25 April 2017

விழிகளில் வந்திடு கண்ணே! விம்மலுடன்..-3

முன்னர் விம்மல் இங்கேhttp://www.thanimaram.com/2017/04/2.html-


இனி....


இன்றைய அவசர பொருளாதார உலகில் இயல்பு மாற்றத்துக்கான  தேர்தலில் கூட வாக்களிக்க விரும்பாத வாக்காளர் போலவே   உறவுகளும் .

எனக்கு என்ன அவசியம் என்பது போல பலரின் அன்புக்கு மரியாதை செய்வதில்லை .ஆனால் நட்புக்கள் மட்டும் எப்போதும் தோல்வியுற்ற அரசுகளையும் அரவணைத்து செல்லும் ஐரோப்பிய  ஒன்றியம் போல எப்போதும் வாங்க வாங்க என்று கைகொடுப்பது புலம்பெயர்தேசத்தில் நட்புக்கள் மட்டுமே!

இந்த நட்புக்களினால் நல்லாக வந்தோருக்கு இணையாக வாழ்வில் துயரங்களையும் சுமப்பவர்களையும் இந்த பாரிசின் வீதியில் பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் பாடல் போல சிலரைக் காணலாம் .


அக்கரைச்சீமையிலே மனம் ஆடக்கண்டேனே பாடல் போல  இந்த வீதியில் எங்கும் தெரிவது நம்மவர்கள் முகமும் குரலுமே அதிகமாக.

மாலை 3 மணியின் பின் களைகட்டும் மெரினா போல சாயங்காலத்தில் மாலை 7 மணி வரை கலகலப்பாக இருக்கும் நகர்ப்புறம் பல்வேறு தேவதைகளுக்காக இங்குதான் கூடவேண்டும் தேர்தல் ஆலோசனைக்கூட்டம் போல .

 பாரிசின் மைய்யப்புள்ளியில் நட்புகளுடன் வாடகை அறையில்  வாழ்வோரின் பொழுதினைப்போக்குவோருக்கும். ,பாரிசின் நகர்ப்பகுதியில் சமையல்த்தளங்களில் இருநேரப்பணிபுரிவோரின்  தூரத்தில் குடியிறுப்பைக்கொண்டோர்களுக்கும் வேடந்தாங்கல் போல வசந்தகாலத்தில்.

இந்த வீதிகளில் நட்புகளுடன் உரையாடல் என்றாலும் ஒரு டீ சொல்லு நண்பா நாட்டு நிலை அரசியல் பேசுவது என்றாலும் வட்டிக்கு பணம் வாங்கும் விடயம் என்றாலும் பேசுவதுக்கான தந்தி பாண்டேயின் அரசியல் மேடை போல பிரபல்யமான இடம்.லாச்சப்பல் பகுதி .

இங்கு தான் சில மாதங்களுக்கு முன் எதிர்பாராமல் அவனைச் சந்தித்தேன் ! ஈழத்தமிழரை திடீர் என்று  ஐநாவில் சந்தித்த முன்னால் இந்திய அமைச்சர் அன்புமணி போல எப்படி இருக்கின்றீங்க மாத்தயா? என்று ! என்னை அவன் அடையாளம் கண்டுகொண்டான் எதிர்பாராமல்.போர்க்குற்ற விசாரணைக்கு நிச்சயம்   இலங்கை  அரசு பதில் கூறவேண்டும் என்று அவுஸ்ரேலியாவில் இருந்து ஐநா வந்த பாதிரியர் போல !

ஏன் மாத்தயா நீங்கள் இங்கே!  உன்னைப்போலத்தான் நானும் இப்போது வீதியில் நிற்கின்றோம்!பெருமூச்சு என்பது சில நேரத்தில் எல்லாவற்றையும் அசுவாசித்துக்கொள்ள எடுக்கும் வானொலி விளம்பர இடைவெளி போல! அது கடந்த காலம் !ம்ம் தாயகத்தில் விற்பனைப்பிரதி நிதி என்ற  கடமையின் செயல்ப்பாடுகள் நன்கு  அறிந்தவன்   கமலேஸ் !

அவனைப்பற்றிய தேடல் ஏன் எனக்கு வரவேண்டும் என்ற சிந்தனைக்கு காரணம் நேற்றய பொழுது வந்த அலைபேசியின் அழைப்பு!

அடுத்த பாடல் கேட்கும் நேயரின் இணைய வானொலி அழைப்பு போல அல்ல! ரிங் ரிங்  இது அர்ஜீன் கர்ணா பட  பாடல் அல்ல !முரளியின் ஒரு மணி அடித்தாள் போலவும் அல்ல !!முன்னைய தலைமுறை  சாதிமரப்பூச்சரமே போலவோ !!மோனிஷா மோனிஷா பாடல் போலவோ அல்ல!

என் கைபேசி அழைப்பு பாடல்!!!!


விம்மலுடன் விரையும்.....

19 April 2017

காற்றில் வந்த கவிதைகள்-13

முன்னர் கவிதைகள் இங்கே--http://www.thanimaram.com/2017/03/12.html//

இனி உள்ளே---------------//
இணைய வானொலிகளுக்கு நன்றிகளுடன்
இவன் ஏதிலி தனிமரம்!

-------------------------------------------------

இனவாதம் நாஸ்வரம் பொதுவில் ஊத,
இங்கு காவி வேட்டி வேஷத்தில்
இருப்போருக்கு  வெண்தாமரை போல
இறைத்துக்கொடுக்கும்
இன்னும் வாக்கு வங்கியும்,
இதர பல சலுகைகளும் .
இதுவல்ல தீர்வு என்ற
இறுமாப்பு கோஷங்கள்
இங்கு மீண்டும் மீண்டும்
இலக்கியத்திலும் ,அரசியலிலும்
இருக்கும் வரை மீண்டும் மீண்டும்
இன்னல்லகள் தொடரும்!








///

வார்த்தைகள் இல்லாதவன் கவி வடிக்க வந்தேன் ஆசையுடன் !
நீயோ செவிப்புலன் இல்லாத நங்கை என்று
சைகை செய்கின்றாய் !///

---------------------------------------

வியாபாரம் என்ற வேர்வை சிந்தி
வியாப்பித்து பெட்டிக்கடை முதல்
விளம்பரத் துறைவரை 
விறுகொண்டெழ வழிகாட்டிய
விளைநிலம் உன்னைப்பணிந்து!


விதிவழி தொலைந்த 
வியாபாரி மகனை தேடுகின்றேன்
விம்மலுடன் !
விசாரித்ததில் விடலைப்பையன்
விழிகளில்  விழுந்த
விதானையார் மகளும் 
விரும்பி ஓடியதாக
விசர்க்கதை பேசிய விடிவெள்ளிப்பொழுதில்
விரைந்துடுவீர்  ஒருகுரல் விரைவாக 
வீரகேசரி வீதியில்
விரட்டிப்பிடிக்கலாம் 
வியாழமாற்றம் வரும்முன்னே )))
விற்பனை அதிகாரி என்ற 
விறுமாப்பு நிழல்  நட்புக்கள் 
விதர்ப்ப நாட்டு இளவரசன் போல
விசிறிகள்   அல்ல
விட்டில்ப்பூச்சிகள் 
விதைக்கும் தொடர்  !
விளையும் பயிருக்கு  உரம்போல
விழுந்திடும் வென்னீர் போல
விடுபடும் இலக்கணவழுவுக்கு
விலக்கப்பட்ட  
வரிச்சலுகை கிடைக்குமா?)))
விடையாக தனிமரத்துக்கு))

 விரும்பிய பாடல் சேமிப்பாக  அன்றி 
விரலில் ஏதுமில்லாத ஏதிலி !
விட்டத்தோடு சேர்த்தடித்தாலும் 
விடாக்கண்டவன் போல )))
விரும்புகின்றேன் ))
விடுதலை தந்திடுங்கள் 
 விரட்டப்பட்ட
விந்தையான தாய்க்கும் 
விடையைத்தேடி 
விதைக்கின்றேன் கதையை!
விரல் கொடுப்பது நட்புக்கா!
 விடுதியில் தங்கிய அன்புக்காக
விடாமுயற்ச்சியுடன். 
விடாது வலையில் இவன்
விசரன் போல ஒருவன்))


http://www.thanimaram.com/2017/03/12.htmlவிரைவில் [[முழுவதும் [[[
///

முகநூலில் பல `முத்தான நட்பை
முழ்கி எடுக்கின்றேன் முகநூல்
முன்னால் தோழன் போல
முடிந்தால் வந்திடு!
முத்தையா பேர்த்தியே
முன்னிரவில் பவர் பாண்டி
முன்னால் ரேவதிக்கா
முழுவதும் பார்த்தேன்!
முழிச்ச கனவின் போது தலையில்
முடியில்லாதவன்!
முன்னால் முகநூல் தோழி!
முக்கிய தோழி
மூடிப்போனால்
முகநூல் க/கு
முடிச்சவிக்கு இழந்தது[[
முதல் சீதனம் அல்ல[[
முடிந்தால் இணைய வானொலியில்
முத்திரை பதிக்கலாம்[[!
முகம் தெரியாது!
முடிந்தால் வரலாம்
முத்தான பாடல் இங்கும்
முழுமையாக கிடைக்கும்[
முழுமையான உலகத்தில்
முதல் இணைய வானொலி!
முக்கிய பொய் சொல்லி விட்டேன்[[
முதல் கவிஞர் என்ற
முத்தம் தந்த உன் போதையில்[[!






யாவும் கற்பனை!






12 April 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்...-2


விம்மல் இங்கே முதலில்-http://www.thanimaram.com/2017/04/blog-post_7.html


தன் குடும்பத்து பொருளாதார வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பவர்கள் பலரின்  கடைசியும் முதலுமான கலங்கரை விளக்கமாக இருப்பது எப்படியாவது  வெளிநாடு போய் சம்பாதித்து விடவேண்டும் என்ற அங்கலாய்ப்புத்தான் !

ஆனால் கனவுக்கும் ,யாதார்த்த உலகும் இடையிலான இடைவெளிப்பரப்பு எப்போதும் இனவாத அதிகாரமாட்டத்துக்கும் இது நல்லாட்சி என்ற அரசியல்மேடைக்கும் இடைப்பட்ட நிலைபோல திரிசங்கு நிலைதான்.


என்னதான் அடிப்படை வசதி இருந்தாலும் மற்றவர்களும் வெளிநாடு போகின்றார்கள், ஏன் நாமும் போகக்கூடாது என்ற எண்ணம் வந்தால் சொந்த நிம்மதியும் போய்விடும் சிலருக்கு .

"இருக்கும் பணத்துடன் இனிதே தாய்தேசத்தில் வாழும் வழியைப்பாரு என்று அன்பாக உபதேசித்தால் "நீ போய்விட்டாய் எங்கே நாங்களும் வந்தால் உங்களைப்போல பொருளாதாரத்தில் சமநிலை கண்டுவிடுவோமோ என்ற பயத்தில் தடுக்கின்றாய் என்ற குற்றச்சாட்டு எப்போதும் வளர்ந்த நாடு வளரும் நாட்டை சிதைப்பதுதான் நோக்கம் என்ற சிரியா போல சிந்திக்கும் நிலையை எப்படி மாற்றுவது ?


இப்படியான மனநிலைக்கு மருந்து என்ன ? நாட்டை சீரமைப்பதாக சொல்லிக்கொண்டே நாடு சுற்றும் பிரதமரோ ?கனவுத்தொழிட்சாலையில் மின்னும் நடிகரோ நடிகையோ இதுக்கு விளக்கம் தரமாட்டார்கள் .

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு என்று டிவிட்டரில் கூட பதில் தர தயங்கும் நிலையில் யாரிடம் சாமனியவர்கள் பதில் தேடுவார்கள் ?

தெரிந்தவர்களும், நட்புக்களும் தானே முதலில் சிந்தனை தீர்வுக்கு தோன்றும் நம்பிக்கை நட்சத்திரங்கள்  .

அப்படித்தான் யாழவனும் தன் நட்புக்களை தேடி  தன்  வேலைப்பணிமுடிய  தன் நட்புக்களை சந்திக்கும் நேர இடைவெளிக்குள்ளும்!

 அவசர உலகில் தென்றல் போல தாலாட்டும்  தான் இணைந்து இருக்கும்முகநூல் வசதியூடான     இணைய  வானொலிக்களுக்கு இடையில் முதன்மை வானொலிக்கு அன்று பின்னிரவில் ஒலிபரப்பாக இருந்த முன்னோடி காட்சிக்கு கற்பனையாக  எழுதி அவர்களின் உள்ளடப்புக்கு அனுப்பிய கவிதை போல இது !



கவிதை பாடி
கடல் கடந்து வந்தேன்
கைபிடிக்கும் கனவில்
கடைசியில்
கன்னியாஸ்த்திரியாகும்
காரணம் தந்தாயே!
காதலுடன் கண்ணீரில்
காதலி!


கிறுக்கல் மெசஞ்சரில்  போய்சேர முன்னமே!



இணைந்த கைக்கள் படம் போல ரயில் பயணத்தில் பாரிசின் தமிழர் அதிகம் குவியும் நகர்ப்பகுதிக்கு பயணித்தான் யாழவன் !

அவன் நட்பை எங்கோ முன்னர்  சந்தித்த நினைவில்!

.

 சிந்தனை எல்லாம் எங்கே அவன் என்ற தேடல்  தான்! இதுவரை அவனைப்பற்றி சிந்திக்க தோன்றியது இல்லை...

.  தனிமரம் வலையில் விரைந்து  ....வந்திடு கண்ணே.....! தொடர்ந்து!

07 April 2017

விழிகளில் வந்திடு கண்ணே! விம்மலுடன்...- அறிமுகம்.

மலைமகள் உன்னைத்தொழுது!

                                                          நட்புக்காக மீண்டும் !!தனிமரம் வலையில் குதிக்கின்றேன் கைவீட்டு விடாத நண்பா[[ இழு இழு[[

-மற்றொரு கதையுடன்!....




.....--------------------------------------------------------------------
மறுபடியும் மதித்தோர் வாசல் தேடி,
மலர்ந்து பூவொன்று ,மடிந்து
மண்ணின் வேர்களில் வாசமிட்டு !
மறுபிறவி போல மரமாகி
மனம் போல  வெற்றிச்சிரிப்புடன்
மலையடிவாரத்தில் மயக்க முற்றேன்!
மஹிந்த அதிபர் தேர்தலில் தோற்றது போல
மருத்துநீர் தெளித்து
மடியில் தாங்கினால்
மந்திரப்புன்னகை அரசி
மனசுக்குள் சினேஹா போல
மலையகத்தில் ஒருத்தி !
மாலைநேர கனவு கலைந்து
மடிக்கணனியில் விழித்த போது !
மணி அடித்தது !
மச்சான் வேலைக்கு நேரமாச்சாசு!


மறுபடியும் கனவு காணாமல் போய் பிழைப்புக்கு வழியைப்  பாரு !

எப்ப பாரு ,இந்த இணைய வானொலிகளுக்கு  இரவு நேரத்தில் கவிதை என்ற பெயரில் ஏதோதோ கிறுக்கிக்கொண்டு ,தூக்கத்தை கொடுப்பதும் .

இரண்டு நேர வேலையில் இடைப்பட்ட ஓய்வுப்பொழுதில் கோழித்தூக்கம் போடுவதையும் எப்பத்தான் திருத்தப்போறியோ ?

உன்னைச்சொல்லி என்ன பயன் உன்னை வெளிநாட்டுக்கு  அனுப்பிய என் மச்சாளைத் திட்டணும் போல இருக்கு என்ற மாமாவின்  பேச்சு  தேர்தல்  பிரச்சார  நொடி போல  அம்மாவின் ஆணைக்கிணங்க என்பது போல எப்போதும் கேட்டுச்சலித்த ஒரு விடயம் .


இங்க புலம்பெயர்ந்து வந்த 4 வருடங்களில் திட்டாத நாள் திருநாள்  படம் போல இல்லை .

என்றாலும் வீட்டில் இடமும் ,பாரிசில் ஒரு முகவரியும் தந்து இருப்பதால் கட்சிக்கு கட்டுப்பட்ட அடிப்படை உறுப்பினர் போல அமைதி காப்பது எல்லாம் !

எனக்கும் வதிவிட அனுமதிகிடைக்கட்டும்  அதன் பின்பு கட்சி பிரிந்து போய் புதுக்கட்சி தொடங்கிய உறுப்பினர் போல முன்னேறிக்காட்டனும் என்ற திடசங்கத்துடன் வாழ்பவன் தான் யாழவன்!

இப்படியான. வசை மொழிகள் புலம்பெயர்ந்தவர்களுக்கு  ஒன்றும் புதிதல்ல நோக்கம் என்பது வாழ்வியலை செழிமைப்படுத்தனும் ,எங்கோ பொருளாதாரத்தில் தோற்றால் தன்னில் தங்கிவாழ்ந்துவிடுவார்களோ என்ற பயம் சொல்லப்படாத சொல்ல மறந்த கதை படம் போல !

என்றாலும் கனவுகளும் கற்பனைகளும் தான் தேடலுக்கு. வழி காட்டும் உந்து சக்தி மாமாவுக்கு எல்லாம் (4) ஆண்பிள்ளைகள் என்பதால் ஒரு பெண்பிள்ளை இல்லை என்ற ஏக்கம் அடிக்கடி அவர்  பேச்சில் தெரியும். என்னையும் மாமா தன் பிள்ளை போலத்தான் பார்த்துக்கொள்கின்றார் ஆனாலும் அவர் கண்டிப்பு எனக்குப் பிடிப்பதில்லை .

விரைவில்  இங்கு இருந்து தனி வழி போக வரம் கிடைக்கனும் அதுக்கு முதல் வேலைக்கு போகும் வழியில் என் நண்பர்களையும் சந்திக்க வேண்டும்  காரணம் நல்லாட்சியின் தீர்வுத்திட்டம் போல இழுத்துக்கொண்டே போகும் அவன் எங்கே என்ற தேடல்?


விம்மல் தொடரும்.....

04 April 2017

முன்னோட்டம்...! விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்!

வணக்கம் வலையுறவுகளே மீண்டும் தனிமரம் புதிய தொடருடன் உங்களிடம் வருகின்றேன் தனிமரம்.org ,சினேஹாவின் சாபத்தால் காணமல் போய் !

இப்போது நீர்பறவை நாயகியின் கருணையினால் தனிமரம் .com என்ற புதிய டைனமில் உங்களை நாடி அதே பழைய தனிமரம் நேசனாக மீண்டும் வருகின்றேன்))  .


அருமை/ மகிழ்ச்சி /சந்தோஸம் / வாழ்த்துக்கள்/தொடர்கின்றேன் என்ற தொடர்கதையின் பின்னூட்ட வார்த்தைகள் ஜாலம் கேட்டு உண்மையில் சில மாதங்கள்  தனிமரமும் காதல்க் கோட்டை கட்டவில்லை))  .



ஆன்மீகம் கடந்த பின் தனிமரம் வெட்டியான் என்ன செய்வேன் ?சருகு சும்மா இருந்தாலும் காற்று விடாதாம். என்பது போல என்னையும் என்னைச்சுற்றிய நட்புக்கள் புதிய தொடர் எழுதச்சொல்லுகின்றது.)))

அரசியல் வியாபாரிகள் எத்தனையோ பேர் கேட்டதால் இலங்கை போகவில்லை என்பது போல எல்லாம் தனிமரம் அறிக்கைவிடாது புனித பூமியை துறந்து. வந்தாச்சு அகதியாக.

தவழ்வது முகநூலில்)) தட்டினால் மெசென்சரில் பல உள்ளடப்பு செய்திகள்! நாளாந்தம் படிக்க.எங்கும் போகலாம்   தணிக்கையற்று.

  இப்ப எல்லாம் முன்னர் போல வலைப்பக்கம் வர ஓய்வு அதிகம் கிடைப்பதில்லை என்று எல்லாம் பொய் சொல்ல மாட்டேன்.  சோம்பல் கூடிவிட்டது ))).

கிடைக்கும் ஓய்வில் உங்களுடன் அடுத்த பகிர்வாக புதிய தொடரினை கொண்டுவரத் தயாராக உங்களின் அன்பும்  , தார்மீக ஆதரவும் கிடைக்கும் என்ற இடைத்தேர்தல் பிரட்சார மேடை போல தனிமரமும் களத்தில் இனி உஷார்)))

மீண்டும் ஒரு ஒப்பாரியா ?என்று கேட்பது காதில் விழுகின்றது !என்றாலும் இனவாத யுத்ததின் புலப்படாத பாதிப்புக்கள் இன்னும் எம்புனித மண்ணில் சொல்லப் படாமல் இன்னும் இருட்டடைப்பு செய்யப்படும் செய்திகளை .தகவல்களை தொடர்ந்தும்

பொதுவெளியில் சொல்ல வேண்டியது காலத்தின் கடமை .

வரலாற்றில் பலவிடயங்கள் பொறிக்கப்பட வேண்டும் என்ற தேடலின் விளைவாக குறுந்தொடரினை உங்களுடன் பகிர விரும்புகின்றேன்.


எப்போதும் போல இந்த தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் தொடர்பு இல்லை என்பதை சினேஹா மீது ஆணையிட்டுச் சொல்லும் இவன் பரதேசி! படிக்க ஆசை பாரத தேசிய மொழில் ஹிந்தி மொழி படிக்கலாம் முப்பது நாளில் ஹிந்தி என்ற புத்தகம் தொலைத்த பன்னடை இப்போது அறிவுஜீவி போல முகநூலில் கதை பேச விரும்பாத !உடல்கட்டு இல்லாதவன்[[ நேரச்சிக்கல் [[
உங்களுடன் வலையில் !
படிக்காத
தனிமரம் நேசன்
பாரிசில் ஓர் ஏதிலி)))


முடிந்தால் வாருங்கள் தொடர் வாசிக்க ! யார் வீட்டுக்கும் புதிய பதிவு போட்டுவிட்டேன் என்று கூவும் பேப்பர் போடும் நிலையில் இப்ப தனிமரம் நேசன் இல்லை!

 இணையத்தில் நட்பு யாசிப்பது என்பது என் சுயத்தை இழப்பது என்றால் எப்போதும் தனிமரம் இப்படித்தான்!தமிழ்மணத்தில் இப்போது என் பதிவுகள் வராது அதன் தொழில்நுட்ப சிக்கல் நான் அறியேன் பதிவினை இணைப்பதில் முகவரி மாற்றம் தொல்லை என்றாகிவிட்டது! விரும்பியோர் தனிமரம்.கொம் தேடி வந்தால் புதிய பகிர்வை அறியலாம்[[ ஒலிபரப்பு தடங்களுக்கு வருந்துகின்றேன்[[ யாரும் தடை போட முடியாது கவண் படம் போல[[

இனி என்ன டூயட் தான் [[