31 May 2011

 ரசித்த படத்தின் பின்னே நானும்!

திரைப்படம் என்ற ரயில் பயணம் என்னை எல்லா இடங்களுக்கும் சுமந்து செல்கிறது .மேத்தாவின் கவிதையில் சொல்வது போல் இருட்டில் நிழலைத்தேடி ஓடும் மனம் என்ற வரிகள் எனக்குப் பிடித்தது.படம் பார்த்துக் கெட்டுப் போனவர்கள் வரிசையில் உன்னையும் சேர்க்கனும் என்று என் நண்பர்கள் திட்டும் அளவுக்கு நானும் சினிமா என்ற சக்கரத்தில் வளையமாக இருந்திருக்கிறேன்!

சகோதரமொழி நண்பர்களுடன் ஏற்பட்ட நட்பு தமிழ் திரையைத்தாண்டி ஹிந்திப் பக்கம் தாவிச்சென்றது!1980 இல் இருந்த ரசனையும் 1990 இன் பிற்பகுதியில் அதிகமான காதலை மட்டும் அரைத்த வண்ணம் இருந்த தமிழ் சினிமாவின் வெறுப்பும்  என்பதும் ஒருகாரணம்!

அவர்களுக்கு சகோதரமொழியில் வரும் படங்களை தாண்டி ஹிந்திக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் நாடறிந்தது இந்த மயக்கம் அசின் வரை பத்திக்கிச்சு!

நான் அதிகம் சாருக்கானின் படங்களை விரும்பிப் பார்ப்பேன் .என் அபிமான நடிகரும், கூட இந்த வரிசையில் கொழும்பில் பணியில் இருந்த போது ஒரு படத்தை வெற்றி கரமாக 60 காட்சிகள் திரையரங்கில் பார்த்தவன் நான் !வீனாப்போன ரசிகன் என்ற பட்டம்தந்தால் ஏறுக்கொள்வேன்!அந்தப் படம்!

தில் தோ பாஹல் ஹைய்(dil to pahal hai) சாருக்கானின் வெற்றிப் படவரிசையில் இது ஒரு முத்து .அழகான காதல் கதை நால்வரின் காதலை ஒவ்வொரு காட்சியும் ரசித்துப் பார்க்க வைத்த இயக்கம் யாஸ்சோப்ராவின் கைவண்ணம் ,படப்பிடிப்பு, நடிப்பு எல்லாம் பிடிக்கும் எனக்கு இப்படப் பாடல்கள் என்றும் என்கூடவரும் தாலாட்டு!

ஹிந்தியில் புகழ்பெற்றவர்கள் காதாநாயகர்கள் இருவர், மூவர் சேர்ந்து ஒன்றாக நடிப்பார்கள் இங்கே விஜய்காந்தும் ரஜனியும் சேர்ந்து நடிக்க மாட்டினம்!

இப்படம் கொழும்பில் லிபர்ட்டி மெஜிக் சிட்டி, கிரான்பாஸ் அசோக்கா மருதானை சென்றல் என சுற்றுவட்டாரங்களில் வெற்றிகரமாக ஓடியது யாஸ்சோப்ராவின் தயாரிப்பில் இக்காவியம் வெளிவந்தது சாருக்கானுடன் அக்சைக் குமாரும் போட்டிக்காக சில காட்சியில் வந்து போவார்!

 எப்போதுமே பிடித்த மாதுரிடிக்சித் ,கரிஸ்மாகபூர் என முக்கிய கதாப்பாத்திரங்கள் கதைக்கு உயிர் கொடுத்தவர்கள் .நிஜத்தில் இக்கதையில் வரும் கரிஸ்மா ஏற்ற பாத்திரம் என் நண்பி ஒருவரின் உண்மை நிலை!

உத்தம் சிங் இப்படத்திற்கு அற்புதமாக இசை அமைத்திருந்தார் .ராஜாவிற்குப் பிறகு இவரின் இசை என்னை கட்டிப்போட்டு துள்ளிக்குதிக்க வைத்தது .காலத்தின் கோலம் நல்ல இசையமைப்பாளர் பரிதாபகரமாக படுகொலை செய்யப்பட்டார்!ஹிந்தியுலகில் இவரின் இழப்பு பேரிழப்பு வெற்றிப்படியில் ஏறும் போது அந்தக் கொடுமையான மரணம் வந்துவிட்டது! 
இவரின் இசையை பின்னாலில் லவ்டுடே சிவா காதல் சுகமானது படத்திற்கு" அடி சுகமா சுகமா சுடிதாரே" பாட்டுக்கு சுட்டுப் போட்டிருந்தார்!

ஆறு பாடலும் பிரபல்ய மாகியிருந்தது இரண்டு பாடல் சகோதரமொழி வானொலியான சிரச வில் பாடல் தரவரிசையில் top 20 ஞாயிறு இரவு 10மணி தொடக்கம் 12மணிவரையில்  இடம் பெறும் நிகழ்ச்சியில் தொடர்ந்து 1,2 இடங்களை பெற்று முதல்தரவரிசையில் ஒருவருடம் நீடித்தது இது ஒரு சாதனையான விடயம் அன்நாட்களில் !!
தில் தோ பாகல்கேயும், ஹரரே ஹரகுச்சு கோகயா கோகின்ன பேரானா , பாடல்களை உச்சரிக்காத சகோதர மொழி வாலிப உள்ளங்கள் அன்று கிடையாது!நீண்டதூர   பேரூந்துப்பயணங்களில் ஒலிநாடா அறுந்து போகும் வரை ஒலிக்கும்,
அந்தளவுக்கு  வானொலியிலும் ஒலித்து ஒய்ந்தது.ஹரிஹரன் இப்படத்தில் titile பாடலை மிக இயல்பாக பாடி அதிகமாக வடஇந்தியாவில் பிரபல்யமாகியிருந்தார் பிறகுதான் தமிழில் புகழின் உச்சிக்குப் போனார். 
வட இந்தியாவின் இசைக்குயில் லதாமங்கேஸ்கர் இதில் இருபாடல் பாடியிருப்பார் .ஒருபாடலின் இடையே அவரின் ஹம்மிங் தமிழில் ஜொன்சியிக்குப் பிறகு அதிகம் கவர்ந்தது .கரிஸ்மாவின் ஒருதலைக் காதலுக்கு இசைவாக வரும் பாடலில் இந்த ஹம்மிங் இசைக்குயிலின் குரல் ஊடாக முன்னால் நண்பனின் முன்னால் தோழியின் நினைவு வந்து போகிறது.

இன்னொருபாடல் மழையில் பாடுவார்கள் இதை தமிழில் அறிந்தும் அறியாமல் படத்தில் இரண்டாவது ஹீரோவிற்கு கொடுத்து மூலப்பாடல் காட்சியை கொத்துப் பரோட்டாவாக்கியிருப்பார்கள்!

படத்தில் கரிஸ்மாகபூர் நடிப்பில்  ஒரு காட்சியில் அவரின் காலில் ஏற்படும் நரம்பு விலகும் காட்சியில் கமரா அவரின் காலைச் சுற்றி ஓடும் சில கனங்களில் காட்டும் பாவனை மயூரி படத்திற்குப் பின் என்னை மிகவும் பாதித்தது .வெற்றியடையும் போதுவரும் தடங்கள் ஆண்மாவை உலுக்கும் அப்படித்தான் இதில். கரிஸ்மா பரம்பரை நடிப்பில் தன் தந்தையை நிரூபித்திருப்பார்!

மதுரிடிக்சித்தின் நடிப்பை சொல்ல இரண்டு பதிவு போடலாம்! ஏற்ற பாத்திரத்தை  பானுப்பிரியா போல் சிறப்பாக செய்யக்கூடியவர் .இவரும் சன்சய்தத்தும் நிஜத்தில் ஜோடி சேரப் போவதாக அன்நாளில் நாளிதழ்கள் பத்திவெச்சது!
சாருக்கானின் நடிப்பை குறும்பை, ரசித்துப்பார்த்தேன்!

இவர்களைத் தாண்டி இப்படத்தில் அக்சைக்குமார் வந்துபோகும் காட்சி செய்யும் தியாகம் என் முன்னால் நண்பனுடன் காலிமுகத்திடலில்  மாலையில் தோன்றிய வாக்குவாதம் இரவு கொழும்பு-12 இல் வந்து சேரும் வரை.  இரு மொழிகளில் ஆட்டோக்காரன் காதை மூடிக்கொள்ளும் அளவுக்கு  நீண்டது. என் நட்புக்கு  முடிவுரை எழுதிய கனங்கள்..!

இப்படிபல விடயங்கள் இப்படத்தோடு  என் நினைவில் வந்து போகிறது .எப்போதும் மனதிற்குள்  சிலரை நினைக்கும் போது என் அலுமாரியில் இப்படத்தை தேடி எடுத்து சில காட்சிகள்  ரசித்தால் சில வருடங்கள் பின்னோக்கிப் போகிறது மனசு!

இப்படத்திற்கு தமிழில் யாரோ ஒருவர் யாருக்காகவோ எங்கேயும் எப்போதும் காத்திருப் பார்களாம்! காலம் சரியாகத்தான் மொழி பெயர்த்திருக்கு போல்!

30 May 2011

 கெயிட்டியும் நானும்!

திரைப்படம் என்ற மூச்சுக்காற்று என்னுடன் ஒட்டிக்கொண்ட ஒரு மலையட்டை போன்றது! அது இரத்தம் உறிஞ்சும். திரை பணத்தை ஆட்டை போடும்!
 1999 பிற்பகுதியில் ஒன்று கூடலிற்கு கொழும்புக்கு வந்திருந்தேன் !கொழும்பு வந்தாள் யாரைப் பார்க்கா விட்டாலும் இரண்டு நண்பர்களை தவற விட்டதில்லை ஒன்று கொச்சிக்கடை அந்தோனியார் ,மற்றவர்கள் கொழும்பில் இருக்கும் திரையரங்குகள்!. 
 பொழுது போக்கு என்ற சாதனத்தைத் தாண்டிய ரசிகன் நான் அதனால்தான் எல்லாவிதமான(தமிழ்,ஹிந்தி) படங்களையும் பார்ப்பேன்.
 இப்படியான தருனத்தில் ஒரு நாள் சனிக்கிழமை 2.30 காட்சிக்கு சீனு படம் பார்த்தோம் நானும் நண்பரும் .நண்பர் வெளிநாட்டுப் பயணத்திற்காக கொழும்பில் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். 
 இந்தப்படம் ஒரு சங்கீத வித்துவானின் கதையைச் சுற்றியது நமக்கு கார்த்திக்கின் நடிப்பைவிட தேவா வின் இசையை விட மாளவிக்கா எப்படி மனசுக்குள் (கார்த்திக்கின்)  வந்தா! என்பது தானே முக்கியம். இந்தப் படம் ஓடிய திரையரங்கு கொட்டாஞ்சேனை கெயிட்டி . இதைத்தாண்டித்தான் சீஹவுஸ்  போகனும் (சீஹவுஸ் நட்சத்திர விடுதி)இதை நான்  பிறகு ஒரு பதிவில் போடுவேன் .வார இறுதியில் மைந்தன் சிவாவின் நண்பர்கள் சிலர் இங்கு முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவதாக ஒரு பட்சி சொல்லுகிறது மாப்பூ நிஜமா?
 கெயிட்டிக்கு எதிரில் நவீன் செரமிக் காட்சியறை இருந்தது! 
..
படம் பார்த்துவிட்டு வெளியில் வருவதற்கு  காஸாவின் எகிப்தின் எல்லைக்கதவு திறந்துவிட்டது போல் நாங்களும் முண்டியடித்துக்கொண்டு வெளியில் வந்தாள் !ராஜாக்கள் எங்களை கூஜாக்களாக ஸகிலா படம்பார்கப் போனவர்களைப் பிடிக்கப் போன கலாச்சாரகாவலர் போல் பாதுகாப்பு சோதனை என்று இரானுவத்தினர்  வெளிக்கதவை மூடிவிட்டு விசாரனைப் படலத்தை தொடங்கினார்கள்!

அதுவரை மாளவிக்காவின் மயக்கத்தில் இருந்த நண்பன் .தன் இரட்டைக் குழந்தையில் ஒன்றை லாச்ஜில் கிடத்திப் போட்டு வந்திருந்தான். தேசிய அடையாள அட்டையும், பொலிஸ் பதிவு அட்டையும் தான் இந்தக் குழந்தைகள்! அவனிடம் அக்கனங்களில் தேசிய அடையாள அட்டை மட்டும் இருந்தது!

இரானுவத்தினர் ஒவ்வொருத்தராக பார்த்துக்கொண்டு  வெளியேற்றிக் கொண்டிருந்தனர். நண்பருக்கு ஊரில் உள்ள தெய்வங்கள் வந்துகொண்டிருந்தது துனைக்கு! என்ன செய்யலாம் என என்னிடம் கேட்டான் பொறு கதைக்களாம் ரூமில் யாரு இருப்பான் என கேட்ட போது இன்னொரு நண்பரின் கைபேசி இலக்கத்தின் ஊடே அவனின் நண்பரின் பெயரையும் சொன்னான் .
.
என்னிடம் எப்போதும் பணம் இருக்காமல் போகும்  பதிவுகள் சரியாக இருக்காமல் போகாது. விரைந்தவாரே இரானுவத்தினர் சோதனையிட்டனர் உடலில் உச்சி முதல் பாதம் வரை வெடிகுண்டு தேடியவர் முகத்தில் விழுந்தது மண்னே! இப்போது ஏற்படும் முதுகுவலிக்கு அவர்களின் உரம் ஏறிய கைகளின் மசாஜ் தேவைப் படுகிறது!


நண்பரை சோதனையிட்ட போது இவனுட்ட சொல்லுடா நான் வெளிநாடு போக வந்தனான் வெடிகுண்டு என்னிடம் இல்லை என்று பொலிஸ் பதிவு ரூமில் இருக்கு வந்தால் காட்டுவன் என்று! நண்பனுக்கு நான் என்னவோ யக்காசி அக்காசி என்ற எண்ணம் போல்!  அதுதான் வந்துபார் என்ற கூற்று பணியில் இருக்கும் போது பின் செல்ல முடியாது இதுதான் இரானுவ வீரர்களின் கடமை ஒழுங்கு உரிய இடத்தில்  எல்லா ஆதாரங்களும் இல்லை என்றாள் அவனை/அவளை கொண்டுவா(கொன்றுவா) இதுதான் இரானுவ நீதீ!  சகோதர மொழியில் நான் என்னவோ பண்டிதன் என்று நினைப்பு என் நண்பனுக்கு உண்மையில் மொழியைத்தாண்டி தமிழன் என்றாள் எல்லாரும் புலி ,பிரிவினைவாதி ,என்பது தானே அவர்களின் தீர்மானம். 
கெட்டதிலும் நல்லதுபோல் நான் (சகோதரமொழியில்) கூரினேன் அவன் நாளை மாலை வெளிநாடு போகின்றான்  இன்று சந்தோசமாக இருக்கனும் என்றுதான் படம் பார்க்க வந்தோம் இது சத்தியம்.! எனது புத்தரே! நான் சொல்வதை ஏறுக்கொள்  நான் சொல்வது உண்மை இப்படியான வாக்கியங்களை கூறும் போது அவர்களின் கண்களைப் பார்த்து கூறவேண்டும்  ஏனெனில் அவர்கள் இருப்பது மது போதையிலும் மல்(இதுகஞ்ஜா) தமிழில் என்கின்ற போதையிலும் தான் அதிகம்! இதை மறுக்கும் வலையுலகில் கொலை மிரட்டல் விடும் வீரபுருஸர்களுக்கு என் மூடப்பட்ட வரலாறுகளின் ஊடே தர்கம் புரிய நான் தயாராக இருக்கிரேன் ஆனால் போதிய நேரம் ஒதுக்குங்கள் ஏனெனில் நானும் புலம்பெயர் தேசத்தின் வலிகளை தனிமரமாக சுமக்கின்ரேன்! 

இதைப் புரிந்து கொண்ட இரானுவத்தினர் எங்கள் இருவரையும் போங்கள்   என்று வெளியில் விட்டார்கள் குவாந்தனாமோ சிறையில் இருப்பவர்களை பராக் ஓபாமா வெளியில் விட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு ஆனந்தம் எமக்கு!

பின்னாளில் இத்திரையரங்கு மூடப்பட்டுவிட்டது இன்று எப்படி இருக்கு என்பது நானறியேன்!

27 May 2011

விளம்பரத்தில் உள்குத்து!!

விளம்பரம் ஒட்டுவது ஒரு பகுதி குறும்பு !
அதில் மறக்க முடியாதது நான் வேலை செய்த   2003 இல் . யாழ் பகுதியில் போட்டி நிறுவனங்கள் அதிகம்  சந்தைப்படுத்தல் வேலையில் எனக்கு அதிக நண்பர்களும் சில விரோதிகளும் எப்போதும் கூட இருப்பார்கள் .இப்படியானவர் செய்யும் கூத்து உள்குத்துவை விட அதிகமான ஜாலி நிறைந்தது.
 நானும் என்னுடன் முன்னர் வவுனியாவில் வேலை செய்த பல நண்பர்களையும் பல்தேசியக் கம்பனிகள் யாழிற்கு இடம் மாற்றி எங்கள்  சுதந்திரங்களை பறித்து நல்ல பிள்ளைகளாக ஊர்ச்சனங்கள் பார்வையில் பந்தாட விட்டது. !

எங்காவது தலைக்கறுப்புக் கண்டால் ஒன்றை பத்தாக்கும் பக்கத்து வீட்டு பெருசுகள் காவல் என்ற பெயரில் எத்தனை   கொடுமைகள் !நிம்மதியாக புதுப்பட விளம்பரம் எல்லாம் பார்க்க முடியாது ஆவலம்!

இப்படித்தான் ஒரு பொழுது என் போட்டி நிறுவனத்தில் வேலை செய்யும் நண்பர் அதிக இடங்களில் விளம்பரம் ஒட்டியிருந்தார் !கொஞ்சம் ஒரு பகுதியில் எனக்கும் இடம் கேட்டேன் .
அவர் இல்லை என்பதுடன் அதிகமாக பேசினார் நீங்கள் மழைக்கு முழைத்த  காலாங்கள் இவ்வளவு நாளும் (சாமாதானத்திற்கு முன்) நான் பாதுகாத்த இடம் என்றார்.அவை அரசின் தவறு எனதல்ல!

இவருக்கு மேலதிகாரியாக இருக்கும் சகோதர மொழி நண்பர் எனக்கு நண்பர் ! 
நாங்கள் ஒன்றாக ஒரே நிறுவாகத்தில் வேலை செய்தவர்கள் அவருக்கு அதிக பின்புல உதவிகள் இருந்தது இதனால் வேறு நிறுவனத்திற்கு உயர் பதவிக்குப் போனார் . ஆனாலும் நானும் அவனும் ஒன்றாக தொடர்பில் இருந்தோம் .இருக்கிறோம்!
  
இக்காலகட்டத்தில் அதிகமான வெளிமாவட்ட நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள் என்னுடன் .தென் இலங்கையில் இருந்து இப்பகுதிக்கு வரும் சந்தைப்படுத்தல் ஊழியர்கள், மேலதிகாரிகள் எங்கள் குழுவை கானாமல் போகமாட்டினம் .அந்தளவுக்கு புகழ் பெற்றவர்கள் இல்லை நாங்கள் !ஆனாலும் விற்பனை விசயங்களில் பலதகவல் பெறுவதற்கும் எங்களின் மேலதிகாரிகள் அவர்களுக்கு தெரிந்தவர்களாக ,,உறவுக்காரர்களாகவும் இருப்பார்கள்!இதனால் எங்களிடம் போனால் உதவி கிடைக்கும் என கூறிவிடுவார்கள் சிலசமயங்களில் கைபேசியில்  இனைத்தும் விடுவார்கள்!

அவர்கள் வந்தாள் முகமாலை தாண்டி நேராக நாங்கள் வேலைமுடித்து வரும் எங்கள்பகுதிமுகவர் இடத்தில் காத்திருப்பார்கள்!

பிறகு என்ன யாழ் எங்களின் கையில் என்பது வடிவேல் போல் பிரச்சாரப் பீரங்கிதான் தங்குவதற்கு விடுதி தயார் செய்வது தாக சாந்திக்கு மிலேனியம் சிற்றிக்கு( கலட்டிப் பகுதிக்குப் டாஸ்மார்க்)போவது ,ஆரிய குளம் புத்த கோயில் என மாலை நேரம் இவர்களுடன் கழியும் .நல்ல நண்பராக வருபவர்கள் மெண்டிஸ்,அதிவீசேஸம், உள்ளே போனால் இவர்களின் நிறுவாகக் கூத்து வெளியில் வந்திடும் வாந்தியுடன் அதன் பிறகு எங்களிடம் இவர்கள் கருனாநிதி போல் துண்டை போட்டுக்கனும்.

உண்மையில் எனக்கு அதிகமான வெளிமாவட்ட நண்பர்களை வவுனியாவில் பணியில் இருந்தபோதுதான் சிநேகம் பிடித்தேன் .இத்தொழிலில் நல்ல நட்பு இருந்தால் வியாபார வெற்றிக்கும் பதவியை உயர்த்துவதற்கும் உதவியாக இருக்கும் உத்தி புரிந்தவன்!

அந்த நண்பருக்கு சரியான ஆப்பு வைக்கனும் என்று காத்திருந்தேன் !அப்போது மற்ற நண்பர் கூறினார் அவரின் மேலதிகாரி 2நாட்களில் வருவதாக! நானோ என்னுடைய உயர் அதிகாரிகள் வந்திருந்தனர் எரியும் அடுப்பில் எண்ணை ஊற்றுவதுபோல்! 

அவனின் விளம்பரங்கள் அதிக இடங்களில் அழகாய் இருக்கிறது நீ விற்பனையை மட்டும் பார்க்காத இவற்றையும் கவனம் எடுக்கனும் என்றார் என் அதிகாரி .அவருடன் வந்த இஸ்லாமிய நண்பர் தன் மேதாவித்தனத்தை என்னிடம் காட்டினார் .நீ என் பகுதிக்கு வா இரண்டு நாள் எப்படி விளம்பரத்தை கையாளுவது என சொல்லித்தருகிறேன் என்று!

இருவருக்கும் அட்டமத்தில் சனி .எனக்கு இது பெரிய விடயம் இல்லை ஆனால் இங்கே மினக்கடும் நேரத்தில் சந்திரன் மினியில் நல்ல படம் பார்க்கலாம்!

மறுநாள் வழமையாக வேலை செய்துவிட்டு இரவு விளம்பரம் ஒட்டுவது எனத் தீர்மானித்தேன் .இரவுச்சாப்பாட்டை நேரத்துடன் முடித்துக் கொண்டு என் உதவியாளருடன் கிளம்பினேன் நகர்வலம் .

மதியம் என் மற்றைய நிறுவன விளம்பரங்களை அவர்களின் உதவியாளரிடம் என் மற்றைய உதவியாளரைக் கொண்டு வாங்கி என் வாகனத்தில் வைத்துக் கொண்டேன்!
.

போட்டி நிறுவனங்களின் விளம்பர பாதாதைகள் ஆமியின் ஆக்கிரமிப்பாள் அழிந்த மதில்கள் மீது சிரித்துக் கொண்டிருந்தது!
எனது போட்டி நிறுவனம் சவற்காரங்களும்,
சலவைத்துணித் தூள்களுமே!
எப்போதும் இன்னொருவரை சின்டு முடியனும், நண்பர்களை சண்டைக் கோழியாக்கனும் என்றாள் நாங்கள் இதில் பட்டப்படிப்பு முடித்தவர்கள்!

அது சின்ன அரசியல் போட்டி !நிறுவன விளம்பரங்களை கிழித்துவிடனும் ,,தயாரிப்பில் புரளியைக் கிளப் பினால் ஒரு கிழமை, வியாபாரம் மந்தமாகும் மேலதிகாரி சின்னப் புள்ளையிங்களை செந்தமிழில் கொஞ்சுவார் இவனுங்க முகத்தை காதலி கப்பல் ஏறிப்போனது போல் வைத்துக் கொண்டு மிலேனியம் சிற்றியை (டாஸ்மார்) தமிழக காங்கிரஸ் காரியாலயம் போல் கதிரையை என்ன சுழற்று சுற்றுவார்கள்.


அன்று இரவு எனது விளம்பரங்களை ஒட்டிவிட்டு என் பாசக்காரனின் விளம்பரத்திற்கு மேல் பிரபல்யமான பால்மா விளம்பரத்தை பல இடங்களில்  குறுக்கே ஒட்டிவிட்டேன்!

  இப்படிச் செய்தால்
உருண்டு புரல்வது அவர்கள் தான் !மறுநாள் வியாபாரத்தை மறுந்து வேட்டியை கிழிக தயாராவார்கள்!
அடுத்த நாள் இவரின் மேலதிகாரி முகமாலை சோதனை தாண்டி உள்ளே வர நான் வன்னிக்குள் போய்க் கொண்டிருந்தேன்!

மறுநாள்  வன்னி தாண்டி வேலைக்குப் போய் கொண்டிருந்தேன் முகமாலை ஊடாக  கொடிகாமத்தில் பால்மாவின் விளம்பரம்  சந்திகளில் பாட்டிமாரின் கந்தல் ஆடை போல் கிழிந்த்துக் கொண்டிருந்தான் என் போட்டி நிறுவன பாசக்காரப்புள்ள என் காரில் ஒலிக்கிறது "அய்யோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு"" ரிதம் படப்பாடல்!

26 May 2011

வேலிகளைத் தாண்டி !!

எங்கள் ஊரில் வீட்டைச் சுற்றிய எல்லைகளை வரையறுப்பது வேலியாகும் . வேலி போட அதிகமாக கிளுவங்கதியால். சீமேற்கிளுவை, பூவரசம் கதியால், பயன்படுத்தப் படும் சில இடங்களுக்கு காவோலையுடன் கூடிய கருக்கு மட்டையாளும் அடைக்கப் படும் .

சுற்றிய பகுதிகள் நாலுபுறமும் வேலி என்றாள் அதை அடைப்பதற்கே படும் பாடு சொல்லிமுடியாத ராமாயணம் அப்படி அதிகமான வேலைப்பாடு. 

எங்கள் ஊரில் கோடைகால தொடக்கத்தில் ஆதாவது பங்குனி காண்டாவன வெய்யிலைத் தொடர்ந்து வேலியில் கைவைப்படும்! முன்னரே கதியால்கள் தயாராகிவிடும்   ! இந்த நேரத்தில் தான் சுவாரசியமான காட்சிகள் அரங்கேறும்.
..
வேலிபோட அதிகாலையில் அதற்கான ஆட்கள் இருவர்,சமயத்தில் மூவர் என வருவார்கள் இவர்களிடம் பளபளப்பான கூரிய கத்தி கொண்டுவருவார்கள் கதியாலை இவர்கள் வெட்டும் அழகே தனி ஆவர்த்தனம்!
.
அவர்களுக்கு பால் கோப்பியைப் கொடுத்து குடித்த பின்னர் தொடங்குவார்கள் வேலையை .வடக்கு வேலியில் தொடங்குவதுதான் சம்பிரதாயம் ஏன் என்று நானும் கேட்டதில்லை சிறுவயதில் .இன்றும் தெரியாது சிதம்பர ரகசியம்.உக்கிப்போன கதியால்கள் விறகாகும் அவை புடுங்கப்படும் (பிறகு ஆமி வந்தப் பிறகு வேலியே போட்டதில்லை).

புடுங்கிய பகுதியில் அலவாங்கு மூலம் (இரும்பில் செய்த கூரான சிரிய ஆயுதம்)ஓட்டைபோடுவம் மண்ணில் ( 
பிறகு இந்த வேலையை செல் செய்தது) அதன் இடுக்குள் கிளுவம் ,கதியால், சீமேற்கிளுவை, பூவரசு என மாறிமாறி வருமாறு கதியாலை நடுவம் இந்த நேரத்தில் தான் பக்கத்து வீட்டுக்காரன் பங்கி மூன் போல் நித்திரை கொள்ளாமல் கண்ணுக்குள் எண்ணை விட்டுக்கொண்டு கண் கொத்திப் பாம்பாக  அவதானித்துக் கொண்டிருபார்கள். ஏன்? என்றால் ஒவ்வொரு முறை வேலி போடும் போது சிலர் ஒவ்வொரு அடியாக எல்லையை பெருப்பித்து விடுவார்கள் . பிறகு சொல்ல வேண்டுமா இரான் இராக் போர் எல்லாம் வெறும் தூசு குடிமிச்சண்டையும் குத்து வெட்டுக்கும் குறைச்சல் இல்லாத பூமி . அந்தளவு பாசக்காரப் புள்ளையிங்க ஆனால் நல்லது கெட்டதுக்கு இவங்கதான் அடுப்பில்  சமையல் செய்வதில் முன்னுக்கு நிற்பது.நான் அறிந்தவரை ஒரு கதியாலுக்கு வழக்குப் பேசியவர்கள் பலர் .ஒரு அடி கதியால் குட்டி போட்டது என்று பிறகு தீர்ப்பும் வந்தது (ஆதாவது நட்டகதியால் பெருப்பது இயல்பல்லவா வழக்கை நீடிக்காமல் இருக்க அப்படி செய்தாராம் நீதிபதி)கமநல கோர்ட்டில் .இது உண்மை முன்னர் மாட்டு வண்டியில் பாராளுமன்றம் போன அமைச்சரின் பரம்பரைக்கதை இது.  இதை என்றும் எங்கள் ஊர் பெரிசுகள் பேசும் .
 இப்போது அந்தப் பகுதி எல்லாம் கடற்படை ஆத்துமீறீ அரனாக்கி எங்களை அகதியாக்கினது உலகறிந்த கதை.
 

வேலிபோடும் போது பாதிக்கப் படுவது எங்க ஊர் ஆடுகளும் சின்னவர்கள் நாங்களும் தான்.ஆடுகள் பொட்டுக்கலால் பூந்து போய்விடும் ,எங்க வீட்டில் சாப்பாடு சரியில்லை என்றாள் அடுத்த வீட்டு அடுப்படியில் போய் நின்றாள் சோறு ஊட்டிவிடுவினம். போகாமல் இருக்க ஆடுகளுக்கு முக்கோன வடிவில் தடியை கழுத்தில் மாட்டிவிடுவார்கள்.ஆடுகளால் பூந்துபோக முடியாது! பொட்டை அடைத்தால் வெளிப்படலையாள் போகனும் அப்போது வீட்டில் உள்ளவர்கள் கண்டுவிடுவார்கள்.பிறகு எப்படிப் போவது!

நாங்கள் வேலி போடும் போது குத்தூசி எப்படி(இரும்பினால் ஆன மெல்லிய ஊசி பெண்களிடம் சேட்டை புரிந்தாள் கொக்குத்தடிச் சத்தகமும், இந்த ஊசியும் தான் முதலில் வரும் ஆயுதங்கள்) இந்தப்பக்கம் இருந்து மறுபக்கம் சரியாக வருகுது என்பதில் ஆராட்சியில் இருபம் பிறகு புரிந்து கொண்டோம் இப்பக்கத்தில் உள்ளவர் கையை குத்திக்காட்டும் இடத்தில் மறுபுரத்தில் இருப்பவர் துழை இடுவார் என்று.

சிலகனங்கள் கவனம் தவறினால் குத்தூசி கண்ணை காவு வாங்கிவிடும் பிறகு ஊசிகுத்திய என்ற அடைமொழி அவனுடன் சேர்ந்து விடும் . இன்று எங்களுக்குள் சிலரை அறிமுகம் இல்லை என்றாள் இப்படியான சம்பவங்களைச் சொன்னால்  சுலபமாக ஞாபகம் வந்துவிடும்!

வேலி அடைக்கும் போது பாட்டுப் பெட்டி(redio) இப்படித்தாங்க நம்மூரில் சொல்லும் வட்டார பாசை! அதுவும் வேலியில் எங்காவது தொங்கும் அப்ப பற்றிதான் அதுவும் எவரெடி .

இலங்கை ஒலிபரப்பு,திரைகடல் ஆடிவரும் தென்றல் -திருச்சிராப்பள்ளி வானொலி, இப்படிதான் எங்கள் காதில் தேன்பாயும்!

அப்போது புதிய பாடல் வரிசையில் "" ஓமானே மானே உன்னைத் தானே" பாடல் பிரபல்யம் இப்பாடல் ஒலிக்கமுன் k.s ராஜாவின் குரலில் குறியிசையைத் தொடர்ந்து பாடல் வரும் அதையும் மீறி அடுத்த வீட்டில் இருந்து ஒரு குயில் பாடும்
எனக்கு விஞ்ஞானப் பாடத்தில் சோடியத்தின் இராசாயனக் குறீயீடு பாடம் இல்லை இந்தப் பாடல் அத்துப்படி இதற்கு காரணம் !..

..தொடரும்!

25 May 2011

கேட்டாளே ஒரு கேள்வி!!!

 நீண்டகாலத்தின் பின்பு நேற்று என்னுடன் முன்னர் வேலை செய்த பிரென்ஸ்சுக்காரி பின்னிரவில் சாப்பிட என் வேலைத்தளத்திற்கு வந்தாள்.


 சாப்பாட்டுக்கடையில் பிறகு எதற்கு பின்னிரவில் வருவாள் என்று குதர்க்கேள்வி  வேண்டாம்! குடிக்கவும் ஆடவும் வசதியுண்டு!
  என்னக்கும் நேற்று அதிகம் வேலையில்லை .என்னுடன் பலவிடயங்கள் கதைத்துக் கொண்டிருந்தாள் .இந்த 4 வருடங்களில் என் வாழ்வில் பலமாற்றங்கள் நடந்து முடிந்துவிட்டது என்றேன்!
 முக்கியமாக கலியாணம் செய்ததைக் கூறும்போது நீ மிகவும் இனவாதி என்றாள் (அவர்களில் சிலர்  நமது கலாச்சாரம் ,சம்பிரதாயங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை )இங்கே எத்தனையோ பெண்களில் ஒருத்தியை பார்க்காமல் உன்நாட்டில் கலியாணம் ஏன் கட்டினாய் என்றாள் !. ஏன் ஒருவருடத்தில் விவாகரத்து  எடுக்கனுமா? என்றேன் நீ ஒருநாளும் திருந்தமாட்டாய் இவளும்  இப்படித்தான் என்னைச் சொல்லுகிறாள் '!மனதுக்குள் திட்டிக்கொண்டேன்.

நீ எப்படி இருக்கிறாய்? என்ன செய்கிறாய் ?என்றேன்!  புதிய இடத்தில் வேலை மெதுவாகப் போகின்றது தன் காதலன் தான் கொஞ்சம் மோசம் என்றாள் !

இருக்காதே .!அவன் நல்லவன் என்றேன் !நானும் அவனும் இந்த வேலையில் 3வருடங்கள் ஓன்றாக பணியாற்றினோம் .அவன் போனதன் பின்பே நான் அந்தப் பதவியில் இருக்கின்றேன் .

அவனிடம் எல்லாம் பிடிக்கும் எனக்கு .ஆனாலும் அவனிடம் அதிக பொறுமையும்,இறுதி நேரத்தில் புகை ஊதும் பழக்கத்தாலும்  மேலதிகமாக நேரம் பணி நீண்டுபோய்விடும்  அதனால் நான் ரயிலை தவறவிடும்  அவலம் சில நாட்களில் ஏற்பட்டது .அதன் பிறகு நானும் கருத்து வேறுபாடு கொண்டு இருக்கும் போது அவனும் அதிக சம்பளம் என்று கூறி வேறு இடத்திற்கு சென்று விட்டான். இருந்தாலும் இடைக்கிடை தொலைபேசியில் கலாய்ப்பான்!  

களியாட்ட  விடுதிக்கு (டிஸ்கோத்தைக்)போகுபோது மறக்காமல் எனக்கு ஊசுப்பேத்துவான். நீ வா நான் காசு கொடுக்கிறேன் .என் நண்பிகளை உனக்கு அறிமுகப் படுத்துகிறேன்  .வாழ்க்கையை அனுபவி .என்று  இந்தப் பச்சப்புள்ள கெட்டுபோக வழி சொல்லும் அளவிற்கு நல்லவன்! சிலகாலத்திற்கு முன் களவாடப் பட்ட என் கைபேசி போனதுடன் அவனின் தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.

இங்கு ஆண்கள் பெண்கள் எல்லாவற்றையும் ஒழிக்காமல் பேசுவதால் சிலவேளையில் சங்கடமான தருங்களில்  நான் ஒன்றும் கூறுவதில்லை  பள்ளிக்கூடம் விட்டால் மதில் மேல் ஏறி இருந்தால் மாமா சொல்லுவார் தம்பி கோழி மேய்த்தாலும் கோபுர மெந்தையில் மேய்க்கனும் என்று பிறகு எப்படி நாங்கள் தெரிந்து கொள்வது அர்த்தங்களை!

ஏன் அவனுடன் கருத்துமோதல் என்றேன்!  எனக்கு குழந்தை வேணும் பலகாலமாக சொல்லிப்பார்த்திட்டன் காலம் கடத்துரான் !நான் அவனைப் பிரியப் போறன் என்றாள் ஒரு போத்தல் வைன் உள்ளே போனதன் பின்பு !அடிப்பாவி மூன்றாம் பேர்வழி என்னிடம் உள்வீட்டு விவகாரத்தை சொல்லும் இவளுக்கு நான் என்ன தீர்வை கூறுவது.

சிவா என் பெயரை  அவள் கூப்பிடும் அழகு ஒரு வித்தியாசமானது( உண்மை நம்புங்கோ) நீயே சொல்லு எங்கள் நாட்டு ஜனாதிபதிக்கு  இரைட்டைப் பிள்ளை பொறக்கப் போகுது .இந்த வயசிலும் அவர்(தொடர்ந்து கூறியது ஆபாசமானது)  எப்படி இருக்கிறார் .இந்த விசயம் எல்லாம் உனக்குத் தெரியாதா ?  என்ற நமீத்தாவின் தங்கையிடம் (கானும் யாரையும் மச்சான் என்பாள் இவளும்) தப்புவதற்கு இடையில் தொண்டமானாறுவில் தீர்த்தம் ஆடி வந்துவிடுவன்!
 உனக்கு என்ன சாப்பாடு தயார் செய்ய என்று கதைப்போக்கை மாற்ற நினைத்தேன். அவளின் வைன் போத்தல் இரண்டாவது ஆட்டம் தொடங்கியது .உனக்கு எப்பவும் அவசரம்  .இல்லாடாச் செல்லம்( இப்படிச் சொன்னால் அவள் சிரிப்பில்  ஹாசினி தோற்றுவிடுவாள் அட பாய்ஸ் படம் பார்த்து வந்த வினை).


என் நேரம் முடியுது உனக்கு சாப்பாடு வேனுமா?  சிவா உனக்கு என் மேல் அன்பு இல்லையா?உள்ளே போன வைன் பேசுகிறது. அடிப்பாவி !மனிசி நாட்டில் இருக்கிறாள் நான் அன்பு வைக்க.  உன் மேல் அன்பு  வைத்தால் என் குடும்பத்தில் அனுமான் அன்று இட்ட தீ போல் ஆகிவிடும் என் வாழ்வு. என்ன ஜோசிக்கிறாய் இல்ல நாங்கள் பணங்காட்டு நரிகள் பிரென்ஸ்சுக்காரியின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்சமாட்டம்!

 ஆத்தாடி இவள் இன்று எனக்கு அலுப்புக்கொடுக்க வந்திட்டாளே! உன் காதலன் கைபேசி இலக்கம் சொல்லு நான் கதைக்கிறன் என்ற பின் அமைதியானாள்!
எனக்குப் பசியில்லை என்றாள் எனக்கும் சுகமாப்போச்சு  வேலையில்லை முதலாளியிடம் நான் போகிறேன் என்றேன் .
அவனுக்கும் இவளின் அறுவை தாங்க முடியவில்லை.  உன்னுடைய செல்லத்தைக் கூட்டிக் கொண்டு போ ! இங்கு வேலைத்தளங்களில் அதிகமாக ஆபாசம் பேசப்படும். அதன் பின் எடுதேன் ஓட்டம் ரயிலைப் பிடிக்க  கிழக்கே போகும் ரயில் வரும் நேரம் பின் இரவு 1.10 நிமிடம். 

24 May 2011

 ஜாலியான சமையல் நண்பர்களுடன்!

நீண்ட நாளாக தனியாக சமைத்துக்கொண்டிருக்கும் இந்த தனிமரத்திடம் என்ன சமையல் நீங்க செய்வீர்கள் என்று புலத்தில் இருந்து கேள்வி வந்தது?  என்னடா இப்படி எல்லாம் ஜோசிப்பாங்களா !என மதியிடம் தொடர்பு கொண்டேன் !
கொஞ்சம் பொறுங்க மதி   என் மேலதிகாரி! நீங்க தப்பாக மதிசுதாவிடம் போய்விடாதீர்கள்! அவர்பாவம்  மிகவும் வடைகிடைக்கிது இல்லை என்று கடுப்பில் இருக்கிறார்!
 அவர் சொன்னதை அவருக்குத் தெரியாமல் வலையில்  இடுகிறேன் உலையில் போடுவது நீங்கள் தான்!
  ஸ்பையின் சோறு(riz espagnol)
......,,,
தேவையான மூலப் பொருள்கள்
 1   கிலோ முத்துக்கருப்பன் வெள்ளைப் புழுங்கள் அரிசி.
 3 குடைமிளகாய் சிவப்பு
3குடைமிளகாய் பச்சை 
3குடைமிளகாய் மஞ்சல்

5 பெரிய வெங்காயம் (தேவை அதிகம் என்றாள் வாஜ்பாயிடம் கேளுங்கள்) 
 1 ..தேக்கரண்டி  மஞ்சல் தூள் (தேக்கரண்டி மதிசுதா தம்பியிடம் அதிகமாக கிடைக்குதாம் கொசுறு தகவல் )
200 grame பதப்படுத்திய பண்டி இறைச்சி (கொஞ்சம் பொறுங்கோ பரந்தனுக்குப் போட்டுவாரன்,  நித்தியண்ணாவின் பாடல் வருகிறது காற்றில்! கள்ளுக்கடைப் பக்கம் போகாதே! அண்ணா நான் நல்ல பொடியன் இறைச்சிக்குத்தான் போறன்)!
 3   தேக்கரண்டி ஒலிவ் எண்ணை (கூடினால் கொலஸ்ரோல் வருமாம் நிசமா தோழி ஹோமா!)
       
........செய்முறை -: 
                 
     அகண்ட சோற்றுப் பானையை அடுப்பில் வையுங்கள். கொஞ்சம் சூடேறியதும் ஒலிவ் எண்ணையை ஊற்றுங்கள் பானையுள் .அடுப்பில் அல்ல .பின் சிறுக வெட்டிய வெங்காயத்தை கலக்கவும் அதன் பின் குடைமிளகாயை சிறுதுண்டுகளாக வெட்டியதையும் கலக்கவும். அத்துடன்  அரிசியையும்  சேர்க்கவும் .பின்  பண்டி இறைச்சியையும் கலந்துவிட்டு இறுதியாக அரிசிப்பானையில் அரிசியின் அளவில் 2 இஞ்சியளவு உயரமாகுமாறு  பச்சைத் தண்ணீரில் மஞ்சலை கலக்கிவிட்டு  சோற்றுப் பானையுள் ஊற்றிவிட்டு மெல்லிய  சூட்டில் 45 நிமிடங்கள் அவியவிடவும் .(ஓட்டைவடை நாராயணனுக்கு நாதஸ்வரம் தொடர் நாடகத்தின் ஒரு அங்கத்தை நிம்மதியாக பார்த்துவிட்டு வலையில் ஒரு லிங்கை கொடுக்கலாம்) பின் நீங்கள் விரும்பிய வண்ணம் அவித்த மீனுடனோ! பொறித்த இறைச்சியுடனோ சாப்பிட்டு ருசியுங்கள் ! 

இதற்குப் பெயர்தான் ஸ்பானிஸ் நாட்டு 
சோறு என்று சொல்லுவார்கள் பாரிஸ் நண்பர்கள்( மைந்தன் சிவா இதைத்தானே மதியம் கல்கிஸ்சை லயன் பப்பில்  கோழிப்புரியானி என்று சாப்பிடுவதாக ஒரு செய்தியை இலியானா  எனக்கு மின்னஞ்சல் செய்திருந்தார் இன்று அதிகாலையில். இன்னொரு பிரதியை நிரூபனுக்கும் அனுப்பியதாக கூறியிருந்தார் இன்று இரவு இதை விசாரிக்கனும் நிரூபனிடம்). 

இதுதான் எங்கள் சிறப்பான சாப்பாடு வீடுவரை வினியோகம் செய்வோம் அதற்கு சிறப்புத் தள்ளுபடி உண்டு முந்துங்கள் திஹார் ஜெயில் அடுத்த இலக்கம் 10 எனக்கு வேண்டாம் மனோ அண்ணா!

23 May 2011

கானும் காட்சி!

 சாதாரனமாக வேலைக்கு  நான் போகும் பாதையோரம் !பல வெளிநாட்டு உல்லாசப் பிரியர்களையும் ,உள்நாட்டுப் பார்வையாளர்களையும் தாண்டி ஓடும் என் விழிகளில் !நேற்று ஒரு பாடல் காட்சியை திரையில் பார்த்தபோது வித்தியாசமான மனநிலையில் இருந்தேன்!
.
புலம் பெயர் தேசத்தில் எங்களில் எத்தனை பேர் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தும் நேரில் பார்ப்பதற்கான சந்தர்பங்கள் சிலருக்கு கிடைக்காத /முயற்ச்சிக்காத/ ரசிகர்களுக்கு  அன்மையில் வெளிவந்த எங்கேயும் காதல் படத்தில் தொடக்கப்பாடலாக வரும் "எங்கேயும் காதல் "பாடல்காட்சி பாரிசின் உல்லாசபுரிகளில் முதன்மையான ஈபர் டாவர்  (tour effal)யும்,
  அதனைச் சூழ்ந்த பூங்கா மற்றும் பெரிய பாதையான 16 வழிகளை .பிரபுதேவா இயக்கிய படம் காட்சிப் படுத்துகிறது!
 உலக அதிசயத்தில் இதுவும் ஒன்று தமிழ் சினிமாவில் ஈபர் டவர் காட்சிகள் முன்னர் பலபடங்களில் வந்திருக்கிறது என்றாலும் இந்தப் படத்தில் அதிகம் அதிசய கோபுரத்தைச் சூழ்ந்த பகுதிகள் படமாக்கப் பட்டிருக்கிறது !
இப்படத்தை இன்னும் முழுமையாகப் பர்க்கவில்லை! 
.,
நான் போகும் பாதையோரம் !நம்மவர்கள்  ஒன்றுகூடும் பல்வேறு நிகழ்வுகளை இந்தச் சூழல் தனதாக்கிக்கொள்கிறது!சாதாரனமாக பார்க்கும் போதும் திரையில் கானும் போதும் வித்தியாசங்கள் உனரப்படுகிறது.

ஜொல்லுவிட பிரபு தேவா கூட  நயன்தரா வந்துபோனாவா எனக்கேட்கனும்  ஓட்டைவடை நாராயனிடம்!

21 May 2011

அவலத்தை சொல்லவா?!

பெற்ற தாயைப் பிரிந்து தவழ்ந்த வீடு இழந்து வளர்ந்த கிராமத்தைப் பிரிந்து!
பாசமான  அயலை இழந்து வளர்த்த உறவுகளைப் பிரிந்து!

கூடவந்த பாசப்பிறப்புக்களை தவிர்த்து!
கற்ற கல்விக்கூடங்களை மறந்து!
கால ஓட்டத்தில் துயரங்கள் சுமந்து இடம் பெயர்ந்து வாழ்ந்த  இடங்களின் ஞாபகங்களைப் பிரிந்து !

பணிபுரிந்த பால்யகால நண்பர்கள் முகம் மறந்து பலதூரம் வந்து படும் ஈழ ஏதிலிகள் அவதிகள் ஆயிரம்! 

தொலைபேசிகள் ஊடே ஆரவாரமற்ற விசாரிப்புக்கள் அடுத்தவர் முகம் தெரியாமல்!

அதிகாலை சூரியனைக்கானாத பொழுதுகள்
அடுத்த வேலை அவசரத்தில் அமைதியில்லா ஆத்தாவிற்கு இரண்டு நிமிட அலைபேசியில் அன்பைத் தந்துவிட்டு!
அந்திவரும் நேரம் தெரியாமல்  கோழித்தூக்கம் போட்டுவிட்டு!
 
தொட்டுவிடலாம் என்ற தொலைதூர சிகரங்களை நெஞ்சில் தாங்கி!
தொலைந்து போன அமைதிகள் அடுக்கலாம் ஒரு பாரதம்!

மாலை மயக்கம் தெரியாமல் மல்லுக்கட்டும்
பின்னிரவு வேலையில் கொதிக்கிறது ஆட்டுக்கறி அலைபாயும் மனம்போல்!

சாமப் பேயாய் வீடுவந்தால் காத்திருந்து பிடிக்கும் கடன்காரன் போல் தொலைபேசி அழைப்பு !அவசரத்தில் எடுத்தாள் என்னையும் எடுத்துவிடு அண்ணா அங்கே என்று ஒரு உறவு!
 அவளைப் படிப்பித்துவிடு என்று அடுத்தமுனையில் அத்தையின் அவலம்! அம்மாவிடம் கொடுங்கள் என்றாள்
சரியப்பு என்றே கைமாறும் போது கழுவுகிறேன் முகத்தை கண்ணயரக்கூடாது என்று! 
 காத்தால மூத்தவள் வந்தாள் முன்னம் நீ சொன்ன சீதனம் கேட்டு என்றாள் முன்சுமந்து பெற்றவள்!
..
மூச்சு முட்டுகிறது கொதிக்கவைத்த கோப்பித்  தண்ணி! என்னைப் பார்த்து!
மாதக்கடைசி கட்ட வேண்டிய வங்கிகடன் கடிதத்தை நீட்டுகிறான் இடையிலே நித்திரையில் எழும்பிய நண்பன்!

இத்தனையும் பேசும் போதும் என்ன மச்சான் ஒரு வீடு வாங்கு யாழ்லில் ஒரு சொத்தாகும் என்று சாடைபேசும் சின்ன மச்சானுக்கு சொல்லத்துடிக்குது !
நானும் ஒரு என்ஜினியர் என்றால் ஒருகோடி கேட்பேன்  உங்களைப் போல் என்று நாக்கூசாமல்!
 எல்லாம் பேசியும் என்னவள் கைமாறும் போது தொலைபேசி அட்டையும் முடியப் போகுது எனக்கூறும் பிரென்சு மொழிக்காரிக்குப் புரியுமா  பிரிந்து வந்த புதுமனைவியிடம் பேசுவதற்கு பலகதைகள் உண்டு என்று!

எல்லாம் முடிந்து இன்ரநெட்டில் நுழைந்தாள் ஒருத்தரிடமும் கிடைக்கவில்லை ஓட்டைவடை! கடுப்பில் கட்டிலில் சாய்ந்தாள் அடுத்த அறையில் அலாரம் அடிக்குது போத்திக்கின்னு படுத்துக்கவா!!

20 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,-இறுதிப் பகுதி!!

உண்மையில் வவுனியாவில் இருப்பிடம் எனது பணியை போர்ச்சூழ்நிலையிலும் சிறப்பாகத்தான் கொண்டு சென்று கொண்டிருந்தது. வாழ்வில் 
பலதுயரமான இடப்பெயர்வுகளைத் தாண்டி சிலகால அமைதியில் மீண்டும் ஒரு புயல்

 1999 இன் பிற்பகுதிக்காலத்தில் மறு புறத்தில் (புலிகளின் கட்டுப்பாட்டில்)இருந்து வந்த ஒரு தொலை நகல் எல்லாரையும் பலபகுதிக்கு இடம் பெயரவைத்தது. அதனூடே நானும் கொழும்பிற்கு  வீட்டாருடன் வேலையும் விட்டுவிட்டு வந்தேன் .
 அப்போது என்னுடன் இருந்த நண்பர்களில் சிலர் பலதிக்கிற்குப் போய்விட்டார்கள்.இனிய நண்பர் ,இரு தோழிகள் அன்று விடைபெற்றவர்கள் !

மீண்டும் 2003இல் எதிர்பாரத விதமாக ஒரு தோழியை  புளியங்குளம் சோதனைச்சாவடியில்  எனது பாஸ் எடுப்பதற்கு படிவம் நிரப்பிக் கொடுத்த போது வாங்கியவள் பார்வையில் இருந்தது அமைதியா  ஆத்திரமா? தெரியாது !எழுந்து சென்றுவிட்டாள் அருகில் இருந்தவளிடம் என் படிவத்தை கொடுத்துவிட்டு!

அக்கனம் மற்றவர்களை விசாரிக்காதது என் பலகீனமா தெரியாது !சிலவாரத்தில் வீட்டார் வவுனியா செல்ல நான் மட்டும் தொழில் நிமித்தம் கொழும்பில் தற்காலிகமாக தங்கியிருந்தேன்  15 மாதங்கள் அப்படிக்கழிந்தது ! அதில் என் வேலைகளை சிறப்பாக செய்தாலும் என் வெளிநாட்டுப் பயணம் சரியாக அமையாதாலும் வவுனியா போவதில் எனக்கு உடன் பாடுகிடையாது!

மேலதிகாரியின் கட்டளையை மீறவும் முடியாது வேலையில் சேரும் போது போடப்பட்ட நிபந்தனையில் இதுவும் ஒன்று அவரின் முகாமைத்துவத்தை தாண்டி மற்றவர்களிடம் வேலை செய்வதில் எனக்கு கருத்து வேறுபாடுகள்   அதிகம் . 

உடனடியாகப் போகனுமா சேர் இல்லை இந்தவாரம் என்னிடம் வேலைமுடித்து புத்தாண்டு முதல் அங்கதான் அனுப்பச் சொல்லியிருக்கிறார் எங்கள் பெரியவர் .என் மேலதிகாரிக்கும் மேலதிகாரி அந்த நிறுவனத்தின் முகாமையாளரும் ஒரு தமிழர்!ஆனாலும் உன்பகுதியும் எனக்குத்தான் தந்திருக்கிறார் இதுவும் உனக்கு நல்லதுதான் எதுக்கும் பக்கபலம் நான் இருக்கிறன் என்ற  அவரின் வார்த்தைகள் ஒரு தந்தையின் கருனையைப் போன்றது!
கடமைகள் சரியாக செய்வதற்கு ஒழுங்கான சுதந்திரம் இருந்தால் எந்த சாவாலும் சமாளிக்கலாம் என்பதை அவரிடம் கற்றதால் தான் இன்று நல்ல சமையல் கலைஞர் என்ற பதவியில் மற்ற நாட்டவருடன் என்னால் பணிபுரிய முடிகிறது!
..
அவரின் வழிகாட்டலில் மீண்டும் வவுனியாவிற்கு 2001  ஆண்டு ஜனவரி முதல் கடமைக்குச் சென்றேன்!
வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளிடையே இந்த இசைக்கச்சேரி என் பயணங்களில் ஒரு கதை .
மீண்டும் சங்கரின் இசையை நேரில் இதுவரை பார்க்கமுடியவில்லை! இனி பார்க்கப்போவதும்மில்லை! என்றாலும் அவர் குரல் பிடிக்கும்!

19 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,-6

 உண்மையில்  நான் சிலநாட்களில் அதிகமான விற்பனையில் ஈடுபடுவேன் அவற்றை கணக்கில் உடனடியாக காட்டுவதில்லை மாதமுடிவில் தனிப்பட்ட அலுவல்களுக்கு விடுமுறை தேவையான பொழுது இவற்றுக்கு கணக்கு காட்டிவிட்டு நிர்வாகம் தரும் மேலதிக வருவாய்க்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்வேன்!
..
அப்படியொரு என்னத்தில் தான் அன்றும் என் களவை கச்சிதமாக முடித்து விட்டேன் என நினைத்துக் கொண்டிருந்த போது !என் மேலதிகாரியின் கேள்விக்கு பதில் சொல்லுவதா விடுவதா என சிறு தயக்கம் .
சகோதர மொழியில் சிலவார்த்தைப் பிரயோகங்களில் நான் கவனமாக இருப்பேன் .மூன்றாம்தர வார்த்தைகள் நாகரிகமாக உடையனிந்தவர்கள் அதிவேகத்தில் வெளியிடும் போது மொழி புரியாதவன் போல் இருத்தல் நலமே!
..
இல்ல சேர் அதுக்காக சனிக்கிழமை செய்யலாம் என இருக்கிறன் என்ற போது எனக்குத் தெரியாது மாதமுடிவில் என் அளவு விற்பனை உன்னால் வீழ்ந்தால் உன்னை வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் தெரிந்து கொள் என்ற அவரின் கடும் தொனி என்னை உழுக்கியது .
நிச்சயம் நான் செய்து முடிப்பேன் என்னை நம்புங்கள்  .உங்களால் தான் நான் இவ்வளவு சுதந்திரமாக வேலை செய்கிறன் !நீங்க செய்யிற உதவிக்கு நான் எப்போதுமே கடமைப் பட்டவன் !உங்களுக்கு புண்ணியம் வந்து சேரும் என்று நான் வைத்த பனிக்கட்டி கல்யானி கூல்பாரின் சுவைக்கு ஈடாகாது என்றாலும் அவரை குளுர்மையில் நனைத்தேன் என்பிடி தப்புவதற்கு!

.
உண்மையில் நான் பாவிக்கும் சில சகோதர மொழிப் பிரயோகம் சிலரை என்பால் கவனத்தை ஈர்ப்பதற்கு ஒரு உத்தியே! பெளத்த மதப்போதனைச் சொல்களை பாவிக்கும் போது உண்மையான பெளத்தன் கோபத்தை தனித்து அன்பு காட்டுவான் என்ற சமயநிகழ்வுகளில் கேட்ட உபதேசத்தையே மீள் உரைக்கிறேன்! சில உண்மையான மதகுருமார் என்னிடம் இனவாதமற்ற ஆசிர்வாத உரைகளை இவர் வீட்டில் கூறியதையே அவருக்கு ஞாபகம் ஊட்டினேன்!அதையும் தாண்டி இவரிடம் எனக்கிருக்கும் நல்ல அபிமானத்தை பொறுக்க முடியாத சில என்னின நண்பர்கள் வைக்கும் பாசக்கணைகளை இவர்தான் தகர்த்திருக்கிறார்! என்பதை பல ஒன்று கூடல் பொழுதுகளில் அவர்கள் வாயில் இருந்து வரும் போது (போதையில் ஊளரியதை) அறிந்திருக்கிறேன்!

வேகத்தின் ஊடே ராஜகிரியவிற்கு அவரின் வீட்டுக்கதவை திறக்கும் போது அதிகாலை 5மணியாகிவிட்டது! என் நித்திரை போய்விட்டது !
போய்க்குளித்துவிட்டுவா என்று அவரின் காரின் பின் சீட்டில் தயாராக இருந்த புதிய  துவாய்த்துணியைத் தந்தார்!அவரின் காரிலில் அவசரத்திற்கு  2செட் உடுப்பு எப்போதும் இருக்கும்!
வீடு  அமைதியாக இருந்தது நான் குளித்துவர அவர் எனக்கு கோப்பியும் தனக்கு தேனீருடனும்   அன்றைய நாளிதலுடன் வந்தார்!


வீட்டில் எல்லாரும் ஊருக்கு போய்விட்டார்கள் இப்படியே இங்கிருந்து வேலைக்குப் போ!
முக்கியமான விசயம் இனி உன்னை வவுனியாவிற்கு நிரந்தரமாக்கியிருக்கு என்றபோது நானும் ஆடிப்போனேன்
..
தொடரும்

18 May 2011

வாழ்கின்றோம்!!

ஓ எங்கள் சூரிய தேவனே 
இப்படி ஒருநாளில் தான் நீ எங்கள் சுதந்திர தீபத்தை மொனிப்பதாக கூறிய வார்த்தைகள் ஊடே நம் வரலாறு தோற்றதாக அச்சு ஊடகங்களும் 
இலத்திரனியல் ஊடகங்களும் எங்கள் செவியில் கொடிய திரவகத்தை கொட்டியது!
..
மனுநீதியற்ற அந்த வெள்ளரசுப் பேய்களின் 
ருத்திர தாண்டவத்திற்கு என் உறவுகள் உதிர்ந்து கொண்டிருந்த அக்கனங்களில் !நாங்கள் கொட்டும் பணியிலும் ஐரேப்பிய நகரங்களை கோசங்கள் முழங்கி முண்டியடித்த போதும்!
எங்கள் உறவுகளைக் காக்க எந்த தேவதூதனும் இறங்கிவரவில்லை!
..
குறுநிலப்பரப்பில் எம் சந்ததிகள் குற்றுயிரும்,குதறல்களுக்கும் கொத்துக் குண்டுக்கும் கோரமுகமாக அவலத்திற்கு ஆளாகிய போது அனைத்துலகம் பயங்கரவாதம் என்ற பூதக்கண்ணாடியை தன் முகத்தில் பூட்டி எங்கள் தீபத்தை சிதைத்த கொடுமையை இனி ஏழுதலை முறைக்கும்  பறைசாற்றும் இனமாகிப்போன
ஈழத்தவன்!
..
தியாகத்தில் முதன்மையானவர்களின் பண்புகளை எல்லாம் வக்கிரப் பிறவிகள் செய்த கொடுமை கண்டு புலம்பும் இனமாகி இன்றும் ஏதும் செய்யும் வழியின்றி இராமனை இழந்த அஸ்தினபுர குடிகள் போல்  அல்லல்படுகிறோம் அகதிகளா!
என்று வரும் விடிவு என்ற ஏக்கத்துடன்!கழிகின்ற சிறை வாழ்க்கையூடும் சிதைக்கப் படும் இனமாகவும் பாதுகாப்பு வேலிகள் தாண்டி வரமுடியாத நிலங்களை இழந்து!ஏதோ! வாழ்கிறோம்!!

17 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,-5

எனது மேலதிகாரி உண்மையில் கடமையில் ஒரு சூறப்புலி .அவரிடம் பலர் நொந்து நூடில்ஸ் ஆனவர்கள் .எனக்கும் அவருக்குமான உறவு ஒரு தகப்பன் மகனுக்கான நிலையில் எப்போதும் அவர் வீட்டின் சாப்பாட்டு மேசையில் உரிமையுடன் அமரக்கூடியதாக இருந்தது ..அவரின் தாயார் சமைக்கும் அந்த பலாக்காய்க்கறிக்கு எந்த மாத்தறை ஹோட்டல் சாப்பாடும் ஈடாகாது!
..
எனது நண்பர்கள் நாம் பொலிஸ் வண்டியில் ஏற்றப்பட்டதும் அவருக்கு உடனடியாக கைபேசியில் தொடர்பு கொண்டு எங்களை மீட்கும் படி கூறியதால் அவரும் பின்னிரவுப் பொழுதிலும் நித்திரைக்கு கூட விடைகொடுத்து எங்களைத் தேடிவந்தது அவரின் இனவாதப் பார்வையைத் தாண்டிய கடமையுணர்ச்சியில்!பாசப் பினைப்பில்!
..
வந்தவர் நாங்கள் வெளிவருவதைக் கண்டதும் சிறிது புன்னகையூடே நீ ஏண்டா இவனுடன் போனாய்? உனக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கிறன் இவனுடன் பார்களுக்கு போக வேண்டாம் என்று!
சரி ஏறுங்கள் என் காரில் என்றதும் ஏறிக்கொண்டோம் !அவரே காரை நண்பரின் வீடுவரை செலுத்தியவர் அவனை இறக்கிவிட்டார். நானும் விடைபெற்றேன் அவனிடம். .பலமுறை மன்னிப்பு கோரினான் எங்களிடம். இப்போது போதை தெளிந்து விட்டது அல்லவா!
..
என்னை தன்னுடன் வீடுவரை வரும்படி கூற நானும் மீறமுடியாமல் பின் செண்றேன் .என் இருப்பிடம் இப்போது போனால் என் வீட்டுக்கு  பலபக்க குற்றச்சாட்டுடன் என்னைப் பற்றி என் சிறிய தந்தை நல்ல தகவல்களை தொலைபேசியில் கூறுவார் .இதில் இருந்து தப்புவதற்கு நல்லவாய்ப்பு!
..
இரவு நேரவானொலியில் இனிமையான ஹிந்திப் பாடல்களை சிரச  ஒலிபரப்பிக் கொண்டிருந்தது!
"சிவா நான் பயந்து வந்ததே உன்னக்காகத்தான் .உன்னை பூசாவிலோ , பொல்கொடவாவியிலோ தேடும் நிலை உன் குடும்பத்துக்கு வரக்கூடாது .நாட்டு நிலமை புரியாமல் இப்படி நடக்கலாமா என்ற அவரின் கேள்விகளுக்கு என்னிடம் பதில் அமைதிதான் .!
..
இல்லை சேர் நானும் இப்படிவரும் என்று எதிர்பார்க்கல. பழி ஒரு இடம் பாவம் ஒருஇடம் என நினைத்துக் கொண்டேன்!
அவரின் வேகமான கார் ஓட்டம் ஊடே நீ இன்று வேலை செய்யல ஏன் என்ற போது என் தில்லுமுள்ளு தெரிந்துவிட்டார் என்பது
புலனாகியது!
..
உண்மையில் நான் வேலை செய்வதாக என் முன் திட்டமிடல் அறிக்கையில் நிர்வாகத்துக்கு தெரிவித்திருந்தேன் சிறப்பு நாள் எனக்கில்லை நானோ இந்து .எனவே வேலை செய்வதற்கு  நினைத்திருந்தேன். கொழும்பு வாழ்க்கை நகர வாழ்க்கை .நரக வாழ்க்கை. பணம் போகும் வழி தெரியாது தொட்டதிற்கு எல்லாம் பணம் தேவை அடிப்படையில். என் பொருளாதாரமும் நாட்டைப்போல் ஆதால பாதளத்தில் போய்க்கொண்டிருந்தது.
.
இதனால் ஒரு நாள் விடுமுறை போதும் என்ற நிலையில் முன் திட்டமிடலில் அவரிடம் கொடுத்திருந்த அறிக்கை காரின் மேல் தட்டில் என்னைப் பார்த்து ஸாகிலா பட காட்சி போல் சிரித்துக் கொண்டிருந்தது  என்னை சிதறடிக்க!
..
தொடரும்...

16 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,-4

இரானுவவீரனுக்கு கோபம் வந்துவிட்டது !உடனே கார்சாவியை பறித்துவிட்டு தன் குணத்தைக்காட்டத் தொடங்கினான்!
..
தேசிய அடையாள அட்டை ,  வாகனப்பதிவு ,இத்தியாதிகள் தேடிக்கொண்டிருக்கும் ,போது பொலிஸ் அதிகாரியும் வந்தார் அவன் இவர்கள் தன்னிடம் அதிகமாக கதைப்பதாகவும் மரியாதை தரவில்லை என்றான் .என் நண்பனோ இன்னும் அதிகமாக சிக்கலாகினான் .சிலவார்த்தைகளை பாவித்து.
..
என்னிடம் பொலிஸ் அதிகாரி தேசிய அடையாள அட்டை கேட்டான் நான் எனது வேலைத்தள அட்டையை கொடுத்தேன் நீ (புலியா). இவன்கள் கூட ஏன் போனாய் என்று தன் கற்பனைகளை அடுக்கிக் கொண்டே போனான்.
.
பாதுகாப்பு என்ற சீருடையில்  இருக்கும் எவருமே தமிழன் என்றாள் முதலில் (புலிகள் )என்றே கேட்பான் அதிகாரம் இனவாதப் பேய்களைத்தானே ஊக்கிவிக்கிறது.எடு பொலிஸ்பதிவு என்றான் காரணம் வேலைத்தள அட்டையில் இருப்பது எல்லாம் ஆங்கில எழுத்துக்கள் தமிழ் பெயர்களை உச்சரிக்க சிலருக்கு முடியாது !.இன்னொன்று ஆங்கிலம் அவர்களுக்கும் வேப்பங்காய்தான் பல இடங்களில் இதை உணர்ந்து இருக்கிறேன்.!
 
என் தேசிய அடையாள அட்டை கொடுத்தாள் நான் யாழ்ப்பாணம் என்பதை இலகுவில் அறிந்துவிடுவான் .இதனால் இன்னும் சிக்கல் கூடும் என்பதால் முடிந்தளவு சாமாதானமாக கதைத்துக் கொண்டு நண்பரை இரானுவ வீரனிடம் மன்னிப்புக்கேள்  இத்துடன் முடிந்துவிடும் நான் நாளைக்கு வேலைக்குப் போகனும் என்றேன்!
..
அவனுக்கு ஏற்கனவே போதை அதிகம் !மற்றவர்கள் போகட்டும்
நீயும் அவனும் இருங்கள் என்றுவிட்டு பொலிஸ்க்காரன் உள்ளே போனான்.
நண்பர்கள் முழிசிக்கொண்டு நிற்க நாம் வருவோம் நீங்கள் காரைக்கொண்டு போங்கள் .என்று சொல்ல சகோதரமொழி நண்பனும் அமைதியாகி அவர்களிடத்தில்  ஆவனங்களை கொடுத்தான் இரானுவ வீரன் சாவியை  இவர்களிடம் கொடுத்தான். நான் அவனுக்கு நன்றி சொன்னேன் .உண்மையில் அவனுடன் சமாதானமாகத்தான் இதுவரை நான் உரையாடிக் கொண்டிருந்தேன் .பொலிஸ்காரன் தான் என்னை தவறாக நடத்துகிறான்.

.உள்ளே போனவர் வெளிவந்து எங்கள் இருவரையும்  பொலிஸ் ஜீப்பில் ஏறும்படி கூறிவிட்டு அவன் முன்னால் அமர்ந்து கொண்டான்.
எல்லாப் பாதையும் ரோமிக்கே என்பது போல் என்பயணம் பொலிஸ் காவல் வரை .
சில நிமிட ஓட்டத்தில்  கொழும்பு-12 இற்குப் பொறுப்பான காவல் நிலையத்தில்
இறங்கினோம் .எனக்கு நம்பிக்கை இனி விடுதலை ஆகலாம் என!
..
இங்கு தான் எனது பூர்வீக விபரங்கள் அடங்கிய பொலிஸ்பதிவு இருக்கிறது நான் பல இடங்கள் சென்றாலும்  இங்கு உள்ள பதிவை சரியாக புதுப்பித்து விடுவேன்!

கடவுள் உள்ளே தெரிந்த மேல் அதிகாரிவடிவில் இருந்தார் .மற்ற பொலிஸ்காரன் இவரிடம் நாங்கள் போதையில் வாகனத்தை மோதிவிட்டதாகவும் ,இரானுவவீரனை மரியாதை செய்யவில்லை என்றான் அப்படியா என்றுவிட்டு என்னருகில் வர நான் கூனிக்  குறுகி நின்றேன்.
..

என்னையும் நண்பரையும் பார்த்துவிட்டு ஏன்? என்ற பார்வைக்கு நான் நடந்ததைக்கூறி மன்னிப்புக் கேட்டேன்!
அவருக்கு மாதாமாதம் நானும் சம்பளம் கொடுக்கிறனான்.!  ஒவ்வொரு முறையும் என் பதிவு புதிப்பிக்கும் போது காணிக்கையாக பல வாசனைத்திரவியங்கள் இலவசமாக கொடுப்பதைதான் சொல்கிறேன்.
..
சரி அவங்களை அனுப்பு எனக்கு தெரிந்தவர்கள் என்றதும் பொலிஸ்காரன் முகம் கறுத்துவிட்டது.
.
கடவுளே என்று என் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு வெளியில் வரும் போது 
முன்னால் என் மேலதிகாரி வந்து கொண்டிருந்தார்!
.. .... தொடரும்

14 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,-3

நாங்கள் எல்லாரும் நண்பரின் காரில் ஏறினோம் 6 பேரையும் சுமந்து கொண்டு போய் நின்ற இடம்  கொழும்பு -12 ஜயும் மருதானையையும் இனைக்கும் மையப்புள்ளியான ஒல்கோட் மாவத்தையின் பின் புறவழியில் உள்ள சுவையான நட்சத்திர ஹோட்டலின் முகப்பில்!..

என் சகோதரமொழி நண்பர்கள் ஏதாவது தாகம் தீர்ப்பம் என்றார்கள் .இன்று என் பணம் காலி என்று உணர்ந்து கொண்டேன்.
அவர்களுக்கு நன்கு தெரியும் நான் மது அருந்துவதில்லை இருக்கும் சுவையூட்டிகளை முடித்து விடுவேன் என்பதுடன் எவ்வளவு அவர்கள் நிதானம் தவறினாலும் அவர்களின் இருப்பிடம் சேர்க்காமல் அகலமாட்டேன் என்று.
..
அன்றும் அப்படி என்னத்தில் தான் நானும் வாகணத்தை சரிபார்த்துவிட்டு அவர்கள் முன் செல்ல நானும் பின் தொடர்ந்தேன்.
நண்பர்கள் எல்லாரும் கடந்தவார செயல்பாடுகள், பிழைகள் , மாதமுடிவில் செய்ய வேண்டிய  நிர்வாக வேலைகளை எல்லாம் சாவாகாசமாக அலவலாவிய வண்ணம் அதிகமாக மதுவை சுவைத்தனர்.
..
நேரம் அதிகமாக நண்பர்களை  சாப்பிடும் படி வற்புறுத்தினேன் உண்மையில் எனக்குத்தான் அதிக பசி அவர்களுக்கும் சேர்த்து கொத்துப்பராட்டாவும் கோழிக்கறியும் தரும்படி கூறினேன் .பரிமாறுவரிடம் தனிப்பட்ட முறையில் நண்பர்கள் நிதானம் இல்லை விரைவில் போகனும் என்றேன் அவரும் கடைமூடும் நேரம் என்றுகொண்டே விரைந்து செயல்பட்டார்.
..
ஒருவாறு எழுப்பிக் கொண்டு வெளியில் வந்தால் மூவர் அதிகமாக மதுவுண்டதால் 
நிதானம் இல்லாமல் பாடிக்கொண்டு வர நான் காரை ஓட்டுகிறேன் என்ற போது சகோதரமொழி நண்பர் அடம்பிடித்து தான் செலுத்துவதாக கூற நானும் பாதுகாப்பு நிமித்தம் சரி ஓட்டும் என்று முன்னால் அருகில் ஏறி இருந்தேன் .கொஞ்சத்தூரம் போனால் முன்னால் பாதுகாப்பு சோதனைச்சாவடி நண்பரிடம் இடம் மாறியிரு என்றேன் .!அவனும் அசட்டை செய்யாமல் சோதனைச் சாவடியில் இடித்துவிட்டான்.!

இடித்ததும் இல்லாமல் காவலில் இருந்த இரானுவவீரன் கேள்விக்கு  அவதூறாக பதில் கூறிவிட்டான்!

சகோதரமொழி நண்பரிடம் பலமுறைகூறியிருந்தேன் !சிலவார்த்தைப் பிரயோகங்களை திருத்திக் கொள் என்று .அவன் வாழ்ந்த கொலன்னாவ வட்டாரத்தில்
மூன்றாம் தரமான வார்த்தைகள் மிகசர்வசாதாரனம். அவற்றை இங்கு எழுவது தரமற்றது.
.. தொடரும்!

12 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,-2

 அன்று செவ்வாய்க்கிழமை கிரிஸ்மஸ் விடுமுறைக் கொண்டாட்டம் .நானும் என்னுடன் சகோதர மொழி நண்பர்கள் இருவரும், கொழும்பு நண்பர்கள் மூவருமாக ,சுகதாச உள்ளரங்கில் பாதுகாப்பு பரிசோதனை தாண்டி நுழைவுச்சீட்டைக் காட்டிவிட்டு உள் நுழைந்தோம்!
..
 அழகிய பெரிய மண்டபத்தில் மோகன்..-ரங்கன் வாத்தியக்குழுவினர் இசைமீட்ட தயாராகிக்கொண்டிருந்தனர். 
லோசனின் அறிவிப்புடன் சம்பிரதாய முறை விளக்கு முக்கிய பிரமுகர்கள் ஏற்றியதைத் தொடர்ந்து நம்மவர்கள் முதலில் பாடினார்கள்.
..
மகிந்தகுமார், எனக்குத் தெரிந்த பாடகர் அவரை  இனம் கண்டு கொண்டேன் .மற்றவர்களை தூரத்தில் இருந்து ரசித்தேன் நேரம் ஓடிக்கொண்டிருந்தது நாலாபுறமும்  அலங்கரிக்கப் பட்ட திரையில் பார்வையாளர்கள் மைய நிகழ்வை பார்த்து ரசிக்கும் வண்ணம் ஒலி/ஒளிபரப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.
.
நீண்ட நேரத்தின் பின் லோசனின் அறிவிப்புடன் நாம்பார்க்க கூடியிருந்த சில ஆயிரம் ரசிகர்களின் ஆர்பரிப்புக் கிடையில் 
அந்த வெடிமாலையுடன் தோன்றினார் சங்கர் மகாதேவன்.
மேடையில் ஏற்கனவே எல்லா தென்னிந்திய பாடகரும் ஈழ்த்தவருக்கு  அதீத ரசனையாளர்கள் என்று கூறும் மூலமந்திரத்தை  சங்கரும் கூறிவிட்டு "தனியே தன்னம் தனியே என்ற ரிதம் படப்பாடலைப் பாடினார். கச்சேரி களைகட்டியது தொடர்ந்து பலபாடல்களை தனித்தும் நம்மவர்களுடன் மேடையில் பாடினார்.
..
இடையில் 5 செட் ஆடைமாற்றவும் மறக்கவில்லை .இடையிடையே சுருதி சரியாக சேரவில்லை .திரையிசைக்கும் நேரடி இசைக்கும் உள்ள வேறுபாட்டை மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொண்டேன்.
..
நேரம் விரைவாக போய்க்கொண்டிருந்தது எனக்கு ஒருபாடல் கேட்டால் அதை முளுமையாக கேட்கனும் என்ற ஆவலுடையவன் சங்கரோ! ஒவ்வொரு பாடலையும் பலமொழிகளையும் கலந்து கொத்துப் பரோட்டா போட்டுக்  கொண்டிருந்தார்!
..
உண்மையில் எனக்கு கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் வரும் "இல்லை என்று சொல்ல ஒரு கனம் போதும்" என்ற பாடலில் தீராதகாதல் அப்பாடலை மேடையில் பாடினார் தமிழில் தொடங்கியவர் ஹிந்தி, தெலுங்கிற்கு மாரி அதன் சுவையை சீரலித்தார் .மேடை நிகழ்ச்சிகளை இவர்கள் களியாட்டம் என்று மாற்றுவதில் எனக்கு எப்போதும் உடன் பாடு கிடையாது .பாடல்  ஞாபகம் இல்லாத போது பல இடங்களின் வெற்றுச் சரணங்களை பாடுவதும் ஏனோ தெரியாது!
..
காசு கொடுத்து டிக்கட் வாங்கிய மற்ற நண்பர்கள் பொறுமையிழ்ந்து விட்டார்கள் .
நான் முழுவதும் பார்ப்போம் என்றேன்  இப்படி இருப்பதிலும் பார்க்க நாங்கள் வீட்டில் tvயில் தேவையானதைப் பார்க்கலாம் என்றார்கள் கொஞ்சம் பாத்தோம் ..
.
திடீர் என்று ஒரு அதிச்சி செய்தி தந்தார்கள் நடிகர் மாதவன் மேடையில் சிலநிமிடங்கள் தோன்றினார். அலைபாயுதே படப் பாடல்" செண்டேம் பர் மாதம் பாடல் பாடினார் " சங்கர்  ..மாதவனும் எல்லாருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் கூறினார் சில வார்த்தைகள் தமிழிலும் பின் ஆங்கிலத்திலும் தயங்கிய படி குறினார் .இலங்கைக்கு இது முதல் பயணம் என்றும் நாட்டில் அமைதி வேண்டும் என்று கூறிவிட்டு சிலருக்கு கையெழுத்து குறிப்பில் கையொப்பம் இட்டார்...
.
இனிக்கிழம்புவம் என்று நண்பர்கள் கட்டாயத்தின் நிமித்தம் நிகழ்ச்சி முடியமுன்னரே வெளியில் வந்தோம்.
.
நண்பர்கள் எல்லாரும் பயங்கர கோபத்தில் .பணம் கொடுத்தும் திருப்தியில்லை!எனக்கு மறுதினம் பணி நண்பர்கள் மருதானையில் என்னை இறக்கிவிடுவதாகவும் ஒன்றாக உணவருந்தவும்  இப்ப போவம் என்றதும் எனக்கும் பசிக்களைப்பு வெளிக்கிட்டோம்.

.       தொடரும்

11 May 2011

அண்ணை பூமி.

 ஓ எங்கள் தாய் நிலமே!
நிலம் ஆழப்போய் நிலத்தில் ஆகுதியானது எங்கள் சுதந்திர தீபம் .! புல்லுமுளைக்கும் நிலத்திற்கு உரமாகிப் போன எங்கள் உறவுகளின் உடல்கள் கணக்கிட்டால் கதிகலங்கிப் போவான் கப்பல் ஓட்டிய தமிழன்!
..
சகுனிகளும் ,சாத்தான்களும் வெள்ளரசுப் பேய்க்கு மகுடி ஊத எங்கள் நிலத்தில் பேய்கள் ஆடிய களியாட்டத்திற்கு நிலமே நீதான் கண்கண்ட சாட்சி!

.எத்தனை துளைகள் நிலத்தை வெறி கொண்டு தோண்டி நவீன ஆயுதங்களை பரீட்ச்சித்து நம் சந்த்ததியை சாய்த்துவிட்டது!
..
நிலம் இல்லை என்றாகிவிட்டு ஆண்டு இரண்டு ஓடிவிட்டது!
இன்னும் பேய்களின் வார்த்தை யாலங்களுக்கு பெரிய வல்லரசுக்களும் போதனை தூதர்களும் வியாக்கியானம் கூறுகிறார்கள் உங்கள் பிரச்சனை முடிந்துவிட்டது .உங்களுக்கு எல்லாம் சுபமே !என்று புலம் பெயர் தேசத்தில் பல புல்லுருவிகள் புற்றீசல் போல்! ஒத்து ஊதுகிறார்கள்!.
..
வீழ்ந்தவர் போய் ,விழுப்புன்னுடன் விலங்கிடப் பட்டவர்கள் ,, வேலிக்குள் அடைக்கப் பட்டவர்களும் ,இன்னும் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாமல்
சிறையிலும் சீரலிழ்ந்தும் ,
சீரலித்தும் படு அவலத்தை என் நிலமே நீ உள்வாங்கியும் உறைந்து போய்க்கிடக்கிறாய் புலப்படாத, தெளிவில் சாதார மானிடரைப்போல்!
..
அயலவரின் பெரியண்ணன்  தோரனைக்கு நம்நிலம் பலியாக்கப்பட்ட வரலாறு என்றும்
பதியப்படும் நம்சந்ததிகள் வரலாற்று ஏடுகளில்!
தாய்நிலமே நீ எழுதுவாய் ஒரு சரித்திரம் கரிகாலனிடம் எந்த ஆசைக்கும்  பேரங்களுக்கும்  கொள்கை பலியாகவில்லை! தோறுப்போனது கொள்கையுள்ள தலைவன் அல்ல!என்றுமட்டும் பெருமிதத்துடன் சிலையில் எழுது!
.

10 May 2011

இசை நிகழ்ச்சியும் மறக்கமுடியாத தில்லுமுள்ளும்,

காற்றலையில் வரும் சினிமாப்பாடல் பின்னனிக் குயில்களின் பாடல்கள் பலரசிக்கும் நான் குயில்களின் முகம்கானும் வாய்ப்புகள் கிடைக்கும் போது தவரவிடுவது இல்லை!
..
அப்படி ஒரு வெறி பிடித்த ரசிகன் அந்தவகையில் 2000 ஆண்டு சக்திfm வானொலியின் இரண்டு ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் அவர்களின் அனுசரனையில் இலங்கைக்கு முதல் முறையாக தென்னிந்திய பின்னனிப்பாடகர் சங்கர் மகாதேவன் வந்தார்.
.. 
அன்நாளில் அவர் பாடிய பாடல்களில் என்ன சொல்லப் போகுறாய்யும்,தனியே தன்னம் தனியேயும் அதிகம் எல்லாராலும் ரசிக்கப் பட்டது.
 இவரின் இசைநிகழ்ச்சிகள் அதிகமாக வானொலி, தொலைக்காட்சியில் விளம்பரம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது,
சிலவர்த்தக நிறுவனங்கள் அனுமதிச்சீட்டை  
வானொலிப்போட்டியில் வழங்கினார்கள்!
நேயர்களுக்கு. நானும் போட்டியில் கலந்து அனுமதிச்சீட்டை வாங்கினேன் உண்மையில் அந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது! நானும் ஒரு பணியாள் அந்த வர்த்தக கூட்டமைப்பில் .ஆசைக்குத் தெரியுமா விதிகள் முறை நானும் பின்வழியால் போட்டியில் கலந்து அனுமதிச்சீட்டை வாங்கிக்கொண்டேன்.


..பணம் கொடுப்பது என்றாள் 1000 ரூபாய் அன்நாளில் என் சம்பளத்தில் 8/1  பகுதி மாத இறுதியில் துண்டு விழும் தொகையை எப்படி நிவர்த்தி செய்யமுடியும்.
நிகழ்ச்சி நடந்தது கிரிஸ்மஸ் முடிந்த மறுநாள் டிசம்பர் 26 மாலையில்!
.. தொடரும்

09 May 2011

பிடித்த பாடகி--1

இசையாள் வசமாகாத உள்ளம்கள் இருக்குமா?தமிழ் திரையுலகில் பிரிக்கமுடியாத பாகம் பாடல்கள் ! ஒவ்வொருபாடல்களும் பலதொழில் நுட்பக்க கலைஞர்கள் பங்களிப்புடன் காற்றில் தூதுவிடப் படுகிறது! .. 
     பாடல்கள் பாடி நடித்த காலம் போய் பின்னனி பாடுவதற்கு பலபாடகர்கள் திரையிசையில் குரலில்  அறிமுகமானார்கள். முகம் தெரியாவிட்டாலும் குரல் அவர்களை பல்லாயிரம் ரசிகர்களை  அவர்கள் பின் தொடரக்  காரணமானார்கள் .அந்த வழியில் என்னைக் கவர்ந்த பின்னனிப் பாடகர்/ பாடகிகளில்  என்றும் முதன்மையானவர்! ..
 
பாடகி ஜென்சி  ! 
இவரின் குரலில் ஏதோ ஒரு மயக்கம் எனக்கு இன்று மூன்று தசாகப்தமாக என் செவிகளுக்கும் மனதிற்கும் ஒரு தாயைப்போல் ,சகோதரியாக ,காதலியாக,வழித்துனையாக வருகின்ற இசைப்பிடிப்பூ. 
தமிழ் திரையில் குறிப்பிட்ட பாடல்களைப் பாடிய ஜென்ஸியின் கிறீச் குரல் வழியே  நம்ராஜாவின் இசையில் அவருடன் டூயட் பாடிய காதல் ஓவியம் பாடும் காவியப் பாடல் பொங்கும் பூம்புனல் ஊடாக வந்து கிரமர்போன் (எங்க ஊரில் ரொட்டியில் பாட்டுப் பாடும் கறுப்பு நாடா) எங்கள் வீட்டில் காலையிலும் மாலையிலும் கீதம் இசைக்கும் எப்படி மனதில் நுழைந்தது என்று( காதலைப் போல்) இன்றுவரை தெரியவில்லை ! 
 .,             .....இடப்பெயர்வு வரமுன் நம் ஊர்களில் குழாய் புட்டில்(லக்ஸ்பீக்கர்) பாட்டுப்போடும் கலியான வீடுகளில் எல்லாம் அழையாத விருந்தாளி ஜென்சியின் பாடல் அடங்கிய டெப்(tape) .எப்போதும் தாலாட்டும் ராஜாவின் குரலுடன் அந்த அலைகள் ஓய்வதில்லைப் படப்பாடல் என்னுடன் பலமுறைகளில்( ரொட்டி,tape,cd,mp3, ipod)  இன்று ஐ-போன் ஊடாகவும் மீளா அடிமையாக வாழ்வில் ஒரு பாகமாக தொடர்கிறது .காலமாற்றம் தொழில் நுட்பங்களில் பாடல் பதிவு முறைமாருகின்றது மனம் மாறுதில்லை.
 .. 
காதல் ஓவியம் பாடலின் இடையில் "தாங்கு மோ என் தேகமே மன்மதனின் என்ற "வரியை ஒரு சுற்று ஹம்மிங்கில் ஆலாபனை   
செய்வதாகட்டும்  முடியும் வேளையில் ராஜாவின் பின்னே செல்லும்  லாலா லாலா ஹம்மிங்கில் ஒரு தேவதை கூடவருவது போன்ற உணர்வை எனக்கு எப்போதும் கேட்கும் போது  தரும் அந்தக்குரலில்  ஒரு ஈர்ப்பு !

..
இன்னொரு சிறப்பான பாடல் ராஜாவின் ராஜாங்கத்தில் உல்லாசப்பறவைகள் படத்தில் வரும்" ஏதோ தெய்வீக ராகம்  கேட்காத பாடல்"" என்ற பாடலில் ஒரு மயக்கமான குழைவை குரலினுடே தந்தாலும் படத்தில் இப்பாடல் காட்ச்சி சொதப்பல் என்பேன் .
என்பின்னிரவுப் பயணங்களில் தாலாட்டாகவும் மன புத்துணர்ச்சிக்கும் பாடலின்"  தந்தன் தந்தன் ஹம்மிங் சரியாக ஜென்ஸியிடம் கைபிடித்து போகையில் என் தேவதை வருவதைப் போன்ற பரவசம் ஏற்படுகிறது!

நிறம்மாறாத பூக்கள் படத்தில் இருபாடல்களும் இசையானியின் ஆத்மாவான பாடல் சிறப்பாக ஜென்ஸின் குரலினுடே என்னை கட்டிப்போட்ட பாடல்களில் 
"".. 
இனிய ஹம்மிங் உடன் ஆயிரம் மலர்களே மலர்களே! இப்பாடலின் வைரமுத்துவின் வரியை ரசித்து அதன் பாவத்தை குரலில் தருவதில் எனக்கு  எப்போதுமே இவர்குரலில்  தனியின்பம்" 
மற்றப்பாடல்"  இருபறவைகள் மலை முழுவதும் "பாடலில் மலையடிவாரத்தில்  காட்சிகள் படம்பிடிக்கப் பட்டிருக்கும் பாடலின் பின்னே அவரின் குரலில் மலையலகை ரசிக்க முடியும்!
..
இன்னும் ஜானியில் ஒரு சிறியபறவை,கீதா சங்கீதா என்று ஜெயச்சந்திரனுடன் சேர்ந்து பாடிய அன்பே சங்கீதா படப்பாடல், பூந்தளிர் படத்தில் ஜேசுதாஸ் உடன் பாடிய மீண்பிடித்தேரில் மன்மத ராஜன் ,பாடல்களும் என் இரவுப் பொழுதுகளை தாலாட்டும் ஜென்ஸி சில பாடல்களை பாடினாலும் முத்திரை பதிதவர். கேரளாவில் 
குடித்தனம் நடத்தும் இந்தக்குயில் மீண்டும் பாட சந்தர்பம் கிடைத்தாள் தமிழ் திரைக்கு  குரலில் இசை மீட்ட தயார் என அன்மையில் ஒரு வார சஞ்சிகையில் கூறியிருந்தார்...
..
மொழியை சிதைக்கும் பாடகர்களும், குத்துப்பாட்டில் கும்மியடிக்கும் இன்றைய சூழலில் குரலில் அமைதியான இசையை மதிப்பவர்கள். பின்னனிபாடுவது வியாபாரம் என என்னும் நிலையில் மீண்டும் ஒருவலம் வரத்துடிக்கும் இந்தக் கீதம் சிந்துபாட முடியுமா?

06 May 2011

வலையில் தேடுகிறேன் பதில் வருமா?

காலங்கள் போகும் வேகத்திற்கு என்னால் சிந்தனைகளை விரிவாக்க முடியாத புலம் பெயர் வாழ்வில்! மொழியின் துனையால் வலைப்பதிவை பார்ப்பதே பொழுது போக்கு என்பேன்!  பொழுது விடிவது தெரிகிறது விழிப்பு மணியடிப்பதில்  இரவு தெரியாது சாமப் பேய்கள் போல் பணிமுடிவது பின்னிரவில் !
.,, 
இப்படி  சாதாரன வாசகன் தமிழ்மணத்தில்  பல விசயங்களை தேடும் போது அன்நாள்களில்( 2005) அதிகமான பதிவுகளை எழுதிய மூத்த பதிவர் ஒருவரை   கடந்த நாட்களாக வலையிலும் , தனிப்பட்ட மின்னஞ்சல் மூலமும் , இடைவிடாது தேடுகிரேன் அவர் !
..
சந்திரவதனா என்ற பெயரில் மனவோசை என்ற வலைப்பதிவை கொண்டிருந்தவர் .,இவர் ஜேர்மனியை தளமாகக் கொண்டு அன்நாட்களில் எழுதியவர் தொடர்ந்து பலகட்டுரைகள், சமையல் குறிப்புக்கள் பயண அனுபவம் என (இடையில் என் தனிப்பட்ட வாழ்வாதாரப் பிரச்சனைகளால் 2006-முதல் 2011 வரை வனவாசம் தொடர்பு கருவிகள் பயன்படுத்த முடியாத வேலைப்பளு)  பயனுள்ள ஒரு தேர்ந்த பதிவாளர்!
.
இன்று புயல்போல் வலையில்  வீசும் நாற்று நீரூபன்,தம்பி மதிசுதா போன்று பல்வேறு விடயங்களை தனிப்பாணியில் வலையில் பதிவிடுவதில் அவரைப்போன்ற சகோதரிகளை  என்னால்  வேறுயாரையும் இனம் கானமுடியவில்லை !ஹோமா முயற்ச்சிக்கிறார்! 
.,
என்னைப்போன்றவர்களுக்கு தாயக பயணக்கட்டுரை தொடராக எழிதினார் சமாதானக்காலகட்டத்தில் வன்னியூடாக தனது பயணத்தை மிகலாவகமாக கையாண்டார்! எப்போதும் சொல்லும் விடயத்தில் தாயக உணர்வுகளை துனைக்கு அழைத்து எழுத்தோவியம் வரைந்தவர் இப்போது தகவல் இல்லை!..

.. 
என் வலைப்பதிவு ஆர்வத்திற்கு என் ஆசான் நண்பர் கானாபிரபா.  ஒரு மூத்தவர் யாரையும் மதிக்கும் சிறந்த ஊக்கிவிப்பாளர் இப்போது நிருபன்,மதிசுதா, நாஞ்சில் மனோ,பாலத் பாரதி போன்று சந்திரா எல்லோருக்கிம் பின்னுட்டம் இடுவதில் ,தயக்கங்களை நீக்குவதில் சிறந்த தாய் ஆனால் இப்போது 
ஏன் எழுவது இல்லை எனத்தெரியவில்லை !
..
வலையுலக நண்பர்களே ஒருவாசகனாக அவரின் ஆரோக்கிய நிலையில் ஏதாவது மாற்றமா ?இல்லை தனிப்பட்ட முறையில் எழுதுவதில் ஏதும் மனவருடலா ?எனப்புரியாது தடுமாற்றம் எனக்கு அதை தீர்ப்பீர்களா!
..
மூத்த பதிவாளர்களே சமகாலத்தில் உங்களுடன் பயணித்த ஒருவரை என்போன்ற அறிமுக வலைப்பதிவாளனின் தேடலுக்கு கருனை கூர்ந்து பதில் வலைப்பதிவில் என்றாளும் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு என்றாளும் தயவு செய்து பதில் அளியுங்கள்!
..
கீழ் இனைப்பு 
எனது பதிவாசான் கானாபிரபுவிடம் நான் வரைந்த கடிதமும் நண்பரின் பதிலும்

பிரபா அண்ணா!
முன்னர் ஜேர்மனியில் இருந்து சந்திரவதனா என்பவர் மனவோசை என்ற பிளாக்கில் அதிகமாக எழுதியவர் இப்போது ஏதும் தகவல் இல்லை நீங்கள் ஏதாவது தெரிந்தால் உங்கள் வலையில் தயவு செய்து பகிருங்கள் 
 நட்புடன் நேசன்!

Envoyé de mon iPhone
.  கங்காரு சிங்கத்தின் பதில்
வணக்கம் நேசன்

அவர் ஏன் இப்போது எழுதுவதில்லை என்று தெரியவில்லை.  அவரை மெயிலில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன் தகவல் ஏதும் தெரிந்தால் சொல்கிறேன்

அன்புடன்
பிரபா

2011/5/2 Siva
பிரபா அண்ணா!
முன்னர் ஜேர்மனியில் இருந்து சந்திரவதனா என்பவர் மனவோசை என்ற பிளாக்கில் அதிகமாக எழுதியவர் இப்போது ஏதும் தகவல் இல்லை நீங்கள் ஏதாவது தெரிந்தால் உங்கள் வலையில் தயவு செய்து பகிருங்கள்
 நட்புடன் நேசன்!

Envoyé de mon iPhone



-- 
www.kanapraba.com
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்

04 May 2011

எனக்குப் பிடித்த பாடல்-1

 காற்றில் நாளந்தம் பல பாடல்கள் இனைய வானொலிகள் மூலமும் ,தனியார் வானொலிகள் மூலமும் ஒலிபரப்பாகிவருகின்றது!
 ஆயிரம் பாடல்களில் சில குறிப்பிட்ட பாடல்கள் அதிக பிரபல்யம் ஆகின்றது  .வானொலிகள் தரவர்சை படுத்துவதில் ஒவ்வொரு வருக்கும் வித்தியாசம் பெறுகிறது!
..
இப்போதெல்லாம் தாயகத்தில் இருந்த போது பாடல்களை கேட்டு ,ரசித்த ரசனை மாறி விட்டது !புலம் பெயர்வாழ்வில் தேவையற்ற பதைபதைப்பு தொற்றிவிட்டது!
.. 
புதிய பாடலில் அன்மையில் வெளியான கோ படப்பாடலில்  ""எண்ணமோ ஏதோ .." என்னை அதிகம் வசிகரித்துள்ளது!
மென்மையான ஹரிஸ் ஜெயராஜ் இன் இசையில்  மூவர் இப்பாடலை யாத்திருக்கிறார்கள் .கார்க்கி,சிரிச்சரன்,எம்சி ஜெசே! என்று ஒரு தகவல் கூறுகிறது!மூவரும் பின்னிய மாலையை குரல் கொடுத்து உணர்வு ஊட்டியவர்கள் அலப்பு ராஜூ, பிரசாந்தினி( இவர் மலேசியா வாசுதேவனின் புதல்வி) இடையில் வரும் ராப் எனப்படும் துள்ளலுக்கு பாடல் ஆசிரியர்களில் சிரிச்சரன்,எம்சிஜே  துனைக்குரல் கொடுத்திருகிறார்கள்!
..
கற்பனைகளில் கவிஞர்கள் புல்லரிக்க வைக்கிறார்கள் மென்மையான காதலின் பாவத்தை பின்னியிருக்கிறார்கள்.. "மனதில் ஏதோ முட்டிமோதுகிறது "என்ற வரிகலாகட்டும் குவியம் இல்லா காட்சிப் பேழை"     அரைமனதாய்  விடியுது என் காலை ""மெட்டு அவிழ்கிறது "" என்ற வரிகள் ஊடாக ஒரு ஆண்மகனின் காதல் வலி ரணங்களை சிறப்பாக படம் பிடிக்கும் வரிகள் வைரமுத்துவின் வாரிசின் கைவண்ணம் போலும் என நினைக்கிறேன்!
.. 
"நானும் நீயும் எந்திரமாய் யாரோ செய்யும் மந்திரமா? காற்றில்  கூட அவளின் சிந்தனையில் அலையும் அவனின் மனநிலையை சிறப்பாக கவிஞர்கள் காதலின் கருவை மையப்படுத்தி எழுதியிருக்கிறார்கள்!
..
பாடலுக்கு சிறப்பாக குரல் கொடுக்கும் அலப்பு ராஜீ வின் குரலை நான் இப்போதுதான் கேட்கின்றேன் இவர் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர் போல்  வசணத்தில் வாடையடிக்கிறது தெரிந்தவர்கள் கூறுங்கள்!
..
இன்னும் காட்சியை கானவில்லை பார்ப்போம் சிறப்பான பாடலை சிலவேலைகளில் சீரலித்துவிடுவார்கள் இயக்குனர்கள்  இப்படம் ஒளிப்பதிவாளர் k.v. ஆனந்த் தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது பார்ப்போம் காட்சி எப்படி இருக்கிறது  என்று!.

.முன்னர் வானொலிகளில் பாடலின் ஆசிரியர் பெயர்கள், பாடியவர்கள் விபரம் கூறுவார்கள். இப்போதெல்லாம் அவசர உலகில் அறிவிப்பாளர்கள் அடுத்த பாடலுக்கு ஓடும் காலம் போலும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபணத்தின் பணி சிறப்பாக காரணம் அவர்கள் அறிவிப்பாளர்களின் தேடலுக்கு முக்கிய கட்டுப்பாடுகளை அறிவுறுத்தி பாடலை ஒலிபரப்பின தால்தான் என்பேன்! 
..
வலையுலகில் இருக்கும் நண்பர்களே சில புதிய அறிவிப்பாளர்களின் கடமையை அவர்கள் விடும் பிழைகளை சுட்டிக்காட்டுங்களேன்!
 

03 May 2011

பாட்டியின் பிரிவில்!!

ஏய் பேராண்டி என்னடா மணி 6 ஆச்சு இன்னும் முழிக்கலயா !போ பாட்டி என்று 
திட்டிக்கொண்டு எழுந்தால்! பால் கோப்பியுடன் அருகில் இருந்த பாட்டிக்கு
கடைசியில் பால் ஊத்தமுடியாத பாவியாய்
நாடுகடந்த வேதனையை யாருக்கு உரைப்பேன்!

நீ நீண்ட ஆயிலுடன் வாழனும் என்று அம்பாளிடம் வேண்டுகிறன்! என்று நேற்றும் தொலைபேசியில் பாசம் பொழிந்தவள் !
இன்று பெட்டியில் போகையில் சுமந்து செல்ல வேண்டியவன் பாவியாக பாத்திரம் தேய்க்கிறேன்!
..
முன்னர் அவள் கைபிடித்து  கோயிலுக்கும்
பள்ளிக்கும் போகையில் நீ தாண்டா எங்கள் வம்சத்து முதல்வாரிசு என்று புகழ்பாடும் பாட்டிக்கு என்னத்தை உரைப்பேன் நாட்டுக்குவர எனக்கில்லை அனுமதி! என்று!

..
எப்போதும்  சீலைத்தலைப்பில் முடிந்து வைத்திருந்து பாக்குச்சீவல் வாசனையுடன் பெரியபடிப்பு படிக்கிறவன் இதைக் கொண்டுபோ என்று தரும் பணம் மட்டுமா தன் வஞ்சனையில்லா பாசத்திற்கும் எத்தனை ஆயிரம் தந்து கடன் தீர்ப்பேன்!
..
ஆயலவர் அமைதியென்று வந்து அட்டுழியம் செய்த போதெல்லாம் இவன் என் பேரன் அவனைவிட்டிடுங்கோ என்று அடைகாத்தாலே! எங்கேல்லாம் அடிச்சாங்கள் என் ராசா என்று இல்லாத கிரீடத்தை எனக்குச் சூட்டினாலே!
கொள்ளிப்பந்தம் கூடபிடிக்கமுடியாத அபலை நான்! ..

அப்பர் அடிக்கும் போதெல்லாம் அவள் முந்தானைக்குள் ஒழிந்தாள் தப்பிக்கலாம் என்று தற்காத்த பொழுதில் உங்கட செல்லம்கூடிப்போச்சு என்று பெட்டிப்பாம்பாகும் அப்பர் இன்று முன் சுமக்கும் போது முண்டு கொடுக்க வேண்டியவன் முதுகெலும்பில்லாமல் மூலையில் முக்கியழும் என் வேதனையை அறிவாளா பாட்டி!.
..
பேராண்டி உன்னைத்தாங்கிய இந்தக்கையில் உன்ர வாரிசை காட்டாமாட்டாயா?என்றவளுக்கு விரைவில் வருவேன் என்று எத்தனை ஒப்பந்தம் போட்டு கடைசிவரை பார்க்காத தீர்வுத்திட்டம் போல் கண்மூடிவிட்டாளே!
..
அன்னை மடியைவிட அதிகம் கிடந்தது எண்ணைவாசம் வீசும் அவள் மடியில்தானே!
கொள்ளிபோடும் தந்தையை தாங்க வேண்டியவன் தாண்டமுடியாத தூரத்தில்!
எப்போதுமே சினக்காத பாட்டி முகம் இன்னும் கண்னுக்குள்!
..
என்றாளும் கெட்டிக்காரி 11 பிள்ளை பெற்றும் எல்லாருக்கும் பூட்டப்பிள்ளை கண்டுவிட்டாள்!