30 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-26

கண்களை மூடினாலும் தெரிகின்றதே
சதைபிளந்து உடல் எரிந்த காட்சிகள் என்று பா.விஜய் கவிதை சொல்லும்,.

வேதனை வீட்டைவிட்டு பிரிந்து செல்வதை கவிதையாக கம்பன் சொல்லாதது ஏனோ ?என எண்ணவைப்பது!

 வீடு ஒரு உயிருக்கு நிகர் என்பதாலா?

இப்படித்தான் இதுவரை நான் பிறந்த ஊர் ,என் ஊர் ,என் சொத்து .என்று இறுமாப்பில் இருந்த பங்கஜம் பாட்டியும் பரதேசியாக ஏதும் அற்ற ஏதிலி ஆகும் நாளும் வந்தது.

 1991  ஆனி மாதத்தின் முதல் வாரத்து வெள்ளிக்கிழமை அதிகாலை 10.மணி அன்று .வேலியில் பாடிய திருச்சிராப்பள்ளி வானொலி
நேரம் சொல்லிக் கொண்டு இருந்தது .

எதிரே படலையில் பாட்டி இன்னும் கொஞ்ச நேரத்தில் அடிபாடு தொடங்கி விடும்  போல இருக்கு.

இந்தச் சைக்கிள் போராளி தம்பி வேண்டிக்கொண்டு போனவராம். வேலியில் சாத்தி விட்டு.இதைத் தந்துவிட்டன்  நானும் அம்மாட்டப் போறன் என்று விடுப்புப் பார்த்த குமரேசன் சொல்லிவிட்டுப் போன சில நிமிடங்கள் !

கோர்க்காலியில் இருந்து எடுத்துவைத்தும் ,எதற்கும் பிள்ளைகளுக்குத் தேவை என்று யூரியா பாக்கில் கட்டிவைத்த உடுப்புக்களும்  ,கொஞ்ச அரிசிமாவும் எடுத்து முன்னாயத்தமாக ஏற்றிவைத்திருந்த இரட்டைமாட்டு வண்டியை.

எதற்கும் அடுத்த கிராமத்தில் நிறுத்திவிட்டு வாறன் என்று  சொல்லி விட்டு சின்னத்தாத்தா  தம்பி யுடன் சென்ற சில நிமிடத்திலேயே!

  டேய் எல்லோரும் எதற்கும் சேட்டைப் போட்டு நில்லுங்கோ.

 அடைத்து வைத்திருக்கின்ற கோழியைத் திறந்து விடுங்கோ .

ராகுல் கிளியைத் திறந்து விடு.

 வந்தால் பார்க்கலாம் .
இல்ல அம்மா .
இது நல்ல கிளி.
 என் பேர் எல்லாம் சொல்லுது பயறு போட்டு வளர்த்ததில்.

டேய் நீ வாறீயா இல்ல குத்தூசி நெருப்பில் வைத்து சுடூ வாங்குவாய்  என்றாள் அம்மா .
! அதுவரை கேட்காமல் இருந்த ராகுலுக்கு எச்சரிக்கையாக.

பாட்டி எங்கே ?

அவங்க மாட்டை அவிழ்த்துவிடுறாங்க நாணாயக்கயிறு மட்டும் விட்டுட்டு

.நீ என்ன செய்யிறாய் !

இந்த அம்மா கொஞ்ச நேரம் கிளியோட  விளையாட விடமாட்டா.

 கத்த வைக்காதயடா வாறீயா இல்ல குத்தூசியில் சூடுவைக்கவா ?

 வேண்டாம் வாரன் அம்மா.

 இப்படித்தான் போனவாரம் !

மாட்டுக்கு குறி சுட்டது.
தேங்காய் மட்டையில் நெருப்பு மூட்டி.

 ஒவ்வொரு மாட்டிலும் யார் யாற்ற மாடு என்று பங்கு பிரிச்சு பெயர் குறீயீடு போடுவது .

மாட்டுக்கு தண்ணீர் வைக்கவும் ,வைக்கோல் யார் போடுவது ,புல்லு வெட்டுவது, என்ற வேலைகள் பார்க்க .

ராகுலின் பெயரிடும் போது அனோமாவின் பெயரிலும் ஒரு குறீயீடு போடுங்கோ என்று பாட்டியிடம் சண்டை போட்ட போது!

 எரிந்து கொண்டு இருந்த குத்தூசி எதிர்பாராமல் என் காலில் விழந்து வீடே இரண்டு பட்டது .

மாட்டுக்கு நலம் போடச் சொன்னால் என் பேரனின் காலில் நாமம் போட்டுவிட்டியே என்று பங்கஜம் பாட்டி பத்திரகாளியாகி விட்டது.

 உன்ற பேரன் பார்க்காமல் போனதுக்கு நான் என்ன செய்வன் .

என்று பாட்டியோடு மாட்டுக்கார ஆனந்தன் சண்டைபோட்டது ஞாபகம் வந்தது.

 அம்மா கோபம் வரும் போது இதைச் சொல்லியே பயப்படவைப்பது இப்ப வாடிக்கையாகிவிட்டது.

சண்முகம் மாமி எங்க ?இவ்வளவு நேரமும் காணவில்லை .

எண்ணைய் ஊத்த செங்குக்குக்கார வீட்டபோனாவா.

 ரூபன் செக்காட்டிக்கொண்டிருப்பான் நான் போய் கூட்டியரவோ அம்மா.

போட்டு டக்கண்டு வா .

எல்லாரும் ஒன்றா நிற்பம் என்று அம்மா சொல்லி முடிக்க முன்னரே சைக்கிள் எடுத்துக் கொண்டு சந்திக்கு ஒடினான் ராகுல்! சந்தி கடக்கும் போது!

  வருவான் தொலைந்தவன்!!!!!!
////////////////////

கோர்க்காலி-நெல் அடுக்கும் இடம்  யாழ் வட்டார மொழி!(பத்தாயம் என்று யுகபாரதி சொல்வார் தன் நூலில்)

விடுப்பு-நோட்டம்
டக்கொண்டு-மிகவிரைவாக!
செக்கு-எண்ணைய் அரைக்கும் மர ஆலை.ஈழத்தில் வடக்கில் ,இது அதிகம்

29 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-25

நினைவுத் தூபிகள் நீண்டு வந்தது .
விளம்பரங்கள் காட்சி கொடுத்தது. எத்தனை வீரர்கள் மாவீரர்கள் என்று தெரிந்த முகங்கள் போய் .

ஊருக்குள் புதிய முகங்கள் புதிய வரியுடை உடன் கொக்காவில்,கொக்குத் தொடுவாய்,திருகோணமலை ,வவுனியா,கொடிகாமம் என கேள்விப்படாத பெயர்கள் சொன்னார்கள் .

எங்கட பொடியன்கள் என்றார்கள்  சைக்கிள் கடை வைத்திருக்கும் சின்னனராசு மாமா!

ஏன் மாமா ?இவர்கள் எங்கள் ஊருக்குள் வருகினம் .

அது ஒன்றுக்கும் இல்லை .

யாழ்கோட்டையை அடிக்கிறாங்க எங்கட பொடியங்கள் .ஆமிக்காரனுக்கு ஆதரவாக நேவிக்காரன் வெளிக்கிடாம


இருக்க .

முன் தடுப்பு நடவடிக்கைக்கு வருகின்றனம்.

.என்ன பார்க்கின்றாய்?

 இல்ல இந்தத் துவக்கு எப்படியிருக்கும் தோளில் தூக்கினால்.!

படிக்கிற வயசில பேச்சைப்பாரு .

சினனராசு மாமாவின் சின்னவனும் இயக்கத்தில் இருக்கின்றான்.

 எந்தப் பகுதியில் என்று அப்போது தெரியாது ராகுலுக்கு!

அவனை பின் நாட்களில் நானாட்டன் பகுதியில் இருந்து இங்கே வரவளைத்திருக்கின்றார் தன் பொறுப்பாளர் என்று  சொன்ன
நாள் மறக்கமுடியாது!!

அடுத்த  வாரங்களில் மண்மூட்டைகள் மதில்கள் அளவு உயர்ந்தது

.இரவுகளில் நிலவு வெளிச்சத்தில் பதுங்கு குழிகள் தோண்டினார்கள் பலர் சேர்ந்து .

போராளிகள் வரைபடத்தைக்காட்ட அதற்கேற்ப மண்கள் வெட்டி அள்ளப்பட்டது. பனைமரங்கள் பாதுகாப்பு அரனாக நிமிர்ந்து நின்றது .

பல வீடுகளில் இருந்து போராளிகளுக்கு பார்சல்கள் பரிமாறப்பட்டது

. அம்மன் கோயில் பக்கம் போவதற்கு தடை வந்தது.

போராளிகள் பலர் நண்பர்கள் ஆனதில் சிறுவர்கள் முகத்தில் புதிய உற்சாகம் பிறந்தது ..

எங்கும் ஒரு வித இறுக்கமான பார்வை பெரியவர்கள் முகத்தில்.

 சிறியவர்களுக்கு தூப்பாக்கி கைகளில் தொட்டுப் பார்க்க பழகிய போராளிகள் அனுமதித்தார்கள் .

புதிய மோட்டார் சைக்கிளில் பலர் ஏறிப்பார்த்தார்கள்.

பட்டம் விடச் சண்டை போட்ட அண்ணாமார்கள் எல்லாம் எங்கே போறம் என்று  சொல்லாமல் போய்ச் சேர்ந்தார்கள்.

 கேணியில் சின்னவர்களை மூழ்கடித்து மூச்சுவாங்குவதைப் பார்த்வர்கள் பலர் பறையாமல் போனார்கள்.

 அதுவரை தராத ஒல்லிக்கோழைகள் எல்லாம் கரை ஒதுங்கிக் கிடந்தது அடுத்தவர்கள் நீந்திப்பழக வசதியாக

. எங்கள் கேணிகள் சொல்லித்தரவில்லை
"நீந்துவார் நீந்தத் தெரிந்தவர்கள் தாண்டுவார்கள்
தாண்டிக் கிளாளிக்கரை சேர்வார்கள் "என்று.

வீடுகளில் ஒப்பாரி கேட்டது. நம்பி இருந்தன் நாட்டுக்காக போய்ட்டானாம். !

நான் என்ன செய்வன் நான்கு  குமர்ப்பிள்ளைகளை வைத்துக்கொண்டு. தலையில் அடித்துக்கொண்டு அழுதா எதிர் வீட்டு இன்பம் மாமி!

இத்தனையும்  பார்த்தவர்கள் பத்திரிக்கை படிப்பார்கள் சனசமுக நிலைய்த்தில் .

அடுத்த அடி இங்க தானோ? என்று முரசெலியும் ,ஈழநாடும்,ஈழமுரசும் எண்ணத்தில் எழதிக் கொண்டிருந்த பத்திரிகை பறந்து கொண்டிருந்தது.

போராளிகள் பலரிடம் அப்போது வோக்மன் ரேடியோ பழக்கத்தில் வந்தது.

அதுவரை ஊருக்குள் பார்த்ததில்லை ராகுல் .

அவர்கள் ஒலிநாடா போட்டு பெண்டோச் பற்றி போட்டுப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் .

அவர்களில் தம்பி என்ற போராளி எப்போதும் சைக்கிள் கைமாத்து வாங்கிச் செல்வான்   அடுத்த
நாள்!!!

தொலைந்தவன் வருவான் விரைந்து!!!!!!!!!!!!!!!!


//////////////////////////////////
ஒல்லிக்கோழை-தேங்காயின் நீர்த்தன்மையற்ற நிலை!
நேவிக்காரன்-கடற்படையினர்
ஆமிக்காரம்-தரைப்படையினர்
இயக்கம்/போராளிகள்-த.வி.பு
பொண்டோச் பற்றி-சிறிய பட்டரி!

28 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-24

கிராமத்தவன் வானம் பார்த்தவன்  பட்டணத்து பகட்டு வாழ்வு தெரியாதவன் என்பார் முத்துக்குமார் கிராமம் நகரம் மாநாகரம் தொகுப்பில்!

 அப்படித்தான் கிராமத்து வாழ்வும் ராகுலுக்கு .இனிய தாகப் போய் கொண்டிருந்தது .

மீண்டும் தன் பள்ளியில் பழைய நண்பர்கள் நண்பிகளுடன் சேர்ந்து கொண்டான் .அவன் வழமையாக சேரும் தோழிகள் எல்லாம் நீ பதுளையில் போன பின்பு பேச்சே மாறிவிட்டது. நீ மலையகத் தமிழ் (இதில் வார்த்தை மாற்றிவிட்டேன் யாழ்ப்பாணத்தவர் எப்படி பேசுவார்கள் என்பதை எழுத்தில் வடித்து பிரிந்து நிற்க முடியாது தனிமரம் .ராகுலும் அதைத்தான் என்னிடம் கேட்டான் அதனால்   தவிர்க்கின்றேன் .சில இடங்களில்) பேசுகின்றாய் என்று அன்று அருகில் இருந்து சொன்ன ராஜி .

இன்றும் ஐரோப்பாவில் காணும் போதும் நீ அப்படியேதாண்டா இருக்கின்றாய். என்று செல்லமாக சொல்லிச் சிரிக்கும் போது நான் கேட்பது வழமையாகத் தானே கதைக்கின்றன்.

.ராகுல் நீ சரியாப் பேசிறீயா?
 .ராஜி!

.நீ அப்புறம் என்பதே நாங்க சப்பறம் பார்த்த ஞாபகம் வருகின்றது.

.குமார் அவளுக்கு சார்பாகப் பேசும் போது அன்று பள்ளியில் சிரிப்போடு அதைவிட்டு விட்டான். நீங்க பாலம் தாண்டி போய் வாருங்கோ புரியும் எல்லாம்!

 பங்கஜம் பாட்டியிடம் சொல்லுவன் என்ர பாட்டி யார் தெரியும் தானே ?

ஓம் நாங்க பகிடிக்குச் சொன்னாங்க !ராகுல் இனி ஒன்றும் பேசமாட்டம் நீ புது ஆட்களோட ஊர் சுற்றியதைத் தான் இப்படி பகிடி பண்ணினோம்.

 இனிச் சரி நல்லா படிப்பம்டா !
நீ படி ராஜி நான் வாய்ப்பாடு பாடமாக்கணும்..கள்ளுக்குடித்துவிட்டு வரும் கணக்கு வாத்தியார் கருக்கு மட்டையால் தலையில் அடிப்பார் 12 வாய்ப்பாடு பாடம் இல்லாதவர் எழும்புங்கோ என்றாள்.

 இந்த மேனகா என்னைத்தான் கைகாட்டுவாள் ராஜி .

நீ யோசிக்காத இன்று பள்ளி
முடிய அவள் மயிரை இழத்து அடித்துப் போட்டு வாரன்.

 வயலுக்கால ஓடிவிடலாம் வீட்டை. சரியா அப்போது சரி என்று தலையாட்டிவிட்டு அடுத்த பாடம் நடந்து.

 சண்டை போட்டு வீட்டு போனான்

. கிராமத்துக்காற்றில் விவசாயம் வீச வெளிக்கிட்டது. வயல் உழுதார்கள். வரம்புகட்டினார்கள். வளவுகள் அளந்தார்கள்.

 பங்கஜம் பாட்டியிடம் ராகுல் கேட்ட பக்கத்துவளவு எனக்குத் தான் தரனும்! எதிர்வீட்டு மேனகா கொஞ்சநாளா என்னொடு சண்டை போடுகின்றாள்.

 வேலி போடேக்கிள நான் யாற்ற பேரன் என்று காட்டணும் பாட்டி .

சீச்சீ சின்னப்பிள்ளைகள் சண்டை போடக்கூடாது .

அவள் பெரியவள் ஆனால் நீதான் கட்டுறியோ? யார்கண்டா !பேராண்டி.

 பேரணுக்கு நல்லாத் தான் செல்லம் கொடுக்கின்றீங்க பொரிமா ஊட்டிக்கொண்டு. பேசுற பேச்சா மாமி!

. அப்ப
வந்தார் ஐயா.

நெல்வயல் நிறைந்து வசந்தம் வாழ்வை பூத்துக்குழங்க வைத்திருந்தது.
 நெல்விளைந்த இடங்கள் எல்லாம் எள்ளு விதைத்தோம். இடையில் கவுப்பி போட்டோம். பயறு, சோளம்,சானை என   வயல்கள் பருவம் தந்தது .

கிளிகள் வரும் கொத்த என்று வலை வைத்தும், சட்டிபானையில் பொம்மை செய்தும் வயலில் வைத்தோம்!

.பனைமரப்பொந்தில் கிளிகள் பிடித்தோம் .மாலையில் பட்டம் விட்டோம் .கேணியில் குதித்தோம்.

 கேட்க யார்?

 இது எங்கள் ஊர் என்று குயில்களாக திரிந்தோம் .

கிளிகள் பச்சை மட்டுமா ?

பக்கத்துவிட்டு பாறாத்தையின் பேத்தியும் ஒரு கிளிதான் .

தண்ணிக்குடத்துடன் வயலுக்கு வந்தா  !

அன்று வரும் வழியில் தள்ளிவிட்டு பானை உடைந்ததால்.

 பங்கஜம் பாட்டி கிளுவங்கம்பு முறியும் வரை காலுக்கு கீழ் அடித்தா.

 பெட்டைப்பிள்ளையோட என்னடா வீரம் காட்டுற .

அவள் உடைத்தது மண்பானை என் வீட்டில் இருப்பது பித்தளைப் பானை.

 இப்ப அதை அல்லவோ கொடுக்க வேண்டிக்கிடக்கு .

நீ பதுளை போய் வந்த பின் குழப்படி கூடிப்போச்சு

.அம்மா அடுப்படியில் இருந்து சொல்லுவா.

அந்த வாழ்க்கை எப்படித் தொலைந்தது.!ஏக்கமான நாட்கள் கிராமத் தென்றல் கூவியது மழைமேகங்கள் வரும் என்று வந்தது யுத்த மேகங்கள். !!


அதுவரை எங்கள் வீட்டில்
k.s ராஜா,ராஜேஸ்வரி சண்முகம்,சற்சொரூபவதி நாதன்,மனோகரி சதாசிவம்  என்பவர்களின்  இலங்கை வானொலிக்குயில்கள் போய்.

 ஐஸ்பழ வான் வரும் போது !

"கடல் ஏன் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில். நனைய வைத்தான் ""
பாடல் போய்

"தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை இழக்கலாமா."

என பாடிக்கொண்டு தெருக்கள் எங்கும் சுற்றிவந்தது ஐஸ்வான்.

"காந்தி தேசமே காவல் இல்லையா பாடல் போய் புதிய குரல்கள் குந்தியிருந்த .

சந்தி எங்கும் கீதம் இசைத்தது.

 "எதிரிகளின் பாசறையைத் தேடிப்போகின்றோம் தமிழ் ஈழமண்ணை மீட்க ஓடிப்போகிறோம்"

எங்கும்  அழைப்புச்  சங்கு ஊதியது இடைவிடாத இசையாக இதயத்தில் இருந்தது ராகுல் மனதில் இந்தப்பாடல்!
                    
முகம் தொலைந்தவன் வருவான் விரைந்து!!!!!!!
//////
.
பகிடி-நகைச்சுவை -யாழ் வட்டார மொழி
அப்புற்ம்- பிறகு -மலைய்க வட்டார மொழி

27 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-23

தேவராம் பாடிவிட்டால். அதுவரை வசந்த மண்டபத்தில்  இருந்து வாசித்த
 ஈழத்தில் தவில் நாதஸ்வர  வித்துவான்கள்.

  தங்களின் திறமையை மழையாகப் பொழிவார்கள் தோளில் தொங்கவிட்டு தவில் அடிப்பவர்கள். டிண்டடிண்டக்க டிண்டடின்=

 காட்சியின்பின்னால் ஒலியைக் கேளுங்கள்



என்று ஒலி எழுப்ப நாதஸ்வரம் பீபீபீ பீபீபீ என்ற ஒற்றை ஒலிக்க  அம்மனுக்கு ஆராட்டு நடக்க அம்மன் உள்வீதி  வலம் வந்து கொண்டிருந்தா!

அம்மனுக்குப் பின்னால் அங்கப்பிரதட்சனையில் முதலாவதாக மூர்த்தி மாமா வருவார்.

 முதலில் ஆண்பிள்ளை பிறக்கணும் ஆத்தா .அடுத்துவருவார் கதிரேசன் இந்த முறை என்ஜினியர் ஆக இடம் கிடைக்கணும் கம்பஸ்சுக்கு கைவிடாத தாயே!
தட்டிவிடுவான் பின்னால் இருந்து தங்கவேல் சாமி போகுது தொடர்ந்து போ பின்னால் பலர் வருகினம் என்று அவன் மனதில் அடுத்த வீட்டுக் கிளியிருப்பாள் இந்த வருடம் சரி தன் காதலை ஏற்றுக்கொள்வாளா? என்று .

இடது புறத்தில் முத்தாச்சிப்பாட்டி கற்பூரச் சட்டியோடு வருவா .

அடுத்து வருவா அம்புஜம் பாட்டி ஆத்தா என்ற பிள்ளை இன்னும் உயிரோடு இருக்கிறானா ஊரெல்லாம் தேடிவிட்டேன்.

இந்தியன் ஆமி எங்கே கொண்டு போனான் என்ற ஒரு பிள்ளையை கற்பூரச்சட்டியை விட அந்தப்பாட்டியின் மனசு சுடும் .

எத்தனை குடம் தண்ணீர் அந்தப் பாட்டியின் கண்களில் பல காலமாகப் பார்த்திருக்கின்றான் ராகுல்!

 இப்படியும் சிலர் ஊருக்குள் உண்டு  கற்பூரச்சட்டிக்குப் பின்னால் பாக்கியம் மாமி பால்குடத்துடன் வருவா.

 பச்சைச் சாரி கட்டி பாலன் மாமி வருவா கூடவே பஞ்சவர்ணக்கிளி போல தேவகி அடி அடிப்பாள் அம்மனுக்கு.

 அடுத்து  முறை ராகுலை விட அதிகம் மார்க் வாங்கனும் என்று.

எப்படித்தான் இவன் குதிரை ஓடுவான் என்னைவிட எட்டு புள்ளி முன்னுக்கு.இரண்டு பேரும் கடைசி வாங்கில் இருந்து தானே படிப்போம்!ராகுலுக்கு

அம்மா எழுப்பி விட்டு அதிகாலையில் தேவாரம் பாடமாக்கி அதிகம் சமயத்தில் புள்ளிவாங்கும் திறமை அவளுக்குத் தெரியாது.அந்தக்கிராமத்தில் படிக்கும் போது.

 இதை  எல்லாம் அனோமாவிற்கு சின்னத்துரைத் தாத்தாவின் தோளில் தூக்கி வைத்து அம்மனைக்கும்பிடு என்ற போது அனோமாவுக்குச் சொல்லியிருந்தான் ராகுல்.


வெளிவீதி வலம் வரத்தேருக்கு ஏற்றினதும் !தீபராதனை காட்டியதும் தேர் நகரப் போகின்றது என்ற செய்தி கிடைக்க அதுவரை தேரடியில் அடிக்கக் காத்திருக்கும் சிதறு தேங்காய்களுக்கு சின்னச் சின்ன களைகளுக்கும் முதியவர்களுக்கும் போர்த்தேங்காயாக யார் உடைப்பது எத்தனை தேங்காய் என்று  போட்டி முடிய .

குருக்கள் மணி அடிக்க அரோகரா என்றால் தேர் பவனி!  ஆசைகளைக்கடந்து தான் ஆன்மீகத்திற்கு வரனும் .என்பதைச் சொல்லும் வடம்பிடிக்கும் கயிறு பலர் இழுக்க இழுக்க இடையில் சில்லுக்கு சக்கை வைப்பது தேர் எத்தனை தடைகள் இருந்தாலும் தாண்டி வரும் என்ற ஐதீகத்தில் .

அப்படித் தாண்டி மேற்கு வீதியில் வரும் போது தேர் கொஞ்சம் சரிந்துவிட்டது.
 அப்போதே சொன்னார்கள் ஊருக்குள் அம்மன் ஆடிவிட்டது.

 எங்களை அசைத்துப் பார்க்கப் போறா என்று அப்படியில்லை .

மூடத்தனம் உங்களுக்கு அதிகம்.

வட்டிக்காரமுருகேசு வாயடைத்தார்.

 அந்தப்பக்கம் கொஞ்சம் பள்ளம் அது தேர் சரியவில்லை.

 கொஞ்சம் சாய்ந்தமாதிரித் தெரியும் சங்கடம் இல்லை பங்கஜம் .எல்லாம் அவன் செயல் என்று சொன்ன போது பாட்டியின் மனதில் தைரியம் இருந்தது .

திருவிழா முடிய தவில் காரர் எல்லோருக்கும் ரூபன் தட்சனை வெற்றிலையில் வைத்துக் கொடுத்த போது அருகில் இருந்தவன் ராகுல்.

 அப்போது சிஞ்சா போட்ட பொடியனை பின்நாளில் ஐரோப்பாவில் பார்ப்பான் என்று அன்று நினைக்கவில்லை.ராகுல்!

அது எல்லாம் ஒரு காலம் !

அடுத்த நாள் தீர்த்தம் முடிந்து தங்கமணி மாமாவும்,செல்வம் மாமா,செல்லன் மாமா குடும்பம்கள்  பதுளை போனார்கள் .

பேரன்  ராகுல் இனி இங்கே படிக்கட்டும் என்று பங்கஜம் பாட்டி மீண்டும் கிராமத்தில் படிக்கச் செய்துவிட்டா .

மருமகளையும் சேர்க்கவில்லை .பேர்த்திமாருக்கு சங்கிலின்போட்டுவிட்டா..

அன்று போகும் போது அனோமா கைகாட்டிவிட்டுப் போனாள்!

 அப்போது தெரியாது அவனைவிட்டு அவள் தொலைந்து விடுவாள் என்று!

இந்தப்பாட்டு!அந்தக்காட்சிக்குப் பொருந்தும் என்று இந்தத் தனிமரம் எண்ணுகின்றது கேட்டுப்பாருங்கள்!-

              தொலைந்தவன் வருவான் தொடர்ந்து
///////////////
அங்கப்பிரதட்சனை- இந்து ஆண்கள் செய்வது /உருலுதல் பேச்சு வழக்கு

26 March 2012

காணவில்லை-கும்மி!

இந்தப் பதிவு ஒரு ஜாலிக்குத்தான்!!!!!!



காணவில்லை!
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா .என்று எழுதிவிட்டு என்னை வந்து சந்தித்து .தனிமரம் எப்படி நித்திரையில் இருந்தது படத்தில் என்று பதிவுலகில் போட்டு மானத்தை வாங்கிவிட்டாய் !



கேட்டிருந்தால் தனிமரம் மரத்தில் ஏறி இருந்து சிட்டுக்குருவி பிடித்த படம் தந்து இருப்பேன்.

 அன்று திட்டியதில் கோபப்பட்டுப் போய் விட்டான். எங்கே போனான் என் தம்பி துஸி??

தேம்ஸ் நதியில் குதிக்கப்போனானா ??அங்கே அதிரா தானே போய் குளிப்பா(குதிப்பா).

இவன் இரவுவிடுதிக்குப் போய் இருப்பானோ !?
 அதிகாலை
5மணிக்குத் தான் முடியும்.

 அப்போது இராஜராஜேஸ்வரி அம்மா ஆன்மீகப்பதிவு போட்டிருப்பா .
.
வேலைக்குப் போகும் இடத்தில் படித்து பின்னூட்டம் இடுவேன்.
 அதுவும். இந்த வாரம் அவங்கபிளாக் திறக்குது இல்லை என்னாச்சு.
பாருங்கோ என்று தனிமெயில் போட்டும் பதில் வரவில்லை .

என்று ஜோசிக்கும் எனக்கு ஞாபகம் வந்துச்சு. லிங்கு போடுவதில் டாக்குத்தர் அண்ணாச்சி எங்க கந்தசாமித் தாத்தாவுக்கு அழைப்பு எடுத்தேன்.

 துசியைக் காணவில்லை லிங்கு குடு சாரி நம்பர் கொடு பழக்கதோஸம் என்ற போது நிரூபனிடம் கேளுங்க பாஸ் என்றார் .

.பாரிஸ் காதல் படத்தில்  பறவை முனியம்மா கூட படப்பிடிப்பில் குத்தாட்டம் போடும் தாத்தா கந்தசாமி. ஒருகையில் ஹேமாவின் பிளாஸ்டர் உடன் ஓட்டத் தயாராக நானும் ஓடினேன்.

 அடக்கடவுளே!
 ராமா என்ற போது தாமரக்குட்டியின் ஞாபகம் வந்திச்சு.

உடனே லப்டொப் மனோவின் ஞாபகம் வர பயல் அண்ணாச்சியுடன் ஊரைச்சுத்தப் போய்விட்டானோ ?

என்று மதுரன் இடம் கேட்டேன்..நமக்குத்தான் செட்டாகதே தனிமரம்   கந்துவிடம் போய் வந்ததால் நீங்க கவிக்கிழவன் நண்பேண்டா என்று என்னைச் சேர்க்காமல்  மட்டுமா பின்னூட்டமும் தரவில்லை மதுரன்..

அந்த நேரம் யாரு பதிவு போட்டு இருப்பாங்க.

 நம்ம சி.பி.விக்கி,நடைவண்டி கணேஸ்,ராஜி  அக்காள் என்று ஓடியோடிப்பார்த்தேன் என் கைபேசியில் கவிதை இருக்கு புலவர் சொன்னார்,.

என்ன செய்வது சிவர் தேடும் சித்திரம்.
துசி எங்கே போனாய் என்ற  போது அடிக்கடி அண்ணா என்பானே வசந்த மண்டபம் மகேந்திரன் வீட்டில் இருப்பானோ?இல்லை பன்னிக்குட்டியார் ராமசாமி

என்று  .நினைக்க காட்டான் காரில் வந்தார் ஐயோ!

கடந்தவாரம் என்னை மதவாதி என்று மணியத்தார் சந்தி சிரிக்கவைத்தது இவர்காரில் ஏற்றி!

இனி இவர் காரில் ஏறி வேலைக்குப் போய்  வேண்டாம் தனிமரம் தனியாகத்தான் போகும் போறேன்.

 வேலைக்கு அவசரமாக
என்று விட்டு ஓடும் போது எதிரே வந்தார் யோகா ஐயா .
என்னாச்சு என்றார் .
துசியைக் காணவில்லை .

தேடிக்கொண்டு வாரன் ஐயா .ஒரு சந்தேகம் ஐயா ?நான் எல்லாற்ற பதிவை படிப்பது உங்களுக்குத் தெரியும்.
புரியுதா  !ஓம் தனிமரம் அதுபோதும்.

 ஒழுங்கா பதிவைப்படிக்காம எப்படி ஐயா பின்னூட்டம் இடுவது சொல்லுங்க?
பிடித்த விடயத்தை மட்டும்  தானே பின்னூட்டத்தில் சொல்லமுடியும் .

தொடர்ந்து வேட்டியை உருவி இம்சை செய்தா ?எனக்கும் பழக்க தோஸம் ஒன்று இருக்கு .மதியாதார் வீடு மிதியாமை .
அட பால்கோப்பி இன்று ஏன் சுட்டுப் போட்டுதோ ?எங்காவது !
தனிமரம்  .

நீ  போய் வேலையைச் செய் நாலுநாளில் தேடிக்கொண்டு துசியுடன்.
நான் வாரன் .

 கடையில் என்ன இருக்கோ சொர்க்கத்தின் வாசல்படி நம்மட கடைவீதி செளர்ந்தர் பதிவு போட்டிருந்தார்.

 உள்ளே போனேன் .கந்தசாமி கருவாச்சிக் கலையிடம் களவு எடுத்த வாத்தை

                                           கருவாச்சி வாத்து இது!


 கறியாக்கி காட்டானுக்கும் அவர் மச்சான் அம்பலத்தாருக்கும் பரிமாறினார்.

                                          நம்புங்கோ கந்துவின் கைவண்ணம்!

 வாத்து இறைச்சி எப்படி நாட்டாமை? என்று கேட்க நினைத்தேன் .சொல்லத்தான் (சென்னைப்பித்தன்)நினைக்கறேன் .என்று வாத்து இறைச்சிக்கு  ஆமை இறைச்சி என்று எழுத்துப்பிழைவிட்டு ஏழுதிப்போட்டேன் .

என்ன  புலம்பல் .அமல்ராஜ் அருகில் வர ரதியக்கா சொன்னா தம்பி துசி பதிவு எழதுவது இல்லை இப்போ .

காணாமல் போய் விட்டார்! உண்மைதான்  ரெவெரியும்  சொன்னதில் அக்காள் ஹேமாவும் நம்பினா நான் புத்தகம் படிப்பதில்லை என்று .

அப்போது தான் ஞாபகம் வந்தது இவன் தேவயானியைத் தேடிப் போய்ட்டானோ?

முத்தாரம் பார்ப்பதில் எங்கேயோ மூழ்கிப் போனான் .
முதலில் மெயில் போட்டேன் தேவயானிக்கு .மெயிலில் எழுதியது இப்படித்தான்!

தனிமரம் பாட்டுப் போடணும் நல்ல சாங் இருக்கு. எங்க தம்பி துசியைக் கண்டால் கூட்டிவாங்கோ .கனவரோ நடத்தும் வெல்லலாம் பெல்மூடி.

  அதில் துசி வென்றதில் சூட்டிங் இடத்திலேயே இருந்து கொண்டே முகநூலில்   அறிக்கைவிட்டவன் .

தேவயானின் மகளைவைத்து  ஒரு படம் இயக்கப்போறன் என்று
ஏன் இப்ப தனிமரம் துசியைத் தேடுகின்றீர்கள் என்றார் கோகுல் மனதில் விளக்கம் சொன்னேன்.

 தனிமரம் ஒரு கதை சொல்ல ரெடி முகம் தொலைந்தவன் என்று தொடரைச் சொன்னேன்!அது கேட்டு குழம்பிப்போய் இருக்கும் எஸ்தர் -சபி ஒருபுறம் என்றால் ஓடிக்கொண்டு இருக்கும் போது  வந்தார் என் ரசிகன்
ஹாலிவூட் ரசிகன் .ஒரு ஆங்கிலப்படம் பாருங்க என்றார் .

 காற்றில் என் கீதம் கேட்ட பாடல் மதியோடையில் சுட்ட பாடல் சேர்த்து  மாலினியின் பேத்தியுடன் லச்சன லஸ்சன்  ம்கே ஆதரனிய டூயட் பாடி .

இன்னொரு இன ஒற்றுமைக்கு உயிர் கொடுத்து அதில் அரசியல் கலந்து  ஒரு காவியம் செய்யலாம் என்று இருக்கின்றேன்.

தேவயானி மேடம் உங்க முடிவில் தான் துசி பதிவுலகிற்கு வர வேண்டும் அக்கா என்று எழுதியிருந்தேன் .

ரியாஸ்
எங்கே போனான் .

முதலில் போன ராஜ் இன்னும் வரவில்லை .சண்முகவேல் ஐயாவிடம் ஆலோசனை கேட்போமா ?
ரமனி சார் தீதும் நன்றே பிறர் தரவாரா இல்லை .

இரத்தினவேல் நடராஜன் ஐயாவிடம் .

இவர்கள் எல்லாம் உனக்குத் தெரியுமா ?? வியப்போடு துரைடேனியல்.

எப்படி ஐயா பதில் சொல்லுங்க இத்தனை உறவைச் சேர்த்தீர்கள் .வை. கோபாலகிருஸ்ணன் ஐயா .

அடிக்கடி தனிமரத்தை இராஜராஜேஸ்வரி பிளாக்கில் பார்ப்பேன் மதுமதி.

 இது ஒரு தனிமரம் தான் s.b.பாலசுப்பிரமணியம் ஐயா சொல்லுவார்.


என்ன செய்யலாம் விசரன் அண்ணா?

கடிதம் எழதிய ஆட்சி போய் தந்தியடிக்க கரண்டு (பவர் )இல்லாத  தேசமாக இருக்கும் மாநிலத்தில் தேவயாணி முத்தாரம் நடிப்பது நல்லாத் தெரியும்.

பிடித்தால் பதில் போடுங்க இல்லையேல் பின்னூட்டத்தைப் போல தூக்கிவிடுங்க.

நான் எப்போதும் மாற்றுக்கருத்தை வரவேற்பேன்.

ஏன் என்றாள் எனக்கு மக்களுடன் தான் கூட்டு குழுக்களோடு அல்ல !

மெயில் கிடைத்தும் மறுநாள் 2 பதில் மெயில் வந்தது ஒன்று அம்மனி தேவயானியுடையது .இப்படி அதற்கான காட்சியில்  தேவயாணி அக்காளே வாரா பதில் சொல்லிக் கொண்டு பாருங்கோ---


  இதைப் பார்த்து                                                                                              பின் பதிவோடு வரட்டும் தம்பி!


அடுத்த மெயில் என்னது யார் போட்டது 2/4/ 2012 .
பதில் சொல்கின்றேன் கொஞ்சம் பொறுங்கோ உறவுகளே!

 ராகுல் காத்திருக்கின்றான் தொடரை முடிக்காம கும்மியில் இருக்கிறீயே தனிமரம்   வெயில்  வருகுது என்று.

////////
லஸ்சன- லஸ்சன மகே ஆதரனிய- சகோதரமொழியில் -அழகான அழகான காதலி!

25 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-22

தேர் ஒரு ..பஞ்சகிருத்தியம் என்பான் ஆன்மீகத்தில் ஊறியவன் .





நல்லூர் தேருக்கும் ,மதுரை கள்ளழகர் தேருக்கும் ,மதுரை மீணாட்சி தேருக்கும் இடையில் பல வேறுபட்ட நிலையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு இருக்கின்றது என்று விநோதங்களைப்  பார்த்து ஆய்வு செய்வான்






 ஒரு சிற்பக்கலையை கற்க ஆசைப்படும் பாமரன்.

 தேர் எப்படி வீதியில் நின்றது என்று மஹாகவியின் தேரும் திங்கள் கவிதை சொல்லும் .அதனைப்படிக்கும் வாசகனுக்கு.


மதுரை எப்படி மூன்று நாள் ஜொலிக்கும் என்று கள்ளழகர் தேரில் வரும் நாளில் பார்க்கனும்!

 இப்படித்தான் ராகுலின் ஊரிலும் அவர்கள் வீட்டுத் திருவிழா 9 நாள் அதிகாலையில் ஆளுக்கு முந்திக் கோயில் போய்விடுவார்கள் .

பேரம்பலம் போட்ட தெற்பைமகன் சண்முகத்திற்குப் போய் பின் ரூபனின் கையிலும் வம்சா வழித் திருவிழா என குடும்பம் கூதுகலிக்கும் .

உங்களைவிட எனக்குத் தான் உரிமை அதிகம் .நான் தான் பெரியண்ணா என்ற தோரனையில் இடுப்பில் வேட்டி கட்டி தெற்பை போட்டிருக்கும் அவனின் கையில் இருந்து ராகுலுக்கு வராதா என  ஏங்கிய நாட்களில் .

அவனுக்குத் தெரியாது குடும்பத்தில் பெண்ணுக்கு சீதனம் கொடுத்து கட்டிக்கொடுத்து விட்டால் குடும்பத்தினால் செய்யப்படும் கோயில்  திருவிழா எல்லாம் ஆண்களுக்குத்தான் உரித்து என்று ஆணாதிக்கவாதிகளின் சமுகச் சட்டம் என்ற ஒன்று இருக்கு என்று.

ரூபன் மச்சான் தானே !அவனுக்கு வேட்டி இடுப்பில் நிற்காது. கட்சி மாறும் சட்டமன்ற உறுப்பினர் போல !

அதனால் தட்சனைக் காசு கேட்கும் போதெல்லாம் அருகில் இருந்து சின்னத்தாத்தா வழிகாட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தார். எங்கே யாருக்கு கொடுக்கணும் என்று.

 அம்மனுக்கு பூசைகள் முடிந்து வசந்த மண்படபத்தில் இருந்து தேரில் வீதியுலா வர ஏழுந்தருளி  வரும் அழகைக்கான ஆயிரம் கண்கள் வேணும் .

அலங்காரத்தில் ஆத்தாவுக்கு என் தோள்கள் தான் கொடுப்பேன் !என்று ஆட்கள் அடிபடுவது சாமியை தாங்கும் வரம் எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை .

வேற ஆட்கள் கொடுக்க முன் வந்தாலும் அப்படிக்கொடுக்கவும் உறவுகள் முன்வாராது. .மாமான்மார்கள்  மருமகன்கள்  என எல்லாரும் பக்திமான்கள்.

 தோளில் அம்மன் சிங்கவாகனத்தில் சீறிவர கொம்பு பிடிப்பது சின்னத் தாத்தா அவர் அம்மனை ஆட்டுவதற்கு கொடுக்குக் கட்டிவிட்டால் .

அமிதாப் பச்சன் போல இளைஞர்கள் எல்லாம் இந்த ஹீரோவிடம் தோற்றுப் போவார்கள் .

முன்னே வந்து அம்மன் பின்னே போய் வர  முதலில் உள்வீதி சுற்றும் அழகு பார்க்க பாக்கியம் செய்து இருக்கனும்.

ஆட்டும் ஆராட்டுக்கு சரியாக ஆட்கள் சேரணும் ஒன்று படுத்தப்பட்ட திட்டப் பிரச்சாரம் போல ஆராட்டுக்கு வெளிக்கிடுவது என்றாள் முதலில் எண்ணெய்தீபம் போக.

 கொடிகள்  சாமரம் வீச தேவராம் பாடிவிட்டாள் அதுவரை வசந்த மண்டபத்தில்  இருந்து வாசிப்பார்கள் ஈழத்தில் தவில் நாதஸ்வர  வித்துவான்கள் .

ஒவ்வொரு திருவிழாவும்  சிறப்பாக நடந்து வந்தாலும் மக்கள் மனதில் மாற்றம் தெரிவது தேர்த் திருவிழாவில் தான் .

ஊருக்குள் கோயில் மேளம் குறை சொல்லப்படும் இடம் இந்த தேரில் தான் அந்தனை நாளும் கஸ்ரப்பட்டு வாசித்த கலைஞர்கள்.

 திடீர்வரவான  புகழ்பெற்ற கூட்டங்கள் அளவெட்டி பத்மநாதன் ,கானமூர்த்தி -பஞ்சமூர்த்தி ,கோவிந்தசாமி  என இருபத்தஞ்சு கூட்டம் மேளம் ,நாதஸ்வரம் கூட்டாக வாசித்து தம் இசைத் திறமையையும் நுணுக்கங்களையும் தாலாட்டும் காட்சி காண வருவோர் பலர் என்றாள் .

எந்த வித்துவான் அதிகமான தேடாவளையம் போன்ற சங்கிலிபோட்டிருக்கின்றார்?

 அது புதிய வடிவம்  தானா ?போன வருடம் போட்ட வடிவம் தானா ?அது தங்கம் தானா ?அல்லது தங்கத்தண்ணீர் போட்ட பித்தளையா என்ற பார்வையில் களவாணி ,முத்துக்கோர்த்த பெட்டி வடிவான  சங்கிலி ,பெண்டன் போட்ட சங்கிலி என முழிசி முழிசிப்பார்ப்பார்கள் சிலர் பத்தியில்லாத ஊதாரிகள்

 . எப்படி இடுப்பில் கட்டினாலும் வேட்டி நிற்காதவர்கள் இந்த மேளக்காரர் கட்டியிருக்கும். இடுப்புப்பட்டியை எப்படா கழற்றிவைப்பார் .களவு எடுக்கலாம் என்று ஆதங்கத்தில் இருப்பார்கள்.  இப்படியும் இங்கு நடக்கும் .

அப்போது  கவனிக்கும் கண்கள் அந்த கூட்டத்தில் .இத்தனையும் பார்த்துக்கொண்டு பலர்  அருகில்.

இருந்து சிஞ்சா போடும் சின்னப் பொடியன் பாடு திண்டாட்டம் சுருதியில் பிழைவிடும் போதெல்லாம் தவில்காம்பால் தலையில் விழும் அடி தள்ளிப்போக முடியாது.

 நாதஸ்வரம் தள்ளிவிடும் இப்படி அடிவாங்கித்தான் நாங்களும்  கலையைக் கற்றுக்கொண்டோம் என்று அதனால் தான் எந்தக்கோயில் என்றாலும் எங்கள் அடிக்கும்  ரசிகர்கள்  வருவினம் பட்டாளமாக.!

என்று ஊதிக்காட்டுவார் கானமூர்த்தி வித்துவான்!

இது எல்லாம் இன்று எத்தனை முகம்ப்தொலைந்த ஈழத்து சந்ததி அறியும்!

நாதஸ்வரம் முன்னால் போக பின்னால் குருக்கள் பார்த்துவருவார் அம்மன் சிலையில் இருக்கும் எல்லாம் சரியான அலங்காரம் தானே பார்த்துப் பார்த்து செய்கின்றேன் ஆத்தா என் மகளுக்கு வழிகாட்டுவாளா??!

   விரைவாக வருவான் தொலைந்தவன்....
////////////


கொடுக்கு-வேட்டியை கோவணமாக கட்டுத்தல்

தேடாவளையம்-பெரியகயிறு.

24 March 2012

கண்ணீர்த்துளிகள்!

செய்திகள் வாசிப்பது என்று எங்கள் இதயங்களில் வாசித்தீர்கள்!


பொங்கும் பூம்புனல் என்று புதிய தகவல்கலோடு புதுப்பாடல்களுக்கு இடையில் இரடிக்கவிதை தந்து இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் புதுமை செய்தீர்கள் .
புதியவர்கள் எல்லோருக்கும் புதுமை செய்துகாட்டீனீர்கள்  .நிகழ்ச்சிகள் தயாரிப்பது ,குரல் தருவது ,விளம்பரத்தில் புதுமை என்று காற்றாக  வானொலியில் வந்தீர்கள் அம்மா!

என் விருப்பம் என்று சொல்லி கண்டசாலா முதல் இன்றைய விஜய் வரை கானம் தந்தீர்கள். காற்றில் கரைந்து போனதாம் உங்கள் உயிர்காற்று!!!

வலையில் வந்த செய்தியில் வாடிப்போனேன் உங்கள் நினைவுகள் பின்னே!



முகத்தார் வீடு,ஒலிமஞ்சரி,என ஒலித்த ஓரங்க வானொலிக்குயில்  ராஜேஸ்வரிசண்முகம் என்ற ஆலமரம் சாய்ந்து விட்டதாம் .
 சாய்ந்து கொண்ட
இரவின் மடியில்  உறங்காத கண்களுக்கும் உறக்கம் வர மறுக்கும் இதயங்களுக்கும் இனிவரும் பாடல் கேட்டது இலங்கையில் மட்டுமா? இந்தியாவிலும் தான்!

இனி எப்போது கேட்பேன் சந்தனமேடையில் உங்கள் குரல்??
 உங்கள் பாடல்கள்!
,ஒலிமஞ்சரி ஒலிக்க நீங்கள் வரும் சனிக்கிழமையின் மதியம் 2'மணி மறக்காமல் . வீட்டுவேலை செய்யாமல் வானொலி அருகே மனதைத் தொட்ட பல்சுவை அம்சத்தோடு நீங்கள் வர  செவிகளைக் கூர்மையாக்கி கொடுத்துவிட்ட கடனாளி அல்லவா!
அந்த குறியிசையை நானும்  இன்று வரை தேடுகின்றேன் .


உங்களை நேரில் கண்ட போது அந்த இசைமறந்தேன் !
உங்கள் முகம் பார்த்து அன்று.

இன்று முகம் பார்க்க முடியாமல் மூச்சுக்காற்றில் போனதா?
மயக்கமா,கலக்கமா என நினைவுகள் உங்களுடன் .வானொலிக்குறுக் எழுத்துப்போட்டி,கதம்பமாலை,நேயர் விருப்பம் இன்றையநேயர்,என் விருப்பம்,வெள்ளிக்கிழமை ஹலோ அல்லியின் அழையுங்கள் என்ற இலக்கம் இன்னும் இதயத்தில் உங்களைப்போல அழியாமல் இருக்கு.
 அது தந்த நீங்கள் இங்கில்லை .
.நாடகங்களில் குரல் வரும் விதம் கேட்டு விழித்திருந்தேன்  .வானொலி மஞ்சரியில் நூல் உருவில் இருந்தது பல பங்களிப்பு
உங்கள் கைவண்ணம்.
மகளிர் உலகம் சொற்சிலம்பம்,கண்டுபிடியுங்கள் குறியிசையில் பாடல் எது என்று . ,மறக்கமுடியுமா !கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு!

பிறந்தநாள் வாழ்த்து என பிரியமாக ஒலித்த குரல் பிரிந்து விட்டதாம் .

ராஜேஸ்வரியின் உடலில் இருந்து .

பிரிவுத் துயரில்  பெற்ற பிள்ளைகள் மட்டுமா ?பாடல் கேட்ட வானொலி நேயர்களும் தான்!.

பாசத்தோடு பல இசைகளில் மொழிகடந்து வந்த மூத்த அறிவிப்பாளர் .

பலருக்கு பின் நாட்களில் பயிற்ச்சி கொடுத்த பல்கலைக்கழகம் மூடிவிட்டதா இமையை.

 .இனி எங்களின் அம்மா என்று யாரைக்காட்டுவோம் இசையில் வளர்ந்த செவிகளுக்கு.?

இசையும் கதையும் என்னுயும் எழுதத்தூண்டியது. இடைவிடாது தபால் அட்டை அனுப்பி பாடல்கேட்கும் நேயர் விருப்பத்திற்கு.
 இடையில் தொலைபேசியில் பாடல் கேட்கும் காலத்திலும் தபால் அட்டை சுமந்து வந்த பெயர்களில் என் பெயரும் சொன்னபோது கிள்ளிப்பார்த்தேன் நிஜம் தானா .என்று நேரில் பார்த்ததும் நினைவில் நின்றதும் குரல் மட்டும்தான்.

 இந்த நிமிடம் வரை எப்போதும் புன்னகை உங்கள் வரவில் .அதுதான் பொன்நகை என்று சொன்னீர்கள் !
தொலைபேசிப்பாடல் கேட்கும் நேயராக வானொலிக்கு அஞ்சல் அட்டைப்போய் அலைபேசியில் அடுக்கடுக்காக காத்திருந்தேன். உங்களுடன் சிலநிமிட உரையாடலுக்கு .
வணக்கம் நீங்கள் யார் பேசுவது ?
அடுத்த நாள் என் பாடசாலையில் பலர் கேட்டார்கள் நீதானே நேற்று ராஜேஸ்வரியுடன் பேசியது?

 சிலித்துப்போனேன் பேசிய பின்
அன்று பள்ளிக்கூடம் முழுதும் என் பெயர் இன்று வானொலி எங்கும் உங்களுக்கு கண்ணீர்த்துளிகள்!.
இன்று சுமந்து செல்லும் உடல்பேழையைப்பார்க்க வில்லையே துடிக்கின்றது இதயம்.

உங்களிடம் பிடித்ததே மருதுகாசி முதல் மறைந்த வாசன் வரை பாடல் எழுதியவர்கள் பெயரைத்தான் முதலில் அறிவிப்பு செய்வீர்கள் .

முகவரி கொடுத்த கவிஞர்கள் எல்லாம் உங்களுக்கு ரசிகர்கள் .
வைரமுத்து ,பழனிபாரதி ,யுகபாரதி என பாக்கள் புனைந்தது உங்கள் தனிப்பாணிக்காக தங்கள் விருப்பம் நீங்கள் என்று.
 இனி
வரும் பல இரங்கற்பாக்கள் எங்கள் வானொலிக்குயில் ராஜேஸ்வரி சண்முகம் மறைந்தாலும் மனதில் வாழும் அறிவிப்பாளினி என்று!

காலக்கூற்றுவன் கவர்ந்து சென்றாலும் எங்கள் நினைவில் நீங்காத தேவதை ராஜேஸ்வரி சண்முகம் எங்கள் வானொலிக்குயில் .

இலங்கையின் ஒலிப்பரப்புக்கு விட்டுச் சென்றது பல ஒலிப்பேழைகளையும் இறுவட்டுக்களையும் கடமையில் இருந்த போது. அதன் வழியே உங்கள் குரல் காற்றில் கலந்து வரும் உங்கள் உடல் தான் கவர்ந்து சென்றான் குரலை அல்ல !

அடுத்த நிகழ்ச்சிக்கு அன்பு நண்பரிடம் ஒலிவாங்கியை கையளிக்கும் போது!
 இந்த நாள் எல்லோருக்கும் நல்ல நாளாக அமையட்டும் என்று விடை பெறுவீர்கள் விடைபெற்றது அறிவிப்பில் இருந்து மட்டுமா?(23/3)   ?அன்புத்தாயே என்று கதறும் பிள்ளைகளிடம் இருந்தும் தான்.

அந்த ஒலிவாங்கியை வாங்க நினைத்த ஒர் இதயம் இன்று கண்ணீப்பூக்கள் சிந்துகின்றது!

எங்கள் இதயங்களில் என்றும் அது ஒலிக்கும்! உங்கள் குரல்.
அம்மாவின் பிரிவுத் துயரில் வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!

ராஜேஸ்வரி அம்மாவுக்கு இந்தப்பாடல் அதிகம் பிடிக்கும்!

22 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -21

கிராமியக் கலைகள் வளர்ப்பதில் எப்போதும் ஆலயங்கள் தான் முன்னுரிமையில் இருந்தது ஒரு காலம்!

 இன்று கலைகள் வளர்க்காட் விட்டாலும் நல்ல களைகள் வளர்க்கப்படும் இடம் ஆலயமாகிப்போனது கலியுகம்.

சங்கம் வளர்த்த மதுரை ஆதினம்,தெல்லிப்பளையில் அப்பாக்குட்டியின் அரவனைப்பு,நல்லூர் ஆதினம் ,என சமயம் வளர்க்கும் பணிகள் இருப்பதால் தான் !

இன்றும் சமயம் கொஞ்சம் நெறியோடு இருக்கின்றது .

இப்படித்தான் எங்கள் ஊர்  8 ம் திருவிழாவில் ஊருக்குள் வில்லுப்பாட்டுச் சின்னமேளம் வந்து .

. எல்லா கிராமங்களிலும் இருந்து இரவு பார்த்து ரசிக்க புல்லுப்பாயுடன் பலர் வந்து அமர்ந்தார்கள் கோயில் வீதியில்.

இரவு திருவிழா இனிதே முடிய.

 அன்று திருவிழா செய்த எதிர்வீட்டு சிங்காரி செளந்தரம் என்றால் ஊருக்குள் ஒரு  வாயாடி என்ற பேச்சு இருக்கு  ஆனாலும் இந்த பங்கஜம் என்றால் பணிந்து போவாள்  .

அப்படி எங்க குடும்பம் என்று பக்கத்தில் இருந்த பங்கஜம் பாட்டி பெருமை பேசிக்கொண்டிருந்தா பேர்த்திமார்களுடன்.வில்லுப்பாட்டுப் பார்க்க!

புழுதிமணலில் புல்லுப்புடுங்கும் எங்கள் விரல்கள் .சில்லறைக்காசு தோண்டி எடுக்கும் .

வில்லுப்பாட்டு என்றால் சின்னமணிதான் .அழகாய்ப் பாடுவார். எதுகை மோனையுடன். வந்தனம் வந்தனம்
என்று எல்லாரும் வந்து இந்த வில்லூப்பாட்டில் குந்தனம் என்று கும்பிட்டு தொடங்குவார். கதை சொல்ல.

வில்லங்கம் பண்ணவே விடலைக் காதல் மன்னர்கள்  டவுஸர் மேல் வேட்டிகட்டி வருவார்கள். திருவிழாவிற்கு.

எழுதிக்கொடுத்த காதல்கடிதம் வாங்கிய எதிர் வீட்டுச் சாந்தியின் பதில் காணாமல் தவிர்த்து நிற்கும் பாலன் அண்ணாவுக்கு வில்லுப்பாட்டு விடை சொல்லும் என்ற எண்ணத்தில் நண்பர்கள் சேர்ந்து கூட்டத்துடன் வந்தார். திருவிழாவிற்கு!

வில்லுப்பாட்டு என்றால் சின்னமணிதான் .அழகாய்ப் பாடுவார். எதுகை மோனையுடன். வந்தனம் வந்தனம்
என்று எல்லாரும் வந்து இந்த வில்லூப்பாட்டில் குந்தனம் என்று கும்பிட்டு தொடங்குவார். கதை சொல்ல.

ராமயணக்கதையில் ஆர்வமாக இருந்தார்கள்  பெரியவர்கள்.

சாந்தியின் பதில் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் கல்லு எறிந்து சைகைகாட்டிய பாலன்  அண்ணனுக்குத் தெரியாது .

சாந்தியின் மச்சான்  பரமசாமி பின்னால் பார்த்துக் கொண்டு இருப்பது.

 நிலவு வெளிச்சத்தில் நிறையக்கதை சொன்னார் வில்லுப்பாட்டில் சின்னமணி.

 பின் இருந்த பரமசாமி காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்றுவந்தவன் கொண்டு போன கதையைக் கேள்விப்பட்டவர்  .என்பதால் .

எடுத்தார் சைக்கிள் செயின்.
விழந்தது நிலவு வெளிச்சத்தில் நிறைய இடங்களில் அடி  பாலன் அண்ணாவுக்கு .பதிலுக்கு அவரும் இடுப்புப்பட்டியாளும் விளாசினார்.

 புழுதிமண்ணில் புரண்டு எழுந்தார்கள். அதற்குள் சலசலப்பு வர . அதில் இருந்த ஒரு பாட்டி இவள் சாந்தியிடம் யாரோ வம்பு செய்தவையாம் .

அதுதான் அவள் மச்சான் அடிக்கின்றானாம் .என்று காற்றில் ஒரு பக்கம் கதை வர .

வேட்டி தொலைந்து டவுசர் மட்டும் தெரிய உன்னை விடமாட்டன் பரமசாமி .

வருவேண்டா என்று அவமானத்தில் சொல்லிப் போட்டுப் போனார்!

என்னைக் காதலிக்காத சாந்தியை நினைத்து இயக்கத்துக்குப் போறன் என்று எழுதிவைத்துவிட்டுப் போவது அப்போதுதான்  ஊருக்குள் புதிய வழிமுறையாக  !ஒருதலையாக காதலித்த காதலர்கள்  கண்டு கொண்ட விடயம்.

சாந்தியும் பின் நாட்களில் போராளியாகிய போது  தான் ராகுலும் நினைத்திருந்தான் பாலன் அண்ணா மீது அவளுக்கும் மையல் இருந்து இருக்கு என்று.

. அப்போது
இவனுக்கு சின்னமணியின்  பத்துவிரலிலும் இருப்பது தங்கமோதிரம் தானா !என்ற மயக்கம் இருந்தது .

அப்போது நல்ல நிலவு நேரம்
.ஊரில் .

புழுதியில் புரண்டு படுக்க வேண்டாம் வாங்கோ
வீட்ட போவம் .
நாளைக்கு எங்கள் திருவிழா தேர்த் திருவிழா! என்று பங்கஜம் பாட்டி சொல்ல .

சின்னத்தாத்தா கொஞ்சம் இருங்கோ. வில்லுப்பாட்டு முடியும் போது போகலாம் மச்சாள் .

ராகுல் உனக்கு நித்திரை வரவில்லையா ?என்றாள் அனோமா .

ஊருக்கு வாரதே திருவிழாவிற்குத்தான். நான் பதுளை போகும் போது ரயிலில் நித்திரைகொள்ளுவன்.

இப்ப இந்த அரிச்சந்திரன் மயாணகாண்டம் கேட்டு முடித்துவிட்டுத்தான் வருவேன்.

உனக்கு
நித்திரைவந்தால் பாட்டியின் மடியில் சாய்ந்து கொள்! சினத்தாத்தா தூக்கிக் கொண்டு வருவார்.

 வில்லுப்பாட்டு விரைவாக முடிந்ததும் செளந்தரம் பாட்டி வில்லுப்பாட்டுக் குழுவிற்கு!பொண்ணாடையும் போர்த்து வெற்றிலையில் காசும் கொடுத்தா !

அப்போது செளந்தரம் பேர்த்தி போட்டு இருந்தது. அக்கோபார் துணியில் கையில்லாத் சட்டை   .

இப்போது அந்த வடிவம் பழக்கத்தில் இல்லை .

பின் நாட்களில்  ஐரோப்பாவில் அவளைப் பார்த்தபோது ராகுல் கேட்டவன் என்னைத் தெரியுமா? என்று  ஓம் என்றாள் பல நிமிடங்களின் பின் .

சின்னமணியின் காரில் எப்போதும் இனிமைதான பாடல் ஒலிக்கும் இந்தப்பாடல் அவர் காரில் ஒலித்தது அன்று!
///////////////////////////////////////////////////////


விரைவாக தொலைந்தவன் வருவான்!........

வம்பு-மோசமான செயல்
சின்னமணி -ஈழத்து வில்லுப்பாட்டு கச்சேரி செய்வதில் பிரபல்யமான ஒரு கலைஞர்!

21 March 2012

game over.. ஒரு முன்னோட்டம்!

ஈழத்தில் இருந்து மீண்டும் திரைப்படம் வெளிவராதா?.. ஒரு நல்ல படத்தை எப்போது வெள்ளித்திரையில் கொண்டு வருவோம்! என்று ஏங்கிக் கிடக்கும் இன்றைய இளைஞர்களின் கனவுகள் பலரிடம்..!!

வெள்ளித்திரைக்கு முகவரி கொடுக்க சிறிய அளவில் குறுந்திரைப்படம் எடுக்கின்றார்கள் பலர் .

அப்படியான நண்பர்களுக்கு என்றும் தோள் கொடுக்க வேண்டியது ஒரு கலையை நேசிக்கும் ஈழத்தவனின் கடமையாக இருக்க வேண்டும்.

இவை பிரதேசவாதம்,மொழிவாதம்,இனவாதம் என்பவற்றை கடந்து இருக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்!

எனக்கு எப்போதும் பல நண்பர்கள் பல வட்டங்களில் இருப்பது என் பலம் என்பது  ஒரு புறம் என்றால் ! பலவீனமும் அதுதான்!

நம்மவர்கள் தயாரிப்புக்கள் பற்றியும், தேடல் பற்றியும், இருக்கும் ஆர்வம் பற்றியும் அன்று என்னோடு இருந்தவர்கள் கூட இன்று  முகநூல் வழியாக உரையாடும் போதும் , ஸ்கைப்  வழியாக  தொடர்பில் வரும் போதும் காது கிழியும் அளவுக்கு பல விடயங்களை நண்பர்களாக  பேசிக்கொள்வோம்.

அப்போது அருகில் இருப்போர் 'இவன் வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டனும்' என்று   சொல்லி கிண்டல் பண்ணுவார்கள்.. அது வேறு கதை! ஏன்..இப்போது வலையிலும் பால்கோப்பி கேட்டுப் போனால்  முதலில் பிளாஸ்டர் ஒட்ட காத்திருக்கும் உறவுகளும் பலர்!

மீண்டும் நம் படைப்புக்களுக்கு நாம் வரவேற்பை கொடுக்காமல், அன்னியரின் ஆராதிப்புக்கும்,  அவாடுக்குமாக  ஒரு கலைஞனை கண்கலங்கவிட்டு விட்டு, பிற்காலத்தில் அவனைப்பற்றி பெருமை பேசி பட்டிமன்றம் வைத்து பல பதிவு எழுதி  எதைச் சாதிக்கப்போறோம்? என்ற உணர்வைத் தரும்!

இன்று நம் தேசத்துக் கலைஞர்கள் பலர் முகம் தொலைந்து அரபுலகத்திலும், இன்னும் பிற தேசத்திலும் வாழ்கின்றார்கள். படைப்பாளிகள்,தயாரிப்பாளர்கள் என நொந்து போனவர்கள் பலர்.

இன்னும் நல்ல கதை, இருக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்று ஒரு நண்பன் கூறும்போது, நேரம் வராதா அவனுக்கு ஒளி கொடுக்க என ஏங்கும் நெஞ்சங்களும் உண்டு.

இன்னும் அடிபட்ட இடத்தில் இருந்து மீண்டுவராமல் இருக்கும் சிலரிடம் என்றாவது மீண்டும் ஒரு சமுகவிடயத்தை வெள்ளித்திரையில் வலம் வரவிடனும் என்ற கனவுமட்டும் கலையாது!

எப்படியும் இணைவோம் என சிலர் சொல்லிச் செல்வது வெற்றுக் கோசம் அல்ல என எண்ணவைக்கும் என்னை...

இப்படி இருக்கும் ஒரு நண்பனின் குறும்பட முயற்சிக்கு  என்னால் முடிந்த அளவு ஊக்கிவிப்பு.. அவனுக்காக ஒரு பதிவை பதிவு செய்வது மட்டும் தான்!

அந்த வகையில்
மணியின் முதல் குறுப்படம் தேஞ்ச செருப்புக்கு என் விமர்சனம் இங்கே பார்க்கலாம். http://www.thanimaram.org/2011/12/blog-post.html


அடுத்த இயக்கம்  மிகவிரைவில் என்று கூறப்பட்டிருந்தாலும், மிக வேகமாகவே,  இந்த வார இறுதியில் நண்பன் மணிவண்ணன் கொழும்பில் வெளீயீடு செய்ய இருக்கும் குறும்படத்தின் முன்னோட்டத்தை உங்களிடம் கொண்டு வருகின்றேன் -.

விமர்சனம் விரைவில் பின்னே வரும் .

இது 6 நிமிடங்கள் கொண்ட குறும்படம். 'அந்தக் கணத்தில் என்ன நடக்கும்' என்பதை இன்னொரு கோணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெளீயீட்டை வெற்றிகரமாக செய்து முடி மணிவண்ணா...என்றும் உன் வெற்றிக்கு பக்கபலமாக இந்த தனிமரத்தின் குரல் இருக்கும்! அத்தோடு உங்கள் குறும்படம் வெற்றி வாகைசூட பிரார்த்திக்கின்றேன்!

நல்  வாழ்த்துக்களுடன்
நண்பன் நேசன்!

20 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-20

கோயில் இல்லாத  ஊரில்  குடியிருக்க   வேண்டாம்.!  என்பது  ஆன்றோர்வாக்கு.  அதில் பல  அர்த்தம் உண்டு.

  இன்று  நாத்திகம் பேசுபவர்கள்  என்ன சொன்னாலும் கோயிலில் பல  ஞாபகங்கள்  வரலலாற்றைப்  பதிவு செய்து  கொண்டுதான்  வருகின்றது.

  ஆயிரம் கோயில்  இன்று கவனிப்பார் அற்றும் பொலிவிழந்தும் போகும் நிலையில்.  கோடிகள் கொடுத்து நவீன  பளிங்கு  மண்டபக்கோயில்  கட்டுகின்றோம்  !நம் மேதாவித்தனம் காட்ட .

ஆனால்   நம் பண்டைய கோயில்கள்   கவனிப்பார் அற்று.  புறாக்கள்  குடியிருக்கும் நிலை   .
என்ன கொடுமை  யான் விடையம்  இந்துக்களின்  மனதில் !

அன்று ஊருக்குள்      திருவிழா  என்றால்  எப்படி இருந்த  ஊர் .

இன்று முகாரி  வாசிக்கின்றது  தலைவனை தொலைத்த தலைவி போல காலத்தின் துயர்த்திட்டில்..

ஊரில் திருவிழா  தொடங்கினால்  10 நாட்களும்  ,ஒரே  குதூகலம் தான்.  தண்ணீர் பந்தலில்  மோர்த்தண்ணீர்,  , சக்கரைத் தண்ணீர் என  ஒருபக்கம்.

  கடலைக்கடை, ஐஸ்கிரீம்கடை  ;விளையாட்டுப் பொருட்கள்கடை ,வீட்டுப்பாத்திரக்கடை ,   என ஒரே  கடைத்தொகுதிகள்தான் : பச்சைக்கலர், மஞ்சல் கலர்,என ரியூப்லைட் வெளிச்சம் ஒரு புறம் பெற்றோல்மாக்ஸ் வெளிச்சம் ஒரு புறம்.

பெரியவர்கள்  மருமகனே  ஐஸ் குடிக்கிறியா? கடலை சாப்பிடுறியா? என்றால்.

 மாமா நான் விரதம் கடலை வாங்குங்குங்கோ.  அம்மாட்டச்சொல்ல வேண்டாம்!

 உங்கள் கூட கதைக்க வேண்டாம் என்று சொன்னவா   என்று தம்பி குமார் சொல்லும் போது!
 ராகுல் டேய் வாயை மூடு.

  அது இல்ல மாமா  பாட்டி உங்கமீது  கோபம் என்றதை இவனுக்கு சொல்லியிருக்கிறா அம்மா.

 நீங்க கடலை வாங்குங்கோ  தங்கமணி  மாமா என்றான் யோகன் . ரூபனோடு சேர்ந்து  மாமாவின் காசில்  கடலை   வாங்கும் போது  மாமாவின் சின்னமகள் தர்ஷினி அழுதால்.

  அனோமா அவளுக்கு கிளுக்குமனியில் கிழுக்க. அழுகை போனது .

இப்ப அந்த கிளுக்குமணி புழக்கத்தில்  இல்லை. பச்சைக்கலரில்  மூன்று மணி உள்ளே இருக்கும்.
பெரியவர்கள் சண்டை சிறு உள்ளங்களுக்கு  காட்டிக்கொடுக்கக்கூடாது.

  அதனால்  பல பொது  இடங்களில் மனது புண்படும் .தங்க மணி  மாமாவுக்கு  தம்பியின்  செயல் காயம் தந்த வடு என்று  பின்னாளில்  சொன்னபோது  என்னால்  என்ன செய்யமுடியும்!

கோயிலில் பெரியவர்களுக்கு  சண்டை வாறது யார் சாமிக்கு தோள் கொடுப்பது  என்கிறபோது தான்.

காரணம் கட்டையும், நெட்டையும் சாமி தூக்க முடியாது.
  சாமி காவும் போது  ஒரே வடிவாக  வலம் வரணும்.

சின்னவர்களுக்கு   மோதல் காண்டா மணி அடிப்பதில் தான். எல்லைச்சண்டையே தொடங்கும்.!

நாங்கள் ஒரு கதியாலுக்கே  வழக்குப்பேசிய வம்சம். என்பது இந்த மணியடிக்கும் காலத்தில் மனதில்  வந்துவிடும்.!

 கறுத்த மொத்தச் சங்கிலியில் காண்டா மணியை இழுத்து அடிக்கும் போது.
 அடிப்போரையும் 5 அடிக்கு மேலே இழுத்துக்கொண்டு போகும் கோயில் மணி. அந்தரத்தில் பறக்க கற்றுக் கொள்ளும் இடம் அது  .

அப்போது மணியடிப்பவன்  கட்டியிருக்கும் வேட்டியை உருவினால் !
சீச்சீ  ..கூயா !

என்று மானத்தை வாங்கும் போது தொடங்கும் சின்னவர்கள் சண்டை இடையே யாராவது விலக்குப் பிடித்தால் தான்  நிற்கும்.

அதுவும் யாராவது கட்டையானவர்கள் என்றால் அவனின் நிலை மச்சாள் மார் முன் தோற்றுப் போன ஹீரோதான்!

மணியடிக்கும் சண்டையில் விழுந்து எழும்பி வந்தால் .

கடலைக்கடையில் ஒரு சண்டை வரும். கடலைவிற்கும் பாட்டியை பங்கஜம் பாட்டிக்குத் தெரியும்.

 என்றாலும் கடலைக்கொட்டு களவு எடுத்துச் சாப்பிடுவதில் ஒரு இன்பம் இருக்கு. வெண்ணை திருடிய யசோதையின் சிங்கம் போல!
வறுத்த கச்சான் அதில் முக்கோணம் போல கடதாசியில் சுற்றிவைத்திருக்கும் கொட்டு.


பாட்டிமார் ஒரு காலத்தில் கோயில் பிரகாரங்களில் கடலை மட்டுமா ?விற்றார்கள் .தங்கள் வற்றாத அன்பையும் அல்லவா!

 நீ இன்னாற்ற பேரண்தானே? மகள் வழியோ ?மகன் வழியோ ?

கோத்தையிடம் காசு வேண்டுறன்.
இந்தா சோளம் என்றும் கச்சான் என்றும் தரும் பாட்டிமார் வாழ்க்கை இன்று நவீன யுகத்தில் காணாமல் போன பட்டியலில் அல்லவா!

 இப்படித்தான் சோளம்பாட்டி புனிதம் தன்னிடம் வைத்திருக்கும் சிவப்புக்கலர் சோளம் வேண்டும் போது ரூபனிடம் காசு இருக்கும் என்று  ராகுல் அனோமாவுக்கும் சுகிக்கும் வேண்டும் போது!

 தங்கமணி மாமாவின் மூத்தவள் தனக்கும் கச்சான் வேண்டும் என்றால்.  உடனே யோகன் அண்ணா அவளுக்கு கச்சான் கொட்டு வாங்கிக் கொடுத்தான்.

 இதை எல்லாம் வந்து தம்பி குமார் பாட்டியிடம் சொல்லியதில்.
 பங்கஜம் பாட்டி இப்படி எல்லாரும் என் பேரனைக் குட்டிச் சுவராக்கி விடுவாங்க நானே அவனைப் பார்த்துக்கொள்வேன் என்ற போது பாட்டியின் சாணக்கியம் அப்போது விளங்கவில்லை ராகுலுக்கு.

அன்று 7 ம் இரவுத் திருவிழா முடிந்து இசைக்கச்சேரி நடந்தது .

இதுவரை எங்கள் ஊரில் அப்படி ஒரு இசைக்கச்சேரி நடந்ததுஇல்லை.

அதன் பின் நடக்கவும் இல்லை. விடியவிடிய பாட்டுக்கள் மேடையில் இருந்து ஒலித்தது .

அதுவரை சிட்டுக்களை பள்ளிக்குப் போகும் போதும் ,வயலில் தண்ணி அள்ளப்போகும் போது பார்த்து  மேட்சம் கானும் காதல் கொண்ட வேங்கைகள்.

விடிய விடிய தருசனம் கிடையாதா தேவி ?என்று ஏங்கி வடலிக்குள் காத்திருக்கும் காளைகளுக்கு.

 இசைக்கச்சேரியில் இதயங்கள் மகிழம்.
கச்சான் கொட்டு கைமாறும் சிலரின் கச்சான் கொட்டுக்குள் வெறும் கோதையும், மண்னையும் கொடுத்துவிட்டு கச்சானைய் சாப்பிட்டுக் கொண்டு வம்பு வேலை செய்யும் போதெல்லாம் அனோமா பக்கத்தில் இருந்தால்.

பங்கஜம்ப்பாட்டி பேர்த்தியை பட்டுத் தாவணியில், பொட்டுவைத்து அனோமாவை அகிலா ஆக்கிப்பார்த்தது.

 பெட்டைப்புள்ளைக்கு கழுத்து மொட்டையாக இருக்கக் கூடாது என்று இரட்டப்பட்டில் மல்லிகை மொட்டுச் சங்கிலி போட்டுவிட்டா.

ஆனாலும் பாட்டிக்கு பாசம் பேர்த்திகள் மீது பட்டணம் போய் சீமாட்டியில் சின்னதுகள் எல்லாத்துக்கும் பட்டுச்சட்டை தைத்து வாங்கிக் கொண்டந்தா.

சின்னப்பாட்டி மூலம் அதைக் கொடுத்து உடுத்தி அழகு பார்த்தது ராகுலுக்கு நல்லாத் தெரியும்.

அப்படி ஒரு பட்டுச் சட்டையில் அருகில் இருக்கும் போது ஒலித்தபாடல் -இது-


//////////

கோத்தை-தாய்- யாழ்ட்டாரச் சொல்.
சீச்சீ கூயா- கொஞ்ம் ஆபாசம் -யாழ்வட்டாரச்சொல்

பொம்பள மனசு படம் 
ரத்னசூரியா இசை
பாடகர் -tl தியாகராஜன் சசிரேக்கா  பாடல்காட்சி நிஜம் கிடைக்கவில்லை கிடைத்தவர்கள். லிங்கு  தாருங்கள்

18 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன் -19

பங்கஜம்  பாட்டிக்கு  உடல்நலம் இல்லை என்று  சொல்லி கடிதம் போட்டது முத்தாச்சி பாட்டி.

 தன் பேர்த்தி சுகியைப் பார்க்கவும் ஊர்த்திருவிழா  வரப்போறதாலும்  இப்படி ஒரு செய்தி அனுப்பியது  குடும்பத்தில் எல்லோரும்  இணையும் ஒரு சந்தர்ப்பமாக  இருந்தது   !

ஊரில் எந்த வீட்டு ஆம்பிள்ளையும் ஒன்றாக காணவேண்டும் என்றால்!

 ஊர்க் கோயில் திருவிழா நடக்கனும்.

 அப்போது தான் நாட்டின் பலபாகத்திலும்  தனியாக வியாபாரம் செய்வோரும்  அங்கே வேலை செய்வோரும் என ஒடி  வருவதும்.

 ஒன்றாகத் திருவிழா செய்வதும்.

 அது பரம்பரைக் கோயில் திருவிழா புதியவர்கள் வழிவிடுங்கள் என்றாலும் பாராளுமன்றத்தில் இன்னும் இருப்பது அனுபவம் கொண்ட பெரியவர்கள் என்று எண்ணுவது போல. அவர்கள் குடும்ப க்கெளரவம் இந்த திருவிழாக்களில் தான் பட்டொளி மின்னும் .அம்மனுக்கு சாத்துப்படி சொல்லும் இன்று எந்தக்கடைக்காரர்களின் உபயம் என்று!


ஆனால் பங்கஜம் பாட்டி தங்கமணி  மாமா மற்றும்  ,செல்வம்  மாமா குடும்பத்தை சேர்க்கவில்லை.

  தன் புருஷன் செத்தும் வராத தாலும் தனக்குத்தெரியாமல்  கலியாணம் கட்டின இந்த நாம்பன்கள் வீட்டுக்கு வரப்பிடாது என்று  குசினிக்குள்  போனதும்.

  அம்மாவோ ஒன்றும் செய்யமுடியாததால்  வந்தவர்களை வா என்று கூப்பிடவும் முடியாமல் தொங்கு பாராளு மன்றம் போல  நின்றா!

 அந்த சமயத்தில் .
சின்னாத்தாத்தா   அவங்கள்  என் வீட்டில் இருந்து விட்டு  திருவிழா முடியப்போகட்டும்.

  திருவிழா நேரத்தில் வெளியூரில்   இருந்து யார்  வந்தாலும் பேரம்பலத்தார்  உடனே   அனுப்பமாட்டார்

.  நான்   என்ற பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் யாரையும்  அனுப்பமாட்டன் .

 எனக்கும் வீடு இருக்கு  .நான் செத்தா நாளைக்கு கொள்ளிப்பந்தம்  பிடிக்க பேரப்பிள்ளைகள்  வேணும். என்று விட்டு  சின்னத்தாத்த தன் வீட்டை போய் விட்டார் மாமாமார்கள் குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு.

அடுத்தநாள்  சின்னத்தாத்தா  எல்லாருக்கும் அவர் வீட்டில் .!

பூவரசு மரத்தில் தூங்கிய சேவல்கோழி ஒரு முழக்கயிற்றில் தொங்கியதில் கிடைத்தது.  கோழிக்குழம்பு ,கோழிப்பொரியல்,முட்டை அவித்தது,..திருக்கையில் ஒரு துவையல் ,சுறாவில் ஒரு சுண்டல். ,அகத்தியிலையில் ஒரு சொதி என மதியம் சாப்பாடு

. நீண்ட நாட்களின் பின் மச்சானுடன் கள்ளுப்போத்தலுடன் இருந்தார் எங்க ஐயா !

சின்னப்பாட்டி இடைக்கிடை சூடைமீன் பொரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தா குடிப்பவர்களுக்கு சுவைக்க!


இரவு மரக்கறியில் ஓடியல்கூழ் என வீடு களைகட்டியது

. இன்னும் இருநாட்களில் குல தெய்வம் அம்மனுக்கு திருவிழா  தொடக்கம்.  

மச்சக்கோப்பையும் ,சட்டிகளும் கோடியில் போய் விட்டது.

 மீன்கள் எல்லாம் கருவாடாகும் !கள்ளுக்கடையில் ஈ ஓடும் ஆட்கள் இல்லாமல்
ஆன்மீகப் பதிவு எழுதிவிட்டு பின்னூட்டம் வராமல் காத்திருக்கும் பதிவாளர்கள் போல!

அதுவரை ஊரில் இருக்கும் பொடியங்களின் குற்றாலக் குளியல் கோயில் கேணி .

புத்துசாக இறைத்து புத்தம் புதிய வீடு போல காட்சியளிக்கும்.

 நானும் இப்ப நீந்துவன் தெரியுமா ?
ரூபன் மச்சான் என்று சவால் விடக்கூடியதாக சேர்ந்து குளிபது கடலில் என இடம் மாறிவிட்டது.

 சின்னத்தாத்தா கோவணத்துடன் கடலில் குதித்து எங்களை தேட விடுவார்.

 மூச்சடக்கிக் கொண்டு நிலத்தில் இருந்து கொண்டு.

 கரையில் நின்று மச்சாள்மார்கள் எண்ணுவார்கள் .

தாத்தா என்று அவர்கள் சேர்ந்து கொண்டார்கள் .

அதுவரை கடல்கரை பார்க்காதவர்களுக்கு சிற்பி,சோகி,சங்கு என்று எடுத்துக் கொடுத்தார் சின்னத் தாத்தா

.அனோமா சிற்பி தேடும்போது தள்ளிவிட்டதில் கொஞ்சம் கோபமாகி கதைக்கமாட்டன் உன்னுடன் என்று போய் சின்னத்தாத்தாவிடம் விளக்கம் வைத்தால் .

சின்னத் தாத்தா நல்லாக சகோதரமொழி கதைப்பார் .
என்பதால் அவளுக்கு இன்னொரு உதவிக்கு ஆள் இருக்கின்றது என்ற தைரியம்.

வீட்டை வரும் போது பூவரசு  இலையில் பீப்பீ செய்து ஊதிக்காட்டும் போது சுகி!தனக்கும் செய்து தரச் சொல்லிக்கேட்ட சாட்டில் வந்து என்னக்கும் வேண்டும் என்றாள் அனோமா.

 எப்ப பார்த்தாலும் இவள் ராகுலோடு மட்டும் கதைக்கின்றாள் என்று யோகனும் ரூபனும் சண்முகம் மாமியிடம். புகார்மனுக் கொடுத்த போது.

 மாமி சொன்னா மச்சாளைக்கட்டுவது அவன் தானே!

 அந்த உரிமையில் ஒட்டுறான் என்ற போது!

 சின்னத்தாத்தா சொன்னார் வடலி வளர்த்துக் கள்ளுக்குடிக்கப் பார்க்கின்றான் போல என் பேரன் .அதன் அர்த்தம் அப்போது புரியாது ராகுலுக்கு.

அதுமட்டும் நடக்காது இந்தப் பங்கஜம்  ஆட்சியில் இருக்கும் மட்டும்.
 என்று இடையில் வந்த பாட்டியை யாரும் கவனிக்வில்லை!

     தொடர்ந்து தொலைத்தவன்  வருவான் விரைவாக!


 ///////////////////////////////////////
நாம்பன்கள்- காளைமாடு-யாழ்வட்டார் மொழி.
ஒட்டுவது-சேர்வது-யாழ்வட்டார் மொழி
வடலி-பனைமரத்தின் சிறு பருவம்.

16 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-18

பதுளையில் இருந்து வானில் பயணம் போவது என்றால் தனி ஒரு சுகம்தான். நம் ஊருக்கு!

 அதிகாலையில் வெளிக்கிட்டால் நல்ளிரவு ஆகிவிடும் வந்து சேர எங்கள் ஊருக்கு .வழமையாக உடரட்டையில் போய் பொல்காவெலயில் ரயில் மாறி யாழ்தேவியில் போகும் பயணம் இந்தமுறை எல்லோரும் போவதால் தங்கமணி மாமா தன் நண்பரின் வானில் எல்லோரும் போவம் என்றதும் மூத்தவர் தங்கமணியின்  சொல் கேட்டு  அவர் குடும்பத்துடன் ,செல்வா மாமா குடும்பமும் ,சேர்ந்து கொள்ள ஈசன் மாமியும் பல்லவியுடன் சேர்ந்து கொள்ள .

அண்ணணுடன் ஊருக்குள் பேசுவது இல்லை என்றாலும் வெளியிடத்தில் பேசும் செல்வம் மாமாவும் குடும்பத்துடன் வர  வானில்  புறப்பட்டோம்.

வானில் மச்சாள் மார் போட்ட சத்தம் என்பதைவிட அவர்கள் எல்லோருக்கும் வானில் நீண்ட தூரப்பயணம் இது முதல் முறை என்பதால் ஒரே சக்தியும் அழுகையும் தான் .

அதைப் பார்த்தால் எனக்கும் வந்துவிடும் போல இருந்தது சக்தி.

 ஆனாலும் தேசிக்காய் புண்ணியத்தில் தப்பித்துக் கொண்டேன்.

அனோமாவுக்கு
  இருப்புக் கொள்ளவில்லை என்னருகில் வந்து இருந்து கொண்டாள் .

ராகுல் உனக்கு மட்டும் எப்படி சக்தி வரவில்லை .நான் தான் அடிக்கடி ஊருக்குப்   போய் வந்திருக்கிறனே.

 பங்கஜம் பாட்டியின் பேரன் இல்ல என்று என் கையில் இருக்கும் தேசிக்காயைக் காட்டினேன் அவளுக்கு.

 அப்போது புரிந்திருக்காது அதன் மருத்துவக்குணம்.அவளுக்கு .

மலைகள் சூழ இருந்தவர்கள் சமதரையான வடக்குக்குப் பகுதிக்கு போவது புது அனுபவம்.

 தங்கமணி மாமாவுக்கு கலியாணம் முடித்து 4 பெண் பிள்ளைகள் பிறந்த பின் 12  வருடங்கள் கழித்து தன் தாயைப்பார்க்கவும் உறவுகளைப் பார்க்கவும் போகின்றார் .

அதற்கு இடையில் பேரம்பலத்தார் சண்முகம் மாமா,செல்லத்துரை போய்விட்டார்கள் .பின் கணேஸன் மாமா போனது என பல துக்கம் நடந்த போதும் வராதவர்.

 அம்மா பங்கஜத்திற்கு சுகமில்லை என்றதும் எப்படியும் அம்மா கண்ணை மூடுவதற்கு முன் என் பிள்ளைகளைக் காட்டிவிடனும் என்ற ஆர்வம் ஒரு புறம்.

 இத்தன நாள் இருந்த வைராக்கியம் எல்லாம் மூத்தவள் இன்றோ நாளையோ சாமத்தியப்படப்போறாள்.

 அவளுக்கு முறைதலையாக எல்லாம் செய்ய அம்மா அருகில் இருக்கணும் என்ற உள்ளூணர்வு அவருக்கு இப்போது அடிக்கடி வருவதால் தான் போகாத ஊருக்கு தன் மனைவி மகள்கள் சகிதம் போவதே

!விமலா மாமிக்கு அங்கே எப்படி நடந்து கொள்வார்களோ என்ற பதட்டம் .

அவவுக்கு மட்டுமா !லீலாவதி மாமிக்கும் தான் .

தான் கதைக்கும் தமிழ்  அவர்களுக்கு எப்படியிருக்கும் .

என்னை ஏற்றுக் கொள்வார்களா ?

இத்தனை துயரம் நடந்த போதும் நானும் மாமிக்கு ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லாத மருமகள் தானே!

 இவர் கூட கல்கமுவ போனபின் எங்கும் போகாமல் கடையுடனே வாழ்க்கை போகின்றது .

பெட்டிக்கடை போட்டால் கோழி முட்டையிடும் வரைக்கும் காத்திருக்கணும் போலத்தான் .
எல்லாப் பயணம் போக ஆசைப்பட்டாலும் நம்பி விட்டுட்டுப் போக இனசனம் இல்லை .

இது எல்லாம் புரிந்து கொள்வாவா மாமி .

இவரும் என்னோடு வந்த 13 வருடத்திற்ப் பிறகு இன்றுதானே தன் ஊருக்குப் போறார் என்ற ஜோசனை மாமிக்கு.

  செல்வம் மாமாவுக்கு பங்கஜம் பாட்டி எப்படி எல்லாம் திட்டும் என்று தெரியும் .

ஆனாலும் தங்கை,மச்சான்,சின்னாத்த ,சித்தப்பா எல்லாரும் இருக்கினம் என்ற தைரியம் அவர் மனதில் .

அனோமா பிறந்திருந்த போது கலவரம் வந்ததால் என்னால் ஐயாட முகத்தைக் கூட கடைசியாக பார்க்கவில்லை நான் தான் இப்படி! இருந்தன் என்றால் அவர்கள் சரி தேடிவந்திருக்கலாம் எல்லாம் அவன் செயல் போய்ப்பார்ப்போம்.

தன் தவற்றினை உணர்ந்துவிட்ட செல்லன் மாமி (சரோஜா[ இந்த முறை பங்கஜம் பாட்டிவீட்டில் தங்கனும் சுகியை அவர்களுடன் விளையாடவிடனும் என்று எண்ணிக்கொண்டு வந்தா!

மூன்று  தாய் வழி மாமாக்கள் மாமிகள் ஒருபுறம் தந்தைவழி மாமி ஒருபுறம் என 4 நான்கு மாமிக்கள் தன் குறும்புத்தனத்தை ரசிக்கின்றார்கள் என்ற நிலையில் ராகுல் .

தங்கமணி மாமாவின் மகள்கள் ஒருத்தியைத் தவிர மற்றவர்கள் சேரவில்லை இவனுடன் .

அனோமா பழகும் அளவுக்கு அவள் தங்கை துசாரியும் சேரவில்லை ராகுலுடன் .

இத்தனை எண்ணங்களைச் சுமந்து கொண்டு வான் போகும் பாதை யாழ்ப்பான வீதி எங்கும் இந்தியன் ஆமியின் அக்கிரமங்களும் அநியாயங்களும் ஊரில் இருந்த மதில் சுவர்கள் காட்டிக் கொண்டு இருந்தது .

மக்களின் முகத்தில் ஒரு ஓளி தெரிந்து கொண்டிருந்தது ஊர் எல்லை நெருங்கிக் கொண்டிருந்தது!


       வருவான் தொடர்ந்து ...........
////////////////////////////////////////////////////////
சாமத்தியம்-பெண்ணின்  பருவமாற்றம். .யாழ் வட்டார வழக்கு

உடரட்ட-மலையகம் போகும் புகையிரத சேவை
யாழ்தேவி-வடபகுதிக்கான ரயில் சேவை
பொல்காவெல- இரு சேவையும் சந்திக்கும் தரிப்பு நிலையம்

15 March 2012

மலையகத்தில் முகம் தொலைத்தவன்-17











நீண்ட காலமாக தொடர்புகள் இல்லாத உறவுகள் கூட  உறவுசேர்வது முக்கியமானவர்களின்  மரண வீட்டில் தான்

.பெரியவர்கள்  ஆசையில் வளர்த்து  விடும் பகையுணர்வு என்பது மாமியார் ஊட்டி வளர்த்து மருமகள் கொள்ளியிட்ட ஈழத்துக் கனவு போலத்தான்!

மக்கள் விடுதலை முன்னனியின்(JVP) புரட்சிக்கனவும் பலரைக் காவு கொண்டது


.அதில் ஜயந்தமாமாவின் இறப்பிற்கு  கல்கமுவயில் இருந்து செல்வா மாமா  வந்த போது தான் ராகுலுக்கும் தெரியும்.

  ஜயந்தமாமியும் தன் செல்வா மாமாவின் மனைவியும்( லீலாவதியும்) உடன்பிறந்த சகோதரிகள் என்று  .

அவர்களுக்கு பிள்ளைகள் இல்லாத குறையைத் தீர்க்க மூத்தமகள் அனோமாவை தாம் கொஞ்சக்காலம் வளர்ப்பதாக கூறவும்

. தமக்கையும்( லீலாவதி )தங்கைதானே  (மெனிக்கே)என்று 5 வயது முதல் அனோமாவை இவர்களுடன் விட்டு விட்டு அவர்கள். கல்கமுவையில் கடை வைத்திருக்கின்றார்கள்  என்று தெரிய வந்தது.

 எந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஜயந்தமாமா ஆசைப்பட்டாரோ!

அது அவரின் மரணத்தில் தெரிந்து கொள்ளும் துயரம் ராகுலுக்கு

. .பெரியவர்கள் ஈசன் மாமாவோ  சாந்தி மாமியோ சொல்லாது  ரகசியம் காத்தது எதனால்!

 ராகுலின் வயது போதாது என்றா ?அல்லது பங்கஜம் பாட்டியும் பேரிம்பலத்தாரும்  ஏற்றுக் கொள்ளாத உறவு என்பதாலா ?என்று அவனுக்குள் எழுந்த கேள்விக்கு தென்னக்கோன் மாமா  சொன்னார் நீ பெரியவனாகினதும் சொல்லத் தான் காத்திருக்கச் சொன்னேன்

 .ஆனால் அதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது

. இவங்க தான் உன் மாமி  லீலாவதி அருகில் இருப்பது துஸாரி.

உன் சின்ன மச்சாள்.

இன்னொரு மாமா அதோ பார் கண்ணாடியுடன் தங்கமணி இருக்கின்றார் ,அவங்க சம்சாரம் விமலா தான் பக்கத்தில் உன் அத்தை.
 உன் மச்சினிமார் பார்த்தாயா 4 பேரும் என்று அவர் சொல்லும் போது எதையும் கேள்வி கேட்கும் காலம் அல்ல அப்போது!.




அப்படித்தான்  அவர்கள்  இவனுக்கு அறிமுகமானது  செத்தவீடு  முடிந்ததும்.  தங்கமணி மாமா தன் குடும்பத்துடன்  போய்  விட்டார்.  அவர் இருப்பது  பசறையில்  என்று பின்னாளில் தெரிந்து  கொண்டான் .

மூத்த  மதினி  தவிர  மற்றவர்கள்  அவனுடன் கதைத்தார்கள்.
  அதுவும்  3வது சின்ன மதினி  ராகுலோடு சிநேகம்  கொண்டாள்
.அவள்  வந்து கதைத்தது  பல்லவிக்கு  பிடிக்கவில்லை.
  அதுவரை  என்னோடு இயல்பாக  பழகியவள்  முறைத்துக்கொண்டும் , சேர்ந்து  சாப்பிடுவதும்  இல்லை  .
எப்போதும்  ஈசன்  மாமா  இருவருக்கும்  கொண்டந்து  தரும் சொக்கொமோல்ட் டொபி .அவள் தான்
எப்போதும் எனக்குத்தருவது  வழக்கம் .   ஜயந்த  மாமாவின்  மரண வீடுக்குப்பின்  அவள் பிரித்துப்பார்த்தது .
அதுவரை  அண்ணன் தங்கையாக  இருந்த மனதில்  புதிய பெர்லின்  சுவர்  வந்தது .

 தங்கமணி மாமா பார்க்க ஜெயஷங்கர் மாதிரி இருந்தார் .
 ஊரில்  அம்மாவினின்  சீலைக்கு பின்   ஒளிந்து  நிற்க்கும்    என்னைப்பார்த்த வருக்கு.
  முன்னரை  விட காலமாற்றத்தில்  அவருக்கு   என்  வளர்ச்சியை    நம்பமுடியவில்லை  .
    அது மட்டும்மில்ல  ராகுல்  இருப்பது  செல்லத்துரை தம்பியின்  சாயலில்!  அன்று மட்டுமா!!
  இன்றும் பலர் அப்படித்தானே  சொல்கின்றார்கள் .
..ஆனாலும் தங்கமணி  மாமா கதைக்காமல்  போனது  அவனுக்குக் ஒருமாதிரித்தான்  இருந்தது.

 காலம் ஒருமாதிரி இருப்பது இல்லை.
 கடிதங்கள்  பல வகை .
நேரு    இந்திராவுக்கு   எழுதியது,  கருணாநிதி  மத்திய அரசுக்கு  எழுதியது, எங்கல்ஸ்-  மார்க்கர்ஸ்  எழுதியது, ஸ்யாம்பெக்ஸ்  இலங்கை  அரசு  எதிர்க்கட்சி கடிதம் போல!
 
  அப்படித்தான்  ஒரு கடிதம் ஊரில்
அம்மாவிடம்    இருந்து  வந்தது.  பங்கஜம் பாட்டிக்கு  உடல் நலம் இல்லை எல்லாரும் வாருங்கள் என்றதும் .
 சாந்திமாமி  உடன  போவோம் .   என்ற  போதும்.
 ஈசன் மாமா கொஞ்சம் பொறு  சம்பளக் கிழமை முடியப்போகலாம் என்று தடுத்தார் .
 அதன் பின்  நாங்களும் போனோம் மீண்டும் ஊருக்கு.
  அது 1990    மேமாதம் இரண்டாவது  வாரம் .  


 தொடரும்
//////
தனிப்பட்ட வேலை மாற்றம் தனிமரம் விரைவில் வலையுலகை விட்டு தற்காலிகமாக வெளியேற இருப்பதால் இனி அதிகம்  தொடரை  உங்கள் முன் கொடுத்துவிட்டு விடை பெறக்காத்திருக்குது!

நட்புடன்- தனிமரம்-நேசன் .
  

14 March 2012

வாருங்கள் டாஸ்மார்க் பக்கம்

எப்போது சென்னை போனாலும் நண்பர்கள் சேர்ந்தால் வடபழனியும் ; போரூர்  என எங்கள்  வசமாகிவிடும்.அந்தளவுக்கு  என் பல  நண்பர்கள் அங்கு இன்னும் இருக்கின்றார்கள்.

 அவர்கள்  என்னோடு தாயகத்தில்  வேலை செய்தவர்கள். கால மாற்றம்  சில தவிர்க்க முடியாத  காரணங்களால் குடும்பத்துடன் சென்னையில்  வாழ்கின்றார்கள் . அவர்களுக்கு  நான்  பாரிசில் இருந்து  வெளிக்கிட்டு விட்டன் என்று சொன்னால்  .மீனம்பாக்கம் விமான நிலையத்தில்  எப்படா  இந்தக்கோச்சி    எப்ப  வரும் என்று  ஆவலுடன் இருப்பார்கள் ...

 ஆனால்  அவர்கள் வீட்டுக்காரிகள்       இங்கையும்  வந்து தனிமரம்  அண்ணா எங்க செல்லங்களை ஒரு வழி பண்ணுகின்றது .


 நாங்க  இப்பவே  எங்க மச்சாளுக்கு  போன் போடுறம் என்று காதைக்கடித்தலும் பாசமிகு  தங்கைகள்.

. இந்த நண்பர்கள் கும்மாளம்  போட்டுஅவங்க தாக சாந்திக்கு  என் பேர்  கெடும்  என்ன செய்வது.


  வருடத்தில்  ஒருமுறை  தானே  அவங்களுடன் சேர்கின்றேன்.

  அதனால்  தங்கைகள்  என்ன திட்டினாலும் ஒ   அப்படியா  என்று   நல்லபிள்ளையாக  இருந்து விடுவேன்  .


அவர்களுடன் சேர்ந்து  போவது வைன் சொப் பக்கம் .

 என்ன பிரென்ச் வைன்  கொண்டுபோய் கொடுத்தாலும் .

     வா    மச்சான்      ஒரு ரவுண்டு போய்  வருவம்  என்றால்  அன்று இரவு  கஞ்சிதான் .. வீட்டுக்காரி எனக்கு  தொலைபேசியில் என்ன இன்று சென்னையில்  ஆறு ஓடுது  போல  என்று ஒப்பாரிதான் வைப்பாள்..


  இந்த மச்சான் நல்லவன்  என்று நம்பி கழுத்தைக்கொடுத்தேன்  அண்ணா.

 இவர் சரியான மோஷம் என்பாள் ஒரு  தங்கை.

 இருந்திட்டுத்தானே  என்று  சமாலிக்கிறதுக்கு நான் படும்பாடு  ஏண்டா சென்னை வந்தோம்  என்றாகிவிடும் ..

அப்படி அவர்களுடன் போனால்  நல்ல பல கதைகள் கிடைக்கும்  டாஸ்மார்க்கில் .

  தொலைந்த  காதல் சிட்டுக்கள்  கதை., வேலையில்  வரும்  பிரச்சனைகள், நண்பர்கள் துரோகம் , அரசியல் வங்குரோத்து, அடுத்த முதல்வர் , அடுத்த சூப்பர் - ஸ்டார் ,; விலைவாசி  ஏற்றம்,  அடுத்த பயணம் போக இருக்கும் வெளிநாடு  , 

 இது மட்டுமா ,,,துபாயில்  இருந்த அனுபவம் என இன்னும் நீளும்  பேச்சுக்கள் . .


என்னதான் இங்கு போனாலும் எனக்கு வரும் கோபம்.

 இந்த டாஸ்மார்க்கில் துப்பரவு இல்லை.

  ஒரே  ஈக்கள் . சரியான கழிப்பிட வசதி  இல்லை.  எங்கும் வீசி இருக்கும் போத்தல்கள் .     இருந்து மெதுவாக   மனம் விட்டுப் பேசும்  நிலை இல்லை.!

 ஏன் இப்படி  அரசு.

 எவ்வளவு  உழைக்கின்றது  இந்த மதுபான சாலைமூலம்.

  ஆனால் நுகர்வோர் பாதுகாப்பு இல்லை .

வரி  அதிகம் கொடுத்து  
 பீர் , கிங்பிஷர் ; நெப்போலியன் ;பிராண்டி வாங்கும் குடிமகனுக்கு  ஒரு பாதுகாப்பு இல்லையா!அவர்களின்  உழைப்பில்  அதிகம் வருமானம் ஈட்டும் இந்தக்கடைகள் .

போதிய  சுகாதாரத்தை  பேணுவது இல்லை.

  இதே  வெளிநாடுகளில்  எப்படி மதுபானசலைகள்  இருக்கின்றது.  என்று இந்த கடைகளை ஏலம் எடுப்போருக்கு  போதிய அறிவுறுத்தல், வழிநடத்தல்கள்  கொடுக்க  அரசு  ஏன்  முன்வாறது இல்லை.

 குடியை  கெடுக்கும் குடி  என்போர்  குடிக்கக் கொடுத்துதானே  கொள்ளை  லாபம்  பார்கின்றார்கள் .பாருங்கள்  சில படங்கள்  உங்களுக்காக .