30 July 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-16


காதலில் சுயநலம் என்றால் ஒருவனின்
காதல் தோற்கும் !அதுவே பொதுநலம்
காதல் எனில் பிறருக்கு நீ ஆலமரம்!
காதலில் தனிமரங்கள் தோற்கலாம்
கடந்து வந்தாள் பொதுநலத்தில்
காட்டினைப்போல ஆலமரமாக
கண் முன்னே வலம் வரலாம்
காதலுக்கு முன் தனிமரமா?
கடவுளுக்கும் நிழல்கொடுக்கும் ஆலமரமா??
கடற்கரையில் நிற்கும் நண்பனே 
கனத்த நிலையில் நல்லாசிந்தி!
  


காதலினால் கடமையை மறக்கலாமா உன் எதிர்காலத்திற்காக உன் உடன் பிறப்புக்களின் எதிர்காலத்தை நினைக்காமல் சுயநலவாதிபோல  இருந்தால் சுற்றம் உன்னைத்தூற்றும் !

உற்ற நண்பர்களுக்கு உன்னை எடுத்துக்காட்ட என்ன சிறப்பு இருக்கும் ?இது எல்லாம் ஜோசிச்சியா மச்சான் ?

என்று காதலின் செய்தி சொன்ன பாபு வைப்பார்த்துக் கேட்டான் சேகர்.

உங்க அப்பா ,அம்மா ,உன்னை மூத்த பையன் என்று வைத்திருக்கும் கனவுகள் ,கற்பனைக்கள் விருச்ச மரம் போல !உயர்ந்து உவகைகொடுக்க வேண்டும் அதைவிடுத்து முள்ளு முருக்கை போல வெறும் பொன்னுருக்குக்கு மட்டும் முன் நிறுத்தும்  மரமாகாத !

அந்த மரத்தை  வெட்ட காதல் என்ற கவ்வாத்துக்கத்தியை அவர்கள் கையில் கொடுக்கப்போறீயா ?

உன்னை அண்ணாவென்று அன்போடு அழைக்கும் அன்புத்தங்கச்சி சங்கவிக்கு எப்படி ஒரு முன்மாதிரி அண்ணாவாக இருக்கப்போறாய் ?

உன்  தம்பி அவன் எனக்கும் தம்பிதான் விமலன் .அவனுக்கு எப்படி ஒரு நல்ல வழிகாட்டியாய் இருக்கப்போறாய் ?

இந்த உறவுகளைக்கடந்து உன் தந்தை அடிக்கடி டாடி டாடி என்று நீ  பாசம் பொழிவாயே !அந்த சிறப்புமிக்க புகைப்பட கலைஞன் தன் பொருளாதார பின்னடைவுகள் ,தனிப்பட்ட தோல்விகள் ,இருந்தாலும் இந்த பதுளையை ஊரைவிட்டு வெளியில் குடும்பமாக உங்களைவிட்டுப் பிரிந்து போய் சம்பாதிக்க நினைக்காதவர் !

எத்தனை துயரத்திலும் ,உங்களுக்கு வறுமையின் நிறம் சிவப்பு என்ற பக்கத்தை புரட்டிக்காட்டாதவர் !

அவரை எப்படி எதிர்கொள்வாய் ?எல்லாவற்றையும் விட தன் குடும்பம் என்ற லயச்சிறையில் குலதெய்வம் போல கொழுந்துக்கூடை சுமக்கும் மம்மியின் மனசை எப்படி எதிர்கொள்வாய் ?

என்னைவிடு எனக்கு பின்புலம் இருக்கு நான் பெட்டிக்கடை வைத்து என்றாலும் ,பிழைத்துக்கொள்வேன்  போற இடத்தில் !

ஆனால் உன்னால் என்ன செய்ய முடியும் ?

நீண்ட பல தலைமுறை இந்த பூமியில் பரதேசிகள் போல வந்து பண்படுத்தினாலும் இந்த பூமியில் சொந்த மக்கள் இல்லை என்று பிரிவினை செய்த வரலாறு அதில் இருந்து பிரிந்து வந்து பொருளாதாரத்தில் முன்னேற நினைக்க முடியாதளவு விழிப்புணர்வு இங்கு பலருக்கு கிடைக்கவில்லை !

இதை அரசியல்வாதிகளும் செய்யவில்லை காரணம் தம் இருப்பு மலையக அரசியலில் சந்தி சிரிக்குமோ என்ற உட்பயம்!

அப்படியான சூழலில் வளந்த உன்னை
கொழும்புக்கு முதலில் தனிய அனுப்பும் போது உன் டாடி என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?

என்மகன் எந்த நேரத்தில் வழிதவற நினைத்தாலும் அவனுக்கு நீ நிழல்கொடுக்கும் மரமாக இருந்து நல்வழி காட்டு !

நான் உன் பிடிவாதம் ,நேர் போக்கு , நடுநிலமை எல்லாம் அறிந்தவன் .உன்னையும் என் மூத்தவன் போல நினைக்கின்றேன் !

வயசுப்பொடியனுக்கு நான் அப்பாவாக இருந்து சொன்னால் சிலவிடயங்கள் புரியாது !


அவங்கட சுதந்திரத்தைப் பறிப்பதாக நினைப்பாங்க.

நல்ல நண்பர்கள் தான் வழிகாட்டவேண்டும் வீழ்ந்து போகாமல் இருக்க !அதன் அர்த்தம் என்ன மச்சான்?
தொடரும்......

27 July 2013

சின்னக்குயிலுக்கு சின்ன வாழ்த்து!

சினக்குயில் இந்தத்தாய்
சின்ன  என் வயதில் இருந்து
சிங்களத்து சின்னகுயிலே முதல்
சின்னச், சின்னவன்னக்குயில் என்று
சித்திரம் போல சினிமா பாடலில்
சின்னக்குயில் என்று
சிலோன் வானொலியில்
சிறுபராயம் முதல் சில வானொலி
சின்னக்குயில்கள் சிறப்பு வானொலி
சில நிகழ்ச்சி என் சித்ராவின்!
சிறப்பு  பிறந்தநாள் நிகழ்ச்சி என்று
சின்னசசின்ன சில வெற்றியும்
சின்னக்குயில் பாட்டும்!


சிலநேரத்தில் சிந்து பைரவியும்
சில குறிப்பு போல ஒவ்வொரு
ஆட்டோக்கிறப்பும்!



ஒவ்வொரு பூக்களுமே சொல்லும்
தேவனின் கோவில் மூடிய நேரம்!
நேசனும் கேட்கின்றேன்!


சில இணைய வானொலியில்
சில நிமிடம் இன்றும்!
இவரின் குரலில் இன்றும்
சிறப்பு பாடலாக
சின்ன வயதில் இருந்து
சிறையில் இருந்து
சிறப்பானதேசம்
சிலுசிலுப்பு பாரிஸ் வரை!
சித்ரா! என் இன்னொரு இசையில்
சின்னக்குயில்! அவருக்கு
சிறு கவிதை அன்புடன்!

குரலில் குழந்தை போல
குமரியின் கைபிடி போல
குளத்தில் போகும் வள்ளம் போல
குழந்தையாக தமிழ்ப்பாடலில்
தரணி எங்கும் சுவாசிக்க
தரமான பாடல் தந்த தாயே
குழந்தைபோல இன்னும் வாழ
கும்பிடுகின்றேன் தேவனிடம்!
குழந்தை போலவந்தசின்னக்குயில்
குறைகள் நீங்கி நீண்டுழி வாழ்க
குழந்தை இவன் தனிமரம்!
!
சின்னநன்றி லங்காசிரி டினேஸ்
சில காலம் கடந்து என் சின்ன
சிறுகவிதை வானொலியில்
சிலருக்குசொல்லியதுக்கு
சில இமையும் இசையும்
சிறுபதிவாகும்!!

25 July 2013

என்னுயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-15


காதல் என்றால் முகம் தொலைவதுதானா?


காதலில் உண்மையாசிப்பூ  விழியில் 
காதலன்  வலி
கண்ணீரில் தந்தானே  இவன் என்பதா?


காதல் நேசமுடன்  இருந்தால் உருகும் 
 காதல் இந்த தேசத்து 
கண்ணீர்  போல
காதல்கதை  தானா?


காதல் என்றால்உண்மையில் இவன் ஒரு 
கடல்கடந்தவன் அன்பில் ,!உறவில்
காதலுக்காக உன்னோடு வருவேன் 
கடல்கடந்து போகும் கலியுக யுத்த
கண்காணிப்பு வந்தாலும்
கவலையில்லாதவன்!
கடந்தகாலம் என என்று கற்றவர்கள்
கதைபோல காண்டம் நீ  வாசி
கட்டுநாயக்கா கடந்து போவாய்!


கண்டிப்பாக பாதுகாப்பு
கைதியாக கடக்கும் போது கையில்
கடுகளவு காசு இல்லாது 
கடனாளியாக கரை தேடுவாய்
கற்றவன் நான் கூறும் வாக்கு!


காகம் பறக்காத ஊரும் இல்லை உன் 
கன்னிப்பருவம் காணாத ஊரும் இல்ல
கல்லாத கடம்பமரம் உன் ஜாதகம் தம்பி
கல்லாதவன்  ஐயா! நான் காற்றில் வரும்
கனசெய்தி கேட்டு கடற்கரை வீதியில்
காண்டம் சொல்லும் வெள்ளவத்தை வீதியில்
காண்போர் அறிந்த பண்டிதர் முத்துசாமி!
கண்டிப்பாக பலிக்கும் இல்லை
கட்டையில் கண்டிப்பாக போவேன்
கடல் கடந்து இந்தியாவில் இருந்து வந்த
காண்டம் வாசிக்கும் இவன் கடவுளின் இன்னொரு அவதாரம்!



  !!! இப்படித்தான் மச்சான் பாபு நேற்று வெள்ளவத்தையில் காண்டம் வாசிக்கும்! மலையாள மந்தீரிகம் முத்துசாமி ஐயா  என் காண்டம் மாலையில் பார்த்து சொன்னார் !

என்ன ஒரு 1500 ரூபாய் போச்சு இரண்டு ஜின் போத்தல் .பத்து போத்தல் கோலா கலக்கும் காசு!ஆனாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லுது நான் ஒரு வழிப்போக்கன் !

யாரிக்கும் கட்டுப்பட மாட்டேன் என்று !என்றாலும் உன் காதலுக்கு காவடி தூக்க தயார் யார் அந்த காதல் தேவதை! சொல்லு மச்சான் அதுக்கு முன் இன்னொரு ஸ்டவுட் உன் பெயரில் என் காசு ஓக்கே!

ம்ம்!

 நீ எப்போதும்  தண்ணியிலும், நிதானமாக இருப்பாய் அதுதானே உன் நடிப்பு மச்சான் சேகர்!

நீ எப்போதும் கோபக்காரன் என்றாலும் குணத்தில் ஒரு நண்பன்! இந்த என் காதலுக்கு மட்டும் தூதுபோடா!


அது போதும் சேகர்  வெளிக்கிடு போவம் கடல் இன்னும் ஓயவில்லை என் மனம், போல அந்த தேவதை உனக்குத்தெரியும் !
உன் குடும்பம் அறியும் அவள்!


தொடரும்!

23 July 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-14

பெளர்ணமி முன் இரவில் கடல்கரையில் இருந்து அழகிய தமிழ்க்கவிதையைக் வானொலியில் அமைதியாக கேட்டாள் எப்படி இருக்கும்! மந்தமாருதம் இலங்கை ஒலிபரப்பில் என்றால் என்ன .கவிச்சோலை சக்தி Fm என்றால் என்ன .சூரியன் FM நேற்றைய காற்று .இதயராகம்  சக்திfm என்று தொடங்கி இன்றைய இணைய லங்காசிறியின் டினேசின் இமையும் இசையும், கடந்து ,நம் புரட்சியின் தூவானம் போல !



மனதில் கடல் அலைகள் வந்து ஓயாமல் கரைமீது சீறுவது போல ஒவ்வொரு மனதிலும்  பகல் எல்லாம் இருந்த அவசரங்கள் குறைந்து அந்தி சாய்ந்து அமைதியான இரவுப்பொழுதுக்கடல் போல இருக்கும் கோல்பேஸ் என்றழைக்கும் காலிமுகத்திடலில் இருந்து நிலாச்சோறு கவிதை நிகழ்ச்சியோடு நேரடி நிகழ்ச்சியூடாக காற்றலையில் வரும் குரல் S. T ராஹூப் என்றாலே சக்தியின் பண்பலையில் இதயராகம் இன்றும் கடல்கடந்து புலம்பெயர்ந்தவர்கள் பலரின் ஞாபகத்தில் வந்து செல்லும் வானொலி நேயர்களுக்கு !





அறிவிப்பாளர்கள் குரல்கள் வரும் நிலையங்கள் திடீர் திடீர் என்று சினிமா நட்சத்திரங்களின் காதல் அறிக்கை போல மாறினாலும் நிஜமான குரலின் சாயல் சிலருக்கு மாற்றமுடியாது !

கவிதை நேசிப்பை யாசிக்கும் வாசகர்கள் போல அது சித்திரம் போல படிந்துவிடும் இனவாத புலனாய்வாளர்கள் நீ புலிகளுக்கு வேவு பார்த்தாயா ?,என்று தமிழ்  அப்பாவிகள் புறமுதுகில் கூறிய ஆயுதங்களினால் கீறி அடையாளம் இட்டது போல !

அப்படித்தான் அன்றைய சனிக்கிழமை 1999 ஒக்டோபர் மாத  இரண்டாம் வார இரவுப்பொழுது பாபுவுடன் சேர்ந்த சேகரும் காலி முகத்திடலில் மணலில் இருந்து வானொலியை காதில் கவிதையை இசைக்கவிட்டுவிட்டு நிலாவைப்பார்த்துக் கொண்டு நீண்ட பெருமூச்சு விட்டார்கள் நாளைய பொழு ஞாயிறு விடுமுறை என்பதால்!


 கடற்கரையின் அமைதியை அந்த இரவு நிசஸ்ப்பத்தை குழப்பும் சுண்டல் விற்போரின் உச்சஸ்தாயிக்குரல் காதில் ஒலிக்கும் கவிதை நிகழ்ச்சியை ரசிக்க முடியாமல் ஊறுவிளைவித்தது.
கடலைரசிக்கும் ,தமிழினையும், சிங்களவனையும் ஒன்றாக இருக்கவிட்டு விட்டு தமிழன் என்ற ஒரு காரணத்திற்க்காக அவனை மட்டும் தனியாக விசாரிக்கும் சிங்கள பொலிஸ்க்காரர்  போல!

ஆமா பாபு என்ன பேசணும் என்றாய் நேற்று ?
பேசணும் அதுதான் எப்படித்தொடங்குவது என்று புரியவில்லை மச்சான் !
என்னடா இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வுத்திட்டமா நாம் பேசப்போறம்,பண்டா -செல்வா  ,திம்பு பேச்சுவார்த்தை ,பிரேமதாச -புலிகள்,சந்திரிக்கா -புலிகள் பேச்சுவார்த்தை போல இல்லையே?


ம் ம் எங்களிடம் இருக்கும் ஏதாவது தனிப்பட்டநலன் சார்ந்த எதிர்பார்ப்புக்கள் ,எதிர்கால திட்டம் பற்றித்தானே இருக்கும் !
இல்லை சுயநலமாக நாம் அப்படித்தானே இருக்கின்றோம் !

நம்ம வீட்டில் நெருப்பு எரியும் வரை எதையும் பார்த்து ரசிப்போம் ;பின் நமக்கு என்று வரும்போது அண்டை வீட்டைக்கூப்பிடுவதும் அயல்நாட்டு குள்ளநரிகளை நம்புவதும் நம் இயல்பாகிவிட்டதே  !


நாம் போய் வால் பிடிச்சுக்கொண்டு தொப்புள்கொடியாம் என்று நினைச்சு தமிழர் என்று  சொல்லிக்கொண்டு அவங்க வல்லரசு கனவுக்கு நாங்க ஜால்ரா அடிக்கணும்!

போடா உந்த நாதாரி அரசியலைவிட்டுவிட்டு நீ  ஏதாவது புத்தகம் சுதந்திரமாக எழுதப்போறீயா ??

அதுக்கு யாராவது விளம்பரதாரர்களை ரெக்கமண்டேசன் செய்யணுமா பாபு ?

அது எல்லாம் இல்லை சேகர் !
இது என் தனிப்பட்ட விடயம் !
ஓ அப்படி என்றால் அதில் நான் எப்படி உள்ளே வரமுடியுமா??

 உள்ளே வெளியே ஆட இது என்ன பார்த்தீபன் படமா??

கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இரேண்டா !
அது எப்படிடா பேசாமல் ஊமையா?
ஐயோட சேகர் !

நானே குழப்பத்தில் இருக்கின்றேன் .

ஓ அப்படியா ?அப்ப குளம்பிய குட்டையில் மீன்பிடிக்க முடியாது ,
வா ஒரு பியர் அடிக்கலாம் கொஞ்சம் சுருதி சேரும் பேச்சுத்துணைக்கு என்று இருவரும் அருகில் இருந்த காலிமுகத்திடல்  விடுதியில் நுழைந்த போது அவர்களை வரவேற்ற வரவேற்பபாளர் முன்னம் இவர்களை அறிந்தவர் என்பதால் !
இருக்கையை ஒதுக்கிவிட அதில் அமர்ந்து கடலைப்பார்த்தான் சேகர் !

சொல்லு மச்சான் அந்த கடல் அலைகள் போல உன் மனதில் விடாது அடிக்கும் பிரச்சனை என்ன ?
என்னால் முடிந்தளவு இதுக்கு உதவி செய்கின்றேன் .
இரு என்ன லயன் லாகர் எடுப்போமா ,,
இல்லை ஸ்டவுட் எடுப்போமா ??
எனக்கு வேண்டாம் நீ குடி எனக்கொரு கொக்கா சொல்லு  !

சரி சொல்லு காதல் பற்றி எண்ண நினைக்கின்றாய் ?


என்னடா ;ஸ்டவுட் ,ஜின் ,ஓல்ட் அறக்கு ,,ஜெனிவோர்கர்ஸ் பற்றி கேளு இல்லை ;பனம் கள்ளு; கித்துள் கள் பற்றிக்கேளு!

 இந்தக்காதல் அனுபவம் எனக்கில்லை!  நான் ஒரு விற்பனைப்பிரதிநி வேசம் கட்டும் ஒரு வெட்டிப்பயல். என்னை எல்லாம் காதலுக்கு காவடி தூக்கும் அளவுக்கு நடிகன் ஆக்காத பாபு!

ஏன் விற்பனை பிரதியுடன் ,ஊடகவிளம்பர சேமிப்பாளர் .என்று இரண்டு மொழி ஊடகதத்தில் நீ செய்யு பிரதியோக வேலை எல்லாம் நான் அறிய மாட்டேனே சேகர் ??

அந்தளவு அன்பில்லாதவன் போல நானா?? இவ்வளவு தானா நம் நட்பு?
நட்பு வேற,காதல் வேற.


கடமை வேற.  போகும் பாதை வேற நான் ஒரு மரம்போல! எனக்கு என் வளர்ச்சி முக்கியம் தேவையில்லாத உறவை வெட்டிப்போகும் ஒரு சாமனியன் பாரம் என்றால்! அது உறவாக இருக்கலாம் நட்பாக இருக்கலாம் ! நான் ஒரு சுயநலவாதி தான் ராகுல் போல இல்லை!

முகம் தொலைய !


எனக்கு உறவு ஒரு சிறை அல்ல!

தொடரும்

22 July 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-13


கிராமங்களையும் ,நகரங்களையும் ஒன்றினைக்கும் தேசிய அரசியல் போல நாட்டின் தலைநகர வாழ்க்கையும் ஒரு அரசியல் ஜீவஜோதி !

இந்த ஜோதியில்  சங்கமிக்க சிற்றூரில் இருந்தும் ,சிறுநகரத்தில் இருந்து கனவுகளுடனும் ,கற்பனைகளுடன் வருவோரின் கன்னத்தில் முதலில் கைவைப்பது இந்த தலைநகரில் ஒதுங்கிக்கொள்ள ஒரு முகவரியுடன் மூன்று நேரச்சாப்பாடு இல்லாவிட்டாலும் ,முகம் தொலையாத நிம்மதியுடன் இருக்க ஒரு வாடகை அறை .

அறை கிடைத்துவிட்டாள் அடுத்த கட்ட அரசியல் என்ன ?என்பதையும் ,ஆலோசனை செய்யும் வசதி வந்துவிட்டும் ..துணிவே துணை என்பது போல அப்படி ஆலோசனை செய்ய அறிமுகமான நல்ல நண்பர்கள் இருந்தால் இந்த தலைநகரம் கொழும்பில் ஒரு போக்கிடம் அமைக்க முடியும்.

அந்த கொழும்பு நகருக்கு வவுனியா இன்ரசிற்றியில் இருந்து சேகர் போய்ச்சேர்ந்தது முதலில் பாபு இருக்கும் வாடகை அறையான கொழும்பு -13 இல் ஜம்பட்டாவீதியில் இருக்கும் தொடர்மாடி ஒன்றில்  நண்பனின் அறைக்கு!

அன்று மலர்ந்த தாமரைபோல அவனை வரவேற்றான் பாபு .
வாடா மச்சான் .என்னாச்சு ? நீபோகும் இடம் எல்லாம் இட மாற்றமும், விருப்பு மாற்றலும் விரைந்து வருகின்றதே ?நாடாளுமன்ற தேர்தல் போல அடுத்த விற்பனைப்பிரதிநிதியாக இனி எந்த ஊர் போகப் போறாய் சேகர்?

இந்தநாட்டில் யுத்தம் ஓயாது !நாங்களும் ஓடுவம் ஓடும் வரைக்கும் ஒரு எல்லை இருக்கும் தானே ?

நிஜம்தான் மச்சான் சேகர்.

பஸ்ஸில் வந்த களைப்புக்கு ஒரு தேனீர் குடி தேவாமிர்தம் போல இதுதானே நமக்கு! 

ஆமா உன் வேலை எப்படிடா போகுது பாபு ?சந்தோஸமாக போகுது சேகர் .
எல்லாம் உன் சாமர்த்தியம் தான் முதலில் பஸ் நீண்ட பயணக்களைப்புக்கு ஒரு குளிப்பு போடு .

நான் பரோட்டா கொத்துக் கட்டிக்கொண்டுவாரன் .

சரிடா மிச்சம் உங்கூட பேசணும் என்று இருந்தன் சேகர் .நீ படத்துக்கு புக் பண்ணச்சொல்லியும் அதைச்செய்யல ,உன் கூட அவசரமாக  ஓய்வாக இருந்து பேசணும்!

இன்று மாலையில் எத்தனை மணிக்கு வருவாய்?
 மாலையில் 6 மணிக்கு .

ஓக்கேடா சேகர் நாங்கள் கோல்பேஸ் போவம் சாய்ந்திரம்.

 சரி நானும் மிச்சம் பேச இருக்கு உன்னோடு பாபு.

ஆமா சேகர்!நீ எப்ப பதுளை போறாய் ??ஏண்டா  பாபு காலையில் என் வாயைக்கிண்டாத !

ம்ம் உன் பிடிவாதம் கூடாது மச்சான் .வீணா நம்நட்பை சோதிக்காத தேர்தலில் வெல்வோம் என்று நம்பிக்கையில் பாராளமன்றத்தைக் கலைச்சமாதிரி இல்லை நான் .ஆட்சியும் வேண்டாம் அவதூறும் வேண்டாம் என்று நிற்கும் சுஜேட்சை உறுப்பினர் போல எப்ப போகணுமோ அப்ப அந்த ஊரைப்பார்க்கின்றேன் .

சரிவிட்டுவிடு சேகர் நம்ம பதுளை நண்பர்கள் எல்லாம் உன்னைக்கேட்கின்றாங்க?
மச்சான் பாபு மூடியபாதையால்  முன்னேற வெளிக்கிட்டால் ஆபத்து அதிகமாக இருக்கும் .நான் ஆபத்தை நேருக்கு நேர் சந்திக்கவிரும்பவில்லை .

இந்த விற்பனைப்பிரதிநிதி வேலையே எனக்குப் போதும்.

இன்று தலமைக்காரியாலயம் போனால் தெரியும் !
இனிமேல் வவுனியா நிலமை சரியாகும் வரை வேற இடங்களில் தற்காலிகமாக வேலை செய்யலாம் ,இல்லை யாராவது புதிய இடத்தில் புதிய ஏகவினியோகஸ்த்தர்கள் கிடைத்தால் இருக்கும் பகுதியை இரண்டா பிரித்து விற்பனையை அதிகரிக்க வழிகோலுவார்கள் வடகிழக்கு மாணசபையை இரண்டாக்கியது போல தலைக்காரியாலயம் போனால் தெரியும் கண்டி ,திருகோணமலை ,வவுனியா என்று ஒவ்வொரு பகுதியும் பார்த்தாச்சு ,இனி எந்த இடம் வருமோ ?எப்படி விதி எழுதியதோ யாருக்குத் தெரியும் .

வருங்காலம் எல்லாம் வெல்ல இணைந்த கைகள் நீ இருக்கும் போது எனக்கு என்ன குறை மச்சான் பாபு.

ஆமா என்னை பினாமியாக்கி நீ பல இடத்தில் தப்பிவிடுவாய் .நான் தான் வாய் இருந்தும் ஊமைபோல நடிக்க வேண்டும் !

நண்பேண்டா நீ !

ஆமா நண்பன்தான் இல்லை என்றாள் நமக்குள் எப்படி இப்படி ஒரு புரிந்துணர்வு ?மலையகத்தில் பிறந்த நானும் ,வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நீயும் இணைந்தது 'புரிந்துணர்வில் தானே ?
நிஜம் தான் பாபு .

ஆமா நம்ம ராகுலைப் பார்தாயா ?


அவன் குருநாகல் போய் இருக்கின்றான் உனக்குத் தெரியாதா ?

இல்லடா என் கைபேசி வேலை செய்யவில்லை நேற்றுமுதல் அதனாலஅவன் சொல்லாமல் போய் இருப்பான் .

 இருக்கும்டா சேகர்.

அவன் உங்கள் கம்பனி வட்டார அதிகாரி வீட்டில் தானே தங்குவான் .
ஆமா அந்த ஐராங்கனி எப்படி இருக்கின்றா ?
உங்கள் நட்பை ராகுல் விரும்பவில்லை என்று மட்டும் நேற்றுக்கூட என்னோடு பேசினான் .

அவனைவிடு லூசன் ,அப்படிச் சொல்லாத மச்சான் அவன் தான் நாம ஒன்று சேர மூலக்காரணம் .

அவனை மீறி நான் உன் வழியில் வர ஒரு தனிப்பட்ட காரணம் இருக்கு கைவசம் !


தொடரும்!

21 July 2013

ஆடிப்பட்டம்!!!!!


ஆடியில் பறந்தது அழகான பட்டங்கள்
அந்தக்கால  ஊர் வாழ்வில்
அந்த ஆனந்த  ஆடிக்களிப்பில்!



ஆட்சியாளர்கள் விட்டார்கள் இனவாத
ஆத்துமீறல் நூல்கள்
ஆயிரம்  
அதில் பல்லாயிரம் காடையர்கள்சேர்ந்ததில் 
அவர்களிடம் இருந்தது பல ஆயுதங்கள்
அடுத்தவர்கள் உயிர்குடிக்கும் அநியாய
அகோரங்கள் ஆடினார்கள் அந்த ஆடியில்!


அப்புத்தளையில் அத்தனையும் பார்த்தது
அத்தையின் மடியில் அமர்ந்து
அழத வண்ணம் அருகில் அப்புஹாமி 
அம்பஜாலுவ அண்டண்ட எப்பா ஆரத்தழுவினான் அன்பில்
அந்த நேரத்திலும்  !அப்போது
அவனோடு இருந்த என் பள்ளிப்பட்டம்
அவசரசமாக இடம் மாற்றி ஏற்றினார்கள்!


அழுதுபுலம்பி அகதியாக இடம்பெயர்ந்து
அத்தனை சொத்தும்
அழிந்த  பின் அறுந்து போன
அந்தப்பட்டங்களின் அவல 
அழகுரல் இன்னும் காதில்
அதுகடந்து ஆமர்ந்த தீவில்
அக்கினிச்சுவாலை என்று ஆமியின்
அத்துமீறல் அடியோடு விரட்டியது!


அகதியாக அந்த அம்மையாரின் ஆட்சியில்!


அதுகடந்து பட்டங்கள் பறக்காமல் சிக்கிய
அவலத்தை அறிந்த அனைத்துலக நாடுகள்
ஆருக்கும் சொல்லவில்லை போதனை
அடியோடு நிறுத்துங்கள்! இனவாத
ஆட்டம் என்றெல்லாம்!

ஆட்சியில் மாற்றம் வந்தபின் அன்பில்
அழைக்கின்றது அந்த ஊரைப்பார்க்க 
அன்பே வா !
அகதியாக அலைகடல்கடந்து
அடைக்கல நாட்டில் அடிப்படை உரிமையும்
அழகாய் உன் வாழ்க்கைப்பட்டமும்
ஆடிப்பற்றக்கின்றதே!


அது போல இழந்த அந்த சொத்துக்கள்
ஆளவிடமுடியாத அந்த உயிர்கள்
அலுப்புடன் சொல்லுகின்றேன்.
 அந்தப்பட்டத்துக்குப் பின் இருக்கும் அகதிப்பட்டம் அதுதரும் 
அழகான பட்டப்பறப்பு 
அனுபவதித்தால்தான் புரியும்!

அவலப்பட்டத்தை அடைந்து அது ஆடிப்பறக்கவும் அழகை நேரில்ப்பார்த்தால்
ஆட்சியாளர்கள் !
அதிகாரதோரனையில்
அலட்சியமாக அறுத்துவிட்ட நம் பட்டத்தை
ஆற்றுப்படுத்த வேண்டிய ,ஆணைக்குழுவும்,
அனைத்துலகசபையும்,
 ஆண்மையின்றி
ஆட்சியில் இருந்த அரக்கர்கள்
அறுத்த பட்டத்தின் வாழ்க்கைக்கு
அனுநீதிக்கு 
ஆட்சியாளருக்கு ஆர் தருவார்கள்
ஆயுள்சிறை ?

அதுவரை அந்தப்பட்டடமும்
அந்த உடல்கீறல்கழும்
அவலமாக
ஆடி என்றாலே பனையில் தொங்கும்
அகதியின் அடிமனசில் நினைவுகளாக
அந்தப்பனை அடிக்கடி வந்துபோகின்றது!
 அப்புஹாமி 
அம்பஜாலுவ அண்டண்ட எப்பா / சிங்கள மொழி  அப்புஹாமி அன்பான மாம்பழ் நண்பனே அழ வேண்டாம் என்றான் என்று பொருள் படும் தமிழில்!பால்ய நண்பன் என்பது அம்பஜாலுவ  என்று சொல்லுவது சிங்கள் மொழியில்!
அக்கினிச்சுவாலை -ஒரு  இராணுவ நடவடிக்கை!