31 August 2016

காற்றில் வந்த கவிதைகள் -2




யாசிப்பது உன் அன்பை அன்றி
யாதும் மாறும் யாக்கையை அல்ல
யாழினியே யாசிக்கும்
ஏதிலியும் யாசகம் கேட்கின்றேன்
உன்னிடம் என் காதல் சொல்லி!///




------------------------------------------------------------------------------


விழுந்துவிடும் அருவியில் கூட
விளக்கேற்றலாம் மின்சாரம்மாக்கி
விரைந்து வரும் துயரத்தின்
விழிகள் நனைக்கும் பன்னீரில்
விடுதலை எப்போது???!



//////////////////////////////////////////////


நாதியற்றுப்போவேன் என்று
நம் உறவுகள் சொன்ன போதும்
நான் இருக்கின்றேன் என்று
நல்ல வழிகாட்டிய தைரியசாலி
நற்றினைபோல நட்பு நீயடா
நண்பா!



முன்னம் கவிதை இங்கே-http://www.thanimaram.org/2016/08/blog-post_16.html

28 August 2016

யா-- சி--க்கும் --- ஏ----தி--லி =17

முன்னர்  இங்கே-http://www.thanimaram.org/2016/08/16.html

நேசங்கள் பொய் என்று
நேற்றைய காற்றுப்போல
நேயர் விருப்பம் தேர்வில்
நேசம் பாயும் உன்னை
நேசித்த நீ புரியாத என்
நேசிப்பு என்ற யாசகியே!
                                            ( யாதவன் நாட்குறிப்பில்)

  இனி.........

எனக்கு நம்நாட்டில் இருந்தது போல இப்போதும் நட்புக்கள் அதிகம்! இன்றைய நவீன வசதிகள் முகம் தெரிந்த /முகம் தெரியாத பலரை என்னிடம் நட்புடன் சேர்க்கின்றது  !ஆனாலும் உன்னைப்போல என்னைப்பிரிந்தவர்கள் ஒரு சிலரைத்தவிர !பலர்  மீண்டும் வந்து என்னோடு நட்பில் ஆனந்த யாழ்மீட்டுகின்றார்கள் .

எப்படி என் இயல்பான இளமைக்கால போக்குகள் ?,பாரிஸ் வாழ்வில் மாற்றம் கண்டது ?,என்று கேள்விகளால் ஒரு வேள்வி போல தோண்டி எடுக்கின்றார்கள்!


 ஆனாலும் எதுக்கும் பதில் புரியாத புதிர் போலத்தான் தொடர்கின்றது ! என்ன கேட்டாய் யாழினி?, எப்படி மாயாவை
 தாரமாக ஏற்றுக்கொண்டாய் என்று ?,


என் தந்தை என் கலியாணத்தை. விரைவில் காண ஆசையுடன் காத்து இருந்தார் !இல்லை எனக்கு யாழினிதான் வேணும் என்ற போது!

 இதைப்பாரு யாதவன் .

"உப்புசப்பு இல்லாத தொடர்கதை போல வாழ்க்கையை நீட்டிக்கொண்டே போகலாம் என்று நினைக்காத. எல்லாத்துக்கும் ஒரு முடிவு நிச்சயம் இந்த உலகில் இருக்கு."

"பருவத்தே பயிர் செய் என்ற மூத்தவர்கள் வார்த்தை ஒன்றும் வெறும் அரசியல்க்கட்சியின் தேர்தல் அறிக்கை போல அல்ல! இலங்கை இனவாத அரசியல்ச்சட்டம் போல எதையும் மாற்ற முடியாது யதார்த்த.
உலகில் நல்லாட்சி என்றாலும் சமாதான தேவதை  என்ற முன்னைய ஆட்சி என்றாலும் நீயும் சுதந்திரக்குடிமகன் இல்லை"

 என் பேச்சுக்கு கட்டுப்பட வேண்டியவன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் போல !

யாழினிக்கு காத்திருந்த காலம் இனிப்போதும் !என் தங்கை மகளைத்தான்  என் மருமகளைத்தான் நீ கைபிடிக்கனும். அதுதான் உன் விதியும்கூட.

 உனக்கு என்ன குறைச்சல் ?,யாழினி குடும்பத்துக்கதை , அவன் அப்பன் கதை எல்லாம் இனி என் காதில் விழக்கூடாது !சட்டமன்ற எதிர்க்கட்சி ச்ஸ்பெண்ட் விவகாரம் போல இல்லாமல் ஒரு தீர்க்கமான முடிவு எடு.



 உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் என்பது  போலவோ இல்லை ,இலங்கை அரசியல்
 சீர்திருத்தம் இதோ அதோ என்பது போலவோ போக்குக்காட்டிக்கொண்டு இருக்க வேண்டாம்.

 என் மகன் வாழ்க்கை எனக்கு முக்கியம்.

 இல்லை உனக்கு உன் காதல் முக்கியம், காலம் எல்லாம் காத்து இருப்பேன் என்று பல்லவி அனுபல்லவி ராகம் பாடாத  இதுதான் என் முடிவு.

இல்லையோ இந்த அப்பனுக்கும்  சமாதிகட்டியாச்சு என்று நினைத்துக்கொண்டு பாரிஸில் இருந்துவிடு என்று என் ஐயா அன்று தொலைபேசியை துண்டித்தது உனக்குத்தெரியாது!

 உரலுக்கு ஒரு பக்கம் இடி உலக்கைக்கு இரண்டுபக்கம் அடி போல ஆச்சு என் நிலை  யாழினி.  எனக்கே என் மீது அருவருப்பு!!


 உன்னைப்பார்க்க முடியவில்லை பாரிஸில்!உயர் படிப்பு என்று லண்டன் போனதாக சினிமா கிசுகிசு போல காதில் விழுந்தாலும் உன் வீட்டுப்பக்க  வீதியில்  ராசமகன் படப்பாடல் போல காத்து இருந்தேன் தனியே  என்று சொன்னால் புரியாத வலி  உனக்கு!  அந்த நேர காதல் பரவசம் அப்படி!



ஆனாலும் தந்தைக்கு தலைவணங்கும் காவியத்தலைவன் போல நானும் வேசம் போட முடிவு எடுத்தேன்!

 அதனால் ஒரு வழிப்பாதை போல என் முடிவும்  மச்சாள் மாயாமீது தோடி ராகம் பாட வெளிக்கிட்டேன் .

தொடரும்.........!


19 August 2016

யாசிக்கும் ஏ--- தி--லி---16


முன்னர் இங்கே--http://www.thanimaram.org/2016/07/15.html



இனி.....
நினைக்கும் நேரத்தில் எல்லாவற்றையும் திறந்த மனதுடன் எல்லார் முன்னாடியும் பேசிவிடமுடியாது !அதுக்கு இந்த நம் சமூகம் ஏற்படுத்திருக்கும் கட்டமைப்புக்கள் இடம் கொடுக்காது யாழினி!


 உனக்கு வர்க்கபேதம் ,ஏற்ற தாழ்வுகள் பற்றி எல்லாம் எந்தளவுக்கு அடிப்படை புரிந்துணர்வு இருக்கு என்று நான் அறியேன்!

 நல்லாட்சியின் புதிய அரசியதீர்வுதிட்ட மென்வலு நாடகம் போல !


 இருந்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!! திட்டமிட்டு  ஒரு இனத்தையே அழித்தார்கள்!


 இன்னும் நடைமுறையில் இனம் அழிந்து போக ஏற்றிய அரசியல் ஊசிகள் எல்லாம் காலம் கடந்து காற்றில் வரலாம்.

 ஆனால் அதுக்குள் நம் இனம் இருந்த தடயங்கள் எல்லாம் மாறிவிடும் இது 7 ம் அறிவு படத்தில் வரும் வசணம் போல" ஒரு இனத்தைதையே கொத்துக்கொத்தாக கொண்டார்கள்   அப்போதும் எதும் செய்யமுடியாத மக்கள் போல இருந்தோம்"  என்ற வெற்றுவார்த்தை போல இல்லை இப்போதைய நிலை!


 நாம்  நம் இனத்தின் விடிவுக்கு ஏதாவது தெளிந்த பார்வையில் சர்வதேச ஆதிக்க சதிகளை தாண்டி ஏதாவது செய்யவேண்டிய நிலையில் இருப்பது போலத்தான்!

 ஒவ்வொரு ஈழத்தமிழன்இன்றைய  நிலையும். ஒருபக்கம் ஈழயுத்தம் .அதனால் ஏற்பட்ட இடப்பெயர்வு,புலப்பெயர்வு என்று இழந்த கதைகள் எல்லாம் பலதை நீயும் அறியாய்!!


 உன் அப்பாவும் புரியார் !!

ஆனால் என். நட்பு ஒரு ஊடகவாதி !!


அவன் என்னை சென்னையில்  தனிமையில் சந்தித்த கதை எல்லாம் இணைந்த கைகள் பட  அருண்பாண்டியன் போல சொல்லாத கதை.



 ஆனால் அவன் எனக்கு எப்போதும் சிரித்துப்பேசி என்னை அன்பில் நட்பை நேசிக்கும் ஒரு நண்பன் .

அவன் கதை கூட என் நட்பு தனிமரத்திடம் இங்கு வந்து  சொல்லி இருக்கின்றேன் !!



எனக்குத்தெரியும் நாதாரி தனிமரத்தை  உனக்கு பிடிக்காது !சினேஹா பாச பித்த லாட்டக்காரன்! என்று  நீ நினைப்பது!


ஆனாலும் பாரிஸில் உன்னைப் பார்க்க முன்னமே  நான் அறிந்த என் நட்புக்கள் உணரும் அவனும் நானும் எப்படியான இணைந்த கைகள் என்று! ஆனாலும்

 என்னை எல்லா  பொது சமூகதளத்திலும் நட்பை யாசிக்கின்றார்கள் நீ இதுநம்மாளு பாக்கியராஜ் போல கமடியில் .

 ஆனால் என் கதை எதையும் இன்றுவரை எங்கும் சொல்ல என் அடிப்படை திமிர் இடம் கொடுத்தத்தில்லை.


 ஆனால் என் தந்தையிடம் எப்போதும் நான் ஒரு குழந்தை .


அவர் குடிகாரர் என்று பொதுவிள் பலர் அறிந்தாலும் யார் பணத்தையும் கையாடல் செய்ததில்லை. சுய உழைப்பில் தாய் தந்தைக்கு தனி வியாபாரம் தொடங்கி கொடுத்தவர் இனவாதம் காலியில் இருந்து விரட்டிய போது தணையன் போல வன்னியில் இருங்கள் என்று !1985 இல் ! நீ பிறக்க முன்  யாழினி!

தன் தம்பி கலியாணம் செய்து முன்று பிள்ளைகள் பெற்ற பின் இனவிடுதலைப்பாதை  என்று தனியாக  இந்தியக்ககைக்கூலி கதைகேட்டு குடும்பத்தை விட்டுப்போனபோதும்!


 அவர்கள் வாழ்வுக்கும் ,வளர்ச்சிக்கும் பெரியப்பாவாக இருந்து வழிகாட்டிய என் தந்தை திமிர்த்தனம் இன்னும் சொல்லாத ஈழத்தொடர்!


 பலரைக் கரை சேர்த்த தைரிய்சாலி  என் ஐயா! ஆனால் உன் அப்பா அவர் குடும்பத்தில் மூத்த பொட்டைகள் இருக்க உன் அம்மாவை இழுத்துக்குக்கொண்டு  ஊர்விட்டு ஓடிய கதை எல்லாம் இண்டமுள்ளு போல பொதுவெளியில்  விமர்சனம் செய்யத் தகுதியில்லை !

ஏனா நானும்  நாதாரிதான்!

போடி உனக்கும் நீ ஏதோ சினேஹே போல அழகு என்று பலரும் நினைக்கக்கூடும் ஆனாலும் நீ நிறம் மாறாத பூக்கள் பட  ரதி போல சாதாரண ஒருத்தி!



 கொஞ்சம் இரு வாட்சாப்பில் யாரோ அழைக்கின்றார்கள் .பிறகு  உன்னுடன் பேசலாம். விரைவில் கார்டிநோட் இறக்கம் வரும் யாழினி. அது வரை என் விருப்ப பாடல் இலங்கையில் இருக்கும் இணைய வானொலியில் இருந்து  ஒலிக்குது அதை கேளு  இதோ-




 அதுக்குள் இணையம் சதிசெய்தால் கொஞ்சம் காத்து இரு மச்சான் இணையம் அலைவரிசை கிடைக்கும் வெளியிடத்தில்  வந்து பேசுகின்றேன்.

ஆமா  விடுமுறை முடிஞ்சுதா?, என்னை முகநூல் பக்கம் வரவிடக்கூடாது என்று திட்டத்துடன் தான் அழைப்பை எடுத்து இருப்பாய்??

 ஆனாலும் சிங்கப்பூரும்  எனக்கு தடை போட முடியாது!

 நான் தனிவழி போகும் வழிப்போகன்! பேசலாம் அருகில் ஒரு நட்பு  இருக்கு பின் வருகின்ரேன்! யார்  அது யாதவன்! ஓ அவன் என் மச்சான் போல நட்பு!

 தொடரும்....

16 August 2016

காற்றில் வந்த கவிதைகள்!!!

நேசம் கொண்டு
 நெருங்கிவருகின்றேன்
நேற்றைய காற்றுப்போல
நீயோ நெடுநல்வாடை போல
தொலைவில்
நெருங்கம் இல்லாமல்!



----------------------------------------------------------


மதியை(நிலவு)மதிக்கவும் தெரியும்,
மானத்தை காக்கவும் தெரியும்!
மதியிழந்து போவேனோ
மாமியார்வீட்டில்?
மல்லுக்கட்டிய நாட்களை
மறவேன் !
மயிர் நீப்பின்
மரணிக்குமாம் மான்
நானும் மான் போலத்தான்
மதியாதார்வீட்டிற்கு
மிதியாத பாதம் கொண்ட
மருமகன்!





---------------------------------------------

நினைவுகளுக்கு மட்டும்
நினைவில் ஒரு கல்லறை இருக்கும் எனில்
நீங்காத  உன் நினைவுகளையும்
நிச்சயம் அதில் புதைப்பேன்
நீ பிரிந்த அந்த நொடிகளை!



-----------------------------------------------------------------------------


அடுப்படி வெப்பத்திலும்
அனல்போல என் காதல்
அகதி உன்னைத்தேடியே
அலைந்து திரிகின்றது
ஆயுள்ச்சிறையில் என்றாலும்
அணைத்துக்கொள்!
அடுத்த பதிவு எழுத
அயிரம் சிக்கல்[[[
அன்பே தொடர்வேன்!
அகதி இன்னும் வாழ்கின்றேன்!
அடுத்த சாப்பாடு பட்டியல்
அடுக்கடுக்காய் காத்து இருக்கு!!
அட்டவணை போல[[



08 August 2016

வாழ்த்துக்கள் நண்பா!

நட்பு,நட்பதிகாரம்,நண்பர்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழில் தனித்துவமான ஒரு விடயம்!

 இதில் நட்பு என்ற சொல்லே இன்று பலருக்கு முகநூலில் ஒரு வரமாகவும், சாபமாகவும் வந்து பலரின் நேரச்சிக்கலை விரையம் செய்யும் அவஸ்த்தை எல்லாம் சொல்லில் வடிக்கமுடியாத துயரங்கள்.

நல்ல நட்பை நாம் பொறுவதும் ஒரு முன்வினைப் பயன் எனலாம் !

அந்த வகையில் என் பல நட்பில் என்றும் எங்கும் !எப்போதும் !!என்னை!! இன்றும்  நட்புக்கு யாசிக்கும் ஒரு இதயம் விடியும் பொழுதில் புதிய அகவையில் 9/8/-- ) தடம் பதிக்கின்றான் !




என்றும் எப்போதும் சந்தோஷத்துடன் வாழ நாமும் வாழ்த்துவோம் கடல் கடந்து!
இனிய வாழ்த்துக்கள் மச்சான்!






04 August 2016

என் கதையில் ஒரு வழி இருக்கும் !!!

பொருளாதார தேவைகளுக்காக முந்திய தலைமுறையினர் பலர் இலங்கை/ஈழம் என்று நாடோடிய கதை பல!


வியாபாரம் தொழில்வாய்ப்பு ,இன்னும் பல நிலைகளுக்காக  உள்நாட்டுக்குள் விரும்பியோ,விரும்பம்மின்றியோ இடம்பெயர்ந்தார்கள் தம் வாழ்வியலை நிலைநிறுத்தலுக்காக !




பின் வந்த தலைமுறைக்கு இனவாத யுத்தம் விரும்பம் இன்றியே !இடம்பெயர்வைக்கொடுத்து, பல ஊர்களை தாண்டிச்செல்ல வைத்ததும் நிதர்சனமான நிஜம்!


உள்நாட்டு இனவெறிச்செயல்பாடு பலரின் உயிரைக்காக்க என்று புலம்பெயர்ந்தவர்கள் கதை பல ஏக்கங்களையும் ஆறாத மனவலிகளையும் சுமந்து கொண்டு இன்றும் வாழ்பவர்கள் பலர் .!!




கோடைகால விடுமுறை என்றால்! எங்கே சுற்றுலா செல்வது என்று ,அடுத்த தலைமுறையினரின் கேள்விக்கு பதில் கொடுக்கமுடியாத நம்தலைமுறையினரின் பொருளாதார சிக்கல் ஒருபுறம் என்றால் !




இன்னும் போர்முடிந்து நல்லாட்சி இது என்ற கோஷம் மாயநதி போல இன்னும் இனவாத புலனாய்வு கைதுகளும் சிறைப்படுத்தல் சித்திரவதைகளும் தொடர்கதை  நல்லாட்சியிலும்!

இதை ஏனோ பலர்பொதுவெளிகளில் எழுதி  இப்போதைய ஆட்சியாளர்களுக்கு சங்கடம் கொடுக்க விரும்பாத நிலையை என்ன சொல்வது?



என்றாலும் விடிவு வரும் என்ற கனவுடன் பலரின் இதயவீணை இந்த பாடலாக இருக்கும்!!

.பாடல் எழுதிய கவிஞர் மாவை வரோதயன் இவ்வுலகில் இல்லாத போதிலும்!!

 இன்னும் பாடலில் வாழ்கின்றார் .


இசைமீட்டியவர் ரொக்சாமி பாடியவர் ஜோசப் ராஜேந்திரன் இந்தப்பாடல் கேட்கும் போது உங்களின் நினைவலைகள் என்ன??? பாடல்  ரசிக்க!


--------------------------------------



 நம்மவர்களின் பாடல்களை ஒரே இடத்தில் தொகுக்கும் அருமையான செயலை காலத்தின் தேவையுணர்ந்து செய்து வரும் முன்னால் பதிவர் சமூகத்தளத்தில் நீங்கள் விரும்பும் பாடலை இங்கும் ரசிக்கலாம்! அதன் லிங்கு இங்கே-https://www.youtube.com/playlist?list=PLwluC43O-7eU2-YzqaS0L-h4DrpUJPaOf