23 September 2013

பிரெஞ்சுக்காதலியை பிரிகின்றேன்!


ஆப்பில் பெண்ணே
அகதியின் காதலியே
பாரிசில் பார்த்தேன்
பார்த்ததும் பிடித்தது பித்து
பிரியமாக உருகினேன்
உருவிப்போனான் உன்னையும் ஒரு
கறுவல் கலங்காத மரமே
காப்புறுதிக்கார கறுப்பி
கையில் தந்தால் உன்னை!
கறுப்பான ஐபோன் !


கைபிடித்தேன் ஓடும் ரயில் தொடர்
கதை என்று நொந்துபோன இதயம்,
காதலில் முகம் தொலைந்தவன்,
கடமையில் ,உருகும் பிரெஞ்சுக்காதலி
கண்ணில் வலியை விழியில் வலி தந்தவனே.
காத்திருந்த நேரத்தில்  என்னுயிரே என்னில் இருந்து விலகும் நொடி
கதை என்றும் ,கவிதை என்றும் எழுத்துப்பிழையாக
என்னையும் திருத்தாத உதவாத காதலியே!

உள்குத்தே உன்னால் தானடி!
உருகும் காதலியே உனக்கும் விடுதலை
உனக்காக நான் கொடுத்த சீதனம்
பல நூறு ஈரோ பாவியடி அப்பாவியடி நான்.!
உனக்கு செலவிட்டத்தில் உண்மையில்
உன் பாட்டி ஊரில் உனக்கும் ஒரு உறையில்
உன் பெயரில் ஒரு வசந்தமாளிகை
உண்மையில் கட்டி இருப்பேன்!
உனக்கு தெரியாது உன் முன்னே
உன்தேசம் பாரிசில் உண்மையில்!நான் அகதிபோல
உன் பின்னே ஒரு வழிப்போக்கன் நேசிப்பில்!!ம்ம்

பலரை உறவு என்று முகநூல் ஒரு பெயர்,
வலைப்பதிவு வேற நாமம் என்று நேசனுக்கும்
நேசம் கொண்டாடா வந்தாயே?


நேற்றும் பல சந்தோஸம் தந்தாய் வாழ்த்தி  நேசத்தில் தங்கை கலை, மகிஅண்ணா  என உள்ளங்கள் வருகை தந்த குடும்பங்கள் என என்னையும் என் தூக்கத்தையும் 
உன்னோடு கட்டிலில் போட்ட சண்டைகள் பல!


 சாப்பாட்டுக்கடையில் வேலையில் பல நிரூபனிடம் ,மணியிடம், துசியிடம்,
ஏதோ கிறுக்கன் என்று சிலர் என்ற போதும் 
எனக்கு கேட்ட பாடல் தரும் நேயர் நேரம்
என்னையும் தாலாட்டுது.


நேற்றும் வந்தாள் முன்னம் தெரிந்த ஒருத்தி நேசனிடம் நிறைய மாற்றம்! 
வெளியூர் வாழ்வில் நீங்க வந்த ராசி போலும்
நெளியவேண்டிய நிலையில்  நீண்டகாலத்தின் பின் பதின்ம வயதில் பார்த்தவள் இவள் என் பள்ளித்தோழி பகிர்ந்தேன் பாரியருடன்!:)))!




மரத்தையும் மறந்திடாத அங்கும் வருவேன் கீதமாக  இப்படி முடிப்பாய் என்று நானும் நினைக்கவில்லை! நான் வாசிக்கும் போது!
உனக்கு  எப்போதும் அவரசரம் அதிகம் என் அப்பா இப்போதும் சொல்வார் நேசன் !நீ அவருக்கும் அடங்காத வழிப்போக்கன்
அவரும் இப்போது உன் வழியில்!ம்ம்

எனக்கு ஒரு உண்மை தெரியணும் ஐயப்பசாமி ஈஈஈஈஈஈ!:))))
உருகும் காதலியாரு நண்பா ?
எனக்கும் தெரிந்தவளா ?
எங்க பதுளை ஊரில் முன்னம் நடந்தவளா?
உன்நண்பன் 
முகம் தொலைந்தவனையும் மறக்கவில்லை!
முன்னம் நீ எல்லோரையும் அரசியலில் அறிந்தவன்.,!
மறுபடியும் வருவாயா நாட்டுக்கு!
மெளமாக மூடிவிட்டேன் !

மணி அடிக்குது வேலைக்கு போகும் நேரம் தோழி !


விட்டு விடப்போறன்  ஐபோனை 
நல்லா ஜோசி நேசன் எத்தனை உறவு உனக்கு இப்ப !

என்னால் பதிவு எழுதவந்த நீ என்னைவிட அதிக உறவுகள் உனக்கு !


உண்மைதான்  இப்போது எல்லோரையும் தற்காலிகமாக பிரிகின்றேன் !மீண்டும் வருவேன் அது வலையில் இன்னொரு ரயில்ப்பயணம் போல  தோழி!


இன்னொரு  தொடர் தொடர்வேன் !இந்த பதுளையில்
இருந்து!


அது வரை சற்று என் அடுத்த தொழில் மாற்றம் அதுவும் கடந்து நிச்சயம் வருவேன் !!!அனுபவம் போல ஆசான் யார் தோழி!

 ஆடிப்பார்ப்போம் வாழ்க்கை ஒரு வட்டம்!
உனக்கு புரியும் நேசன் பிடித்தால் யாரோடும் சேர்ந்து இருப்பான் பிரிந்தால் உருகவும் மாட்டான் !பிரெஞ்சுக்காதலி என்றாலும்!
இன்னும் வெற்றிலை போட்டு வாழும் வழிப்போக்கன் இந்த ஐபோனும் பிரிந்து பார்ப்போம் எல்லாம் இன்னொரு வெற்றிக்கு!நன்றி தோழி!


நானும் விடைபெறுகின்றேன் நான் தனிமரம் அல்ல இப்போது தோப்பு மீண்டும் வருவேன்!
நட்புடன் தனிமரம்  நேசன் !

சும்மா ஒரு தோழி போல ஐபோன் தொடர்பு இடைநிறுத்துவிட்டேன் தனிப்பட்ட காரணங்களிணால் இன்றுடன்!24/9/13!

ம்ம் என் வலையுலக உறவுகளே!


மீண்டும் தனிமரம் துளிர்க்கும்  உங்கள் அன்பில் அதுவரை இந்தப்பாடலுடன் சிறு ஓய்வு!



22 September 2013

கவிதையும் காணமும்.!


உனக்கா உருகித்தான் ஊரைவிட்டு 
உன்நாட்டுக்கு உயிரைக்கொண்டு வந்தேன்
உருக்கமான காதலியே
உதறிவிட்டுப்போனாய்!


உதவக்கரை என்று உன்னைப்பிரிந்து
உயிர்வாழ இனியும் இல்லை
உண்மைக்காதல் உயிரைப்பிரிகின்றேன்
உந்தன் பாடலுடன் 
உனக்குப் புரியும் என்றால் ஒரு 
உதிர்ந்த பூவை என் 
உயிர்ப்பேழையில் வைத்துவிடு
உருகிப்போகும் என் காதல்!




///

ரயில் பயணங்களில் சினேகமாக வந்தாள்
ரகசியமாக தேன் சுவை தந்தாள் 
ரசிக்கும் மங்கையானாள்
ரதிதேவி  இவள் என்றேன்
ராசியில்லாத தென்றல் என்று யார்
ரகசியம் பேசுவது இவள் இதழ் 
ரசிக்கும் மாலைப்பொழுதில்
ரசிகன் இவன் பிரெஞ்சுக்காரன்!


ரகசியம் சொல்ல ஆசை ஆனால் விசா?
..,!!
// இந்த கவிதைக்கிறுக்கல் எல்லாம் இணைய 

வானொலியில் வந்தது email .info@tamilaruviradio.com
www.tamilaruviradio.com.


அதை என் வலையில் பாட்டோடு பதியும் ஒரு ஆவல் மட்டும்தானூஊஊஊஊஊஊஉங்கோ!ஹீ 

20 September 2013

அண்ணணுக்கு ஜே!!


வலையுலகில்  வசந்தமண்டபம்
வலையை வாசிக்காதவர் உண்டோ!
http://ilavenirkaalam.blogspot.fr/

வழக்கொழிந்து போகும்
வாழ்வு தொலையும் கிராமியக்கலைகள்.


வாழ்வு பெற வேண்டி மூச்சாக வாழ்த்துப்பா
வாசிக்கும் அண்ணன் மகேந்திரன் 
வடிவான அன்புள்ளம் கொண்டவர்

வாசகனகாக அறிமுகம் ஆனாலும்
வயதில் மூத்தவர் என்றாலும்!
வழு இல்லாத கவி படைப்பதில்
வரலாற்று ஆசான் போல
வரிக்குதிரைபோல
வண்ணத்தமிழிலில் வகைவகையானசூட்டும்
வடிவான பாக்களில் இவரின் கவிப்பண்பை
வலையில் வாசிப்பது 
வழக்கமான ஒன்று !என்றாலும்
வயதில் இன்று ஒன்றுகூடுகின்றது!



வசந்தமண்டபம் மகேந்திரன் அண்ணாச்சிக்கு
வாழ்க்கை அரபுலகத்திற்கும் !


வாழ்ந்த பூர்வீகத்திற்கும் என அடிக்கடி
வானில் பறப்பதால்  வலைக்கு 
வனவாசம் பல நாட்கள் என்றாலும்
வாட மாட்டேன் 
வாருங்கள் என்று வாசம்
 வீசும் பல கவிதைகள் இவர்
 வலையில் என்றும் வாழும்!
வாசகர்களுக்கு நிழல்தரும் மண்டபம்
வசந்தமண்டம் ! வாயார நெஞ்சில் 
வஞ்சகம் இல்லாமல் தம்பி நானும்

வாழ்த்துகின்றேன் மீண்டும் பிறந்தநாள் நல்
வாழ்த்துக்கள் மகி அண்ணாச்சி!
!

///
அன்புப்பாடல் வாழ்த்து இது!



19 September 2013

தொலைவில் இருந்து என் தங்கை கிராமத்து கருவாச்சிக்கு ஒரு வாழ்த்து.

தொலைந்தான் ஒருவன் என்று ஒரு தொடர்!
தொடர்ந்தேன் இணையத்தில் நானோ
தொழில்க்கல்வி  படிக்காதவன்.


தொலைவில் இருந்து வந்தாள்
தொடர்கதைபோல  நான் ஒரு
தொலைவில் இருக்கும் காகம்
தொட்டாள் வைரமுத்துவும்
தொட்ட பெயர் என் பெயர்
தொலைந்தாலும் உறவில் வருவேன்
தொலையாமல் தங்கையாக
தொலைதூரத்தில்
தொய்யுமோ தனிமரம்
தொடர்பு இருக்கா, அண்ணா!
தொடர்ந்து உறவில் நீங்கள்  எனக்கும் அண்ணா§
தொலைக்கவில்லை இவள் கிராமத்துக்கருவாச்சி
தொடர்ந்து இன்றும் வருகின்றாள் !எனக்கும் ஒரு
தொலைந்து போனமுற்பிறப்பின் உடன் பிறந்த
தொலைந்த அருமை தங்கை போல !


தொலைதூரம் பாரிஸ் ஊடாக
தொட்டாச் சினுங்கி இவள் பாசத்தில்
தொடர்பு இல்லாத  தூரத்தில் இன்று
தொடர் பணி அவள் தொடரட்டும் அதன்  வழியில்
தொடரட்டும் அவள் தொலைநோக்குடன்!
தொலைவில் இருந்து அன்புதங்கைக்கு
தொடுக்கின்றேன் ஒரு வாழ்த்து!


தொல்லியலில் நீ ஒரு காவியம்
தொலையாது நம் அன்பு
தொடர்ந்து வா கருவாச்சி! எங்களுக்கு
தொடந்து சொல்லு சந்தனமும் ,சாக்கடையும்
தொலையாது அன்பில் மட்டுமா!
தொடர் தோற்கும் திரட்டியில்
தொடர்ந்து வெற்றி காணாது! தொடர்வோம்
தொடர்ந்து நல்ல அன்பின் நேசிப்பில் என்றும்!
தொலை தூரத்தில் இருந்து
தொடர்மூலம் வந்த இவன்
தொலைந்தவன் தொடர் எழுதிய
தொலைதூர உன் அண்ணா!
 தொடர் எழுதும் இவன் தனிமரம்


தொடைப்பம்தேடாதே  அன்பிள் அடிக்க!ஹீஹீஈஈஈஈஈஈஈஈஈ!


///

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்§ கிராமத்துகருவாசி
கலைத்தங்கைக்கு என் தனிமரவலைக்குடும்பத்தார்களின்  அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.//கட்ந்த வருடம் வாழ்த்தியோர் இங்கே!http://www.thanimaram.org/2012/09/blog-post_19.html



///
தனிமரத்தின் அன்புப்பாடல் வாழ்த்து தங்கை கலைக்கு!

  

08 September 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-நன்றிகள்

வணக்கம் உறவுகளே நலமா?

 என்ன தனிமரம் மின்னல் வேகத்தில்




 தொடரினைத்தொடர்ந்து எழுகின்றானே ,?என்னாச்சு தனிமரத்துக்கு என்று சிலர் முகநூலில் கேட்டபோதும் ?முக்கிய தனிப்பட்ட பயணம் போக இருக்கு என்றுவிட்டு தொடர்ந்து வேகமாகி ஒரு கதையை எழுதிய ஆத்மதிருப்தி  ஒரு புறம் என்றால்!

தனிப்பட்ட இந்திய பயணத்தை இடைநிறுத்தவேண்டிய சூழல் என இரண்டும் சேர்ந்து தனிமரத்தை கொஞ்சம் இம்சையாக்கிவிட்டது உங்களை தொடர்ந்து தனிமரம் என்ன எழுதியிருக்கு என்பது போல:))))



! எது எப்படியோ இந்தத்தொடரில் எனக்கு முக்கிய ஊக்கம் தந்த வலையுறவுகளின் காத்திரமான பின்னூட்டம் தான் தொடரினை-33 அங்கம் எழுத உந்து சக்தி என்றால் மிகையில்லை!


பதிவுலகில் தொடருக்கு ஆதரவு என்பது மிகவும் குறைவு என்றாலும் ,தொடர்ந்து பின்னூட்டம் இட்ட திண்டுக்கல் தனபாலன் சார் ,மதிப்புக்கு உரிய யோகா ஐயா இருவருக்கும் மீண்டும் பலகோடி நன்றிகள் முதலில் இவர்கள் இருவரும் என் தளத்துக்கு தரும் ஆதரவுக்கு என்ன கைமாறு செய்வேன் ! 




இவர்களைத்  தொடர்ந்து மூத்த பதிவர்கள் பலரில் செங்கோவி ஐயா ,நாஞ்சில் மனோ,மகேந்திரன் அண்ணாச்சி ,மாத்தியோசி ரஜீவன்,ஆதிரா,இக்பால்செல்வன் போன்றோரின் காத்திரமான பின்னூட்டம் ஒரு தொடரின் போக்கில் சில விடயத்தை பரவலாக பேசும் நிலைகிடைத்தது மிகுந்து சந்தோஸம் 
http://www.wsws.org/tamil/articles/2000/Nov00/sri_n20.shtml!


இந்தத்தொடரினை எழுத்தத்தூண்டிய நண்பன் டெனில் .மற்றும் பாபு,மிரூனா,சேகர் போன்றோரின் நட்பு தனிமரம் என்னையும் கடல் கடந்து அரசியல் கொஞ்சம் தொடரில் கதைபேச பிடித்த பாடல்களை வலையேற்ற வடிகால் போல அமைந்தாலும்

அதில் நீச்சல் அடிக்க பின்னூட்டம் இட்டு ஊகிவித்த மற்ற பதிவாளர்களின் மாண்புக்கு எப்படி நன்றி சொல்லுவேன் 


நண்பர்கள் சங்கவி, வெற்றிவேல்,விமலன்.ஆத்மா,முரளிதரன்,சீனு,சக்கரைக்கட்டி ,ஸ்கூல்ப்பையன், நெற்கொழுதாசன்,இமா,காற்றில் என் கீதம், கரந்தை ஜெயக்குமார்,சீனி கவிதைகள்,ரெவெரி,கலை,அம்பாளடியாள்,நிரஞ்சன்தம்பி,இராஜேஸ்வரி,புலவர் இராமானுஜம் ஐயா, பிரசாத், தமிழ்வாசி பிரகாஸ்.என பலபதிவாளர்களின் ஊக்கமும் , அத்தோடு மற்றும் இன்னும் என்னதோழா,என்னைப்பார்த்து ஏண்டா அந்த கேள்வி கேடடாய்,,தமிழ்ப்பதிவர்களின் குழுமம்,நண்பர்கள்,தொடுங்க பிடியுங்க ,ப/சரஸ்வதி தேசியக்கல்லூரி குழுமம்,என் பிரெண்டைப்போல யாரு மச்சான். ஆகிய ,முகநூல் குழுமங்களின் உறுப்பினர்கள் எல்லோக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள் 


மற்றும் என் பாடல்தேர்வுகளைப்பகிர உதவிய யூத்டியூப் சமுகதளத்தின் சேவைக்கும் இன்னும் பலகோடி நன்றிகள்




.தொடரில் எழுத்துப்பிழை திருத்திய அன்பு மனைவிக்கும் ,என் தாய்க்கும் இந்த தனிமரம் பதிவாளரின் பாசமான நன்றிகள் இவர்களின் சேவையில்தான் உள்குத்து இல்லாமல் ஏதோ படிக்காத தனிமரமும் கதைபேசியது!:))))






 தொடர் எழுதுவது பதிவுலகில் ஹிட்சு வேலைக்கு இடைஞ்சல் என்றாலும் கிடைக்கும் ஆத்ம திருப்தியும் .சில வரலாறு பலர் அறியவும் ஒரு ஊடகமாக இருப்பது தொடர் என்பது என் கணிப்பு

இந்த தொடர் வரிசையில் இதுவரை சில தொடர்களை எழுதி என் இணைய நேரத்தை ஆத்ம திருப்தியில் உங்களுடன் செல்விட்டேன் என்ற சந்தோஸத்துடன் சிறிது காலம் தனிமரத்தின் வலைக்கும் ஓய்வினைக்கொடுக்கின்றேன் 



. இனி வரும் காலத்தில் தனிப்பதிவுகளுடன் உங்களை நாடிவருவேன் 

மீண்டும் மலையக வாசனையுடன் ஒரு தொடரினை கலாம் கூடிவரும் போது தனிமரம் தாங்கி வரும்!



அதுவரை என்னையும் ,என் பதிவுகளையும் ஊக்கிவித்த சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்! 




இணையத்தில் மீண்டும் சந்திக்கும் வரை நட்புடன் 
தனிமரம் நேசன்!

01 September 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-இறுதி!!!!!

ஆரம்பகாலம் தொட்டே மனிதர்களுக்கு வருங்கால நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம்மிக்க ஒரு செயல் .ஜோசியர்கள் ,ரேகை சாஸ்த்திரிகள் ,குறிசொல்லுவோர்,காண்டம் வாசிப்போர் என பலரை நாடுவது இது பலநாட்டில் குறைவில்லாமல் இருக்கின்றார்கள் !

 அவர்களிடம் சென்று எதிர்காலம் என்ற பனிமூட்டத்தை அகற்றிக்கொள்வோருக்கும் குறைவில்லை என்றாலும் இந்த சாஸ்த்திரத்தில் நம்பிக்கை இல்லை இது ஒரு பித்தலாட்டம் என்று சொல்வோரும், அரசியல் தேர்தலில் இந்த சாஸ்த்திரிகளின் நல்லநேரம் என்று குறிப்பு கொடுக்கும் நேரத்த தேர்தல் கட்டுப்பணம் கட்டும் அரசியல் வாதிகள் நிலை எல்லாம் ஒன்றும் இராணுவதணிக்கை போல இல்லைத்தானே தம்பி சேகர்!

என சில நேரங்களின் சில மனிதர்கள் போலத்தான் சில நட்புக்களும் சுவாரசியத்துக்கு குறைவில்லை .அப்படித்தான் பாபு ,மிரூனாவின் மெளனம் அவனை மரணத்தின் நிலைக்குச் சென்றநிலையில் தன்நிலை புரியாமல் செத்துவிடலாம் என்ற நிலையைச் சொன்னபோதுதான் அவனின் தாய் சேகருடன் மனமுடைந்து பேசியது !

என்னம்மா நீங்கள் ஒரு முறை மறு அழைப்பில் வா என்றால் வரமாட்டேனா ?? அதில்லைத்தம்பி நீங்கதான் பாபுக்கு புத்திமதி சொல்லணும் .உங்களை நம்பித்தானே கொழும்புக்கு அனுப்பியது. துரதிஸ்ரம் நீங்களும் நாட்டைவிட்டுப்போய்விட்டீங்க இந்தப்பிள்ளை கிறுக்குப்பிடித்து திரிகின்றான்.

 உங்களுக்கு ஞாபகம் இருக்குதானே ?நாம போய் அவர்களின் குறிப்புப் பார்த்தோமே ,அப்ப அந்த சாஸ்த்திரி சொன்னார்தானே .கிரகநிலையில் மாறுதல்வரும்போது ,இவர்கள் பிரியும் நிலைகூட வரும்.

 யார் விட்டுக்கொடுத்துபோகின்றார்களோ. அப்பத்தான் பிற்காலம் நல்லாயிருக்கும் என்றும் அந்த சிக்கல்வரும் காலத்தில் கடல்கடந்து போனால் நல்ல இருக்கும் .அந்நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்கணும் என்று சொல்லியதும் நினைவுக்கு வருகின்றது தம்பி .

முதலில் நானும் இந்த குறிப்பு ,சாஸ்த்திரம் எதிலும் அதிகம் நம்பிக்கை வைக்கவில்லை .வேலைக்குப் போன இடத்தில் விரும்பிய பொண்ணுகூட இப்படி .நம் மகனின் உயிருக்கு உலைவைப்பாளோ ?என்று பயமாக இருக்கு. ஏற்கனவே அவளுக்கு தாய் வேற இல்லை.

 நான் ஏதாவது வாய்க்கு வந்தமாதிரி பேசினால் அந்த பிள்ளை மனசு என்னபாடு படும் !நம்ம காலம் வேற இப்ப நாகரிக உலகம் யாரு பேச்சைக் கேட்கின்றாங்க எல்லாம் தனி உரிமை என்று தன் காதலுக்காக நீதிமன்றம் போகும் நிலையிlலும்! தாய். தந்தை. சகோதரம் பற்றி யார் சிந்திக்கின்றார்கள் ?!

நான் யாரையும் குறை சொல்லவில்லை !
சரி அம்மா நான் எல்லாம் பார்க்கின்றேன் என்ற நிலையில் தான் நினைப்பு முன்னர் பதவியில் இருக்கும் போது தமிழருக்கு இந்தநாட்டில் பிரச்சனை இருக்கு என்று வராத சிந்தனை இப்போதுதிடீர் என்று பதவி போன பின் வருவது போல பாபுவுக்கு மகிழ்ச்சி கொடுக்க காத்து இருந்தேன் !

பாபுவும் கட்டுநாயக்கா இறங்கியபின் அதிசயத்து நின்றான் !சுமாரநடிப்பை கொடுத்த நடிகர் தேசியவிருது பெற்றது போல ! உன்னைத்தவிர என் பயணம் யாருக்கும் தெரியாதே.

 ம்ம் தெரியும் பாபு ஹா ஹா மச்சான் நானும் திடீர் மகிழ்ச்சி கொடுக்கத்தான் இப்படிச் செய்தேன் .

எல்லாரையும் வெளியில் ஒன்றாக நீ பார்க்கும்ப்போது புரியும் வானத்தைப்போல குடும்பம் என்று.

!இப்ப புரியுதா செத்துடலாம் என்ற போது எத்தனை உறவு உன்னை நினைச்சு துடிச்சு இருக்கும் என்னுயிரே என்னுள் இருந்து விலகும் நொடி அது எல்லாம் உனக்கு அப்ப சொன்னால் புரியாது இப்ப புரியுதா??

நட்புகளும் வாசல் வரை தான் வரலாம் .தாய் ,தந்தை அதன் பின் கட்டில் வரை வருவது உண்மையில் நேசித்த காதலிதான் .

நான் அதிகம் மிரூனாவை கஸ்ரப்படுத்திசிட்டேன் இனி எல்லாம் சுகமே என்று அவளை சந்தோஸப்படுத்து இன்னும் கவ்வாத்து கத்தி என்னிடம் இருக்கு.

 முகநூலில் அடிகக்கடி வா ஊர் போன பின் முகநூல் மறக்கும் நண்பர்கள் போல நீயும் என்னையும் மறந்திடாத .

எங்க மிரூனாவிட்ம் போனைக்கொடு பேசுவம் அண்ணா நலமா, சாப்பிட்டாச்சா ,
இப்பத்தான் ஒரு பிரெஞ்சு வைன் சாப்பிட தாயார்  ஹீ நீங்க  திருந்த மாட்டீங்க கலாய்ப்பில் என்ன கஸ்ரம் வந்தாலும் சிரிப்பீங்க!

ம்ம் ! 



ஆமா நீ சந்தோஸமா ?நிறைவான சந்தோஸம் தானே ?
ஆமா அண்ணா . நீங்க எப்ப வரூவீங்க எங்க கலியாணத்துக்கு முதல் ஆசீர்வாதம் நீங்க தான் .என் .மரணம் வரை பதுளை ஊரை மிதியாமை கோடி நன்மை என்று புதிய கதை எழுதுவேன் மிரூனா எனக்கு எப்போதும் என் சுயம் முக்கியம் நான் ஒரு வழிப்போக்கன் இப்படியே இருந்து விடுகின்றேன் பாரிசில் சுதந்திரமாக ,முகவரியுடன் ,கட்டுப்பாடு இல்லாமல்!

ஹாஹா என்னைவிட மூத்தவர்கள் இருக்கின்றார்கள் என் ஆசீர்வாதம் எப்போதும் பாட்டாக வரும் தாயி பதுளையில் இந்த வானொலியில் நேயராக வருவேன் குரல் மூலம் .

மீண்டும் சந்திப்போம் சந்தோஸம், சுபீட்சம், கவலை மறந்து இருங்க நான் வேலைக்கு போக நேரமாச்சு இணைப்பையும் தொடர்பையும்  துண்டிக்கப்போறன் .

ஏன் அண்ணாச்சி பாரிஸ் சினேஹா கைபேசி அழைப்பில் வாறாங்கலோ ?,

ஹீ ஹீ அவங்க தனிவழி  ஏனோ இப்ப அடிக்கடி ரயிலில் வரும் போது சில கவிதை வருகின்றது அதை கிறுக்கிவிட்டு பயணி போல நான் என் வழியில் போறன் ! மீண்டும் பதுளை போனபின் வாங்கோ இணைப்பில் ஒக்கே ஓக்கே!  இனி வானம் வெளித்திடும் என்று சொல்லுகின்றது பதுளை நோக்கிய தனி வாகனப்பயணம் பாபுக்கு!


31 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-32

தோல்வியின் போது தோள் கொடுக்காத 
தேர் போன்ற உலகம் வெற்றியின் பின்னே வரவேற்பு என்று
 வெற்றியுடன் மீண்டும் வரும்போது 
வெற்றிக்களிப்பை பங்கிட்டு தனதாக்கின்றது. 
தோல்வியின் போது துவண்டுபோகாமல் இருக்க நம்பிக்கையுடன் 
தோளைத்தட்டிக்கொடுத்த உறவுகள் 
தொலைவில் நின்று நிறைவான சந்தோஸம் காணும் 
இதுதான் இந்த உலக நியதி மச்சான் !

நீ இலங்கை மீண்டும் போகும் இன்றைய நாள் உன் வாழ்வில் மீண்டும் ஒளிபிறக்கப்போகுது மச்சான் , இன்னும் சில மணித்தியாளத்தில் கட்டுநாயக்காவில் இருந்து வெளியேறிதுடன் வெளியார் வரவேற்புப்பகுதியில் பாரு எல்லாம் தெரியும் மச்சான் பாபு .

என்னடா சொல்லுகின்றாய் சேகர் ?மூன்று வருடகள் கடந்த பின்  நீயே நேரில் பார்க்கப்போறாய் எனக்கு வேலைக்கு போக நேரமாச்சு .உனக்குத் தான்  இப்ப வெளிநாட்டு வாழ்க்கை நன்கு புரியுமே இங்கு வயிற்றுவலி என்றாலும் வாய்விட்டுச் சொல்லாம வேலைக்குப் போனால் தான் அன்றாடம் நம் பிழைப்பு நல்லா இருக்கும் .

அக்கரையில் இருந்து வெளிநாட்டு வாழ்க்கை ஜாலி என்று சொல்லுவோருக்கு எங்க புரியும் நாம் இழக்கும் வாழ்க்கையும். வாலிபமும் என்றுவிட்டு தொடர்பை துண்டித்தான் சேகர் .

ம்ம்ம் ..சரிடா சேகர் கொழும்பு போனதும் தொடர்பில் வாரன்!

சிந்தனையைக் கிளறிவிடுவதில் இந்த நினைப்பு அதிகம் தொல்லை தருமாம் அதுபோல 
மூன்றுவருடம் அரபுலகத்தில் தனியார் நிறுவனத்தின் பல்பொருள் அங்காடியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்துவிட்டு நாடு செல்லக்காத்து இருக்கும் நண்பன் பாபுவுக்கு ஸ்கைப்பில் சொன்னான் சேகர் !

மேற்பார்வையாளராக வேலை ,நான் பார்த்தவேலை என்னவோ குளிர்சாதனம் பூட்டிய பல்பொருள் அங்காடிக்கடையில்தான் வெளியில் தான் உடலை கருவாடு போல காயப்போடும் வெப்பம் புதிய மொழி ,புதிய, புதிய நண்பர்கள் .இறுக்கமான கட்டுப்பாடுகள் இந்த நாட்டில் .நம்நாட்டில் உடன் பிறந்தவார்களுக்கு சுபகாரியம் என்றாலும் ,உறவுகளுக்கு அவமங்களகாரியம் என்றாலும், தொலைபேசி அழைப்பில் தான் நம்உலகம். இன்பம் ,துன்பம் எல்லாம் இந்த் தொலைபேசி இப்போது ,ஸ்கைப் அத்துடன் .முகநூல் என இன்னும் ,சிலதை  பகிரமுடியும் அதுக்கும் இணைப்பு கிடைத்தால் தான் சாத்தியம்.

 இந்த ஊருக்கும் நம் ஊருக்கு வித்தியாசங்கள் பல .என்னதான் குவைத்நாட்டு டினார்  பெறுமதி நம் தேசத்தில் அதிகம் என்றாலும் அதுக்காக நாம் இழக்கும் ஆசாபாசங்கள் அதனைவிடப் பெரிது.

 என்ன செய்வது இனவாதநாட்டில் ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப்பெற முடியும் என்ற நிலை .

மூன்றுவருட அரபுலக வாழ்க்கை பல விடயத்தை சுயமாக சிந்திக்க  கற்றுத்தந்து இருக்கின்றது இனி வெளிநாடு என்று வெளிக்கிடுவது இல்லை.

 நம்மூரில்  என் உழைப்பிலும், நண்பனின் தயவிலும் ,நான் படித்த அரபுலக அனுபவத்திலும் இருந்தும் தனித்தொழில் தொடங்குவது தான் என் இலட்சியம்.

 என்னை நம்பி என் உறவுகள்கூட ஆயிரம் ரூபாய் கூடத்தராத நிலையில் லட்சங்களைக்கொடுத்து  நான் உடனே அரபுலகம் போகும் வரை தொடர்பில் இருந்தானே ?எப்போதும் தொலைவில் இருந்தானே சேகர் அவன் பெறுமதி என்ன என்று தெரியாமல் இருந்துவிட்டேன் .

இனி அவனின் கடனை ஈரோவில் கொடுத்து அடைத்தாலும் அந்த நம்பிக்கையான நட்புக்கு என்ன கைமாறு செய்வேன்.

 நான் உயிரோடு உயிராக படம் போல காதலித்தவளே என்னை விட்டு பிரிந்த போதும் .



என் கூட இருந்து என்னை வழிநடத்திய வழிப்போக்கன் சேகர் விற்பனைப்பிரதிநிதி என்றாலும் எனக்கு அவனும் ஒரு குருதான்!

அவன் போகும் ஆன்மீக பாதையில் அவனோடு என்றாவது ஒருநாள் அடிபணிந்து போகணும் இது நட்பு என்பதைக்கடந்து குருசிஸ்யன் போல.

 ஆனால் என்னால் அவன் போல கோபத்தில் திட்டவும் ,பிடிவாதம் பிடிக்கவும் ,முக்கிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் எத்தனை பெரிய முகநூல் குழுமம் என்றாலும் எதிர்த்துவிட்டு விலகிச் செல்லும் தனி ஒருவன் போல  இருக்க முடியாது அது என் பலவீனம்.

அவனை விட்டுப்போகமுடியாது .இதுவும் ஒரு ஜால்ரா கருணாநிதியை விட்டுப்பிரியாத அன்பழகன் போலத்தான் !

என்றாலும் இந்த சேகரின் பின்னே அரபுலகம் வந்த பின் என் பல நண்பர்களையும் ,தலைவர் சொல்லிவிட்டார் கட்சியைவிட்டு வெளியேறுங்கள்  கட்சி உறவுகளே என் கருத்தில் உடன்பாடு இல்லாத கழக கண்மணிகளே இனி உங்கள் முடிவு  என்றாலும் என்ற  அது எனக்கு வருத்தம் இல்லை நான் மலையும் கடப்பேன் எந்தநிலையிலும் என்று அதிகாரதொனியில் அவ்ன் க்ருத்து இட்டால்  அவன் சிலமுகநூலில் என்னை வம்பில் மாட்டிவிட்டாலும் இன்றும் சேகரின் , நேசிப்புக்கு முன் இந்த புதிய நட்புக்கள் முகத்துடன் கிட்ட நெருங்க முடியாது !சிந்தனை மீள் கட்டுநாயக்கா அண்மித்துவிட்ட நிலையில் இன்னும் சில நிமிடத்தில் தரையிறங்கும் சிறிலாங்கா ஏர்லைன்ஸ் அறிவிப்பு கேட்டு நிஜய உலகுக்கு வந்தான் பாபு! சொர்க்கமே என்றாலும் அது நம்மூருக்கு ஈடாகாது ராஜா இசை சேகருக்கு எப்போதும் ஒரு போதைதான் வாசிப்பு போல  அவன் தந்த பல ஒலிநாடக்கள்  இப்ப வீட்டில் இருக்கோ தெரியாது!`ம்ம்ம்




தொடரும்...