22 June 2020

திமிர்.

கல்வி கற்காத பாட்டியும்
கற்பகம் படம் போல
கண்ணக்குழியழகி  விஜயா போல
கடன்வாங்கி
காணி உழுது
கற்பித்தால்
கனிமொழியை !
கற்றோர் என்ற சபையில்
கணீர் என்ற குரல் கேட்கும் ஆசையில்
கண்டிவரை போய்
கலைப்பட்டதாரியானதை
காட்சிப்படம்
கலைநயத்துடன் மின்னியது
கந்தையா வீட்டில்!
கருப்பு என்றாலும்
கஸ்தூரி மஞ்சல் போல
கலியாணச்சந்தையில்
காத்திருந்தாள்!


கற்றதகுதிக்கு எவருமில்லை ஈடாக!
கணக்கப்படிச்ச திமிருடன்!
கனபேர் அறியாத
கருப்பையா மகன்
கணக்கப்பிள்ளை கண்டியில் !
கல்லாதவன் என்று
கழட்டிவிட்டவன் மச்சான்
கலியாணத்தில் ஓடிய
கலியாண அகதிபடம் போல!
கற்றது தமிழ்படம் போல
கருப்பையா பேர்த்தியுடன்
கணக்கப்பிள்ளை
கடுகண்ணாவில் கொல்லப்பட்டதும்,
குழந்தை அவளுக்கு மாமி
கனிமொழி உறவில்!
கடும்யுத்தம் என்று
கட்டுநாயக்கா தாண்டி
கண்கான தேசம் போனாள்
கற்றுவிட்டேன் பலதகுதி,
காலம் எல்லாம் முதிர்கன்னி!
கடும்பணி செய்வேன் என்ற
காணிவித்த காசுடனும்,
கவியாணம் கானத
கடும் மனச்சுமையுடனும்,
கண்ணீரில் தவித்த
கற்பகம் பாட்டியை
கந்தாளாயில் விட்டு!
கடும் விசாரணையின் பின்
கனடாவில் அடைக்கலம்!
கற்பித்தால் தன் மருமகளுக்கும்
கல்விக்கு ஏது முற்றுப்புள்ளி!
கண்ணக்குழியழகி
கனிஹா போல நீயடி! என்
கண்பட்டுவிடும் செல்லமே!
காதல்சுகமானது நாயகி போல
கவிதைக்கு கற்பனை போல
கட்டிளம் பருவத்தில்
கனகுறிப்புக்கள்,
கடகடவென
கதிரை ஆட்சிட்கு வந்தது போல
கற்ற பையன்,
கடையிருக்கு,
கணக்காளர்,
கலைஞர் என்றெல்லாம்,
கரம் பட்டது!


கணித்த பஞ்சாங்கள் எல்லாம்
கனபொருத்தம் இருக்கு!
காத்திருங்கள்!
கல்விகற்கின்றாள்
கலியாணம் இப்போது வேண்டாம்!
கவலைப்படாதீங்கோ
கனஹா போல என் மகள்
கலைத்துறையில் நுழையமாட்டாள்!
கலியாண வயசில்லை
கனிமொழி சொல்லிய போது
கனிஹாவுக்கு வயது 27
கந்தகபூமியில்
கடும்போரில்
கண்மூடிய பாட்டியும்
கடைசியாசையாக சொன்னாள்!
கைம்பொன் நானும்
கற்பகத்திற்கு ஒரு  கலியாணம்பார்க்கல,
கணடாவில் பேர்த்திக்கு
கலியாணம் நடக்குமோ?,
கண்ணீருடன் கண்விழித்து
கற்கவெச்ச பாடு எல்லாம்
கதையாக சொன்னாலும்!
கடன் தந்தவன் பேராண்டி
கற்பூரமுல்லை ராஜா போல
கடைசியில் சாத்திரம்
கடும் தோஷம் என்றெல்லாம்
கதைவிடும் ஒற்றைமரம் போல
கடும்பனியிலும்
கப்பலில் போறாளாம்
கடுமையான கொர்னா பாதிப்பில்
கரைசேராத அமெரிக்காவுக்கும்!

மருத்துவ சேவையில்
மல்லுக்கட்டும் டாக்டர் கனிஹா!
கண்ணீருடன் வழியணுப்பிய  மாமியின்
கைபேசியில் ஒலித்தது
கல்கி படத்தில் இருந்து
எழுதுகிறேன் ஒரு கடிதம்!
(----------------------------------


17 June 2020

வா கிறுக்கல்!

வாங்க எப்படி இருக்கின்றீங்க

வாசலில் வரவேற்று

வாரியணைத்தார்!

வாசல்ப்படி  மிதிக்காதே   என்றவர்!





வா  ஒரு   வைன்குடிக்கலாம்!

வழமைக்கு   மாறாக!

வாழ்ந்துகெட்டவர்,

வார்த்தையின்றி 

வாடு வதைக்கண்டேன்!

வரலாற்றில் வாழ்ந்த  தலைமுறை!

வாகனம்   ஓட்டனும்

வண்ண   நிறவைன்  வேண்டாம்!

வழகத்திற்கு   மாறாக

வரட்டாம்   அம்மா!

வளர்ந்திட்டான்   உன் 

வாரிசு,    அப்படியே 

வாழையடி    வாழைபோல

வார்த்தைகள்   குளறுது!

வாரயிறுதி     எப்படி?

வாராளாம்  இவ்வார

வசந்த  காலத்தில்      யாரு?

வாழத்தெரியாதவள்!

வாசலில்   ஒருவெண்ணிலா   போல,

வல்லரசு  காணாத   கொர்னாவில்

வாசலில்  கோலம்   போட்டவள்!

வசியக்காரி   என்றாயே!))

வார்த்தையற்று   போனாயோ?

வலையில்    வருடும் 

வார்த்தைகளில்    நீயிறைத்த

வசைவுகள்    எல்லாம்

வாசித்தேன்    ஓய்வில்!

வாழ   வேண்டியவர்கள்,

வாஸ்துசாஸ்திரத்தில்,

வாரிக்குட்டியூர்    போல

வாழ்  விழந்த  காணங்கள்   எல்லாம்

வானொலியில்  ஒலிக்காத  பாடல்கள்   போல

வாழ்த்துவது   போல   தூற்றிய

வாஞ்சிநாதன்அரசியல்!

வசதி  வந்தபின்   வந்த,

வடக்கு  கூத்தணி   சசிகலா   போல

வடமராட்சியின்உதயம்    போல 

வாரியணைப்பது    போல

வண்ணம்    கொண்ட   வைன்,

வாடும்   பூப்போல

வாட்டிய   பன்றியிலும்

வாசணை   கருகியதுபோல

வாய்ச்சாடல்    போல

வாக்காளர்பட்டியல்   போல

வருவாய்கேட்டவள்!

வாடியமுகம்   காண

வழிகாட்டும்    குருப்போலவும்

வாஞ்சையும்    ஒருபுறம்

வாலோடு   வந்தது   கோபம்!

வாங்க     போகலாம்!ம்ம்

வாரயிறுதி   முடிகின்றது,

வறுத்தெடுத்தவளுக்கு!

வாய்விட்டும்    சொல்லாதகாதல்

வாராயோ   தோழி   பாடல்   போல!

வடகம்போல

வாடியவள்   முகம்  பார்த்தால்!

வாழ்கின்றாய்போல?

வா  ஒருகாப்பி   குடிக்கலாம்     என்பாளோ?

வாசனையில்    நீயும்    ஒரு

வாய்க்கால்    போல,

வானவேடிக்கை   பட்டாசுபடம்   போல

வாழ்த்து   மழை   வரமுன்!

வந்துவிட்டேன்!

வாடிக்கிடந்தது! 

வாசிக்காத   நாவல்மரம்   போல

வாழ்க்கைப்பட்ட   வைன்   போத்தல்

வடிவாகச்   சிரித்தது!

 ( யாவும்கற்பனை))))



11 June 2020

காட்சிப்பிழை!

கல்வி கற்காத பாட்டியும்
கற்பகம் படம் போல
கண்ணக்குழியழகி விஜயா போல
கடன்வாங்கி
காணி உழுது
கற்பித்தால்
கனிமொழியை !
கற்றோர் என்ற சபையில்
கணீர் என்ற குரல் கேட்கும் ஆசையில்
கண்டிவரை போய்
கலைப்பட்டதாரியானதை
காட்சிப்படம்
கலைநயத்துடன் மின்னியது
கந்தையா வீட்டில்!
கருப்பு என்றாலும்
கஸ்தூரி மஞ்சல் போல
கலியாணச்சந்தையில்
காத்திருந்தாள்!
கற்றதகுதிக்கு எவருமில்லை ஈடாக!
கணக்கப்படிச்ச திமிருடன்!
கனபேர் அறியாத
கருப்பையா மகன்
கணக்கப்பிள்ளை கண்டியில் !
கல்லாதவன் என்று
கழட்டிவிட்டவன் மச்சான்!



கலியாணத்தில் ஓடிய
கலியாண அகதிபடம் போல!
கற்றது தமிழ்படம் போல
கருப்பையா பேர்த்தியுடன்
கணக்கப்பிள்ளை
கடுகண்ணாவில் கொல்லப்பட்டதும்,
குழந்தை அவளுக்கு மாமி
கனிமொழி உறவில்!
கடும்யுத்தம் என்று
கட்டுநாயக்கா தாண்டி
கண்கான தேசம் போனாள்
கற்றுவிட்டேன் பலதகுதி,
காலம் எல்லாம் முதிர்கன்னி!
கடும்பணி செய்வேன் என்ற
காணிவித்த காசுடனும்,
கவியாணம் கானத
கடும் மனச்சுமையுடனும்,
கண்ணீரில் தவித்த
கற்பகம் பாட்டியை
கந்தாளாயில் விட்டு!
கடும் விசாரணையின் பின்
கனடாவில் அடைக்கலம்!
கற்பித்தால் தன் மருமகளுக்கும்
கல்விக்கு ஏது முற்றுப்புள்ளி!
கண்ணக்குழியழகி
கனிஹா போல நீயடி! என்
கண்பட்டுவிடும் செல்லமே!
காதல்சுகமானது நாயகி போல
கவிதைக்கு கற்பனை போல
கட்டிளம் பருவத்தில்
கனகுறிப்புக்கள்,
கடகடவென
கதிரை ஆட்சிட்கு வந்தது போல
கற்ற பையன்,
கடையிருக்கு,
கணக்காளர்,
கலைஞர் என்றெல்லாம்,
கரம் பட்டது!
கணித்த பஞ்சாங்கள் எல்லாம்
கனபொருத்தம் இருக்கு!
காத்திருங்கள்!
கல்விகற்கின்றாள்
கலியாணம் இப்போது வேண்டாம்!
கவலைப்படாதீங்கோ
கனஹா போல என் மகள்
கலைத்துறையில் நுழையமாட்டாள்!
கலியாண வயசில்லை
கனிமொழி சொல்லிய போது
கனிஹாவுக்கு வயது 27
கந்தகபூமியில்
கடும்போரில்
கண்மூடிய பாட்டியும்
கடைசியாசையாக சொன்னாள்!
கைம்பொன் நானும்
கற்பகத்திற்கு ஒரு கலியாணம்பார்க்கல,
கணடாவில் பேர்த்திக்கு
கலியாணம் நடக்குமோ?,
கண்ணீருடன் கண்விழித்து
கற்கவெச்ச பாடு எல்லாம்
கதையாக சொன்னாலும்!
கடன் தந்தவன் பேராண்டி
கற்பூரமுல்லை ராஜா போல
கடைசியில் சாத்திரம்
கடும் தோஷம் என்றெல்லாம்
கதைவிடும் ஒற்றைமரம் போல
கடும்பனியிலும்
கப்பலில் போறாளாம்
கடுமையான கொர்னா பாதிப்பில்
கரைசேராத அமெரிக்காவுக்கும்!
மருத்துவ சேவையில்
மல்லுக்கட்டும் டாக்டர் கனிஹா!
கண்ணீருடன் வழியணுப்பிய மாமியின்
கைபேசியில் ஒலித்தது
கல்கி படத்தில் இருந்து
எழுதுகிறேன் ஒரு கடிதம்!
கற்றதும் ,கெட்டதும்.
கனபேர் அறியாத விடியும் வரை காத்திரு படம் போல!

( யாவும் கற்பனை)


---------------------------------------------

07 June 2020

வர்ணஜாலம்!

வருடிக்கொடுத்து  வார்த்தைகளில்
வர்ணஜாலம்  காட்டி,
வாரியணைத்து
வாழ்த்தியனுப்பி,
வருவோரின்  தேவையில்தானே
வாங்குபோல!


வளவளப்பில்
வருங்கால  தேர்தல்வேட்பாளர்போல,
வலவல  என்றகோஷங்கள்  எல்லாம்
வாந்தி எடுத்த  குடிகாரர்  போல,
வாசனைதெளித்த
வடிவமைப்பாளர்   கரம்தொட்ட
வளரும்  நடிகையின்  தயக்கம்  போல,
வாருங்கள்   கொர்னாவுடன்
வாழ்ந்து  பழகலாம்  என்ற
வரவேற்பு   கோஷம்  போல,
வடக்கின்  உதயம்   என்ற
வங்குரோத்து  கூத்தணியின்
வாயசைப்புபோராட்டம்  எள்ளல்  போல
வாடிவாசல்   போல
வாக்காளர்  நிலை   என்ன?
வழமைபோல !
வரப்போகும்  பதவிக்கும்,
வாங்கிய  பெட்டிக்கும்
வாயடைத்து  குத்துவார்களாக?


வாக்கினை  வீட்டிச்சின்னத்தில்!
வரலாற்றில்   எதிர்கட்சிப்பதவியைக்கூட
வாரிக்கொடுத்த  வக்கற்ற
வயசாலிக்கு
வர்ணக்கூட்டணிக்காக 
வழக்காட   உச்சநீதிமன்றம்  போவார்
வதைக்கும்  இனவாதம்சோடித்த
வாடிப்போகும்  சிறைக்கைதிகள்
வழக்கெல்லாம்  வருவாய்இல்லாத
வாய்ச்சாடல்  என்று
வானொலிகளில்  சீண்டும்
வல்லைத்தொகுதி  வெள்ளவேட்டிக்கு,
வாரீர்கள்ஒரு 
வசியம்வைத்து 
வழியனுபுவோம்!




வங்குரோத்து  ஊதாரிகளுக்கு
வரப்போகும்   தேர்தலில்,
வடகிழக்கில்இப்போதும் 
வாக்குகேட்கும்!
வக்கணை  யற்றவர்களை!எல்லோருக்கும்
வரிப்புலிகளே  வழிகாட்டிகள்,
வந்துபோன  வட்டமேசைக்கதைகள்  எல்லாம்
வருங்காலத்திலும்  பேசனும்!
வாடிப்போன  பூப்போலஅல்ல
வரலாற்று  இருப்பு!


(யாவும்கற்பனை)