முன்னர் இங்கே/http://www.thanimaram.com/2017/09/22.html?m=1
நன்றிகள் உயிரோசை நிகழ்ச்சிக்கு!
----------//-
வலி சுமக்கும் மனது---
நன்றிகள் உயிரோசை நிகழ்ச்சிக்கு!
----------//-
வலி சுமக்கும் மனது---
காதல் என்னும் உணர்வுக்கு
காற்றலை போல
கல்லில் இருந்து பிறக்கும்
கற்சிலை போல
கால மாற்றத்தில் என்
கடுமையான உள்ளத்தில்
கடிதம் தரும் தூதுவன் போல
கற்பகத்தரு போல வளர்த்தாய்
கனிவாக ஒரு காதல்ச்செடி!
கடும் தவம் போல வளர்த்து
காத்திருந்தேன் !
கடம்பமரம் போல ஈழம் என்னும்
காதல்ச்செடி!
இறுதி யுத்தத்தில்
கடவுள் போல வருவார்கள்
கடல்கடந்த அதிகாரம்மிக்க
கருணையுள்ளம் கொண்டவர்கள் போல
கதறிய குரல் கேட்டு
கடைசிவரையும் யாருமே வரவில்லையே!
கடவுளும் ,காப்பாற்றாளர்களும்
கண்ணீருடம் வலிசுமக்கும் என் மண்மீதும்
கயவர்கள் எழுப்புகின்றார்கள்
களியாட்ட விடுதிகள்,
காடழித்து மாட மாளிகை என்று
கருணையில்லாத பூமியில்
கருவாடு போல
கந்தகச் சுவாசம் இன்னும்
கரைந்து போகவில்லை
கறைபடிந்த வடுக்கலாக
காட்சிகளுடன் வலி சுமக்கும்
காணக வாசகன் நான்!
ஐநாவுக்கும் கேட்கவில்லை
கதறலின் வலி சுமக்கும் மனதின் ஆழம்!
கருணை என்று கிடைக்கும்?
(யாவும் கற்பனை)!!!
-----
அன்பு, கருணை , அதிகம் கற்றவர்கள்
அதிகம் வளரும் பட்டியலில்
அமைதியாக பறந்த என் சிறகில்!
அரசியல் வாதிகளும், அற்ப பண்டிதர்களும்,
அயல்தேச முகவர்களும்,
அரவணைப்பு என்ற போர்வையில்
அதிக பிரிவிரினை ஊட்டியோர்! அதிகம்!!
அகிலம் எங்கும் நம் குழந்தைகள்
அகதி என்று கையேந்தும்
அவலத்தையும் ,
ஆட்சியின் கட்டளை என்று
அழிப்பில் எல்லைமீறி
,அவமரியாதை செய்தவர்கள் எல்லோருக்கும்!
ஐநாவரை என்னையும் ஆடையுரிந்தோரும்!
ஆண்ட பரம்பரையினரின்
அதிகாரச்சிரிப்பில் அகம் குளிரவில்லை!
அடிக்கடி ஆடைவிலக்கு வரியின்
அதிகபட்ச சலுகை என்று
அண்ணக்காவடி தூக்கும்
ஆட்சியாளரின் பேச்சு கேட்டும்
அழுதிட துடிக்கின்றேன்!
அந்தோ எல்லோரின் மனதிலும்
அடுத்த சந்ததிக்கும்
,அற்புதமான தேசம் இனவாதம் நீங்கி
அகிலம் எங்கும் !எல்லாவளமும்
அடிப்படையில் கொண்ட தேசம்.
அடுத்த 5 வருட திட்டத்தில் இன்னும்
அடையளாம் பல வளர்ச்சி என்று
ஆரும் இன்னும் இறுக அணைக்கவில்லையே?
அடுத்த யாப்பு என்று அடிக்கிச்செல்லும்
ஆராதணை வார்த்தைகள் எல்லாம்
அன்றே வெறுத்த என் ஆழ்மனத்தில்
நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள்!
அதுவே முடிந்த முடிவு என்று
அழுத்திச்சொல்லும் வார்த்தைகள்
அகத்தில் இருந்து வெளி வரும் நாள் என்று
ஆண்டுகள் பல பார்த்து
அலங்கார ஆடையிழந்த அப்பாவி
ஆத்மா இலங்கையின் இதயக்குரல்
யாரறிவார்கள் என் மனதை!
யார் யாரோ சிரிக்கும் போதெல்லாம்
யாருமற்ற தனிமையில் நானும் ,புத்தன் பெயரில் கையேந்தி வாழும் நிலை கண்டு
யாரறிவார்கள் என் மனதை
!யாருக்கும் என் மீது ஏன் இன்னும்
யாசகம் வரம் வரவில்லை
?யவனதேசத்துக்கு அடிமை சாசனம் எழுதி
யாவரும் சிறைவைத்து இருக்கலாம் என்று எல்லாம் யாழ்மீட்டும் துறவி போல
யான் அழுவது கண்டு யாரறிவார்கள் என் மனத்துயர்!!
3 comments :
யார் யாரோ சிரிக்கும் போதெல்லாம்
யாருமற்ற தனிமையில் நானும்
விரைவில் தனிமை நீங்கட்டும்
கவிதையில் மனம் நெகிழவைக்கும் வரிகள் மாற்றம் வரும் நம்புவோம்.
ஈழத்தைக் காதலியாக ஒப்பிட்ட விதம் அருமை.
Post a Comment