30 January 2013

விழியில் வலி தந்தவனே.---2



"பண்பென்ற பாசக்கூட்டிலே  சேர்ந்து பண்பாடும் வாணம் பாடி நாமே என்ற "பரதன் பாடல் போல ரகுவின் தந்தை கதிரவனும் ஒரு பாடல் பிரியன் அமைதியானவர்


.அமைதியில் அப்பனுக்குப்  தப்பாமல் பிறந்து பிள்ளையாக இருக்கின்றான்  என்று அயலவர்கள் போற்றும் வண்ணம் ரகு.பொதுவாகவே  அமைதியான சுபாவம் கொண்டவன். யாருடனும் இலகுவில் பழகிவிடமாட்டான்,அதுவும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம் ஆஞ்சநேய பக்தன் போல அவர்களாக வந்து பேசினாலும் விலகி போகும் ஒரு கேரக்டர்,


உயர்தர வகுப்பில் மாணவிகள் மாணவர்களுடன் சகஜமாக வந்து பேசுவது ரகுவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

"பால் வாசம் கடந்து பூவாசம் கண்டான் பல்கலைக்கழகம் புகும் முதல் நிலைப்பள்ளியில் என்ற "கண்ணதாசன் கவிதைபோல அதுவரை 11ம் வகுப்புக்களில் மாணவர்கள் மாணவிகளுடன் பேசுவது இல்லை.!


ரகுவின் அமைதியான சுபாவம் பல மாணவிகளுக்கு அவனை எப்படியும் பேசவைக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தார்கள்.

கல்லைக்கூட ஆலையில் போட்டு மாவைப்போல அரைப்பதில் தந்திரம் வைக்கும் கன்னியர் அவன் போகும் இடம் எல்லாம் வலியவந்து பேசுவார்கள் ரகு எதுவும் பேசாமல் போய்விடுவான்,துறவி விஸ்வாமித்திரர் போல பூஜிக்கும் பூக்கள் அல்ல பெண்கள் இந்தக்கல்லூரிக் காலத்தில் தவசியைப்போல தாண்டிப்போகவேண்டும்!

 இனவாத நாட்டில் வெட்டுப்புள்ளியில் தட்டிவிடுவார்கள் வன்னித் தமிழன்  பல்கலைக்கழகம் போனால் அடுத்த சிங்களவனை  எப்படி  உள்வாங்குவது? என்ற மேல்மட்ட அரசியல் புரியாதவன் இல்லை ரகு.


ஆனால் பசங்களுடன் நன்றாக பம்பல் அடித்து கதைப்பான் இதனால் பல மாணவிகளுக்கு அவன் மேல்அக்கினிச் சுவாலைதான். வெற்றி நிச்சயம் வடக்கை கைப்பற்றும் என்ற கனவில் இருந்த இனவாத ஆட்சி போலத்தான் செம கடுப்பு.

ரகுவுடன் தோள் கொடுப்பான் தோழன் என்பது போல நட்பு என்ற குழாமில் இருந்தான்  அர்ஜுன்.

 இவர்கள் இருவரும் தான் வகுப்பில் நெருகிய நண்பர்கள் இவர்களுடன் சுயன்,குமரேசன் இவர்களும் அடக்கம் வகுப்பில் மொத்தம் 12 ஆண்கள் 13 பெண்கள்.அர்ஜுன்,சுயன்,குமரேசன்,ரகு நால்வரை தவிர ஏனைய 8 மாணவர்கள் மாணவிகளுடன் சகஜமாக பேசி பம்மல் அடித்து கும்மாளம் போடுவார்கள்.


 சர்வவல்லமை பொருந்திய  ஜனாதிபதி போல மாணவர்களிடையே ரகுவின் ஆலோசனை கேட்கப்படும் பின் தான் மாணவர்கள் அதை செயல் படுத்துவார்கள்

.உயர்தரத்தில் மாணவர்கள் மாணவிகளின் கல்வி நடவடிக்கையில் ஏதாவது மாற்றம் என்றாலும் கீழ் நிலை வகுப்புக்களில் வரும் மாற்றம் என்றாலும் அதனைப் பற்றி  மாணவர் தலைவர்களின் தலைமகனாக ஆலோசனைக்கு பள்ளி அதிபர் அழைப்பது ரகுவைத்தான். கட்சியின் பொதுச்செயலாளர் போல!


 மாணவர்    தலைவர்களை விளையாட்டு ,இலக்கியம் ,என முன்னனியில் இருக்கக்கூடியவர்கள் யார்  ,,?   என்பது வரை அபிப்பிராயம் கூறக்கூடிய அளவிற்கு  பின்னனியில்  இயக்கும் இயக்குனர் என்பதாலும் பதவியில் இருந்தாலும் பணிவானவன் என்பதால்  பள்ளியில் ஒரு சிறந்த மாணவன் என்ற அபிப்பிராயம் பல ஆசிரியர்களிடமும் இருந்தது.


பள்ளியின் மாணவர் பத்திரிகை ஆசிரியராக ரகு இருந்ததும் ஒரு காரணம். இன்னொன்று பொதுச்சேவையான ஊடக ஆர்வம் பள்ளியில் தொடங்கும் வாய்ப்பு எல்லாருக்கும் வாய்ப்பது இல்லை அது ரகுவிற்கு கிடைத்ததுக்கு பள்ளியில் அவன் மாணவர்களின் மதியுரையனாக இருந்ததும் ஒரு காரணம்!

ரகுவின் பாடசாலையில் அப்போது பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தவள் சுகி !


  .சமுதாயத்தில் பெரும் செல்வாக்கு மிக்க ஒருவரின் மகள் அதிகாரம் அப்போது அவர்கள் கையில் இருந்தது வன்னியில். இயக்க பொறுப்பாளர் ஒருவருடைய
மகள்.








.
சுகியின் சுந்தர புருசன் நீயடா!
சூடிக்கொள்வானா என்னை
சுவாசத்தில் இவள் 
சுந்தர காண்டம் நாயகி
சிந்துஜா போல சுகியை .....
(சுகியின் நாட்குறிப்பில் இருந்து 2005 )

///தொடரும் வலி தந்தவனே.......................
//////////////////////////

29 January 2013

விழியில் வலி தந்தவனே!!! முதல் வலி


சர்வதேச நாளேடுகளிலும் இலங்கை தேசிய நாளேடுகளிலும் சட்ட மூல ஆராய்வு என்ற வார்த்தைப்பிரயோகத்தின் மூலம் ஈழமக்கள் பலரும் சட்ட சீர்திருத்த அமைப்பு,நிறைவேற்று ஜனாதிபதி  முறை என்றால் என்ன என்று உண்மையில்  தெரியாத சாமானிய மக்கள் பலர் சிந்தித்துக் கொண்டு  இருந்த  இலங்கையின் சமாதான நாடகத்தின் நடவடிக்கை தேக்கம் கண்ட நிலையான2005 ஆம் ஆண்டின் தைமாதத்தில்.... !


அப்படியான தையில்
முதல் வாரம் ரகு உயர்தரவகுப்பில் சேர்ந்திருந்த ஆரம்ப நாட்கள் .


எதிர்காலம் எப்படி அமையும் என்ற கற்பனைக்கு விதை விதைக்கப்படும் காலம்.

பாவையர் பார்வையில்  பள்ளிப்படிப்பு பல்கலைக்கழகம் தாண்டுமா ?இல்லை பாதியில் நிற்குமா நீ தானே என் பொன் வசந்தம் .

என புலம்பும் இந்த இரண்டுவருடம் படிப்பில் ஒழுங்காக கவனம் செலுத்தினால் தான் எதிர்கால வாழ்கை பிரகாசமாக இருக்கும் என்ற நிலையில் ரகு !

கல்வியே நாளை நமதே நம் வாழ்வின் ஒளியே இந்த கல்வி அறிவே என பாமரன் பாதையே என்றது  முதல் நோக்கமாக இருந்தது.


ரகுவின் தந்தை ஒரு விவசாயி .நடுத்தர குடும்பம் அவர்களுடையது .ரகுவின் பொழுதுகள் பெரும்பாலும் நண்பர்களுடனே கழியும்.

விவசாயி என்பதை இலகுவாக சொல்லிவிடலாம் .ஆனால் ஒருவிவசாயியின் கஸ்டம் என்ன என்பதை எழுத்தில் சொல்லிவிடமுடியாது.

நெல்லாடிய வயல் எங்கே... ???..என்ற பாடலில் வைரமுத்து இடையில் சரணத்தில்  எலிக்கறி தின்பது பற்றி விவசாயின் அவலம் எழுதியது எப்படி பலருக்கு புரியாதோ ??அப்படித்தான் இனவாத ஆட்சியினர் விவசாயத்தின் உப கரணங்கள் முதல், யூரியா வரை வன்னியில் தடைசெய்த நிலையியும் தென் இலங்கை மேட்டுக்குடியினர் பலருக்கு புரியாது.

 சேவை என்ற போர்வையில் மருத்துவ டாக்டர்கள் பணம் செய்யும் தொழில் போல அல்ல விவசாயம்!  

இது ஒரு சேவை நோக்கான பசியினைப் போக்கும் பாமரனின் புனிதமான தொழில்.

ஆனால் இன்றைய இளைஞர்கள் யாரும் விவசாயம் செய்ய முன் வருவது இல்லை. 

ஐடியில் அல்லது ஊடகத்தில் கழுத்துப்பட்டி  கட்டி சலாம் போட்டு அடிமையாக இருப்பது போல இன்றைய நவயுகம். முன்னர் போல அது எதோ படிக்காத பாமரர்களின் தொழில் என்ற நிலையில் அடையாளப்படுத்தப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.இன்று இன்ஜினியர் கூட விவசாயத்துக்கு மீள் திரும்பும் நிலையில் .

உயர்தர வகுப்பிற்கு வரும் ஆசிரியர்கள் சுய அறிமுகம் மேற்கொள்ள சொல்லும் போது, தனது தந்தையின் தொழில் விவசாயம் என்று சொல்ல ரகு ஒரு போதும் தயங்கியது இல்லை.!

ஆனால் அதை சொல்லும் போது சக மாணவர்கள் ஏதோ சொல்லக்கூடாத இராணுவ ரகசியத்தைவெளிநாட்டு ஊடகத்துக்கு  இவன் சொல்லியது போல பார்ப்பதை எண்ணி பல முறை அவன் வேதனைப்பட்டதுண்டு.


நகரின் பிரதான பாடசாலைகளில் அதுவும் ஒன்று. நகரின் பெயரைக்கொண்டு அமைந்த பாடசாலையாகும். சமூகத்தில் பெரும் அந்தஸ்து உள்ளவர்களின் பிள்ளைகள் பலரும் படிக்கும் பாடசாலை. கல்வி,விளையாட்டு என்று கிளிநொச்சி மாவட்டத்தில் அதை அடித்துக்கொள்ள   வேறு எந்த பாடசாலையாலும் முடியாது.

ரகுவை போல சாதாரண குடும்பத்து பிள்ளைகளும் அங்கே படிக்கின்றார்கள் ரகுவின் இரண்டு தலைமுறை படித்ததும் அதே பாடசாலையில் தான்,!

மூன்றவது வம்சம் ரகுவும் படிப்பதும்  அதே பாடசாலையில் தான். முதலாம் வகுப்பு முதல் படித்துவருகின்றான். பிறகு 1996 ஆம் ஆண்டு கிளிநொச்சி இடப்பெயர்வின் பின் சில ஆண்டுகள் அந்த பாடசாலையை பிரிந்து இருந்த ரகு, 2001 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் மீண்டும் கிளிநொச்சிக்கு மீளக்குடியமர்ந்த பின் ரகு மீண்டும் அதே பாடசாலையில் படிக்கத்தொடங்கினான்.

8,9,10,11 என்று இப்போது உயர்தரத்திற்கும் வந்துவிட்டான் இன்னும் இரண்டு வருடங்களில் அவனுக்கு பாடசாலைக்கும் இடையிலான தொடர்புகள் அடுத்த இராணுவத்தளபதியின் பதவி போல முடிந்துவிடும்.


ரகு பிறக்கமுன்பே இனவாத யுத்தம் இருந்தது. அவன் பிறந்த பின்பும் இனவாத  யுத்தம் உச்சத்தில் இருந்தது ஏழரைச்சனியன் போல யுத்தத்திலே பிறந்து யுத்ததிலே வாழும் அப்பாவி பிறவிகள் அந்த ஈழ மண்ணின் மக்கள். ரகு உயர்தரம் படிக்க வந்த போது சமாதான காலம் !!

.எனவே தென் பகுதிகளில் இருந்தும் வேடிக்கை பார்க்க பலரும் வெற்றி நிச்சயம் என்றும் .அக்கினிச்சுவாலை, என்றும் இனவாத ஆட்சியில் இராணுவச்சிப்பாயாக முன்களத்தில் பணியாற்றிய சாமானிய கிராமத்து அப்புக்காமியின் மகனின் பேரில் மாதாமாதம் வங்கிக்கு காசு வரும் மகனிடம் இருந்து கடிதமும் நேரடி உரையாடலும் வராத பாமரசிங்கள மக்கள் தம் பிள்ளைகளைத்தேடி சுதந்திரமாக இராணுவ கேள்வி இன்றி சுதந்திரத்துடன் வடக்கு நோக்கிய பயணமும்!
 (முன்னர்  வடக்கு போக இராணுவ அமைச்சின் பாதுகாப்பு அனுமதிMOD  எடுக்க வேண்டும்)


சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் பயணித்தார்கள் ஒரு புறம் என்றால் மறுபுறம். வெளிநாட்டில் இருந்தும் பல்பொருள் அங்காடி திறக்கவும் ,

வெளிநாட்டில் வைத்திருந்த கடன் அட்டைப் பணத்தைக் கொண்டு சாமானிய வியாபார நிலையங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி சொகுசு பல்பொருள் அங்காடி திறக்கும் ஆங்கலாய்ப்பில் ஓடிவந்த வியாபார நரிகள் ஒருபுறம் என்றால்!

 இனவாத யுத்ததிற்கு முகம் கொடுக்கொடுக்கா முடியாமல் உயிர் தப்பவும் பொருளாதார மாஜமானைத்தேடி பின் கதவால் ஓடிய பலரும், பிறந்த மண்ணை பாசத்துடன் பார்க்க மீண்டும் சுற்றுலாப் பயணிகளாக  வன்னிக்கு வரத்தொடங்கிய காலம்.

அவர்களை எல்லாம் பார்க்கும் போது அட நாங்களும் யுத்தம் இல்லாத ஒரு பூமியில் பிறந்திருந்தால் சந்தோசமாக வாழ்ந்திருக்கலாமே என்று ரகு ஏங்கிய நாட்களும்  உண்டு.!

தொடரும் வலி............/

28 January 2013

விழியில் வலி தந்தவனே -அறிமுகம்.


வணக்கம் உறவுகளே .
                            
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  மீண்டும் சிறிய விடுமுறையின் பின் தனிமரம் இணையத்தின் ஊடே உங்களுடன் இணைகின்றது.

மூன்றாவது ஆண்டின் வலைப்பயண ஆரம்பத்தில் மீண்டும் ஒரு குறுந் தொடரினை உங்களிடம் பகிர்கின்றேன்.

வலையுலகில் தொடருக்கான ஆதரவு மிகவும் குறைவு என்பது என் கடந்தகால நேரடி அனுபவம்  

.என்றாலும் ஒவ்வொரு தொடரும்  வலையுலக உறவுகளினால் வலைச்சரத்தில் வலம் வருவதே  எனக்கு கிடைக்கும் அங்கிகாரம் ஒரு புறம் என்றால் !

இன்னொன்று தொடரின்   மூலம் நான் அடையும் ஆத்ம திருப்தி  பெரிது  . அதனால் தான் இணையத்தில் என் நேரத்தினை செலவிடுகின்றேன்.

இந்தத்தொடர் /

என் கடந்தகாலத்தில் தாயகத்தின் வன்னி நிலப்பரப்பில் விற்பனைப்பிரதிநிதி வேலையும் ,அதனுடன் இணைந்த வியாபார விளம்பர சேமிப்பும் , என்னைப்  பல்வேறு நபர்களுடன் பழகும் சந்தர்ப்பத்தை  பெற்றதன் விளைவும்   அப்படிப் பழகியவர்களில் பள்ளி மாணவர்களும் மாணவர்த்தலைவர்களும் அடக்கம்.

என்னுடன் நெருங்கிப்பழகிய ஒரு மாணவத்தலைவன் கதை தான் இது.

இந்த வாய்ப்பினை எனக்கு சமாதான காலம் தந்தது.2002 இல் A--9 திறப்பும்  அந்த அந்த பயணத்தில் பழகிய ரகுவின் நட்பினை நான்  பின் பிரிந்து இனவாத அடக்குமுறையினால் .

என்றாலும்  மீண்டும் ஒரு நாள் என் ஆன்மீகப் பயணத்தில் சென்னையில் சந்தித்தேன்  .அந்த நட்பினை  அதன் பின் சிந்தித்தேன் .

இனி ரகுவுடன் உங்களைப் பயணிக்க எழுத்தாணியாக மட்டும் தனிமரம் பிடித்த பாடல்களுடன் இந்தத்தொடரில் பயணிக்கும்.

வழமைபோல இந்தத் தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும்  எந்த சம்மந்தமும் இல்லை .

இது ஒரு சாமானிய வழிப்போக்கனின் உன்னதமான உணர்வு யாரையும் காயப்படுத்தும் எண்ணம் எனக்கில்லை.

 என்றாவது ஒருநாள் மீண்டும் வன்னி மண்ணில் சிலரைச் சந்திக்கும் ஆவலுடன் ,ஆசையுடன்  ,புலம்பெயர் தேசத்தில் இருந்து .

சுதந்திரக் காற்றினை அன்னை பூமியில் சுவாசிக்க காத்து இருக்கும் ஒரு ஏதிலியின் எதிர் பார்ப்புக்களுடன் இந்தத்தொடரினை ஏற்றிவிடுகின்றேன் தனிமரம் வலையில் .உங்களுடன் கதை பேசும் ஆசையில்.:))).



சுதந்திரமாக காட்சிப்படத்தினை தன் தொழில்நுட்பத்த திறமையால் தனிமரம் கேட்ட வண்ணம் வடிவமைத்து தந்த  அன்புத்தம்பி நிகழ்வுகள் வலைப்பதிவாளர் கந்தசாமிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

அடுத்த பதிவாக இரு அங்கம் தொடரோடு  சந்திக்கின்றேன் .அதன் பின் வாரத்தில்  முடியும் தருணங்களில் இணையத்தில் இணையலாம்  நான் வணங்கும் தெய்வம் வழிவிட்டால் .!

உங்களின் அன்பும், அரவணைப்பும் காத்திரமான பின்னூட்டமும் இந்தத்தொடருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் .

என்றும் அன்புடன்
தனிமரம்-நேசன்.