29 July 2011

சிறப்பு நாள்!!!


இந்துக்களின் சிறப்பு நாட்களில் இன்று வரும் 30/07/2011 ஆடி அமாவாசை மிகவும் புனிதமான தினம்!

 தந்தையை இழந்தவர்கள் அவர்களின் ஆத்மா சாந்தியடையவும் மீண்டும் பிறாவா சொர்க்கத்தில் தில்லைக் கூத்தனின் பாதத்தில் சரணாகதியடைய வேண்டியும். விரதம் இருக்கும் நாள்.!

கங்கையிலும், கடலிலும் நீராடி தர்பணம் செய்வதும் ஆலயங்களில் சிறப்பு பூசையில் கலந்தும் தந்தையின் வீடுபேறுக்கு பிண்டம்,எள்ளும் தண்ணீரும் இறைத்து அவர்களுடனான பந்த பாசம் நீங்கி அவர்களை உறவு நிலையில் இருந்து விடுவிக்கும்  திருநாளில் பலர் சிவன் வீற்றிருக்கும் கோயில்களில் சிறப்பாக கலந்து கொண்டு தீபம் ஏற்றுதல், கிரிகைகள்  போன்றவை செய்வார்கள்!

தாயகத்தில்  இது ஒரு இந்துக்களின்  வழிபாட்டுக்குரிய தினம் என எல்லோரும் போற்றியது ஒரு காலம்.!

 இன்று புதிய தலைமுறையினர் அப்பன் சாவதெப்ப அமாவாசை பிடிப்பது எப்ப என்று எங்கள் பாட்டிமாரின் முதுமொழியை. வழிமொழிவது போல்  இச்சிறப்பு நாள் பற்றிய ஆர்வம் அற்றவர்களாகவும், இவையாவும் ஒரு பித்தல் ஆட்டம் என எண்ணுவது போல் இருக்கின்றனர். !

நம் இதிகாசங்களும் இலக்கியங்களும் ஆடியில் வரும் அமாவாசையின் புனிதங்களை புடம் போட்டு வைத்திருக்கிறார்கள்.

மாதம் ஒரு முறை
வரும் அமாவாசையை  தந்தையை இழந்தவர்கள் விரதம் இருக்க முடியாமல் இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு நாளில் .உங்களை இவ்வுலகிற்கு அவதரிக்க மூலகாரணமானவருக்கு நீங்கள் செய்யும் கைமாற்றாக இன்நாள் இருக்கின்றது.

கம்பராமயணத்தில் ராமனும் இலக்குமணனும்  விஸ்வாமித்திரின் முன் தம் தந்தை தசதரனுக்கு புண்ணிய நதியாம் சரயு நதியில்  தர்பணம் செய்வதை விளக்கமாக காணலாம்.

 இன்றும் சபரிமலை செல்லுவோர் புனித நதியான திரிவேணி சங்கமத்தில் முன்னோர்களை நினைத்து தர்பணம் செய்வதைக் காணமுடியும்!

இந்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய சிறப்பான நாளாக ஆடி அமாவாசை இருக்கின்றது.
கடலில் நீராடி கடற்கரையில் பூசை செய்வதற்கு வசதியான இடங்களாக கீரிமலை, முகத்துவாரம் போன்ற இடங்கள் இருக்கின்றன.

கீரிமலையில் விரதம் இருப்பவர்களுக்கு பலர் அன்னதானம் இடுவதை கானலாம்.

நிரூபனின் பதிவு ஒன்றில் ஒருவர் எனக்கும் கூறினார் !நீ செய்த முற்பயன் தப்பித்தாய் என்று! அது இப்பதிவுக்கு ஒத்துவரும்.

 முற்பயன் தான் நானும் என தந்தைக்கு கருமவினை தீர்க்க பலகாலம் பாதுகாப்பு சிறைவைக்கப் பட்ட கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தையும் .அதன் அண்டிய விசாலமான கீரிமலைக்கடல் பரப்பிற்கும் வாழ்வில் முதன்முதலில் !சமாதான ஒப்பந்தம் வழிவிட ,கடலில் நீராடி ,சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டது.  என் இரத்த உறவுகளுக்கு கிடைக்காத வரம் எனக்கு மட்டும் கிடைத்தது முற்பயன் தானே என்று பொருள் கொள்ள முடியும்.!

ஆடிமாதம் வந்தால் அமவாசைக்கு  கடலுக்கு போய் நீராட புலம் பெயர்ந்த பின்  ஒரு முறை தான் சந்தர்ப்பம் கிடைத்தது. (கடல் இருக்கும் தூரம் 400 மைல் )

பின் பல தடைகளும் தடங்களுமாக இன்நாள் கடந்து செல்கின்றது.

இப்புனித நாள் அதிகாலையில்  வீட்டில் தோய்ந்து விட்டு வேலைக்கு ஓடுவதில் .இப்போதைய நாட்கள் கடக்கின்றது.

எப்போதாவது ஒரு ஆடி அமாவாசைக்கு மீண்டும் கீரிமலைக்குப் போகனும் இதுவும் மதத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒரு சாமானியனின் கனவே!

24 July 2011

கருணைக் கொலை!!

சில பாடல் வரிகள் என்னை மிகவும் இசை வெறியனாக்கின்றது. பலதடவை ஒலிநாடா தேய்ந்து போகும் வரை விடுவதில்லை. இதுவும் ஒரு நோய்தான் !என்ன செய்வது இசை இல்லாத பொழுதுகள் !எனக்கு பால்கோப்பி அருகில் இல்லாத அந்திமாலைப் பொழுது போன்றது.

நண்பர்கள் இசையைப் பற்றி பேசவெளிக்கிட்டால் அரசியல் பிரச்சாரத்தைவிட அதிகம் பேசுவேன் .அவர்களுடன்.

இப்போது பல நன்பர்கள் குடும்பம் குடித்தனம் என்று போய்விட்டாலும் !என் இசைக்காதல் மாறாமல் போகின்ற யாழ்தேவி போன்றது! அங்கங்கே தரித்தாலும் கோட்டையில் முடிகின்ற பயணம் போல் !

இப்படி ஒரு நாள் அங்கிருந்து நான் போனது. கிங்ஸ்லி திரையரங்கிற்கு. பல தடவை இப்படிப் போனலும் 2002 இல் காதலர்தினத்தன்று வெளியான படம்தான் உள்ளம் கொள்ளை போகுதே படம் .

இது சுந்தர் C இயக்க பிரபுதேவா கார்த்திக் அஞ்சலி நடிப்பில் வெளியான இனிய காதல் படம்.இளையராஜாவின் மூத்தவாரிசு கார்த்திக்ராஜா இசையில் தந்தையின் முத்திரையை தன் பாணியில் பின்னியிருப்பார்.
 நல்ல இசையமைப்பாளர் முன்னனிக்குப் போகாதது அதிஸ்டம் இன்னும் கை கொடுக்கவில்லை .

எல்லாப் பாடலும் பிரமாதம். எனக்கு மிகவும் பிடித்த இப்பாடல் ஒரு சோகமானது .சோகத்தை பிரபு தேவாவின் நடிப்பு உண்மையில் மகேந்திரன் ஒரு பேட்டியில் கூறியது போல் தமிழில் இயல்பான சிறப்பான நடிகர் பிரபு தேவா மட்டும் என்றார்.

அதை இப்படம் நிரூபித்திருந்தது.

பாடலைப் புனைந்தவர் இன்று இரட்டைப் பயணம்போகும் பா.விஜய். இவர் ஆரம்பத்தில் வீரியமான வர்த்தைகளை எழுதினார் .இப்போது அதிகம் வால்பிடிக்கிறார் ஒரு அரசியல் சாக்கடைக்கு என்பது என் தீர்மானம் .

கலைஞன் என்பவன் சுதந்திரமாக இருந்தால் வெற்றியை தொடமுடியாது .அரசியல் வாதிகளுக்கும் அன்னக்காவடி தூக்கனும் என்பதனூடாகவே தனக்கானஇடத்தைத் தக்கவைக்க முடியும் என்று இருக்கிறது இவரின் செயல்பாடுகள் .

குறுகிய காலத்தில் பல பாடல்களை புனைவதிலும் பலநூல்கள் எழுதுவதிலும் இவர் உண்மையில் வித்தககவி தான் .என்பதை நிரூபிக்கும் இவரை ஆரம்பத்தில் எனக்கு அதிகம் பிடித்தது .இப் போது கொஞ்சம் சலிப்பைக்கொடுக்கிறது .என்றாலும் நல்ல நூல்கள் வந்தால் வேண்டுவது இவருடையது தான் முதலில் .

இப்பாடலில் சில வரிகள் சர்ச்சையைத் தரக்கூடியதாக இருக்கிறது. காதல் துயரத்தை அவர் யேசு தாங்கிய சிலுவையுடன் ஒப்பீடுசெய்த வரிகள் கொஞ்சம் வித்தியாசமான வார்த்தைஜாலம்.

ரயில்பயணமும் காதலும் ஒன்றா ?என என்னும் இடம் கொஞ்சம் என்னை சலசலக்க வைக்கின்றது.!
சிலுவை சுமந்தானே அவனிங்கு காதலை சுமந்திருந்தால் ! காதலின் வலியை வார்த்தையின் வாய் வழி சொல்வானா!

இந்த வரிகளை பின் இரவில் கொஞ்சம் தனிமையில் கேளுங்கள் .கவிதையின்ஆழமான உணர்வும் காதலின் வலியும் புரியும்.

இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்கு இலங்கை வானொலி அறிவிப்பாளர் S.ராபீக் ஞாபகம் வரும் .அவரின் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாகும் கருத்தாளம்மிக்க பாடல்களையும், அரிதாகப் பாடியவர்களின் பாடல்களையும் தன் விருப்பம் தொகுப்பில் முத்தாக தருவார்.

மறந்து போன பல பாடல்களை இவர் எனக்கு ஞாபகம் ஊட்டுவதால் இவரின் நிகழ்ச்சிக்காக வானொலிக்கு அருகில் காத்திருந்த தருனங்கள் இனிமையானவை.

நேயர்களிடம் இருவரிக் கவிதையைக் கொடுத்து முடித்து வைக்கும் படி கேட்பார் .அந்த முடிவுகள் பலரின் கற்பனையை உள்வாங்கி முடிவில் வித்தியாசமான முடிவான கவிதையைத் தருவார்!

அதே போல் நிகழ்ச்சியில் குரலினை காலநேரத்திற்கு ஏற்றமாதிரி மாற்றி வசிகரிக்கக்கூடியவர் .இவர் குரல் ஆளுக்கும் குரலுக்கும் சம்மந்தம் இல்லை .

இவரை வர்த்தகசேவையின் வர்த்தக உலாவிலும் கொழும்பில் விவேகானந்தா மேட்டில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியிலும் நேரடியாக பார்த்துப் பேசக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி எனக்கு என்றும் உண்டு. இப்போது போல் அன்நாட்களில் புகைப்படம் எடுக்கும் கருவி என்னிடம் இல்லை. அவருடன் கைகுலுக்கிய பொழுதினை பொக்கிஸமாக வைத்திருக்க !

என்றாலும் இன்னும் உருவம் கண்ணுக்குள்ளும், குரல் காதோரமும் ஒலிக்கின்றது இன்னமும்

இரவின் மடியில் அவர் உதிர்த்த" நீ எப்போதும் என்னை ஆளுவாய் எனநினைத்தேன்!
நீயோ !கானல் நீராக்கி கலைந்து போனாய்!

"கவிதையைத் தொடர்ந்து தான். நான் இந்தப் பாடலுக்கு அடிமையானே!

புலம் பெயர்ந்தாளும் அவரின் குரலில் இந்தப் பாடல் வருவது போல் பின் நாளில் இதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் காட்சியும் கானமும்மாக கேட்கின்றேன் ஏதோ ஒரு வலி உணர்வைத் தருகின்றது !பாடலின் இசை இரவில் கேட்கும் போது புல்லாங்குழலும் ஓகனும் போட்டி போட்ட இடையில் இந்த ஒக்டோபாட் இசை வரும் சிலதுளிகள் நெஞ்சில் அறைவதைப் போல் இருக்கும்.

உன்னிக்கிருஸ்னன் குரலில் ஒரு தனி சோகம் எப்போதும் இருக்கும் வார்த்தையை ஆழ்ந்து அச்சரமாக ரசித்துப் பாடக்கூடியவர் .எனக்கு அவரின் பிடித்த பலபாடலில் இதுவும் ஒன்று .என் தெரிவு உங்களுடன் கலக்கின்றது!

21 July 2011

நொந்து போகும் ஒர் இதயம்-3

இதன் முன்பதிவுகள் 1/7,10/7/2011 பதிவுகளைப் பார்க்கவும்!
1997 இன் செம்டெம்பர் மாதம் முதல் வாரம். எல்லாரும் போல் பிரபுவும் வவுனியாவில் பிரபல்ய  தேசியப்பாடசாலைக்குள்!
 பல கனவுகளுடன் நுழைந்தான். ஏற்கனவே சாதாரண  தரமும் அப்பாடசாலையில் படித்த காரணத்தால் மாற்றம் ஏதும் இல்லை அவனிடம் .

வகுப்பறையில் தான் புதிய சில அறிமுகம்கள். உயர்தரப் படிக்க உள்நுழைந்தார்கள் .இவர்களில்


 வடக்கில் இருந்து என்னைப் போல் ஒவ்வொருத்தருக்கு யாரையாவது பிணைவைத்துவிட்டு வந்த சில வேலிதாண்டிய வெள்ளாடுகள் அடக்கம் .

புதியவர்கள்  எல்லாரையும் அதே பாடசாலையில் சாதாரண தரம் முடித்து உயர்தரம் என்ற புதிய பதவிக்கு வந்தவர்களுக்கு ஆசிரியர் ஒவ்வொருத்தராக  உங்களைப் பற்றி அறிமுகம் செய்யுங்கள் என்று கூறவும் !
ஒவ்வொருத்தரும் தமிழ் படத்தில் அன்நாளில் ஸ்ட்மன் கலர் படத்தில் எழத்தோட்டம் போடுவது போல்! அறிமுகத்தை செய்யும் தருனத்தில் தான் !பிரபுவின் காந்தப் பார்வையில் விழுந்தாள் !

சித்திரை நிலவு வெள்ளையாடை உடுத்தி முகத்தை 

மட்டும் திறந்து ,
உச்சி முதல் உள்ளம் பாதம் மூடிய சொப்பன சுந்தரியோ!
இந்திரன் மயங்கிய மோகினியா !
முன்னம் படித்த தமயந்தியின் தங்கையா !
என என்னும் விதமான குளிர்ந்த பார்வை பார்க்கும் பார்த்திமா !என்ற மொயூத்தின் ஐந்து அழகான மங்கையர் செல்வத்தில் கடைசிமகள் இந்த பார்த்திமா!இவள் மன்னாரில்   



 இருந்து புதிதாக இங்கு வந்தாள்.
வசந்தவள்ளி பந்தாட   பிரபுவும் காதல் கல்வியில் கடிதம் வரைந்தான்
 .பின் வந்தான் தனிமரத்திடம் ஆலோசனைக்கு.

 மச்சான் இன்றைக்கு ஒரு தேவதையைப் பார்த்தேன் !என்னடா பிரபு கனவு கண்டாயா பள்ளிக்குப் போய் வந்து இன்னும் ஒரு நாள் முடியல!.

 இன்றைக்கு எப்படியும் வாத்திமார் படிப்பித்திருக்கமாட்டினம். நானும் ஒரு காலத்தில் கடைசி வாங்கில இருந்து தானே வந்தேன் பிரபு.

உனக்குத் இதெல்லாம் தெரியாது .நான் ஒருத்தியை விரும்பப்போறன் .
அவள்தான் என் தெரிவு.  எனக்கு உன் உதவி வேனும் !என்று என் மீது சகடையில் போட்டான் குண்டு. ஒரு கனம் நானும் ஆடிப் போனேன் .

இதுவரை காதல் என்றாள் என்ன வென்று தெரியாத உதவாக்கரையிடம் உதவி கேட்கும் சின்னப்
பொடியன்.

முதலில் ஆள் ஆரு  அவர்கள் விபரத்தை தேடுவம் என்றேன். உதவி தேடுபவனை உதவுவதுதானே நட்பின் இலக்கணம் என இலக்கியம் கூறுகிறது. கர்ணன் துரியோதனனுக்கு அடிமையாகினானே ?தேர் ஓட்டி என்று சபை இகழ்ந்த பின் தானே.!

நானும் ஆவலாக விசாரித்தேன் பிரபுவிடம் பொட்டையாரு, எங்க இருக்கிறாள் ,என்னமாதிரி! இதில் ஆயிரம் பொருள் கொள்வார்கள் நம் கிராமத்துப் பெரிசுகள் .அவர்களின் சிலஇயல்பு இன்றும் மாறவில்லை தனிமரத்திற்கும்!

 அது கிராமத்தானுக்குள் ஊறிப்போன ரத்தம். செங்கோவி  சொல்லுவார் ஒரு பதிவில் நாங்கள் கோட்டுப் போட்டாலும் இன்னும் கிராமத்து கோவனம் என்று அது மனசைக் கூறுவதாக தனிமரம் என்னுகிறது.

அவன் கூறியது அவள் ஒரு இஸ்லாமிய மங்கை பெயர் பார்த்திமா இதுவரை என்கண்ணில்  விழவில்லை .இன்று தான் முதன் முதலில் பார்த்தேன் பைத்தியம் பிடிக்குது! இன்று ஏன் பள்ளி முடிந்ததோ என இருந்தது( .அவள் ஒரு எளக்கிரி-))நீதானே ஒவ்வொரு வீதியாக வியாபாரம் என்று உழுகிறாய்!

 ஒருக்கால் பார்த்துச் சொல்லன். இது கூட எனக்கு செய்ய மாட்டியா உன்னோட நட்பாகி இப்ப ஒரு ஆறுமாதம் ஓடியதில் நான் ஏதாவது கேட்டிருப்பனா என்று அவன் ஏய்தியது.

 என்கூட அவன் வந்து ஓட்டிக்கொண்ட காலத்தைக் குறிப்பால் உணர்த்தியது. சரி ஒன்று  செய்யிறன் நாளைக்கு பள்ளி முடியும் தருனம்  நீ வரும் பாதையில் என் வாகனத்தை நிறுத்திவிட்டு  நிற்கின்றன் .ஜாடை மட்டும் காட்டு பிறகு  உதவுவதா எனத் தீர்மானிக்கின்றேன் என பிரபுவிடம் விடை பெற்று.  போனது வசந்தகாலப் பறவை படம் ஓடிய இந்திரா திரையரங்குக்கு! 

நண்பர்களே
அக்காலகட்டத்தில் இப்போது போல் ஒரே நேரத்தில் பல சினிமா கொட்டைகளில் திரைப்படம் ஓடுவது இல்லை! இது நீங்கள் சிலர்  அறிந்த விடயம் நவீன தொழில் நுட்பம் வரமுன் ஒவ்வொரு ஊராக படம் ஓடி. வவுனியாவிற்கு பிரபல்யமான படம் வருவதற்குள். படம் மீதான ஆர்வம் போய்விடும்.

என் சிந்தனை இஸ்லாமியர்கள் வெளியேறிய சின்னவயது ஞாபகம்கள்.   அவர்கள் பற்றி அறிந்த கதைகள்.

அக்காலத்தில்  என் பாட்டி  வட்டகச்சியில் பல்பொருள் வியாபாரக்கடை வைத்திருந்தா நான் வாரவிடுமுறையில் கடையில் இருந்த போது  அவர்கள் கலக்கத்துடன் விற்றுப் போன நகைகள், பாட்டி விரும்பாமல் அவர்கள் அன்புக்கு கட்டுப் பட்டு வாங்கிக்கொண்டு நகைக்கு  பணம்கொடுத்த காட்சிகள் என பலது ஓடிக்கொண்டிருந்தது! அக்காலத்தில் பாட்டியின் கடைக்கு தோல்பை வியாபாரச் சாமான்கள் கொண்டுவரும் ஹாசிம் காக்காவும். வார இறுதியில் நான் போய் நின்றாள் என்னோடு தாயம் உறுட்டி விளையாடும் முகம் மட்டுமே தெரிய கறுப்புப் பேய் எனச் சொல்லி பாட்டியிடம் புகார் சொல்லி அடிவாங்கித்தந்த  ரிபூஸாவும் .குடும்பத்துடன் எங்களிடம் விடை பெற்ற காட்சியை வர்னிப்பது என்னிடம் வார்த்தைகளை  தேடுகின்றேன் !

.பின்னாலில்  நாங்களும் இது போல் 1995இல் ஒர் இரவுக்குள் இடம்பெயர்ந்து  நாவற்குழிப் பாலத்தில் நகர முடியாது .நின்று அழுத துயரம் கண்டு  வானம் எங்களுடன் சேர்ந்து அழுதது! 

அப்போது விட்டுப் போனவர்கள்  இழந்து போன உறவுகள்.  நீயாவது நல்லா வாழனும் என்று வழியனிப் பின உறவுகள்  .என்னை மறக்க மாட்டியள் தானே!

  என்று அக்கட்டத்திலும் நம்பிக்கையுடன் கேட்டவள் முகம் தொலைத்து விட்டு !இப்போதும் சில நிமிடங்கள் பனிமழைக்குள் மூடிவைக்கும் அடையாள அட்டை போல் பத்திரமாக நினைவுகள் இருக்கிறது.
 அவளத்தான் பின் பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் போனவள்.

 காலம் பலருக்கு நினைவுகளை தந்து தீர்க்கமாக சிந்திக்க முடியாமலும் .,தடுமாறுகின்றோம்..
 இதை எல்லாம் நானும் என்னிக் கொண்டு வரும் போது எதிர் பாராமல் முன்னால் வந்தான் அக்ரம்.

 இவன் சிலகாலம் தான் வவுனியாவிற்கு புதிதாக வந்த சந்தைப் படுத்தல் அதிகாரி .இவனுக்கு தமிழ் கொஞ்சம் தூரத்து உறவு அதிகம் கற்றது சகோதர மொழியில்.(சிங்களம்)

    சில வர்த்த நிறுவனம்கள் இஸ்லாமிய  நண்பர்களை  சந்தைப்
படுத்தல் அதிகாரியாக்கி தமிழ் மக்களின் வேலை வாய்ப்பை கிடப்பில் போட்ட கருணை மனுவாக்கிவிடும்.

 இது நான் உணர்ந்து கொண்ட யாதர்த்தம் .இப்படித்தான் சில தேசிய வர்த்தக நிறுவனங்கள் கடைப் பிடிக்கும் கொள்கை .
 இதற்கு அவர்கள் கூறும் சப்பைக்கட்டு பாதுகாப்புக் காரணம்.

 இவன் உயர் அதிகாரியுடன் ஒரு இரவு பூராகவும் வவுனியா வாடி வீட்டுல் பனம் சாரயம் குடுத்துக் கொண்டு  சண்டை போட்டதன் பின்பு தான்  நானும் நாளை முதல்குடிக்க  மாட்டேன் சத்தியம்மடி தங்கம் என்று திருந்தியது.

 அக்ரமும்  கை குழந்தையாக இருக்கும் போது யாழில் இருந்து வெளியேறி மதவாச்சியில்  குடிப்யேறியவர்கள். அவனின் வார்த்தை களில் அதனால் ஏற்பட்ட  பகையுணர்வை சமயம் வரும் போதெல்லாம் கூறுவான்  எனக்கு .

 திருமணம் முடித்து இவன் மனைவியுடன் தனிக்குடித்தனம்     நடத்தும் மதவாச்சிப் பகுதிக்கு நானும் பலதடவை போய் இருக்கின்றேன் ஒரு நல்ல நண்பனாக  .

இன்று மத்திய கிழக்கில் இருந்தாலும் அடிக்கடி தொடர்பில் வந்து போகும் பாய் எனக்கு 

.நாங்கள் இருவரும் ஒரே முகவர் நிலையத்தில் வேறுவேறு நிறு வனங்களுக்கு கடமை புரியும் சந்தைப் படுத்தல் அதிகாரிகள்! பலஇடங்களுக்கு ஒன்றாகப் போவது அப்போதைய பாது காப்புக் காரணங்களுக்காவும் தான்.

வெள்ளிக் கிழமைகள் எபோதும் புனிதம் தான் புது படங்கள் வெளியாகும். சைவஹோட்லில் பாயாசம் பந்தி வைக் படும் தூர இடத்தவர்கள் இரானுவத்தின் பாஸ் முடிந்துவிடும் அதநாள் வெளியேறனும்!

தொடரும்

எளக்கிரி-தமிழில் ஆட்டுப் பால்
சகடை-யுத்த விமானம்
 

நொந்து போகும் ஒர் இதயம் -3

இதன் தொடர்  1/7.10/7/௨௦௧௧ பார்கவும்



 
 பல கனவுகளுடன் நுழைந்தான். ஏற்கனவே சாதாரண  தரமும் அப்பாடசாலையில் படித்த காரணத்தால் மாற்றம் ஏதும் இல்லை அவனிடம் .

வகுப்பறையில் தான் புதிய சில அறிமுகம்கள். உயர்தரப் படிக்க உள்நுழைந்தார்கள் .இவர்களில்


 வடக்கில் இருந்து என்னைப் போல் ஒவ்வொருத்தருக்கு யாரையாவது பிணைவைத்துவிட்டு வந்த சில வேலிதாண்டிய வெள்ளாடுகள் அடக்கம் .

புதியவர்கள்  எல்லாரையும் அதே பாடசாலையில் சாதாரண தரம் முடித்து உயர்தரம் என்ற புதிய பதவிக்கு வந்தவர்களுக்கு ஆசிரியர் ஒவ்வொருத்தராக  உங்களைப் பற்றி அறிமுகம் செய்யுங்கள் என்று கூறவும் !
ஒவ்வொருத்தரும் தமிழ் படத்தில் அன்நாளில் ஸ்ட்மன் கலர் படத்தில் எழத்தோட்டம் போடுவது போல்! அறிமுகத்தை செய்யும் தருனத்தில் தான் !பிரபுவின் காந்தப் பார்வையில் விழுந்தாள் !

சித்திரை நிலவு வெள்ளையாடை உடுத்தி முகத்தை

மட்டும் திறந்து ,
உச்சி முதல் உள்ளம் பாதம் மூடிய சொப்பன சுந்தரியோ!
இந்திரன் மயங்கிய மோகினியா !
முன்னம் படித்த தமயந்தியின் தங்கையா !
என என்னும் விதமான குளிர்ந்த பார்வை பார்க்கும் பார்த்திமா !என்ற மொயூத்தின் ஐந்து அழகான மங்கையர் செல்வத்தில் கடைசிமகள் இந்த பார்த்திமா!இவள் மன்னாரில்



 இருந்து புதிதாக இங்கு வந்தாள்.
வசந்தவள்ளி பந்தாட   பிரபுவும் காதல் கல்வியில் கடிதம் வரைந்தான்
 .பின் வந்தான் தனிமரத்திடம் ஆலோசனைக்கு.

 மச்சான் இன்றைக்கு ஒரு தேவதையைப் பார்த்தேன் !என்னடா பிரபு கனவு கண்டாயா பள்ளிக்குப் போய் வந்து இன்னும் ஒரு நாள் முடியல!.

 இன்றைக்கு எப்படியும் வாத்திமார் படிப்பித்திருக்கமாட்டினம். நானும் ஒரு காலத்தில் கடைசி வாங்கில இருந்து தானே வந்தேன் பிரபு.

உனக்குத் இதெல்லாம் தெரியாது .நான் ஒருத்தியை விரும்பப்போறன் .
அவள்தான் என் தெரிவு.  எனக்கு உன் உதவி வேனும் !என்று என் மீது சகடையில் போட்டான் குண்டு. ஒரு கனம் நானும் ஆடிப் போனேன் .

இதுவரை காதல் என்றாள் என்ன வென்று தெரியாத உதவாக்கரையிடம் உதவி கேட்கும் சின்னப்
பொடியன்.

முதலில் ஆள் ஆரு  அவர்கள் விபரத்தை தேடுவம் என்றேன். உதவி தேடுபவனை உதவுவதுதானே நட்பின் இலக்கணம் என இலக்கியம் கூறுகிறது. கர்ணன் துரியோதனனுக்கு அடிமையாகினானே ?தேர் ஓட்டி என்று சபை இகழ்ந்த பின் தானே.!

நானும் ஆவலாக விசாரித்தேன் பிரபுவிடம் பொட்டையாரு, எங்க இருக்கிறாள் ,என்னமாதிரி! இதில் ஆயிரம் பொருள் கொள்வார்கள் நம் கிராமத்துப் பெரிசுகள் .அவர்களின் சிலஇயல்பு இன்றும் மாறவில்லை தனிமரத்திற்கும்!

 அது கிராமத்தானுக்குள் ஊறிப்போன ரத்தம். செங்கோவி  சொல்லுவார் ஒரு பதிவில் நாங்கள் கோட்டுப் போட்டாலும் இன்னும் கிராமத்து கோவனம் என்று அது மனசைக் கூறுவதாக தனிமரம் என்னுகிறது.

அவன் கூறியது அவள் ஒரு இஸ்லாமிய மங்கை பெயர் பார்த்திமா இதுவரை என்கண்ணில்  விழவில்லை .இன்று தான் முதன் முதலில் பார்த்தேன் பைத்தியம் பிடிக்குது! இன்று ஏன் பள்ளி முடிந்ததோ என இருந்தது( .அவள் ஒரு எளக்கிரி-))நீதானே ஒவ்வொரு வீதியாக வியாபாரம் என்று உழுகிறாய்!

 ஒருக்கால் பார்த்துச் சொல்லன். இது கூட எனக்கு செய்ய மாட்டியா உன்னோட நட்பாகி இப்ப ஒரு ஆறுமாதம் ஓடியதில் நான் ஏதாவது கேட்டிருப்பனா என்று அவன் ஏய்தியது.

 என்கூட அவன் வந்து ஓட்டிக்கொண்ட காலத்தைக் குறிப்பால் உணர்த்தியது. சரி ஒன்று  செய்யிறன் நாளைக்கு பள்ளி முடியும் தருனம்  நீ வரும் பாதையில் என் வாகனத்தை நிறுத்திவிட்டு  நிற்கின்றன் .ஜாடை மட்டும் காட்டு பிறகு  உதவுவதா எனத் தீர்மானிக்கின்றேன் என பிரபுவிடம் விடை பெற்று.  போனது வசந்தகாலப் பறவை படம் ஓடிய இந்திரா திரையரங்குக்கு!

நண்பர்களே
அக்காலகட்டத்தில் இப்போது போல் ஒரே நேரத்தில் பல சினிமா கொட்டைகளில் திரைப்படம் ஓடுவது இல்லை! இது நீங்கள் சிலர்  அறிந்த விடயம் நவீன தொழில் நுட்பம் வரமுன் ஒவ்வொரு ஊராக படம் ஓடி. வவுனியாவிற்கு பிரபல்யமான படம் வருவதற்குள். படம் மீதான ஆர்வம் போய்விடும்.

என் சிந்தனை இஸ்லாமியர்கள் வெளியேறிய சின்னவயது ஞாபகம்கள்.   அவர்கள் பற்றி அறிந்த கதைகள்.

அக்காலத்தில்  என் பாட்டி  வட்டகச்சியில் பல்பொருள் வியாபாரக்கடை வைத்திருந்தா நான் வாரவிடுமுறையில் கடையில் இருந்த போது  அவர்கள் கலக்கத்துடன் விற்றுப் போன நகைகள், பாட்டி விரும்பாமல் அவர்கள் அன்புக்கு கட்டுப் பட்டு வாங்கிக்கொண்டு நகைக்கு  பணம்கொடுத்த காட்சிகள் என பலது ஓடிக்கொண்டிருந்தது! அக்காலத்தில் பாட்டியின் கடைக்கு தோல்பை வியாபாரச் சாமான்கள் கொண்டுவரும் ஹாசிம் காக்காவும். வார இறுதியில் நான் போய் நின்றாள் என்னோடு தாயம் உறுட்டி விளையாடும் முகம் மட்டுமே தெரிய கறுப்புப் பேய் எனச் சொல்லி பாட்டியிடம் புகார் சொல்லி அடிவாங்கித்தந்த  ரிபூஸாவும் .குடும்பத்துடன் எங்களிடம் விடை பெற்ற காட்சியை வர்னிப்பது என்னிடம் வார்த்தைகளை  தேடுகின்றேன் !

.பின்னாலில்  நாங்களும் இது போல் 1995இல் ஒர் இரவுக்குள் இடம்பெயர்ந்து  நாவற்குழிப் பாலத்தில் நகர முடியாது .நின்று அழுத துயரம் கண்டு  வானம் எங்களுடன் சேர்ந்து அழுதது!

அப்போது விட்டுப் போனவர்கள்  இழந்து போன உறவுகள்.  நீயாவது நல்லா வாழனும் என்று வழியனிப் பின உறவுகள்  .என்னை மறக்க மாட்டியள் தானே!

  என்று அக்கட்டத்திலும் நம்பிக்கையுடன் கேட்டவள் முகம் தொலைத்து விட்டு !இப்போதும் சில நிமிடங்கள் பனிமழைக்குள் மூடிவைக்கும் அடையாள அட்டை போல் பத்திரமாக நினைவுகள் இருக்கிறது.
 அவளத்தான் பின் பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் போனவள்.

 காலம் பலருக்கு நினைவுகளை தந்து தீர்க்கமாக சிந்திக்க முடியாமலும் .,தடுமாறுகின்றோம்..
 இதை எல்லாம் நானும் என்னிக் கொண்டு வரும் போது எதிர் பாராமல் முன்னால் வந்தான் அக்ரம்.

 இவன் சிலகாலம் தான் வவுனியாவிற்கு புதிதாக வந்த சந்தைப் படுத்தல் அதிகாரி .இவனுக்கு தமிழ் கொஞ்சம் தூரத்து உறவு அதிகம் கற்றது சகோதர மொழியில்.(சிங்களம்)

    சில வர்த்த நிறுவனம்கள் இஸ்லாமிய  நண்பர்களை  சந்தைப்
படுத்தல் அதிகாரியாக்கி தமிழ் மக்களின் வேலை வாய்ப்பை கிடப்பில் போட்ட கருணை மனுவாக்கிவிடும்.

 இது நான் உணர்ந்து கொண்ட யாதர்த்தம் .இப்படித்தான் சில தேசிய வர்த்தக நிறுவனங்கள் கடைப் பிடிக்கும் கொள்கை .
 இதற்கு அவர்கள் கூறும் சப்பைக்கட்டு பாதுகாப்புக் காரணம்.

 இவன் உயர் அதிகாரியுடன் ஒரு இரவு பூராகவும் வவுனியா வாடி வீட்டுல் பனம் சாரயம் குடுத்துக் கொண்டு  சண்டை போட்டதன் பின்பு தான்  நானும் நாளை முதல்குடிக்க  மாட்டேன் சத்தியம்மடி தங்கம் என்று திருந்தியது.

 அக்ரமும்  கை குழந்தையாக இருக்கும் போது யாழில் இருந்து வெளியேறி மதவாச்சியில்  குடிப்யேறியவர்கள். அவனின் வார்த்தை களில் அதனால் ஏற்பட்ட  பகையுணர்வை சமயம் வரும் போதெல்லாம் கூறுவான்  எனக்கு .

 திருமணம் முடித்து இவன் மனைவியுடன் தனிக்குடித்தனம்     நடத்தும் மதவாச்சிப் பகுதிக்கு நானும் பலதடவை போய் இருக்கின்றேன் ஒரு நல்ல நண்பனாக  .

இன்று மத்திய கிழக்கில் இருந்தாலும் அடிக்கடி தொடர்பில் வந்து போகும் பாய் எனக்கு

.நாங்கள் இருவரும் ஒரே முகவர் நிலையத்தில் வேறுவேறு நிறு வனங்களுக்கு கடமை புரியும் சந்தைப் படுத்தல் அதிகாரிகள்! பலஇடங்களுக்கு ஒன்றாகப் போவது அப்போதைய பாது காப்புக் காரணங்களுக்காவும் தான்.

வெள்ளிக் கிழமைகள் எபோதும் புனிதம் தான் புது படங்கள் வெளியாகும். சைவஹோட்லில் பாயாசம் பந்தி வைக் படும் தூர இடத்தவர்கள் இரானுவத்தின் பாஸ் முடிந்துவிடும் அதநாள் வெளியேறனும்!

தொடரும்

எளக்கிரி-தமிழில் ஆட்டுப் பால்
சகடை-யுத்த விமானம்

18 July 2011

தீராநதி விமர்சனம் 

 பாரிஸ் தேசத்தில் நடக்கும் கதைக்களம் .இங்கு வரும் புலம்பெயர் மக்களின் இன்னொரு புதிய விடயமான வதிவிட அனுமதி என்ற ஒரு நடைமுறை தெரியாமல் தாயகத்தில் இருந்து அகதியாக வரும் என் போன்றவர்களின் விடியலுடன் படம் தொடங்குகின்றது.


நாயகன்  ஊரில் இருக்கும் தெய்வங்களை துணைக்கு அழைப்பதுடன் படம் கதை ஓட்டத்தைக் கூறுகிறது.காலையில் மதன் வெளியே போவதும் அதன் பின்னே கமராவும் பயணிக்கிறது.

 மதன் தன் நண்பனுடன் போகும் வழி நெடுக கதைவிரிந்து செல்லுகின்றது .அதற்கிடையில் மதனுக்கு வீடுவாடகைக்கு எடுத்துக் கொடுத்த அவரின் மாமானார்(அருனாகிரி) வீட்டிற்கு வந்து பார்க்கும் போது! நம் நாயகனும் ,அவரின் நண்பர்களும் வீட்டை  எப்படி நாறடித்து வைக்திருக்கிறார்கள் என்பதூடாக நம் சமுகத்தின் இன்றைய நிலையையும் புலம் பெயர்வில் நண்பர்களாக வாழும் குடியிருப்புக்களை வெளிப்படையாக காட்சிப்படுத்தி கைதட்டலை வாங்கிக்கொள்கின்றார்.
மதன் எங்கே போகின்றான் என்பதன் ஊடாக கதை பின்னோக்கி விரிகின்றது .நண்பர்கள் படைசூழ  இங்கு நடக்கும் ஒரு விழாவில் கலந்து கொண்டிருக்கும் போது கதையின் ஊடே வருகின்ற இன்னொரு கிளைக்கதைதான் புலம்பெயர்வில் தீராநதியாக ஓடும் குழுவன்முறை !

இதற்கு நாயகன் எவ்வாறு உள்நுழைகின்றான். என்றாள் நாயகனுக்கு முதலில் வதிவிடத்தைத் தீர்மானிக்கும் (offra) காரியாலாயத்தில் இருந்து வரும் கடிதத்தை மொழி தெரியாமல் இருப்பதால் யாரிடம் காட்டி வாசித்து தெரிந்து கொள்வது என வீதிக்கு வரும் போது கானும் தமிழ் பெண்தான் கதாநாயகி !

பார்க்கும் போது தயக்கத்துடன் நாயகன் கடிதத்தை நீட்ட நாயகி ஒருக்கனம் காதல் கடிதமோ !என நினைத்து பின்னடிக்கும் போது நம்ம நாயகன் என்ன விஜய் போலவா? பார்த்ததும் காதல்கடிதம் நீட்ட .இது வதிவிடக்கடிதம் தயவு செய்து வாசித்துச் சொல்லுங்கள் என கேட்க வாங்கி வாசித்து அவரின் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டதை .சொல்லும் போது ஈழத்து அகதியானவன் படும் துயரத்தை தத்ரூபமாக மதன் காட்டும் போது !

இதன் வலி புரிந்து அழுதவர்களில் தனிமரமும் சேர்ந்துதான் கலங்கிவிட்டது.!

 கடிதம் படித்து அழுதுகொண்டு செல்லும் மதன் மீது பரிதாபப்பட்டு நாயகி .மறு நாளும் இவ்வழியால் தான் போவேன் தேவையான உதவியை தயங்காமல் கேளுங்கள் என கூறிச் செல்ல மறு நாள் காத்திருக்கும் நாயகன் தன் வதிவிட கோப்புக்கள்  எல்லாவற்றையும் நாயகியிடம் கொடுப்பதுடன் அவர்கள் உறவு தொடங்கிறது .

இது  புலத்தில் நடக்கும் உதவி அதை நம்மவர்கள் பிரிதொரு அர்த்தத்தில் கொள்வதும். கதாநாயகியின் உறவினர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதும் .கதாநாயகியின்  பின்புலம் என்ன என என்னும் போது! கதை ஓட்டத்தில் நிறுத்தம் போட்டுவிட்டு !

யாதார்த்தத்தில் அவன் பின்னால் சிலர் மோட்டார்சைக்கிளில் துரத்தும் போது இருவரும் இரு திக்கில் ஓடி ஓளிகிறார்கள். அவர்கள் மூச்சு வாங்க நாங்களும் வாங்குறோம் .

ஊரில்  இருந்து பின்கதவாள் வந்துவிட்டு இங்கு வந்து நாம் காட்டும் வீரம்  பிறநாட்டவருக்கு ஈழத்தவன் வன்முறைவாதிகள் என்ற பிம்பம் பதியப்படுகிறது. இதை நாயகனின் மாமா (அருனகிரி)சரியாக  கூறி .அதே நேரம் கத்தி மேல் நின்று  சிந்திக்கவைத்து கைதட்டலையும் இளையோரின் கண்டணத்தையும் பெறுகிறார் .

புத்திமதி சொன்னால் இப்போது புரிவதில்லை பலருக்கு.
நண்பன் ஒருவன் தன் கடந்தகால தவறை மதனுக்கு கூறுகின்றான். தானும் உடம்பில் வலுஇருந்த போது கொலை செய்ததும் அதன் பலன் சிறைவாசம் அனுபவதித்து விட்டு மீண்டும் திருந்தி அமைதியான வாழ்வை பாரிஸ்சின் புறநகர்ப் பகுதியில் வாழ்கின்றேன் என்று கூறிமுடியும் போது !

நிகழ்காலத்தில் மீண்டும் மோட்டார் சைக்கிளில் இவர்களை அவர்கள் தூரத்தும் போது.  இருவரும் ஒடும் காட்சி தமிழ்சினிமாவின் பாதிப்பு அதிகமாக இருக்கின்றது எனலாம் .

காட்சியமைப்பில் முன்னும் பின்னும் என படத்தை நகர்த்தும் உத்தி கஜனி படச்சாயல் தெரிகிறது .உதவி செய்யும் பெண்மீது ஏப்படி மதனுக்கு காதல்வந்தது என்றும்  அதனை நாயகன் எப்படி வெளிப்படுத்தினார் .?
இதன்பின்னே மையக்காட்சியில் கதாநாயகிவீட்டிற்கு வரும் போதுதான் இவர்கள் தூரத்தப்படுகிறார்கள் என்று கூறுவதனூடாக படத்தின் மறுபகுதியில் என்ன நடந்தது என்று காட்சிகளாக விரிகின்றது .

கதாநாயகி வீட்டில் காத்திருக்கும் போது வியக்க வைக்கின்றார் படத்தில் ஹீரோ !இவர் பல இடங்களில் சேரனைப் போல் முகத்தை மூடி அழுவது கொஞ்சம் அதிகம் என்றாலும் .

ஈழத்து அகதி உறவுகள் யாரும் அருகில் இல்லாத போதும் ,பொருளாதார நெருக்குதல், தனிமை ,எதிர்கால பயம் என நினைக்கும் போது அழுவதைத்தவிர கனவுகளுடன் வாழும் ஈழத்து சராசரி இளைஞன் பாத்திரம் கச்சிதமாக பொருந்துகின்றது.

 கதாநாயகி கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் .ஹீரோவிற்கு கொஞ்சம் அக்காள் போல் இருப்பது அன்று வாடைகைக்காற்று தொடக்கம் இன்று தீராநதி வரை .

எங்கள் வீட்டுப் பெண்கள் ஒரு நடிகையா ?என்ற பார்வையால் நல்ல திறமை இருந்தும் வெளிக்காட்டாமல் பலர் இருப்பது இந்த நாயகியைப் பார்க்கும் போது தெரிகின்றது.

.சோக பாவம் வரமறுக்கிறது .கவலையளிக்கிறது.
 சில காட்சியில் கமரா பயம் இருப்பது புரிகின்றது. என்றாலும் புதுமுகம் நாளடைவில்  இன்னொரு சினேஹா கிடைத்திருக்கிறது .கோடம்பக்கம் இனி படை எடுக்கும் .கதாநாயகி வீட்டில் காத்திருக்கும் போது என்ன நடக்குது !

என்பதை விறுவிறுப்பாகவும் குழுவன்முறையில் யார் வென்றார்கள் ?இந்தக்குழுவன்முறைக்கு முடிவு இல்லையா  ?என பல கேள்விகளுடன் இறுதியில் என்ன நடந்தது என்பதை தீராநதியை  திரையில் கானுங்கள்.!
வில்லனில்  இவனும் ஒருவன்.இவனுடன் ரயில் சிநேகம் 5 வருடம்!


இரு பாடல்கள் அறிமுகப் பாடலே கதையை கூறிவிடுகிறது sujeethG
.அடிதடி வெட்டுக்குத்து  எழுதியவர் சதாபிரனவன் .பாடியிருப்பவர் சுஜித்.காட்சியைப் பாருங்கள்.
http://youtu.be/VFQa42fAJ8U+

தீராநதி விமர்சனம் 

தீராநதி விமர்சனம் 

16 July 2011

ஆடிப் பிறப்பூ!!

மாதங்களில் ஒவ்வொன்றும் சிறப்பானது .அதிலும் இன்று பிறக்கும் ஆடி மாதம் தமிழர் வாழ்வில் ஆனந்தமும் இன்னலும் கொண்டது.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுமுறை என்று நாவாலியூர் தங்கத்தாத்தா சோமசுந்தரப்புலவர் பாடிய ஒரு பாடல் பள்ளியில் சொல்லித்தந்தது ஞாபகம் .

 ஆடிப்பிறப்பிற்கு கஞ்சி(கனிமொழிக்கு) காச்சுவது எல்லா வீடுகளிலும் முக்கிய நாளாக ஈழத்தில் இருந்தது.

  ஒரு காலத்தில் நல்ல சிவப்பு அரிசி தேடி நல்லாக்கழுவி தேங்காய்ப்பாலுடன் பயறு பனம் கருப்பட்டி போட்டு காச்சும் (கசிப்பு இல்ல)போது வரும் வாசம் நாசியில் ஊரி நித்திரைவிட்டு எழும்பிய ஒரு காலம் பள்ளி விடுமுறையாக அதிகமாக இருந்தால் நித்திரைதான் கொண்டோம்!  ம் அது ஒரு கனாக்காலம் ?

இந்தக் கஞ்சி ஆடிக்கு என்று எல்லாரும் முன்கூட்டியே ஆயத்தம் செய்து விடுவார்கள் .உறவுகள் வீட்டுக்குசென்றால் இனிய கஞ்சியை குடிக்க வைத்தே பானை வண்டியாக்கி  விடுவார்கள் .

இப்படியான நாளில் மாமிமார் வீட்டுக்குப் போனால் அதுவும் மச்சினியை கொண்டவர்கள் வீட்டுக்குப் போனால் நீங்கள் ராஜ குமாரர்கள் தான் .எல்லாக் கஞ்சியும் உங்களுக்கு குடிக்கக் கொடுத்து தங்கள் வருங்கால மருமகன் என்று ஒப்பந்தம் போட்டுவிடுவார்கள் .

அதுவரை ஆத்தாவின் குரலுக்கு அடுப்படி போகாத அத்தைமகள் ரத்தினம் இன்று அடுப்படியில் ராஜாங்கம் என்றாள் நீங்கள் ஆடிக்கஞ்சியை அவஸ்தைப் பட்டுத்தான் குடிக்கனும்.

 கிராமத்து வாழ்வில் இது ஒரு குதுகலம் நீங்க வருவீங்க என்று இன்று கோழி கூவமுன்னமே எழும்பி உங்களுக்காக கஞ்சி காச்சினேன் என்று மச்சாள் மயக்கம் கொடுத்து கஞ்சியைக் குடித்தால் .அடிப்பாவி !
சக்கரைக்குப் பதிலாக உப்பைப் போட்டே கஞ்சியை நாறடித்தாலும் நம்மலும் சூப்பர் நீ செய்த கஞ்சி என்று ஒரு சாமரத்தை வீசாட்டி .அவளிடம் ஈக்கு மாறு சாத்துத்தான். மாதம் பிறந்து வாங்கனும் இப்படியான குறும்புகள் பல அன்நாளில் பார்த்திருக்கிறேன்.

 சில வீடுகளில் பல மச்சாள்மார் எனில் அங்கே கஞ்சி குடிக்கும் போது முன் ஜாக்கிருதை தேவை .ஒவ்வொர் வீட்டிலும் ஒரு முடல்(சிறிதளவு) குடித்து எல்லா வீட்டிலும் நீங்கள் உங்கள் இருப்பை தக்க வைப்பது அது ஒரு தனி அரசியல் .பின்னாளில் எந்த
 மச்சாள் உங்கள் துனைவியாக வரப்போவது என்று சில நேரங்களில் தெளிவாகத் தெரியாதே! அதனால்தான்

.ஒரு மச்சாளிடம் இளித்துக் கொண்டும் ,மற்றவளிடம் முறைத்துக் கொண்டும் குடிக்காதீர்கள் .தேங்காய்ப்பாலுக்கு  பதிலா கள்ளையும் கலந்து தந்து பழிவாங்கிவிடுவாள்கள் .

பிடித்தாலும் பிடிக்காட்டியும் சிரியுங்கள் இப்படிச் செய்தாள் மச்சாள் மாரின் முகத்தில் உப்பும் மிளகாய்யும் வெடிக்கும் அழகு எத்தனை இன்பம்!

சில இடங்களில் ஆடிக்கூழ் காய்ச்சுவார்கள் நல்லாக அரிசியை ஊறவைத்து. அதிகாலையில் அரைத்து நல்ல பயத்தம் பருப்பும் தேங்காய்ப்பால் பனம்கருப்பட்டி கலந்து தேங்காய்ச் சொட்டும் போட்டு ஆவி பறக்க கூழ் குடித்தால் எந்த சளியும் ஒடிபோகும் ஆளைவிடு  என்று .சில கோயில்களில் ஆடிக்கூழ் பிரபல்யம் .

நேர்த்திவைத்து காய்ச்சிப் படைப்பதை பலதடவை பார்த்திருக்கிறேன்.  இன்று கூழ் குடிக்கவும் கஞ்சி குடிக்கவும் கதியற்ற இனமாக காத்தாலை எழும்பி ஓடுகின்றோம்!

ஆடிப்பிறப்பு அன்று பின்னேரம் பல வீடுகளில் கொழுக்கட்டை அவிப்பார்கள்.  சிலர் மோதகம் அவிப்பார்கள். இதற்குஅரிசி ஊறப் போட்டு இடிப்பது என்றாள்!

  எங்க வீடுட்டுப் பெருசுகள் எல்லாம் ஒன்றாக இருந்து கும்மியடிக்கும் .அயலில் இருக்கும் அவர்கள் மாலையில் ஊரப் போட்ட அரிசியுடன்  பாட்டி வீட்டு மாட்டுக் கொட்டைகளில்  சாக்கு விரித்து பெரிய உரலில் அரிசியை போட்டால் ஐந்து பேர் உலக்கை போடுவம் .இதில் அருடன் கோபமோ அவருடன் அடிக்கடி உலக்கை மோதும் தலையில் .

இடையில் கைமாற்ற மச்சாள் வந்தாள் மாப்பிள்ளை ஹீரோதான் .அவள்  ஒரு இடி போடுவதற்குள் மாவு பதமாகிவிடும் .

இதைப் பார்க்கும் பாட்டியோ கிளிமாதிரி என் பேத்தியை குரங்கான உனக்கு சேர்த்துவைப்பன் என்று பிராக்குப் பார்க்காமல் இடிமாவை என பாக்குரல் குத்திக்கொண்டே என்னையும் உள்குத்து குத்தும் அந்தக்கிழவி சொன்ன படியே என் ஆசையில் மண்போட்டது தனிக்கதை.

 இது எல்லாம் தெரியாமல் ஒரு சிரிப்பு சிரிச்சே என்னை ஆக்கினால் உதவாக்கரை என்று.

 அவள் உலக்கை  போடும் நேரம் பார்த்து இலங்கை வானொலியில் பாட்டு வரும் "அரிசிக்குத்தும் அக்காள் மகளே "என்ற மண்வாசனைப் பாடலை காந்தக்குரலோன் ஹாமித் சுழலவிட  நேயர் விருப்பத்திற்கு நான் போட்ட தபால் அட்டை அப்பவந்து கழுத்தறுக்கும் என்வீட்டில் களவு போன காசுக்கு வழி பிறந்து.

அதன்பின் கொழுக்கட்டையுடன் அகப்பைக் காம்பும் சேர்ந்து வந்து ஆ(அ)டிபிறந்த நாள் வாழ்வில் மறக்க முடியாது .

இப்படி இருந்த நம் வாழ்வில் ஆடிக்கலவரம் வந்து அடுத்த வேலைச் சாப்பாட்டுக்கு ஈச்சம் பழம் கொண்டுவந்த முன்னால் முதலாளித் தாத்தா அதன் பின் போகவே இல்லை மீளவும் வியாபாரம் செய்ய.
ஆடியில் வரும் அமாவாசைக்கு தனிப்பதிவு போடலாம் .

ஆடிவந்தால் சுபகாரியங்கள் செய்வதில்லை.
இளைஞ்ஜோடிகளை பிரித்து வைக்கும் நடைமுறை பல திரைகளில் பார்த்திருக்கிறேன் .
பின் கம்பளையில் வேலை செய்த   போது கண்டும் இருக்கின்றேன்.


சகோதரமொழி நண்பர்கள் நண்பிகள் .எனக்கு சகோதர மொழி நண்பர்கள் என்பது சிங்களமொழி உறவுகள் அவர்களுடன்  அரசியல்  செய்வதிலை நட்பு ,இசை , உபசரிப்பு என பலதில் தனிமரம் ஒன்றிப் போனது என் வியாபாரம் நிமித்தம் இது பனங்காட்டு நரி யாருடைய சலசலப்புக்கும் அஞ்சாது ஆனால் நான் இருக்கும் நாடு எதையும் சட்டத்திற்கு உட்பட்டு பேசலாம் என் உயிர் உறவுகள் அங்கு இருப்பதால் தனிமரம் மெளனம் காக்கிறது.பின் வரும் பாடலில் எப்படி கூடி கும்மாளம் இட்டோம் என காட்சி சொல்லும் நாளை காலை இடியப்பம் சாப்பிட மாவு இடிக்கனும் எனப்பாடுவது ஜிப்சிஸ்.

 கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லுவார் ஆடிக்காற்றில் அம்மியே பறக்குதாம் ஆம்பளை நான் எம்மாத்திரம் !என்று எனக்கும் அந்தவரி பிடிக்கும்.

.பட்டம் பறப்பதைப் போல் நாமும் ஈழம்விட்டு வந்து பல ஆடி போனாலும் முன்னர் போல் கஞ்சி குடிக்க ஏனோ ஆவல் இல்லை இப்போது.

இப்பாடல் பிடிக்கும் என்றும் எனக்குப்பிடித்த ஜோடி இவர்கள் என்றுமே திரையில் சேர்ந்து வாழ்வதில்லை யாராவது ஒருவர் மரணித்துவிடுவார்கள் இதைப்பற்றி தனிப்பதிவே போடுலாம் சித்திராவின் குரல் தேவா இசை பாடல் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை  நமக்கு  நடனம் தெரியாது ஆனால்  இந்தப் பாடலில் வரும்  ரேவதி  ஆட்டம்  பிடிக்கும்!

13 July 2011

யூலை-14   !

பிரான்ஸ்!

< இன்றேல் உலகம் தனித்துவிடும்> விக்தோர் இயூகே(victor hugo)


   பிரான்ஸ் இன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.

(இங்குதான் சுதந்திரகொண்டாட்டம் நடக்கும் பகுதி)
இன்றைய உலகம் என்றால் அஃது ஐரோப்பா இல்லாமல் உலவ முடியாது. அவ்வாறே ஐரோப்பா என்றால் பிரான்ஸ் இல்லாமல் நிலவ முடியாது

.< எல்லாவற்றிலும் நான்தான் முன்னுக்கு >
  என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டு தன் பலத்தைக்காட்டும். உலக வல்லரசான அமெரிக்க ஒன்றியம் பிறப்பதற்கு கைகொடுத்து உதவியதும் பிரான்ஸ்தான்!

 புரட்சிக்கு முதல் வரும் நாடு. கற்றவர்க்கு அழகு தரும் மொழி. தனித்துவம் கோரும் மக்கள் என நினைக்கும். கால் உலகத்தவர் மனம் . பிரான்ஸ்( la France), பிரெஞ்சு மொழி (Le Franc,ais).    பிரென்ஞ்சுக்காரர்(Les Franc;ais) பால் செல்லாமல் நில்லாது! சுதந்திரம்(La liberte' ) சமத்துவம் (L,egalite')  சகோதரத்துவம்(La fraternite') என்பன பிரெஞ்சுப் புரட்சியின் சாசனங்கள்.


 உலகில் பிரசித்தி பெற்ற இப்புரட்சி ஏற்படுத்திய தாக்கம் மனித உரிமைகளை  நன்கு மதிக்கும் முதல் நாடு எனும் நற்பெயரை இன்நாட்டுக்கு பெற்றுக் கொடுத்திருக்கு.

 தற்காலத்தில் உலக மொழி அந்தஸ்த்தில் ஆங்கிலம் விளங்கினாலும் அம் மொழியின் சொல்வளத்துக்கு இரண்டாவது சர்வதேச மொழியான பிரெஞ்சு மொழியே!

அதிகளவு சொல் வழங்கியிருக்கிறது .

<வாழ்க்கை வாழ்வதற்கே> என்கின்ற கோட்பாட்டில் திளைப்பவர்களாக பிரெஞ்சுக்காரர்கள் விளங்குகிறார்கள் .

இவ்வாறு ஆயிரம் புகழுடைய சிறப்புகள், பெருமைகள் இருந்தாலும் பிரென்ஸ்சு நாடு என்பதும் சரி பிரென்ஸ் மொழி என்பதும் சரி அல்லது பிரென்ஸ் மக்கள் என்பதும் சரி வெவ்வேறு மண்களிலிருந்து வந்து நிலைத்த உரித்துப் பெற்ற கருத்துக்கள் ஆகும்.


பிரென்ஸ் நாட்டில் 129 நாட்டைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். பிரென்ஸ் சனத்தொகையில் 1/3 பகுதியினரும் 5 வெள்ளைப் பிரென்ஸ்சுக்காரரில் ஒருவர் பிறநாட்டு மூலம் உடையவர்களாக இருக்கிறார்கள் .

பிரென்ஸ் என்பது ஜேர்மனியப் பெயர். பிரென்ஸ்சு மொழி ரோமானிய மூலம் கொண்டது பிரென்ஸ்சிய மக்களும் பலஇன மக்கள் கலப்பால் உருவானவர்கள்

.பிரான்ஸ் (மேற்கு) ஐரோப்பாவில் மிகப் பெரிய நாடு.

 இதன் பரப்பளவு கிழக்கிலிருந்து மேற்கு வரைக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவாக உள்ளது. இதன் எல்லைகளைத் தொடுத்தால் வரும் வடிவம் ஒர் அறுகோணி போல் தோன்றுவதால் பிரென்சியர் பிரான்சை எக்ஸாகோன்(Hexagone) எனச் சொல்வதும் உண்டு. (பிரென்ஸ் மொழியில் H உச்சரிக்கப் படுவதில்லை).

பிரான்ஸ் நாட்டு நிலப்பரப்பு 22 மாநிலங்களாகவும்(Regions), 96 மாவட்டங்களாகவும் (Departements) பிரிபிரிக்கப்பட்டுள்ளது..

 இன்நாட்டுக்கு வெளியே 5 மாவட்டங்களும்(Dom) கடல்கடந்த ஆட்சி நிலப்பரப்புகளும் (Tom) உண்டு.

 பிரான்சில் 325 துணை மாவட்டங்களும் ,3714 நகரசபைகளும் ,36433 பட்டினங்களும் உள்ளன.

மாவட்டத்தலைவராக பறெஃவே(le Prefet) நியமனம் பெறுகிறார். பட்டினங்களின் நிர்வாகம் மேயரால் மேற்கொள்ளப்படும்.

நாட்டின் வெளியே உள்ள மாவட்டங்களில் குவாதெலூப், குயான், மாட்டினிக் ஆகிய குறுநிலப் பகுதிகள் மத்திய தென் அமெரிக்கக் கண்டத்தில் காணப்படுகிறது

.இன்று பிரான்ஸ் என அழைக்கப்படும் இன்நாட்டுக்கு பூர்வீகப் பெயர் பிரான்ஸ் அல்ல! கோல்( La gaule) என்பதே !
இதன் மூதாதைய நாமம் இன்நாட்டின் மூதாதைகளாக கோலுவா(Gaulois). இபேஎர்( lberes ) லிகுய்ர் (ligures) பெல்ஸ் (Belges)  ஜேர்மன் (Germains) கிரேக்கர் (Grecs)  எனும் குழுமத்தினர் வாழ்ந்தனர்.

 இவர்களில் பெரும்பான்மையோர் (Les Gaulois). குழுமத்தினர் என வரலாறு கூறுகின்றது கோலுவா குழுமத்தினர் பரவலாக வாழ்ந்து வந்த இம்மண்ணுக்கு கோல் என ரோமானியர்பேர் கொடுத்தனர்.

உலக வரலாற்றில் ஐரோப்பிய வரலாறு எழுச்சியானதாக அமைகின்றது.

 அதேபோல் பிரான்ஸ் வரலாறும் தனித்துவமானது.
 4 ம் 5 ம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஜேர்மனிய குழுமத்தினரான பிரான்ங்(france )  ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றியின் பயனாக தமது சமூகப்பெயரை நிலைநிறுத்தும் முகமாக தமது மொழியில் ப்ராங்கில் பிரான்சி (Francie )  எனப் புதுப் பெயர் இட்டனர்.

 இப்பெயரே பிரெஞ்சு மொழியில் பிரான்ஸ் (France) என்று இன்நாட்டின் பெயராக நிலைத்துவிட்டது.

    இன்நாடு குடியரசு ஆட்சிமுறை
  ஜானாதிபதி - Nicolas sarkozy (2007...)
   பிரதமர்-  francois fillon.     (2007 ..)

 அருகில் நிற்கும் பெண்தான் இப்போதைய பண்நாட்டு நிதியத்தின் தலைவி- ஈழத்து அகதிகளுக்கும் கருனைகாட்டு கருனை வடிவானவளே!
   (  இப்பதிவு யாவும் பேராசிரியர் ச. சச்சிதானந்தம் எழுதிய நூலில் இருந்து எடுக்கப் பட்டது.)
"ஏதிலிக்கும் அடைக்கலம் தந்தாய் மனிதவலுவிற்கு நானும் ஆகின்றேன் தேய்கின்ற ஓடாக!
 வாழ்த்துகின்றேன். போற்றுகின்றேன்!
ஈழத்திற்கும் தேவை உன் கபடம் இல்லாத கருனையுள்ளம்!

11 July 2011

பிடித்த மரம்!!

ஆடியும் வரப்போகுது  ஊர் என்றால் எங்காவது ஓடிப் போய் மரத்தில் ஏறி உஞ்சல் ஆடலாம் .


இல்லை மரத்தில் ஏறி நின்று குளிக்கப் போகும் எதிர்வீட்டு ராஜகுமாரியை அப்பப்ப வம்புக்கு இழுக்கலாம் .ஆத்தாடி பாவாட கூத்தாட என்றும்.

 குமரிகுளிக்க கிணற்றில் தண்ணி அள்ளித்தரவா என் இதயத்தைத் தரவா என்று  ஜாடைகாட்ட நாங்கள் ஏறி இருக்கும் மரம்தான் பூவரசு மரம்.

 இது எங்கள் ஊரில் அதிகம் சில இடங்களில் குளிக்கும் கிணறுக்கு அருகில் இருக்கும் .சில குடிக்கும் தண்ணீர் கிணறுக்கு அருகில் பச்சைப் பசேல் என்று குளிர்ச்சியாக இருக்கும்.

 மரத்தில் ஏறி கிணற்றுக்குள் குதித்தல் ஒரு இன்பம் அதற்கு நீச்சல் தெரியனும் மூச்சடக்கி அடிவரைபோய் மண் எடுத்துவந்தால் நண்பர்களிடம் நீங்களும் ஒரு விஜய்தான்

.பூவரசு மரம் ஒரு வித்தியாசமான பயன்பாடு கொண்டது நல்ல கதியால் தரும்,
 விறகு நிண்டு எரியக்கூடியது இடியப்ப உரல் செய்யலாம் ,

சிறுவர்களுக்கு நாதஸ்வரம் அதில்தான் தொடங்கும் பூவரசு இலையை சிறுபகுதியாக கிழித்து பீப்பீ என்றால் அழகான நாதம் வரும். கொஞ்சம் இலை கிழிந்தால் சாத்துவாய்(எச்சில்/வீனி/)வரும் அதில் கவனமாக இருப்பது உங்களின் கில்லாடித்தனம்.


பூவரசு மரத்தில் அழகான பூ பூக்கும் இது நான் மூன்று நிறத்தில் பார்த்திருக்கிறேன் .மஞ்சல் /வெள்ளை ,செம்மஞ்சல் என பார்த்தால் மனதில் மனோரஞ்சிதம் உண்டாகும் .

தலையில் சூடுவதும் இல்லை சாமிக்கு இது சாத்துவதும் இல்லை என்ன சாபம் என்று நான் அறியேன்.

 சில தேவதைகளுக்கு இதை கொடுத்து டூயட் பாடும் ஏழைக்காதாலர்களையும் பார்த்திருக்கிறேன்.

 இது எல்லாம் எங்கள் கிராமத்து பொற்காலம் பூவரசு இலையில் பாட்டி வடைசுட பயன்படுத்தும் கையில் உழுந்து ஒட்டாமல் நேர்த்தியாக மெதுமெதுப்பாக வரவும் எண்ணைத் தாச்சியில் தெறிக்காமல் இருக்க இப்படிச் செய்வதாக அன்நாளில் இன்ஜினியர் படிக்காத பார்வதி பாட்டி சொல்லியது இன்று பேரன் உளுந்து வடை சுட்டாலும் கையில் பாதி மாவு என்ன செய்வது பூவரசு இலை ஏற்றுமதி செய்ய இங்கு யாரும் முன்வரவில்லை.

பூவரசுவசு இலையை காணியில் இயற்கைப் பசலையாக போட்டால் எந்த கிருமியும் வந்து சேராது என எங்க தாத்தா விவசாய விஞ்ஞானம் படிக்காத மேதை சொல்லியதி ல் இப்படி ஒரு பாடத்தை பின்னாலில் படித்த போது பட்டதாரி ஆசிரியர் சொல்லித்தரவில்லை கேட்டதற்கு பூவரசம் கம்பால் பூசைதான். விழுந்தது.


பூவரசம்மரத்தில் குறுஞ்சாய் இலைக் கொடி செழிபாக படரும் நாங்கள் காசு ஒளித்துவைகும் உண்டியல் இந்த மரம்தான்.

 பெரிய பொந்துகள் இருக்கும் சிலருக்கு இதில் பாம்பு இருக்கு என்று கதை விட்டால் கிட்டவும் வரமாட்டார்கள் எங்க உண்டியல் பத்மநாமசுவாமிகோயில் போல கருணா நிதியின் குடும்பத்துக்கும் போகாது.

பூவரசம் மரத்தில் எப்போதும் கோடைகாலமான பங்குனியின் காண்டாவனம் பகுதியில் கவனமாக இருக்கனும்.

 அப்பத்தான் கறுப்பான முரளியை சிவப்பான ஹான்சிஹா ஆக்கும் மசுக்குட்டிகள்  குடும்பம் படை எடுக்கும் போர்க்காலம்.

அவை உடம்பில் பட்டால் சரியான கடி சொரி அதனால் உடம்பில் சிவப்பு கொப்பளம் வரும் நாங்கள் சண்டைகுப் போனால் கையில் ஆயுதம் தராது சர்வதேசம் .

மெதுவாக பூவரசம் இலையில் மசுக்குட்டியைப் பிடித்துக் கொண்டு போய் மல்யுத்த வீரனின் மேனியில் படவிட்டால் மாப்பூ சொரியும் நேரத்தில் நாங்கள் புறமுதுகிடவேண்டியது தான்.பிறகு என்ன கொஞ்சக்காலம் நாங்களும் ஓடி ஓளியனும் இல்லை எனில் பிறகு  வடிவேல் பாணிதான் அடிபலமோ ?

 கிராமத்து வெய்யிலுக்கு பூவரசம் நிழல் அகதியாகப் போனவனுக்கு புகழ் இடம்கொடுக்கும் தேசம்.

 நல்ல காற்று வீச பகல் நித்திரை கொள்ள சாக்குக்கட்டில் கொண்டு போகும் தாத்தாக்கள் பலரைப் பார்த்திருக்கிறேன் .குடித்த கள்ளு தெளியும் வரை அவர்கள் விடும் கொறட்டை யாழ்தேவி மிஞ்சாத ஒலி.

இந்த பூவரம் மரம் பல காதல்ஜோடிகளைக் கண்டிருக்கும் அவர்கள் வரம்பு மீறாத உள்ளத்தை நேசித்தவர்கள் .

சிலர் இதில் ஒரு முளக் கயிற்றில் உயிரை விட்ட கோழைகள் என்றாலும் இந்தமரத்தில் பலர் தமக்குப்பிடித்தவர்கள் பெயர்கள் பச்சைகுத்தும்  மாமல்லபுரம் கல் வெட்டு .

.
இப்படியான மரத்தில் மாற்றுக் கொள்கை கொண்டவர்களையும் மண்டையில் போட்ட போதுநடுநிலமை என்று மரமண்டையாக நின்ற அப்பாவிகள் பலர் வாய் போசாத நின்ற நிலையையும் பல எங்கள் ஊர் பூவரசு  பார்த்திருக்கிறது.

இதனை சிறப்பான மரங்களை எல்லாம் யுத்தம் என்ற கொடிய வாள் குற்றியிரும் கொலையுமாக எரித்தும் வெட்டியும் போட்டு எங்கள் கிராமத்துத் எழில் கெட்டுப் போய்விட்டது .

நாங்களும் பூவரசம் பூப்பார்த்து பலவருடங்கள் போய்விட்டது


.இந்தப்பாடலின் ஆரம்பமே பூவரசுடன் தொடங்குவது  சிறப்பு  பாடல் வரிகள் முத்துலிங்கம் என நான் ஜோசிக்கின்றேன்  நிச்சயம் இல்லை.

10 July 2011

நொந்து போகும் ஒரு இதயம் -2

இதன் முதல் பாகம் இங்கு செல்க 24/09/2011 பதிவைப் பாருங்கள்.




என் அருமை பதிவாளர்களே! இந்தத் தனிமரம் புதிய நீண்ட தொடருடன் உங்களிடம் வருகின்றேன்.
இதில் என்னுடன் முரன்பட்டிருக்கும் முன்னால் நண்பனின் கதை சில மாற்றங்களுடன் .
.விடை தேடுகின்றேன் .கதையில் யாரையும் புண்படுத்தும் என்றால் மன்னிப்பை இங்கேயே கேட்கின்றேன்
.தனித்தனியாக வருவதற்கு புலம் பெயர் தேடலில் தொலைந்து போகின்ற நேரம் அதிகம் என்பதால்!
////////////////////////////////////////////////////////////////////////////////////
.பிரபு கந்தசாமியின் தவப்புதல்வன் .அவர் நண்பர் தேவனின் விருப்புக்குரியவன் ..தேவன் என்கின்ற வியாபார செல்வந்தரிடம் கைநீட்டி செய்த வேலைக்கு  மாதமுடிவில் கூலிவாங்கும் தொழிலாளிகளில் என் தந்தையும் நானும் சேர்ந்து கொண்டேம்.

 3மாதங்கள் குறுங்கால திட்டம் போடும் எனக்கும். நீண்ட கால திட்டம் போடும் என் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல்கலால் வேலை தேடி சந்தைப்படுத்தல் அதிகாரியான சில தினங்களில் .

யாதார்த்தமாக வந்து நலம் விசாரிப்புக்களுடன். தோல் கொடுத்தான் பிரபு.

 முன்னர் கடைக்கு வரும் போதெல்லாம் வெறும் பார்வையுடன் போனவன் .என்னுடன் சகலதும் பேசிக்கொள்ளும் அளவிற்கு அந்தரங்க நட்புப் பாலத்துக்குள்ளும் வந்துவிட்டான் விரைவில்.

 பார்ப்பதற்கு ஹிந்திப்பட சன்சய்தத் போல் நெடியவனும் திடகாத்திரமான உடம்பும் பழுத்த பூசனிக்காய் போல் மாநிறம் கொண்டவன்.

நானோ சோமாலியில் இருந்தவன் போல் இருந்தேன். இப்ப மட்டும் என்ன அதே கோலம்தான் தலையில் தான் மாற்றம் தலைமுடியை தானம் கொடுத்துவிட்டேன் ரஜனி விக்வைக்க கேட்டதில்.

சாதாரன தரத்தில் எட்டுப் பாடங்களையும் ஒரே எறிதல் குண்டில் வீசி எறிந்து கா/பெ/  உயர்தரம் என்ற இரண்டாவது ஏணியில் ஏறும் ஆண்டாக 1997 ஆவனி பகுதியில் பள்ளிக்குள் உள்நுழைந்தவன்.

எனக்கும் அவனுக்கும் வயது வித்தியாசம் பாஞ்சாலியின் கணவர்களைப் போல்!

நல்ல பாடல் ரசனையும் 1980 இல் வெளியான படங்கள் என்னைப் போல் அவனுக்கும் பிடித்திருந்தது.

இடப்பெயர்வில் என் இனிய பல நண்பர்களை  பலதிக்கிற்கும் மண் மீட்பு என்றும், கானாமல் போனவர் பட்டியலிலும் ,புலம் பெயர்ந்தும் போனவர்களையும் விட்டு தனிமரம் தனியாக பாலைவனமாக இருந்த போது நட்பு என்று உறவுப் பாலம் இட்டு பனிமழையைப் போல் வந்தான்.

 அதுவும் எனக்கு அப்போது தேவையாக இருந்தது. ஊர்சுற்றுவதும் உதவாக்கரை என திரிந்து கொண்டிருந்த தனிமரத்திற்கு வவுனியாவின் சதுரங்கள் தெரிந்து கொள்ளவும் என் இருப்பு ஏது என்று தெரியாமல் திக்கு முக்கடியபோது தத்தளிக்கும் ஒரு ஓடமாகிப் போனவனுக்கு வழிகாட்டும் பாதைசாரியாகவும் பாரதியின் கண்ணன் போல் எனக்கும் யாதுமாகி வந்து இருந்தான்.பிரபு.


 நாம் இருவரும் வேலைமுடிந்தும் ,பள்ளிமுடிந்தும் பல இடங்களை கோவலனைப் போல் காலினாலும் சைக்கிள் மூலமும் அளந்த தூரம் .வைரமுத்து சொல்வது போல் பழைய பர்மாவிற்குப் போகும் தூரம்

.ஒவ்வொரு குச்சு ஒழுங்கைகளையும் பாதுகாப்பு காவலர்களிடம் வரும் தேடல்களையும் தாண்டி ,மாற்றுக்குழுவினர்களின் மர்மப்பார்வைகளையும் ,
எனக்கு மொழி பெயர்த்தவன் அவனே .

எனக்கு சகோதரமொழியில் குருவாக இருந்தான். எங்கள் நட்பு அவன் வீடுவரை நண்பன் என்ற பயணத்தில் அவர்கள் குடும்பத்தில் நானும் ஒருவனானேன்.

ஓயாமல் நான் கேட்கும் பால்கோப்பியை தாயும் சரி பிரவுக்குப் பின் பூமிக்கு வந்த இரு  சகோதரிகளும் தம்படிப்புக்கு இடையிலும் உரிமையுடன் போட்டுத் தருவார்கள் அண்ணா என்று.

. ..என்
குடும்பத்தினர் மறுபக்கத்தில் நானும் தந்தையும் இக்கரையில் இப்படிப் பலர் இருந்தார்கள் அக்காலத்தில்
.
வவுனியாவின் தண்ணீர் ஒரு வித்தியாசமானது.  சில பகுதியில் சில படிமங்களை கொண்டிருக்கும் கொதித்தாறிய தண்ணீரை வடிகட்டிக் குடிக்காவிட்டாள்.
 காலப் போக்கில் சிறு நீர் கழிக்கும் போது எரிச்சலும் அதனைத்தொடர்ந்து  சலக்கடுப்பும் சிலருக்கு  ஏற்படும் .( இதற்கு மருத்துவ விளக்கம் தம்பி மதிசுதா பாடம் போட்டு விளக்குவார் என நம்புகின்றேன்)


எனக்கும் வந்த புதுசு. தாகத்தைப் போக்க எதையும் ஜோசிக்காமல் அரசியல் வாதியின் தேர்தல் பிரச்சாரம் போல் அருந்திக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த போது ஆமிக்காரன் காதுக்குள் பேனையை வைத்து காதைப் பொத்தி அடித்தது போல் அடிவயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்பட நான் போய் நின்றது.

  மன்னார்  வழி காட்டும் குருமன்காட்டுச் சந்தியில் இருந்த தனியார் கிளினிக் .வைத்தியரும்  என்னை ஏற இறங்க பார்த்து பரிசோதித்து விட்டுச் சொன்னது தான்  எனக்கு அடி வயிற்றில் கல் இருப்பதாக  .கேனியா என்பார்கள் பேச்சு வழக்கில்.

எனக்கு விரைவாக சத்திர  சிகிச்சை செய்யனும் என்றார் .அப்போது உதவிக்கு இருந்து இரண்டு நாளும் பார்த்தது அவனின் தாய்.
 என்னையும் தன் மகன் போல் என்று பாசம் கொட்டிய குசுமாவதி அம்மாவை .

இந்தப்
பதிவு எழுதும் ஏகாந்த நேரத்திலும் என்னிப் பார்க்கின்றேன் அதே பாசத்துடன் .

தனிமரம் வெளிநாட்டுவாசி ஆனதன் பின்பு மாறிவிட்டான் .என்று நீங்கள் கூறும் குற்றச்சாட்டு சந்தேகத்தின் பிடியில் பூஸாவில் வாடும் என் உறவுகள் போன்றது

.உண்மையில் நடந்த
எல்லாம் நீங்கள் அறியவில்லை என் பக்கம் உள்ள நியாயத்தை என்பது மட்டும்
என்னாள் உறுதியாக எந்த நியாயத்தைக் கண்டரியும் ஆனைக்குழு முன் சாட்சியம் கூறுவேன்

.அன்று உங்களிடம் கற்ற  சகோதர மொழியில்  இன்றும் மறக்கவில்லை  காலமாற்றத்தில்.

 எந்த புயலிலும் தனிமரம் கானாமல் போன செம்பனி விவகாரமல்ல என்றாவது தீர்ப்பு வரும் என்று என்னும் ஒரு கிரிசாந்தியின் தம்பியின்  ஆவி போல் என்னையும் நம்புவீர்கள்.

காலமாற்றம் மீண்டும் நடந்தவையை  ஞாபகப் படுத்து கின்றது.

தொடரும்-

07 July 2011

புதிதான வாழ்விற்கு வழி சொல்லனும்!!

இசையும் ,கவிதையும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பது பல  நல்ல பாடல்களைக் கேட்கும் போது ஊர்ஜிதமாகும் உண்மை!

பலபாடல்கள் காற்றலையில் சங்கமித்தாலும்  நேயர் மனதில் தங்கி  இருப்பவை சிலதே!

அதிகமான பாடல்கள் நான் கேட்டது .இலங்கை ஒலிபரப்பின் பண்பலையில்தான் .அதனால் தான் என் பாடல்கள் ரசனையும் மாறுபடுகிறது.
 சில நல்ல பாடல்கள் பல நிகழ்ச்சிகளில் நேயர்கள் விரும்பிக் கேட்பதில்லையா? இல்லை ஒலிபரப்பும்  விதிமுறை என்ன என்று நான் அறியேன். என்றாலும் பல நல்ல பாடல்கள் அதிகம் காற்றலையில் கலக்கவில்லை என்ற ஆதங்கம் என்றும் உண்டு.

1997 இல் வெளியான பின் வரும் பாடல் ஒர் இனிய இசையும், பெண்ணின் எதிர்பார்ப்புக்களை ஒரு சேரச் சொல்லும்.

இக்காலத்தில் தேவா கானாவில் சந்தையை ஆக்கிரமித்து இருந்த போது !ஒரு புதியவர் ஶ்ரீனி என்பவர்   இசையில்  ஹரினி பாடியது
.அக்காலத்தில் இவர் திருமதி திப்பு ஆகவில்லை.

 அதனால் தான் பாடலின் உள்ளூனர்வை தானும் உள்வாங்கி தன் குரல் மூலம் இப்படி உருகிப் பாடினார் என்பது என் சிந்தனை.

தமிழ் சினிமாவில் பாடல்கள் புனையும் கவிஞர்கள் அதிகம் ஆண்கள் என்பதால் பெண்களுக்கான காட்சியமைப்பில் பாடல் வரும் போது அதிகமாக மினக்கெடாமலும் ,காவர்ச்சியை முன்னிருத்தும் இயக்குனர்களால் ,நல்ல கவித்துவமான பெண்கள் சிந்தனையை எதிர்பார்ப்புக்களை பாடல் ஆக்குவது மிக அருமை.

 அப்படியான சூழ்நிலையில் இருந்து இப்பாடல் முற்றிலும் வேறு படுகிறது.

ஒரு பெண் காதல் வசப்பட்டு அதை தன் வீட்டாருக்கு எப்படி ஆற்றுப்படுத்துவது என்று எண்ணும் வகையில் இப்பாடல் கவிதையாக்கப் பட்டிருக்கும்.

பின்னிரவில் தனிமையில் இப்பாடலை மீண்டும்மீண்டும் சிலதடவை கேளுங்கள் .!ஒரு மயில் இறகு வருடிவிடும்

.பாடலின் பின்னே இசையில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் மெல்லிய இசை (base drams) மீட்டிச் செல்ல, ஓகன் ஊடே ஒக்டோபாட்,அருன்மொழியிடம் கடன் வாங்கிய புல்லாங்குழல் இதில் ஒகனிலே வாசிக்கப்படுகிறது என்பது என் சிற்றறிவு.

 சில இசைக்கருவிகளே கையாளப்பட்டிருக்கும் விதம் என்னை கவர்கிறது. பின்னர் ஶ்ரீனியின் இசையை இதுவரை நான் கேட்கவில்லை பெயர் மாற்றினாரோ தெரியாது
.
இப்பாடலை முதன்  முதலில் வர்த்தக சேவையில் பகுதி நேர அறிவிப்பாளினி மதுராந்ததி சின்னத்தம்பி என்ற வானொலிக் குயில் தான் தன் விருப்பம் என்று இரவின் மடியில் நிகழ்ச்சியில் அறிமுகப் படுத்தியவர்
.
பின்னர் பல இஸ்லாமிய அறிவிப்பாளர்களும் தங்கள் விருப்பங்களில் சேர்த்துக் கொண்டார்கள்.அவர்கள் பலர் அறிவிப்பைத் தாண்டி பல கவிஞர்கள் என்பதால் போலும்!

 அதிலும் சனிகாலையில் 8.30 இற்கு வரும் என் விருப்பத்தில் குறிஞ்சி பூத்தாப் போல் வரும் A.L.ஜாபீர்(  இவர் யாழ் சேவையில் சுரேஸ் ஆனந்த்  என்ற பெயரில் இருந்தார் இது கொசுறு தகவல்) தொடர்ந்து எடுத்துவருவார்

.அன்நேரங்களில் இப்பாடல் மீளவும் ஒலிக்காத என என்னியகாலம் அதிகம். ஒலிநாடா வேண்டும் அளவுக்கு  பொருளாதாரம் முன்னோறவில்லை !


இப்படியான சிறப்பான கவிதையை வடித்தவர் யார் என்று தெரிய வில்லை. நீண்டகால தேடலின் பின்      எதிர்பாராத விதமாக பாரிஸ் வந்த புதுதில் இந்த ஒலிநாடா.  நீண்டகால நண்பனை கண்டால்  இறுக அணைத்து சந்தோசப் படுவது போல் என் கைகளுக்கு கிட்டியது.

இன்று என் பின்னிரவு பயணங்களில்  ஜொன்சியைத் தொடர்ந்து இப்பாடல் 7  வருடங்காலாக தாலாட்டுகிறது. ஒரு தோழியின் கவிதை சொல்லும்"
 எனக்கு மட்டும் புரிகின்றமாதிரி
கிழிஞ்சலால் ஒட்டிய உன்முகம்
 உனக்காக மாற்றிய உணவுகள்"
  என்று சொல்லும் வார்த்தைகளில் இப்பாடலின் பிரதிபலிப்பும் ஒத்துப் போகின்றது.

இத்தனை சிறப்பான தமிழ்சினிமா படத்தின் பெயர் எனக்கே நீ ஆனாலும் பட்டலாந்த வதை முகாம் தீர்ப்புப் போல் இப்படமும் வரவேயில்லை. பாடலைக் கேட்போமா ஒலியாக மட்டும்  கேளுங்கள் காட்சியை மறந்து நீண்டகாலமாக இப்பதிவை காத்திருக்கவைத்தேன் இதை வலை ஏற்றும் தொழில்நுட்பம் தெரியாமல் இப்பாடல் தேடலில் உதவிய அத்ம நண்பன் டெனில் ஹரிஹரனுக்கு

தனிமரத்தின் தாழ்மையான  நன்றிகள்

05 July 2011

கலைப்பயணத்திற்கு! கைகொடுப்போம்

அன்பு நெஞ்சங்களே !
இந்த தனிமரம் வலையில் இது ஒரு பிரச்சாரம். அட நீயுமா?
 கட்சி தொடங்கிவிட்டாய் ?

கோடி கோடியாய் தேர்தலுக்கு செலவழித்த கருணாநிதியின் பிரச்சாரத்தையும், நவீன துட்டைகை மன்னன் வெற்றி நமதே என்று நாட்டை சுடுகாடாக்கிய பிரச்சாரத்தையும் ,தன் எதிர்கால பதவிக்காக பாலியல் குற்றச்சாட்டில் பத்திரிகை முகப்பை    தாங்கிவரும் பிரச்சாரங்களையும் பார்த்த பின்புமா?

 இந்த ஆசை என்று  நீங்கள் கேட்பது புரிகிறது?

 ஒரு பதிவை ஒழுங்காக எழுத்துப் பிழையில்லாமல் போடத்தவித்துக் கொண்டிருந்தாலும்.
 உங்களுடன் உரிமையுடன் சில நிமிடங்கள்!

கோடைகால வெய்யிலில் நீங்கள் வெளியிடங்கள் போவீர்கள். உறவினர்கள் வந்து செல்லத் தொடங்கும் இந்த பாடசாலை விடுமுறை நேரத்தில்.

  பாரிஸ் இயற்கையை ரசிக்க வரும் உறவுகளுக்கு சின்னத்திரை நாடகங்களைப் போட்டு கொலை வெறியை தூண்டாமல்.

 நம் இளைய சமுதாயத்திற்கும் நம் உறவுகளுக்கும் இனிய நாட்களாக அமையும் வண்ணம் .பாரிஸ் மாநகரில் ஒரு காவியமாக திரையிடப்படும் நம்மவர் படைப்பு தீராநதி .

இதை உங்களுக்கு மிகுந்த தடைகளைக் கடந்து  படலைக்குப் படலை புகழ் மன்மதன் வெளியீடு செய்கின்றார் .
உறவுகளுக்கு கைகொடுப்போம் .
நம் சினிமா தாகத்திற்கு தீராநதி ஒரு மடை திறந்து விடட்டும் .

வரும் சனி/ஞாயிறு(9/7,10/7/2011)  இரு தினங்கள் நம் உறவுகள் கண்டுகளிக்க 4 மணிக்கும், 6மணிக்கும் என இருகாட்சிகள் என இருதினங்களும் திரையிடப்படுகிறது .

மங்காத்தா, வேலாயுதம் ரசிகர்களே அவர்களுக்கு மட்டும் மாலைபோட்டு சூடம் ஏற்றும் உங்களிடம்.

 தனிமரத்தின் தாழ்மையான அவசியமான வேண்டுகோள் .
உறவுகள் படைசூழ வந்து தீராநதியில் கொண்டாடுங்கள்.
 உங்களின் தூயரங்களை ,இன்னொரு முகத்தை திரையில் காணுங்கள் .போவோமா லாக்கூனோ கத்சுமன் சினிமா திரை அரங்கிற்கு.

 இதோபடத்தின் சில முன் காட்சிகள் .


நன்றி நண்பன்  பாஸ்கிக்கு(மதன்) வழிப்போக்கனுக்கும் மதிப்புக்கொடுத்தற்கு .உன் பயணம்வெற்றி  பெற எட்ட இருந்து வாழ்த்தும் ஒரு ரசிகன் . அவரின் படைப்பை முன்னோட்டம் காட்டும் சில காட்சிகள் கீழே.

04 July 2011

பார்வைகள் ! !

மெளனத்தின் புன்னகையா !இல்லை
மெளனத்தின் யுத்தங்களா?
உன் கயல்விழிகள் சொல்வது
என்னைக் கொல்வது இனியும்
அந்தப் பார்வைகள் வேண்டாம்!

இவன் யாசிப்பது உன் இதயத்தை
மெளனங்கள் தங்கம் தான் அதையும்
உரசித்தான் புனிதம் கானலாம்!

உன் மெளமும் புனிதமாக
ஒரு சொல்லாவது பொய் சொல்.
இவன் என் காதலன் என உயிர் வாழ்வேன் காலம் எல்லாம் உனக்காக!

கவிதைகள் கூட வற்றிவிட்டது உன் வரவின்மையால்
மெனங்கள் இசையால் கரையும் என்று
என்னிய எண்ணங்கள் சிதறப்பட்டுவிட்டது!
உன் இதயம் என்னும் பாறை இவனுக்காக
இளகவும் உருகவும் என் கவிதையும் காதலும் தெரியாத வானவில்லா?

நீ வந்து ஏற்றுவாய் என் காதல் அகழ்விளக்கு
பூபாளம் பாடுவேன் ஜீவ நதி உன்னை!
புன்னகை

03 July 2011

காதலும் கடவுளைப் போல!!

நாட்டில் அதிக விலைவாசி ஏற்றம் !அதனால் அதிகமான வருமான தேவைகள் என்று இன்று ஒவ்வொரு தனிமனிதர்களையும் துரத்தியடிக்கும் நிலையில். ஆற அமர்ந்து யாருடனும் அன்பு பாராட்டுவது அருகிவரும் நிலையில்

.அதிலும் புலம் பெயர்ந்த யாவர்க்கும் இருக்கும் தன் இருப்பு மீதான தேடல்கள் முடியாத ஒரு யுத்தம். இதனால் இழக்கப் படும் சந்தோஸங்கள் அதிகம். ஒரு பாடலை ரசித்து நண்பர்களிடம் சிலாகித்துப் பேச இப்போதெல்லாம் அதிக சாத்தியம் இல்லை.

 எனக்கு ஓய்வான பொழுதில் அவர்கள் ஓடும் நிலை. அவர்கள் ஓய்வாய் இருக்கும்போது எனக்கு ஓடும் நிலை.

 அதையும் மீறி அவர்களுடன் பொருளாதார, இல்லற விடயங்களை பேசுவதால் .நம் மற்றைய விடயங்கள் கதைப்பதற்கு இடையில், கடமையும் பிற சுமைகளினால் தொடர்பும் துண்டிக்கப் படுகின்றது.

 இதில் யாரை நோவது புதிய தலைமுறையினர் தினருவதை மூத்த தலைமுறையினர் பார்த்துக் கண்ணீர் விடும் நிலையில்.

 எனக்குப் பிடித்த இந்தப் பாடலை மிகவும் இக்கட்டான நிலையில் இருந்து வலை ஏற்றுகின்றேன்

.இந்தப் படம் வந்த ஆண்டு 2005 தீபாவளி வெளியீடாக வந்தது .அக்காலத்தில் எனக்குவதிவிட அனுமதி அற்ற நிலையில் இருந்தேன்.

பல படங்கள் வந்தாலும் சில படங்கள் வெற்றி பெற. மற்றைய படங்கள் ஊத்திக் கொள்வது யாருடைய தவறு ?என எனக்கு தெரியாது.
 இப்படம் ஒரு அழகிய சினிமா விடயத்தை சினிமாவில் பேசுகின்ற படம்.
 நந்தா+தியா ஜோடியாக நடித்த படம் கோடம்பாக்கம் பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது?.

சிற்பியின் இசையில் இதில் மாறு பட்ட இசை .வழமையாக அவர் தாங்கிவரும் அரபுலகின் இசையை தமிழில் வெற்றி பெறும் வித்தை தெரிந்தவர்.

 சுந்தர் -C உடன்அதிகமான படம் செய்திருக்கிறார்.

பாடல் பாடியவர் ஹரிஸ் ராகவேந்திரா இனிய குரல் என்றாலும். இல்லற வாழ்வில் ஏற்பட்ட விரிசலில் அதிகம் குடும்ப நலநீதிமன்றத்தில் அலைந்தார் .இடையிடையே நல்ல பாடல்கள் பாடுகிறார்.
 இன்னும் பிரபல்யமாக முட்டி மோதும் சிறப்பானபாடகர் .
எனக்கு அதிகம் பிடிக்கும் இவர் குரலும் விகடன் பட நடிப்பும் ..


பாடகி ஹரினியின் குரல். காதலிகுழைந்து பேசுவது போல் மயக்கும் குரல். திருமதி திப்பு கணவர் குரலை விட இவர்அதிகம் என்னைப் பல பாடல்களில் கவர்கிறார்.

இவற்றை எல்லாம் மீறி இப்பாடல் காட்சியில் நான் பல நிலையில் மீளப் பிறக்கின்றேன். உணர்வால் எப்போதுமே கிராமத்து வாழ்வும் சொளகரியமும் பட்டணத்து வாழ்வில் பந்தி வைத்தாலும் வராது.

ராமராஜன் படத்தில் ஒரு வரிவரும் "எங்கஊரு காதல் பற்றி என்னை நினைக்கிற ...
....,..
மனச மட்டுமே முதலில் பார்ப் போம் மற்ற சேதி அதுக்கு மேலதான் "

அதுபோல் இந்த கிராமத்துக் காதல் என்பது .இப்பாடல் காட்சியில் வருவது போல் பார்த்துக் கொள்வதும் றல்லி சைக்கிலில் பின் தொடர்வதும் .ஏதாவது சந்தியில் தள்ளி நின்று ஏங்குவதும்.
தவிப்பதும் ,

தோழிகளின் கிண்டல்களை. தாங்கி சில ஆசாமிகள் குனிந்து போவதையும் பல தடவை பார்த்திருக்கின்றேன் .
இவற்றை மறந்து நான் காட்சியில் ஒன்றிப் போவது.

 ஒரு காலத்தில் இயற்கையாக மக்கள் ஆராதித்து வந்த கிராமத்து வயல்களில் நாற்று நடுவதுடன் தொடங்கி கிராமத்து குளிர்ச்சிமாரியின் வரவை கட்டியம் கூறும்போது .

மழை தொடங்கி கோடை வரும் வரை விறகுகள் .பரனில்அல்லது கொட்டகைகளில் தேக்கி வைப்பதும் .தென்னமட்டை ,தேங்காய்மட்டை,பண்ணாடை ஊமல் கொட்டை பூவரசங்கட்டை எனப்பலது முன் ஆயித்தம் செய்வதும்.

 தென்னம் தோப்பில் தேங்காய் பறித்து விற்பனைக்கு அனுப்புவதும் ஆங்காங்கே புதிய தென்னம்பிள்ளையை நடுவதும் என பல கிராமத்து இயல்புகள் வந்து என்னை தீண்டுகிறது .

நாற்று வளர்ந்து வயல்களில் பச்சை சேலை உடுத்தி தாலாட்டும் அழகு கண்ணுக்குள் இன்னும்.

 அதிகாலை பனிப் பொழிதில் வாய்க்காலில் வாத்து ஓட்டிய காலங்கள். !

மனதிற்குப் பிடித்த மாரிகாலத்தில் .வான்கதவு திறந்து மழை நீர் மண்ணாக ஓடி வரும் அந்த 4 ம் வாய்க்கால்களில் நண்பர்களுடன் குளித்த காலங்கள் !

ஒமந்தையில் இருந்து கேரைதீவு- சங்கிப் பிட்டி ஊடாக யாழ் கொண்டு போன அந்த நீலநிற மண்னெண்னை எத்தனை கலன்களில் சைக்கிலில் கட்டியிருப்பம்.!

சூடுமிதிச்சு வண்டிலில் ஏற்றிய வைக்கோலில் படுத்திருந்து போன காலங்கள்எத்தனை....!

 வீடுகளில் முன்னர்லவ் பேர்ட்ஸ் பறவைகளை கூண்டுக்குள் அடைத்து வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். அதற்கு வைக்கும் சிறிய தானியம்.

நாகரிகம் வளராத என் கிராமத்தில் மாமரத்தடியிலும் தென்னை மரங்களுக்கிடையிலும் எங்கள் வீடு வந்து முடிவெட்டிச் செல்லும் அந்த முடிதிருத்துனர்.

 அவரிடம் இருந்த சொத்தான அந்த கத்தரிக் கோலும்,
 பிடரி மண்டையில் கிச்சு கிசு மூட்டும் கட்டர் மிசின்.

 இப்போது நாகரிகமாக பலர் தலையில் மொட்டை போட்டு விட்டாலும் அவரின் ஆடாத அசையாத எனத்தலையை பிடித்துவிட்ட. அந்த இனிமையான காலங்கள் எத்தனை.

 பொருளாதார முன்னோற்றம் கான. நான் அறிய எங்கள் கிராமத்தில் இருந்து மலேசியா போனவர் அவர்.
 இப்படி என் பல ஞாபகங்களை தட்டி எழுப்புகின்றன.

 இவை ஒரு புறம் என்றாள்!
நாகரிகவளர்ச்சியில் எந்த உடைஅணிந்தாலும் சாரத்திற்கு ஈடாகுமா ?
அதை கட்டிக் கொண்டு எத்தனை தூரங்கள் சைக்கிளில் சுற்றி வந்து இருபேன்!
.எத்தனை தென்னை மரங்களில் ஏறி இளனீர் புடுங்கி குடித்திருப்பேன்.!

கொடிகட்டும் கயிறுகள் எத்தனை விதம் !அது ஒரு இனிமையான இளமைக்காலங்கள். போனவை அதிகம் யுத்தம் எங்களை இயற்கையான கிராமத்தில் இருந்து பிரித்தது கிளிஞ்சல் கண்ட பாட்டியின் சேலையைப் போல் !

பலதை மீண்டும் போய் ஒரு கட்டுப் பாடும் இல்லாத அந்தகிராமத்து வயல்களில் படுத்துப் புரல முடியுமா? என்று ஏங்கும் தருணங்கள் அதிகம்.

பாடலில் கற்பனை என்பதை மிஞ்சி நிற்கும் சொல்லாமல் செய்யும் காதல் சுகமானது வரிகளாகட்டும் காதலும் கடவுலைப்போல அதை உணரனும் மெல்ல. இப்படி கவிஞரின் வார்த்தைகள் இன்னும் தெவிட்டாத பாடல்.
 .இக்கவிக்கு சொந்தக்காரர் விஜய் சாகர் இவரின் இன்னொரு பாடல் சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் தீனா படப்பாடல்.
 இப்போது இவர் ஒரு படத்தை இயக்கி முடியும் தருவாயில் இருக்கின்றது.
இப்பாடலை நயமாக இயக்கியவர் ஜெகன்ஜி.
 காட்சியை தத்துரூபமாக ஒலி/ஒளியாக்கியவர்  செந்தில்குமார்.

இதோ தனிமரத்தின் வலையில் உங்களை நாடி ஒலி/ஒளியாக.

02 July 2011

நீ போகும் பாதை என் பூங்காவனம்

 நம்மவர் பாடகிகள் பலர் சந்தன மேடைக் கலைஞர்கள் தாண்டி. பலரை பதிவு செய்யனும் என்ற ஆவல் கம்பன் சொல்வது போல ஆவலில்  கடல்நுரையை பருகும்  செயல் !

.புலம்பெயர் தேடலையும் கடந்து எனக்குப் பிடித்தவர்கள் தொடரை முடிந்தவரை கூடவரும் பயணம் போல் எப்போது முடியும்!?

சில இசைக்குயில்கள் பல சோதனைகளைக் கடந்து பாடகியாகிறார்கள். அவர்களில் நம் தேசத்தில் மும்மொழியில் பாடுபவர்களை விரல்விட்டு என்னலாம்.அந்தவகையில் முதலில் என் பார்வை நிரோசா வீராஜினி!அதையும் தாண்டி ஹிந்திப் பாடல்களையும் பாடக் கூடியவர் என்பது சிறப்பான விடயம்.
(  என்னைத் தெரியுமா)
சந்திரிக்கா  சமாதான தேவதை என்ற மயக்கம் போய் இனவாதப் போரை நடத்தி யாழ்ப்பாணம் வெற்றி கொள்ளப்பட்ட பின் .1996  ஆண்டுஎனக்கு (சகோதர மொழி நண்பருக்கு)  அறிமுகமான பாடல் துள்ளிச் சிறகடிக்கும் வென்புறாவே உங்கள் வரவைக் கானவில்லை வென்புறாவே(இன்றுவரையும் நானும் தேடுகிறேன்).

இந்தப்பாடல் பலதேர்தல் மேடைகளிலும், ரூபவாஹினியில் செய்திகளுக்கு முன் 5 நிமிடங்கள்  இப்பாடலுக்கு ஒதுக்கியிருந்தார்கள்.

 அன்நாட்களில் ரூபவாஹினியின் தமிழ் பிரிவுத் தலைவர் வசந்த ராஜா( இவர் பற்றிய பல குற்றச்சாட்டுக்களை பின் செவிவழி கேட்டிருக்கிறேன்).
 யுத்த மேகம் கலைந்து ரனில் பல விளம்பரங்களில் பட்டலந்த வதைமுகாமின் சூத்திரதாரி என்று மூன்று மொழியிலும் கொட்டை எழுத்தில் தீட்டப்பட்டிருந்தது.

அந்தப்பாடல் மிகநேர்த்தியாக இசையமைக்கப்பட்டிருந்தது
அதனைப் பாடியவர் இந்தக் குயில்தான் .

(இப்பாடல் ஒரு மீள்கலவை)

.இதனை பின்னாளில் எனக்கு சொன்னவர் ஒரு சகோதரமொழி நண்பர்.

மூத்த சகோதரமொழி பாடகிகளில் லதா வல்பொல இருந்தாலும் இப்பாடலுக்கு ஒரு புதுமையான குரல் தேடும்போது ரூபவாஹினி இசைக்கலைஞர் பிரெமசிரி ஹேமதாச விடம்  பாடல் ஆசிரியர்   M.H.M சாம்ஸ் அவர்கள்  வழிமொழிந்தது நிரோசாவை !

பாடல் பதிவு செய்து வெளியானதன் பின்பு அதுவரை  இசை மேடைகளில் அதிகம் பிரபல்யமாகதவர்(1989இன் காலப்பகுதியில் சகோதர மொழியில் பாடிக்கொண்டிருந்தார்) பட்டி தொட்டி எங்கும் பிரபல்யமானார்.

1997  அதுவரை வெறும் ஊடகங்கள் முலம் வந்த இவரின் குரல் எனக்கு அறிமுகமானது கொழும்பில் ஒரு மேடை நிகழ்ச்சியை நேரில் பார்த்தது ரசித்த பின்தான்.

 சகோதரமொழியில் பிரபல்யமான பலருடன் மேடையிலும் குறுவட்டிலும் சின்னத்திரை மட்டும்மல்லாது சிங்கள் திரையுலகிலும் பின்னனி பாடிக் கொண்டிருக்கிறார்.

இவர் முதலில் தமிழ்சினிமாப் பாடல்களை சகோதர மொழி மேடைகளில் வெளிவந்த காலகட்டத்தில்.
 தன் இஸ்லாமிய /தமிழ் மொழி ரசிகர்களுக்காகவும், மலையகத்தில் இசை நிகழ்ச்சியை செய்யும் போது அப்பிரதேச இசை ரசிகர்களை மகிழ்விக்கவும் பாட வெளிக்கிட்டார். அதன் பின்பு பல ரசிகர்கள் இவரின் குரலில் மயக்கம் கொண்டு அதிகமான பாடல்களை ரசிக்க வெளிக்கிட்டனர் .

எனக்கு இவரின் குரலில் பிடித்தது .
இசைஞானி  மெல்லிசை மன்னர் கூட்டு இசையில் வெளிந்த மெல்லத்திறந்த கதவு படத்தில் ஊருசனம் தூங்கிருச்சு என்று ஜானகி அம்மா பாடலை இவர் மேடைகளில்  இனிமையாக மொழியை சிதைக்காமல் பாடுவார் இப்பாடலை இவர் சகோதர மொழியில் ஒலிநாடாவாக(tape) வெளியிட்டார்.
இப்பாடல் தொகுப்பில் சகோதரமொழியில் சின்னத்தம்பி பாடல்கள் முழுவதும் அத்துடன் உதயகீதம் படத்தில் வரும் பாடுநிலாவே தேன்கவிதை பாடலும்  சேர்த்து அழகிய முகப்படம் போட்ட (நிரோசா) குறுவட்டாக வெளிவந்து .


இருந்ததை நான் பலமாதங்களாக .பத்திரமாக வைத்திருந்ததை சகோதரமொழி  நண்பன் பாடல்களை கேட்டுவிட்டுத்தருவதாக எடுத்துக்கொண்டு
அவன் வீட்டில் அதிகமான ஒலியில் ஒலிக்கவிடுவான்.
 அவனின் தங்கை அங்கிருந்து பாட நான் அடுத்த அறையில் இருந்து எதிர்பாட்டு பாட இந்தக் குளத்தில் கல்லெறிந்தாள் ஹான்சிஹாவை விட அழகானவள் நல்ல தோழியாக இருந்தால்.

நிரோசா தமிழில் சினிமாவில் பாடியது  இசைப்பயணம்
படத்தில் உன்னிக்கிருஸ்னனுடன் உதயா இசையில் பிரபல்யமான பாடல். இதனை  இனைக்க முடியவில்லை (பாடல் கேட்க தென்றலக்கு தபால் அட்டை அனுப்புங்கள்.)


 பின் புதிய பாடல் ஏதும் பாடியது நான் அறியேன்  அவரின்  வாழ்வில் ஒரு கரும்புள்ளியாக வெளிநாட்டுக்கு இசைக்கச் சேரிக்குப் போனதில் அவருடன்  ஒரு பாடகர் தவறாக நடக்க முயன்றதாக ஒரு பேட்டியில் படித்தேன்.

 சில  சகோதரமொழிப் பாடல் இவரின் குரலில் கேட்கும் போது மறந்து போன நண்பர்கள்  கூடவருவது போன்ற உணர்வு.
இன்னும் பாடனும் பல பாடல்கள் இந்தக் கானம் பாடும் கவிதை.நன்றி நிருபன்  உங்கள்  மூலம்  நல்ல  ஒரு  பதிவை  மீள  பதிவு செய்கின்ர  உணர்வு  நன்றி  பிழையை திருத்திய  நிருபனுக்கு .