23 March 2021

அஞ்சலிகள் அன்பு நண்பனே!

இந்த வீட்டில் தான் இனித்தனிமரம் தங்கனும் இலங்கை வந்தால் என்றாயே! இறுதியாக இசைந்துண்ட உணவு! இப்போதும் சுவைக்கின்றது நண்பா! இனி என்ன கலியாணகோலம் இணைந்த கைகள் என்றாயே? இப்படம் எடுப்பதும் இவன் உங்கள் என்ற குரலுக்கும் இடையில் தான் நம்முகங்கள் இணைத்த பாடல்கள் இணையம் என்று! இருந்து இருக்கலாம் இந்த அரபுலக மண்ணில் இனி ஒரு தொழில் என்று இலங்கை போனாயே! இன்றும் கலியாணபுகைப்படம் எடுக்க இந்த பஸ்ஸில் ஏன் போனாய்! இன்னும் கண்ணுக்குள் நீயடா! இனி எந்த அழைப்பில் வருவாயோ? இனிய சினேஹிதனே! இதோ என்நூலும் வருகின்றது என்றேனே! இருண்ட இரவுப்பொழுதில்! இருந்தாலும் இதையும் சொல்லேண்டா இப்பவும் சினேஹா இன்னும் தனிமரமோ இருடா இணைப்பில் இன்னும் பேசுவோம் இனிய ஞாயிறு என்றோமே! இம் இதில்தான் எத்தனை சுகமடா! இனி எப்படி?);;; இந்தப்பொழுது விடியாமலே இருந்து இருக்கலாம்!20/03/2021

02 March 2021

கவிதை போல கிறுக்கல்.

 விரும்பியவள்

விலக்கிச்சென்றவள்!

விதைக்காத   நிலம்   போல

விலாசம்   மாறி   வந்தவள்

விழியில்   கண்ணீரும்

விம்மலுடன்   அதிகாலை

விறைத்த  நீர்  போல!

விழாங்கு   மீன்  போல

விடலைக்   காதல்   என்றவளே!

விடுதலைப்பாதையில்

விழுப்புன்    ஏந்திய

வீர    நங்கையே!

விதானையார்   பேர்த்தி

விடத்தல்    தீவாளே!

விலங்கு   பூட்டிய

விதேசி   நங்கையானவளே!




விழியோரம்   நீதொட்ட

விரும்புகின்றேன்   படம்    பார்த்த

வில்சன்    தியேட்டரும்

விழ்ந்ததாம்    தொல்பொருள்   ஆராய்ச்சியில்

விடியாதபூமியில்!





விலங்குடன்   புத்தன்   தேசத்தில்

விழிகள்   அற்றவன்

வீழ்ந்து   கிடக்கின்றேன்!!( யாவும்கற்பனை)