28 February 2011

27 February 2011

26 February 2011

Tirumpiparkiran-3

தாய்லாந்தைப்பற்றிச்சொல்லியாகனும் என்றாள் வாலிபத்தேவையை பணம் கொடுத்தால் தீர்த்துவைக்கும் சிற்றின்ப தேசம்.இயற்கை அழகும் இனிய சிறு தீவுகளை இயல்பாக கொண்டநாடு உல்லாசபுரியின் சொர்க்கம் இந்த தென்கிழக்காசியாவின் நகரம் அழகிய பட்டாயா தீவு,புக்கிட்தீவு ,என சுனாமி கரம் பற்றிய பூமி .5 நாட்களின் பின் வந்த உதவியால் என்னுடன் வந்த சிறுவனை அழத்துச் செல்வதாகவும் மறறவர்களை விரைவில் மலேசியாவிற்கு அழைத்துச்செல்வதாகவும் கூறியவர் எல்லாறும் சந்தோசமாக இருங்கள்.உங்களை அனுப்பி வைப்பதாக அரசியல்வாதிபோல் வாக்குறிதி தந்துவிட்டு சிறியவனுடம் சென்றார்.நம்பயணத்தில் ஓருவன் விலகிவிட்டான் அவனின் நல்லகாலம் என்று எண்ணிக்கொண்டோம். அதன்பின் வருவதாக கூறியவர் வரவில்லை எங்களிடம் பணம் அதிகமாக இருக்கவில்லை.மொழிபுரியாது. நாங்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடமோ பரத்தைகள் வாழும் நகரம் இரவு முழுவதும் பாட்டும் கூத்தும் மாது ஓருபுறம்,மது ஓருபுறம் என்று அலையும் இந்திரலோகம்.வருவார் என்ற நம்பிக்கை  கையில் உள்ள பணம்போல் வரவரகுறைந்து ஓருகட்டத்தில் அனைவரும் ஏமாற்றப்பட்டதை புறிந்து கொண்டோம்.துயரங்கள் ஏழையின் பங்காளி என்பதை காலம் உணர்த்தியுள்ளது எண்பதை ஜிரனிக்க முடியவில்லை எம்மால் முடிந்தளவு ஜரேப்பாவில் உள்ள உறவுகளிடம் எமது இருகொள்ளி நிலையை உணர்த்தினோம்.அவர்கள் அங்கே உள்ளவரிடம் தொடர்பு கொண்டார்கள்.அதன்விலைவாக நம்வழிகாட்டி மீண்டும் எம்முன் கடவுள்போல் வந்தார் தனக்கும் ஜரேப்பாவில் உள்ளவருக்கும் பணவிடயமாக கருத்து முரன்பாடு என்றும் அழைத்துச்சென்ற சிறியவன் பிரான்ஸ் போய்சேர்ந்துவிட்டதாகவும் கூறினான்.தான் உங்களை மலேசியாவிற்கு அழைத்துச்செல்ல வழிசெய்துவிட்டுத்தான் வந்ததாகவும் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று கூறிமனசுக்கு பால்வார்த்தான்.இன்று தான் இங்கே தங்குவதாகவும் தன்நண்பர் வருவார் என்றான்.எங்களுக்கு யார்வந்தாளும் எங்களை உறிய இடத்துக்கு அனுப்பினால் போதும் என்றநிலையில் காத்திருந்தோம்.அவரின் நண்பர்மாலையில்  வந்து எங்களை சந்தித்தார்  .எங்களை  எல்லையைகடந்து செல்வதற்கு  தான் உதவிபுரிவதாகவும் ஆளுக்கு 300வெள்ளி மலேசியன் காசு தரும்படி கூறினார்.இது என்னபுதுக்கதை எனநண்பர்கள் திகைத்து நின்றோம் இறங்கிய பின்காசு என்ற பேச்சின் அடிப்படையில்தான் பயணம் தொடங்கியது.ஓருகிழமை என்ற வாக்குறிதி 3மாதங்களை தாண்டிவிட்டது.இனி என்ன செய்யலாம்   என்ற ஜொசனை வந்தவர்கள் மலாய்மொழியில் ஏதோ  கதைத்தார்கள்.பின் எங்களிடம் 6 பேரை நாளை அழைத்துச்செல்வதாக கூறினார்கள் நானும் மற்ற 5பேரும் விடப்பட்டோம் முதலில்  போறவர் எங்களுடன் தொடர்பை பேனுங்கள் என்று மட்டும் கூறினோம் வந்தவர்கள் மதுவையும்,மாதுவையும் தேடி சென்றுவிட்டனர்.        ................      தொடரும்

23 February 2011

Tirumpiparkiren-2

மறுநாள் வந்தவர் எல்லோரையும் வெளிக்கிடும்படி கூறினார் நாங்களும் எங்கள் உடுதுணிகளை மாற்றிக்கொண்டு உணவருந்திவிட்டு  அவர் சென்னது போலவே  ஓவ்வொருத்தராக  அந்த ஹோட்டலில் இருந்து  வெளியாகி அவரின் உதவியால் பின்னால் பசுவைத்தொடரும் கண்று போல் எமது உடுப்புப்பையை தூக்கிக்கொண்டு நடந்தோம் எமது பயணம் தெரியாமல்.உதவியாளர் எங்கள் அனைவரையும் ஓரு இருதட்டு பேருந்தில் எற்றினார் நாங்களும் எல்லாருக்கும் பொதுவான கடவுளை வேண்டிக்கொண்டோம்.முன்னால் அந்த உதவியால் அமர்ந்து கொண்டார் பயணம் தொடர்ந்தது.மறுநாள் மதியம்  தாய்லாந்தின் மலேசியாவின் எல்லைக்கரைக்கு வந்து சேர்ந்தோம்.விரைவாக இறங்கும் படி அவர் சைகை காட்டினார் தாய்மொழி தெரியாது நமக்கு.நாங்களும் இறங்கினோம் நாட்டில் ராணுவம் சுற்றிவலைத்த்தால் உதைத்தானே செய்வினம்.  மீண்டும் ஓரு தட்டி வாகணத்தில் ஏற்றினார்.கூடவந்த நண்பன் செண்னான் ஊரில் கொடிகாமம் போக இந்தமாதிரி வாகணத்தில் பயனித்ததாக.நானோ சிந்தனை உடல்நலமில்லாத தந்தையின் நிலையை எண்ணிக்கொண்டிருந்தேன்.வாகணம் நீண்ட பயணத்தின் பின் சந்தடி மிக்க அந்தபாதையுடாகப்போய் பெரியஹோட்டல் வளாகத்தில்  நின்றது.எல்லொரும் இறங்கினோம் சிற்பந்திகள் எங்கள் பைகளை வாங்கிக்கொண்டார்கள் எல்லொருக்குமாக 2ரூம் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக உதவியால் கூறினான் தலையாட்டிப்பழகியவர்கள் நாங்கள் என்பதை அவனுக்கும் உணர்த்திவிட்டோம்.என்னுடன்  6நண்பர்கள் ,மற்றவர்கள் 7 பேர் இன்னொரு அறையில் இருபிரிவாக அனுப்பினார்கள்.என்னுடன் ஓன்றாக தேசத்தில்   இருந்துபயணித்த சிறுவன்  பயணக்களைப்பில் என்னுடைய உடை எல்லாம் வாந்தியெடுத்து அழுக்காக்கிவிட்டான் அதை சுத்தம் செய்யும் அவசரத்தில் நான் விரைந்து ஹோட்டலில் குளிர்த்து கட்டிலில் சாய்த போதுதான் அலுப்பு புரிந்தது இருட்டிவிட்டது எல்லொரும் உதவியால் வாங்கித்தந்த சாப்பாட்டை சாப்பிட்டோம்.அவன் யாரையும் ஓன்றாக வெளியில் திரியக்கூடாது ரூமில் அதிகம் கதைக்கக்கூடாது என்றவன் தான் 3நாட்களுக்கு சாப்பாட்டுக்கு  சொல்லிவிடுவதாகவும் விரைவாக 5நாட்களில் வருவதாகக்கூறிச் சென்றான். ........தொடரும்

22 February 2011

Tirumpiparkirean

வாழ்க்கைப்பயணத்தை சீரமைக்க வேண்டியகாலகட்டத்தில் இருந்தபோது  வெளிநாடு செல்வதென்ற முடிவில் இருந்தேன்.பொருளாதரத்தில் முன்னேறுவதற்கு இதைவிட எனக்கு மார்க்கம் தெரியவில்லை.தாயின் இருந்தவீடும், காணியும் ,யுத்தத்தில் சீரலிந்து அகதியாக இடம்பெயர்ந்து அலைந்து திரிந்தபோதுதான் இந்த சிந்தனை துளிர்விட்டு விருச்சமாக வளர்தது என்னுள்.எப்படி வெளிநாடு செல்வது என்றாள் பலலட்சங்கள் தேவை .எனது சகோதரி எற்கனவே புலம்பெயந்து சென்று சிலகாலம் .அக்காள் எப்படியும் என்னையும் தான் இருக்கும் இடத்துக்கு அழைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள்.அவளின் தூரநோக்குப்பார்வை தான் இன்று நானும் ஓரளவு சிறப்பா இருக்கக்காரணம் மற்ற உறவுகளிடமும் கடன்வாங்கி என்பயணத்தை தொடங்கினேன் .தேசத்தில் இருந்து வெளியாகி தாய்லாந்து வந்தேன் .அதுவரை தனியாக வந்த பலரும் ஓவ்வொருவராக அறிமுகமானேம்.எங்களை  கூட்டியந்த முகவர் என்னுடன் மேலும் 14பேரை ஓன்றாக ஓரு ஹோட்டலில்  3 அறைகளை வாடகைக்கு எடுத்து  தங்கவைத்தார்.நாங்களும் பயணக்களைப்பில் எல்லாரும் உறங்கிவிட்டோம்.மறுநாள் காலையில் வேற ஓருவர் வந்து அறிமுகம் செய்து கொண்டார் எங்கள் எல்லோருக்கும்  முதற்பயணம்,முன் அனுபவம் இல்லை வந்தவர் தேவதூதன் போல் தெரிந்தார் .அழகாக எல்லாரிடமும் கதைத்தார் தான் ஐரேப்பாவிற்கு உங்கள் அனைவரையும் விரைவில் அனுப்பி  விடுவதாகவும் அங்கே உள்ள தன் பெரிய முகவரிடம் தொடர்புகொள்வதாகவும் என்றவர் எங்கள் அனைவரின்  கடவுச்சீட்டையும் வாங்கிக்கொண்டார்.மறுநாள்வருவதாகவும்
கூறிவிட்டு சென்றார்.
                தொடரும்

20 February 2011

Anjali-1

வீர்த்தாயே நீங்கள் போனசெய்தி வலையில் வந்தபோது ஓருநிமிடம் நம்பமுடியவில்லை இருந்தும் துயரங்களை தாங்கி வாழும் தமிழர் நாமும் தாங்கிக்கொள்கிறம் .தாயே நாங்கள் புறநானுறும் .,கம்பராமாயமும் புத்தகத்தில் படித்தோம் வீரமகணை .நீங்கள் எங்களுக்கு நேரில் பெற்றுத்தந்தீர்கள்.தாயே என்று உங்களுக்கு பலர் இரங்கல் கூட்டம் போடுவினம் ,தந்தியடிப்பினம் ஏன் கவிதை தீட்டுவினம்.உங்களின் பாதம் பட்டால் பதவிபோய்விடும் என்று பதறியவர்கள்.உங்களின் வாழ்வில் புறநாறுத்தாயைவிட  அதிகம் அவலைப்பட்ட வேதனையை எமக்காக தாங்கினீர்களே உங்கள் பாதம் பணிகிறேம்.வீரமகனை தந்ததாயே.தசதரசக்கரவத்தியின் புத்திரசோகத்துக்கு மேலாக புத்திபாசம் உங்கள் அந்திம காலத்தில் அலைமோதியிருக்கும்.நாங்கள் பாவிகள்வீரத்தாயை  வழியனுப்ப முடியாமல் புலம்பெயர்ந்து  தவிக்கிறோம்.கடைசிப்பிள்ளை கொல்லி இடுவான் என்ற இதிகாசங்களை வகுத்தவர்களே  உங்களுக்கு எம்தலைவனின் கையால் கொல்லிபோடவிடாமல் செய்தபாவிகளை உங்கள் நல்லமனசு மன்னிக்குமா?  மீண்டும் உங்கள் வயிற்றில் பிறக்கனும் என்று சொல்லும் கரிகாலன்  கதறுவான் எத்தனை சேனைப்படைகளை உங்கள் மகன் முறியடிதான்  உங்கள் மரணத்தறுவாயில்  அருகில் இல்லை என்ற  கவலையில் உயிர் போயிருக்குமா,தாயே நிம்மதியாக கண்ணயறுங்கள்.இப்பிறப்பில் சான்றோன் தலைவணை பெற்றதிற்காக நீங்கள் பட்டவேதனைகள் அந்த கோசலையின் வேதனையைவிட ஓருபடி மேலானது.உங்கள் வீரத்தியாகத்திற்கு என் அஞ்சலிதாயே உன்பாதம் பணிந்து.

17 February 2011

மாசிமகம்

மாசிமகம் இன்று அழகர் வைகை ஆற்றில் இறங்கப்போகும் அந்தக்காட்சியை பார்பதற்கு ஆயிரம் கண்போதாது.அரசியல்வாதிகள் இன்று புனிதர்போல புடைசூழவந்து தீர்தம் ஆடுவார்கள்  தமிழ்நாட்டின் பலபகுதியில் இருந்தும் இந்தவிழாவைக்கான  மக்கள் கூட்டமாக வந்து அழகர் ஆற்றில் ஆணந்தக்குளியலை ஆடுவதை பார்த்துப்பரவசமாகுவார்கள்.கும்மகோணமே இன்று வெள்ளிக்கிழமை விழாக்கோலம்கானும்

16 February 2011

Ullasampoovomaa-1

இலங்கையில் மிகபிரபல்யமான பூங்கா பேராதனைப்பூங்கா.இது எழில் கொஞ்சும் மலையகத்தின் தலைநகராம் கண்டியில் அமைந்துள்ளது.கங்கையாழ் மகாவலியின் இயற்கை அருவியின் நீர்பரவிச்செல்லும் தேசமாக இருப்பதால் தொடர்ந்து செழிப்பான தாவரம்,மலர்கள்,கொடிகள் வருடம் முழுவதும் பச்சை பூமியாக பார்பவர்களை கொள்ளையடிக்கிறது.இயற்கை அழகை ரசிப்பவர்கள்,குடும்பத்துடன் செல்ல சிறப்பாண இடம், சித்திரை வெய்யிலுக்கு இதமான சிலிப்பான சுற்றுலா போகக்குடியது இந்தப்பூங்கா.எப்போதும் பேராதனிய பல்கலைக்கழக காதலர்களின் செர்க்கபூமி இது என்று கூறுமளவுக்கு அவர்கள் நிறைந்து இருப்பார்கள்,அழகான தொங்குபாலம் அருவியை ஊடறுத்துச்செல்கிறது.இங்கு பல திரைப்படக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசின் சுற்றுலாமையத்தின் பிரதானமான பூங்கா இது.நீண்ட சுற்றளவு கொண்ட பேராதனைப்பூங்கா அழகிய பல மலர்த்தோட்டங்களை  தன்னகத்தே கொண்டுள்ளது.நீண்ட பாக்குமரச்சோலைகள்,கமுகு மரக்காற்று மனதிற்கு மகிழ்ச்சிதரவல்லது.கோடையில் போக சிறப்பான இடம் .

15 February 2011

Kirukkalgal-1

நல்ல கதைகள் படித்தோம் நடுரோட்டில் நின்று நியாயம் சொல்ல வந்தார்கள் நரித்தோல் போர்த்து நதியற்றுப்போனோம் நலிந்து போகமாட்டோம் நானிலம் போற்றும் காத்திருக்கிறோம்.ஓநாய்கள் ஊளையிடுகிறது,தவளை சத்தம் போடுது,ஊளிக்காலம் உறைந்து போய்க்கிடக்குது மனசு

10 February 2011

Iyakkunargal-1

எனக்குப் பிடித்த இயக்குணர்களில் ஆபாவணணன் முக்கியமானவர்.இவர்விரல் விட்டு என்னக்குடிய படங்களை இயக்கி இருந்தாலும் ஓவ்வொரு படமும் வித்தியாசமானது.ஊமைவிழிகள் முதல் படம் இவருக்கு  .திரைப்படகல்லுரியில் இருந்து வந்து முதல் படத்தை இயக்கி அதைவெற்றிப்படமாக்கி  மற்றவர்களுக்கு முன்னுதாரமானவர்.வித்தியாசம் செய்வதாகட்டும்,விஜயகாந்துக்கு ஓரு மாற்றத்தை வழங்கியவர்,தமிழ் சினிமாவில் புதிய கதைக்களத்தை திறந்தவர்,செந்தூரப்பூவே,இனைந்த கைகள்,ஊழவன் மகன்,படங்கள் ஓவ்வொன்றும் தனித்துவமானது,சிறந்த கதையம்சம் ,தனித்துவமான கவியாற்றல் கொண்டவர்,புரட்சி செய்தவர்,இன்றும் இவர் பாடல்" தோல்வி நிலை என் நினைத்தால்"காலத்தை வென்று நிற்கிறது.இனைஇசை,படத்தொகுப்பு,பாடல்,எனபண்முகத்திறமை கொண்டவர்,அதிக படங்களை இவர் நெறியாற்கை செய்யாவிட்டாலும் தமிழ் சினிமாவில் முக்கியபடங்களில் இவரின் படமும் இருப்பது நிச்சயம்.இன்று இவர் ஓதுங்கி இருந்தாலும் சின்னத்திரையில் பங்களிப்பு செய்கிறார்

09 February 2011

Singappour payanam-1

விடுமுறையை கொண்டாட சிறப்பான இடம் சிங்கப்பூர்.இங்கு சுத்தம்.போக்குவரத்து,அமைதி, என நம் விருப்பத்திற்கு போய்வர்லாம்.செந்தோசா களியாட்ட நகர் சிறப்பானது.இங்கு பார்பதற்கு பூங்கா,கடற்கரை,மீன்பூங்கா,ராட்டின விளையாட்டு,3dசினிமா,காலாச்சார நடணம்,வானவேடிக்கை,சிறுவர்,மகிழ்வூட்டு வேடிக்கைகள்,என பார்பதற்கு மனதிற்கு இதம்தரும் இடம்.இரவுப்பொழுதில் கடற்கன்னியின் ஓரங்க நாடகம் மிகவும் பார்க்கவேண்டிய நிகழ்ச்சி,இயற்கையை விரும்பும் இதயங்கள் தவறாமல் செல்லலாம் பலமுறை.

05 February 2011

எனக்குப்பிடித்த வானொலி அறிவிப்பாளர்களில் ராஜேஸ்வரி சண்முகம் பிரதானமானவர்,இவர் இலங்கை வானொலியில் வரும் போது முகம்காணாதகூயில் கூடவருவதுபோன்ற உணர்வைத்தரும்.தேசிய சேவை,வர்ததகசேவை இரண்டிலும் இவரின் பங்களிப்பு உலமறிந்த ஒன்று ,இலங்கை மட்டுமல்லாது தமிழகம் கூட இவரின் குரலில் மயங்கிக்கிடந்தகாலம் அன்றையநாள்கள்,இன்று பல அறிவிப்பாளர்கள் அவரின் தமிழ் உச்சரிப்பு நேயர்களை அரவனைக்கும் விதம்,பாடல் தெரிவு,பாடலை மட்டும் ஒலிபரப்பாமல்,இடையில் தரும்,குட்டித்தகவள் ,என கற்கவேண்டிய விசயங்கள் பல.குட்டிக்கவிதையை ஈரடியை அறிமுகம் செய்தவர் .தேசத்தில் இருந்தபோது இப்போதைய தென்றலில் அவர் செய்யும் இரவின் மடியில் நிகழ்சியில் அம்மையார் வந்தாள் தூக்கம் விழித்து கேட்பேன்.கதம்பமாலை வித்தியாசமானதாக இருக்கும்.ஓவ்வொரு விளம்பர நிகழ்ச்சியையும் தவரவிடமாட்டேன் அந்தளவுக்கு அவரின் குரல் ஆளுமை.கணீர் என்ற அறிவிப்பு எங்கிருந்தாலும் வானொலிக்கு அருகில் வரவைக்கும்.இன்று புலத்தில் வானொலியொடு இனைவது மிக அரிது வேலைப்பளு காரணமாக .ராஜேஸ்வரியின் திறமை அறிவிப்பாளர் மட்டுமல்ல சிறந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,வானொலி நடிகை,பாடல்லாசிரியர்,மொழிபெயர்பாளர்,நாடக எழுத்தாளர் என பண்முகம் கொண்டவர்,இவர் செய்த ஒளிமஞ்சரி மிக பிரபல்யமான நிகழ்ச்சி.இன்று புதிய அறிவிப்பாளர்களுக்கு பயிற்றுவிப்பாளராக விளங்கும் முதல்தரமானவர் ஓவ்வொரு புதிய இலங்கை தேசிய,தென்றல் அறிவிப்பாளர்கள்  இவருடன் ஒரு நிகழ்ச்சியாவது சேர்ந்து செய்யனும்   என்ற ஆவா இருக்கும்.அறிவிப்பாளரிள் இவர்  இளையதம்பி தயானந்தாவை தனது  கலைவாருசு என ஒருபேட்டியில் கூறியது  நினைவுகூறத்தக்கது.
என்னைக்கவர்ந்த நம்மவர்பாடகரில் N.k.ரகுநாதன் முதலானவர் இவர் பாடிய பாடலில் 'மூங்கிலின் நாதமும் தென்றலின் கீதமும் உன்புகழ் பாடுதம்மா' மிகவும் பிடித்தது .இன்று நம் வானொலிகள்  நம்மவர்களை புறக்கணித்துக்கொண்டிருந்தாலும் ,அவர்கள் பாடியபாடல்கள் இனையங்களில் கிடைக்கின்றது.மெல்லிசை என்றால் இலங்கை வானொலி என்ற இடம்தடம்மாறிவிட்டது.அன்று சந்தனமேடை .முற்றத்து மல்லிகை,இன்று ஞாபகம் இல்லைபலருக்கு .N.k.ரகுநாதன் சிலமேடைகளில் இப்போதும் தோன்றுகிறதை சின்னத்திரை ஊடாக பார்பதில் ஆனந்தம் .காலம் நம்மவர் மெல்லிசையை மீட்டுத்தருமா.T.s.m.கூடசேர்ந்து மேடையில் பாடி அவர்கூட இவர் குரலைசிலாகித்துப் பாராட்டியதை நேரில் பார்தேன்.ரகுநாதனுக்கு வயசானாலும் அவர் குரல் இன்னும் என்னை  வசிகரிக்கிறது.

04 February 2011

சுதந்திரம் பற்றி கனவுகானும் போது கட்டி இருந்த கோவணமும் களவாடப்பட்டது. அது போலத்தான் இன்று தமிழன்  நிலை.நண்றி வைரமுத்து அவர்களுக்கு.

03 February 2011

இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்கவேண்டிய  நாவல் செங்கையாழியனின்  மரணங்கள் மலிந்த பூமி.இது நம் இடப்பெயர்வை பொதுத்தளத்தில் நின்று நம் வலிகள்,துக்கத்தை அவலத்தை மிக நேர்த்தியாக விம்மலுடன் பதியவைக்கிறது.இலக்கியம் காலக்கண்ணாடி என்பதை இவரின் நூல் மெய்யிற்கிறது.ஈழமக்களின்  உணர்வுகள் 1995 ஆண்டு சூழ்நிலையை தெளிவாக பதிவுசெய்யப் பட்டுள்ள காவியம்  எல்லோரும் படிக்க வேண்டியது. தினக்குரல்லில் தொடராக வந்தது பின் நூலாக வெளியிடப்பட்டது.

01 February 2011

இலங்கையில் கோடைகாலவிடுமுறையை  கொண்டாட உலகமுடிவு சிறப்பான இடம் இது நுவரேலியா மாவட்டத்தில் இருக்கிறது 4வழியூடாக போகலாம்  நீண்ட பசுமையான சிலுசிலு என் பரந்த இடப்பரப்பு தேசம் ஊட்டிக்கு நிகரானது கோடையிலும் குளிச்சியான இடம் இயற்கை எழில் இதமான சூழல் உல்லாசத்திற்கு ஏற்ற பூமி அனுமதி இலவசம் குறைந்த செலவில் குடும்பத்துடன் கூதுகளிக்க மனசுக்கு இதம்தரும்