என்று நம்புவோம் நண்பரே! வேறு என்ன சொல்ல சொல்லுங்கள் நம்பிக்கைதானே வாழ்க்கையே!!

    ReplyDelete