30 March 2011

விடை கொடுங்கள் நினைவுகளே!

எப்போதும் தாண்டிச்செல்லும் இந்த முற்கம்பி சோதனைச்சாவடிகள் இனியில்லை உற்றுப்பார்க்கும் கழுகுப்பார்வைகளில் இருந்து தப்பிக்கின்றேன் மனநிம்மதியுடன் என்றாலும் என்னிடம் பல துயருடன் குடிபெயர்கிறேன்!   .........
              பெற்றவர்களைப் பிரிந்து கூடப்பிறந்து கும்மாளம்,குடிமிச்சண்டை,போட்டாலும் பாசத்தின் உறைவிடங்களான சகோதரிகளைப்பிரிந்து நேற்றுவந்து உறவாகிப்போன கைபிடித்த கணவனுடன் கடல்கடந்து குடித்தனம் நடத்த நாடற்றவனின்பின் நானும்போகிறேன்!
.......,,,,,,
நான் பிறந்த இந்தவீட்டை இனி எப்போது பார்ப்பேன் எப்போதும் தனிமையில் என்னுடன்பேசும் இந்த வேப்பமரம் தாங்கிய     தூப்பாக்கிச்  சன்னங்கள் இன்னும் மறையாத முற்றத்தை விட்டுப்போறன்!
:::;;
முகம் தெரியாத மணிதர்களாக வந்து முன்னேரி காவல்காத்த அந்த தெய்வங்கள் வாழ்ந்த ஓழுங்கையை மறந்து எப்படி இருப்பேன் தனிமையில்......,
--//////
அயல்கிராமங்கள் எல்லாம் ஓடிவந்து சாப்பிட்ட கோயில் மடத்தை எப்படிப்பிரிவேன்!-//
--/////
ஓர் இரவுக்குள் கையில் கிடைத்ததுடன் மழையில் நனைந்து மறுகடல்தாண்டி வந்தாரைவாழவைத்த வன்னியைவிட்டு  வீட்டுக்காவலுக்கு விட்டுப்போன நான் வளர்த்தமாடு காணாமல் போனது போல் !
........----/
உறவுகள் எல்லாம் உணவின்றி உடுதுணி இன்றி உறக்கம் தொலைத்து கொத்துக்கொத்தாக குண்டுபோட்டு குதறியெறியப்பட்டு குற்றுயிர்போன பேரவலத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வல்லரசுகள் தேசத்துக்குப் போனாலும் வற்றாத காயங்கள் மனதில் அலையலையாய்!
--/
என் அண்ணா நீ என் மடியில் மரன ஓலமிட்டு மறைந்து போன தருனத்தில் தவித்த தவிப்புக்களை எல்லாம் எல்லாத்தையும் என்னுள் புதைத்துவிட்டு புலம்பெயர்ந்து இன்று புதுப்பயணம்போனாலும் நான் மரணத்துள்ளும் வாழ்வேன் என் இனத்தின் விடிவைப்பார்பதற்காக என்னுள் கனவுகளுடன்!
----
இவளையும் மன்னியுங்கள் வேர்களைவிட்டு வேறுதேசம் போவதற்கு நான் தப்பிக்கவில்லை சாட்சியாக வேண்டும் சில
சம்பவங்களுக்கு!

25 March 2011

படித்ததில் பிடித்தது-7

நம்மவர் கவிஞர்கள் அதிகமானவர்கள் சரியாக இனம்கானப்படாமலும் போதிய கவனிப்பற்று குப்பையில் தங்கக்கீரீடம் போல் சரியான இடத்திற்குப் போய்ச்சேரவில்லை என்பது என் வாதம் அயலககவிஞர்களை இங்கு கூட்டிவந்து விழா எடுத்து பொன்னும் பொருளும் கொடுத்து தங்களை புரவலர்கள் என நாளிதல்களிலும்,ஊடகங்களில் மாலையுடன் காட்ச்சி தருபவர்கள் எங்கள் முற்றத்து மல்லிகைகளையும் கைகொடுத்தாள் அவர்களும் நிலையான கவிதைகளை விதைப்பார்கள் பரவலான கவிஞர்களில் என் உணர்வுகளை பிரதிபலிப்பதுபோல் இருக்கும் இந்தக்கவிதைக்கு சொந்தக்காரர் மாவை.வரோதயன் தன் ஊர் பெயரை முன்னுடன் முழங்கும் இவர் அதிகமான கவிதைகளை அச்சு ஊடகங்களிலும்,இலத்திரனியல் ஊடகங்களிலும் பிரவசித்துக்கொண்டிருக்கிறார்.எங்கள் ஊரின் அவலத்தை படம்பிடித்துக்காட்டும் இந்தக்கவிதை என் வேதனையையும்,இயலாமையும் வாழ்ந்து கெட்ட வீட்டை ஞாபகம் ஊட்டுகிறது.
...எனது கிராமத்துக்குத் திரும்பல்......
என் வீதிகள் தோறும்
கற்பக தருக்களின்
குறுகத் தறித்த சடலங்கள்.
என் ஊரின் வீடுகள்
வேட்டை நாய் குதறிப் போட்ட
கோழிக் குஞ்சின் உடல் மீதிகள்!
எனது கிராமமோ இன்று
கிழித்தெறியப் பட்ட ஒவியம்!
தசாப்தங்களில்
கணக்குப் பார்க்க முடியுமான
கால இடைவெளிக்கு அப்பால்
எனது கிராமம் எனக்கு
அன்னிய மாகி விட்டது!
பற்றைக்  காடுகள் வளர்ந்து
ஒழுங்கைகளை அழித்திருக்கும்!
விதைத்தவனைத் தெரியாமல்
புதையுண்ட  நிலக் கண்ணிகள்!
ஓரு சில காப்பரங்களுக்கு
எனது கிராமமும்
காவலாக்கப் பட்டிருக்கும் விந்தை;
அகதி வாழ்வை எனக்கு
வரமாகத்  தந்திருக்கிறது!
கோயில், வயல்,தோட்ட வெளி,குளம்,கிணறு
பட்டமேற்றும் புகைவண்டிப் பாதை,முத்தவெளி,
பள்ளிக்கூடம்,  பனைவடலிக்காணி,
பட்டாளத்துக்கு  புட்டவிக்கும் சீமெந்து ஆலை,
கப்பல் வந்து சைரன் அடிக்கும்   துறைமுகம்,கீரிமலை,சடையம்மா  மடம்........
எல்லாம் எல்லாம்
திரும்பிப் போக முடியாத தூரத்தில்.................
இரு இருந்துபார்!
மல்ரி பரல்களும்,கிபிர்களும், துவக்குகளும்
என்னைப் புதைக்கும் தடைகளும்,வதைகளும்
ஒருநாள் ஒதுங்கும்!
நான் எனது கிராமத்துக்குத் திரும்புவேன்!
.....................இக்கவிதை ஞானம்   சிற்றிதலில் 2001ஆண்டு மார்ச் மாதம் வெளியானது இச்சஞ்சிகை கண்டியில்  இருந்து வெளியானது இப்போது வருகிறதா எனத்தெரிய வில்லை என்றாலும் மனதை குடையும் கவிதை.

23 March 2011

படித்ததில் பிடித்தது.

எனக்குப் பிடித்த ஆய்வுநூல்களில்  தம்பிஜயா தேவராஜா எழுதிய இலங்கை தமிழ் சினிமாவின் கதை  முக்கிய ஓரு ஆவணம் இலங்கையில் வெளியான படங்களை பட்டியல் இடுகிறது சமுதாயம் தொடக்கம் சார்மிளாவின் இதயராகம் வரையான அருமையான தகவல்களை திரட்டிய முழுமையான நூல் இது.அழகு தமிழில் சுவையான எழுத்து நடையில்  யாவருக்கும் விளங்கும் வண்ணம் சிரத்தை எடுத்து இந்த தமிழ் ஊடகவியளார் வெளிக்கொண்டந்தது காலத்தின் தேவையே இலங்கையில் முண்ணனி நாளிதல்கள் இந்த நூலை பல விமர்சனம் செய்து அதிக வாசகர்களை சென்றடைய காரணமாக இருந்ததை மறுப்பதற்கு இல்லை.அருமையான புகைப்படங்கள்,படவிளம்பரங்கள்,எங்கெல்லாம் அதிகமாக வசூல்லானது.ஆசிரியரின் விமர்சனம்.எல்லாம் சேகரிக்கப்பட்டு ஓரு காலப்பெட்டகம் இன்நூல்.இலங்கை சினிமாவை தெரிந்துகொள்வதற்கு தாய்மொழியில் வெளியான முதல்நூல் என்று சொல்லமுடியும்.ஆசிரியரின் சினிமா ஆர்வத்தை இன்நூல் வாயிலாக அறிந்து கொள்ளமுடிகிறது.ஒரு வாசகனாக அவரின் திறமையை ஈழத்து தியேட்டர்பாஸ்கரன் என்பேன்.இன்நூல் புலம்பெயர்தேசத்தில் இன்னொருவர் முகப்பு அட்டையை மாற்றம் செய்து தன் பெயரை இட்டு புகழை அடைவதாக நினைத்து சேற்றை பூசுக்கொண்டதும் மறக்கமுடியாது.பாலுமகேந்திராவின் முன்னுரையுடன் காந்தளகம் பதிப்பாக இன்நூல் வெளிவந்துள்ளது.

18 March 2011

Pankuni uttharam.

இன்று கலியுக கண்கண்ட தெய்வம் ஐய்யப்பன் அவதரித்தநாள் பங்குனி உத்தரத்தில் உலகில் மானிட அவதாரமாக பந்தளராஜாவாவின் மைந்தனாக தோன்றி மகிராசுரனின் செயல்களுக்கு தீர்ப்பு கூறகாரணமாக தோன்றிய நாளில் அவருக்கு பக்தகோடிகள் அவர்புகழை தரனியெங்கும் ஒலிக்கச்செய்யும் இன்நாளில் ஐய்யப்பனுக்கு திருவிழா எடுத்து பூசை ,பஜனைகள் செய்யும் சிறப்பான தினம்.சரணத்தில்கூட உத்தரத்தில் உதித்தவனே சரணம் ஐய்யபபா என்று சரணகோசம் உள்ளது.18வகை பலகாரங்கள் செய்து சாஸ்தாவிற்கு படையலிடுவது இன்று சிறப்பான காரியமாகும்.இந்துக்களின் சிறபான நட்சத்திரம் உத்தரம் இன்நாளில் ஊரில் பலகோயில்களில் தேர்வீதியுலா வருவது நினைவில் கொள்ளக்கூடியது.சபரிமலை சாஸ்தாவின் வருகையை பக்தகோடிகள் பரவசமாக போற்றும் தினத்தில் திருப்படிக்கு பூசையிடும் இன்நாளில் இரட்டிப்பு சிறப்பு .

17 March 2011

என் பார்வையில்  தபூ சங்கர்

புதுக்கவிதை எழுதும் கவிஞர்வரிசையில் என்னைக்கவர்ந்தவர் தபூ சங்கர் இவர் மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்கள் தொகுப்பு எவ்வாறு புதிய அலையை உருவாக்கியதோ !அதே போல் இவரின் தொகுப்புக்கள் அதிக பதிப்புக்களை கானுகின்றது சிறந்த சொற்கோவையை அழகிய நயத்துடன் காதலை பாடுபொருளாக மிக சுவையாக எழுதுவதால் பிடிக்கிறது அதிகமாக காதலை,அன்பை புதிய பார்வையில் எழுத்தோவியமாக்கிறார்.இவரின் நூல்கள் மழைக்கால இரவு,அடுத்த பெண்கள் கல்லூரி 5km,பட்டாம்பூச்சி விற்பவன்,இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கு,தேவதைகள் வரும்பாதை, என இன்னும் பல காதலை இப்படியும் பாடலாமா என வியக்கவைக்கும் எழுத்துக்கள் என்பதால்தான் அதிக இளையதலை முறையினர் இவரின் கவிதைப்புத்தகங்களை தம்புத்தகங்களுடன் சேர்த்து சுமக்கின்றனர்.சுவாரசியமாக காதல்கடிதங்கள்  வரைவதற்கு இவரின் குறிப்புக்கள் பலருக்கு உதவி செய்கின்றது.வெக்கத்தை கடன் கேட்டல் நூல் இனிய காதல் நூனுக்கங்களை பாடுகிறது காதல் வந்தால் வலயல்கள் சத்தம் ,முகம்பார்க்கும் கண்ணாடியில் அவர்களின் ஓத்திகைகள் புதிய சிந்தனையை பதியவிடும் லாவகம் அதிகமாக இருப்பதால்தானோ இவரின் சில கவிதைகளையே பதிப்பகத்தார் பல அட்டைகளை போட்டு காசு பார்க்கிறார்கள். நீ உடைக்கும் வலையலாக நானிருந்தால் என்ற ஏக்கமாகட்டும்,நான் படித்த பாடசாலையில் நீ மதிலுக்கு அப்பால் உன் சைக்கிளில் வைத்துவிட்டுப்போன புத்தகங்களை திருடி விட்டு நீ படும் அவஸ்தையை ஓளிந்திருந்து பார்ப்பேன் என்ற வசணக்கவிதையாகட்டும் நெஞ்சுக்குள் இப்படி எல்லாம் காதலியுடன் ஊடல் செய்யமுடியவில்லையே என்ற ஓரு தவிப்பு ஏற்படுகிறது.நல்ல கவிதையை படைக்கும் தபூசங்கர் சினிமாவிலும் இப்போது சில பாடல்கள் எழுதுகிறார் மரியாதை படத்தில்( தேவதை தேசத்தில் காதல் கண்ணாம்பூச்சியாடும்") தொடர்ந்து நல்ல கருத்தாளமிக்க பாடலை தரட்டும் ரசிகர்களுக்கு .சிலகவிதை தொகுப்புக்கள் புதுப்பதிப்பு பெறும்போது அட்டையை மாற்றி தன்னிச்சையாக செயல்படும் பதிப்பாசிரியர்களின்  தில்லுமுள்ளுகளையும் கவனிக்க வேண்டும் நம்கவிஞர்.

16 March 2011

இதுதான் தமிழன் விதியா?

நம் இளைய சமுதாயம் ஏன் வன்முறையின் பாதையில் போகின்றனர் பிரென்ஸ் காவல்துறை ஆனையாளர் (93)மாகாணத்திற்கானவர் ஈழத்தமிழ் மக்களின் இளையவர்கள் அதிக குழுவன்முறையில் ஈடுபடுவதுடன் சட்டவிரேதமாக கூரிய ஆயுதங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகவும்,இவர்களின் போக்கு குடியேற்றவாசிகளின் அகதிக்கொள்கையில் இறுக்கம் தேவை எனப்பொருள்படும் வண்ணம் கருத்துக்கூறியுள்ளதை இவ்வார அச்சு,இலத்திர ஊடகங்கள் முதன்மைப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது.இன்று அதிக அகதிகள் வதிவிடஅனுமதி கிடைக்காமல் குடும்பத்தை பிரிந்து வேலைகிடைக்காமல் அதிக மன உளைச்சலில் இருக்கும்போது சிலபுல்லுரிவிகளின் போட்டி,பொறாமையின் செயலால் ஓட்டு மொத்த ஈழத்தவர்களையும் வன்முறையாளர்கள்,சகிப்புத்தன்மையறறவர்கள் என்றல்லவா முத்திரைகுத்தப்படுகிறோம்,நாளைய சந்ததியும் அல்லவா வேலை பெறமுடியாத அவப்பெயர் கிடைக்கப்போகிறது.ஊரில் போருக்கு அஞ்சி இங்கு வந்து அடைக்கலம் தேடி சகல அரச உதவிகளை பெற்றுக்கொண்டு சட்டத்தை மதிக்காமல் இவர்களின்செயல்பாடுகளால்   பாதிக்கப்போவது  அகதி அடைக்கலத்திற்கு விண்ணபித்துவிட்டு காத்திருக்கும் உறவுகள்தான்.எதிரியிடம் தப்பினாலும் இவர்களால் பதிக்கப்படுகிறோமே. யார் இவர்களை திருத்துவது.

11 March 2011

Punaivu-7

நாட்டுக்கு வா என்று கூறும் உன்னிடத்தில் எப்படி உறைப்பேன் வாழ்ந்து கெட்டவீடு வீழ்ந்து கிடக்குது வயிறடங்க உணவழித்த என்வயல்கள் பொசுபரசு குண்டுவீசி  எரிந்துபோய் கிடக்கும் புதரான பூமி,ஊருக்கு வந்துவிட்டோம் என்பதை எட்டத்தில் காட்டும் ஊர்கோயில் கொடிக்கம்பம் குப்புறக்கிடக்கும் துயரம்,ஊரை காவல்காத்த எம்கண்மணிகளின் கல்லறைகள் காணாமல் போன  வரலாற்றை எல்லாம் தாங்கும் இதயம் தொலைந்து  பலகாலம்,அனுதினமும் அழுது கண்ணீறும் வற்றிய கண்களால் எந்தேசத்தை பார்க்கும்       பக்குவம் எனக்கில்லை  ஏப்போதும் என்நெஞ்சில் கனவான காட்சிகளுடன் அகதியாக  முகம்தொலைந்து முகாரி வாசித்துக்கொண்டு  இன்னொரு சந்ததிக்கும் என்கதையைச் சொல்லி என் காலத்தை கடத்திவிடுவேன்.என்னை வா என்று அழைக்காதீங்கோ என் உறவுகளே.

Punaivu-6

ஊர் வயல்களிலும் திருவிழாக்களிலும் வழிமொழியப்பட்ட நம்காதல் உதவாத சம்பிரதாயங்களால் உலைவைக்கப்பட்டு உன்னால் உதாசீனம் செய்யப்பட்ட என்நேசம் ஊர்கடந்தும் உன்னையே நேசித்துக்கொண்டிருக்கிறது.உறவைக்காத்த கிளிபோல்.!

08 March 2011

காற்றில் லங்காசிறி fm

உலகெங்கும் இனையத்தில் தமிழ்வளர்க்கும் லங்காசிறி fm இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இது லண்டனை தளமாகக்கொண்டு உலகெங்கும் கைபேசியில் நேயர்கள் கேட்டு மகிழும்வண்ணம் வசதியுடன்,இனையத்தளமூலமும் சேவைபுரிகின்றது  சிறப்பாண அறிவிப்பாளர்கள் ஆகாஸ்,தினேஸ்,நாகா,மயூரன்,ரோபேட்,பெண் அறிவிப்பாளர்களான பாரதி,உமா,தாட்சாயினி ஆகியோர் சிறப்பாக வானொலியில் நேயர்களுக்கு நிகழ்ச்சியை தொகுத்து  வழங்குகிறார்கள் .காலைப்பொழுதில் ஓலிக்கும் வணக்கம் லங்காசிறி பல்சுவை அம்சத்துடன் வலம்வருகிறது.சமய அறிவுரைகள் நீதிக்கதைகள் என்பதுடன் காதுக்கு இனிய காணங்களுடன் ரோபேட் தொகுத்தளிக்கிறார் காலையில் ஐரோப்பிய நேயர்களுக்கு இது காலைத்தேனீர்  என்பது என்கருத்து.அதனைத்தொடர்ந்து பலநிகழ்ச்சிகள் வலம்வருகிறது தொலைபேசி மூலம்பாடல் கேட்கும் வண்ணம் இனைப்புக்கள் உள்வாங்கப்படுகிறது,அறிவிப்பாளருடன் இரண்டு நிமிடம் தூயதமிழில் உரையாடி விரும்பும் பாடலை பரிசாக பெறும் நிகழ்ச்சியை ஆகாஸ்,பாரதி,சிறப்பாக குதுகலத்துடன் நடத்துகிறார்கள்,வாரநாட்களில்  இரவில் தினேஸ் தொகுத்தளிக்கும் இமையும் இசையும் இனிய கவிதைகளுடனும் அமைதியான பாடல்களுடன் எம்மை தாலாட்டுகிறார்.செவ்வாய்க்கிழமை இமையும் இசையும் நேயர்களின் காட்சியும் காணமும் பிரதியாக எழுதியனுப்பப்பட்ட வற்றில் சிறப்பானவை தினேஸ்சின் இனிய குரலில் வானொலியில் காற்றில் வருகிறது.வார இறுதியில் மொனம் பேசுகிறது  நேயர்களின் இதயத்தில்  உறங்கும் இன்பதுன்பங்களை காற்றில் கரையவைக்கிறது.மாலையில் ஓலிக்கும் பார்ட்டி டையிம் நிகழ்ச்சி நேயர்களிடம் உற்சாகமான வரவேற்பை பெற்றுவருகிறது என்பதற்கு  நேயர்கள் அதிகமான இனைப்பை மேற்கொள்கிறார்கள் அறிவிப்பாளர்களுடன் ஜாலியாக உரையாடுவதை செவிமடுக்கும் என்னால் அறுதியிட்டுக்குறமுடியும்,மயூரன்,ஆகாஸ்,பாரதி,உமா ,சுவைபட நேயர்களுடன் அறிவிப்பு செய்கிறார்கள்,சனிக்கிழமையில் தினேஸ்,பாரதி தொகுத்தளிக்கும் top15  அண்மையில் வெளியான புதிய பாடல்களை தரவரிசைப்படுத்தும் நிகழ்ச்சி புதியபாடல்பிரியர்களுக்கு செவிக்கு இனியது.சனிகாலையில் தாட்சாயினி தொகுத்தளிக்கும் வணக்கம் லங்காசிறி கதம்பமாலை மிகவும் பாராட்டக்கூடிய பயனுள்ள தகவல்களை தாங்கி வானொலியில் வலம் வருகிறது. வாரஇறுதியில்  சினிமா கிசுகிசு நிகழ்ச்சி சினிமா தகவல்களை பகிருகிறது நேயர்களுடன்.போக்குவரத்தில் இதனுடன் இனைந்திருக்க முடியும் வண்ணம் கைபேசியில் வானொலி ஓலிபது லங்காசிறியாகத்தான் இருக்கும் காற்றில் தமிழ் வழக்கும் வானொலியை இன்னும் பலசுவையான நிகழ்ச்சிகள் மூலம் பலகோடி நேயர்களை சென்றடைய வாழ்த்துகிறேன். இனிய தமிழில் காற்றில் காதோடு கவிபாடும் வானொலியே நீ நீண்ட ஆயிலுடன் வாழ வாழ்த்துகிறேன்.

06 March 2011

Karakattam.

      ______        ....,. நமது கலைகளில்  ஓன்றான கரகாட்டத்தைப் பற்றி தமிழ்சினிமாவில் அதிகம் காட்சிப்படுத்தப்படவில்லை என்பது என் அபிப்பிராயம் நான் பார்த்த சினிமாவில் கங்கைஅமரன் கரகாட்டக்காரன் படத்தில் மிகவும் திறம்பட கரகத்தின் நடனவகையை ஆபாசம் இல்லாமல் அவர்கள் வாழ்க்கையை சோகம்களை,துயரங்களை மிகவும் ரசிக்க கூடியவாறு கலையை மற்றவர்கள் புரியும் வண்ணம் இயக்கியிருந்தார்.ராமராஜான் மிகவும் புகழ்பெற்றதும் இந்தகலையை கஸ்ரப்பட்டு கற்று ஆடி நடித்ததும் மக்கள் கலையை பொதுத்தளத்திற்கு கொண்டு வந்ததாலும் மிகவும் அடித்தட்டு மக்களுக்கு ஜனரஞ்சப்படுத்தப்பட்டதாலும் என்பேன்.பின் கஸ்தூரிராஜா சிலபடங்கள் செய்தார் குஸ்பு நடித்த நாட்டுப்புறப்பாட்டு,சிவாஜி ,முரளி நடித்த என் ஆசை ராசாவே, படங்கள் ஓரளவு கரகம்பற்றி  தமிழ்சினிமாவிற்கு புதிய கதைக்களத்தை திறந்தது. பின் இக்கரகம் குத்தாட்டக்காட்சியாகவே தினிக்கப்பட்டு எமது கலை ஜனரஞ்சகம் என்ற போர்வையில் சீரலிகப்படுகிறது.புரதானகலைகளில்  இதுவும் ஓன்று பரதம் பற்றி சிலப்பதிகாரத்தில்  மாதவியை அறிமுகம் செய்யும் போது அழகாக இலங்கோ அடிகள்  விளக்கியுள்ளார்  (நாட்டுக். -கூத்து   முனைவர் -மொனகுரு).இன்று இக்கலை மறக்கப்பட்டு வருகிறது.சின்னத்திரையின் வருகை நம்கலைகளை நூதசாலைக்கும் ஆய்வு செய்யப்படுவதற்கும் என சீரலித்துவிட்டது. இன்னும் சிலகலைஞர்கள் இதை சேவையாகவும்,மூச்சாகவும்,கருதுவதால்தான் சென்னைச் சங்கமம் மூலமாகவோ,கிராமங்களில் கோயில் திருவிழாக்களிலும் சரி கானக்கூடியதாக இருக்கிறது.புரதான நம்கரகம் சரி மற்றைய கலைகள் சரி குளிர் அறையில் இருந்து கொள்கைவகுப்பர்களால் சீரலிக்கப்படுகிறது. பிரென்ஞ்சு மக்கள் தம்கலை கலாச்சாரத்திற்கு கொடுக்கும் மதிப்பும்,மரியாதையும் பார்க்கும் போது நம்சீரலிவை எப்படி பதியவைக்கப் போறோம் எதிர்கால சந்ததிக்கு!

03 March 2011

Punaivu-2

நாட்டுக்கு வா என்று கூறும் உன்னிடத்தில் எப்படி உறைப்பேன் வாழ்ந்து கெட்டவீடு வீழ்ந்து கிடக்குது வயிறடங்க உணவழித்த என்வயல்கள் பொசுபரசு குண்டுவீசி எறிந்துபோய் கிடக்கும் புதரான பூமி,ஊருக்கு வந்துவிட்டோம் என்பதை எட்டத்தில் காட்டும் ஊர்கோயில் கொடிக்கம்பம் குப்புறக்கிடக்கும் துயரம்,ஊரை காவல்காத்த எம்கண்மணிகளின் கல்லறைகள் காணாமல் போன  வரலாற்றை எல்லாம் தாங்கும் இதயம் தொலைந்து  பலகாலம்,அனுதினமும் அழுது கண்ணீறும் வற்றிய கண்களால் எந்தேசத்தை பார்க்கும்       பக்குவம் எனக்கில்லை  ஏப்போதும் என்நெஞ்சில் கனவான காட்சிகளுடன் அகதியாக  முகம்தொலைந்து முகாரி வாசித்துக்கொண்டு  இன்னொரு சந்ததிக்கும் என்கதையைச் சொல்லி என் காலத்தை கடத்திவிடுவேன்.என்னை வா என்று அழைக்காதீங்கோ என் உறவுகளே.

02 March 2011

Paditthatil piditthatu

02-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


இன்றைய ஜூனியர் விகடனைப் புரட்டியவுடன் முதல் பக்கத்தில் பட்டது இந்தக் கவிதை..!

விமர்சனங்கள் பலவற்றைத் எதிர்கொள்ளவேண்டிய தருணத்திலும், களத்திலும் கவிஞர் வாலி தற்போது இருந்தாலும், மனிதரிடம் தமிழ் என்னமாய் விளையாடுகிறது..!

மீண்டும், மீண்டும் படிக்க வைத்தது வாலியின் தமிழ்..! பாடுபொருளின் ஒரு பகுதியை மட்டுமே செப்பியிருக்கும் வாலி, பழியை ஏற்றுக் கொண்ட பாவத்தின் மீதியையும் இதேபோல் தன் வாழ்நாளுக்குள் வெளிப்படுத்த வேண்டும் என்று நானும் எதிர்பார்க்கிறேன்..!


சொல்லைக் கல்லாக்கி.. கவிதையைக் கவண் ஆக்கி.. வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்தது கவிதை.. இல்லை.. வெடித்துக் கிளம்பிய வெந்நீர் ஊற்று. அது இது..


கவியரங்கம் தொடங்குமுன் - ஒரு
கண்ணீர் அஞ்சலி..
ஒரு
புலிப் போந்தை ஈன்று
புறந்தந்து -
பின் போய்ச் சேர்ந்த
பிரபாகரன் தாய்க்கு; அந்தப்
பெருமாட்டியைப் பாடுதலின்றி
பேறு வேறுண்டோ எனது வாய்க்கு..?

* * * * *

மாமனிதனின்
மாதாவே! - நீ
மணமுடித்தது வேலுப்பிள்ளை;
மடி சுமந்தது நாலு பிள்ளை!
நாலில் ஒன்று - உன்
சூலில் நின்று - அன்றே
தமிழ் ஈழம்
தமிழ் ஈழம் என்றது; உன்-
பன்னீர்க் குடம்
உடைத்துவந்த பிள்ளை - ஈழத் தமிழரின்
கண்ணீர்க் குடம்
உடைத்துக் காட்டுவேன் என்று..
சூளுரைத்து - சின்னஞ்சிறு
தோளுயர்த்தி நின்றது;
நீல இரவில் - அது
நிலாச் சோறு தின்னாமல் -
உன் இடுப்பில்
உட்கார்ந்து உச்சி வெயிலில் -
சூடும் சொரணையும் வர
சூரியச் சோறு தின்றது;

அம்மா!
அதற்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல்
வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே
இனச் சோறு ஊட்டினாய்;
நாட்பட -
நாட்பட - உன்
கடைக்குட்டி புலியானது;
காடையர்க்கு கிலியானது!

* * * * *

தம்பி!
தம்பி! - என
நானிலம் விளிக்க நின்றான் -
அந்த
நம்பி;
யாழ்
வாழ் - இனம்
இருந்தது - அந்த..
நம்பியை
நம்பி;
அம்மா!
அத்தகு -
நம்பி குடியிருந்த கோயிலல்லவா -
உன்
கும்பி!

* * * * *

சோழத் தமிழர்களாம்
ஈழத் தமிழர்களை..
ஓர் அடிமைக்கு
ஒப்பாக்கி; அவர்களது
உழைப்பைத் தம் உணவுக்கு
உப்பாக்கி;
செம்பொன்னாய் இருந்தோரை -
செப்பாக்கி; அவர்கள் வாழ்வை
வெட்ட வெளியினில் நிறுத்தி
வெப்பாக்கி;
மான உணர்வுகளை
மப்பாக்கி;
தரும நெறிகளைத்
துப்பாக்கி -
வைத்த காடையரை
வீழ்த்த...
தாயே உன்
தனயன் தானே -
தந்தான்
துப்பாக்கி!

* * * * *

இருக்கிறானா?
இல்லையா?
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்;
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத் தமிழர்க்கு
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!

* * * * *

அம்மா! இந்த
அவல நிலையில் - நீ..
சேயைப் பிரிந்த
தாயானாய்; அதனால் -
பாயைப் பிரியாத
நோயானாய்!
வியாதிக்கு மருந்து தேடி
விமானம் ஏறி
வந்தால் சென்னை அது -
வரவேற்கவில்லை உன்னை!
வந்த
வழிபார்த்தே -
விமானம் திரும்பியது; விமானத்தின்
விழிகளிலும் நீர் அரும்பியது!

* * * * *

இனி
அழுது என்ன? தொழுது என்ன?
கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்
கன்ன வயல்களை உழுது என்ன?
பார்வதித் தாயே! - இன்றுனைப்
புசித்துவிட்டது தீயே!
நீ -
நிரந்தரமாய்
மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்
தங்க இடம் தராத - எங்கள்
தமிழ்மண்
நிரந்தரமாய்த்
தேடிக் கொண்டது பழி!

நன்றி : ஜூனியர்விகடன் - 06-03-2011

Kirukkalgal-3

ஓ நண்பனே உன் சிறப்புக்குரிய நாள் இன்று காலச்சக்கரத்தில் நீ விதைத்த காதல் ஏதோ ஓரு இதய மூளையில் முகாரி வாசிக்கிறது.முடிவெடுக்க முதுகெலும்பு இல்லாத உன் சம்பிரதாயச் சந்தையில் நான் கலியாணமாகி கடல்கடந்தேன்.நீயோ நினைவுகளை மீட்டி என்னை தினமும் கழுவேற்றுகிறாய். நாம் சேர்ந்து கண்ணாடி வீட்டுக்குள் விவாகரத்தாகி  பிரியாமல் தனிபாதையில் போனதால் இன்று சந்தோஸமாக கைபிடித்தவர் நல்ல நண்பனாக வழித்துனையாக வருவது என்பூர்வ ஜென்ம புண்ணியம்.உனக்கும் நல்லமனைவி கிடைப்பாள்  என  வலை நண்பர்கள் கூறுகிறார்கள் மீண்டும் நண்பர்கள் என்ற பயணத்தில் உன்னுடன் கூடவந்து நெறுங்கிய உன் இதயத்தை மீண்டும் உடைக்க நாம் ஒன்றும் சினிமாக்காதலர் இல்லை வாழ்க்கை சதுரங்கத்தில் திசைமாறிய சாமானியர்.நல்ல நாளில் நானும் முகம் தெரியாத ஓரு நண்றியுள்ள ஜீவனாக உன்னை வாழ்த்துகிறேன்.விதியின் விளையாட்டில்  நாம் ஓருபோதும் சந்திக்கக்கூடாது என் பிரியமான தேவனே.