இரந்து இகழந்து
இழந்து போன
இலங்கையின் இறையாண்மைபோல
இங்கேயும் ஒருகங்கைபோல
இன்னும் இடுப்பில்
இறுக்கிய இலங்கையர்கோன்
இனிய வெள்ளிப்பாதரசம் போல
இந்தா என்று
இனிப்புடன் கொடுத்த
இந்தியப் பருப்பும்
இனிய பொட்டல வீச்சும்
இன்னும் நினைவில்!
இதயத்திருடன் சினேஹா போல!
இருந்த காணியும்
இனி எல்லாம்நீயே என்று
இளகிக் கொடுத்த உறுதியும்
இளங்கிளியே இன்னும் பாடல் போல
இறக்குமதி வெள்ளைப்பூண்டு
இலஞ்ச ஊழலில்
இன்று கைதானவர் நிலைபோல
இதோ பிக்பாசில்
இலங்கை நங்கையும்
இனி என்ன கூத்துக்கு!
இலங்கை ஊடகத்தில்
இழுத்து விடலாம்
இஞ்சாருங்கோ பாடல்!
இத்துடன் முடிந்தது
இவ்வாரச் சம்பளம்
இனியும் போராட்டம் தொடரும்
இலங்கை ஆசிரியர் சங்கம்!!
( யாவும்கற்பனை)
///////////////////