14 November 2016

தேடலும் ,பிரிவும்!!!!!!

வணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே? நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன்  புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) .

எழுத்தும் ஒரு போதை போல சிலருக்கு எதையாவது எழுத்திக்கொண்டே இருக்கச்செய்யும் ஒரு மாயப்போதை  .


காலநதியில் தனிமரமும் ஒரு வலைப்பதிவர் என்ற மாயக்கனவுக்குள் வாழ்வதும் இந்த எழுத்துப்போதையால் என்றால் மிகையில்லை !

என்றாலும் தனிப்பட்ட தேடல்களும் பொருளாதாரமாற்றங்களும் இந்த எழுத்துப்பக்கம் வரவிடாது வேலிகளைப்போட்டாலும்!

 முடியும் போதெல்லாம் வேலிதாண்டிய வெள்ளாடு போல தொடர்கள் என்னும் மாயாச்சிறைக்குள்  மூழ்கிப்போய் எழுத்தில் இன்பம் காண்பது என் பொழுது போக்கு !


ஆனாலும் பின்னூட்டங்களும், திரட்டியில் வாக்கும் எப்போதும் என்பதிவு சிந்தனையை மாற்றியதில்லை !

என்றாலும் பின்னூட்ட ஊக்கம் பதிவை தொடரவும் ,இன்னும் அதிக சிரத்தையுடன் எழுதவும் ஒரு உந்து சக்தி எனலாம்!

வலையில் அறிமுகம் கண்ட காலத்தில் 2010 இல் இருந்த திரட்டிகள் எண்ணிக்கை ,அன்று இருந்த பதிவர்கள் பட்டியல் எல்லாம் இன்று பெறுமதியற்ற நாணயம் 500,1000 போல )))

என்றாலும் ஏதோ !

இவ்வாண்டு ஒரு சிறுதொடர் மீட்டியிருக்கின்றேன் !


விரும்பியோர் நேரம் ஒதுக்கி படித்து உங்கள் கருத்தினை சொல்லுங்கள் ஒவ்வொரு கருத்தும் என் ஓய்வுப்பொழுதுக்கு கிடைத்த ஒரு லட்சம் தங்கக்காசு சினிமா பாடல் போல)))


முன்னர் போல இணையத்தில் இவ்வாண்டு அதிகம் இணைய முடியவில்லை !காரணம் தொழில் மாற்றம்,இல்லறச்சுழல் காற்று சுழல்வதால் கொஞ்சம் வலையுறவுகளை முகநூலில் கும்மியடிப்பதோடு இனிதே இவ்வாண்டு சென்ற நிலையில்!

 இனி வரும் நாட்கள் எப்போதும் போல என் தனிப்பட்ட ஆன்மீகத்தேடலில் கரை ஒதுங்குவதால்!

 உங்களிடம் இருந்து தற்காலிகமாக இணையத்தொடர்பை துண்டித்து சற்றே விலகிச்செல்கின்றேன் இப்போது!

மீண்டும் வருவேன் என்ற நம்பிக்கையில்  வருட இறுதி இனிதே கழியவும் ,முன்கூட்டிய பிறக்கும் கிறிஸ்மஸ்பண்டிகை நல்வாழ்த்துக்களையும் ,பிறக்கும் புத்தாண்டு சாந்தியும் ,சந்தோஸமும் நிறைந்த ஆண்டாக மலரவும் எல்லாருக்கும் பொதுவாண இறைவனை  பிரார்த்தித்த வண்ணம் உங்களிடம் இருந்து
தற்காலிக பிரிவுகளுடன் !



தனிமரம் நேசன்!
பாரிஸ்
14/11/16
மீண்டும் தனிமரம் வலைப்பதிவை புதிய ஆண்டு 2017 /மாசியில் எதிர்ப்பார்க்கலாம்!

அதுவரை !
இந்தப்பாடலுடன் உங்களின் ஒருவன் வலையில் இருந்து விடைபெறுகின்றேன்))))


07 November 2016

காற்றில் வந்த கவிதைகள்-6

முன்னர் காற்றில் வீசியவை இங்கே-http://www.thanimaram.org/2016/10/5.html


----------------------------------------------------
துயரங்களைச் சொல்லி
தூண்போல தாங்கும்
துணைவர்களைவிடவும் !
துன்பம் பெருக்கி
தூற்றாமல் !தோள் சாயந்து
துறவறம் போல ஒரு மரத்தடி நிழல் போதும்!
துவண்டமனதுக்கு
தூவானம் வீச!



----------------------------------------------------------------------------------------------------------

அடர்ந்தவனத்தில்
 ஆயிரம் கனவுகளுடன்!
அடுக்கு மரப்பாதையில்
அழுதுவடிக்கும்
ஆசைரோஜாவுக்கும் தெரியும்!
அகதியின் அன்புக்காதல்
அளவிடமுடியாத 
ஆயிரம் பலம் கொண்டது!
ஆசையுடன் வருவேன்
அணைத்து மகிழ 
அசந்து தூங்காதே ஆருயிரே!





----------------------------------------------------------------------------------------------------
பிரியமானவர்களிடம் வரும் 
பிரிவினை என்பது !
பிரிவினைவாதம் போல!-
பிடரியில் தொடங்கி
பிண்டம் வைக்கும் 
பிதிர்க்கடன் போல 
பிறப்பில் அன்புப்
பிச்சையும் ஒரு சாபமே!
பிறவிக் கடன் போல
பிதற்றியே கொல்லும்!

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////
துணிவே துணையென்று
துணிந்துவிட்டால் ! வரும்
துயரங்கள் மறந்து 
தூய்மையாக 
துடுப்பு வீசலாம்!
தூய்மையான பூமியில்
துவண்டு போகாதே 
துழைத்த காதலில் நண்பனே!///



/////////////////////////////////////////////////////////////////////
விந்தையான பூமியில்
விரும்பி யாரையும்
வில்லங்கம் செய்வதில்லை!
விட்டுச்செல்ல இது 
விதர்ப்ப நாட்டு வேந்தன்
விசிரியும் அல்ல,
விரலுக்கும் வீக்கம் வேண்டும்!
விறலுக்கு இறைப்பதா ?
விலையில்லா அன்புக்கு
வீசுவதா என்ற 
விளிப்பு வரும் போது!
விடைபெற்றுச்செல்கின்றனர்
விடுதலை விரும்பிகள்!