04 October 2021

இலஞ்சம்!

 இரந்து   இகழந்து

இழந்து    போன

இலங்கையின்    இறையாண்மைபோல




இங்கேயும்    ஒருகங்கைபோல

இன்னும்     இடுப்பில்

இறுக்கிய    இலங்கையர்கோன்

இனிய     வெள்ளிப்பாதரசம்    போல

இந்தா    என்று

இனிப்புடன்    கொடுத்த

இந்தியப்    பருப்பும்

இனிய   பொட்டல    வீச்சும்

இன்னும்    நினைவில்!

இதயத்திருடன்    சினேஹா    போல!

இருந்த    காணியும்

இனி     எல்லாம்நீயே     என்று

இளகிக்   கொடுத்த     உறுதியும்

இளங்கிளியே    இன்னும்    பாடல்    போல

இறக்குமதி    வெள்ளைப்பூண்டு

இலஞ்ச    ஊழலில்

இன்று   கைதானவர்   நிலைபோல

இதோ    பிக்பாசில்

இலங்கை    நங்கையும் 

இனி   என்ன   கூத்துக்கு!

இலங்கை   ஊடகத்தில்

இழுத்து   விடலாம்

இஞ்சாருங்கோ   பாடல்!

இத்துடன்    முடிந்தது

இவ்வாரச்     சம்பளம்

இனியும்    போராட்டம்    தொடரும்

இலங்கை    ஆசிரியர்    சங்கம்!!

யாவும்கற்பனை)


///////////////////


24 September 2021

ஆட்சியின் அலங்காரம்!

 அரைக்கம்பத்தில்  பறக்கும்

அரசகொடி     போல!

அகதியின்     மனதிலும்

ஆடிப்பட்டம்    போல!

ஆனந்தம்    நாயகியே!

அவித்து     இறக்கிய

ஆட்டிறைச்சிச்சுவை    போல!

அந்த  தேசமும்

அங்கர்தேடி

அழிந்துபோன 

அரச   கஜானாவில்!

அரை    ஆடைக்கும்    தடை!

அங்கர்    வியாபாரி     வீட்டிக்குள்

அடுக்காத     அப்பன் 

அரைமுழக்கயிற்றில்    தொங்குவேன்! என்றவன்

அடக்கமானா    செய்தி

அட்டையில்    கொர்னா     என்று

அழுத்தி     எழுதிய    உன்முகத்தயும்!

அதே    அன்றும்இன்றும்,இசையில்

அடுத்தபாடலாய்! 

அசையும்     எனகாத்திருந்தேன்!

ஆமிக்காரன்    மிச்சம்     வைத்த

அறுநாக்கொடியில்      ஐந்துபவுனும்

அறுத்துப்போனான்     அடையான்!

அரங்கில்    காணமல்போனோர்     வழக்கு

அடுத்தவாரம்    வரும்     என்ற

அவசர    செய்திஊடே!

அரச    கொட்டகையில்     சிறிவாத்தியும்!

அனைத்துலகில் 

அகதியும்    அடுத்த     வேலைதேடி!

அந்தி    நேரத்    தென்றலுடன்

அத்தனைக்கும்     ஆசைப்படு!

அடுத்த   படம்   ஓடும்    தியேட்டரில்!

அறிக்கையுடன்     அண்ணர்    சம்மந்தர்!

அன்னத்தில்    போட்டியிட்டவரும்

ஆணைக்கட்சியில்     தாவுவோர்

அடுத்த    பட்டியலும் 

அடிவயிற்றில்      அழுத்தியது !

அண்டங்    காகம்   அவசராம்

அடேய்    அது    என்வளவு 

அத்துமீறி     அதிகாலையில்

அந்தப்பனையில்     உரமிட்டவன்

அடுத்த    வழக்கு      எல்லைச்சண்டையாய்

அந்த    விதானையார்    வீட்டில்!

அடுத்த     கதை     எழுதும்

அவர்         எங்க??


:::::::::::::::::::::::::::::::::::::::::::)))))







(யாவும்கற்பனை)

26 August 2021

கவிதை.

 பார்த்தீர்களா

பத்திரிக்கை?

பால்மா  தட்டுப்பாடாம்!

பால்மாடுகளை 

பராமரிக்காமல் 

பட்டதாரி  திமிரில்

பலலட்சத்திற்கு  விற்று 

பாலைவனம்   போனவர்களில்

பார்வதியின்   பேரனும்

பால்வாங்க      கியூவில்

பச்சிளம்   குழந்தையுடன்!

பாணுக்கும்   நின்ற 

பழைய  தலைமுறை

பார்க்காத    காட்சிகள்

பார்க்கின்றேன்

பாரத  டிக்டாக்கில்

பால்ஊற்றும்  கட்டவுட்   காட்சியை!  

(யாவும்கற்பனை)





28 July 2021

குற்றம் கடிதல் !!!!

 குளிர்பாணங்களும், குளிர்சாதனங்களும்

குறைந்த விலையில் வாங்கி
குந்தியிருந்தேன் !
குடிகாரன் உங்கப்பன்
குறிகட்டுவான் குடுமி பாரிஸ் வாழ்
குடிக்காதவன் கதை போல!
குளிர்நாட்டில் கூட்டிவிற்கும்
குமாரவேல் முதலாளி போல!
குளத்தில் கல் எறிந்த
குழந்தை போல சிரிப்பழகியே!
குடைக்குள் மழைபோல
குதுகல கோடைகாலத்தில்
குதித்து வருவாயே ஐரோப்பிய
குனவதி பேர்த்தியே?
குறிப்பாக கொர்னா !))
குறித்த பாடல் பூவே பூச்சூடவா?
குறுகிய நேரம்!
குடுக்கவில்லை !
குற்றாலம் குற்றலாம் பாடல்!
குறுக்கு வழியில்
குடுக்காத வரிப்பட்டியல்!
குற்றம் என்று
குந்தியிருக்கும் உன் என்ஜினியர்
குடிகார மாப்பிள்ளையும்
கும்பிடுகின்றார் !
குறை ஏதும் இல்லை பட்டதாரி நான்!))
குலமகள் ராதை என்று
குடிபெயர்ந்தேன்
குடிவகை மிளிரும் பிரேஞ்சு!
குலசாமி போல வேண்டுகின்றேன்!
குறிகட்டுவான் போகும் வழிகாட்டு
குடுக்கின்றேன் !
குறைதீர்க்கும் அமைச்சு!
குளியாப்பிட்டி வாசிக்கு!))
குடும்ப நலத்துறை அமைச்சும்!
குற்றம் கடிதல் போல
குறுநகையில் அவள் ஒரு
குழந்தைபெறாத மலடி
குறித்துக்கொள்!
குறிப்பில் கூட செவ்வாய் தோஷம்
குதறியள் தாயும்
கும்பிட்டால்!))
குளிர்ந்தது நெஞ்சு
குதிக்கட்டும் !))
குற்றாலம் போல துங்கிந்த ஆற்றில்
குதித்தது பொங்கும் பூம்புனல்
குறித்துக்கொண்டேன்!
குற்றியலுகரம்!26:7/2021!)))
குப்புறப்தூங்கும்
குளிர் கால நேரமாற்றம் போல
குளிருது நெஞ்சில்!))
குறுக்கால போவான்
குறுஞ்செய்தியை
குப்பையில் போடு
கும்மிருட்டில்
குடிபெயர்ந்தவன்
குதுககலத்துடன்!
குதிக்கின்றேன்!))



)(யாவும் கற்பனை)!!படமும் சுட்டது!))

08 July 2021

கவிதை போல காத்திருப்பூ!

 கண்டிப்பான   கங்காணி

களையும்கலையும்

கழுவியூற்றிய! 

 கவ்வாத்துக்கத்தியும்

கறுப்புக்குடையுடன்!

கண்டி ஞானம்   சஞ்சிகையில்

கடைசிக்கவிதை   எழுதியவர்!

கந்தப்பொல  வெற்றிலை  போல

கன்னம்  சிவந்த 

களிப்புடன்,

கந்தானை    சன்முகத்தின்   சம்மந்தி!

கடுகாகும்    கோழிக்கட்சியின்

கடைசி     நேர     வாக்காளர்!

கடும்  குளிரிலும்    முகநூலில்

கருத்திடுவார்!

கடும்    வெயில்  கணடாவில்    என்று

கனீர்  என்றழைத்தார்    காலையில்!

கண்டியளோ?   கொர்னா   உதவி

காசாக     5000 ரூபாய்

கண்ணிலும்    படவில்லை!

காய்ந்துபோன    கொழுந்தாக!






கையாடல்     கதை    எல்லாம் 

காட்சியில்    வராத 

கடும்     போராட்டம்

கண்டு    கொள்ளாத      ஊடகம்!

கறுப்பு     யூலையில்

கடும்     நெருக்கடியில்

கட்சி     மொட்டுக்கு

கடன்    தீர்க்க      வரும்

 கனம்கோட்டார்    பஷில்    அவர்களை 

கண்டா   வரச்சொல்லுங்க    பாடல்போல

கசங்கிய     கனவுகளுடன்,

கடைசி      நேயராக

கலந்தது       காற்றலையில்!

கங்காணியின்      காத்திருப்புபாடல்

கப்பல்        ஏறிப்போயாச்சு!






யாவும்கற்பனை)



21 June 2021

பார்த்து இரசித்த குறும்படம்!

 


31 May 2021

கவிதை போல கிறுக்கல்.

 நிலமகளை  மீட்க

நீண்டவர்கள்     எல்லாம்

நீர்மகளில்   மூழ்கினார்கள்   என்று!

நீலிக்கண்ணீர்    வடிக்கும்

நீலக்கட்சியும்,!

நீர்யாணையும்,

நிறம்  மாறிய  கொர்னா  போல!

நீழல்   மொட்டில்

நீர்வார்க்கும்   பட்டுப்பாதைக்கு!

நிலவிலக்கு  அளிப்பதாக

நீண்ட   கட்டுரை    எழுதிய

நிதியமைச்சரும்!

நிறுத்தக்கடவையில்

நீதி  மீறியமைந்தன்  ஊடே!

நிறுத்திவிட்ட  குரல்கேட்டு

நிலவுக்காட்சி  தடைப்பட்டதென்று

நீட்டி  முழங்கினார்!  முன்னால்

நிர்வாக   ஆளுனர்!

நீயும்    பார்தாயோ

நீந்தி  வந்த   கட்டுமரமே?

நியூசிலாந்து   வானொலிக்காக

நீண்ட    கதையில்

நீச்சல்வீரன்!

(யாவும்கற்பனை)



===================================




-(கவிதை  வரவில்லையே?

கருவுற்ற   காதலி

கவிதாவின்   புலம்பல்

கண்டி   எங்கும்   கேட்டது

கதறலோ?கைவிரிப்போ!

கட்சியின்    சின்னம்போல

கழுதையின்    பேச்சுப்போல

கருநாகத்தின்    தீண்டல்போல

கருட    புராணத்தின்

கடைசிப்பக்கம்     போல

களணி     ஆற்றில்

கண்டெடுத்த     பிணம்போல

கம்பளை    கடுகதியும்

கவுண்டு     போனசெய்தியோடு

கம்பீரக்குரலோடு

கடும்    கொர்ணாவில்

களப்பலி    என்ற

கட்டுப்பாட்டு      வேலியில்

கவிதாவும்      கண்ணயர்ந்தாள்

கவிதைக்   காதலனைக்    காணமல்!!

யாவும்கற்பனை)


===========================================