31 January 2014

கவிதை எழுத வாங்கோ!

வலையுலகில் எழுத்தார்வத்துக்கு களம் அமைத்துக்கொடுக்கும் பலர் .கவிதை ,கட்டுரை , கதை ,என பல போட்டிகளை நடத்திக்கொண்டு இருப்பது மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய செயல்.


 அந்த வகையில் சக மூத்த பதிவாளர்  வெங்கட் நாகாராஜா ஒரு படத்தினை  பகிர்ந்து கவிதை எழுத வாருங்கள் என அழைப்பு விடுத்திருந்தார்.

 அழகிய காட்சிப்படத்தினைக்கண்டு கவி எழுத ஆசை! 


ஆனாலும் ஆன்மீக தேடலில் தனிமரம் வலைக்கு ஒய்வு .என் சொந்தப் பெயரிலேயே கவிதை எழுதி அவருக்கு அனுப்பி இருந்தேன் .
அந்திப்பொழுதில் அன்பை ஆழ்கடல் போல
அள்ளித்தரும் அருமை நாயகன் என் அருகில்.
அவர் கரம் கொண்டு அணிந்து அழகு
பார்க்கத்துடிக்கும் அல்லிப்பூக்கள் ஆயிரம்
அன்று மலர்ந்தவை போல அவரிடம்
சொல்ல ஆசைகள் கோடி அருவியின்
அலைபோல ஆனாலும் அந்தக்கனப்பொழுதிலும்
அன்புக்கூடல் அதைத்தடுக்கின்றதே.
ஓட்டுக்கேட்கும் அலைவரிசை ஒலிப்பதிவு
அரசு போல அருகில் வளரும் தனிமரம்
அதை வேட்டையாடுங்கள் முதலில்
ஆம் ஆத்மி கட்சிபோல
அரசியின் கட்டளை இது அரசே!
கவிதை பிரசுரம் ஆகுமா ?இல்லை பூக்கூடையில் போகுமா?, என்ற தயக்கம். இருந்தாலும், கவிஞர்களும் ,கவிதாயினிகளும் போட்டி போடும் இடத்தில் சிவநேசனும் போட்டி போடலாம்  என்ற ஆசையில் எழுதிய கவிதையை ,ரசித்து பாராட்டியவர்கள்  பலர்  .http://venkatnagaraj.blogspot.com/2014/01/18.html

அவர்கள் எல்லோருக்கும் என் நன்றிகள் .இந்த வாய்ப்பை தந்து கவிதையையும் வெளியீடு செய்த வெங்கட் அண்ணாவுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்க்ளும் .




கவிதைக்கு கானம் சேர்த்து கல்லூரிக்காலத்தில் கல்லடியும் ,சொல்லடியும் வாங்கியதால் நீண்ட காலமா என் பெயரை நான் மறந்துவிட்டேன் :)) ! இப்போது தனிமரம் சுதந்திரப்பறவை என்றாலும் கானம் இல்லாத கவிதை வேட்டிக்கு இல்லாத சால்வை போல: எனக்கு :))

 ஒருவேளையில் கவிதையில் யாரைப்பார்தாவது உருக்கிப்போன உதவாக்கரையோ என்று யாரவது நினைத்தால் கம்பனி பொறுப்பு இல்லை:)))



30 January 2014

தளிர்க்கும் தனிமரம் வந்துட்டானய்யா..........


அன்பான வலையுறவுகளே !இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்  இணையத்தின் ஊடே உங்கள்  இணையப்பார்வையில் தனிமரம் என 
விழுந்து இதய வாசல் நாடிவரும் தனிமரத்தின் 5வது ஆண்டுப்பயணம் இது!!




 .இந்த நீண்டபயணத்தில் உங்கள் அனைவரின் அன்பான ஊக்கிவிப்பும், ,பாராட்டும் ,வாழ்த்துக்களும் தான் தண்ணீர் ஊற்றி செழிமையாக்கிய உரம் போல  தனிமரம் வளர்ச்சி  என்றால் மிகையில்லை!


  தனிமரம் கடந்து வந்த வலைப்பதிவுப் பயணம் பல விடயங்களை கற்றுக்கொள்ள உந்து சக்தியாக இருந்தது .இருக்கின்றது !


முதல் பதிவில்  தொடங்கிய மொக்கை  கலைஞரின் கண்ணீர் போல இன்னும் தொடர்கின்றது !

பிள்ளைப்பாசமா? ஆட்சியதிகாரமா ?என்பது போல என் வலைப்பதிவும் ஆத்ம திருப்தியா ?இல்லை வெற்றிப்பாதையை நோக்கியாவென்று நான் அறியேன்:))) !

தனிமரம்  ஒரு வழிப்போக்கன் பிடித்த விடயங்களை பகிர்கின்றேன் இன்றும் .இலக்கியம் ,இலக்கணம், கற்காத கல்லாதவன் தனிமரம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கின்றேன் 13 வது சரத்துக்குள்தான் தமிழருக்கு தீர்வு என்று அழுத்தியும், அணுங்குப்பிடியும்  பிடிக்கும இனவாத இலங்கை அரசுபோல இல்லை தனிமரம்! என்பதை பின் வந்த பதிவுகள் சுட்டியிருக்கும் .

இதுவரை தனிமரம்  வெளியீடு செய்த 695 பதிவுகளில் (நீக்கியது கணக்கில் பல!ஹீ ) தொடர்கதைகள்  பல எனக்கு வலையுலகில் முகம் கொடுத்தது!



 தனிமரமும் ஏதோ தளிர்க்கின்றது என்று இணையத்தில் என் வசந்தகாலத்தில் வீசிய இதயச்சுமையை தனிமரம் வலையில் வெட்டியாக வடித்து இருக்கின்றேன் !உங்களின் பார்வைக்கு
.

படித்தவர்கள் ,பிடித்தவர்கள் ,தரும் பின்னூட்டம்தான் இன்னும் என் தனிமர இருப்பை உலகறிசெய்கின்றது .அதில் என்றும் ஆனந்தமே எனக்கு!!


. இணையத்தில் எனக்கு இனி ஒரு பிரிவு இல்லை என்று வந்த உறவுகளில் என் தங்கை கிராமத்துக்கருவாச்சி , நண்பர்கள் ராஜ் .என்று விலை மதிக்க முடியாத ஹிட்சை பெற்றதில் நானும் ஒரு தகுதியானவனா?,,! என்று எண்ண வைக்கின்றது.

 என் பிறந்தநாளை  எப்போதும் கொண்டாடுவது இல்லை தனிமரம் வலையில் இல்லாத நிலையிலும் அன்பின் நிமித்தம்  வலையிலும்http://kalaicm.blogspot.fr/2013/12/blog-post.html, முகநூலிலும் என்னையும் கர்வப்பட வைத்த நல்ல உறவுகளை இந்த வலைப்பயணம் தந்து இருக்கின்றது.


இந்த பிறந்த நல்ல நாளில்!

அன்று வாழ்த்திய உள்ளங்களுக்கு என் நன்றிகள் .ஆன்மீகப் பணியினால் சிலருக்கு நன்றிகூட முழுமையாக சொல்ல மறந்த உறவுகளிடம் மன்னிப்பையும் கோருகின்றேன் !



. நடுவில் சிலபக்கம் போல ஆன்மீகம் என்னையும் இழுக்கின்றது அதன் பாதையில் போகும் போது வலைக்கு ஓய்வும் .பின்னூட்டத்துக்கு ஒதுக்கும் நேரமும் துண்டுவிழுகின்றது மாதக்கடைசியில் வங்கியில் அதிகப்பற்றுப்போல :)))




!  இனி வரும் காலத்தில் முடிந்தவரை உறவுகளிடம் வலையிலும்,  முகநூலில் தொடரும் என் மொக்கை! 

என்னையும் இந்த வார தமிழ்மண நட்சத்திரம் , இந்தவார  வலைச்சர ஆசிரியர் என தனிமரத்துக்கும் அங்கிகாரம் தந்து சிறப்புற சீர்படுத்திய திரட்டிகளுக்கும் என் நன்றிகள் பலகோடி .


இந்த தனிமரத்தையும் வலையில் ஒரு அறிமுகம் செய்து பலருக்குத் தெரிய வடிவமைத்த ,வழிகாட்டிய ,நாற்று நிரூபனுக்கும் என்றும் கடமைப்பட்டவனின் பணிவான நன்றிகள் .


அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பது போல அன்பிற்கு என்றும் அடிபணியும் தனிமரத்தையும் .பதிவுலக அரசியல் சுனாமி போல தாக்கியதில் தனிப்பாதையில் தள்ளாடிய போது தொடர்கள்தான் எனக்கு துணை வந்தவை.



 .உள்குத்தில் இருந்தும் ?உத்தம நடுநிலமை ,அறச்சீற்றப் பண்டிதர்களிடம்  இருந்தும் என் இருப்பை உறுதி செய்ய. அதனை மின்நூல் கண்டு அச்சில் 
ஏற்றி அழகு சேர்க்க முயன்ற போது அதில் இழந்தவை சில லட்சங்கள்!! என்றாலும் சிந்திய வேர்வை மீண்டும் சேராது உடலில் என்பது போல சில இலட்சம் நம்பிக்கைத்துரோகம் என்றாலும் மீண்டும் காசு வராது என்றாலும் மின்நூல் அச்சில் வரவேண்டும் என்ற ஆர்வம் இன்னும் இருக்கு பார்க்கலாம் அடுத்த பிரதமர் ஆளுக்கு குறைந்தது நூறுநாள் வேலை கொடுத்தால் :))) 



 எனக்கும் அன்பு காட்டி என் மொக்கைளுக்கும் பின்னூட்டம் இடும் பலரில் யோகா ஐயாவுக்கும்  ,தனபாலன் சாருக்கும் என் வாழ்நாள் நன்றிகள் உரித்தாகட்டும்!

அன்புடன் தனிமரம்
பாரிஸ் .
 ////

மீண்டும் விரைவில் உங்களை நாடி ஒரு தொடர் !

குன்றின் மீது ஒரு குலமகள்
குழந்தை போல கைபிடித்து
குலவிளக்கு ஏற்ற கூப்பிட்டேன்
குற்றவாளி என்று குறுக்கே வந்தது
கூடப்பிறந்த இனவாதம் காதல் ஜோதி
குற்றுயிர் பிரிந்தது.
குற்றம் யாரிடம்!

குளிர் தேசத்தில் இருந்து !!!