29 August 2020

கடைசி ஆசை!

 


கவிதை வரும் என்று காத்திருக்கும்
கண்டிநேயர் போல!
கடும்பனியிலும்,
கடுகதியில்
கண்ணுறங்கும்
கணக்கு வாத்தி மகனே!
கந்துவட்டிக்கு கடன்வாங்கி
கல்விப்புலவு என்ற போர்வையில்
கடல்கடந்த
கதிரைக்கட்சிக்காரே!
கண்ணீருடன்
காதல்சுகமானது நாயகியின்
கதை சொல்லி
கள்ள ஓட்டுப்போட்டு
கட்சிமாறிய
கங்காணியின் கதை
கடிதம் போல வரையாத
கல்நெஞ்சக்காரணே!
கணபேர்கள் சங்கிமிக்கும்
கதிர்காம யார்த்திரைக்கு
கலகலப்பு பாடல் போல,
கடவுச்சொல் மறந்த முகநூல்
களவாணியே!
கனவுகலைந்த காதலுடன்
கடைசிமுறை கேட்கின்றேன்
கல்வீட்டுத்திட்டத்தில்
கனஹாவுக்கு ஒரு காணியும்,
கம்பளிப்பூச்சிக்கு ஒரு கைச்சைக்கிளும்,
கட்டையில் போகையில்
கல்லூண்டாய்வீதிக்கள்ளும்,
கட்டைச்சுருட்டுக்கு ஒரு
கண்ணீர்க்குவலையுடன்
கண்ணேதிரே தோன்றாதே!
கலகலவென ஓடும்
கதிர் போல நீயும்!
கம்பளை ரயிலில்
கண்ணீருடன் போகாதே!
கடைசியாசையில்!
கடலில் ஒருத்தி
கனத்த கடிதத்துடன்!
(யாவும் கற்பனை)
-------------------------------------------------------------------------------------------------------------------------------