29 March 2018

காற்றில் வந்த கவிதைக்கள் -34

நன்றிகள் தமிழருவி மற்றும் புரட்சி வானொலிக்கு!

—-
-----------------http://www.thanimaram.com/2018/03/33.html


ஏற்றுக்கொள்

—-
தூரநோக்கமும் 
தூய எண்ணமும் கொண்டே
தூயவன் போல ஒருவர் வந்தார்!
துவண்டு போன இளைஞர்கள்
துடிதுடிப்புடன் துணையாகிப்போனதும்,
தூக்கிப்போட்டதும் ,தொலைந்த கதைகள் 
தூற்றிக்கொள்வது போல!
துண்டு போட்டு ,
துட்டு வாங்கி ,
துளிர்க்கும் ஆடம்பர வாழ்க்கை எல்லாம்
தூண்டில் மீன்போல,
துறவறம் எல்லாம் அறியாத
தூய்மையற்ற தேசியவாதிகளின்
தூர்நாற்றம் எல்லாம்
தும்மல் போல ஏற்றுக்கொள் !
துணிவு இல்லாத சமூகமே!
துலைக்கோ போறியல் என்றால்
துன்னாலையில் வீடு பார்க்கப்போறேன்
துணி தோய்க்கும் வீணையம்மா வீட்டில்
துடக்கு கழிக்க கூப்பிட்ட
துரைசிங்கத்தார் சொல்லியதையும்
தூரத்துப்பாடலுடன் ஏற்றுக்கொள்
துணைக்கு வராத நட்பே!
தூற்றுவோர் துற்றட்டும்
துப்பாக்கி அரசியலில்
துழைக்காத மண்வாசனையை!



(யாவும் கற்பனை)
////////////////////////////////////////////////


ஏனோ ஏதும் எழுதப்பிடிக்கவில்லை!
எங்கும் ஏமாறும் அப்பாவி வாக்காளர் போல
ஏதிலியும்!
 ஏந்துகின்றேன் பிச்சைப்பாத்திரம்!
எவராவது வந்து நிரப்புவார்கள்
ஏழ்மையான இசை என்று
ஏனோ சில மெட்டுக்கள்
எதிர்காலத்தை தொலைத்து
ஏமாறும் காதலை எண்ணி
எவரிடம் சொல்ல!
(யாவும் கற்பனை)//

—-
ஏளனச்சிரிப்பு!

--------------------------------------------------
பாதகர்கள், படுகொலை செய்தவர்கள்!
பாவிகளுக்கு மன்னிப்பில்லை,
பார்த்துக்கொள்கின்றோம்
பாடையில் வீட்டை 
பாராளமன்றத்தில் 
பதவிக்காக
பலலட்டசம் பட்டுவாடா செய்யாதவர்
பலமான நேர்மை  என்றெல்லாம்
பத்திரிக்கையில் கொக்கரித்தவர்கள்
பதவி சுகத்துக்காய்
பாலுக்கு காவல் பூனை போல
பட்டணசபைகளுக்கு
பங்குபோட்டுக்கொள்வதை
பார்த்துச்சிரிக்கின்றான்
பாதைசாரி!






(யாவும் கற்பனை)













21 March 2018

வசந்தம் வருமா?

வலையுலகம் இப்போதெல்லாம் ஏனோ ?அதிக அமைதிகாக்கின்றது . இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் இணைத்தொழில்நுட்ப தடங்கங்கள்  ஒரு புறம் என்றால்!

 மறுப்புறத்தே இலங்கையின் இணையத்தணிக்கை சுழல் இம்மாதத்தின் 

முதல் வாரங்கள் போல அல்லாமல் கொஞ்சம் இப்போது மாறி வருகின்ற நிலையில், இனி வரும் காலத்தில் ஈழப்பதிவர்கள் அதிகம் வருவார்கள் என நம்பிக்கைகொள்வோம்))) 

பல பதிவர்களை  அறிமுகம் செய்து வைத்து பின்னர் அவர்களின் வளர்ச்சியில் போட்டியையும் பொறாமைகளும் கில்லர்ஜீ சொன்னது போல , ஐநாவின் நாட்டாமை பதவி ஆசையில் உள்குத்து, ஊமைக்குத்து ,மைனஸ் ஓட்டு என்றெல்லாம் கலகலப்பூட்டுய தமிழ்மணம் திரட்டியின் இப்போதைய நிலைய சிஸ்ரம் தவற்றை நீக்க  எந்த தொழில்நுட்பப்பதிவர் வந்து புதுப்பொழிவு ஊட்டுவாரோ ?என பதிவுலகம் காத்து இருப்பதும் மறுப்பதற்கு இல்லை

தமிழ்மணம் திரட்டியில் என் தளத்தை மீள இணைக்கக்கூறி எழுதிய மெயில்களின் 

கடிதங்கள் எல்லாம் இலங்கை ஜனாதிபதிக்கு

 கொடுத்த காணமல் போனோர் 

மனுப்போலத்தான் 

இன்னும் பதில் இல்லாத கைவிரிப்பு போல தேங்கியே கிடக்கின்றது 



. விரைவில் இந்தபதிவுலகம் முன்னர் போல கலகலப்புடன் சட்டையைக்கிழித்து செத்துச்செத்து விளையாடுவது போல இயங்க வேண்டும் என்ற ஆசை இன்னும் இருக்கு


முகநூலில் என்னதான் எழுதினாலும் இந்த வலையுலகில் எழுதும் ஆனந்தம் /சந்தோஷம்  போல மகிழ்ச்சி  நிறையப்பேருக்கு இருக்கும் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்காது. எது எப்படியோ புது திரட்டிகள் வரும் என்ற திண்டுக்கல் தனபாலன் சாரின் அறிவிப்பு வந்து ஒரு வருடங்கள் நெருங்கும் நிலையில் புதிய திரட்டிகள் எதாவது வந்து பதிவுலகை மையம் கொள்ளாதா என்ற ஏக்கமும் இன்னும் இருக்கின்றது இந்த தனிமரம் வலைக்கும்.  

மீண்டும் ஒரு புதிய தொடரின் அறிமுகத்துடன்  தனிமரம் அடுத்த பதிவை உங்களிடம் கொண்டுவர இருக்கின்றேன்!

----------------------------------------


இந்தக்கவிதை இணைய வானொலி புரட்சியில் வந்தது வலையில் சேமிப்பாக !))

சில்லென்ற பனித்துளி பட்டு
சிந்திய மரக்கொடியின் ஆனந்தம் போல
சிரிப்பு என்றாலே நீயல்லவா!
சித்தம் எல்லாம் 
சிகிலம் அடைந்த இதயத்தின்
சிருங்காரப்பூவை 
சிறைப்பறவை போல 
சீர்கெட வைத்தவளே!
சிந்திக்கின்றேன் .!
சின்னவன் நானும்
சீரகத்தண்ணியில் சிலகலவை 
சிட்டுபோல கலந்து
சிந்தமாமல் சிதறாமல் நாயகன் போல
சிறுகோடு இட்டு
சினேஹா போல 
சித்திரம் தீட்டிய 
சீர்கெட்ட சமுகத்தை
சீர்தூக்கிவிட 
சீக்கிரம் வரும் பங்குனி உத்தரம் 
சிலை போல வருவாயோ ?
சின்னமணிக்குயிலே உன் முகம் நோக்கி
சீக்கிரம் வரும் பாடலின் பின்னே!
சிலருக்கு தவிப்பு  ,சிலருக்கு
சிந்திக்க சிறையில் இருப்போர் நிலை
சிங்கப்பூர் தொழில் அதிபர் போல
சில்லறை அரசியல் அல்ல
சிறிலங்கா அதிபரும்
சிவந்த மண்ணில் சிலை போல!
சித்திரக்கலையில்
சிக்காத சிட்டாக!

(யாவும் கற்பனை)




12 March 2018

காற்றில் வந்த கவிதைக்கள் -33

நினைவுப்பயணம்!

உடல்களைத்து உறங்கும் போதெல்லாம்
உறங்காத சிந்தனைகள் 
கடந்த கால 
உழைப்புக்காக
ஊக்கத்துடன் பயணித்த
ஊர்கள் எல்லாம் நோக்கி !இன்றும்
நினைவுப்பயணம் போல
ஊஞ்சல் ஆடுகின்றது
உற்சாகம் தரும்
அவசர உலகில்.
--------------------------------------------------------





--- பம்பரம் ---
-----
பணிகள் செய்யும் போது 
பம்பரம் போல செயல்பட்டால்
பணியில் பதவி உயர்வு
பம்பரம் போல சுற்றி வரும்.
படிப்பித்த வாத்தியாரும்
படம் பார்த்தார்
பக்கத்தில் இருந்து
நடிகையின் தொப்புளில்
பம்பரம் விட்ட சின்னக்கவுண்டர்
பதுளை திரையரங்கில்.
பம்பரம் பற்றி விளம்பரம் எழுதுங்கள்
பார்க்களாம் உங்கள்
பார்வைகள் எப்படி?
பறந்துதிரியுது என்று!
பக்கத்தில் இருந்த
பால்ய நண்பன்
பதிவு செய்தது.
"கைத்தறியை வாழவைப்போம்
காளையர்களே களைந்திடுங்கள்
அன்னிய மோகத்தை!
கட்டினால் இடுப்பில் இருந்து
கழன்றுவிழாது,
காற்றோட்டமான ஆடையிது,
கடும் குளிருக்கும் போர்வையாகும்
பம்பரம் மார்க் சாரங்கள்"
இறக்குமதி செய்து வினியோகிப்போர்
பக்கத்துவீட்டு 
பரிமளத்தின் தந்தை 
பரஞ்சோதி ஸ்டோர்.



பலாலி .
படித்த பின் முகநூலிலும்
பத்திரிக்கையிலும்
பலரை சென்றைடைய இன்றே
பதிவு ஏற்றுங்கள்
பம்பரம் போல ,
படைத்தவன் ஒரு தமிழன் 
பகிர்வோர் ஒரு தமிழர் என்றால் 
பல கைகள் 
பலமாக உயரும் !
படித்ததில் இது பிடித்தது
பார்த்துக்கொண்டே இருந்தேன்
பக்கத்து ஊர் நஸ்ருல்லாவும்
பஜாஜ் வண்டியில் 
பம்பரமார்க் சாரம் அணிந்து 
பல்லுக்கொட்டிச் சிரிப்பதை,
பம்பரம் மார்க் அதிஸ்ட்ட லாபச்சீட்டும்
பறந்து வருமாம் விரைவில்!
பலரும் அறிந்த லங்காபுவத் சொல்லியது
பல ஊர்களுக்கு விற்பனை செய்ய
பம்பரம் போல இன்றே
பதிவுகளுக்கு முந்துங்கள்!
பரிசுப்பொருட்களும் கிடைக்கும்.
பணி அழைக்கின்றது.



பாதியில் பம்பரக்கனவும்
பறந்தே போனது
பார்த்தாலே பரவசம் சினேஹா போல
பம்பரக்கண்ணாலே பாடலும்
பண்பலையில் வந்தது !



இது ஒரு கட்டணம் செலுத்திய
 பம்பரம் மாக் விளம்பரம்!!


(இது ஒரு கற்பனையே)

பதுளை-மலையகத்தில் ஒரு ஊர்
பல்லுக்கொட்டி சிரிப்பு-ஆனந்தச்சிரிப்பு 
பலாலி-யாழ்பாணத்தில் பிரபல்யமான ஒரு ஊர் 
லங்காபுவத்-இலங்கையின் ஊடக செய்தி 
-----------------------------------------------------------
http://www.thanimaram.com/2018/03/32.html