30 April 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-21

ஊடக ஆசைக்கு முதலில் உறவுகள்தான் எதிர்ப்பு அரசியலைக்கொண்டு வருவார்கள்!
 எங்கே தம் பிள்ளையின் வாழ்க்கையும் வீண இனவாத  அரசியல் வில்லங்கத்தையும் கேள்விகளையும் இந்தத்துறை கொண்டு வருமோ ??

என்ற சந்தேக சங்கடத்தில் தவறும் இல்லைத்தான் இந்த நாட்டில் மட்டுமா ?,,

இனவாத யுத்தம்! மதவாத/ மொழிவாத யுத்தம் நடக்கும் பூமி எங்கும் முதலில் ஊடகத்தின் மீதுதான் தீப்பொறிபோல குண்டு வைக்கப்படுகின்றது.




 ஊடகப்படுகொலைகள் கண்டிக்கப்பட்டாலும் உலக நாடுகளில் ஊடகத்தின் முகத்தையும் இன்றைய உலகம் சந்தேகம் கொள்வதில் தப்பிள்ளை என்றே சொல்ல முடியும் §


சுடச்சுட செய்தி என்று சொல்லும் அவசர உலகில் நடுநிலமை எல்லாம்?? செய்தியை உருவாக்க நினைக்கும் ஊடக வியாபார ´ அதிபர்கள் எல்லாம் வாஞ்சிநாதன் பட பிரகாஸ் ராஜ் போல பலர் உண்டு!

 தினத்தந்திக்காக தீயில் போனவர்கள் எல்லாம் மதுரை  அன்பிள் கண்கள் பணித்து நெஞ்சம் குளிர்ந்தது என்று இதிகாச பரம்பரை மறந்தாலும் சென்னையில்  தீர்க்கப்படாத வழக்குத்தான்! அது போல்  ஈழத்தில்  பல ஈழகேசரி  இந்திய இராணுவ அத்துமீறல்  தாக்குதல் முதல் இலங்கையில் தனியார் உடமையாளர்  இடதுசாரி உப்பாலி முதல்  இது ஊடகத்தில் பால பாடம்!




 !என்ன பரதன் படிப்பைவிட்டுவிட்டு பேப்பருக்கு எல்லாம் கடிதம் போடுகின்றாயாமே??

அதிகம் எதுவும் பேசாத ஐயா இன்று என்னிடம் நீதிக்கு தண்டனை போல கேள்வி கேட்கும் நிலைக்கு என் ஊடக எழுத்து வளர்ந்துவிட்டதா??

 இல்லை யாராவது சந்தேககோட்டைக்கீறிவிட்டார்களா?? 

புலன்விசாரணை என்ற போர்வையில் ??

என்னப்பா என் கேள்வி புரியலையோ ?,

தேள்கொட்டிய் திருடன் போல முளிக்கின்றாய்,,

 அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ஐயா §

என் படிப்பு நல்லாத்தான் போகின்று.

 எப்படி தென்றல்வரும் தெரு கஸ்தூரி என்றா?,
 இல்லை  பூவெல்லாம் உன் வாசம் போலவா?? !



உன் தேர்வு அறிக்கை எல்லாம் மிக மோசம் என்று உன் வாத்தியார் இன்று என்னிடம் பேசினார்!உன்னை இங்கு அழைத்து  வர மறுபக்கத்தில் ஒருவனை பிணைவைத்துத்தான் விட்டு வந்து இருக்கின்றாள் உன் அம்மா

!


நீயும் சுயநலவாதி அரசியல் வாதி போல உன் நிலை  மறந்திடாத! உனக்கு இங்க பதுளையில்  எல்லா சுதந்திரமும் இருக்கு என்பதுக்காக நம் நிலையை உணராமல் ஒரே கோப்பையில் தேனீர் குடிக்கலாம் என்று கனவு கானாத !


உனக்கு விருப்பம் இல்லை என்றாலும் நாளைக்கே நாம் கொழும்பு போறம் நீயும் வெளிநாட்டுக்கு போறாய் !

நீ முன்னால் போ!

 நான் பின்னே வாரேன் உரட்டை மெனிக்கேயில்!!!

 உன் அம்மா அத்ன் பின் வன்னி போறா இது தான் கோட்டை வாசல் !இதைக்கடந்து நீ மலையகம் என்  வாழ்க்கை என்றால் நானும் என் கணக்கியல் அதிகாரித்துறை தூந்து என்னைத் தொடரும் சந்தேக இனவாதிகளை வெறுத்து என் தாய் பூமி வடக்குக்கு போகின்றேன்!


 என் மன உளைச்சல் எல்லாம் ஒரு மகன் அறியான் ! இது சத்தி வாக்கு! தெய்வ வாக்கு போல! எப்போது ஒரு மகன் தானும் தந்தை ஆகும் போது அவனும் இன்னொரு  வேலை தேடி இன்னொருத்தரிடம் இரங்கும் போது  என் ஞாபகம் வந்தால்!


 அப்ப என் முடியில் இருக்கும் நம்பிக்கைக்கை நீயும் புரிந்தால் நீயும் மலைகத்தில் ஒரு முள்முருக்கு மரம் தான்!



 அதுவரை என் ஐயா ஒரு பட்டதாரி என்று பொதுவில் நீ உன்னையும்!
 இல்லை என்னையும் சொன்னால் நான் உன்னிடம் வெளிநாட்டுக்காசில் பிச்சை வாங்குவதை விட  தூக்கில் தொங்குவேன்!




 எனக்கு மானம் முக்கியம் !அரசியல் ஓட்டு இல்லை என் மகன் ஒரு படிக்காதவன் என்பதைவிட அரசியல் தெரியாதவன் என்பதுதான் எனக்கு நாற்றம்! !  இல்லை நாளை இரவு நீ வெளிநாடு போறாய்  !

எனக்கு பணம் முக்கியம் இல்லை ஆனால் என் வாரிசு உயிர் வாழனும்! எனக்கு யார் கொல்லி வைப்பார்களோ நான் அறியேன் !என் வாழ்க்கை ஈழத்தில் போனாலும் அடக்குமுறை போல வாழும்  காலம்! நீயும் சிங்களம் படித்தவன் ஏதாவது எழுது இந்த ஊர் கதை ஊடகத்தில் வரவேண்டும் மை சன்!ஐயா நான் எப்படி எழுதுவேன்  ஐயா!

வெளிநாடு போ அங்கே உன் இன்னொரு அண்ணா இருக்கின்றான் இன்னும் உனக்கு பிரெஞ்சு நாட்டில் சொல்லித்தர !ம்ம்
!தொடரும்..................

29 April 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...20


கற்கை நன்றே கற்கை நன்றே!
 பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது
 நறுந்தொகை   ஆனால் இன்று கற்றல் கற்பித்தல் என்பது அரசியல் போல வியாபாரம் ஆகிய நிலையை என்ன சொல்வது?

 டியூசன் இப்போது பேசன் இந்த பேசனுக்கு மயங்காத மாணவ/மாணவிகள் உண்டோ இந்த நாட்டில் என்ற நிலையை நம் போட்டியும். பொறாமையும் ஒரு புறம் என்றால்!

 பெற்றோர்க்ளின் நிறைவேறாத ஆசையின் எதிர்பார்ப்பு என்ற திணிப்பும்  இன்னும் தொடர்கதைதான்!

 உண்மையில் மாணவ/மாணவிகளின் திறன் கண்டு திறமையை மேம்படுத்தும் கல்வியாளர்கள் இன்று கடமையை மறந்து காசின் பின்னே ஓடும் வாக்கு அரசியல் ஆன நிலையை?பொதுவில் பேச வேண்டிய காலத்தின் கைகளில் கட்டுண்டு கிடக்கின்றோம் !

.பதுளையைப் பொறுத்த வரை  உயர்தரத்தில் கணக்கியல் துறைக்கும் கலைத்துறைக்கும் இருக்கும் வளங்கள் கணித்தத்துறைக்கோ. விஞ்ஞாணத்துறைக்கோ தாராள பொருளாதாரம் போல இல்லாத நிலையை எவர் ஊடகத்தின் கண்களுக்கு கொண்டு வருவார்!


 அரசியலுக்கு சாமரம் வீசும்அதிபர்கள் எல்லாம் தம் பள்ளியில் ஆளணித்துறையில் ஏற்படும் குறைபாடுகளை எல்லாம் உரிய துறையில் இருப்போருக்கு உள்விருப்பத்துடன்  சொல்வது என்பது இராணுவ ரகசியம் போல!

 அப்படிச் சொன்னாலும் பெரும்பாண்மை இனத்தவர்களுக்கு இது ஒரு பொருட்டல்ல! கோழிச்சின்னமும். ஏணிச்சின்னமும். ஒரே கூட்டாச்சியில் இருக்கும் போது திமுகா போல் ஊழலில் திரட்டக்கூடிய் துறையில் அமைச்சராகவும்ம் ,இணையமைச்சராகவும் யேகா அரச  ராஜ்ஜியம் செய்யும் நிலையில் இந்த  பாமர மக்களைப்பற்றி என்ன கவலை.

 தேர்தல் நேரத்தில் மட்டும் பள்ளியில் நிலவும் வெற்றிடங்களுக்கு பக்கத்து நாட்டுப் பட்டதாரிகளை ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்குவதாக உடனடியாக் தீர்வுகிடைக்கும் என்று தேர்தல் மேடையில்   பேசிவர்கள் எல்லாம் ஜானாதிபதி மகள்  போய இன்னொருவர் வந்த பின்னும் இன்னும் பின்னடிக்கும் செயலை என்ன சொல்வதூ?  §

 சிரிமா-சாஸ்த்திரி  என்றும் கள்ளத்தோணி என்றும் நாட்டைவிட்டு விரட்டியபோது சிரிமாவின் முந்தானையில் மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன என்று பண்ணையார் போல நாதர்ஸ்வரம் வாசித்தவர் வம்சம்தானே!அந்த மான்கள் !!

கல்வியில் கூட அரசியல் கலந்து  இருக்கும் நிர்வாகத்தையும் சீர்குழைப்பதுடன் .

இன்னும் தமக்கு விரும்பாத பணியாளர்களை அதிகார பலம் கொண்டு ஆட்டிப்படைக்கும் வித்தை ஒரு புறம் செய்வது.

 அரசியல் உதவாத போது பண ஊழல்,பாலியல் ஊழல் என்று பல கதை பேசி பிரதேச வாத புற்றீசல். மதவாத மந்திரப்புன்னகை, என்றும் இனவாத் தமிழ்புலி என்று எல்லாம் இந்த ஊர்க்கல்வியைக்குலைக்கும் கல்விப்பணியாளர்களை முதலில் களுவில் ஏற்றனும் .

முன்னர் தமிழ் இலக்கியத்தில் மடல் ஏறுவது போல இன்னும் இந்த ஊர் இரகசியங்க்ள் பல ஊடகத்தில் வரவேண்டும்.

 மக்கள் குறை என்ற் பகுதியில் இது உங்களிடம்  இருந்து வெளிவரும் என்ற நம்பிக்கையில் வேடன்!

மச்சான் பரதன் இப்படி எல்லாம் எழுதாத வேடன் என்ற புனை பெயரில்!

 அப்புறம் ஜீவனியும் தப்பாக் நினைப்பாள்?

ஈசன் நான் உண்மைத்தானேடா எழுகின்றேன் !ஆமாடா காட்டில் வேடன் எந்த மரத்தின் மேல் இருக்கின்றான் என்று முகத்தில் புது புரோபைல் வரும்!ஹீ

உண்மைக்கு முன் நடுநிலமை எல்லாம் இப்ப ??
...



எங்கும் அரசியல் எதிலும் அரசியல் சும்மா ஊடக ஆசையில் இந்தக்கடிதம் எல்லாம் அச்சில் வரும் என்று கனவுகானாத ஜீவனி போல இதுவும் கானல் நீர்தான்.

 ஒரு கடிதம் பத்திரிகைக்கு வந்தவுடன் உரிய ஆசிரியகள் பலர் அரசியல்வாதியின் வீட்டில் தான் இரவுச்சந்திப்பு  அடுத்த பதிப்புக்கு முன் எத்தனை ஆயிரம் அன்பளிப்பு வாங்களாம்.

 அடுத்த நாட்டுக்கு குடும்பத்துடன் எப்படி உல்லாசப் பயணம் போகலாம் என்று தான் பேசுவாங்க புட்டியும் குட்டியும் தாய்லாந்து  கொடைநாடு என்று!

 நீ சும்மா ரிஸ்க் எடுக்காத படிக்கும் காலத்தில் !

தொடரும்...

28 April 2014

என் ஆசைகள் பாவமா???,,!

பாண்டிச்சேரிக்கும் ,பிரெஞ்சுக்கும் இருக்கும்  காலணித் தொடர்பு வரலாறு அது  முன்னம்  ஈழத்தில் பள்ளியில் படித்தாலும்!

 புலம்பெயர்ந்த  பின் ஆன்மீகப  பாதையில் போகும் எனக்கு பாண்டிச்சேரி இன்னொரு தாய் வீடு!


. என் குருநாதர் பொதுவில் அவசர புத்திக்காரன் என்று   என்னைத் திட்டினாலும் !அன்பில் என்னை ஆளும் இன்னொரு தந்தை போல எப்போதும் அவர் வீட்டுக்கு அறிவிப்பு கொடுக்காமல் பாரிசில் இருந்து  இன்றும்  போகும் வரத்தை ஏதோ ஒரு சாமி கொடுத்து இருக்கு.
அது தனிப்பட்ட விடயம் .  என்றாலும் !ஹீ!

இசையும் பாடலும் என் இன்னொரு உலகம் .அப்படி நான் பாண்டிச்சேரியில்  நடந்த/நடக்கும்  வீதியில் இருந்து இப்படி ஒரு இசைத்தொகுப்பு!

பாண்டிச்சேரி அல்பம்.


!பாடலின் கருத்தினை இசை இருட்டடைப்பு செய்கின்றது. இருந்தாலும் வளரும் கலைஞர்களுக்கு ஒரு வாழ்த்துப்பூ!
                                           
பாடலை ரசிப்போமா???,

 -

27 April 2014

நீயும் நிலவோ?,,

                        

      

கையில் ஒரு இதயம் உன்னைப்போல 
அதில் ரோஜா வாடுது
 நீ விரும்பாத என் காதல் போல 
நானும் கீழ் வானமோ!
/////////////////////////////// 
                         
  வயலும் வானமும் போல 
  வளர்ந்து இருக்கும் மரம் இன்று!

  என்றாலும்  வாடிய வாய்க்கால்
   நீர் போல என் காதல் 
   சூழை மேட்டில் தான்/!    

பனிக்கரடியும் பால் நிலவும்
 பார்த்து இருக்கும் பனிசூழ்ந்த மரம்
 .அது போல என் பார்வையும் உன்னையே!
 நீலக்கடல் போல!
உன்னைச் சுற்றி!
 ஊளையிடுவது போல
  நீயும் நிலவோ?,,

நீரலையாகவும் தென்னஞ் சேலையாகவும்
 .உன்னையே மேடு என அலைந்தது 
என் ஜீவன் !
நீயோ மேடு போல உயரத்தில்! 


கடலில் பூப்போல் என் இதயம்!

அலை காற்றில் வரும் கவிதை இமையும் இசையில் முதல் கிறுக்கல் இங்கே!http://www.thanimaram.org/2014/04/blog-post_1.html

23 April 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --19

கண்களில் ஆரம்பிச்சு இதயத்தில் முடியும் காதல்க்கோட்டை படம் போல இல்லை சாமானிய வாழ்க்கை பரதன்.

படிக்கும் காலத்தில் சரியாக படிக்காமல் மனசை அலைபாய  விட்டுவிட்டு பின் சரியாக  படிக்கலையே என்று முகாரி ராகம் பாடும் நிலையும் உனக்கு வேண்டாம்.

 நல்ல ஆட்சியாளரிடம் நாட்டைக்கொடுக்காமல் விட்டு விட்டு ஊழல் ஆட்சி ,சீராக வழிநடத்தத் தெரியாத இந்த அரசாங்க ஆட்சி என்று எல்லாம் கோசம் போடும் நிலை போல நம் வாழ்க்கையும் ஆகும் நிலை வேண்டாம் பரதன்!

நீ யார் ?எங்கு இருந்து வந்தவன் என்று எல்லாம் எனக்கு முழுமையாக தெரியாது!

  இலங்கையின் பிரதமர் கொள்கலனை விடுவிக்க துறைமுக அதிகார சபைக்கு கொடுத்த கடிதம் போல நீயும் காதல் கடிதம்   தந்தாய் .

என் தகுதி என்ன ?
நான் யார் ?என்று எல்லாம் நீ தேடிப் பார்த்தியோ அரச புலனாய்வாளர்கள் போல என்று எல்லாம் தெரியாது ?

காதலுக்கு கண் இல்லை மனசு போதும் என்று எல்லாம் யாதார்த்த வாழ்க்கை புரியாத புதிர் போல பாடம் கற்பிக்காத .
உயர் தரம் படிக்கும் இந்த இரண்டு வருடமும் எங்களின் வாழ்க்கைப்படி ஒரு மலையேற்றம் போல இதில் எங்காவது வழி தவறிவிட்டாள் பின் பொது வெளியில்  படிக்காதவன் என்று சொல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தாத.

அதுக்காக உன்னிடம் என்னை நேசிக்க  என்ன பொருளாதார ,சமூக அடிப்படைத்தகுதி இருக்கு?

என்று கேட்பதாக பொருள் கொள் வேண்டாம் !
உருகும் பிரெஞ்சுக்காரி போல ஜீவனி  இல்லை!

உன்னிடம் கவி ஆழுமை இருக்கு அதை ஊடகப்பக்கம்  திசை மாற்றினால் இந்த ஊர்  சமூக,கலை, கலாச்சார சீரழிவுகள் ஒரு புறம் சாமானியர்களின் ஏக்கம்? ஒவ்வொரு  அரசியல்வாதிகளும் ஏதாவது  தேவையான சாமானிய பொருளாதார  ,சமூக அடிப்படை வசதியைச்சரி முன்னேற்றுவார்கள் என்ற எதிர்ப் பார்ப்பை எதிர்க்காற்று படம் போல ஆக்கும் இந்த  ஊர்க்கதை எல்லாம் எழுதலாம் .



எனக்கு இந்த ஊரில் ஏதாவது ஒரு பொதுப்பணி செய்ய வேண்டும்  என்ற ஆர்வம் இருக்கு!

தயவு செய்து அதை எல்லாம் காதலே நிம்மதி, காலம் எல்லாம் காதல் வாழ்க, காத்திருந்த காதல் ,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று எல்லாம்  காதலில் விழுந்தேன் என்பது போல கல்லூரி மாணவன் இதயம் பட முரளி  போல  எல்லாம் உன்னை வீணாக்காத.

 இது ஒரு நண்பியாக சொல்லுகின்றேன் எனக்கு அப்பாதான் முக்கியம்.

 தம்பியின் படிப்பு. வீட்டுப்பொறுப்பு என்று எல்லாம் குருவி தலையில் பனங்காய் போல இருக்கும்  என்  படிப்பு நிலையில் இப்ப காதல் ராகம் மீட்ட நேரம் இல்லை பரதன்.

நீங்கள்  மனசை தேர்ந்த ஞானி போல கட்டுப்படுத்தி  அடுத்த தவணையில் நல்ல மார்க்கு எடுக்க முயற்ச்சி செய்யுங்க. .

மீண்டும் அடுத்த தவணையில் சந்திப்போம் என்று வந்த  வேகத்திலேயே தேர்தல் பிரச்சாரம்  போல பேசி முடித்து சென்றாள் ஜீவனி.

 அதுவரையும் பரதன் ஒரு வார்த்தையும் ஜனாதிபதியின்  ஊடக சந்திப்பில்  குறுக்கு கேள்வி கேட்கும் கால அவகாசத்தையும் நிரூபருக்கு  கொடுக்காமல்  ஊடக சந்திப்பை பகிஸ்க்கரித்த ஜனாதிபதி  போல!

காதல் சொல்ல வந்தேன் என்பது போல பேசமாட்டாளா என்று இருந்தால்


 ஜீவனி கோகுலம் பானுப்ரியா  போல இருக்கின்றாலே!

தொடரும்.............


19 April 2014

யாழ்தேவி ரயிலில் ரசித்த இன்னொரு பாடல்!

நம்மவர் படைப்பில் சந்தன மேடை நிகழ்ச்சி இலங்கை வானொலியில்  நீண்ட காலம்  வலம் வந்த ஒரு நிழச்சி வானொலி மீது காதலில் உருகிய காலம் காதில்  கேட்ட  நேயர்  என்ற  என் நிலை  மறந்தாலும்!

 இன்று முகநூலில் பலர் நம்மவர்  படைப்பை எனக்கு நட்பின் உள்ளடப்பில் செய்தியாக   பகிரும் காலத்தையும் முகநூல் தந்து இருக்கு .


அதில் பலர் தனிச்செய்தியாக பகிர்வதை நேரம் கிடைக்கும் போது புலம்பெயர் தேசத்தில்  ரசிக்கின்றேன். என்றாலும் என்னைத்தாலாட்டும் இதையும் என் வலையில் ரசியுங்கோ!

இவரின் பாடல்கள் இங்கும் ரசிக்கலாம்!--http://www.thanimaram.org/2012_04_01_archive.html

18 April 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --18

பூகோல அரசியல் மாற்றம் போல உயர்தரதில்  ஒவ்வொரு காலாண்டு நேரத்திலும் படிப்பின் ஆர்வத்தில் நிலை மாற்றம் வந்து சேரும் கணக்கியலுக்கும் ,பொருளியலுக்கும் இடையில் மூளையும், இதயமும் முரண்பாடு கொள்ளும்!

 அரசியலில் ஆளும் கட்சி ,எதிர்க்கட்சி போல ஆனாலும் தயக்கம் ,மயக்கம், புரிந்து கொள்ள முடியாத பொருளாதார விதிமுறைகள் .அரசியல் கோட்பாடுகள் .அபிவிருத்தி என்றெல்லாம் படிப்பில் ஒவ்வொரு  விடயமும் மாமலைகள். அரசியல் சட்டம் போல இதைக்கடந்து போனால்த்தான் பரீட்சையில் நிலையான ஆட்சி போல நல்ல பெறுபேறினை எடுக்க முடியும் எதிர்காலத்தில் !


உயர்தரத்தில் ஒவ்வொரு காலாண்டுப் பரீட்சையும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு போர்க்களம் தான் !


அதுவும் காதலில் விழுந்தவர்களின் நிலை அனுமான் இலங்காபுரியில் பார்த்த வானரப்படை போலத்தான்!

 ஜீவனியும் சாதகமான பதில் தருவாளா என்ற ஏக்கத்திலேயே ??பரதனும் கணக்கியலில் தெரிந்த நிஜமங்களின் குறியீடுகளையும் குறிக்க மறந்தான்!

 பொருளாதார சந்தையை புடம் போட்ட தங்கம் போல ஒப்பிவிக்காத நிலையில் சந்தை நிலவரம் சீழிந்த பொருளாதார நாடுகள் போல  தேர்வின் தாள்கள் சிவப்புக்கோட்டில் நின்ற நிலையில்!


 உயர்தரத்திற்கு பொறுப்பான ஆசிரியர் வெற்றிவேல் வகுப்பில் வந்து இருந்து காதாப்பிரசங்கம் தொடங்கினார்!


 உயர்தரத்தின் கணக்கியல் படிப்பும் காதல் போலத்தான் ஒரு ஈர்ப்பில் உந்தி வாரீங்க காலமாற்றத்தில் காதல் புரியா புதிர் போலத்தான்! பாடங்களிலும் சிலர் அசட்டையீனம் அறிந்து, தெளிந்து. பதில் கொடுக்காத நிலை ஒரு குழப்ப அரசியல் தான் .


பாராளுமன்றத்தில் நிதி அறிக்கை போலத்தான் இந்த இடைக்கால தேர்வு அறிக்கைக்களும் .

இதில் உங்களின் முன்னேற்றம் ,வீழ்ச்சி. மந்த நிலை .எல்லாம் மதிப்பாய்வு போல இந்த அறிக்கையை வைத்துக்கொண்டு நீங்களே உங்களை கேள்வி கேட்களாம்?,

 என் திறமை எப்படி இருக்கு; இந்த ஆட்சி தொடரணுமா?? இல்லை இது சிறந்த ஆட்சியா?? எப்படி இன்னும் முன்னேற்றம் காணுவது?

 இல்லை இந்த நாட்டைப்போல இப்படியே சீழிவதா??

 எல்லாம் இது உங்கள் கையில்.  பின் வாங்கில் இருந்த பரதன் மனதில் முதலில் உயர்தரத்தில்  பொறுப்பான் வாத்தியாரை! முதலில் !

 தேர்வு அறிக்கையை தருவதைவிடுத்து அரசியலுல், அறிவுரைகளும் சொல்லிக்கொண்டு !

என்ன பரதன் தம்பி உங்க வீட்டிலையும்உன்னையும் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்களா?, கோயில்க்காளை போல !

இதுரை இந்தக்கல்லூரில் படித்த  வடக்கில் இருந்து வந்த மாணவ/மாணவிகள் நல்ல பெயர் எடுத்து ,பெருமை சேர்த்துக்கொடுத்து இருக்கின்றார்கள்.

 அதில் சிலர் புலம்பெய்ர் தேசத்திலும் நம் கல்லூரி பெயர் சொல்லி வாழ்கின்றார்கள்.

 நீ பெயர் எடுத்துத் தராவிடாலும் பருவாயில்லை .அரச பரீட்சையில் பெயில்விட்டு எங்கள் வேலை சரியில்லை  என்று பெயரைக் கெடுக்காத!

 இதோ ஜீவனி எல்லாப்பாடதிலும் சிறப்பாக திறமையாக பரீட்சை செய்து நல்ல பெறு பெறுபேறு பெற்று இருக்கின்றாள்!


வாத்திமார் படிப்பிப்பது விளங்கவில்லை என்றால்! சக மாணவர்கள் /மாணவிகளிடம் கேட்டுப்படியுங்க .அப்ப சரி இன்னும் அதிக மார்க்கு வாங்க முடியும் !

இல்லையோ கணக்கியல் விடுத்து கலைத்துறைக்கு மாறும் நிலை பற்றி சிந்தியுங்கோ !அங்கே நூலகத்தில் குப்பை கொட்ட ஒரு வேலை கிடைக்கும்!


என்றுவிட்டு வாத்தியார் வெற்றிவேல் வெளியேறினார். /!

முதல்க்காலாண்டுக்கான விடுமுறைவிடும் இன்றைய நாள் வரை என் காதல் கடிதத்துக்கு பதில் சொல்லாத  ஜீவனி மீது பாராளமன்றத்தில்  ஜனாதிபதி மீதுதான நம்பிக்கையில்லாப் பிரேரனை மூஸ்தீபு போல!

 இனி என்ன செய்யலாம் என்ற நிலையில் இருந்த பரதனை நோக்கி தன் வகுப்புத்தோழி விமலாவுடன்  பரதனை நோக்கி சிந்து நதிப்பூப்போல நடந்து வந்தாள் ஜீவனி!


இன்னும் தொடரும்....

17 April 2014

பாதம் பருப்பு கேக்.


முகநூல் நண்பன் உள்ளடப்பில் வந்து  புது வருடத்திற்கு வீட்டில் என்ன ஈஸ்பெஷல் என்று  பகிடி விட நானும் கையில் இருந்த  ஒரு படத்தினை பகிர்ந்து இருந்தேன் ..

இதைச் சுவைத்துப்பார் என்று!

என்றாலும் கேக் வெட்டி எல்லாம் புதுவருடம் கொண்டாட தனிமரம் ஓய்வில் இல்லை புலம்பெயர் தேசத்தில்.
வேலை நாளில் என்ன செய்ய !

புது வருடம் என்றால் சம்பளதுடன் விடுப்பும் .மேல்போனஸ் என குதுகலித்த காலம் எல்லாம் கடல் கடந்துவிட்டது:)))

வாங்க கேக் செய்வோம்!
தேவையான பொருட்கள்
சீனி -250 கிராம்
கோதுமை மா-300 கிராம்
கோழி முட்டை - 4
பட்டர் -250 கிராம்
அப்பச்சோடா-10 கிராம்
பால்-100மி.லீ
உப்புத்தூள்-10 கிராம்.
பாதம் ப்ருப்பு தூள்-100 கிராம்.
சிறு பாத்திரம்-2
தட்டையான /சதுரமான அலுமினிய தட்டம்-1
மின்னடுப்பு/அல்லது விறகு மூலம் சூடாக்கும் வெதுப்பகம் .

இனி- செய்ல முறைகள்

செய்முறை-1
கோதுமை மாவையும் சீனியையும் முதலில் ஒன்றாக கலக்கவும் பாஜகா தேதிமுக கூட்டணி பேரம் போல :))

பின் அத்துடன்  பாதம் பருப்பையும் சேர்த்து நிலையான கூட்டணி என்ற பின் !ஹீ

அப்பச்சோடாவையும் ,உப்பினையும் சேர்த்து கலக்கவும் பாமாகா இணைந்தது போல:))

செய்முறை-2 ஒரு சிறு பாத்திரத்தில் பட்டரினை வைத்து இதமான சுட்டில் இளகவைத்து எண்ணைப்பதம் போல ஆக்கவும் (அல்லது மிக்ரோனில் இரண்டு நிமிடம் சூடாக்கினால் நேரம் மிச்சம்)

 பாலுடன் முட்டையைச் ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒரு முள்கரண்டியினால் /அகப்பையினால் நுறைவரும் வரை கடையுங்கள்  பின் அதில் எண்ணையைப்போல் இருக்கும் பட்டரினையும் சேருங்கள். பால் ,முட்டை, பட்டர் மூன்றும் சேர்த்தால் தேசிய ஜன்நாயக்கூட்டணி போல தாமரையிலையில் தண்ணீர் போல இருக்கும் !

பின்

செய்முறை -1 உடன் (கல்க்கிய் கோதுமைமா,சீனி ,அப்பச்சோடா,உப்புத்தூள் )
செய்முறை -2யும் சேர்க்கவும்( இளகிய பட்டர், பால் ,முட்டை)

செய்முறை-1+ செய்முறை -2 =
இப்போது எல்லாத்தையும் பாத்திரத்தில் ஒன்றாக்கி மெதுவாக ஒரு அகப்பையாள் கடையுங்கள் வலுவான  தேர்தல் கூட்டணி போல்:)))

பின் கழி போல ஆன பாதார்த்தங்கள் எல்லாவற்றையும் ஒரு சதுர வடிவான/செவ்வக/நீள் / அலுமினித்தட்டில் மெதுவாக அதன் அரை வாசிக்கு  வார்க்கவும் தேர்தலுக்கு கொடுக்கும் டாஸ்மார்க்ப்போல:)))

அலுமினியத்தட்டில் வார்த்த கலவையை மின்னடுப்பில் 45 நிமிடம் 180 பாகை வெப்பத்தில் சூடாக் வைத்துவிட்டு  நீங்கள்

சூப்பர் சிங்கரோ ,நம்ம வீட்டுக் கல்யாணமோ, இல்லை நமக்குப் பிடித்த பதிவுகளையோ  பார்வையிடலாம்.ஹீஈஈஈஈஈஈஈஈ!

 45 நிமிடத்தின் பின் கேக் தயார்!



பால்க்கோப்பியுடன் இதைச்சுவைத்தால்  மோடி பிரதமர் என்ற இனிப்பான செய்தி போல இருக்கும்!

கேக் நன்றாக வந்தால் தேர்தலில் ஜெயித்த தலைவருக்கு விழா எடுப்பதுக்கு நிதி சேர்ப்பது போல தனிமரத்துக்கும் நிதி அனுப்பிவிடவும் .ஹீ!

செய்முறையை நன்கு கவனிக்கா விட்டால் பொருள் இழப்புக்கு எல்லாம் தளபதி போல ஆரம்பத்தில் நஸ்ரப்பட்ட இயக்குனர்களுக்கு பணம் கொடுப்பது போல எல்லாம் தனிமரத்தினால் கொடுக்க முடியாது:)))

என்னிடம் இருப்பது பாடல் தொகுப்பு மட்டுமே இதோ-ஹீ


15 April 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --17

காதல் தோன்றும் நேரத்திலே சிந்தனையில் காதல் சொல்ல கையில்  ஒரு பூப் போல ரோஜாவும் வந்து விடுகின்றது .!

மது பாலாவுக்கு ரோஜா படம் போல என்றாலும்  !

வெள்ளைரோஜா ,சிவப்பு ரோஜாக்கள் பேசப்பட்டது போல கறுப்பு ரோஜா படம் அதிகம் பேசப்படலை  மச்சான் பரதன் .

நாசாப்போனவனே  ஈசன்.

'நான் நெஞ்சத்தை கிள்ளாதே என் காதல் கண்மனி ஜீவனி என்று அலைபாயுதே போல தவிக்கின்றேன்'
 நீ என்னடா என்றால் அவங்க அப்பன் அரசியலில் பெரிய பிஸ்த்தா!

எங்க  ஐயா ஒரு பூந்தோட்டக் காவல்க்காரன் என்பது போல ஓவராக் பில்டப் கொடுக்கின்றாய் .

'காதல் என்றாலே மோதல் தானேடா ?அதுவும் அரசியல்வாதி மகளுக்கு என் மேல் காதல் வரக்கூடாதா?

 என் காதல் நிச்சயம் வெற்றிவிழா காணும்.

 நானும் ,ஜீவனியும் இந்த மலையக வீதியில் டூயட் பாடத்தான் போறம் இருந்து வேடிக்கை பாரு !



காதலுக்கு முன் அரசியல் மகுடம் ஒரு காலணி போல நிஜமான நேசிப்பு நம்மைச் சேர்த்துவைக்கும் மச்சான் ஈசன்!

நான் ஜீவனியை உயிரோடு உயிராக யாசிக்கின்றேன் .

ஏன் உயிரிலே கலந்தது போல உயிரே உயிரே அழைத்த தென்ன என்று பாடவோ??:)))

நீ என் உயிர்தோழனா இல்லை காவல்க்காரனா ?

நான் ஏழைஜாதிடா!

போடா ஈசன் என்னைப் புரியாதவனே !

ஆமாடா நீ நல்லா இருக்கணும் ,ஜீவனி வேண்டாம் என்றால்  எதிர்ப்பு அரசியலே புரியாதவன் நீதாண்டா!

அரசியலும் ஒரு  காதல் தான்  மதவாத பீடாதிபதிகள் இனவாத மகுடி ஓதுவது போல!

இங்கு பலருக்கு ஒரு செருப்பு வீசினாலும் ,ஒரு கல் எறிந்தாலும் சிரித்துக்கொண்டு புகைப்படத்தில் காட்சி கொடுத்துவிட்டு !

செருப்பு எறிந்தவன் மீது மீண்டும் சுதந்திரமாக   வெளிவரமுடியாதா வழக்கில் எல்லாம் பொய்ஜாக ஜோடி சேர்த்து ஜீவஜோதி போல சிறையில் சித்திரம் தீட்டவும் ,சிறுவிரல் இல்லாது செயல் இழக்கச் செய்வதில் முத்திரை வழக்கு எல்லாம் அண்ணாச்சி கதை போல சிதம்பர ரசசியம் எல்லாம் ஊடகத்தில் படித்தது இல்லைப் போலும் !

அரசியலில் மகளையும் ,மகனையும் கூட முதலீடு செய்வதில் நம் நாடும் இந்தியாவைப்போலத்தான் !

ஜீவனியின் தனிப்பட்ட விருப்பு ,வெறுப்பு  அறியாமல் அவளையும் தேர்தல்க் களத்தில் பிரச்சார வாக்குச் சூறாவளிக்கு நடிகையைப் போல திடீர் என்று இறக்குவதக்கும் தயங்காதவர் அவங்க அப்பா முத்தையா!

இது எல்லாம் ஜோசிக்க வேணும் ?
யதார்த்த நிலைக்கு  முன் உன் காதலும் ஒரு அரசியல் அரங்குதான்!

இங்கு யார் வெல்வார்? யார் மகசின் சிறையில் சந்தேகக்கைதி போல தனிமையிலோ ?

இல்லை இனம் தெரியாத உடலாக மகாவலி கங்கையிலோ வீசப்படும் நிலையை ஊடகத்தில் புனை பெயரில் எழுத வைக்காத பரதன்.

இனி ஜீவனி பற்றி ஏதும் என்னோடு பேசாத மச்சான் .


அது நம் நட்புக்கு இருகோடுகள் போல...படிக்க வேண்டிய பைல் அதிகம் தொலைச்சிடாத!

இன்னும் தவிக்கின்றேன்....................